3 months 2 weeks ago
👉 https://www.facebook.com/reel/978884160670215 👈 ஈழப்பிரியன், மேலே உள்ள காணொளியையா சொல்கிறீர்கள். Made in California. 😂 🤣
3 months 2 weeks ago
இல்லை அண்ணை. ஒட்டுமொத்த இலங்கையின் ஜிடிபி 99 பில்லியன். தமிழ் நாட்டின் = 420 பில்லியன். இலங்கையின் பொருளாதாரத்தில் நாம் செலுத்தும் பங்களிப்பினை விட பலமடங்கு குறைவு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் நாம் செலுத்தும் பங்களிப்பு.
3 months 2 weeks ago
பையா முடிவை மீள் பரிசோதனை செய்யவும்.
3 months 2 weeks ago
வணக்கம் நிலாமதி அக்கா மற்றும் புலவர் அண்ணா............... மற்றும் என்னை தனி மடலில் தொலைபேசியில் அழைத்து யாழுக்கு மீண்டும் வரும் படி அழைத்த உறவுகளுக்கும் நன்றி எனக்கு இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ற மாதிரி என்னை மாற்றிக்க தெரியாது மனிசில் பட்டதை அப்படியே எழுதுவேன் ..................விளையாட்டுத் திரியில் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை ஒரு கொள்கை ஒரே மாதிரியான எழுத்து.........................நான் இந்த திரியில் எழுதினதை மீண்டும் வாசித்து பார்த்தேன் எங்கும் நான் வன்மத்தோடு எழுத வில்லை அப்படி எழுத வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை👍................................ ஒரு முறை அல்ல இரண்டு முறை என்னை நோக்கி கால்புணர்ச்சியோடு எழுத ஏன் தேவை இல்லா பிரச்சனைக்கு போவான் என்று நானாகவே ஒதுங்கி விட்டேன்.................... மன உளைச்சல் ஏற்பட்டால் எல்லாம் வெறுத்துப் போய் விடும் புலவர் அண்ணா☹️..................... எனது கள்ளம் கவடம் இல்லா அன்பு பாசம் சிலருக்கு தெரியாது யாழ் உறவுகளை நான் அழைக்கும் முறை இப்படி தாத்தா பெரியப்பு அண்ணா நண்பா கட்டத்துரை அக்கா குரு இப்படி யாழ் உறவுகள் மீது இருக்கும் அன்பினால் தான் பெயர்கள் சொல்லாம அன்பாய் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு பெயர்............................. விளையாட்டுத் திரியில் 14வருடமாய் யாரையும் நான் தாக்கி எழுதினது கிடையாது புலவர் அண்ணா.......................4புள்ளியோட தொடர்ந்து நிக்கும் போது கூட எனக்கு வலிக்க வில்லை 😁நான் வன்மத்தோடு எழுதுகிறேன் என்று ஒரு முகாந்தரமும் இல்லாம எழுதும் போது அது என்னை தனிமையில் தள்ளினது😞☹️............................ போட்டி முடிவின் போது பெரியப்பர் புள்ளி பட்டியலை போட முதல் பச்சை புள்ளி குத்துவது அனெகமாக நான் தான்...............இப்ப பச்சை புள்ளி கூட குத்த மனம் வருதில்லை இன்னொரு விளையாட்டு திரியில் சந்திப்போம் அண்ணா...............விளையாட்டு முடியும் மட்டும் பார்வையாளரா இருக்கிறேன்👍.............................
3 months 2 weeks ago
சிங்கள் பகுதியிலும் இப்படி செய்வார்களா? இன மத பேதம் இல்லாத அரசு என்கிறார்கள்.
3 months 2 weeks ago
சீமெந்து தொழிற்சாலையால் தீமை அதிகம் என்றார்கள். குடிநீர் கெடுவதற்கும் இது காரணம் என்றார்கள். இவைபற்றி ஆராயாமல் தொடங்கலாமா?
3 months 2 weeks ago
இது சட்டத்திற்கு முரண் அல்லவா? ஒருவரின் அனுமதி இல்லாமல் படங்கள் காணொளிகள் எடுக்க முடியுமா? கேட்க ஆளில்லை என்பதால் இருக்குமோ?
3 months 2 weeks ago
நிச்சயமாக இல்லை. இந்தியா, இலங்கை நாம் வகிக்கும் மேற்கில் கூட கொள்கையை முடிவு செய்வது அதிகாரிகள் அல்ல. மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள். உதாரணமாக - திமுக கடந்த தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த போது ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என ஒரு தேர்தல் அறிக்கை அல்லது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின் அந்த கொள்கைகளை நடைமுறை படுத்துகிறார்கள். அதை நடைமுறை படுத்தும் உத்தியை வகுப்பதும், நடைமுறை படுத்துவதும்தான் அதிகார வர்க்கம். மாநில கொள்கையால்தான் சிலது முன்னேற சிலது பிந்தங்கியது. அது திறமையான மாநில கொள்கையை வரித்து கொள்ளாத, ஒழுங்காக அதிகாரிகளை மேற்பார்வையிடாத அந்தத்த மாநில அரசியல் தலைவர்கள் பிழை.
3 months 2 weeks ago
படித்தவர் கூடிய மாநிலம் கேரளா என்பார்கள் அதனால் கேட்டேன். நன்றி.
3 months 2 weeks ago
காலையில் முட்டைக் கோப்பி உடம்புக்கு நல்லது. புதிதாக திருமணமானவர்களுக்கு அதிவிசேசம். கல்லோ கிருபன் 11 முட்டைக் கோப்பி பிளீஸ்.
3 months 2 weeks ago
13 APR, 2025 | 12:30 PM தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் 61 நாட்கள் வருடாந்த மீன்பிடி தடை அமுலுக்கு வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை (15) நள்ளிரவு முதல் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் குறித்த இடங்களில் மீன்பிடிக்க இயலாது. இது ஆயிரக் கணக்கான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளை பாதிக்கக்கூடும். 1983 ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட இந்த பருவக்கால தடையானது, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை பாதுகாப்பாய் மாற்றுவதற்கும் முட்டையிடும் காலத்தில் மீன் வளங்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மீன்பிடித் தடை அமுல் காலத்தில் ராமேஷ்வரத்தில் மட்டும் சுமார் 700 இற்கும் அதிகமான இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் நங்கூரமிடப்படும். பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, சோலியக்குடி, மூக்கையர் போன்ற பகுதிகள் உட்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் நிறுத்தப்படும். இந்தத் தடைக் காலத்தில் மீனவர்கள் பொதுவாக தங்கள் படகுகளை பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்காக கரைக்கு கொண்டு வருவார்கள். இப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தற்காலிகமாக அரபிக் கடல்களில் மீன்பிடிப்பதற்காக கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு செல்கிறார்கள். இக் காலகட்டத்தில் நாட்டுப் படகுகள், சிறிய அளவில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/211951
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,2024 இல் தானியங்கி கேமராவால் காட்டில் எடுக்கப்பட்ட படம் கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி முண்டோ 13 ஏப்ரல் 2025, 08:55 GMT பழங்குடி மக்களிடம் பேசாமலும், அவர்களை நேரில் பார்க்காமலும் அவர்களை பற்றி அறிந்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், அமேசானில் இருக்கும் அந்த பழங்குடியின மக்களைத் தொடர்புகொள்வது சாத்தியமல்ல. பிரேசிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ரொண்டோனியா மாகாணத்தில் பொலிவியா எல்லைக்கு அருகே வாழும் ஒரு பழங்குடி குழுவின் படத்தைப் பெறுவதற்காக, தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை நிபுணர்கள் பயன்படுத்தினர். அந்த பழங்குடி இன மக்கள் மாசகோ என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரியாது. மாசகோ என்ற பெயர் அவர்களின் நிலத்தில் பாயும் ஆற்றின் பெயரிலிருந்து வந்தது. "மாசகோ பழங்குடி பிரதேசம், தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே பிரிக்கப்பட்ட முதல் பழங்குடி பிரதேசமாகும்," என்று தேசிய பழங்குடி மக்கள் அறக்கட்டளையின் (ஃபுனாய்) பிரதேச பாதுகாப்பு இயக்குநர் ஜானெட் கார்வால்ஹோ பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். இந்த பிரேசிலிய அரசாங்க அமைப்பு பல ஆண்டுகளாக இந்த நிலங்களைப் பாதுகாக்கவும், அங்கு வாழும் மக்கள் தொடர்பு கொள்ளப்படுவதைத் தடுக்கவும் பணியாற்றி வருகிறது. அந்தப் பகுதியில் ஃபுனாய் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அல்டெய்ர் அல்கேயர், 30 ஆண்டுகளாக அந்த பணிக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார். வெளியுலகத் தொடர்பில்லாமல் அமேசான் காடுகளில் வாழும் அந்த பழங்குடி சமூகத்தின் முதல் தோற்றத்தை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்தினாலும், "அவர்கள் யார் என்பதை இன்னும் எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. இன்னும் நிறைய மர்மங்கள் உள்ளன," என்று என்று அல்கேயர், தி கார்டியன் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார். பிப்ரவரி 2024 இல் எடுக்கப்பட்ட அந்தப் படங்களையும், மாசகோ எனும் அந்த பழங்குடி இனம் தங்களது தற்காலிக குடியிருப்புகளை முற்றிலுமாக கைவிட்ட போது எடுக்கப்பட்ட பிற படங்களையும் ஃபுனாய் அமைப்பு பிபிசி முண்டோவுடன் பகிர்ந்து கொண்டது. இந்தப் புகைப்படங்களைப் பெறவும், இந்தச் சமூகத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் செயற்கைக்கோள் படங்களையும் நிபுணர்கள் நம்பியுள்ளனர். யாரையும் நெருங்க விடாத இந்தியாவின் சென்டினல் தீவு பழங்குடிகளை பார்க்க சென்ற அமெரிக்கர் என்ன ஆனார்?11 ஏப்ரல் 2025 கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 "200க்கும் மேற்பட்டோர் வாழ்ந்திருக்கலாம்" பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,இந்த படத்தில், 2024ல், ஃபுனாய் உறுப்பினர்கள் இந்த பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் விட்டுச் சென்ற ஒரு கத்தியை நீங்கள் காணலாம் Evergreen: Saving Big Forests to Save the Planet என்ற புத்தகத்தின் இணை ஆசிரியரான ஜான் ரீட் மற்றும் பிரேசிலிய செய்தித்தாள் ஓ குளோபோவின் ஆசிரியரான டேனியல் பயாசெட்டோ ஆகியோர் இணைந்து தி கார்டியனில் வெளியான கட்டுரையை எழுதியுள்ளனர். ஆய்வின் மூலம் கிடைத்துள்ள புதிய படங்கள் வெளியுலகத் தொடர்பில்லாத பிரேசில் பகுதி பழங்குடியின மக்கள், நன்றாக வாழ்ந்து வருவதை வெளிக்காட்டுகின்றன. ஆனால், அதே சமயம் அதில் சில சவால்களும் உள்ளன. முன்னதாக, "அமைதியான முறையில் அந்த பழங்குடி மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியது" என்பதை 1987 ஆம் ஆண்டு ஃபுனாய் நிபுணர்கள் கண்டறிந்தனர். பிரேசிலில் தனிமைப்படுத்தப்பட்ட 28 பழங்குடி மக்களில் மாசகோ இன மக்கள் குழுவும் உள்ளனர். "இந்த கிராமத்தின் சரியான மக்கள் தொகை குறித்த தரவு எங்களிடம் இல்லை, ஆனால் அவர்கள் விட்டுச் செல்லும் தடயங்கள், குடியிருப்புகளின் அளவு மற்றும் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அப்பகுதியின் மக்கள் தொகை 220 முதல் 270 வரை இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்." 1990களின் முற்பகுதியில், அல்கேயர் 100 முதல் 200 பேர் வரை இருந்ததாக மதிப்பிட்டார். கார்வால்ஹோவின் கூற்றுப்படி, அந்த பழங்குடி மக்கள் மாசகோ பூர்வீக நிலத்தின் முழு நிலப்பரப்பிலும் காணப்படுகின்றனர். இது தோராயமாக 421,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. "அவர்கள் தாங்கள் வாழும் இடத்தை, மாசகோ பூர்வீக நிலத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ரியோ பிராங்கோ பூர்வீக நிலத்தின் ஒரு பகுதி (சுமார் நான்கில் ஒரு பகுதி) வரை விரிவுபடுத்துகிறார்கள்." ஆண் ஈக்கள் இணையை கவர இதையும் செய்யுமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்6 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 தானியங்கி கேமரா பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,2024 இல் கேமராவால் படம் பிடிக்கப்பட்ட பழங்குடி மக்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர் அந்த மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது ஃபுனாயின் கொள்கை அல்ல என்பதால், அவர்கள் நடமாடும் முக்கிய இடங்களில் தானியங்கி கேமராக்களை அமைக்க முடிவு செய்தனர். எனவே, 2019 ஆம் ஆண்டில், அவர்கள் ஒரு கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்ட பின்னர், தங்களிடம் இல்லாத ஒன்றைப் பெறும் நோக்கத்துடன், அதாவது அந்த பகுதியின் புகைப்படத்தைப் பதிவு செய்ய, ஒரு கேமராவை "அப்பகுதியின் மையத்தை நோக்கி" வைத்தனர். இறுதியில், அவர்களது முயற்சி வெற்றியடைந்தது. ஆனால், அப்பகுதியை புகைப்படம் எடுப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள் அல்ல. அந்தப் பகுதியில் அவர்கள் கடந்து சென்ற பிறகு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்பினர். 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள், 2021 ஜனவரியில் அந்த பகுதியில் நிறுவப்பட்டிருந்த கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டவை என்று கார்வால்ஹோ கூறுகிறார். 2021ஆம் ஆண்டு புனாய் குழு ஒரு பாதையில் விட்டுச் சென்ற கோடரிகள் மற்றும் கத்திகளை, அந்தப் பழங்குடியின மக்கள் எடுத்து சென்றனர். இந்த கேமரா ஒன்பது பழங்குடி மக்களைக் கொண்ட ஒரு குழுவை பதிவு செய்தது. அவர்கள் அனைவரும், சுமார் 20 முதல் 40 வயதுகளில் உள்ள ஆண்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். பட மூலாதாரம்,CGIIRC/FUNAI "வானிலை சாதகமாக இல்லாததால், அந்த கேமராவால் தெளிவான படங்களை எடுக்க முடியவில்லை என்றாலும், அந்த பழங்குடி மக்களின் உடலமைப்பு, நடத்தை மற்றும் பிற அம்சங்களைப் பதிவு செய்வதற்கான முக்கிய ஆவணமாக இந்தப் படம் இருந்தது." அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பழங்குடி மக்கள், கூர்மையான முனையுடன் கூடிய மரத் துண்டுகள் போன்ற சில "கூர்மையான பொருட்களை" விட்டுச் சென்றனர். ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஒரு வகை கால்ட்ராப் (கூர்மையான முனைகளைக் கொண்ட கருவி) என்று அடையாளம் கண்டுள்ளனர். அவை தரையில் ஊன்றப்பட்டிருக்கும். அவற்றின் கூரிய நுனிகள் வெளிப்புறமாக இருக்கும். மானுடவியலாளர்கள் கூறியபடி, அவர்கள் அந்த கூர்மையான மரத்துண்டுகளை பாதைகள், மரக்கட்டை, வேர்களின் பின்புறம் அல்லது பள்ளத்தாக்கு போன்ற முக்கியமான இடங்களில் வைத்துள்ளார்கள் . "இத்தகைய இடங்களில் நமது உடலின் எடை பாதத்தில் அழுத்தும். அவை சில சமயங்களில் இலைகள் அல்லது புல்லால் மறைக்கப்பட்டிருக்கும்," என்று நிபுணர் கூறுகிறார். பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,"காலணிகள் அணிந்திருந்தாலும் கூட, அந்த கூர்மையான பொருட்கள் காலில் துளையிடுவதால் காயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது தீவிரமான காயத்தைக் ஏற்படுத்தக்கூடும்." "காலணிகள் அணிந்திருந்தாலும் கூட, அந்த கூர்மையான பொருட்கள் காலில் துளையிடுவதால் காயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது தீவிரமான காயத்தை ஏற்படுத்தக் கூடும்." 1980கள் மற்றும் 1990களில், இந்தப் பாதுகாப்பு மண்டலத்துக்குள் மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் இருந்தது என்று நிபுணர் விளக்குகிறார். "ஃபுனாய், பிரேசிலிய சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்கள் நிறுவனம், கூட்டாட்சி காவல்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான லாரிகள் மற்றும் மரம் வெட்டும் டிராக்டர்கள் போன்ற பல வாகனங்களின் டயர்களை, பழங்குடி மக்களின் கருவிகள் துளைத்து பாதிப்பை ஏற்படுத்தின." 2024 ஆம் ஆண்டில், கேமராக்களை அமைத்த பிறகு, ஃபுனாய் குழு உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து விலகி, காப்பகத்துக்குள் நுழைந்தது. அந்தப் பகுதிக்குள் பூர்வீகக் குடியேற்றம் "திட்டமிடப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையாக இருந்தது" என்று அல்கேயர் நம்புகிறார். நீங்கள் குடிக்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?4 ஏப்ரல் 2025 பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் 'ரைட்டர்ஸ் கிராம்ப்' - தீர்வு தரும் நிபுணர்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 ஆய்வாளர்களுக்கு காத்திருந்த ஆச்சர்யம் என்ன? பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,மாசகோ பழங்குடிகள் உருவாக்கும் தற்காலிக வீடுகள் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிப்பில் ஈடுபடும் மக்களுக்கேற்ப வீடுகள் அமைந்துள்ளன என்று கார்வால்ஹோ சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "அந்த குழுவைச் சேர்ந்த பெரும்பாலான மக்களின் நடமாட்டம், பருவநிலை மாற்றங்களான வறட்சி மற்றும் மழை ஆகியவற்றுடனும், தாவரங்களின் வேறுபாடுகளுடனும், வயல்வெளிகள், சவன்னா புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடுகளுக்கும் இடையே தொடர்புடையவை," என்று அவர் கூறினார். "அந்த வகையில், அவர்கள் இயற்கை வளங்களை நிர்வகிக்கும் முறையை உருவாக்குகிறார்கள். நாடோடி வாழ்க்கை முறைக்குள் தங்கள் குடியிருப்பு எல்லையை வரையறுக்கிறார்கள்." பழங்குடி மக்களால் கைவிடப்பட்ட வீடுகளில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சில அம்புகளின் நீளம் 3 மீட்டருக்கும் அதிகமாக இருந்தது. அவர்களை ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று அதில் இருந்தது. "அம்பும் வில்லும் பெரிதாக இருப்பது புதிரான ஒன்று அல்ல. பொலிவியாவின் சிரியோனோ போன்ற மற்ற சமூகங்களும் இதேபோன்ற வில்-அம்புகளை பயன்படுத்துகிறார்கள்". ஆனால், "அவர்கள் எப்படி நீண்ட வில் மற்றும் அம்புகளை காடு மற்றும் சவன்னாக்களின் நடுவில் கையாள்கிறார்கள்? என்பது "ஒருபோதும் மறக்க முடியாத கேள்வி" என்று மானுடவியலாளர் விளக்குகிறார். பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,பாபாசு பனை அமேசானின் காடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றது. பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,பழங்குடி மக்களால் கைவிடப்பட்ட முகாம்களில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சில அம்புகளின் நீளம் 3 மீட்டருக்கும் அதிகமாக இருந்தது பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,"அம்பும் வில்லும் பெரிதாக இருப்பது ஒரு மர்மம் அல்ல. பொலிவியாவின் சிரியோனோ போன்ற மற்ற சமூகங்களும் இதேபோன்ற வில், அம்பை பயன்படுத்துகிறார்கள்" "அவர்கள் குரங்குகள், பன்றி போன்ற விலங்குகள், மான்கள் உள்ளிட்ட பல விலங்குகளைக் கொல்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவற்றைப் பிற வழிகளில் கொல்வது எளிதல்ல," என்று அவர் கூறினார். தி கார்டியனில் வெளியான கட்டுரையில், அம்பை எவ்வாறு எய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு 'தெரியாது' என்று அல்கேயர் குறிப்பிட்டார். "மற்ற பழங்குடி மக்களும் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்கள் சிரித்து, இது சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள். ஒருவேளை படுத்துக்கொண்டே அதனைப் பயன்படுத்தலாம் என கருதுகிறார்கள். ஆனால், இன்று வரை இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புதிருக்கு அவர்கள் விடை கண்டுபிடிக்கவில்லை " என்று அவர் தெரிவித்தார். பழங்குடிகளை தொடர்பு கொள்ளாமல் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் பட மூலாதாரம்,CGIIRC/FUNAI "தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரத்யேகமாக வரையறுக்கப்பட்ட முதல் பூர்வீக பிரதேசம் மாசகோ பூர்வீக பிரதேசமாகும்" என்று கார்வால்ஹோ குறிப்பிடுகிறார். "ஆனால் அதேநேரத்தில், மற்ற பழங்குடி மக்களும் அந்த பாதுகாப்பைப் பெற்றனர், பின்னர் அவர்களுக்காகப் பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டன." "ஆனால் அந்த மக்களுடன் பேச முடியாத சூழலில், அவர்களின் முழு வரலாற்று பின்னணியையும், அவர்கள் வாழ்விடத்தில் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வது தான், இந்த மக்களுக்கான பிரதேசத்தை வரையறுப்பதில் உள்ள சவால்" சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மற்றவர்களிடம் இருந்து, தடயங்களையும் தகவல்களையும் சேகரிக்க பல முறை காட்டுக்குள் ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன, இதன்மூலம் அந்தப் பிரதேசம் வரையறுக்கப்படுகிறது." பட மூலாதாரம்,CGIIRC/FUNAI "தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் சுயாட்சியை, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டிய அவசியமின்றி, அவர்களின் வாழ்க்கை முறைகளில் எந்தவித தலையீடும் இல்லாமல் உறுதி செய்வது அவசியம்" என்று புனாய் தெரிவிக்கிறது. நிபுணரின் கூற்றுப்படி, மாசகோ சமூகம் அமைந்துள்ள பிரதேசத்தில், "மரம் வெட்டுதல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் போன்ற எந்த மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்களும்" தற்போது இல்லை என அறியப்படுகின்றது. "அந்தப் பிரதேசத்தில் நிரந்தரமாக இருக்கும் ஃபுனாய் குழு, எல்லைப் பகுதியில் கூட அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் திறன் கொண்டது." இந்த அமைப்புக்கு, முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. இவை, பல்வேறு நோக்கங்களுக்கு இடையில், தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்களின் உடல்நலமும், சமூக வாழ்க்கையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், சுற்றுச்சூழலுக்கான கவலைகளும் உள்ளன, ஏனெனில் "இந்த பிரதேசத்தின் இயற்கை வளங்களை முழுமையாக பாதுகாப்பது தான், இந்த மக்களின் உயிர்வாழ்வுக்கு அவசியமானது" என்று ஃபுனாய் வெளியிட்ட அறிக்கையில் அல்கேயர் குறிப்பிடுகிறார். இதுபோன்ற பழங்குடி சமூக மக்கள் வேட்டையாடவும், அவர்கள் உணவு சேகரிப்பதையும் எளிதாக்குவது தான், கத்திகள் மற்றும் கோடரிகள் போன்ற உலோக கருவிகளை விட்டுச்செல்வதன் நோக்கமாக உள்ளது. இதன் மூலம், அவர்கள் அதேபோன்ற பொருட்களைக் கண்டுபிடிக்க தங்கள் நிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த முறையால் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டதா என்று நான் கார்வால்ஹோவிடம் கேட்டேன். "இந்த கருவிகளை மக்கள் எளிதாகப் பெற இது ஒரு வகையில் உதவியது. இது எல்லோருக்கும் பயனளிக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்த சமூக மக்கள் தங்களது நில எல்லைக்குச் செல்வதையோ அல்லது கடப்பதையோ இது தடுக்கவில்லை என்பதை நாங்கள் உறுதியாக சொல்கிறோம். அதற்குப் பிற காரணங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு." ஈரோடு மலையாளிகள் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படாதது ஏன்? பல்லாண்டுக் கால போராட்டத்திற்கு தீர்வு என்ன? 'மரத்திற்கு பின்னே யானை நின்றாலும் தெரியாது' - இந்த பெண்களின் ஆபத்தான காட்டுவழிப் பயணம் யாருக்காக? மூங்கில் பழங்குடிகளின் வாழ்வியலில் ஒரு அங்கமாக இருப்பது எப்படி? எளிதில் மூப்படையாத சீமேநே பழங்குடிகள் பற்றி தெரியுமா? அவர்களின் வாழ்க்கை முறை என்ன? பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,மரங்களில் உள்ள விலங்குகளின் கூடுகள் ரீட் மற்றும் பியாசெட்டோ விளக்குகையில், "ஒரு காலத்தில் மக்கள் தொடர்புகொள்வதற்காக இவை பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது அவை தொடர்பை தவிர்க்க பயன்படுத்தப்படுகின்றன," என்று கூறுகின்றனர். "மற்ற பழங்குடி பிரதேசங்களில் பயன்படுத்தப்படும் இந்த நடைமுறை, பண்ணைகளுக்கோ அல்லது மரம் வெட்டும் முகாம்களுக்கோ மக்கள் கருவிகளை எடுக்கச் செல்வதைத் தடுக்கிறது," என்று அவர்கள் குறிப்பிட்டனர். பழங்குடி மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையைப் பாதிக்காமல் எடுக்கப்பட்ட சமீபத்திய படங்கள் மற்றும் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட தகவல்கள், இந்த பழங்குடி சமூகம் எவ்வாறு வாழ்கிறது மற்றும் வளர்கிறது என்பதை நிபுணர்கள் தொடர்ந்து அறிய உதவுகின்றன. இந்த சமூகம் வெளியுலகத் தொடர்பு இல்லாமல், தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? "இந்த மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான இந்த பிரதேசத்தின் வளங்களை பாதுகாக்க முடியும் என பிரேசில் அரசாங்கம் உறுதியளிக்கும் வரை, நான் சற்று நம்பிக்கையுடன் உணர்கிறேன்," என்று மானுடவியலாளர் பதிலளிக்கிறார். "ஆனால் ஒவ்வொரு தலைமுறையிலும் நடைமுறைகள் மாறுகின்றன, ஒரு கட்டத்தில் இந்த மக்கள் தொடர்பு கொள்ள விரும்பலாம். அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz6d12pdzx3o
3 months 2 weeks ago
வடக்கில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு - வணிகர் கழகம் 13 APR, 2025 | 10:09 AM மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார். ஜெயசேகரன் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்திலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகம், மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகிய 3 இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் அமையவுள்ளது. விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும். இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், உள்ளக வீதி வசதிகள், மின்சார வசதிகள் என்பன கிடைக்க வசதி செய்யப்படும். இதற்கு மேலதிகமாக முதலீட்டு ஊக்குவிப்பாக முதலீட்டுக் கழிவுரிமை 200 வீதம் வழங்கப்படும். இது ஏனைய பகுதிகளில் 100 வீதமாக உள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் 30 வருட குத்தகைக்கு வழங்கப்படும். இது பொதுவான நடைமுறை. தேவையை பொறுத்து இதனை நீடித்துக் கொள்ளலாம். தொழிற்சாலைகளுக்கு தேவையான அனுமதிகளை முதலீட்டு சபை ஒழுங்கமைத்து வழங்கும். தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள், தளபாடங்கள், கட்டட நிர்மாணத்திற்கு தேவையான பொருட்கள் போன்றவற்றிற்கு இறக்குமதி தீர்வை விலக்களிக்கப்படும். ஏற்றுமதி நோக்கிலான தொழில் முயற்சிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை தீர்வை இன்றி இறக்குமதி செய்யலாம். எனவே மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை இந்த 3 வலயங்களிலும் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறோம். இதன் மூலம் வடமாகாணம் பொருளாதார ரீதியாக முன்னேறவும், தேசிய ரீதியாக எமது உற்பத்தியின் பங்களிப்பை அதிகரித்து கொள்ள முடிவதுடன் வடமாகாணத்தில் அதிகளவானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும். மேற்படி பிரதேசங்களில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் தமது விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டு சபைக்கு சமர்ப்பிக்க முடியும். ஆகவே இந்த வருட இறுதியில் இவ் மூன்று வலயங்களும் உருவாக இருப்பதனால் விரைவாக விண்ணப்பிக்குமாறு யாழ் வணிகர் கழகம் முதலீட்டாளர்களை கோருகின்றது. இது தொடர்பாக மேலதிக விபரங்களை 021 222 1336, +9477 777 6606, மின்னஞ்சல் - jeyamanonr@boi.lk, முகவரி - சிரேஸ்ட பிரதிப்பணிப்பாளர், இலங்கை முதலீட்டு சபை, வடமாகாண காரியாலயம், NHDA கட்டடிம், கண்டி வீதி, யாழ்ப்பாணம் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியும். இது பொருளாதார ரீதியாக கிடைக்கும் நல்ல சந்தர்ப்பம். இதனை முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பில் மேலதிக விபரங்களை பெறுவதற்கு யாழ் வணிகர் கழகத்தை தொடர்புகொள்ளலாம்” என்றார். https://www.virakesari.lk/article/211939
3 months 2 weeks ago
13 APR, 2025 | 12:14 PM அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார். இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனாவும் பரஸ்பரம் வரி விதிப்பு மேற்கொண்டது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள் மற்றும் வேறு சில மின்னணு சாதனங்களுக்கு சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 125 சதவீத வரிகள் உள்ளிட்ட பரஸ்பர வரிகளிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில், ட்ரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இலத்திரனியல் பொருட்களுக்கு வரி விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான இலத்திரனியல் கருவிகள், தரவு சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211953
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,TWITTER/BLUE ORIGIN படக்குறிப்பு,நியூஷெப்பர்ட்-31 குழு கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 13 ஏப்ரல் 2025, 01:53 GMT பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய ஒரு குழு ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த குழு விண்வெளிக்குச் செல்லப் போகிறது. ஆறு பெண்கள் உள்ள இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்தப் பயணத்தை ப்ளூ ஆரிஜின் நிறுவனம் ஏப்ரல் 14ஆம் தேதி திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுவில், பாப் பாடகியான கேட்டி பெர்ரி, செய்தியாளர் கேல் கிங், சிவில் உரிமைகள் வழக்கறிஞர் அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஆறாவது பெண்ணாக, இந்தக் குழுவை வழிநடத்தப் போகிறவரும் ஜெஃப் பெசோஸின் காதலியுமான லாரன் சான்செஸ் பயணிக்கவுள்ளார். இவர்கள் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை எல்லைக்கோடான கார்மன் கோட்டைக் கடந்து செல்வார்கள். விண்வெளிக்கு ஒரு சிறு பயணம் பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு,ஏப்ரல் 14ஆம் தேதி ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லப்போகும் பெண்கள் நியூ ஷெப்பர்ட்-31 என இந்தப் பயணத் திட்டத்தில், ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் இந்த ஆறு பெண்களும் பயணிக்கப் போகிறார்கள். அதனுள் இருக்கும் விண்கலம் முற்றிலுமாக தானியங்கி முறையில் செயல்படக்கூடியது. அதாவது, விண்கலத்தை இயக்குவதற்கென அதனுள்ளே யாரும் இருக்க மாட்டார்கள். இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை அழைத்துச் செல்லும். இந்த பயணம் தோராயமாக 11 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த அவர்கள், விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சியைக் கண்டு களித்த பிறகு பூமியை நோக்கிய பயணத்தை தொடங்குவார்கள். பாப் பாடகி கேட்டி பெர்ரியின் இசை சுற்றுப்பயணம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஏப்ரல் 14ஆம் தேதியன்றே இதைச் செய்து முடிக்க ப்ளூ ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவர்களை ஏற்றிச் செல்லப்போகும் நியூ ஷெப்பர்ட் ராக்கெட், ஏப்ரல் 14ஆம் தேதியன்று அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் உள்ள அந்த நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். விண்வெளியில் இருந்து இமயமலையை பார்த்த அனுபவம் பகிரும் சுனிதா வில்லியம்ஸ் மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது? விண்வெளியில் சாப்பிடுவது, குளிப்பது, கழிவுகளை அகற்றுவது எப்படி? விண்வெளியில் இருக்கும்போது பெண்கள் மாதவிடாயை எப்படி சமாளிக்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கார்மன் கோட்டை அடைந்ததும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற கேப்சூல் (சித்தரிப்புப் படம்) லாரன் சான்செஸ் கடந்த 2023ஆம் ஆண்டு வோக் பத்திரிகை நேர்காணலில், முழுமையாகப் பெண்கள் மட்டுமே விண்வெளிக்குப் பயணிக்கும் இத்தகைய கனவுப் பயணம் குறித்து விவரித்திருந்தார். "இது வெறுமனே ஒரு விண்வெளிப் பயணம் மட்டுமல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுவது, எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பயணம்," என்று ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கார்மன் எல்லைக்கோடு என்றால் என்ன? கார்மன் கோடு என்பது ஒரு கற்பனையான எல்லைக்கோடு. இது பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, பூமியில் இருந்து பயணித்தால் விண்வெளியை அடைந்துவிட்டதாகக் கருதப்படும் இடம் எனப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, புவி வளிமண்டலத்தின் முடிவாகவும், விண்வெளியின் தொடக்கமாகவும் இந்தப் புள்ளி கருதப்படுகிறது. கார்மன் கோடு, விமானவியல் மற்றும் வானியலுக்கு இடையே ஒரு வேறுபாட்டைக் குறிப்பதற்காக, ஃபெடரேஷன் ஏரோநாடிக் இன்டர்நேஷனல் என்ற அமைப்பால் தீர்மானிக்கப்பட்டது. இந்த உயரத்தை அடைவது, விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் கருதப்படுகிறது. "சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி, இதுதான் விண்வெளி என்று ஒரு வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த கார்மன் எல்லைக்கோடு," என்கிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு,ஆறு பெண்களும் விண்வெளியில் வரையறுக்கப்பட்டுள்ள கார்மன் எல்லைக் கோட்டுக்கு சற்று மேலே சென்றுவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள். அவரது கூற்றுப்படி, கார்மன் எல்லைக்கோடு எனத் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் 100 கி.மீ என்ற உயரத்துக்குக் கீழேதான் 99.9% வரையிலான வளிமண்டலம் உள்ளது. ஆகையால்தான் அதற்கு மேலே இருக்கும் பகுதி விண்வெளி என்று முடிவு செய்யப்பட்டது. இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் பயணிப்பவர்கள் "விண்வெளிக்குச் சென்றவர்கள்" என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அதனால்தான் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்வெளிப் பயணங்களும் இந்தக் கோட்டுக்கு மேலே சென்று, அதன் பயணிகளுக்கு உண்மையான விண்வெளி அனுபவத்தை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 'விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே நோக்கம்' விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். "இத்தகைய விண்வெளிச் சுற்றுலா பயணங்களை இந்த நிறுவனம் பலமுறை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பயணம் குறித்துக் கேள்விப்பட்டதும், சுனிதா வில்லியம்ஸ் சென்றதைப் போன்றதொரு பயணமோ எனக் கருதிவிடக்கூடாது," என்கிறார் அவர். சுனிதா வில்லியம்ஸ் சுமார் 400 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய விண்வெளிப் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனால், இது அப்படியான பயணமல்ல என்கிறார் வெங்கடேஸ்வரன். ஆண் ஈக்கள் இணையை கவர இதையும் செய்யுமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்6 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விண்வெளி சுற்றுலா துறையை பிரபலப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் மட்டுமே செல்லும் இந்த விண்வெளிப் பயணம் குறித்து விளக்கிய அவர், "விண்வெளி தொடங்கும் இடமான கார்மன் எல்லைக் கோட்டுக்குச் சற்று மேலே சென்றுவிட்டு, ஒரு சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி விடுவார்கள்," என்றார். அதுகுறித்து விரிவாக விளக்கிய வெங்கடேஸ்வரன், "இந்தப் பயணத்தின் மொத்த நேரமே சுமார் 11 நிமிடங்கள்தான் இருக்கும். ஏழு நிமிடங்களுக்கு ராக்கெட்டில் பயணிப்பார்கள். சுமார் 48 கி.மீ வரை அதில் பயணித்த பிறகு, அங்கிருந்து ஒரு கல் மேல்நோக்கி வீசப்படுவதைப் போல, ராக்கெட்டில் இருந்து பயணிகள் இருக்கும் விண்கலம் விண்வெளி நோக்கி வீசப்படும். ராக்கெட்டில் இருந்து வீசப்படும் விண்கலம், கார்மன் கோட்டுக்குச் சற்று மேலே வரை சென்றுவிட்டு பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்," என்று விவரித்தார். விண்வெளி சுற்றுலாத் துறைக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதும் இதன்மூலம் ஒரு புதிய தொழிலை உருவாக்கலாம் என்பதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் அவர். அதே நேரத்தில், இத்தகைய முயற்சி "பெண்கள் முன்னேற்றம் மீதான கவனத்தையும் எதிர்கால சந்ததிகளுக்கு ஓர் உத்வேகத்தையும்" ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். மனிதனை போல பேசி பிரமிக்க வைக்கும் காகம் - வியப்பூட்டும் காணொளி4 ஏப்ரல் 2025 பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 விண்வெளிக்குச் செல்லப்போகும் பெண்களின் பின்னணி என்ன? இந்தப் பயணத்தில் விண்வெளி எல்லைக் கோடான கார்மன் கோட்டுக்குச் செல்லப் போகும் ஆறு பெண்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? லாரன் சான்செஸ் பட மூலாதாரம்,LAUREN SÁNCHEZ/IG படக்குறிப்பு,லாரன் சான்செஸ் எம்மி விருது பெற்ற பத்திரிகையாளரான இவர், நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான படைப்புகளைக் கொண்ட எழுத்தாளர், விமானி, பெசோஸ் எர்த் ஃபண்ட் அமைப்பின் துணைத் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான, உரிமம் பெற்ற ஹெலிகாப்டர் விமானியான சான்செஸ் கடந்த 2016ஆம் ஆண்டில் ப்ளாக் ஆப்ஸ் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை நிறுவினார். இது, முழுவதும் பெண்களால் நிறுவப்பட்டு, நிர்வகிக்கப்படும் முதல் வான் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். ஹெலிகாப்டர் விமானியாகவும் விமானப் பணி சார்ந்த தொழிலதிபராகவும் அவர் செய்த பணிக்காக, 2024இல் எல்லிங் ஹால்வர்சன் வெர்டிகல் ஃப்ளைட் ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருதைப் பெற்றார். ஆயிஷா போவே பட மூலாதாரம்,AISHA BOWE/IG படக்குறிப்பு,ஆயிஷா போவே ஆயிஷா போவே பஹாமாவை பூர்வீகமாகக் கொண்டவர். நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி மற்றும் தொழில்முனைவோரான ஆயிஷா, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவற்றை ஊக்குவிப்பவராகவும் இருக்கிறார். அமெரிக்காவின் வேகமாக வளர்ந்து வரும் தனியார் நிறுவனங்களின் பட்டியலான இங்க் 5000-இல் இரண்டு முறை இடம்பிடித்த பொறியியல் நிறுவனமான ஸ்டெம்போர்டின் (STEMBoard) தலைமை செயல் அதிகாரியாகவும் ஆயிஷா இருக்கிறார். மேலும், பத்து லட்சம் மாணவர்களுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப திறன்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்ட லிங்கோ (LINGO) என்ற நிறுவனத்தையும் இவர் நிறுவியுள்ளார். விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?2 ஏப்ரல் 2025 சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 'ஜிப்லி' என்றால் என்ன? அது முதலில் எப்படி உருவானது?31 மார்ச் 2025 அமாண்டா இங்குயென் பட மூலாதாரம்,AMANDA NGUYỄN/IG படக்குறிப்பு,அமாண்டா இங்குயென் அமாண்டா, ஓர் உயிரி விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி. அவர் ஹார்வர்டில் பட்டம் பெற்றார். மேலும், ஹார்வர்ட் வான் இயற்பியல் மையம், எம்ஐடி, நாசா, சர்வதேச வானியல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். கடந்த 1981 முதல் 2011 வரை நாசா முன்னெடுத்த மறுபயன்பாட்டு விண்கலத் திட்டத்தின் கடைசி விண்வெளிப் பயணத் திட்டத்தில் அமாண்டா பணியாற்றியுள்ளார். அவர் கெப்லர் புறக்கோள் திட்டத்திலும் பணியாற்றியுள்ளார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர்களுக்காகக் குரல் கொடுத்து வருவதால் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டில் டைம் இதழின், ஆண்டின் சிறந்த பெண் என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார். கேல் கிங் பட மூலாதாரம்,GAYLE KING/IG படக்குறிப்பு,கேல் கிங் கேல் கிங் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளர். சிபிஎஸ் மார்னிங்ஸின் இணை தொகுப்பாளராகவும் ஓப்ரா டெய்லியின் ஆசிரியராகவும் இருக்கும் இவர் சிரியஸ்எக்ஸ்எம் வானொலியில் கேல் கிங் இன் தி ஹவுஸ் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார். தனது பல்லாண்டுக்கால பத்திரிகை அனுபவத்தில் நேர்காணலில் அர்த்தமுள்ள உரையாடல்களை உருவாக்குவதில் திறமை படைத்தவராக கேல் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்?20 மார்ச் 2025 வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயார் செய்வது எப்படி?31 மார்ச் 2025 கேட்டி பெர்ரி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேட்டி பெர்ரி கேபிடல் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் அதிகம் விற்பனையாகும் பெண் கலைஞராக கேட்டி பெர்ரி அறியப்படுகிறார். பாப் பாடகியான இவர், 115 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட, அனைத்து காலகட்டத்திலும் அதிகமாக விற்பனையாகும் இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். உலகளாவிய பாப் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் கேட்டி, பல மனிதநேய நோக்கங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அதில், யுனிசெஃப் நல்லெண்ண தூதராக, ஒவ்வொரு குழந்தையின் சுகாதாரம், கல்வி, சமத்துவம், பாதுகாப்புக்கான உரிமையை உறுதி செய்வதற்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். கேரியன் ஃப்ளின் பட மூலாதாரம்,KERIANNE FLYNN/IG படக்குறிப்பு,கேரியன் ஃப்ளின் ஃபேஷன் மற்றும் மனித வளத்துறையில் சிறந்து விளங்கிய பிறகு, கேரியன் ஃப்ளின், கடந்த பத்து ஆண்டுகளாக தி ஆலன்-ஸ்டீவன்சன் பள்ளி, தி ஹை லைன், ஹட்சன் ரிவர் பார்க் ஆகியவற்றுடன் இணைந்து லாப நோக்கமற்ற தன்னார்வப் பணிகளைச் செய்து வருகிறார். கதை சொல்லலுக்கு இருக்கும் ஆற்றலின் மீது அதீத ஆர்வமுள்ள கேரியன், ஹாலிவுட்டில் பெண்களின் வரலாற்றை ஆராயும் திஸ் சேஞ்சஸ் எவ்ரிதிங்(2018), லில்லி லெட்பெட்டர் என்ற வழக்கறிஞர் குறித்தான லில்லி(2024) போன்ற சிந்தனையைத் தூண்டும் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25n4nw1zqo
3 months 2 weeks ago
தமிழில் தண்டப் பத்திரம் கேட்ட சாரதியை இழுத்துச் சென்று வழக்குப் பதிவு செய்த வவுனியா பொலிஸ்! வவுனியா, குருமண்காட்டு சந்தியில் நேற்று தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை, வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது. வாகன சாரதி ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமண்காடு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதன்போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கிய சமயத்தில் தமக்கு என்ன குற்றம் என தெளிவில்லை. எனவே, தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி - போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்செல்ல முற்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் பதற்ற நிலமை ஏற்பட்டது. எந்த தவறும் செய்யாது என்னை எவ்வாறு கைது செய்ய முடியும். மேலும் அவ்வாறு தவறு செய்தால் தண்டப்பத்திரம் தானே வழங்க வேண்டும் என வாகன சாரதி கூறி, முச்சக்கர வண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியின் தலையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றனர். வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். https://seithy.com/breifNews.php?newsID=331973&category=TamilNews&language=tamil
3 months 2 weeks ago
தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது! வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் சம்பந்தமாகவும் தமிழ்த் தலைமைகளின் சந்திப்புத் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகைக்கும் 2025இல் நரேந்திர மோடியின் வருகைக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1987இல் இந்தியப்படைகள் நிலை கொண்டிருக்கையில், மிராஜ் விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கையில் தான் ராஜீவ் காந்தியின் வருகை நிகழ்ந்தபோது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் அச்சமடைந்த நிலையில் இருந்தார். ஆனால், இந்திய எதிர்ப்புவாதக் கொள்கையில் செயற்பட்ட ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற தருணத்தில் பிரதமர் மோடியின் வருகை நிகழ்ந்திருக்கின்ற நிலையில் அது அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றிருக்கின்றது. அதேபோன்று ராஜீவ் காந்தியின் வருகையானது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்தியதாக இருந்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் பூர்வகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் விஜயமானது, ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் எதிர்கால பொருளாதார மூலோபயத் திட்டங்களை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதனடிப்படையில் தான் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் பார்க்கின்றபோது, இந்தியா தற்போது பொறுமையிழந்துவிட்டது என்றே கொள்ளவேண்டியுள்ளது. ஏனென்றால், பிரதமர் மோடி தனது இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசியப் பிரச்சினை தொடர்பிலோ, அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ உத்தியோக பூர்வமாக எந்த விடயங்களையும் குறிப்பிடவில்லை. அவர் ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகக் கூட நேரடியாகக் கூறாது, இலங்கையின் அரசியலமைப்பு முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்கின்றார். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களே. ஏனென்றால் இவர்கள் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டு மாகாண சபை முறையில் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட விடுதலை இயக்கங்கள் மட்டுமே பங்கேற்றன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளும் பங்கேற்கவில்லை. அதன்பின்னர் புலிகளின் தனிநாட்டுக் கொள்கையை தலைவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு பயணித்தார்கள். பிரபாகரனின் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் அங்கீகரித்தார்கள். போரின் முடிவின் பின்னர் அவர்கள் தங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக மீளாய்வு செய்வில்லை. மாறாக, டில்லி வழங்கிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளாது அவர்களுக்கு கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தாது வரலாற்றுத் தவறிழைத்தார்கள். டில்லியை விடவும் புலம்பெயர் தமிழர்களையும் மேற்குலகத்தையும் அபரிதமாக நம்பிக்கொண்டு 13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட விடயங்களை முறையாக கையாளாது அவற்றை ஒற்றையாட்சிக்குள் பெறமுடியாதென நிராகரித்துவிட்டு, பொறுப்புக்கூறல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், வெளிநாட்டு விசாரணையாளர்கள் என்று நடைமுறைச்சாத்தியமற்ற விடயங்களின் மீது காலத்தினைக் கடத்தினார்கள். இதன் விளைவாக, தமிழ் மக்களுக்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த இந்தியாவுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கமான இடைவெளி அதிகரித்து விட்டது. அந் நிலைமையானது, நான்கு தசாப்த இந்தியாவின் காத்திருப்புக்குப் பின்னர் ‘பொருளாதாரத்தினை மட்டும் மையப்படுத்தியதாக’ தனது மூலோபாயத்தினை மாற்றியமைத்துள்ளது. அதனை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் நன்கு புரிந்துகொண்டுள்ளது. இந்த நிலைமையானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானதொரு சூழலாகும். ஏனென்றால், அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டை கையிலெடுத்தால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது. அவ்விதமானதொரு சூழல் ஏற்பட்டால் பிரதமர் மோடியின் அடுத்த இலங்கைக்கான பயணத்தின்போது அவர் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கூடக் கோரிக்கை விடுக்கான நிலைமைகளே ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே, தற்போதைய சூழலை தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொண்டு தமது பழைய சித்தாதந்தங்களை கைவிட்டு நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கான டில்லியுடன் மீள் ஊடாட்டத்துக்குச் செல்ல வேண்டியது அவசியமாகின்றது என்றார். https://seithy.com/breifNews.php?newsID=331977&category=TamilNews&language=tamil
3 months 2 weeks ago
சரி தான் அனைத்து மாநிலங்களினதும். வளர்ச்சி வீதம் 10. உள்ளே தான் எங்களாது அந்த சொற்பம் கூட இவர்கள் முதலிடம் பிடிக்க. காரணமாகும் சீலை நகை. சினிமா விட காய்கறிகள் கருவேற்பிலை தூள் வகைகள். சுற்றுலா,.....போன்றன பங்களிப்பை வழங்கும் இல்லையா??
3 months 2 weeks ago
பயப்படாதீங்கள். பகிடிக்கு எழுதினேன் .....
3 months 2 weeks ago
தேசிய கொள்கைகள் அல்ல. மாநிலக் கொள்கைகள். IAS என்ற படியால் தான் கொள்கை தொடர்ச்சி. அப்போது எப்படி சில மாநிலங்கள் பிந்திய வளர்ச்சி - மாநிக்க கொளகைகள் மாற பிந்தியது. ஏற்கனவே சொல்லவிட்டே சிறு மாற்றங்களை செய்யலாம். போக்கில் மாற்றங்களை செய்ய முடியாது. அனால் தேசிய பொருளாதார கொள்ககைகளை வகுப்பதும் ias தான். கொள்கை வகுப்பு முறை மத்தியில் இருக்கும் அமைப்பு முறையே மாநிலத்திலும் இருக்கிறது. பெயர்கள் வேறுபடலாம். (உண்மையில் கிந்தியா யாப்பின் படி மாறி, IAS வேண்டுமாயின் மாநில அரசியல்வாதி கொள்கைகளை தடுக்கலாம். இது அம்பேத்கா ர் சாதி கொடுமையை பார்த்து செய்தது. மொழியில் அதிகாரத்தை பரவல் ஆக்குவதாகவும், வேண்டுமாயின் மத்தி மாநிலத்தை தடுக்கலாம் என்றும்.)
Checked
Sat, 08/02/2025 - 17:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed