புதிய பதிவுகள்2

நீக்கப்படுமா பயங்கரவாதத் தடைச் சட்டம்?

3 months 2 weeks ago
19 APR, 2025 | 02:08 PM பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மொஹமட் ருஷ்டி என்ற இளைஞன் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதன் பின்னர் ஏப்ரல் 11 ஆம் திகதி அவர் எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பில் இல்லை என கூறப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒரு முஸ்லிம் இளைஞரை 90 நாட்கள் சிறையில் அடைக்க பயங்கரவாதச் சட்டங்களைப் பயன்படுத்தியமை 'பெரிய தலைப்பாக' மாறியதால் மன்னாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கேலிக்குள்ளான பிரதமர் அந்த சட்டத்தை நீக்க 'நீக்க' ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார். மார்ச் 25 அன்று கொழும்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், மொஹமட் ருஷ்டி என்ற இளைஞரை தீவிரவாத அல்லது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறி 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏப்ரல் 11 அன்று, அந்த இளைஞன் எந்த பயங்கரவாத அமைப்புடனும் தொடர்புபட்டிருக்கவில்லை எனக் கூறியிருந்தார். ஏப்ரல் 12 அன்று மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பயங்கரவாதச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் எந்த வகையிலும் துன்பப்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், ஒரு அரசாங்கம் என்ற வகையில், நெருக்கடிகளை ஒருபோதும் இனவெறி மனப்பான்மையுடன் பார்க்க மாட்டோம் எனவும் பிரதமர் கூறியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது. காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்து குப்பைத் தொட்டியில் ஸ்டிக்கரை ஒட்டிய ஒரு இளைஞனை சிறையில் அடைக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியமைக்காக அரசாங்கத்தை விமர்சித்தமையானது, அரசாங்கம் தொடர்பில் "தேடுவதற்கு எந்தத் தவறும் இல்லை" என்பதாலேயே என்பது பிரதமரின் வாதம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் கடந்த 11ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நீதி அமைச்சில் நடைபெற்றதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு ஏப்ரல் 13ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலம் உலகளாவிய பயங்கரவாதத்தையும் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு வரைபாக இருக்க வேண்டும் எனவும், இந்த நாட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான மனித உரிமைகளை அது மீறக்கூடாது எனவும் கடந்த 11 ஆம் திகதி நீதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் வலியுறுத்தினார். "முன்னைய அரசாங்கங்கள் இந்தத் திருத்தச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு உரிய விடாமுயற்சியுடன் செயல்படவில்லை, மேலும் இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழு மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தச் சட்டத்தை இரத்து செய்வதற்கான பொருத்தமான விடயங்களை அடைய வேண்டும் எனவும் அமைச்சர் குழுவின் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்," என அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெற்றதாக அரசாங்கம் பெப்ரவரியில் அறிவித்தது. "சட்ட வரைஞர்களால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவை மேலும் ஆய்வு செய்து, அந்த வரைவு மசோதாவை மேலும் மேம்படுத்த பொருத்தமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவை நியமிக்க நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது" என அமைச்சரவை தீர்மானம் குறிப்பிடுகிறது. மே மாத ஆரம்பத்தில் பொதுமக்களின் கருத்துகளையும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களையும் பெறவும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் கருத்துக்களையும் பெறவும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் குழுவிற்கு அறிவுறுத்தியதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக அடக்குமுறை சூழ்நிலையில் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 7 ஆம் திகதி நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளுடன் மொஹமட் ருஷ்டிக்கு பிணை வழங்கப்பட்டபோது, அவர் தனது தொழிலை இழந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியிருந்தார். https://www.virakesari.lk/article/212378

மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார் - வி.எஸ்.சிவகரன்

3 months 2 weeks ago
எமது விடிவிற்காக மரணித்தவர்கள் மாவீரர்கள், அவர்கள் அடிமையாக இருக்கவிரும்பவில்லை

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
வென்றால் மாலை, தோற்றால் பாடை… ] 😄 இந்த வசனம் அழகாக உள்ளது விஜய் கட்சிக்கு இவர் பயப்படுகின்றது போல் உள்ளதே

ஏமாற்று வியாபாரம்.

3 months 2 weeks ago
Mark Xnge Sam நான் கொங்கு மண்டல பகுதியைச் சேர்ந்தவன் சில வருடங்களுக்கு முன் ஏறத்தாழ 2016, 17 என்று இருக்கும் அந்த காலகட்டத்தில் நூல் பிரிக்கிற மெஷின் என்று ஒரு வியாபாரம் இந்த பகுதியில் நடந்து வந்தது அதை பிரிக்கிற மெஷின் 15 ஆயிரம் வரையிலும் விற்றார்கள் ஒரு முறை பிரித்து கொடுத்தால் இவ்வளவு ஒரு கிலோ இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்று. அப்போது சக்க போடு போட்டது. ஆனால் பிரித்துக் கொடுத்தால் வாங்குபவர்கள் யாரும் இல்லை பனியன் வேஸ்ட் யில் இருந்து நூல் பிரித்து தர அவர்கள் சொல்லும் rate நாம் கொடுக்கும் போது மற்றவர்கள் வாங்கும் ரேட்டும் பயங்கர வித்தியாசம் அதன் மூலம் என்னைப் போன்ற ஏராளமான நபர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ############### ############ Aburaja Muhamed காரணம் அரசின் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் பாலிசி தான். பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பவர்கள் விட்டுவிடுவார்கள் அதை உபயோகப்படுத்துவர்களையும் அதை விற்பவர்களையும் தண்டனைக்கு உட்படுத்துவார்கள். பேப்பர் கப்பும் தடை செய்யப்பட்டது ஆனால் அதை தயாரித்து இன்னும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறிய அளவில் தயாரித்து அதை மார்க்கெட் செய்வது மிகப் பெரிய சவால். பாக்கு மட்டை தட்டு வியாபாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களையும் விற்பவர்களையும் கண்டுக்காமல் இருந்தவரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இப்பொழுது அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவே பாக்கு மட்டை மிஷின் போட்டவர்கள் நஷ்டம் அடைந்து விட்டார்கள். பேப்பர் கப் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது தடையை மீறி கொடுப்பது கொடுத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. எப்பொழுது வருமானம் தேவையோ அப்பொழுது உற்பத்தியாளர்களையும் விற்பவர்களையும் தேடி தேடி அதிகாரிகள் செல்வார்கள். டிஷ்ஷு பேப்பர் உற்பத்தியில் பெரிய கம்பெனிகளுடன் போட்டி போட வேண்டியிருக்கும் அது சாதாரண வேலை இல்லை ஏனென்றால் மாஸ் ப்ரொடக்ஷனில் செலவுகள் குறையும் ஆனால் அதே பொருள் சிறிய அளவில் உற்பத்தி செய்யும் பொழுது செலவு கூடும். ############### ############ Ramadoss Govindasamy இப்போது மற்றும் ஒரு ஏமாற்று வேலை... பென்சில் பேக்கிங், பேனா பேக்கிங் மாதம் 30000 ரூபாய் வரை சம்பளம். முதலில் பதிவு செய்ய 650 ரூபாய், இதில் 600 ரூபாய்திருப்பி தரப்படும். ஆதார் கார்டு போட்டோ அனுப்பவும், கூரியர் சர்வீஸில் பேக்கிங் மெட்டீரியல்ஸ் அனுப்பப்படும். அதனுடன் 15000 ரூபாய் அட்வான்ஸ் தரப்படும்என விளம்பரம். ஏமாறாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே.

10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு

3 months 2 weeks ago
என்ன பகிடியா. ???? புட்டின். ரஷ்யாவை ஆள வேண்டும் என்று புட்டின் தீர்மானிக்கிறாரா?? அல்லது ரஷ்யா மக்கள் தீர்மானிக்கிறார்களா ???

ஏமாற்று வியாபாரம்.

3 months 2 weeks ago
இப்போ மார்க்கெட்ல புதுவிதமான இன்னொரு ஏமாற்று வியாபார யுக்திய தொடங்கி இருக்காங்க மக்களே. அது என்ன வியாபாரம்னா டிஷ்யூ பேப்பர் மேக்கிங் அப்படிங்குற புதிய விதமான வியாபாரம். இதுக்கு முன்னாடி பாக்கு மட்ட பிளேட், பேப்பர் கப்பு தயாரிப்பு, பேப்பர் பிளேட் தயாரிப்பு அப்படின்னு சொல்லி ஒன்னுக்குமே ஆகாத ஒரு இரும்பு சாமான நம்ம தலையில கட்டிக்கிட்டு 10 லட்ச ரூபா வாங்கிக்கிட்டு போயிருவாங்க. மாசம் நீங்க 5 லட்ச ரூபாய் வரைக்கும் பேப்பர் கப்பு தயாரிச்சு நீங்க வெளியே கொடுக்கலாம் அப்படின்னு சொல்லி நம்ம தலையில வச்சு கட்டிருவாங்க. ஆனா நடந்தது என்னன்னா நீங்க பேப்பர் கப், தட்டம் எல்லாம் தயாரிச்சிகிட்டு அதை நீங்களே வச்சிக்க வேண்டியது எவனும் வாங்க இருக்க மாட்டான். ஆனால் இவங்க மிஷின் தலையில் வைத்து கட்டிக்கிட்டு போயிடுவாங்க. மிஷின விக்கிறது வரைக்கும் தேனு மாதிரி பேசுவானுங்க மிஷின் வித்ததுக்கு அப்புறம் அவங்க கிட்ட இருந்து எந்த விதமான ரெஸ்பான்ஸ் இருக்காது. இப்ப புதுசா டிஷ்யூ பேப்பர் மேக்கிங் அப்படின்னு சொல்லி புதுசா இன்னொரு வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். நீங்கள் மெஷின், ரா மெட்டீரியல் வாங்குவதற்கு 6 இலட்சம் கொடுத்தீங்கன்னா மாசம் 3 லட்ச ரூபா லாபம் மட்டும் பாக்கலாம்னு. இந்த அளவுக்கு லாபம் பாக்குறத எதுக்கு அவனுக நம்ம தலையில வச்சு கட்டணும் இவனுங்க எல்லாம் நம்மள வாழ வைக்கிறதுக்காக இல்ல, முடிஞ்ச அளவு நம்ம கிட்ட இருந்து பணத்தை பு~டுங்கிட்டு ஓடுறதுக்கு தான் இருக்கிறானுங்க. தயவு செய்து இந்த மாதிரி எந்த மாதிரி வியாபாரம் போய் மாட்டி விடாதீங்க நண்பர்களே. மேலும் யாராவது இந்த மாதிரி பேப்பர் கப் தயாரிப்பு டிஷ்யூ பேப்பர் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றிகரமாக இருக்கிறீர்களா அல்லது ஏமாந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும். கள்ள ஆட்டம்

பள்ளிக் கூடம் போகலாம்

3 months 2 weeks ago
இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்பாக இருந்தது 12வது படித்துக் கொண்டிருந்த மாணவர் தலைவன் ரவி. அவன் நாட்டில் ஒரு சட்டத்தரணியாகி, பருத்தித்துறை நகரபிதாவாக இருந்து சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டான். ரவியின் தம்பி சபா எனது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆதலால் இந்த பிரியாவிடை விடயம் எங்களது வகுப்பிலும் தடல் புடலாகப் பேசப்பட்டது. பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் அதிபர் தங்கராஜா மாஸ்ரரிடமிருந்து நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதில் முன்ணணியில் செயற்பட்டு வந்த ரவி, சபா இருவருக்கும் தன்மானப் பிரச்சினை. பாடசாலை பிரியாவிடை செய்வதால் மாணவர்கள் தனியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை என்பது அதிபரின் வாதம். மாணவர்களிடம் நிதி வசூலித்த பின்னால் நிறுத்த முடியாது என்பது மாணவர் தலைவரது கருத்து. இவர்களுக்கு நடுவில் பாவம் மாணவர்களாகிய நாங்கள். பிரியாவிடை நிகழ்ச்சியை மாணவர்கள்தான் நடத்த வேண்டும் என்பதில் ரவி பிடிவாதமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சில ஆசிரியர்களும் இருந்தார்கள் என சாடைமாடையாக சிலர் பேசிக் கொண்டார்கள். அதிபர் தங்கராஜா மாஸ்ரரோ அமைதியாக இருந்தார். மாணவர்களிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென அதிபரிடமிருந்து இறுதி அறிவிப்பு வந்தது. எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட விசயம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது? கணக்குகள் எப்பொழுதும் சரிவராது. நான் போட்ட கணக்கும் தப்பாகப் போயிற்று. ஒருநாள் மாணவர் தலைவரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. “அதிபர் தங்கராஜா மாஸ்ரர் எங்களது நிகழ்ச்சியை மறுப்பதால் கச்சேரியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் இது விடயமாக முறைப்பாடு செய்ய உள்ளோம் ஆகவே நாளை காலை எட்டு மணிக்கு விஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பாடசாலை முன்னால் கூடவும். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் போக்குவரத்துக்கான செலவாக ஒரு ரூபா கொண்டு வரவும்” அநேகமான மாணவர்கள் ரவியின் பின்னால் நின்றார்கள். போதாதற்கு சபா எனது வகுப்பிலிருந்து எல்லோருக்கும் உரு ஏத்திக் கொண்டிருந்தான். ஆகவே இவர்களது பேச்சுக்கு எடுபடுவது தவிர வேறு மார்க்கம் எனக்கிருக்கவில்லை. முதலில் அம்மா இந்த விடயத்துக்கு ஒத்துவரவில்லை. ஆனாலும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பங்கு கொள்வதை அறிந்த பின்னரே ஒரு ரூபா தந்தார், அதுவும் மனமேயில்லாமல். கச்சேரிக்கான பயணம் பாட்டுக்கள் துள்ளளுடன் மகிழ்வாக இருந்தது. கச்சேரி வாசலில் எங்கள் வண்டிகள் மறிக்கப்பட்டன. வாசலிலேயே நாங்கள் கொண்டு போன புகார் வாங்கப்பட்டது. “உடனடியாக எல்லோரும் பாடசாலை திரும்ப வேண்டும்” என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். தங்கராஜா மாஸ்ரருக்கு கச்சேரியிலும் அதிக செல்வாக்கு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது. எது எப்படியோ எனது முதல் போராட்டம் மூன்று ரூபாக்கள் நட்டத்துடன் தோற்றுப் போனது. அடுத்தநாள் வகுப்பறை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது. ‘நேற்று பாடசாலைக்கு வரரத மாணவர்கள் அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்து மூலமாகப் பெற்று அதிபரிடம் சமர்ப்பித்து அதன் பின்னரே வகுப்பறைக்கு வரவும்’ பாண்டிய மன்னனின் பிரம்படியை விட தங்கராஜா மாஸ்ரரின் பிரம்படி எப்படியிருக்குமென்று அந்த சிவனுக்கே தெரியும். நெருப்பில் சுட்டு நுனி கறுத்திருந்த பிரம்பு நினைவில் வந்து கலக்கியது. எல்லோரையும்விட அதிகமாகக் கலங்கிப் போயிருந்தது ரவியும், சபாவும்தான். எல்லோரும் ரவியின் வீட்டில் கூடினோம். தனது மகனால்தான் இவ்வளவும் என்பதை அறிந்து ரவியின் தந்தை எங்களுக்கு உதவ வந்தார். அவர் தங்கராஜா மாஸ்ரரை அவரது இல்லத்தில் சந்தித்து எங்களுக்காக கதைத்துப் பார்த்தார். பாடசாலைக்கு வரமுடியாமற் போனதற்கான காரணத்தை எழுத்து மூலமாக ஒவ்வொரு மாணவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் தங்கராஜா மாஸ்ரர் உறுதியாக இருந்தார். சரி ஏதாவது ஒரு காரணத்தை எழுதி கொண்டுபொய்க் கொடுங்கள். பிரச்சினை வராது என்று ரவியின் தந்தை உறுதி தந்தார். இது விசயமாக வீட்டில் கேட்டால் அங்கேயும் பூசை நடக்குமென்பதால் நாங்களே கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம். எனது அம்மம்மா காலமாகிவிட்டார் என்று எனக்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிக் கொண்டேன். அடுத்தநாள் கடிதங்களுடன் மண்டபத்தில் கூடினோம். மண்டபதின் ஒரு வாசலினூடகத்தான் அதிபரின் அறைக்குச் செல்ல வேண்டும். நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்தார்கள். துணிவுள்ளவர்கள் (இல்லையென்றாலும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு) முன்னுக்குப் போனார்கள். உள்ளே போனவர்கள் பிறிதொரு வாசலினூடக அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது முறை வந்தது உள்ளே போனேன். என்னுடன் சங்கர், முகுந்தன், நடராஜா ஆகியோரும் உள்ளே வந்தார்கள். முறிந்து சிதறிய பிரம்புத் துகள்கள் நிலத்தில் இருந்து பயமுறுத்தின. தங்கராஜா மாஸ்ரரைப் பார்க்கும் துணிவில்லை. முகத்தை எவ்வளவு பாவமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருந்தேன். கிளாக்கர் வந்து எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டார். என்ன எழுதியிருக்கு? சிங்கம் கர்ஜித்தது. நாலு பேருக்கும் அம்மம்மா செத்துப் போச்சாம் கிளாக்கர் ஏளனமாகச் சொல்லி விட்டு கடிதங்களை மேசையில் வைத்தார். பரீட்சையில்தான் பார்த்து எழுதுவார்கள் என்று சொல்வார்கள். கடிதத்தில் உள்ள காரணத்தையும் பார்த்து எழுதியதை அன்றுதான் பார்த்தேன். தங்கராஜா மாஸ்ரர் கிளாக்கரை நோக்கி கண் அசைத்தார். சுவரைப் பார்த்தபடி நால்வரும் நிறுத்தப் பட்டோம். குனிந்து கால் பெருவிரலை கைகளினால் பிடிக்கும் வண்ணம் பணிக்கப்பட்டோம். நாலுபேருக்கும் ஒரே அம்மம்மாவா? வேறை வேறையா? தங்கராஜா மாஸ்ரர் கேட்பது கேட்டது. அதுக்குப் பிறகு எதுவுமே நினைவில்லை. சுளீர், சுளீர் என்று பிற்பக்கத்தில் பிரம்பின் இரண்டு இழுவைகள். தண்ணீரில் இருந்து வெளியில் போட்ட மீன் கூட என்னளவுக்குத் துள்ளியிருக்காது. வகுப்பறைக்கு வந்தால் எனக்கு நாலு, எனக்கு மூன்று , எனக்கு இரண்டு என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். பேசும் நிலையில் நானில்லை. மூன்று ரூபா கொடுத்து இரண்டு சுளீர் வாங்கிய கெட்டித்தனத்தைப் பற்றி பேச என்னயிருக்கிறது?

மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார் - வி.எஸ்.சிவகரன்

3 months 2 weeks ago
அப்போதும் அவர்களின் தேவைக்காகவே தமிழீழம் பிறக்குமாம். எமது வெத்து வேட்டு தலைமைகளின் வரட்டு பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை இப்போதாவது உணர்தீர்களே! இரண்டுமே சாத்தியமாகாது என்று தெரிந்தும், இரண்டையும் நம்பி தேர்தலில் வாக்குகளையும், விலை மதிப்பற்ற இளைஞர்/ யுவதிகளின் இனிய உயிர்களையும் கொடுத்த, விழலுக்கு இறைத்த நீராக்கிய முட்டாள்தனத்தை இனித் தமிழர்கள் செய்யக் கூடாது.

தண்டனையே குற்றம் - T. Gobyshanger

3 months 2 weeks ago
வழமைபோல் அழகாக எழுதியிருக்கிறீர்கள் கோபி சங்கர். வாழ்த்துக்கள் அறுபதுகளில் ஆசிரியர் என்றால் சிம்ம சொப்பனம். நெருப்பால் சுட்டு நுனி கருகியிருக்கும் பிரம்புடன் ஆசிரியர் வகுப்பறைக்குள் நுளையும் போதே நடுங்கத் தொடங்கிவிடும். தொண்டை வரண்டு விடும். ஆறாம் வகுப்பு படிக்கும் போது சுப்பிரமணிய வாத்தியாரின் (ஆள் கரவெட்டி என்று நினைக்கிறேன்) நேரமும் வேலையும், நேரமும் தூரமும் கணக்கில் நிறைய வாங்கியிருக்கிறேன். ஏழாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் வைரமுத்து மாஸ்டரிடம் வாங்கியிருக்கிறேன். வைரமுத்து மாஸ்டரின் தண்டனை வேறு விதமாக இருக்கும். பென்சிலை காதின் சோணையுடன் சேர்த்து அழுத்துவார். வேதனை தாங்காமல் கால் பெருவிரலில் எம்பி நின்றாலும் விட மாட்டார். ஒன்பதாம் வகுப்பில் அதிபர் தங்கராஜா மாஸ்டரிடம்…… எந்த ஆசிரியர் அடித்தாலும் வீட்டில் சொல்வதில்லை. அங்கேயும் அடி விழும். ஆனாலும் ஆசிரியர்களின் மேல் ஒரு மரியாதை இருந்தது. ஏற்றி வைத்த ஏணிகள்.

துரை வைகோ Vs மல்லை சத்யா: வைகோ கண்டித்தது ஏன்? ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
விலகலுக்கு காரணம் இதுதான்… துரை வைகோ அறிக்கை முழு விவரம்! 19 Apr 2025, 12:55 PM அண்மைக்காலமாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் மோதல் முற்றிய நிலையில், முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ இன்று (ஏப்ரல் 19) விலகியுள்ளார். தன்னுடைய விலகலுக்கான காரணத்தை பட்டியலிட்டு துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்லை சத்யாவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக துரை வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியினரின் அன்பு நெகிழச் செய்தது! அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான், உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர், ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன். இந்த சூழ்நிலையில் தான் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வைகோ உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர். அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். வைகோ இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தொண்டர்களின் எதிர்பார்ப்பு! வைகோ மீது வைத்துள்ள பாசத்தால் கட்சியினர் என் மீது காட்டுகிற நேசம் வளர்ந்தது. இந்த சூழ்நிலையில் தான் கொரோனா காலத்தில் மீண்டும் வைகோ உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகும் முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை தலைவருக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது. எந்த குருவிகுளம் ஒன்றிய சேர்மனாக வைகோ பொறுப்பு வகித்தாரோ அதே குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பில் மதிமுகவை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதைக் களத்தில் நிறைவேற்றிக் காட்டி தமிழ்நாட்டில் திமுகவை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் மதிமுக குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது. மதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் வைகோ அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த போது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர். தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த வைகோ, நிர்வாக குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். எந்த பதவியையும் விரும்பியதில்லை! நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கட்சியில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை. மதிமுகவில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், வைகோவுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்றத் தேர்தல் வந்த போது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும், அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன். அதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்ததும் எல்லா மாநகராட்சிகளிலும் கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவும் பேரூராட்சி நகராட்சிகளில் கட்சியினர் உறுப்பினர்களாக பதவிக்குச் செல்லவும் நான் என்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டேன். மதிமுகவில் புத்துணர்ச்சி! அதற்காக கூட்டணி தலைமையுடன் பல நேரங்களில் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றி இருக்கிறேன். தமிழகத்தில் நகராட்சி தலைவராக மாங்காடு முருகன் மனைவி சுமதி முருகன் பொறுப்பு ஏற்கவும், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பொறுப்பை சூர்யகுமார் ஏற்கவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் துணைத் தலைவர்களாக கட்சி தோழர்கள் இடம் பெற செய்யவும் என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றோம் என்பதை கட்சி தோழர்கள் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டு அரசியலில் மதிமுக நம்பிக்கை தரக்கூடிய வகையில் வெற்றி நடை போடத் தொடங்கியதும் இயக்கத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கினேன். இயக்கத் தோழர்களுக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் தலைவருக்கு துணையாகவும் செயல்பட்டு வரும் எனக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் ஊக்கமளித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நிதி திரட்டும் பணிகளில் நமது கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கனிசமான நிதியையும் திரட்டித் தந்து தலைவரை மகிழ்வித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் கருத்துப் பரிமாற்றம் நடந்த போது கிடைக்கிற ஒரு சீட்டை கட்சியில் சீனியராக இருக்கிற சிறப்பாக செயல்படுகிற விசுவாசம் மிக்க ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினேன். ஆனால், நூற்றுக்கு நூறு விழுக்காடு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான்தான் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புதிய சின்னமாகத் தீப்பட்டி சின்னத்தை தேர்வு செய்து 15 நாட்களில் மக்களிடையே எடுத்துச் சென்று திருச்சி தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வியக்கத்தக்க வெற்றியை நாம் பெற்றோம். வைகோ அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம்! எனக்கு வாய்ப்பினை தந்த மதிமுகவிற்கு பெருமை சேர்க்கிற வகையில் தான் நாடாளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்துகிறேன். திருச்சி தொகுதியில் மக்கள் கட்சிக்கு பேராதரவு தரும் வகையிலும் ,தொகுதி பிரச்சனைகளுக்கு வேண்டிய தீர்வு கிடைக்கும் வகையிலும் பணியாற்றுகிறேன். ஒன்றிய அமைச்சர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு வைகோவை அழைத்துக் கொண்டு நேரடியாக போய் சந்தித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முனைந்து வருகிறேன். அதைப்போல மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மதிமுகவுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்பதால் தளராத ஊக்கத்துடன் மக்கள் பணியை செய்து வருகிறேன். வைகோவை நேசிப்பதை போல என்னையும் கட்சியின் தோழர்கள் பாராட்டி வருவது எனக்கு பொறுப்பை அதிகரிப்பதாக இருக்கிறதே என்ற கவலையுடன் தான் தினம்தோறும் என் பணிகளை மிகுந்த கவனத்தோடு செய்கிறேன். வைகோ உருவாக்கிய மதிமுக என்கிற இந்த திராவிட இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் வலிவும் பொலிவும் பெற வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் நினைப்பதை போல நானும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். வைகோ அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும்” வாழ்நாள் போராளி”என்கிற விருது மட்டும்தான். மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்கள். வைகோ மீது பழிச்சொல்லை வீசியதை தாங்க முடியாமல் தான் எங்கள் உறவினர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார். சிவகாசி ரவி தீக்குளித்த போது எழுந்த மன வேதனையில் இருந்து வைகோ மீள்வதற்குள் எங்கள் குடும்பத்தில் இந்த துயரமும் நிகழ்ந்தது. அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர் “என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால், அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். https://minnambalam.com/durai-vaiko-lists-out-why-he-resigned-from-mdmk-post/

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான் 19 Apr 2025, 8:33 AM மே 18-ஆம் தேதி கோவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சீமான், “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நானே உங்களை சேர்த்து விடுகிறேன். நாம் தமிழர் கட்சியில் இருந்து சென்றால் ஸ்டாலின், விஜய் ஆகியோர் தேர்தலில் நிற்க உடனடியாக சீட் கொடுத்துவிடுவார்கள். இந்தப் படையை சரியாக வழிநடத்திக் கொண்டுபோய் நான் வென்று காட்டுவேன் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் என்னுடன் வாருங்கள். உங்களுக்கு ஒதுக்கும் தொகுதியில் நீங்கள் வென்று காட்ட வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தோற்றால் பாடையில் ஏற்றி மாலை போடுவேன். எப்படி பார்த்தாலும் மாலை கன்ஃபார்ம். தோற்றால் சிறிது பால்டாயிலை வாங்கி குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள். வேறு வழியே கிடையாது. நம்முடைய கட்சி பிளக்ஸ் பேனரில் தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். தறுதலைகளை போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொண்டு ஃபோட்டோ வைக்க கூடாது. எங்கெங்கு நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களோ அங்கு நம்முடைய குரல் ஒலிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். https://minnambalam.com/ntk-seeman-speech-about-win-in-2026-election/

பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்

3 months 2 weeks ago
பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துகுவிப்பை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு. மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் மற்றும் சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர். அறிக்கையில் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள்:- இலங்கையில் உள்ள சொத்துக்கள். 01. வீடு - 01, மட்டக்களப்பு பூம்புகார் என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 2 கோடி. 02. வீடு - 02, கொழும்பு இராஜகிரிய என்னும் இடத்தில் றோயல் அப்பார்ட்மென்டில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 6.5 கோடி. 03. வீடு - 03, கொழும்பு கறுவாத்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 23 கோடி. 04. வீடு - 04, மட்டக்களப்பு வாவிக்கரை வீதி - 01 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 12 கோடி. 05. சுற்றுலாவிடுதி - 01, திருகோணமலை உப்புவெளி என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 5 கோடி. 06. சுற்றுலாவிடுதி - 02, நுவரெலியா, நுவரெலியா நகர் என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 17 கோடி. 07. 12 ஏக்கர் நிலம், மட்டக்களப்பு பாசிக்குடா என்ற இடத்தில் இந்த 12ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 25 கோடி. 08. 50 ஏக்கர் நிலம், திருகோணமலை, கும்புறுப்பிட்டி என்ற இடத்தில் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 20 கோடி. 09. நிலத்தொகுதி, மட்டக்களப்பு திராய்மடு என்னும் இடத்தில் இந்த நிலத்தொகுதி காணப்படுகிறது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை. 10. 115ஏக்கர் வயற்காணி, மட்டக்களப்பு புளுட்டுமானோடை என்ற இடத்தில் இந்த வயற்காணி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை. 11. 10ஏக்கர் நிலம், மட்டக்களப்பு மாங்கேணி என்ற இடத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை. 12. ஆழ்கடல் மீன்பிடி இழுவைப்படகுகள் 12, கொழும்பு டிக்கோவிட்ட என்னும் இடத்தில் இந்த இழுவைப்படகுகள் காணப்படுகின்றன. இதன் பெறுமதி: 20 கோடி. வெளிநாட்டு சொத்துக்கள்:- 13. சிங்கப்பூர் Orchard Road இல் அமைந்துள்ள Alfred Tower என்ற இடத்தில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் வீடு - 01. இதன் பெறுமதி: 7.5 கோடி. 14. நகைக்கடையும் கட்டடமும், சுவிட்சர்லாந்து சூரிச் என்ற இடத்தில் இந்த நகைக்கடையும் கட்டடமும் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 150 கோடி. 15. வெளிநாட்டு வங்கிகளிலுள்ள மொத்த பணத்தொகை 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள். சரி நிகர்

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் மீட்கப்பட்ட 220 கிலோ தங்கமும் எங்கே போனது ? - சரத் பொன்சேகா

3 months 2 weeks ago
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் மீட்கப்பட்ட 220 கிலோ தங்கமும் எங்கே போனது ? யுத்தம் முடிவடைந்த பின்னர் 220 கிலோ தங்கம் வடக்கில் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுதா கிரியடேஷன் என்ற யூடிப் தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே முன்னாள் இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். அதன்போது சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது, யுத்தம் முடிவடைந்து மூன்று மாதங்களில் நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகிவிட்டேன். ஆனால் நான் இராணுவத்தளபதியாக இருந்த காலத்தில் 220 கிலோ தங்கத்தை பல்வேறு இடங்களில் குழிகளில் இருந்து மீட்டோம். இரும்பு பெட்டிகளில் அவை இருந்தன. அந்தத் தங்கம் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் மக்கள் அடகு வைத்தவையாகும். அடகு வைத்தவர்களின் பெயர், ஊர் விபரங்கள் அந்தந்த நகைகளில் பொலித்தினால் சுற்றப்பட்டிருந்தன. அவற்றை நாங்கள் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்தோம். எனினும் அதற்கு பின்னர் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும் அதேபோன்று பெருமளவு தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 110 கிலோ தங்கம் கிடைத்திருந்தது என்று பஸில் ராஜபக்‌ஷ அண்மையில் கூறியிருந்தார். அப்படியென்றால் அதில் அரைவாசியை பையில் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இதேவேளை திறைசேரியில் இருந்த ஆறாயிரம் கிலோ தங்கம் ராஜபக்‌ஷ குடும்பத்தினரால் ஜப்பானுக்கு விற்கப்பட்டுள்ளதாக உள்ளக விசாரணைகள் நடக்கின்றன. அப்படியென்றால் அரச பொறுப்பில் இருந்த தங்கத்திற்கும் வேலையை காட்டியுள்ளார்கள் என்றே கூற வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=321235

தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்

3 months 2 weeks ago
இவ்வாறு பூச்சாண்டி காட்டி காட்டியே தமிழ் தேசியவாதிகள் தமது தவறுகளை மறைத்துக் கொண்டு தமிழரின் இருப்பை இலங்கை தீவில் அழிப்பதற்க்காக இனவாதிகளின் வேலையை சுலபமாக்கி வருகின்றனர். அதி தீவிர தமிழ் தேசியம் பேசும் கஜே கும்பல் 2009 ல் இருந்து தமது ஒரு நாடு இரு தேசம் கொள்கையை அமுப்படுத்த எடுத்த வினை திறனான நடவடிக்கைகள் முன்னேற்றங்கள் பூச்சியமே! ஆளையாள் துரோகி என்று திட்டி தமது தவறுகளை மறைப்பது தான் அன்றில் இருந்து இன்று வரை தமிழ் தேசியம் பேசிய அதை வைத்து வாழ்ந்துவரும் அனைவரும் தவறாமல் செய்த ஒரு விடயம். தமிழரின் இருப்பு பலவீனப்பட்டாலும் தமது இருப்பு பாதிக்கப்படாமல் இருந்தால் சரி என்பதே அவர்களது கொள்கை. 1963 ல் இருந்து 1981 வரை 20 ஆண்டுகளில் பாரியளவில் மற்றைய மாகாணங்களையொத்த அளவில் அதிகரித்த தமிழரின் சனத்தொகை 1981 இற்கு பின்னர் ஏன் பாரிய வீழ்சசியை கொடுத்தது தமிழரின் அரசியலை பலவீனமாக்கியது என்று கேட்டால் இன அழிப்பால் மக்கள் வெளியேற்றதால் வந்தது என்று சப்பை கட்டு வேறு. அப்படியானால் 1963 ல் இருந்து 1981 வரை ஏன் சனத்தொகை அதிகரித்தது? சோறா சுதந்திரமா என்று வெற்று சுலோகத்தை வைத்து இரண்டையும் பலவீனப்படுத்தியதுதான் தமிழ் தேசியம் பேசியோரின் சாதனை. தமிழ் மக்களை அறிவு ரீதியில் பலப்படுத்திய யாழ் பலகலைகழகம் என்றாலும் சரி , யாழ் நூலக கட்ட நிர்மாணம் என்றாலும் சரி தமிழ் தேசிய பேசாது புத்திசாலித்தனமாக செயற்பட்டவர்களாலே உருவானதொழிய வெற்று கோஷம் போட்ட தமிழ் தேசியம் பேசியவர்களால் வந்ததல்ல. 1950 களில் யாழ் நூலக கட்ட உருவாக்ககத்தில் பங்களிக்காத வெற்று சுலோக்காரர்கள் அது இனவாதிகளால் தீ வைக்கப்பட்டவுடன் அதை தமது இனவாத அரசியலுக்கு திறமையாக பயன்படுத்தினர். இவ்வாறாக தாம் பேசும் தமிழ் தேசியம் தொடர்ந்து தமது அரசியல் நடவடிக்கைகளால் பலவீனப்பட்டு வருவதை மறைக்க இன்றும் தமது வழமையான பாணி உசுப்பேற்றும் சென்றிமென்ற பரப்புரைகளை மட்டுமே தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் / நபர்கள் செய்து வருகின்றனர். தமிழ் மக்களை பலப்படுத்தும் விதமாக தமது தவறான முன்னைய தந்திரோங்களை மாற்றுவதோ மக்களுக்காக செயற்படுவதை விட இந்த வெற்று கோஷ அரசியல் தமக்கும் தமது குடும்பத்துக்கும் நன்மை பயக்கும் என று தாயக/ புலம் பெயர் தீவிர தமிழ் தேசியம் பேசும் தரப்புகள் நினைக்கிறார்கள்.
Checked
Fri, 08/08/2025 - 03:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed