புதிய பதிவுகள்2

மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு

3 months 2 weeks ago
முதல் இதை செய்யுங்கள் அல்லது இயற்கை அவரை கூட்டிக்கொண்டு போய் விடும் விரைவில் செய்யுங்கள் நீங்கள் புலிகளா ??? இல்லை என்றால் நத்தி கடலுக்கு ஏன். போனீங்கள். ?? பொய் சொல்லக்கூடாது அமைச்சரே !!!

மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு

3 months 2 weeks ago
ஏதாவது நடக்கிற விசயங்களை கதையுங்கோ... வாய் கூசாமல் பொய் சொல்றான் சிங்களவன், குறிப்பாக தமிழர் விடையத்தில்.

நானும் ஊர்க் காணியும்

3 months 2 weeks ago
எனக்கு மரம் வெட்ட பாத்திகள் கட்ட வந்தவர்கள் மூவர் நல்ல வேலைக்காரர்கள் தான். ஆனால் அவர்களும் நாம் பக்கத்தில் நின்று சொன்னால்த்தான் நன்றாகச் செய்கின்றனர். அந்தப்பக்கம் போனால் ஏனோதானோ என்றுதான். பொது அறிவைப் பயன்படுத்தி செய்யும் வேலைகளைக் கூடத் தவராகச் செய்தால் என்ன செய்வது. நாம் போய் இருந்தால் மட்டுமே சரியானவர்களைத் தெரிவுசெய்ய முடியும். எல்லோரும் தம் வேலைகளை எல்லா இடமும் தக்கவைத்துக்கொள்ள அங்கொருகால் இங்கொருகால் என மனச்சாட்சியின்றி ஒழுங்காக ஒரு வேலையை முடிக்காமல் அழைக்கழிக்கின்றனர்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் ஆண் : பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா ஆண் : மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே ஆண் : அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது வா…பண்பாடு மாறாத தென்பாங்குப் பூவே காலமெல்லாம் தேனிலவு தான்.. ஆண் : சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே ஆண் : சிறிய இடை கொடியளக்க அழகு நடை மணி ஒலிக்க வா…… செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு தான்........! --- பொன்னாரம் பூவாரம் ---

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சாய் சுதர்சனும், சுப்மன் கில்லும் வேகமாக அடித்தாடி அரைச் சதங்களைப் பெற்று சிறந்த அடித்தளத்தைக் கொடுத்திருந்தாலும் பின்னர் வந்த வீரர்கள் விக்கெட்டுகளை விரைவாகப் பறிகொடுத்தமையால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்களான எய்டன் மார்க்கம், நிக்கொலஸ் பூரன் மிகவேகமான அடித்தாடி வெற்றி இலக்கை நோக்கி விரைவாக முன்னேற உதவியதால் 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் மின்னல் வேக துடுப்பாட்டங்களுடனும் மார்கோ ஜென்ஸெனின் நான்கு சிக்ஸர்களின் உதவியுடனும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதியுச்ச வெற்றி இலக்கை அடையும் நோக்கோடு ஆரம்பத்தில் இருந்தே சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் மழைபோலப் பொழிந்தனர். அபிஷேக் சர்மா ஐபில் 2025 தொடரின் அதிகூடிய 141 ஓட்டங்கள் எடுத்ததும் ட்ராவிஸ் ஹெட்டினது 66 ஓட்டங்களும், முதல்விக்கெட் இணைப்பாட்ட சாதனையான 171 ஓட்டங்களும் வெற்றி இலக்கை அடைய உதவின. இறுதியில் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த @ரசோதரன் க்கு புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
Checked
Sat, 08/02/2025 - 17:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed