புதிய பதிவுகள்2

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சிகளை கைவிட அமெரிக்கா திட்டம்?

3 months 2 weeks ago
ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு! ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டிய, முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன எனவும், எனவே, எந்த முன்னேற்றமுமின்றி, அமைதிப் பேச்சுவார்த்தையை மாதக்கணக்கில் தாம் தொடரப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் “போர் நிறுத்தம் குறித்து விரைவாக தீர்மானிக்க வேண்டும் எனவும், அது சாத்தியம் என்றால் மட்டுமே, ஜனாதிபதி ட்ரம்ப் அதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தொடர்வார் எனவும், இல்லாவிட்டால், இன்னும் சில தினங்களில், ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சியை அமெரிக்கா கைவிடும்” எனவும் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். உக்ரேன் – ரஷ்யா இடையே, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் பதவியேற்ற ட்ரம்ப், இரு நாடுகளிடையே போரை நிறுத்த முயற்சியை ஆரம்பித்து வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428846

ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!

3 months 2 weeks ago
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்! adminApril 18, 2025 1970 களில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TLO) ஆகியன ஆற்றிய பங்களிப்பின் போது முக்கிய தோழியாக, மூத்த செயற்பாட்டாளராக இயங்கியவர் புஸ்பராணி. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அஞ்சாது, துஞ்சாது, அயராது, தளராது, எந்த இடர் வந்த போதும் கலங்காது ஏறு நடை போட்ட ஈழப் போராட்டத்தின் போராளியாக விளங்கியவர். 1970களின்முற்பகுதியில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் சுடராக ஒளிர்ந்தவர் புஸ்பராணி என்ற ஆளுமை. ஒரு காலத்தின் சரித்திரக் குறியீடு . 1970 களின் முற்பகுதியில் அவர் அனுபவித்த சிறை வதை வாழ்வு அன்றைய ஊடகங்களில் மனித உரிமை ஸ்தாபனங்களின் அறிக்கைகளில் நீக்கமற இடம் பெற்றன .4 ஆம்மாடியின் இருண்ட வதை கூடங்கள் அறிமுகமான காலமது . 1970களின்முற்பகுதியில் தெற்கிலும் வடக்கு கிழக்கிலும் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு சவாலாக எழுந்த தெற்கு வடக்கு இளைஞர்களின் கதை வதைகளின் கதைகளான காலமது. பிரான்சுக்கு புலம் பெயர்ந்த பின்னர் பல தசாப்தங்கள் கடந்து 1970களின் அனுபவத்தை புதிய புலம் பெயர் மற்றும் சமூக அனுபவ வெளிச்சத்தில் அகாலம் என்ற தலைப்பில் எழுதினார். பிரான்சின் ஈழ முற்போக்கு அணியின் பெண் ஆளுமை அவர். தமிழ் சிங்கள ஆளும் வர்க்க மன நிலை இந்த புத்தகத்தின் ஊடாக உணர்த்தப்படுகிறது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை சமூக பிரக்ஞையுடன் முன்னெடுத்த இளைஞர் இயக்க வரலாற்றில் மறைந்த புஷ்பராஜா அவரது சகோதரிபுஸ்பராணி அவர்களின் பங்களிப்பு குறித்துரைக்கப்பட வேண்டியது இவர்கள் ஈழப் போராட்ட இளைஞர் இயக்க வரலாற்றின் முன்னோடிகள் சின்னங்களாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். மூலம் – Sritharan Thirunavukarsu – Varathar Rajan Perumal https://globaltamilnews.net/2025/214472/

தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்!

3 months 2 weeks ago
தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்! adminApril 19, 2025 தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி என்கிற ஜே.விபி யினர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அனுர அரசே தையிட்டி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய கரணமாக இருந்தனர். இவர்களே அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாக கூறி சிங்கள மக்களை திசை திருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர். ஆனால் இன்று குத்துக்கரணம் அடித்து மக்களை ஏமாற்றி எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் மீது குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்கின்றனர். இனவாதத்தை தூண்டும் இந்த தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை கூறி அவர்களது உச்சபட்ச இனவாதத்தின் வெளிப்பாட்டை காட்டுகின்றனர். முன்னைய அரச தலைவரான கோட்டாவுக்கு இரண்டு வருடம் தேவைப்பட்டது அவரது உண்மை முகத்தைக் காட்ட, ஆனால் இந்த ஜேவிபியின் உண்மையான முகம் 6 மாதங்களுக்கள் வெளிப்படுவிட்டது. முன்னைய அரசாங்கத்தவர்கள் இனவாதிகள். அதை அவர்கள் வெளிப்படையாகவே காட்டினர். ஆனால் இவர்கள் அதைவிட மோசமனவர்கள். மக்களை நம்பவைத்து தம்வசப்படுத்தி கழுத்தறுக்க முயற்சிக்கின்றனர். இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் தமிழ் மக்களின் இருப்பை சூட்சகமாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாகவே முன்னெடுப்பதாக உள்ளது. இது அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் போக்காகவே இருக்கின்றது. மக்களின் ஆதரவை பெறுவதற்காக பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் அந்த வாக்குறுதிகளுள் ஒன்றைக்கூட நிறைவேற்றாது மீண்டும் புதிய பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றது. இது தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடும் முயற்சியாக இருக்கின்றதே தவிர தமிழ் மக்களின் நலன்களுக்கானதாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இதை எமது மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் இதன் வெளிப்பாட்டை உள்ளூராட்சித் தேர்தலிலும் வெளிப்படுத்த வேண்டும். அந்தவகையில் தமக்கு வாக்களித்தால்தான் பிரதேச சபைகளுக்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கருத்தானது ஜனநாயக விரோதத்துக்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமா? என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/214483/

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இப்பத்தான் பாதிக்கிணறு தாண்டி இருக்கு! எல்லாம் அடுத்த பாதியில் தலைகீழாக மாறும்! அதனால் நம்பிக்கையுடன் பொறுத்திருந்து உன்னிப்பாக அவதானிக்கவேண்டும். அணிகளின் தற்போதைய நிலைகள்: தற்போது பட்டியல் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகளில் ஒன்றை ஐபில் சம்பியனாகக் கணித்தவர்கள்! DC - 0 PBKS - 0 GT - 0 RCB - 3

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நீங்கள் சொல்வது சரி சென்னை அணியின் மத்திய பகுதி பலவீனமான பகுதி, ஓட்ட விகிதம் 100 இற்கும் குறைவானதென கேள்விப்பட்டேன் (ஓட்ட சராசரி நினைவில்லை) இதுவரை சென்னை அணியின் ஒட்டு மொத்த ஓட்ட சராசரி 116 என்பதாக நினைவில் உள்ளது, ஆனாலும் திருப்பாதி அணியின் மேல்பகுதியில் ஒரு பலவீனமான நபராக தொடர்ந்தும் இருப்பதால் இந்த போட்டியில் தொடருவாரா என்பது சந்தேகம் அதே போல் சங்கரும் அடுத்த போட்டியில் தொடுருவார என கருதவில்லை.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
சென்னை அணி பவர் பிளேயின் முக்கியமான 6 வது ஓவரை அஸ்வின், ஓவர்டன் என ஏற்கன்வே பலதடவை அடிவாங்கும் பந்துவீச்சாளர்களிடம் மீண்டும் மீண்டும் கொடுப்பது (குறிப்பிட்ட ஓவரில் குறைந்தது 20 ஓட்டங்களை கொடுப்பார்கள்). திரிப்பாதி போர்மில் இல்லை என்றாலும் விடாப்பிடியாக ஆட வைப்பது, மத்திய பகுதியில் போர்மில் இல்லாத வீரர்களை தொடர்ந்து பேணும்போது, சென்னை அணியில் வான்ஸ் பேடி போல சிறந்த இளையோர் அணியில் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தொடர்வது, இவர் பஞ்சாப் பிரியான்ஸ் ஆர்யாவினை விட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் என கூறுகிறார்கள் அவரை விட இவர் அடித்தாட கூடியவர் என கூறப்படுகிறது. இதனை பார்த்தாலும் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என புரிவதில்லைதான். ஆனால் அந்த லக்னோ போட்டியில் பந்த் போர்மில் இல்லாமல் இருந்தவர் ஓரளவாக சென்னை அணியுடன் விளையாடியமையால் அரை சதத்தினை எட்டியிருந்தார் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் தனது போர்மிற்கு வந்து விடுவார். பந்த் மிக சிறப்பாக அணியினை வழிநடத்தி வந்திருந்தார் அந்த போட்டியில் குழப்பமாக முடிவுகள் எடுத்திருந்தார் என்பது உண்மைதான் ஆனால் அது மட்ச் பிக்சிங் என்பது கொஞ்சம் ஓவரான விடயம்.

10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு

3 months 2 weeks ago
அனைவரும் புட்டினின் ஆதவளார்கள் என்று ரஷ்ய செய்திகள் இந்திய யுரியுப்பர்கள் சொல்வதை நீங்கள் நம்பிவிட்டீர்கள். 99.90 வீதமானவர்கள் மட்டுமே புட்டினின் ஆதவளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் புட்டினுக்கு தேர்தலில் 87.28 வீதமானவர்கள் தானே வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் மிகுதி 12.62 வீதமானவர்களும் எங்கள் தலைவர் வென்றுவிடுவார் என்று வாக்களிக்க சென்றுவிடாமல் வீட்டிலேயே இருந்துவிட்டனர்.

"வீட்டு வேலைக்காரி"

3 months 2 weeks ago
"வீட்டு வேலைக்காரி" மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்டும், வவுனியாவின் எந்தப் பக்கமும் கடலின் வாடை இல்லது இருந்தாலும், ஆங்கங்கே குன்றுகளும், பரந்து விரிந்த எண்ணற்ற செழிப்பான குளங்களும், காடுகளும், இருப்புகளும், ஊர்களும், ஓடைகளும், கட்டுகளும், கரைகளும், கற்களும், குழிகளும், சூரிகளும், சோலைகளும், தாழிகளும், தோட்டங்களும், வயல்களும் பள்ளங்களும் மற்றும் பனையும் தென்னையும் குடை பிடித்து நிழலோடு வளம் தரும் நிலப்பரப்பையும் கொண்டும் உள்ள அந்த நகரத்தில் கலா என்ற பெண்மணி வாழ்த்து வந்தார். இப்பகுதியில் உள்ள பலரைப் போலவே அவரது வாழ்க்கையும் கஷ்டங்கள் மற்றும் நெகிழ்ச்சியின் இழைகளால், குறிப்பாக 2009 இன் பின் பின்னப்பட்டது. ஒரு காலத்தில் அமைதியான இடமாக இருந்த வவுனியா ஒரு கொந்தளிப்பான கடந்த காலத்தின் வடுக்களை இன்று சுமந்து இருக்கிறது. அங்கு குடும்பங்கள் மோதலால் பிளவுபட்டு, சோகத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் இன்று விட்டுச் சென்றுள்ளன. கலாவுக்கு கஷ்டங்கள் புதிதல்ல. இலங்கை இராணுவம் தனது கணவரை விசாரணைக்கு என அழைத்துச் சென்ற போது இளம் வயதிலேயே விதவையான அவர், பொறுப்பின் பாரத்தை அன்றில் இருந்து தனியாக சுமந்து கொண்டு இருக்கிறார். இரண்டு சிறு குழந்தைகளை வளர்த்து படிக்கவைக்க வேண்டி இருப்பதால், வசதி படைத்தவர்களின் வீடுகளில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை தேடுவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அவரின் பிள்ளைகள் படிக்கும் ஆரம்ப பாடசாலை ஆசிரியை, தனக்குத் தெரிந்த ஒரு இடத்தில் வீட்டு வேலை இருக்கு, ஆனால் ' வேலையில சுத்தம் வேணும். நேர்மை வேணும். சரியான நேரத்துக்கு வந்து வேலை பாக்கணும்' என்பது அவர்களின் எதிர்பார்ப்பு என்று கூறினாள். “எவ்வளவு சம்பளம் தருவாங்க?” என்று கலா இழுத்தாள். இன்றைய நாட்டு நடப்பின் படி தருவாங்க என்று சொல்லிவிட்டு, " விரும்பினால் போய்ப்பார், நான் தந்தது என்று சொல்லு" என்று கூறிவிட்டு, வீட்டு விலாசத்தையும் கொடுத்தார். அன்று இரவு, மீண்டும் மீண்டும் விலாசத்தைப் பார்த்தாள். வெளியில் பெய்த மழை, உள்ளே படுக்கையில் குளிர்ந்தது. உடலும்; மனமும் போர்வையில் சுருண்டுக் கொள்ளும் சுகத்தைக் கோரின. என்றாலும் நாளை காலை நேரத்துடன் எழும்ப வேண்டும் என்பதால், கடிகாரத்தில் அலாரம் வைத்தாள். அதன் பின் படுத்துக் கொண்டு இமைகளை மூடினாள். நித்திரை வருவதற்கு பதில், காலை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலே நினைவில் நீண்டது. என்றாலும் ஒருவாறு கொஞ்ச நேரத்தின் பின், பாயில் அயர்ந்து தூங்கினாள். அன்று காலை, அவளின் உடலுக்குள் ஓர் உயிரியல் அலாரம் இருந்தது போல, தன்பாட்டில் கண்விழித்து அவள் எழுந்தபோது, அலாரம் இன்னும் அலரவில்லை! அலருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் எஞ்சியிருந்தன. ‘இன்றைக்கு நீ அலர வேண்டாம்’ என்பதுபோல், அலாரத்தினை நிற்பாட்டினாள். கலா வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது பிள்ளைகளின் அறையில் இருந்து எதோ அரவம் கேட்டது. அவளின் குடிசை ஒரு அறை மட்டுமே, கலா அறைக்கு வெளிய, ஆனால் குடிசைக்குள் உள்ள சிறு விறாந்தையில் தான் படுப்பாள். அது தான் பிள்ளைகளின் படிப்பு அறையும் கூட. கலா பிள்ளைகளின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே நித்திரையில் வரைந்த ஓவியத்தைப் போல் அலங்கோலமாய் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து வீட்டு நண்பியிடம் பிள்ளைகளைப் பார்க்கும்படி சொல்லி விட்டு, நேர்த்தியாக உடையணிந்து, சாதாரண சிவப்பு நிற புடவையில், தலை முடியில் எண்ணெய் தடவி பின்னப்பட்ட கூந்தலுடன், அவள் தனது வீட்டு வேலைக்கான பணியிடத்தை, சூரியன் அடிவானத்தில் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே, அங்கு அடைய குறுகிய மண் தெருக்களின் வழியாகச், சாலையோர மரங்களுடன் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் காற்றிடமும், விவாசயிகளின் உழைப்பை உரைக்கும் சேற்றிடமும் இயற்கையின் எழிலை அனுபவித்தவண்ணம் சென்றாள். அவள் பணிபுரியும் அந்த மாளிகை அவளுடைய தாழ்மையான குடிசைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, அதன் பிரம்மாண்டம் அவளுடைய வாழ்க்கையின் எளிமையை மறைத்தது. அவள் தன் நண்பிகளிடமும் மற்றும் செய்திகள் மூலம் கேள்விப்படத்தில், சில நிஜ வாழ்க்கை வீட்டுப் பணியாளர்கள் அவர்களின் பணக்கார முதலாளிகளால் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் ஆனால் பல கற்பனையான கதைகளில், இலக்கியங்களில், அதற்கு மாறாக வேலையாட்கள் அவர்களின் முதலாளிகளால் நன்றாக நடத்தப்படுகிறார்கள் என விபரிப்பதையும் அறிந்து இருந்தாள். அதனால்த் தான், அந்த மாளிகையைப் பார்த்ததும் மனதில் ஒரு தயக்கம் அவளுக்கு வந்தது. என்றாலும் எல்லோரும் அப்படி இல்லை என்று அதே மனம் அவளுக்கு ஆறுதலும் கொடுத்தது, அதிகமான கற்பனைக் கதைகளில் காணப்படுவது போல! என்றாலும் நாட்கள் நகர, நகர, குடிசையில் அவள் அனுபவிக்கும் அன்பும் ஆறுதலும் இங்கு அவள் காண்பதே இல்லை என்பதை உணர்ந்தாள். அது ஒரு கற்பனை கதையாகவே, கனவாகவே இருந்துவிட்டது. உள்ளே, அவளுடைய கைகள் சளைக்காமல் எந்த நேரமும் எதோ ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். அவளின் வாழ்க்கை அங்கு ஒரு இயந்திரம் போலத்தான் எந்த நேரமும் சுழன்று கொண்டு இருந்தது. அவள் பணியாற்றிய குடும்பம், அவள் அங்கு தினம் நேரத்துடன் போனாலும், அதைப் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. ஏன் அவளை குறைந்தது ஒரு புன்சிரிப்புடனாவது பாராட்டுவதில்லை. அவர்களின் வார்த்தைகள், செய்கைகள் பொதுவாக மனச்சோர்வு தரக் கூடியதாகவும் மற்றும் அது அலட்சியத்துடனும் இருந்தன. அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் வசதியான வாழ்வுக்கு, எடுபிடி வேலைகளுக்கு கூலிக்கு ஒத்தாசை புரியும் எந்திரம் தான் அவள். அவர்கள் ஒவ்வொரு பணியிலும் பரிபூரணத்தைக் கோரினர், ஆனால் அவளுடைய சோர்வுற்ற கண்களுக்குப் பின்னால் உள்ள மனிதாபிமானத்தை அடையாளம் காணத் தவறிவிட்டனர். ஆனால், தினமும் வரவேண்டும், சுத்தமாய் இருக்கவேண்டும் என்பதை அழுத்தமாய் சொல்லிவிட்டு, லீவு வேண்டுமென்றால் முன்கூட்டி சொல்லிவிட்டுத்தான் எடுக்க வேண்டும் என்றும் கறாராகச் சொல்லிவைத்தாள் வீட்டுக்காரி அம்மா. அனால், கலா மென்மையாகப் பேசுகிறாள், அவளது பதில்கள் நிதானமாக அளவுடன் வருகிறது. அவள் வவுனியாவில் உள்ள ஒரு கிராம பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டும் தான் படித்தவள். குடும்பச் சூழல் இடையில் நிறுத்தி விட்டது. கலாவின் தந்தை வயல் வேலைகள் செய்வதுடன் கொஞ்ச மாடுகளையும் வளர்த்தார், தாய் அவருக்கு துணையாக நின்றார். கலா மாடுகளை கவனிப்பதுடன் வீட்டு வேலைகளும் செய்தார். அப்பொழுது அவர்களுக்கும் பஞ்சம் என்று ஒன்று இருப்பதே தெரியாத காலம் அது. கலா பாடசாலையால் நின்று விட்டாலும், வாசிப்பதில் என்றும் நிற்கவில்லை. அருகில் உள்ள நூல்நிலையத்தில், ஓய்வு நேரங்களில், பல புத்தகங்கள் வாசிப்பாள் . ஒருமுறை அம்பலசோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். கம்பர் வீட்டு வாசலில் ஒரு பெண் வரட்டி தட்டிக் கொண்டிருந்தாள். அம்மா! கம்பர் இருக்கிறாரா? என்று கேட்டார். பல புலவர்கள் அவரிடம் தமிழின்பம் இப்ப நுகர்ந்து கொண்டு இருக்கின்றனர். அவரை யாரும் எப்போதும் பார்க்கலாம். கருணை மிக்கவர், என்று பதில்களை அடுக்கிக்கொண்டு போனாள். இருக்கிறாரா என்று கேட்டால் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று சொல்லியிருக்கலாம். வாயாடி போலும், எத்தனை பதில் சொல்கிறாள்' என்று அவர் அசைபோட்டார். பின் நீ இவ்வளவு பேசுகிறாயே! கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா? என்று கேட்டார். அதற்கெல்லாம் நேரமேது புலவரே! அன்றாடப் பணிக்கே பொழுது சரியாக இருக்கிறது. சரி.. சரி... எனக்குத் தெரிந்த தமிழை உம்மிடம் பேசுகிறேன். ஒரு சின்ன விடுகதை, பதில் சொல்லுமேன் என்றாள். புலவர் ஆர்வமானார். 'வட்டமாக இருக்கும், வன்னிக்கொடியில் தாவும், கொட்டுபவர் கையில் கூத்தாடும். எரித்தால் சிவசிவ என்பர். அது என்ன?' என்றாள். புலவர் விழிக்கவே, ஒருநாள் யோசித்து சொல்லுமேன், என்றவள் விடுவிடுவென போய்விட்டாள். கம்பர் வீட்டு வேலைக்காரியிடம் மாட்டினால் சும்மாவா? ஆனால், இப்ப கலா இருப்பதையும் தொலைக்கும் நிலையில் தான் இங்கு வேலைக்காரியாக இருக்கிறாள். வீட்டை விட்டுப் புறம்படும் போது மனதில் இருக்கும் உற்சாகம், திரும்பி போகும் பொழுது இருக்காது? காலை கையில் வாளித் தண்ணீர் , விளக்குமாற்றுடன் வெளியில் வந்தால், வாசல் தெளித்து, பெருக்கி கோலமிட்டு உள்ளே சென்று சற்று ஓய்வு எடுக்கவே முடியாத சூழல் அங்கே. தட்டுமுட்டுச் சாமான்கள் துலக்கிக் பின் சமையல் என நீண்டு கொண்டே இருக்கும். யாரும் அவளை ஏறிட்டுக்கூட பார்க்க மாட்டார்கள் காலை, மதிய சமையலை விட, அவள் வீட்டைக் கூட்டித் துடைத்தாள். பாத்திரங்களை கழுவி கவிழ்த்துப் ஈரம் காய வைத்தாள். காய்ந்த பாத்திரங்களை எடுத்து அடுக்கி வைத்தாள். உடுப்புக்களை துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு வெளியில் காயப் போட்டாள். காய்ந்த உடுப்புகளை மடித்து வைத்தாள். கதவு, சாளரம் , மூளைமுடக்குகள் என பார்த்து பார்த்து சுத்தம் செய்தாள். அவள் ஒரு இயந்திரமாக எல்லா வேலையும் நேரப்படி முடித்துவிட்டு, இரவு இருட்ட முன்பு எப்படியும் குடிசை திரும்பி விடுவாள். அதுவரை, பக்கத்துவீட்டு, அவளின் நண்பியுடன் தான் பிள்ளைகள். ஒரு நாள் மதியம், அவள் அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட ஒரு அலமாரியை கவனமாகத் துடைத்துக் கொண்டிருந்தபோது, வீட்டின் எஜமானர் உள்ளே நுழைந்தார். அவரின் பார்வை அவள் மீது ஒரு கணம் நிலைத்திருந்தது, அவரது உதடுகள் ஒரு மெல்லிய புன்னகையில். "கலா, நீ நன்றாக வேலை செய்கிறாய் ," என்று ஒருபுகழாரம் சூட்டினார், ஆனால் அவரின் பார்வையும், கலாவிடம் அவர் நெருங்கி வந்ததும், அவரின் வேறு ஒரு நோக்கத்தை வெளிப்படையாக காட்டியது. எனவே கலா தனது அசௌகரியத்தை மறைக்கும் முயற்சியில் அவள் கண்கள் கீழே பார்த்து, கொஞ்சம் விலகி நின்றாள். அவளுக்கு மனக்குழப்பம் இருந்தபோதிலும், தனது கடமைகளில் உறுதியாக இருந்தாள், தந்திரமாக அந்த சூழ்நிலையில் இருந்து சற்று ஒதுங்கி, சமையல் அறையில் எதோ வேலை இருப்பது போல விலகிச் சென்றாள். அந்தஸ்துள்ள ஒரு மனிதனுக்கு எதிராகப், வெறும் வீட்டுப் பணிப்பெண்ணாக அவள் எதிர்த்துப் பேசுவதால் ஏற்படும் விளைவுகள், என்ன என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் தங்கள் பிழைகளை மறைக்க எதை வேண்டும் என்றாலும் சொல்லுவார்கள். அவர்களின் பணப் பலமும் செல்வாக்கும் மற்றவர்களை அதை நம்பவும் செய்யும். அன்றைய நிகழ்வுக்குப் பிறகு வாரங்கள் கடந்து செல்ல, கலா தனது ஒப்பந்தம் முடிவடையும் வரை, நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள், ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் அவள் பெறும் சொற்ப ஊதியத்தில் மட்டுமே அவளுக்கு ஆறுதல் இருந்தது. வீட்டு எஜமானர் அவளுக்கு சம்பளம் ஒழுக்காக வழங்கிய போதிலும், அது அவளின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை, ஆனால் சமாளிக்கக் கூடியதாக இருந்தது. அது தான் உடனடியாக வேலையை விட்டு போகவில்லை. என்றாலும் தன்னில் கவனமாக இருந்தாள். அவள் உடனடியாக விலகாததுக்கு இன்னும் ஒரு காரணமும் இருந்தது, வீட்டு எஜமானின் இளைய மகள், தனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களைப் போலல்லாமல், மேகங்கள் வழியாக சூரிய ஒளியின் கதிர்கள் துளைப்பதைப் போல, எப்பொழுதும் ஒரு கருணையுடன் கலாவை நடத்தினாள். ஒரு நாள் மாலை, கலா சமையலறையில் இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, இளைய மகள் அமைதியாக உள்ளே நுழைந்தாள், அவளுடைய கண்கள் பச்சாதாபத்தால் நிறைந்தன. "கலா, நலமா?" அவள் மெதுவாகக் கேட்டாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் இல்லை. இளைய மகளின் எதிர்பாராத அந்த நட்பான வார்த்தையில், தன்னை பறிகொடுத்த அவள், பதில் சொல்ல வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் கொஞ்சம் தடுமாறினாள். என்றாலும் மென்மையான தலையசைப்புடன், அவள் மெல்லிய புன்னகையைத் பதிலாக கொடுத்தாள். அந்த இளைய மகளின் செயலை, கலா இன்னும் மறக்க வில்லை. அவள் ஒருநாள் வீட்டுக்கு அவசரம் அவசரமாக திரும்பிக்கொண்டு இருக்கையில் , அவள் மனம் தன் குழந்தைகளை நோக்கி அலைந்தது. அவர்கள் மங்கலான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பதுங்கியிருப்பதையும், கிழிந்த பாடப் புத்தகங்களைத் சரிப்பண்ணி சரிப்பண்ணி படிப்பதையும் , அவர்களின் கனவுகள் வறுமையின் பீதியால் மறைக்கப்பட்டதையும் அவள் கற்பனை செய்தாள். தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கவும், தனது குடும்பத்திற்கு நேர்ந்த கடுமையான கஷ்டத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றவும் அவள் உள்ளம் ஏங்கியது. வீட்டுக்கு வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாகப் அவர்கள் நினைப்பதே இல்லை. வீட்டைப் 'பெருக்கும் துடைப்பத்தைப் போல்' வேலைக்காரியை நினைக்கிறார்கள் என்பது தான் அவளுக்கு ஒரு வெறுப்பையும் கவலையையும் கொடுத்தது. தன் தோள்களில் கனமான சவால்கள் இருந்தபோதிலும், கலா தனது தளராத உறுதியில் ஆறுதல் என்றும் கண்டாள். கலாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சூரிய உதயமும் அதனுடன் ஒரு புதிய நோக்கத்தை கொண்டு வருவதாக நம்பினாள். தானும் அப்படியே புதிய நோக்குடன் அசைக்க முடியாத உறுதியுடன் ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டும் என்று எண்ணினாள். அந்த அவளின் திடகாத்திரமான போக்கு, முன்னோக்கி செல்லும் பாதை நிச்சயமற்றதாக இருந்தாலும், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பிரகாசமான நாட்கள் காத்திருக்கின்றன என்ற நம்பிக்கையில், அவள் மனது தானே ஒரு பாடலை இயற்ற, அவள் வாய் அதை இராகத்துடன் முணுமுணுக்க, மரக்கிளைகள் காற்று பட்டு வளைந்து வளைந்து ஆட, வண்டுகள் ரீங்காரம் இட்டு மலர்களை வட்டமிட, அவள் தலையை உயர்த்தி நடந்து வீடு சென்றாள். "மின்சாரம் இல்லாமல் இயங்கும் இயந்திரம் நானோ? துன்பங்களை சுமந்து இன்பங்களை கொடுப்பவளோ? காலங்களை கண்ணீரில் கழுவும் துர்ப்பாக்கியவாதியோ?? இங்கு புதுவிதம் அதிலும் பலவிதம் காண்கிறேனே! காமத்துக்கும் சுரண்டலுக்கும் மனசு கொதிக்குதே! ஊருக்கென்ன தெரியும் வீட்டுக்கள் நடப்பது தெரிந்தும் என்ன ? பணம் வாயை மூடுமே!!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான்

3 months 2 weeks ago
விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான் ] ஓம் விஜய் முஸ்லிம் மத கொள்கைகளால் கவரபட்டு தான் அங்கே போனவர்

"உயிர்பெறுமா ஓவியம்"

3 months 2 weeks ago
"உயிர்பெறுமா ஓவியம்" உயிர்பெறுமா ஓவியம் எழுந்து நடப்பானா உலகம் இவனுக்கு நீதி வழங்குமா? உள்ளம் கொண்டு பாகுபாடு நிறுத்தி உண்மை வரலாற்றை நன்கு அறிந்து உள்நாட்டில் அரசு வேற்றுமை அகற்றாதா? வன்னியில் நடந்தது உனக்குத் தெரியாதா வளமான தேசம் சிதைந்தது உணராயா? வஞ்சகம் தவிர்த்து அவனைப் பார்க்காயா வருத்துதல் ஒரு மனிதச் செயலல்ல வலி தரும் கொடூரம் இதுவல்லவா? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்!

3 months 2 weeks ago
👉 https://www.facebook.com/watch?v=1377814256588154&locale=de_DE 👈 👆 ஆசிய இளையோருக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்!

3 months 2 weeks ago
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டி: 9 ஆவது இடத்தில் இலங்கை. சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய தடகள சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கதீஃப் நகரில் நான்கு நாட்கள் நடைபெற்ற இச் சம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நேற்றுடன் (18) நிறைவடைந்தன. இதில் இலங்கை ஒரு தங்கப் பதக்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்கள், நான்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இதன்படி, போட்டியில் பங்கேற்ற நாடுகளில், குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கமாவது வென்ற 19 நாடுகளில் இலங்கை பதக்கப் பட்டியலில் 9ஆவது இடத்தைப் பெற்றது. இப் போட்டியில் இலங்கை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை, ஆசிய 18 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை பெற்ற மிக உயர்ந்த பதக்க எண்ணிக்கையாகும். கடந்த 2023ஆம் ஆண்டு இப்போட்டித் தொடர் நடைபெற்றபோது, இலங்கை இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 4 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. இதேவேளை குறித்த போட்டியில் 19 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ள நிலையில், ஜப்பான் மூன்று தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428839

கிளிநொச்சியில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன சில்லில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

3 months 2 weeks ago
கிளிநொச்சியில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன சில்லில் சிக்கி குழந்தை உயிரிழப்பு! கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது. தந்தை செலுத்திய டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி இவ்வாறு குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1428817

கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழப்பு!

3 months 2 weeks ago
கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழப்பு! மகன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் தந்தையொருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பு கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார் எனவும், இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு தாக்குதலை மேற்கொண்ட 20 வயதான மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரேண்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1428828

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்!

3 months 2 weeks ago
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்! 18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். இதுதவிர, நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார். 1 நிமிடங்கள் 53.41 வினாடிகளில் தனது பந்தயத்தை முடித்த ஷவிந்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். இதேவேளை, பவன் நெத்ய சம்பத் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் (2.03 மீ) வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428825

10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு

3 months 2 weeks ago
இப்படி ரஷ்யா மாணவர்கள் சொன்னார்களா??? நான் நினைத்தேன் ரஷ்யார்கள். அனைவரும் புட்டினின் ஆதவளார்கள. என்று ஆதாரம் உண்டா?? 🤣🤣🤣🤣🤣🤣 அனைத்து விடயங்களிலும். புட்டினும். அவரது ஆதரவளார்களும் சொல்வது எல்லாம் உண்மை அவர்கள் வாழ்க்கையில் பொய் பேசுவது இல்லை,......போர் என்ன மாதிரி முடிப்பாரா. ??? வரி மன்னர்
Checked
Fri, 08/08/2025 - 03:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed