3 months 2 weeks ago
அவர்கள் இருவரும் கள்ளர் நான் கேட்டா, சொல்லவா போறாங்க🤣. அதே போல, ஆனால் இன்னும் வாய்ப்பில்லாதபடியால் சின்ன லெவல் களவு செய்பவர் சீமான் என்கிறீர்களா? ஓம் செம்ம அடி அடித்த ஊழல் மன்னன். அது மட்டும் இல்லை தலைவரை தூக்கில் போடவேணும் என தீர்மானம் இயற்றிய சட்டசபை சபாநாயகர்.
3 months 2 weeks ago
பையா இதுவரை கொஞ்ச விளையாட்டுகள்தான் போயிருக்கு . ......... முடிந்தவரை பங்குபற்றுங்கள் . ........ எல்லாம் சரியாகிவிடும் .........! 😁
3 months 2 weeks ago
இரண்டு அவிச்ச முட்டை இரவு சாப்பிட்டதிற்கும் இன்றைய போட்டிகளில் முட்டைகள் வாங்குவதற்கும் ஏதும் தொடர்பு இருக்குமா?! சுவி அண்ணை 38 புள்ளிகளோட முன்னிலை....
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,HAPPER COLLINS படக்குறிப்பு,ஜெனரல் கே சுந்தர்ஜி கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் முகர்ஜி, பானர்ஜி அல்லது சாட்டர்ஜி போல சுந்தர்ஜி பெங்காலியா அல்லது ஃபிரோஜி அல்லது ஜாம்ஷெட்ஜி போல பார்ஸியா என்று மக்கள் அடிக்கடி கேட்பார்கள். சிலர் அவரை ஒரு சிந்தி என்றும் கருதினர். ஜெனரல் சுந்தர்ஜியின் மனைவி வாணி சுந்தர்ஜி தனது 'எ மேன் கால்ட் சுந்தர்ஜி' என்ற கட்டுரையில், "உங்கள் பெற்றோர் இருவரும் தமிழர்கள். ஆனாலும் உங்களுக்கு சுந்தர்ஜி என்ற பெயர் எப்படி வந்தது என்று எங்கள் திருமணத்தின் ஆரம்ப நாட்களில் நான் அவரிடம் கேட்டேன்," என்று எழுதியுள்ளார். "எனக்கு மூன்று வயதாக இருந்தபோது என் பெற்றோர் காந்திஜியை பற்றி அடிக்கடி பேசுவதை நான் கேட்பேன். ஒரு நாள் நான் என் தந்தையிடம், நீங்கள் எந்த காந்திஜியை பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்டேன். மகாத்மா காந்தி ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரை கௌரவிக்கும் விதமாக நாம் அவரது பெயருடன் 'ஜி'யை சேர்க்கிறோம் என்று என் தந்தை பதிலளித்தார். அன்று முதல் என்னையும் சுந்தர்ஜி என்று அழைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். என் தந்தை இதற்கு ஒப்புக்கொண்டார் என்று அவர் பதில் சொன்னார்," என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார். மெட்ராஸில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்டில்கூட அவரது பெயர் கிருஷ்ணசாமி சுந்தர்ஜி என்று பதிவு செய்யப்பட்டது. அவரது ஊழியர்களும் சகோதரர்களும் அவரது பெயருடன் 'ஜி'ஐ சேர்க்கத் தொடங்கினர். அவரது வாழ்நாள் முழுவதும் இந்தப் பெயரே நிலைத்துவிட்டது. முன்னாள் இந்திய தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த சிங்கப்பூர் நீதிமன்றம் – என்ன விவகாரம்?12 ஏப்ரல் 2025 அதிமுக - பாஜக கூட்டணியால் யாருக்கு லாபம்? அண்ணாமலை, ஓபிஎஸ், தினகரன் எதிர்காலம் என்ன? 6 கேள்வி-பதில்கள்12 ஏப்ரல் 2025 களைப்பில் போர்க் களத்திலேயே உறங்கிய சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,72 மணிநேர தொடர்ச்சியான தாக்குதலுக்குப் பிறகு களைப்படைந்த சுந்தர்ஜி போர்க்களத்திலேயே தூங்கிவிட்டார். பெயரைப் போலவே மற்ற விஷயங்களிலும் சுந்தர்ஜி வித்தியாசமானவராக இருந்தார். ஒருமுறை டேராடூனில் உள்ள அதிகாரிகள் உணவகத்தில் ஒரு ராணுவ கேப்டன் அவரிடம் ஓடி வந்து, "சார், நாங்கள் உங்களுக்காக முழு சைவ உணவைத் தயார் செய்துள்ளோம்" என்றார். "என் இளம் நண்பரே, நான் மாட்டிறைச்சி உண்ணும் பிராமணன். எனக்கு சுவை பிடித்திருந்தால் நகரும், நீந்தும், ஊர்ந்து செல்லும் அனைத்தையும் நான் சாப்பிடுவேன்," என்று சுந்தர்ஜி பதிலளித்தார். தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில் மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் உயிரியலில் ஹானர்ஸ் படிக்கத் தொடங்கினார். ஆனால் படிப்பின் பாதியிலேயே ராணுவத்தில் சேர முடிவு செய்தார். அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே. அவர் தனது வாழ்க்கையில் ஐந்து போர்களில் பங்கு கொண்டுள்ளார். அவர் மேஜராக இருந்தபோது ஐ.நா படைகளின் சார்பாகப் போரிட காங்கோவுக்கு அனுப்பப்பட்டார். அங்கே கடுமையான சண்டை நடந்தது. ஒருமுறை 72 மணிநேரம் தொடர்ந்து நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் சாப்பிடாமலும் தூங்காமலும் ஈடுபட்ட சுந்தர்ஜி மிகவும் சோர்வடைந்ததால் தாக்குதலின் நடுவே இருந்த இடத்திலேயே தூங்கிவிட்டார். "அவரது பிகாரி உதவியாளர் லட்சுமண் அவரைப் பதுங்கு குழிக்குள் இழுக்க முயன்றார். ஆனால் சுந்தர்ஜி அவரை நோக்கி கோபமாக 'F…off' (இங்கிருந்து செல்) என்று கத்தினார். 24 மணிநேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்தபோதுதான் போர்க்களத்தில் இருப்பதையே அவர் உணர்ந்தார். அவரைச் சுற்றி 36 மோர்டார் குண்டுகள் கிடந்தன. அவர் அவற்றைக் கவனமாக எண்ணினார். ஆனால் இவ்வளவு பெரிய தாக்குதலுக்குப் பிறகும் அவருக்கு ஒரு கீறல்கூட ஏற்படவில்லை" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் ராணுவ தளபதியானபோது அதே லட்சுமண் அவருக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யைக் கொண்டு வந்தார். காங்கோ நாட்களை நினைவுகூர்ந்த சுந்தர்ஜி தனது முன்னாள் உதவியாளரிடம், "அன்று என்னைப் போர்க்களத்தில் தூங்க விட்டுவிட்டு ஏன் சென்றுவிட்டீர்கள்?" என்று நகைச்சுவையாகக் கேட்டார். "நீங்கள் என்னைத் திட்டினீர்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் சென்றுவிட்டேன்" என்று லட்சுமண் பதில் அளித்தார். காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு ஜப்பான் தவிர, அமெரிக்க அணுகுண்டுகள் விழுந்த இன்னொரு நாடு எது தெரியுமா? என்ன நடந்தது? 1998 முதல் 2025 வரை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக 'இயல்பான' கூட்டணி கடந்து வந்த வரலாறு பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேஜர் ஜெனரல் கே.எஸ்.பிரார், ஜெனரல் ஏ.எஸ். வைத்யா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் சுந்தர்ஜி (நடுவில்), ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது... கடந்த 1928ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்த கிருஷ்ணசாமி சுந்தர்ஜி, 1945ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது வடமேற்கு எல்லைப் பகுதியில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றார். கடந்த 1971 போரின்போது அவர் வங்கதேச போரின் முன்வரிசையில் இருந்தார். 1984ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் பொற்கோவிலில் இருந்த ஆயுதமேந்தியவர்களை விரட்டியடிக்க மேற்கொள்ளப்பட்ட, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு சுந்தர்ஜி தலைமை வகித்தார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது ஜெனரல் சுந்தர்ஜி மேற்கு கமாண்டின் தலைவராக இருந்தார். 1984 ஜூன் 3ஆம் தேதியன்று இந்திரா காந்தி அவரை டெல்லிக்கு அழைத்தார். அன்றிரவு அவர் இந்திரா காந்தியுடன் தனியாக ஒரு மணிநேரம் பேசினார். இரவு 2 மணிக்கு வீடு திரும்பியபோது அவர் தனது மனைவியிடம், 'இது எனக்கான மிகப்பெரிய சோதனை' என்றார். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு பிறகு அவர் முற்றிலும் மாறிவிட்டார். அவருடைய சிரிப்பு மறைந்துவிட்டது. இது குறித்து அவரது மனைவி தனது கவலையை வெளிப்படுத்தியபோது, 'நான் விரைவில் அதிலிருந்து மீண்டு விடுவேன்' என்று கூறினார். ஆனால் அவரால் அதிலிருந்து ஒருபோதும் மீள முடியவில்லை. "எதிரியை எதிர்த்துப் போராடவே எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. என் சொந்த மக்களை எதிர்ப்பதற்கு அல்ல என்று அவர் அடிக்கடி கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்," என்று வாணி சுந்தர்ஜி கூறுகிறார். மக்கள் உண்மையை அறியும் வகையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் அனுபவங்களைப் பற்றி எழுதுமாறு பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் அவரைக் கேட்டுக் கொண்டார். தனது ஓய்வு நேரத்தில் அது பற்றி எழுதுவதாக அவர் கூறினார். ஆனால் அந்த நேரம் ஒருபோதும் வரவில்லை. லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ். பிரார் தனது 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தி ட்ரூ ஸ்டோரி' என்ற புத்தகத்தில் "நாங்கள் பொற்கோவிலுக்குள் நுழைந்தது கோபத்துடன் அல்ல, சோகத்துடன். உள்ளே நுழையும்போது எங்கள் உதடுகளில் பிரார்த்தனையும், எங்கள் இதயங்களில் பணிவும் இருந்தது. அந்த நேரத்தில் வெற்றி, தோல்வி என்ற எண்ணமோ, வெகுமதிக்கான விருப்பமோ எங்களுக்கு இருக்கவில்லை. நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகவே அதை நாங்கள் கருதினோம்" என்று ஜெனரல் சுந்தர்ஜி கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார். சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 ஆபரேஷன் பிராஸ்டாக்ஸின் கதை பட மூலாதாரம்,WWW.BHARATRAKSHAK.COM படக்குறிப்பு,ஆபரேஷன் பிராஸ்டாக்ஸ் காரணமாக பாகிஸ்தான் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்தது ஜெனரல் சுந்தர்ஜியின் பெயருடன் தொடர்புடைய மற்றொரு நடவடிக்கை 'ஆபரேஷன் பிராஸ்டாக்ஸ்'. இந்தியாவின் போர் தயார்நிலையைச் சோதிப்பதற்காக இந்தப் பயிற்சி 1986 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ராஜஸ்தான் பாலைவனத்தில் தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியாக இது இருந்தது. இந்த அளவிலான ராணுவப் பயிற்சி இதற்கு முன்பு ஆசியாவில் நடத்தப்பட்டதில்லை. போர் சூழ்நிலையில் எல்லா ராணுவ உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் சோதிக்கப்பட வேண்டும் என்று சுந்தர்ஜி விரும்பினார். இந்தப் பயிற்சியில் ராணுவத்தின் பெரும் பகுதியினர் ஈடுபட்டனர். இந்தியா தன்னைத் தாக்க நினைக்கிறது என்று பாகிஸ்தான் தவறாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இந்தப் பயிற்சி மிகவும் தீவிரமாக இருந்தது. பாகிஸ்தான் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து அவர்களைப் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டது. இந்தப் பயிற்சி காரணமாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அருண் சிங்கின் துறை மாற்றப்பட்டது. "ஒருமுறை நாங்கள் ஆப்கானிஸ்தான் அதிபர் நஜிபுல்லாவை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றபோது ராஜீவ் காந்தி என்னிடம் 'நட்வர், நாம் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கப் போகிறோமா?" என்று கேட்டார்," என்று 'ஒன் லைஃப் இஸ் நாட் இனஃப்' என்ற தனது சுயசரிதையில் நட்வர் சிங் எழுதுகிறார். இந்தப் பயிற்சிக்கான ஒப்புதலை பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அருண் சிங் அளித்திருந்தார். இது குறித்து ராஜீவ் காந்திக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை ராஜீவ் காந்தி நட்வர் சிங் மற்றும் நாராயண் தத் திவாரியிடம், 'பாதுகாப்புத் துறை இணை அமைச்சரை நான் என்ன செய்வது' என்று கேட்டார். "அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் தெளிவாகச் சொன்னேன். இதற்கு ராஜீவ் 'அருண் சிங் என் நண்பர்' என்று கூறினார். இதற்கு நான், 'நீங்கள் டூன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அல்ல. நீங்கள் இந்தியாவின் பிரதமர். பிரதமர்களுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை என்று சொன்னேன்," என்று நட்வர் சிங் குறிப்பிட்டார். சில நாட்களுக்குப் பிறகு அருண் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து நீக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டார். இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 'ஸ்காலர் ஜெனரல்' என்று பெயர் பெற்ற ஜெனரல் சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய ராணுவம் போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க ஜெனரல் சுந்தர்ஜி பரிந்துரைத்தார். இந்த ஆபரேஷனின்போது ஒரு விஷயம் ஒருபோதும் நிற்கவில்லை. ஜெனரல் ஜியா, ஜெனரல் சுந்தர்ஜிக்கு மாம்பழங்கள் மற்றும் கின்னு டேஞ்சரின் பழங்கள் நிரம்பிய பெரிய கூடைகளைத் தொடர்ந்து அனுப்பி வந்தார். "அந்தப் பழக்கூடைகளில் 'ஜெனரல் சுந்தர்ஜிக்கு வாழ்த்துகள். நீங்கள் இவற்றை ரசித்து உண்பீர்கள் என்று நம்புகிறேன். ஜியா" என்று ஜெனரல் ஜியா எழுதிய குறிப்பு இருக்கும்," என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். ஜெனரல் ஜியா விமான விபத்தில் இறக்கும் வரை இந்த பழக் கூடைகள் சுந்தர்ஜிக்கு வந்து கொண்டிருந்தன. இந்திய ராணுவத்திற்கு போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க பரிந்துரைத்ததற்காக ஜெனரல் சுந்தர்ஜி நினைவுகூரப்படுகிறார். ஜெனரல் சுந்தர்ஜியை 'ஸ்காலர் ஜெனரல்' என்றும் அழைப்பார்கள். அவர் 'அணுசக்திக் கோட்பாட்டை' வகுத்தார். அதைப் பின்பற்றி இந்தியா 1998 அணுஆயுத சோதனைக்குப் பிறகு 'முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை' என்று அறிவித்தது. 'தி பிரின்ட்' இதழில் வெளியான 'General Sundarji gave China strategy four decades ago' என்ற தனது கட்டுரையில் ஜெனரல் ஹெச்.எஸ். பனாக், "இந்திய ராணுவத்தில் வேறு எந்த ஜெனரலுக்கும் இவ்வளவு அறிவுசார் ஆழம், செயல் உத்திக் கண்ணோட்டம் மற்றும் அமைப்பை மாற்றியமைக்கும் திறன் இல்லை என்பதை அவரது மோசமான விமர்சகர்கள்கூட ஒப்புக்கொண்டனர். தனது இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாத கால பதவிக் காலத்தில் அவர் இந்திய ராணுவத்தை 21ஆம் நூற்றாண்டுக்குள் கொண்டு வந்தார்," என்று குறிப்பிட்டுள்ளார். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்த கதை1 ஏப்ரல் 2025 அக்பரை பின்பற்றுமாறு ஔரங்கசீப்பை அறிவுறுத்திய சிவாஜி - ஒரு வரலாற்றுப் பார்வை23 மார்ச் 2025 'விஷன் 2000' வரைவை உருவாக்கிய சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுந்தர்ஜியின் வேண்டுகோளின் பேரில், மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி படைப் பிரிவின் பாடலை பண்டிட் ரவிசங்கர் இயற்றினார். ஜெனரல் சுந்தர்ஜி 'பகட்டானவர்' என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அவரைப் பற்றிய இந்தக் கருத்து நியாயமானதல்ல என்று அவரது மனைவி கருதுகிறார். சுந்தர்ஜியிடம் குழந்தைத்தனமான எளிமையும் நேர்மையும் தெரிந்தன என்று அவர் குறிப்பிடுகிறார். "அவர் ஸ்டைலாக வாழ விரும்பினார். அவர் பெரும்பாலும் சீருடை அல்லாத உடைகளில் காணப்பட்டார். அவர் பைப் புகைப்பார். அதன் தண்டைப் பயன்படுத்தி சுவரில் உள்ள வரைபடங்களை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு விளக்குவார். இடையிடையே பைப்பில் இருந்து ஒரு பஃப் அல்லது இரண்டு பஃப் உள்ளிழுப்பார். அவரது மனதில் புதிய யோசனைகள் எப்போதும் பிறந்து கொண்டே இருக்கும்" என்று வாணி சுந்தர்ஜி கூறுகிறார். அந்த நேரத்தில் அவர் மனதளவில் 21ஆம் நூற்றாண்டை ஏற்கனவே அடைந்திருந்தார். 21ஆம் நூற்றாண்டுக்கான இந்திய ராணுவத்தின் உத்தி மிக விரிவாக விளக்கப்பட்ட 'விஷன் 2000' என்ற வரைவை அவர் தயாரித்தார். அணுசக்தி விவகாரங்கள் குறித்த அவரது கருத்துகள் நன்கு அறியப்பட்டவை. அதைப் பற்றியும் அவர் நிறைய எழுதியிருந்தார். அவரது தனிப்பட்ட நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. "லியோனார்டோ டா வின்சி மற்றும் செங்கிஸ் கானை சுந்தர்ஜிக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய, மேற்கத்திய, பாரம்பரிய, நாட்டுப்புற இசை என அனைத்து வகையான இசையையும் அவர் விரும்பினார். இரவு முதல் விடியல் வரை ரவிசங்கரின் இசை நிகழ்ச்சிகளில் நாங்கள் அமர்ந்திருப்போம். அவர் எங்கள் நாற்பது ஆண்டுக்கால நண்பர்" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். சுந்தர்ஜியின் வேண்டுகோளின் பேரில் மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி படைப் பிரிவுக்காக ரவிசங்கர் ஒரு பாடலை இயற்றினார். அவர் அடிக்கடி பிரபல விஞ்ஞானி ராஜா ராமண்ணாவின் வீட்டிற்குச் சென்று அவர் பியானோ வாசிப்பதைக் கேட்டு ரசிப்பார். வேலை செய்யும்போது சுந்தர்ஜி அடிக்கடி பிஸ்மில்லா கான், யெஹுதி மெனுஹின், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் இசையைக் கேட்பார். தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்கள் அமைத்த 'பெருவழிகள்' பற்றி தெரியுமா?17 மார்ச் 2025 பலுசிஸ்தான் இந்தியாவுடன் சேர விரும்பிய போது நேரு நிராகரித்தாரா? பாகிஸ்தான் என்ன செய்தது?16 மார்ச் 2025 வானியல் மற்றும் பறவைகளின் மீது ஆர்வம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பறவைகளைப் பார்த்து ரசிக்க ஜெனரல் சுந்தர்ஜி இரண்டு சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளையும் வாங்கினார். சுந்தர்ஜி எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஒவ்வொரு விஷயம் பற்றிய அவரது அறிவு மேலோட்டமாக இல்லாமல் ஆழமானதாக இருந்தது. ஓய்வு பெற்ற பிறகு ஒருமுறை அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சீன மொழியைக் கற்றுக்கொள்ள இரண்டு புத்தகங்களை அவர் வாங்கினார். 60 வயதைக் கடந்த அவர் சீன மொழியை சரளமாகப் பேசத் தொடங்கினார். "அவர் என்னிடமிருந்து இரண்டு விஷயங்களை கற்றுக்கொண்டார். அவற்றில் ஒன்று வானியலில் ஆர்வம். என் தந்தை ஆறு வயதில் இருந்தே கோள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் காட்ட என்னை ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்வார். சுந்தர்ஜி எனக்காக வானியல் பற்றிய சில புத்தகங்களைக் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவருக்கும் இந்தத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். "இரண்டாவது விஷயம் பறவைகள் மீதான ஆர்வம். என்னைப் பார்த்து உத்வேகம் பெற்ற அவர் இந்த விஷயத்தில் சாலிம் அலி மற்றும் டிலான் ரிப்லி எழுதிய பல புத்தகங்களை வாங்கினார். பறவைகளைப் பார்த்து ரசிக்க இரண்டு சக்திவாய்ந்த தொலைநோக்கிகளையும் வாங்கினார். மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. அவரது மீன்பிடிக் கருவியும், 12 Bore துப்பாக்கியும் இன்னும் என்னிடம் உள்ளன" என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார். சுந்தர்ஜியின் ஒவ்வொரு வேலையிலும் வேகம் இருந்தது. அவர் மிக வேகமாக நடப்பார். உடன் நடப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுவிடும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அவர் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வேலை செய்தார். முகலாய பேரரசர் ஔரங்கசீப் மகராஷ்டிராவில் மிகவும் எளிய கல்லறையில் புதைக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணி13 மார்ச் 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி பீரங்கியும் ஓட்டுவார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் எல்லையை நோக்கிச் செல்ல கவச வாகனத்தைத் தயார் செய்யும் ஓர் இந்திய ராணுவ வீரர். சுந்தர்ஜிக்கு வாகனங்களை ஓட்டுவது மிகவும் பிடிக்கும். பீரங்கிகள், ஏபிசிகள் (Armored personnel carrier) மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வரை அனைத்தையும் அவரால் ஓட்ட முடியும். அவர் மேற்கு கமாண்ட் தலைவராக இருந்தபோது ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளன்று அவரது முன்னாள் ADC ஒரு மோட்டார் சைக்கிளில் அவரைச் சந்திக்க வந்தார். "அப்போது டெல்லியில் உள்ள இன்ஸ்பெக்ஷன் பங்களாவின் வராண்டாவில் நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். சுந்தர்ஜி மோட்டார் சைக்கிளைப் பார்த்தவுடன் "என்னுடன் வா" என்றார். நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தோம். அந்த நேரத்தில் சுந்தர்ஜி குர்தா பைஜாமா அணிந்திருந்தார், நான் இரவு உடையில் இருந்தேன். அடுத்த அரை மணிநேரத்திற்கு அவர் மோட்டார் சைக்கிளில் கன்டோன்மென்ட் முழுவதும் சுற்றினார்" என்று வாணி சுந்தர்ஜி நினைவு கூர்ந்தார். ஒருமுறை அவர் பாலைவனத்தின் 44 டிகிரி வெப்பத்தில் APCஐ ஓட்டினார். சிறிது நேரத்திற்குள் அவரது தோழர்கள் பலர் வெப்பத்தால் துவண்டு போனார்கள். ஆனால் 51 வயதான லெப்டினன்ட் ஜெனரல் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு வாகனத்தை தொடர்ந்து ஓட்டினார். "சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ராணுவ தளபதியானபோது நாங்கள் ஒன்றாக பபீனா என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு பல பீரங்கிகள் வரிசையாக நிற்பதை அவர் கண்டார். உடனடியாக அருகிலுள்ள ஒரு டாங்கின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த அவர் உடன் அமரும்படி என்னையும் அழைத்தார். அதன் பிறகு அவர் அந்தக் கரடுமுரடான நிலப்பரப்பில் முழு வேகத்தில் பீரங்கியை ஓட்டினார்" என்று வாணி நினைவு கூர்ந்தார். ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை17 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 'மோட்டார் நியூரான் நோயால்' அவதிப்பட்டார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜெனரல் சுந்தர்ஜி, இந்தியாவின் 'அணுசக்திக் கோட்பாட்டை' உருவாக்கினார் அவர் பாகிஸ்தானுக்கு சென்றபோது, அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி ஆசிப் நவாஸ் ஜன்ஜுவாவின் விருந்தினராக இருந்தார். இஸ்லாமாபாத், பெஷாவர், கைபர் கணவாய் ஆகிய இடங்களுக்கு சுந்தர்ஜி சென்றார். பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் அவர் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் 50 மீட்டர் உள்ளே சென்றார். இதன் பிறகு அவர் ஹெலிகாப்டர் மூலம் தக்ஷசீலா, மொஹஞ்சதாரோ மற்றும் லாகூருக்கும் பயணம் மேற்கொண்டார். ஜெனரல் சுந்தர்ஜி 'மோட்டார் நியூரான் நோயால்' பாதிக்கப்பட்டிருப்பதை 1998 ஜனவரி 10ஆம் தேதி மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள மோட்டார் நியூரான்களை பாதிக்கும் ஒரு நரம்பியல் நோய். இது தசை பலவீனத்தையும் இறுதியில் பக்கவாதத்தையும் ஏற்படுத்தும். இந்த நோயைப் பற்றி ஜெனரல் சுந்தர்ஜியிடம் சொல்வதற்கு மருத்துவர்கள் சிறிது தயங்கினர். ஆனால் விரைவில் அவர் இந்த நோயைப் பற்றிய அனைத்தையும் இணையம் மூலம் கண்டுபிடித்தார். உயிர் காக்கும் கருவிகளைப் பயன்படுத்தி உயிர்வாழ அவர் விரும்பவில்லை. அவர் தனது மருத்துவர்களிடம் கருணைக் கொலை பற்றிய கேள்விகளைக் கேட்டார். மார்ச் 28ஆம் தேதிக்குள் அவர் உயிர்காக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குச் சென்றுவிட்டார். அந்த நிலையிலும்கூட அவர் தனது மனைவிக்கு 'ப்ளீஸ் லெட் மீ கோ' (அதாவது தயவுசெய்து என்னைப் போக விடு) என்று நான்கு வார்த்தைகள் கொண்ட ஒரு குறிப்பை எழுதினார். "வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை அவர் முழு சுயநினைவுடன் இருந்தார். தனது கண்கள் மூலம் என்னிடமும், மருத்துவர்களிடமும் பேசிக் கொண்டிருந்தார். நான் அவருக்கு போக்ரான் அணு ஆயுத சோதனை பற்றிச் சொன்னேன். அந்த நிலையிலும் அவர் தினமும் மூன்று நாளிதழ்களைப் படிப்பார். பெரிய தொலைக்காட்சித் திரையில் கிரிக்கெட் பார்ப்பார்," என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். நோய் கண்டறியப்பட்ட பிறகு 'ஒரு வருடம் மற்றும் ஒரு வாரம்' அவர் உயிருடன் இருந்தார். கடந்த 1999 பிப்ரவரி 8ஆம் தேதி ஜெனரல் சுந்தர்ஜி இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7vnr5zlnnzo
3 months 2 weeks ago
20 ஓவர் போட்டிகளில் கோலியின் 100 வது அரை சதம் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய பெங்களூரு பட மூலாதாரம்,GETTY IMAGES 20 நிமிடங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, முதல் நான்கு ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஐந்தாம் ஓவரில் ஒரு சிக்ஸும் அடுத்த பந்தில் ஒரு ஃபோரும் அடித்த ஜெய்ஸ்வால், பின்னர் நிதானத்தை கடைபிடித்தார். மறுபக்கம் மெதுவாக ஆடிய சஞ்சு சாம்சன், 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரியான் பராக், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 14வது ஓவர் வரை ஓவருக்கு ஒரு பவுண்டரி என தாக்கமின்றி ஆடினார். அதே ஓவரிலேயே ரியான் பராக் தனது விக்கெட்டையும் இழந்தார். அடுத்த ஓவர்களில் ஜெய்ஸ்வால் தன்னுடைய அதிரடியை ஆரம்பித்து, ஹேசில்வுட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 75 ரன்களில் வெளியேறினார். அப்போது 16 ஓவர்களில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். அப்போதும் துருவ் ஜுரெல் அதிரடியாக ஆடவில்லை என்றாலும், மற்ற ஆட்டக்காரர்களுக்கு ஸ்டிரைக் மாற்றி முக்கிய பங்கு வகித்தார். ரன் வேகம் தேவைப்படும் நேரத்தில் ஹெட்மெயர் களத்தில் வந்து, துருவ் ஜுரெலுடன் சேர்ந்து ரன்களை விரைவாக குவிக்க முயன்றார். 17வது ஓவரில் சிக்ஸ் அடித்த துருவ், 19வது ஓவரில் ஒரு சிக்ஸும் ஒரு ஃபோரும் அடித்து கடைசி கட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தினார். இரண்டு சிக்ஸும், இரண்டு ஃபோரும் அடித்து, 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்பேக்ட் பிளேயராக களத்தில் இறங்கிய ஹெட்மெயர் , தனது முதல் பந்திலேயே ஃபோர் அடித்து அசத்தினார். பெங்களூரு பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், ஹேசில்வுட், க்ருணால் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES அதிரடியுடன் தொடங்கிய பெங்களூரு 174 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி மிகச் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஃபோர் அடித்த பில் சால்ட், நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்தார். பின்னர் ஆர்ச்சரின் மூன்றாவது ஓவரிலும் ஒரு ஃபோர் மற்றும் சிக்ஸர் அடித்து தனது அதிரடியை தொடர்ந்தார். மறுபக்கம் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதமாக ரன்கள் சேர்க்கும் பணியை கோலி நிதானமாக செய்தார். ஐந்தாவது மற்றும் ஆறாவது ஓவரிலும் பில் சால்ட் தனது அதிரடியை காட்டினார். ஃபோர் மற்றும் சிக்ஸரை தொடர்ச்சியாக விளாசினார். இந்த ஜோடியை பிரிக்க நினைத்த ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தும் தோல்வியைச் சந்தித்தனர். ஒன்பதாவது ஓவரில் கார்த்திகேய சிங் பந்துவீச்சில், பில் சால்ட் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 33 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அவரது கேட்ச் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கையில் பட்டது. அடுத்து களம் இறங்கிய தேவ் தத் படிக்கல், பத்தாவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் 11வது ஓவரில் எந்தவொரு பவுண்டரியும் எடுக்கவில்லை. இந்நிலையில் விராட் கோலி தனது அதிரடியை தொடங்கி ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கினார். சிக்ஸர், ஃபோர் என அதிரடியாக விளாசிய அவரை கட்டுப்படுத்த ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் முடியாமல் தவித்தனர். ஜோப்ரா ஆர்ச்சர், ஹசரங்கா, தீக்ஷனா என பல மாற்றங்களைச் செய்தும், கேப்டன் சாம்சனுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை. கோலியுடன் தேவ் தத் படிக்கலும் அதிரடியை தொடர்ந்து 17.3 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்து பெங்களூரு அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 62 ரன்கள் மற்றும் தேவ் தத் படிக்கல் 40 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்ற கோலியின் இந்த அரைச்சதம், டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 100 வது அரைச்சதமாகும். இந்த வெற்றியின் மூலம், பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5rw2ydwe7o
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 13 APR, 2025 | 02:28 PM சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். புத்தாண்டு காலங்களில் விபத்துக்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் பெரும்பாலும் சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே இது தொடர்பில், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மது போதையில் பிள்ளைகளுடன் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211961
3 months 2 weeks ago
பயணம் இனிதாக அமையட்டும் வீரப்பையன். சில பல போட்டிகளை மைதானத்தில் பாக்கிற யோசினை இருக்கோ. 🏏 கொஞ்ச நாளா முட்டையாக் கிடக்கு. அதிக முட்டை உடம்புக்கு ஆகாதே. இன்று ஒரு முட்டை காணும் என்டு கருண் நாயரோட கதைச்சிருக்கு. பார்ப்போம்.
3 months 2 weeks ago
ஐபோன்கள் விலை 3 மடங்காக உயரும் ஆபத்து நீங்கியது - டிரம்ப் அறிவிப்பால் கிடைத்த நிம்மதி பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மடலின் ஹால்பர்ட் பதவி, பிபிசி 13 ஏப்ரல் 2025, 13:23 GMT அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம், பரஸ்பர வரியிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்த விலக்கு 125% வரி விதிக்கப்பட்ட சீன இறக்குமதிகளுக்கும் பொருந்தும். பெரும்பாலான நாடுகளுக்கு டிரம்ப் விதித்த 10% இறக்குமதி வரியிலிருந்தும், சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட அதிகளவிலான வரியிலிருந்தும் இந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லைக் காவல் ஏஜென்சியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளில் இருந்து முதல் தளர்வை இது குறிக்கிறது. இதனை "முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு" என வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சனிக்கிழமை இரவு மியாமிக்கு செல்லும் போது, விலக்கு குறித்த கூடுதல் தகவல்களை அடுத்த வார தொடக்கத்தில் தருவதாக டிரம்ப் கூறினார். ஸ்மார்ட்போன்கள், கணினிகள் போன்ற பெரும்பாலான மின்னணு பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதால், அவற்றின் விலை பல மடங்கு உயரலாம் என அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கவலையடைந்த சூழலில் இந்த முடிவு வெளியானது. கடந்த ஏப்ரல் 5 முதல் பொருந்தும் இந்த வரி விலக்கில், செமிகண்டக்டர்கள், சோலார் செல்கள் மற்றும் மெமரி கார்டுகள் ஆகியவையும் அடங்கும். "தொழில்நுட்ப முதலீட்டாளர்களின் கனவு நனவாகியுள்ளது" என வெட்பஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான உலகளாவிய தலைவரான டான் ஐவ்ஸ், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "சீன இறக்குமதி வரியிலிருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் சிப்களுக்கு விலக்கு அளித்திருப்பது, மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம்" என்றும் அவர் கூறினார். ஆப்பிள், என்விடியா, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், தொழில்நுட்பத் துறையும் இந்த வார இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களது உற்பத்தியை அமெரிக்காவுக்கு நகர்த்தும் நிறுவனங்களுக்கு போதுமான நேரத்தை வழங்க இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. "செமிகண்டக்டர்கள், சிப்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் போன்ற முக்கியமான தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்கா சீனாவை நம்பியிருக்க கூடாது" என்பதை அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். "அதிபரின் வழிகாட்டுதலின்படி, இந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அமெரிக்காவுக்கு நகர்த்த வேகமாக பணியாற்றி வருகின்றன" என்றும் அவர் கூறினார். அமெரிக்கா - இரான் அணுசக்தி பேச்சுவார்த்தையின் வெற்றி, தோல்வி இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?9 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது ஏன்?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தனது புளோரிடா வீட்டில் வார இறுதியை கழித்த டிரம்ப், சீனாவிற்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள் குறித்து "தான் கவலைப்படவில்லை" என வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் கூறினார். சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் தனக்கு உள்ள உறவைப் பற்றி பெருமையாக பேசிய டிரம்ப், "அதிலிருந்து சாதகமான ஒரு விஷயம் வரும் என்று நினைக்கிறேன்" என்றார். ஃபென்டனில் தொடர்பாக சீனாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 20% வரிகள் இந்த மின்னணு பொருட்களுக்கு பொருந்தும் என, வெள்ளை மாளிகையின் கொள்கைப் பிரிவின் துணை மூத்த பணியாளரான ஸ்டீபன் மில்லர், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வரி செலவுகள் பயனாளர்களுக்கு மாற்றப்படுமானால், அமெரிக்காவில் ஐபோன் விலைகள் மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன. அமெரிக்கா, ஐபோனுக்கான முக்கிய சந்தையாகும். மேலும், கடந்த ஆண்டு ஆப்பிள் விற்பனை செய்த ஐபோன்களில் பாதி அமெரிக்காவில் விற்கப்பட்டதாக கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களில் 80% சீனாவில் தயாரிக்கப்பட்டவை மற்றும் மீதமுள்ள 20% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை எனவும் அது கூறுகிறது. தனது சக தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான சாம்சங் போல, சீனாவை அதிகம் நம்பாமல் தனது உற்பத்தியை பரவலாக்க ஆப்பிள் முயற்சிக்கிறது. கூடுதல் உற்பத்தி மையங்களுக்கான போட்டியில் இந்தியாவும் வியட்நாமும் முன்னணியில் உள்ளன. வரி அமலுக்கு பிறகு, இந்தியாவில் உற்பத்தியை விரைவுபடுத்தவும் அதிகரிக்கவும் ஆப்பிள் சமீப நாட்களில் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. டிரம்ப், இந்த வாரம் உலகின் பல நாடுகளுக்கு கடுமையான வரிகளை அமல்படுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், அதிக வரிக்கு உள்ளான நாடுகளுக்கு வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தும் என்று கடந்த புதன்கிழமை டிரம்ப் அறிவித்தார். ஆனால் இது சீனாவுக்கு பொருந்தாது. அந்த நாட்டுக்கு எதிராக அவர் வரியை 145% ஆக உயர்த்தினார். சீனாவால் எதிர்வரி விதிக்கப்பட்டதால் அதற்கான வரியை உயர்த்தியதாகவும், மற்ற நாடுகள் எதிர்வரி விதிக்கவில்லை என்பதால் ஜூலை வரை அவர்கள் 10% அடிப்படை வரியை மட்டுமே சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy0k8pw0jjo
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
3 months 2 weeks ago
13 APR, 2025 | 07:36 PM கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள விளையாட்டு பயிற்றுநர் ஞாயிற்றுக்கிழமை (13) பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். மேலதிக சட்டநடவடிக்கைக்காக சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். https://www.virakesari.lk/article/211965
3 months 2 weeks ago
அருமையான கிளிக்.
3 months 2 weeks ago
பயணம் இனிதாக அமையட்டும், பையன் சார்...................👍. மிரட்டல் குறிப்பு: இங்கு நான் வாழும் நாட்டில் ஒருவர் கிரீன்லாந்தை பிடிக்கப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கின்றார். நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து திரும்பிய பின்னும் இந்த திரியில் இணையாவிட்டால், டென்மார்க்கையும் போய்ப் பிடியுங்கோ என்று அவரிடம் சொல்லி விடுவேன்............🤣.
3 months 2 weeks ago
தமிழ் புது வருசம் பிறக்கின்ற நேரம்…. ஆட்களை வம்பிலை மாட்டி விடாதேங்கோ. 😂
3 months 2 weeks ago
கானா முதல் கமலாலயம் வரை! யார் இந்த நயினார் நாகேந்திரன்? 13 Apr 2025, 11:21 AM பாஜகவின் புதிய மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். ஏப்ரல் 12 ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில், பாஜகவின் புதிய மாநில தலைவராக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பொறுப்பேற்றிருக்கிறார் நயினார் நாகேந்திரன். தற்போதைய தமிழ்நாடு பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்திருக்கும், இந்த முக்கியமான கால கட்டத்தில் மாநிலத் தலைவராகியிருக்கிறார். ஏற்கனவே மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை அதிரடியாக செயல்பட்டு வந்த நிலையில் நயினார் இயல்பாகவே சாந்தமான பேச்சுக்கு சொந்தக்காரர். சட்டமன்றத்திலும் சரி, வெளியேயும் சரி அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்ல உறவை பேணி வருபவர். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்துக்கே உரிய பண்புகள் இவரிடம் சற்று அதிகமாகவே உண்டு. பதவியேற்ற பிறகு பேசிய நயினார் நாகேந்திரன், “இனி தமிழ்நாடு எங்கும் தாமரைக் கொடி பறக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அண்ணாமலை ஒரு புயல், நான் ஒரு தென்றல் என்றும் பேசியிருக்கிறார். திருநெல்வேலியின் தண்டையார் குளம் என்ற கிராமத்தில் இருந்து இப்போது கமலாலயம் வரை வந்திருக்கும் இந்த தென்றலின் பின்னணி என்ன? யார் இந்த நயினார் நாகேந்திரன்? திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே உள்ள தண்டையார் குளம் கிராமத்தில் 1960 இல் பிறந்தவர் நாகேந்திரன். இவரது தந்தையார் பெயர் நயினார். பார், பார்க்கிங் குத்தகை என பல பிசினஸ் செய்தவர் நயினார். அதனால் வசதியான குடும்பம்தான். நாகேந்திரன் பள்ளிப்படிப்பு முடித்து ஆரல்வாய்மொழி கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பு படித்தார். கானாவிடம் கற்ற அரசியல்! அப்போது அவருடைய தந்தை நாகேந்திரனை அதிமுகவின் முக்கிய புள்ளியாக அந்த காலத்தில் திகழ்ந்த கருப்பசாமி பாண்டியனிடம் அழைத்துச் சென்றார். கருப்பசாமி பாண்டியன் எம்,.ஜி.,ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர், ‘பையனுக்கு ஜாதகம் பார்த்தேன். அரசியல் தான் நல்லா வரும்னு சொல்றாங்க. அதனால உங்கள நம்பி ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லி கருப்பசாமி பாண்டியனிடம் தனது மகன் நாகேந்திரனை ஒப்படைத்தார் அவருடைய தந்தை. கருப்பசாமி பாண்டியனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் சால்வைகள் அணிவிப்பார்கள். இந்த சால்வைகளை எடுத்து மடித்து வைக்கும் வேலைதான் நாகேந்திரனுக்கு. அரசியலுக்காக தன் தந்தை பெயரையும் சேர்த்து நயினார் நாகேந்திரன் ஆனார். கொஞ்சம் கொஞ்சமாக கருப்பசாமி பாண்டியன் அருகே இருந்து திருநெல்வேலியின் அரசியல் களங்களை அறியத் தொடங்கினார். கானா எங்கே சென்றாலும் அங்கே நயினாரும் இருப்பார். கானாவை பார்க்க வருகிறவர்களிடத்திலெல்லாம் தன் அன்பாலும், தன்மையான பேச்சாலும் தனி இடம் பிடித்தார் நயினார் நாகேந்திரன். வளர்ச்சியில் துணை நின்ற சமுதாய பலம்! அரசியலுக்கு எப்போதுமே சமுதாய பலம் மிக முக்கியம். இந்த வகையில் கள்ளர், மறவர், அகமுடையோர் என்ற மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கிய முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய சமுதாயம் நயினார் நாகேந்திரன் அரசியலுக்கு பெரும் பலமாக இருந்தது. மறவர் சமுதாயத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன், ஆப்பநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் என்ற மெஜாரிட்டி பிரிவை சேர்ந்தவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் இதே பிரிவைத்தான் சேர்ந்தவர். கருப்பசாமி பாண்டியனுடைய அன்பும் ஆதரவும் பெற்று வளர்ந்து கொண்டிருந்தார் நாகேந்திரன். அப்போது திருநெல்வேலி மாவட்ட அதிமுகவின் இலக்கிய அணியில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பணகுடி நகர செயலாளர் பதவியை பெற்றார். தனது சமுதாயத்தின் பலத்தோடு சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் வரை நெருங்கினார் நயினார் நாகேந்திரன். அவர் ஒரு கட்டத்தில் தினகரனின் பரிபூரண ஆதரவோடு மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உயர்ந்தார். அதிமுகவில் முக்கியமான சக்தியாக இருந்த கருப்பசாமி பாண்டியன் 2000 ஆண்டு வாக்கில் திமுகவுக்கு சென்று விட்ட நிலையில்… அந்த இடத்தை தனது சமுதாய பலம் காரணமாக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் நயினார் நாகேந்திரன். இதன் காரணமாக 2001 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி அதிமுக வேட்பாளராக களம் இறங்கினார். முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரனுக்கு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைத்தது. அதுவும் தொழில்துறை , மின்சாரம் போக்குவரத்து துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை அந்த காலகட்டத்தில் அவர் வகித்தார். நயினார் நாகேந்திரன் அண்ணன் வீர பெருமாள் திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளராக இருந்தவர். அதிமுகவில் நயினார் நாகேந்திரன், திமுகவில் அவரது அண்ணன் என இருவரும் நெல்லை மாவட்ட அரசியலில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அதன் பின் வீரபெருமாளும் அதிமுகவுக்கு வந்துவிட்டார். இப்போது நயினார் நாகேந்திரனின் அண்ணன் வீரபெருமாள் அதிமுகவில் மாநில பொறுப்பில் இருக்கிறார். முதல்வர் ரேஸில் இடம்பெற்ற நயினார் 2001- 2006 காலகட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டரீதியான நெருக்கடி ஏற்பட்டு அவர் பதவி விலகியபோது… யாரை இடைக்கால முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பரிசளிக்கப்பட்ட பெயர்களில் ஓபிஎஸ் இன் பெயரோடு நயினார் நாகேந்திரன் பெயரும் இடம் பெற்றிருந்தது. இது பற்றி விவரம் அறிந்த அதிமுகவினர் நம்மிடம் பேசும்போது, “அம்மாவுக்கு பதில் யாரை முதலமைச்சராக போடலாம் என்ற ஆலோசனையில் அப்போது ஜாதகம் முக்கியமான பங்கு வகித்தது. அந்த வகையில் நயினார் நாகேந்திரனின் ஜாதகமும் போயஸ் கார்டனில் ஆராயப்பட்டது. நயினார் நாகேந்திரன் ஜாதகப்படி அப்போது அந்த பொறுப்பை அவரிடம் கொடுத்தால் திரும்ப பெற முடியாது என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள் அப்போதே சசிகலாவின் கடைக் கண் கடுமைப் பார்வைக்கு இலக்காக ஆரம்பித்தார் நயினார் நாகேந்திரன். இதையடுத்து அதிமுகவில் அவரது செல்வாக்கு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. 2006 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி மாலைராஜாவிடம் வெறும் 600 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன். அதன் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் அவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் ஆக்கப்படவில்லை. பாஜகவில் ஐக்கியம்! தொடர்ந்து அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தவர் 2016 ஜெயலலிதா மறைவுக்கு பிறகு… 2017 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்பதவி அளிக்கப்படவில்லை. 2021 சட்டமன்ற த் தேர்தலில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். பாஜக மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தவருக்கு பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியே கிடைத்தது. தனது கட்சி தலைவர்கள் உடனும் மற்ற கட்சி தலைவர்களுடனும் தனக்கே உரிய சுமுகமான அமைதியான பணிவான அணுகு முறையில் தொடர்ந்து நல்லுறவோடு இருந்தார் நயினார் நாகேந்திரன். காரணம் கருப்பசாமி பாண்டியனிடம் அவர் கற்ற அரசியல். இவருடைய பழகும் தன்மைக்கு ஓர் உதாரணம் அரசியல் வட்டாரத்தில் சொல்வார்கள். நயினார் நாகேந்திரன் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கால கட்டம்… கலைஞர் அப்போது எதிர்க்கட்சி. தேர்தல் பிரச்சாரத்துக்காக கலைஞரின் வாகனம் தயாரானது. எல்லா ஏற்பாடுகளையும் செய்தவர்கள், அந்த பிரசார வாகனத்தின் பதிவு விவகாரத்தில் சற்று மறந்துவிட்டார்கள். பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டுவிட்டது. உடனடியாக வாகனத்தை பயன்படுத்த வேண்டிய சூழல். அப்போது திமுகவில் இருந்து போக்குவரதுத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரனை அணுகியுள்ளனர். சில மணி நேரங்களில் அப்பிரச்சினையை முடித்துக் கொடுத்திருக்கிறார் நயினார். இதுபோல் மாற்றுக் கட்சியினருக்கும் தனது கட்சியினருக்கும் பல உதவிகளை சத்தமில்லாமல் செய்திருக்கிறார் நயினார். சர்ச்சையில் நயினார் அரசியல் வாழ்விலேயே அவர் அதிரடியாக பேசியது என்றால், 2018 காலகட்டத்தில் வைரமுத்து ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாக சர்ச்சை எழுந்ததல்லவா? அப்போது வைரமுத்துவை கண்டித்து பாஜக பல ஆர்பாட்டங்களை நடத்தியது. நெல்லையில் நடந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் பேசும்போது, வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தர ரெடியாக இருப்பதாகவும் கூறினார். நயினார் நாகேந்திரனா இப்படி பேசுவது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். நயினார் நாகேந்திரன் சந்தித்த லேட்டஸ்ட் சர்ச்சை…கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் சந்தித்த நான்கு கோடி ரூபாய் சர்ச்சைதான். நயினார் நாகேந்திரன் நெல்லை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். 2024 ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். இது தொடர்பாக வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இப்போதும் இருக்கிறது. அந்த பணம் நயினார் நாகேந்திரனுடைய பணம்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்தது. இந்த வழக்கு இன்னும் சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இன்னமும் நெல்லை வட்டாரத்தில் நயினார் நாகேந்திரனை பண்ணையார் என்று அழைக்கும் பழக்கம் அரசியல் வட்டாரத்தில் உள்ளது. அதென்ன பண்ணையார்? நெல்லை கிராமங்களில் ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த நிலக்கிழார்களை பண்ணையார் என்று அழைத்து வருகின்றனர். நயினார் நாகேந்திரன் ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து ஹோட்டல் பிசினசில் ஈடுபட்டார். அப்போது நயினாரையும் பண்ணையார் என்று அழைக்கத் தொடங்கி, அதுவே அவரது நெல்லை அரசியலில் அடையாளப் பெயராகவும் மாறிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் தான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தேவை என முடிவெடுத்த அமித்ஷா அதற்கு ஏற்ற மாநில தலைவர் வேண்டும் என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரன் இப்போது பாஜகவின் புதிய மாநில தலைவராக பதவி ஏற்றிருக்கிறார். விசாகப்பட்டினம் பெல்லாரி வரைக்கும் இவருக்கு கிரானைட் குவாரி பிசினஸ் பெருமளவில் இருக்கிறது. இதனால் பணத்துக்கு பஞ்சம் இல்லாதவர். மறவர் என்ற சமுதாய பலம் நயினாருக்கு பெரும் சாதகமாக இருக்கிறது. இவர்தான் அடுத்த பாஜக தலைவர் என்ற தகவல் உறுதியான உடனேயே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்குலத்து அரசியல் புள்ளிகள் நயினாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நயினார் இதுவரை தலைவர்களுக்கு கீழே செயல்பட்டவராகத்தான் இருந்துள்ளார். இப்போதுதான் தேசிய கட்சியில் மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக எப்படி நகர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்! https://minnambalam.com/the-background-of-tn-bjp-president-nainar-nagendran/
3 months 2 weeks ago
ஆமா இதுவும் இன்னமும் பல வந்தன.
3 months 2 weeks ago
பயணம் சந்தோசமாக அமையட்டும். பாதுகாப்பு முக்கியம்.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
அப்படியே உதயநிதியும் சபரிசனும் திமுக்கா ஆட்சிக்கு வந்த கையோட 30ஆயிரம் கோடி ஊழல் செய்த பணம் இப்ப யார் கையில் இருக்கு என்று கேட்டு சொல்லுங்கோ அதுக்கு பிறக்கு சின்ன மேட்டருக்கு வரலாம்....................கயல்விழியின் அப்பா ஆதிமுக்காவில் அமைச்சரா இருந்ததை மறக்க வேண்டாம் அண்ணா...........................................
3 months 2 weeks ago
தமிழ் நாட்டுக்கு போக தயார் படுத்திட்டு இருக்கிறேன் அண்ணா...................போய் வந்ததும் உறவுகளுடன் இணைந்து இருக்கிறேன் இந்த திரியில்👍..............................
Checked
Sat, 08/02/2025 - 17:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed