புதிய பதிவுகள்2

எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

1 week 5 days ago
எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு! இலங்கைக்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2025 ஜூன் மாதத்துக்கான இலங்கையின் வெளிநாட்டுத்துறை செயலாற்றம் தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது, $255.7 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு கீழே காட்டப்பட்டுள்ளது. ஜனவரி – 29.1 மில்லியன் டொலர்கள் பெப்ரவரி – 22.3 மில்லியன் டொலர்கள் மார்ச் – 54.0 மில்லியன் டொலர்கள் ஏப்ரல்- 145.6 மில்லியன் டொலர்கள் மே – 125.2 மில்லியன் டொலர்கள் ஜூன் – 169.6 மில்லியன் டொலர்கள் ஜூலை- 206.0 மில்லியன் டொலர்கள் ஆகஸ்ட்- 255.7 மில்லியன் டொலர்கள். https://athavannews.com/2025/1449203

யாழில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

1 week 5 days ago
யாழில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு! செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது. இறுதி நாளான இன்று சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம், படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியிருந்தனர். இப்போராட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அந்த அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கபபடவுள்ள அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினைக் காப்பாற்றும் வகையில் ஐ.நா வினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்கப்படப்போவதில்லை எனும் அடிப்படையில் குறித்த அறிக்கை போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449225

அமெரிக்காவுடன் இணையுமாறு கனடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்!

1 week 5 days ago
அமெரிக்காவுடன் இணையுமாறு கனடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்! கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என ட்ரம்ப் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து கருத்து பதிவிட்ட ட்ரம்ப், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும்” என்று பதிவிட்டார். ட்ரம்பின் இக் கருத்துக்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், நீங்கள் ஏன் அமெரிக்காவுடன் இணையக்கூடாது என்று கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், “அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome எனும் வான் பாதுகாப்பு திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்கும்” எனத் தெரிவித்தார். குறித்த கருத்தானது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449238

காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!

1 week 5 days ago
20 நிபந்தனைகளை கொண்டு வருவதற்காக தான் அவசரம் அவசரமாக 65ஆயிரம் அப்பாவிகளை பலியெடுத்தார்களா?

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

1 week 5 days ago
ஐரோப்பிய நாடுகளுக்கும் சுற்றுலா விசாவில் வந்துதான் ஜோதிட தொழில் பார்க்கின்றனர். முக்கியமாக சுவீஸ்,ஜேர்மனி போன்ற நாடுகளில் இந்த இந்திய ஜோதிடர்களை காணலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகமாக் சொல்வார்கள்.😂

குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது

1 week 5 days ago
ஆம், காலம், தொழில்நுட்பம், பொருளாதார போன்றவற்றின் வளர்ச்சியால் மாறிவிட்டது. இப்படி பல பாலியல் காப்புடன் இருக்கும் உறவுகள் இலைமறை காயாக, ஆனால் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் என்றே நினைக்கிறன். ஆயினும், இந்டத வயதில் பாலியலில் ஈடுபடுவது எதிர்காலத்தை குழப்ப கூடும். வளர்ந்த மேட்ற்கு நாடுகளில் கூட, பதின்ம வயது மகப்பேறு ஒரு சமூக, பொதுநல ஆரோக்கிய பிரச்சனை.

“ஜென் Z” போராட்டங்கள்; அரசாங்கத்தை கலைத்தார் மடகஸ்கார் ஜனாதிபதி

1 week 5 days ago
பங்களாதேஷ், நேபாளம், இப்போது மடகாஸ்கர். எல்லாற்றிலும் ஒற்றுமை தலைமுறை Z இன் ஆர்ப்பாட்டம், புரட்சி. மறுவளமாக, இதை எல்லாவற்றிலும் அமெரிக்கா / மேற்கு படை தளம் அமைக்க முயற்சிக்கிறது. மற்றது, இதை எல்லாம் சீனாவுடன் சிறந்த உறவை கொண்ட அரசாங்கங்கள். நேபாளத்தில் இருந்தே cia அப்போது (1960 களில்) தளம் கொண்டு இருந்தது, திபெத்துக்கு உதவி அளிக்க, திபெத்தில் இருந்து சீனாவை எதிர்ப்பவர்களை வரவழைத்து, அமெரிக்காவில் (Colorado இல்) கொரில்லா இராணுவ பயிற்சி கொடுத்து, மீண்டும் திபெத்துக்கு பயிற்சி கொடுத்தவர்களை திருப்பி திபெத்துக்கு அனுப்புவதற்கு. இதை இந்தியாவும் அப்போது ஆமோதித்து அனுமதித்து இருந்தது.

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

1 week 5 days ago
தோழர்கள் நடைமுறைக்கு ஒவ்வாத இடதுசாரிக்கொள்கைகளை கைவிட்டு கனகலாம் ஆகிவிட்டது ( 2015 இருந்து ), அப்படி செய்தபடியால் தான் அவர்களை மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளார்கள். அண்மையில் வெளிவந்த சொத்துக்கள் வெளியிடும் பிரகடனத்தில் பல தோழர்கள் பெரும் பணக்காரர்கள் ஆவார்கள் 😋. https://ads.ciaboc.lk/

சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம்

1 week 5 days ago
சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம் HemavandhanaUpdated: Wednesday, October 1, 2025, 12:03 [IST] திருவண்ணாமலை: போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்று காவல் துறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. அந்தவகையில், திருவண்ணாமலை சம்பவம் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.. அதுவும், வேலியே பயிரை மேய்வதும், வடமாநிலங்களை போலவே நம்முடைய தமிழ்நாட்டிலும் இத்தகைய பயங்கரங்கள் நடப்பதும், மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. நேற்று விடிகாலை திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 3 மணியளவில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மினி வேன் ஒன்று, வாழைத்தார்களை ஏற்றி வந்துள்ளது.. திருவண்ணாமலை கான்ஸ்டபிள்கள் இந்த மினிவேனை ஏந்தல் கிராம சந்திப்பு பகுதியில் நிறுத்திய கான்ஸ்டபிள்கள் இருவரும், அதில் சோதனை மேற்கொண்டனர். அதில் 20 மற்றும் 45 வயதில் 2 பெண்கள் இருந்ததை கண்டு அவர்கள் யார் என்று விசாரித்திருக்கிறார்கள்.. அப்போது இருவரும் ஆந்திரா சித்தூரை சேர்ந்த மகளும், சித்தியும் (தந்தையின் இரண்டாவது மனைவி) என்பதும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு, தன்னுடைய உறவினர் மினிவேனில் வந்துள்ளதும் தெரியவந்தது. ஆனாலும், 2 பெண்களையும் விசாரணை என்ற பெயரில் நைசாக பேசி, ஒதுக்குப்புறமிருந்த தோப்பு பகுதிக்கு கான்ஸ்டபிள்கள் இருவரும் அழைத்து சென்றுள்ளனர்.. அங்கே சித்தி கண்முன்னேயே 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.. இதில் அந்த பெண் அங்கேயே மயங்கிவிழ, சித்தி அலறி கூச்சலிட, அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வேலியே பயிரை மேய்ந்தது இதையடுத்து, மருத்துவமனையில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்டு கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மட்டுமல்லாமல் தமிழகத்துக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துள்ளனர்.. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சித்தி கண்முன்னேயே இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சித்தி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். பாஜக, அதிமுக கடும் கண்டனம் அதேபோல, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "ஆளும் திமுக ஆட்சியில் தமிழக பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. பிற மாநில பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம். திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் ஒருபுறம் நம்மை கவலையில் ஆழ்த்துகின்றன. குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசாரே காமுகர்களாக உருமாறி வருவது மறுபுறம் நம்மை பயமுறுத்துகிறது. இப்படி மக்களை பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?" என்று நறுக்கென கேள்வி எழுப்பியிருக்கிறார். திமுக அரசுக்கு கண்டனம் அதேபோல முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த திருவண்ணாமலை சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், "போலீசாரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைக்கு தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத தி.மு.க. அரசால் தமிழக பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/thiruvannamalai/tiruvannamalai-two-policemen-arrested-for-lorry-girl-incident-and-edappadi-palanisamy-annamalai-na-739789.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி தமிழக பொலிசார் எவ்வளவு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம். இதை கண்டிக்கும் தலைவர்கள் அரசியல்விளையாட்டு விளையாடுகிறார்கள்.

அண்ணா, எம்ஜிஆரை கீழ்த்தரமாக விமர்சித்த சீமான்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிமுக!

1 week 5 days ago
என்னதான் நீங்கள் பழைய உறுப்பினர் எண்டாலும்…யாழ்களத்தில் நேற்று இணைந்து கொண்ட ஒருவர் உங்கள் Saturn எண்டு சொன்னால், என்போன்றோருக்கு கோவம் வரும்தானே அண்ணை?

செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்!

1 week 5 days ago
இது அமெரிக்கா டாலரின் நம்பக தன்மையை குறைக்கும். ஏனெனில், அமெரிக்காவின் உள்ளேயே கடன் எடுப்பதில் மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில் தயக்கமும், கடனை பொருளாதாரம் தாங்குமோ என்ற ஐயமும் இருக்கிறது என்பதை காட்டுவதால். தங்கம் விலை கூடுவதன் ஒரு முக்கிய காரணம். அமெரிக்கா, கிரிப்டோ அல்லது அதை போன்ற வழியில் செல்லக் கூடிய வாய்ப்பும் இருகிறது. ஏனெனில், முதலில் தங்க இருப்பை அடிப்படையாக இருந்த நாணயங்களின் பெறுமதிகள், கடுதாசியான டாலரின் அடிப்படைக்கு மாற்றப்பட்டது. அது பரவியது. இப்போது ஏன் தொழில்நுட்பத்தில் முன்ணணியில் இருக்கும் அமெரிக்கா, அதை ஏன் அடிப்படையாக பாவிக்க முடியாது என்ற கேள்வியும் இருக்கிறது. அனால், தொழில்நுட்பம் சீனாவிடமும் இருக்கிறது என்பதே அமெரிக்காவை தொழில்நுற்ப அடிப்படையில் நாணயத்தை மாற்றுவதை தடுப்பாக இருக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது.

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 5 days ago
1. டிரோனில் பார்த்து நடு நடுங்கும் கூட்டத்துக்கு 500 பொலிஸ்காரரை மட்டும் போட்டது ஏன் கூட்டம் அதிகமானது என தெரிந்தால் - நேரடியாக விஜை, அல்லது ஆனந்த், ஆதவ் எவரையாவது அழைத்து கரூருக்கு வர வேண்டாம் என பொலிச் கேட்டதா? மீறிவந்தால் மக்கள் நலனை காட்டி ஒரு நீதிபதி வீட்டுக்கு போய் தடைஉத்தரவு கூட வாங்கி இருக்கலாம். இங்கே மேற்க்கை உதாரணம் காட்டும் பலருக்கு, மேற்கில் பொலிசார் செய்யும் dynamic risk assessment பற்றி தெரிந்திருக்கும். ஒரு கூட்டம் கூடுகிறது என்றால் அனுமதி அளித்தவுடன் பொலிசாரின் கடமை முடிவதில்லை. அந்த கூட்டத்தை நடக்கும் போதும் அவதானித்து, தக்க நடவடிக்கை எடுப்பது அவர்களின் கடமை. இன்று செந்தில் பாலாஜியே சொல்கிறார். விஜை பேச தொடங்கி 3 நிமிடத்தில் அவர் மீது செருப்பு வீசியதாக. யார் வீசி இருப்பார்கள்? நிச்சயமாக திமுக அனுப்பிய ஆட்களை தவிர வேறுயாருக்கும் இந்த தேவையில்லை. இப்படி எடப்பாடிக்கு, அன்புமணிக்கு நடப்பதை தமிழக உளவுதுறை விடுமா? 500 பொலிஸ்காரரர் இருந்தார்களே, சிலரை விஜை பேசும்போது வேனுக்கு அருகில் கூட தடிகளுடன் காண முடிகிறது. எத்தனை பொலிசார் தள்ளுமுள்ளில் இறந்தார்கள்? யாராவது காயமாவது பட்டார்களா? இதில் சதி இருக்கலாம் இல்லாதிருக்கலாம். ஆனால் கணிசமான தவறு தமிழ் நாடு அரசின் பொலிஸ்மீது என்பது மறுக்கவியலாத உண்மை. RCB கூட்ட நெரிசலுக்கு யாரும் RCB கொலைகாரர்கள் என சொல்லவில்லை. RCB யும் பங்களூரு பொலிசும் கடமை தவறினர் என்றே சொன்னார்கள். எடப்பாடி, அன்புமணி, பிரேமலதா இதில் அரசியல் செய்வது உண்மை. ஸ்டெரலைட் நேரம் மாண்பு மிகு முதல்வர் ஸ்டாலின் பொம்மை விளையாடி கொண்டு இருக்கவில்லைதானே? ஆனால் அரசியலையும் தாண்டி தவறில் கணிசமான பங்கு தமிழக அரசுக்கு என்பது அடிப்படை உண்மை. இன்னொரு விடயம் - ஸ்டெரலைட் முதல் - அஜித்குமார் கொலை வரை, தமிழக பொலிஸ் தமது அரசியல் எஜமானர்களுக்காக எந்த நிலைக்கும் போக கூடியவர்கள் என்பது ஏலவே நிறுவப்பட்ட ஒன்று. விஜைக்கு முட்டை அடிக்கும் அந்தரிப்பில் நாம் இதை மறக்க கூடாது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
எங்க‌ட‌ செல்ல‌ங்க‌ள் கோப்பைய‌ தூக்கின‌ம் நாங்க‌ள் ச‌ந்தோச‌த்தில் மித‌க்கிறோம் த‌லைவ‌ரே🙏❤️😍👍..................................... இந்த‌ சீமாட்டி அடிக்க‌ தொட‌ங்கினா செல்ல‌ம் யார் ப‌ந்து போட்டாலும் அடிச்சு நொறுக்குவா , நேற்று சீக்கிர‌மே அவுட் ஆகி விட்டா , இந்த‌ உல‌க‌ கோப்பையில் இவா தான் கூட‌ ர‌ன்ஸ் அடிப்பா என ந‌ம்புகிறேன் த‌லைவ‌ரே👍..................................

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

1 week 5 days ago
மாலை ,மரியாதை எல்லாம் வீண் செலவு 😂,தோழர்கள் வலதுசாரி உடுப்புக்களை போடாமல் இடதுசாரி உடுப்புக்க்களை போட்டால் சிறப்பாக இருக்கும்😂
Checked
Mon, 10/13/2025 - 15:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed