புதிய பதிவுகள்2

சூரிய மின்சக்தி படலங்களை நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை வேண்டுகோள் !

3 months 2 weeks ago
சூரிய மின்சக்தி படலங்களை நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை வேண்டுகோள் ! 14 Apr, 2025 | 10:19 AM நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சூரிய மின்சக்தி படலங்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரையும் நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அனைத்து கூரைகளிலும் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி படலங்களை நிறுத்துமாறு சூரிய மின்சக்தி படலங்களின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் கடும் வெப்பநிலை காரணமாக சூரிய மின்சக்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் விடுமுறை காலம் என்பதால் பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் குறைந்தளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால் அதிகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டால் அது அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது மின்சார கட்டமைப்பில் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211976

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!

3 months 2 weeks ago
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்! விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428434

"விசுவாவசு" தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

3 months 2 weeks ago
"விசுவாவசு" தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் உதயமாகி உள்ளது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை பிறப்பு, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம். விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14/04/2025 அன்று அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் நுழையும் பொழுது பிறந்துள்ளது. https://athavannews.com/2025/1428423

நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?

3 months 2 weeks ago
ஸ்ராலின் ஒரு தமிழர். அத்துடன் இதுவரை தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே தமிழர்களே. ஒரு அயோக்கிய அரசியல்வாதி தனது சுய லாபத்துக்காக கட்டி விட்ட கதைகளை நிர்வாக பொறுப்பில் இருக்கும் நீங்கள் பரப்பலாமா?

கோல்ப் 2025 Masters ஒரு வீரனின் நீண்ட போராட்டம்

3 months 2 weeks ago
ஆமாம். சில நாட்களின் முன், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் வெற்றியாளர். சாகித் தீகலா, Sahith Theegala, என்னும் இந்திய வம்சாவளி வீரர் விளையாடியிருந்தார். இவர் இந்தியப் பெற்றோருக்கு கலிபோரினியாவில் பிறந்தவர். இப்போட்டியில் 29வது இடத்தைப் பிடித்தார். இவர் மிகத் திறமையானவர். இவ்வாறான major போட்டியொன்றை வெல்லக்கூடிய வீரர் என்று வகைப்படுத்தப் பட்டவர். நான்கு நாட்கள் எப்படி விளையாடுவினம் என்பதுதான் இங்கே கணக்கே. டெஸ்ட் போட்டிகள் மாதிரித்தான். பல தடைகளைக் கடந்து வரவேணும். முக்கியமாக மனத்தடையும் அழுத்தமும். கோல்பில் நீயே ராஜா, நீயே வில்லன். மற்றவர்கள் ஒரு காரணியே இல்லை. இன்னொருவர், அக்ஸய் பாத்தியா, Aksay Bhatia. இவரும் கலிபோர்னியாவில் பிறந்தவர். நான்கு நாட்களும் விளையாடி, 42வது இடத்தைப் பிடித்தார்.

நல்லதே நடக்கும்! கட்சி சகாக்களுடன் பேசிய பின் பா.ம.க., ராமதாஸ் அறிவிப்பு

3 months 2 weeks ago
சென்னை: பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது, அக்கட்சியில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ராமதாஸ், 'நல்லதே நடக்கும்' என்று கூறியது, அவர்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளது. ஆனாலும், அவரின் மகன் முரண்டு பிடிப்பதால், கட்சி நிர்வாகிகள் மீண்டும் சமரச முயற்சியை தொடர்ந்துள்ளனர். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே, கடந்த லோக்சபா தேர்தலின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ராமதாஸ் தன் மகள் வழி பேரன் முகுந்தனை, பா.ம.க.,வின் இளைஞர் அணி தலைவராக அறிவித்தார். அதை, பொதுமேடையிலேயே அன்புமணி எதிர்த்தார். இதனால், இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது. இந்நிலையில், பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக, கடந்த 10ம் தேதி ராமதாஸ் அறிவித்தார். அத்துடன் 'இனி நானே தலைவராக செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார்' என்றார். இது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழி நடத்துவேன் இரு தினங்கள் அமைதியாக இருந்த அன்புமணி, நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'பா.ம.க.,வை தொடர்ந்து வழி நடத்தி செல்வேன். 2022 மே 28ம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தேர்தல் கமிஷனும் அங்கீகரித்துள்ளது. 'எனவே, தலைவராக தொடர்ந்து செயல்படுவேன். மே 11ல் மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் அறிவிப்பை, கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அதேநேரம், அன்புமணியின் அறிவிப்பு, ராமதாசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்டமாக பொதுக்குழுவை கூட்டி, தனக்குள்ள ஆதரவை நிரூபிக்கும் முடிவிற்கு வந்தார். உடன், தைலாபுரம் தோட்டத்திலிருந்த கட்சியின் தலைமை நிலைய செயலர் அன்பழகன் வழியே, மாவட்ட செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆலோசனை விழுப்புரம், கடலுார், புதுச்சேரி, மயிலாடுதுறை என, பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார், விழுப்புரம் மாவட்ட செயலர் ஜெயராஜ், மயிலாடுதுறை மாவட்ட செயலர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தைலாபுரம் தோட்டத்திற்கு ஒருவர் பின் ஒருவராக, நேற்று காலையிலிருந்து வரத்துவங்கினர். பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், அன்புமணியின் அறிவிப்பு குறித்தும், பொதுக்குழுவை கூட்டும் தேதி குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ், 'எல்லாம் சரியாகி விடும்' என்று கூறியதாகவும் தகவல் வெளியானது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார், மாவட்ட செயலர் ஜெயராஜ் ஆகியோர், 'மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநில மாநாடு குறித்தும், மாநாட்டில் அதிக அளவில் கட்சியினர் பங்கேற்பது குறித்தும், ராமதாஸ் தலைமையில் ஆலோசனை நடந்தது' என்று தெரிவித்தனர். தைலாபுரம் தோட்டத்திற்கு, நேற்று பகல், 1:30 மணிக்கு வந்த, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ''விரைவில் நல்ல செய்தி வரும். ராமதாஸ், அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து பேசி நல்ல முடிவை எடுப்பர்,'' என்றார். இந்தச் சூழலில், நேற்று மாலை அன்புமணி, மாமல்லபுரம் சென்றார். அங்கு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கும் இடத்தை பார்வையிட்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,''இது எங்கள் உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். ராமதாஸ் வழிகாட்டுதலுடன், அவரது கொள்கையை நிலைநாட்ட, பா.ம.க.,வை, ஆளும் கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், எல்லோரும் சேர்ந்து உழைப்போம்,'' என்றார். அன்புமணி இனி, கட்சியின் செயல் தலைவராக செயல்படுவார் என்று ராமதாஸ் அறிவித்த நிலையில், 'நான் கட்சி தலைவராக செயல்படுவேன்' என, அன்புமணி அறிவித்துள்ளது, கட்சியினரிடம் குழப்பத்தை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தந்தை மற்றும் மகனை சமாதானப்படுத்தும் முயற்சியில், கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். அன்புமணியுடன் முகுந்தன் சமரசம்ராமதாஸ் தன் பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க., இளைஞர் அணி தலைவராக நியமித்ததே, அன்புமணிக்கும், ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், முகுந்தன் நேற்று மதியம் சென்னை பனையூரில் உள்ள அன்புமணி வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர். அதன்பின், மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார் அன்புமணி. https://www.dinamalar.com/news/tamil-nadu-news/good-things-are-happening-pmk-ramadoss-announces-after-talking-to-party-colleagues-reconciliation-attempt-again-as-son-anbumani-is-also-at-loggerheads/3904312

கோல்ப் 2025 Masters ஒரு வீரனின் நீண்ட போராட்டம்

3 months 2 weeks ago
2025 Masters வெற்றியாளர் ரோரி மெக்கல்ரோய் Rory McIlroy இந்த வருட மாஸ்டேர்ஸ் சற்றுமுன் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ரோரி மெக்கல்ரொய் வெற்றியீட்டி பச்சை மேல்சட்டையைத், Green Jacket, தனதாக்கிக் கொண்டார். 35 வயதான ரோரி இதற்காக 14 வருடங்களாகப் போராடிக் கொண்டிருந்தார். 2011 ஆம் வருடப் போட்டி அவரின் வாழ்க்கையில் ஏறபடுத்திய வலியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. நான்கு புள்ளிகள் முன்னணியில் இருந்து. கடைசி நாளில் காலடி எடுத்து வைத்தவர், கடைசியில் மிக மோசமாகத் தோற்றார். Meltdown என்று சொல்வார்கள். அவனால் ஒரு பந்தையும் fairwayல் அடிக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப மரங்களுக்கும், வெளியாலும் அடித்து, 8 புள்ளிகளால் பின்தங்கினார். மூன்றாம் நாள் முடிவில் முதலாவதாக இருந்தவர் கடைசி நாளில 15வது ஆளாக வந்தார். அன்றிலிருந்து, ஒவ்வொரு வருடமும் அவரின் முயற்சிகள் கைகூடவேயில்லை. கோல்பில் நான்கு முக்கிய போட்டிகள் உள்ளன. எல்லாவற்றையும் வென்றவர்கள் வெகு சிலரே. கடைசியாக வென்றவர் டைகர் வூட்ஸ், Tiger Woods. ரோரி 2014ஆம் ஆண்டு மூன்றாவது போட்டியை வென்றார். மாஸ்டர் போட்டியை வென்றால் நான்கு பெரும் போட்டிகளையும் வென்றவர் என்று போற்றப்படுவார், Grandslam Champion. அந்த 2011 meltdown லிருந்து அவரால் வெளிவரவே முடியவில்லை. ஒவ்வொரு வருடப் போட்டிகளிலும் அவரின் மேலான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருந்தது. இறுதியில் 2025 அவரின் ஆண்டாக அமைந்தது. அவர் இப்போ Grandslam Champion. நான்கு முக்கிய போட்டி வெற்றியாளர். அவரின் மேல் இருந்த அழுத்தம், மனச் சோர்வு, படபடப்பு எல்லாம் பறந்தன. ஒரு வீரனால் எவ்வளவுதான் தாங்க முடியும். எல்லாவற்றையும் தாங்கினார். இவ்வருடமும் அவ்வளவு இலகுவான வெற்றியாக அமையவில்லை. இன்றும் நான்கு புள்ளிகள் முன்னிலையில், போட்டியை ஆரம்பித்தவர், எல்லா விதமான தவறுகளையும் செய்தார். 2011 மீண்டுமா என்று படபடப்புடன் உலமே பார்த்துக் கொண்டிருந்தது. கடைசியில் இருவர் ஒரே புள்ளிகளைப் பெற, போட்டி playoff நோக்கிச் சென்றது. அவர் யோசித்திருப்பார், என்னடா நடக்குது. ஏன் இந்தப் போட்டி மட்டும் எனக்கு இந்த ஆட்டம் காட்டுது என்று. அப்படியான நாள் இன்று. இறுதியில், playoffல் ஒரு புள்ளியைப் பெற்று, போட்டியைத் தனதாக்கிக் கொண்டார். இப்படம் எல்லாக் கதையையும் சொல்லும்.
Checked
Sat, 08/02/2025 - 20:44
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed