புதிய பதிவுகள்2

தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு!

1 week 5 days ago
தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு! adminOctober 1, 2025 தமிழ் தொழிலதிபர் ஒருவரை இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லொறியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, அதற்கான பிடியாணையை செவ்வாய்க்கிழமை (30.09.25) பிறப்பித்தார். மித்தெனிய பகுதியில் இரண்டு ஐஸ் கொள்கலன்களை மறைத்து வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரான சம்பத் மனம்பேரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதை அடுத்து நீதிபதி இந்த பிடியாணையை பிறப்பித்தார். 2009 ஆகஸ்ட் 12 ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் நாரஹேன்பிட்ட சந்திக்கு அருகில் கொள்ளையடிக்கும் பொதுவான நோக்கத்துடன் ஒரு சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாகக் கூறி, காவற்துறை அதிகாரிகள் போல் வேடமிட்டு, செல்லதுரை கொலவேந்நாதன் என்ற தொழிலதிபரை மிரட்டி, அவரது வசம் இருந்த சுமார் 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அரிசி லொரி, பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார். சம்பத் மனம்பேரி மற்றும் நெரஞ்சன் பெரேரா ஆகியோரைத் தவிர வேறு நான்கு பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சம்பத் மனம்பேரி சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கல்ப பெரேரா, தனது கட்சிக்காரர் தற்போது வேறொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் உள்ளதாகவும், அதனால் இன்று (30.09.25)நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் கூறினார். அவர் சிறையில் இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த அறிக்கையை வழங்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார். நான்காவது குற்றவாளியான நெரஞ்சன் பெரேரா சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ராகுல் ஜெயதிலகே, தனது கட்சிக்காரர் ஐஸ் என்ற போதைப்பொருளை வைத்திருந்ததற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார். சம்பத் மனம்பேரி https://globaltamilnews.net/2025/221001/

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 5 days ago
தமிழ்நாட்டு காவல் துறை கரூர் பிரிவு இங்கு மிகவும் தர்மசங்கடமான நிலைமைக்கு உள்ளாகியிருக்கிறது. காவல்துறை dossier இல் உள்ள அதிகபட்ச High Risk பிரிவையும் தாண்டிய uncivilized hooligan mobs எனும் பிரிவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த instruction உம் அவர்களிடம் இல்லை. உண்மையாகவே இது imposition of Section 144 of the Code of Criminal Procedure (CrPC) in India, போன்ற ஒரு Procedure ஐ பாவித்து கையாளப்படவேண்டிய mobs. உண்மையிலேயே காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அணில் குஞ்சுகளின் மொகரைகளை பெயர்த்திருந்தாலொழிய இந்த stampede கரூர் இல்லாவிட்டாலும் வேறு எங்கேயாவது மிக விரைவில் நடந்திருக்கும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
போட்டிகளைப் பாருங்கள். அசந்து போவீர்கள். அவுஸ்ரேலியா, இங்கிலாந்து பெண்கள் எல்லாம் நெருப்பு. தொடர்ந்து கதைப்பம். இப்பிடியும் பம்பரம் விடலாம். பார்ப்போம். ஏதாவது ஒரு போட்டியை என்றாலும் முழுதாகப் பாருங்கள். பிறகு தொடர்ந்து பார்ப்பீர்கள். எல்லாப் பிள்ளைகளையும் இந்தப் போட்டித் தொடரில் அறிந்து கொள்வோம்.

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!

1 week 5 days ago
ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி! ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார். டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449151

செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்!

1 week 5 days ago
செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்! செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு செனட் இடைநிறுத்த நிதி சட்டமூலத்தை அங்கீகரிக்கத் தவறியதை அடுத்து, அமெரிக்கா கூட்டாட்சி அரசாங்க முடக்கத்தை நோக்கிச் சென்றது. அதே நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட்டாட்சி ஊழியர்களின் புதிய பணிநீக்கங்களை அச்சுறுத்துவதன் மூலம் பதற்றங்களை அதிகரித்தார். செனட் ஜனநாயகக் கட்சியினர், அரசாங்கத்திற்கு நிதியுதவி அளிக்கும் குடியரசுக் கட்சி சட்டமூலத்தை நிராகரித்து. கூட்டாட்சி நிதியுதவியை ஏழு வாரங்களுக்கு நீட்டிப்பதற்கான சட்டமூலத்தின் மீதான 55-45 வாக்குகள் சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் தேவையான 60 வாக்குகளை விட குறைவாக இருந்தது. சட்டமியற்றுபவர்கள் வருடாந்திர செலவின சட்டமூலங்களில் தங்கள் பணிகளை முடிக்கும் வரை, கூட்டாட்சி நிதியை ஏழு வாரங்களுக்கு நீட்டிக்கும் நடவடிக்கையை செனட் நிறைவேற்றவில்லை என்றால், அரசாங்க செலவினம் புதன்கிழமை (01) அதிகாலை 12.01 மணிக்கு காலாவதியாகிவிடும். இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதல் அமெரிக்க பணிநிறுத்தத்தைத் தூண்டும். குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் தற்போது சுகாதாரச் செலவுகள் தொடர்பாக ஒரு பக்கச்சார்பான மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது உடனடி பணிநிறுத்தத்தைத் தூண்டுகிறது, இது தேசிய சேவைகளை சீர்குலைத்து, கூட்டாட்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும். இது அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கியமான தரவுகளின் ஓட்டத்தை எதிர்மறையாக பாதிக்கும். நள்ளிரவில் அரசாங்க நிதி காலாவதியான பின்னர், வெள்ளை மாளிகை பட்ஜெட் அலுவலகம் ஒரு ஆணையை வெளியிடும், இது முறையான பணிநிறுத்தத்தைத் தூண்டும். இதன் மூலம், இராணுவப் படைகள் உட்பட அத்தியாவசிய ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்வார்கள். மேலும் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிரந்தர பணிநீக்கங்களை முடிவு செய்யாவிட்டாலும், 750,000 கூட்டாட்சி ஊழியர்கள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ட்ரம்ப் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு ஒப்பந்தத்தை நோக்கியோ அல்லது முகத்தை காப்பாற்றும் ஒரு வழியை நோக்கியோ பணியாற்றத் தயாராக இல்லை என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. மாறாக, பணிநிறுத்தம் நடந்தால் அவரது நிர்வாகம் “நிறைய” கூட்டாட்சி தொழிலாளர்களை விடுவித்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார். https://athavannews.com/2025/1449145

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 27 பேர் உயிரிழப்பு!

1 week 5 days ago
பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 27 பேர் உயிரிழப்பு! மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், இடிந்து வீழ்ந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதனால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பிலிப்பைன்ஸின் மத்திய விசாயாஸ் பகுதியில் உள்ள செபு மாகாணத்தில் உள்ள போகோ நகரின் கடற்கரையில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு 10 மணிக்கு (1400 GMT) முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மின்சாரம் தடைப்பட்டதுடன்,100 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தேவாலயம் உட்பட கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன. பிலிப்பைன்ஸின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான செபு மாகாணத்தில் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். நாட்டின் இரண்டாவது பரபரப்பான நுழைவாயிலான மக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது. சான் ரெமிஜியோ உட்பட வடக்கு செபுவில் இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது. அண்டை நகரமான போகோவில், நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில், மருத்துவமனை நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் வலுவான பின் அதிர்வுகள் பல குடியிருப்பாளர்களை வெளியேற்றும் மையங்களிலும் தெருக்களிலும் தஞ்சம்புகுர கட்டாயப்படுத்தியது. நிலநடுக்க கண்காணிப்பு முகமைகள் நிலநடுக்கத்தின் ஆழத்தை சுமார் 10 கிமீ (6.2 மைல்) வரை வைத்து பல பின்அதிர்வுகளை பதிவு செய்தன, இது 6 ரிக்டர் அளவில் வலுவானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை. பிலிப்பைன்ஸ் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் உள்ளது. அங்கு எரிமலை செயல்பாடு மற்றும் பூகம்பங்கள் பொதுவானவை. ஜனவரியில் நாட்டில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எனினும், எந்த உயிரிழப்பும் இல்லை. 2023 இல், 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எட்டு பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449136

அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? - உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?

1 week 5 days ago
சரி, உங்களையாவது நினைவில் வைத்திருந்தாரா? வெளியே உரத்துச் சொல்லிப்போடாதேயுங்கோ பிடிச்சுக்கொண்டுபோய் பரிசோதனை எலியாக்கி விடுவார்கள் உங்களை.

குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது

1 week 5 days ago
நம்பகமான முகநூல் தளத்தில் வந்த செய்திதான்....ஒலுவில் பக்க வசிப்பவர்களிடமிருந்தும் செய்திகள் பார்த்தேன்...அதுதான் இதில் பதிந்த்தேன்.. நாங்கள் உந்த வயதிலை ..தும்பி பிடித்தநாங்கள்...இவங்கள் என்னெண்டால் .....

குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது

1 week 5 days ago
அல்வாயர், இந்த செய்தி நம்பகத்தன்மை உள்ளதா அல்லது வாசிப்பவரை பேயராக்கும் இன்னோர் கதையா? உந்த 17 வயசு பொடி ரொம்ப பொல்லாத ஆள் போல கிடக்குது. 17 வயதில் உலகத்தையே ஏய்ப்பான் போல கிடக்குது.

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 5 days ago
பத்து ரூபாய்ப் பாட்டில் டாஸ்மார்க்கு நாளொன்றிற்கு மூணு கோடி திராவிடம் வேணும் டமில் வேண்டாம் போங்கய்யா வட பலகரலா

குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது

1 week 5 days ago
குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது. ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள். தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர். குழந்தையின் தாயும் – தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின் உறவினர்கள், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்ததாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார். இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை, அவரின் காதலியின் வீடு சென்று; “எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள்” என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என, விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, குழந்தையின் தந்தை – அவரின் சின்னம்மா (தாயின் சிறிய சகோதரி) ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, களியோடை ஆற்றுப் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன்; உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே, இந்தக் குழந்தையை வளர்ப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரின் சின்னம்மாவும் சம்மதித்துள்ளார். இந்த நிலையில், குழந்தையின் தொப்புள்கொடி வெட்டப்பட்ட பகுதிக்கு, முறையாக சிகிச்சையளிக்கப்படாமையினாலும், அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததாலும், ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை அவர்கள் கொண்டு சென்றனர். இதனையடுத்தே, ‘குழந்தையொன்று ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக’ கதை பரவியது. இந்தப் பின்னணியில்தான், குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து, தற்போது – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். முன்னராக, குறித்த குழந்தை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவருடையதாக இருக்கலாம் என – சமூக ஊடகங்களில் சிலர் அபாண்டமாக எழுதியிருந்தனர். அவ்வாறு எழுதப்பட்டமையைக் கண்டித்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  மேலும், அவ்வாறு எழுதியவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 5 days ago
ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இல்லாத எந்தக் கட்சியும், சிறிதோ பெரிதோ புதிதோ பழையதோ, ஆளும் கட்சியையும் அரசையும் எதிர்த்தே அரசியல் செய்யும். புதிய தமிழகம் கூட திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கின்றது. இந்த விடயத்தில் திமுகவின் மேல் முற்று முழுதாக குற்றமும் சுமத்தியிருக்கின்றது. அன்புமணி பிரிவு பாமகவும் திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கின்றது. அன்புமணி கரூரில் நின்று கொண்டே இரவு நேரத்தில் எப்படி பிரேத பரிசோதனைகள் செய்தீர்கள் என்று பத்திரிகையாளர்களின் முன் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். ஆளும் கட்சியையும், அரசாங்கத்தையும் எதிர்க்காமல் பிற கட்சிகளுக்கு அரசியலே கிடையாது. தவெக ஓடி ஒழிந்ததிற்கு அவர்கள் ஆளும் கட்சியை எதிர்த்தது அரசியல் செய்தார்கள் என்பது காரணம் அல்ல. விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் ஆனந்தும், ஜான் ஆரோக்கியசாமியும், நிர்மலும் தங்களின் செல்ஃபோன்களை ஆஃப் செய்து விட்டு தலைமறைவானது அவர்களுக்கு இந்த சூழ்நிலையை கையாளும் திராணி கிடையாது என்பதனாலேயே. தவெகவின் அந்த மாவட்டச் செயலாளரும் தலைமறைவாகினார். இதற்கு மேல் தவெகவில் ஒரு கட்டமைப்பும் கிடையாது. விஜய்யின் ரசிகர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்கு போயிருப்பார்கள். தவெகவிற்கு தொண்டர்களோ அல்லது ஒரு கட்டமைப்போ இருந்திருந்தால், அதில் சிலராவது மக்களுடன் நின்றிருக்கவேண்டும். இப்படியே ஓடி ஒழிந்து கொண்டிருந்தால், எப்போது மக்களுடன் நிற்கப் போகின்றீர்கள்....... திமுக உங்களை அழித்து விடும் என்றால், இதற்குப் பிறகு திமுக ஓய்ந்து விடப் போகின்றதா......... இன்னுமொரு சூழ்நிலையில் மீண்டும் ஓடி ஒழியப் போகின்றீர்களா........... தமிழ்நாட்டில் இதற்கு முன் எந்தக் கட்சியாவது இப்படி முற்றாகப் பதுங்கிய வ்ரலாறு இருக்கின்றதா.................... முக்கியமாக நாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லிய கட்சி ஒன்று, அது சம்பந்தப்பட்ட அனர்த்தம் ஒன்றில் இருந்து இப்படி ஓடிப் பதுங்கி இருந்தது உண்டா............

கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!

1 week 5 days ago
சில தவறுகளை சுட்டிக் காட்டும் போது பணிப்பாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை...கடந்த காலங்களில் முகப் புத்தகத்தில் இவ்வாறன பிரச்சனைகளை எழுதியிருந்தார்கள் .பணிப்பாளர் சத்தியமுர்த்தியவர்கள் அப்படி எல்லாம் நடப்பதில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.
Checked
Mon, 10/13/2025 - 18:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed