புதிய பதிவுகள்2

'3 மாத பரிசோதனைக்கு ரூ.51,000' – குஜராத்தின் அடிதட்டு மக்கள் மீது மருத்துவ 'சோதனை'

1 week 4 days ago
குஜராத்தில் Clinical Trail-ல் உயிரை பணயம் வைக்கும் குடிசைப் பகுதி மக்கள் | BBC Ground Report ஆமதாபாத் குடிசைப் பகுதியில் வாழும் வேலையற்ற மக்கள் clinical trials எனப்படும் மனிதர்கள் மீது மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கின்றனர். இது அவர்களின் முக்கிய வருமான ஆதாரமாக மாறியுள்ளது. சிலருக்கு இது மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. உணவு, வீடு பராமரிப்பு போன்ற அவர்களின் அன்றாட தேவைகளை இதன் மூலமே பூர்த்தி செய்கின்றனர். இவர்கள் வாழ்வில் சந்திக்கும் சவால்கள் என்ன? பிபிசி அதனை அறிய முயற்சித்தது. Reporter - Roxy Gagdekar Chhara Shoot Edit – Pavan Jaishwal. Additional Shoot – Kushal Batunge Producer – Shivalika Shivpuri Holding Editor – Sushila Singh #ClinicalTrail #India #Medicine இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தோல் செல் மூலம் உங்கள் மரபணு கொண்ட குழந்தையை உருவாக்கலாமா?

1 week 4 days ago
பட மூலாதாரம், OHSU/Christine Torres Hicks கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 1 அக்டோபர் 2025, 11:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக மனிதர்களின் தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, அதை விந்தணுக்களால் செறிவூட்டி, கருவை உருவாக்கியுள்ளனர். இந்த முறையால், உடலில் உள்ள எந்த செல்லையும் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க முடியும். முதுமை அல்லது நோயால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு இது உதவும். மேலும், தன்பாலின தம்பதிகளும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற வாய்ப்பு உருவாகலாம். ஆனால், இந்த முறையை கருத்தரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்த மேம்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். இதை ஒரு முக்கிய முன்னேற்றம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டாலும், இதுபோன்ற அறிவியல் முயற்சிகள் குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். பொதுவாக குழந்தை பெறுவது எளிதான ஒன்று. ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையைச் சந்தித்து, கரு உருவாகி, ஒன்பது மாதங்களில் குழந்தை பிறந்துவிடும். இப்போது விஞ்ஞானிகள் இந்த விதிகளை மாற்றுகின்றனர். இந்தப் புதிய முயற்சி மனித தோலில் இருந்து தொடங்குகிறது. ஓரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உடலை உருவாக்கத் தேவையான முழு மரபணு (டிஎன்ஏ) இருக்கும் தோல் செல்லின் நியூக்ளியஸை (nucleus) எடுக்கின்றனர். பின்னர், அதை மரபணு தகவல்கள் நீக்கப்பட்ட ஒரு கருமுட்டையில் வைக்கின்றனர். இந்த கட்டம் வரை, 1996-ல் உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி ஆட்டை உருவாக்கிய முறையைப் போன்றது இது. பட மூலாதாரம், OHSU படக்குறிப்பு, பெரிய வட்டம், நுண்ணோக்கியில் பார்க்கப்படும் கருமுட்டையைக் குறிக்கிறது. கீழே உள்ள வெள்ளைப் புள்ளி, தோல் செல்லில் இருந்து எடுக்கப்பட்டு கருமுட்டையில் வைக்கப்பட்ட மரபணு பொருளாகும். 46 குரோமோசோம்கள் ஆனால், விந்தணுவால் இந்த கருமுட்டையை கருத்தரிக்க முடியவில்லை. ஏனெனில் தானமாக பெறப்பட்ட இந்த கருமுட்டைக்குள் ஏற்கெனவே முழு குரோமோசோம்களும் உள்ளன. ஒரு குழந்தை உருவாக, தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் தலா 23 குரோமோசோம்கள் (மொத்தம் 46) தேவை. ஆனால், இந்த முட்டையில் ஏற்கெனவே 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. அதனால், கருமுட்டை தனது குரோமோசோம்களில் பாதியை வெளியேற்ற வேண்டும். அதன் பின் தான் கருமுட்டையால் விந்தணுவுடன் சேர முடியும். இந்தச் செயல்முறையை ஆராய்ச்சியாளர்கள் "மைட்டோமியோசிஸ்" என்று அழைக்கின்றனர். (இது "மைட்டோசிஸ்" மற்றும் "மியோசிஸ்" என்ற செல்கள் பிரியும் இரண்டு முறைகளின் கலவை). 'எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும்' நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு, 82 செயல்படும் கருமுட்டைகள் உருவாக்கப்பட்டதாக கூறுகிறது. அவை விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்டன. சில கருமுட்டைகள் கருவின் ஆரம்ப கட்டத்துக்கு வளர்ந்தன. ஆனால், ஆறு நாட்களுக்கு மேல் எதுவும் வளரவில்லை. "சாத்தியமற்றது என்று நினைக்கப்பட்ட ஒன்றை நாங்கள் செய்துவிட்டோம்," என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கரு உயிரணு மற்றும் மரபணு சிகிச்சை மைய இயக்குநர் பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ். ஆனால், இந்த செயல்முறை இன்னும் முழுமையாகவில்லை. கருமுட்டை எந்த குரோமோசோம்களை வெளியேற்றுவது என்பதை தற்செயலாகத் தேர்ந்தெடுக்கிறது. நோய் வராமல் இருக்க, 23 வகைகளில் ஒவ்வொரு வகையிலிருந்தும் ஒரு குரோமோசோம் இருக்க வேண்டும். ஆனால், சில வகைகள் இரண்டாகவும், சில வகைகள் எதுவும் இல்லாமலும் இருக்கின்றன. மேலும், இந்த முறையின் வெற்றி விகிதம் 9% மட்டுமே. குரோமோசோம்கள் 'கிராசிங் ஓவர்' என்ற முக்கியமான டிஎன்ஏ மறுசீரமைப்பு செயல்முறையையும் தவறவிடுகின்றன. "இந்த முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும்," என்கிறார் உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் மிட்டாலிபோவ். "எதிர்காலத்தில் இது முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் குழந்தை பெற முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது." பட மூலாதாரம், OHSU/Christine Torres Hicks படக்குறிப்பு, பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ் இந்தப் புதிய தொழில்நுட்பம், 'இன் விட்ரோ கேமடோஜெனீசிஸ்' எனப்படும் ஒரு வளர்ந்து வரும் துறையின் பகுதி. இதில், உடலுக்கு வெளியே விந்தணுவும் கருமுட்டைகளும் உருவாக்கப்படுகின்றன. இது இன்னும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் செயற்கை கருத்தரித்தல் (ஐவிஎஃப்) மூலம் குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாக உள்ளது. வயதான பெண்கள், விந்தணு குறைவாக உற்பத்தி செய்யும் ஆண்கள், அல்லது புற்றுநோய் சிகிச்சையால் மலட்டுத்தன்மை அடைந்தவர்களுக்கு இந்த முறை நம்பிக்கை தரும். இந்தத் தொழில்நுட்பம் பெற்றோராவதற்கான பாரம்பரிய விதிகளை மாற்றுகிறது. இதற்கு பெண்ணின் தோல் செல்கள் மட்டுமல்ல, ஆணின் தோல் செல்களையும் பயன்படுத்தலாம். இதனால், தன்பாலின தம்பதிகள் இருவரும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற முடியும். உதாரணமாக, ஆண் தம்பதிகளில் ஒருவரின் தோல் செல்களால் கருமுட்டை உருவாக்கி, மற்றவர் விந்தணுவால் கருத்தரிக்கலாம். "போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் குழந்தை பெற முடியாத கோடிக்கணக்கான மக்களுக்கு இது நம்பிக்கை தருவதோடு, தன்பாலின தம்பதிகளுக்கு இருவருடனும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெறும் வாய்ப்பையும் கொடுக்கும்," என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பவுலா அமடோ. பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் ஹல் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவப் பேராசிரியர் ரோஜர் ஸ்டர்மி, இந்த அறிவியல் முயற்சி "முக்கியமானது" மற்றும் "சிறப்பானது" என்று தெரிவித்தார். "இதுபோன்ற ஆராய்ச்சிகள், இனப்பெருக்கத்தில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி மக்களுடன் திறந்த உரையாடல் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றன," என்று அவர் கூறினார். "மக்களின் நம்பிக்கையை வளர்க்கவும், பொறுப்பை உறுதி செய்யவும் வலுவான நிர்வாகம் தேவை என்பதை இது நமக்கு உணர்த்துகிறது." எடின்பரோ பல்கலைக்கழகத்தின் எம்ஆர்சி இனப்பெருக்க சுகாதார மையத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் ரிச்சர்ட் ஆண்டர்சன், புதிய கருமுட்டைகளை உருவாக்கும் இந்தத் திறன் "பெரிய கண்டுபிடிப்பு" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பாதுகாப்பு குறித்து சில கவலைகள் இருக்கலாம். ஆனால், இந்த ஆய்வு பல பெண்கள் தங்கள் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தைகளைப் பெற உதவும் ஒரு முக்கிய படியாக இருக்கும்,"என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgqze2pq4vo

'அன்புடன் காப்போம் - உலகை வெல்வோம்' : உலக சிறுவர்கள் தின தேசிய விழா - 2025

1 week 4 days ago
Published By: Priyatharshan 01 Oct, 2025 | 08:23 PM இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய சிறுவர்கள் தின வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. அதன் நிறைவு விழா மற்றும் உலக சிறுவர்கள் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 01) அலரி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. இதன்போது, உலக சிறுவர்கள் தின நினைவு முத்திரை மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது. உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கியப் போட்டிகளின் தொகுப்பாகிய "க்ஷேம பூமி" (Kshema Bhoomi) இலக்கியத் தொகுப்பு வெளியீட்டு வைக்கப்பட்டது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சிந்துவெளி சித்தம்" (Sithuvili Siththam) ஓவியப் போட்டியின் வெற்றியாளர்கள் இன்றைய நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களுக்காகப் பல்வேறு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிறுவர்கள் கலந்துகெண்ட இந்த முக்கிய நிகழ்வில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, பாராளுமன்ற மகளிர் மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/226627

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 4 days ago
நானும் எத்தினை நாளைக்குத்தான் தொண்டை கிழிய கிழிய கத்துறதெண்டு தெரியேல்லை?😂 சீமான் அரசியலை நான் வரவேற்பது ஈழ அரசியலுக்காக இல்லை என்பதை பல இடங்களில் பலதடவைகள் எழுதி விட்டேன்.

கத்தாரிடம் மன்னிப்பு - நெதன்யாகுவின் நடத்தை மாறியது ஏன்?

1 week 4 days ago
பட மூலாதாரம், Win McNamee/Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதலுடன் காஸாவில் அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளார். கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025, 12:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் காஸாவில் அமைதிக்கான ஒரு திட்டத்தை முன்வைத்தார். 20 அம்சங்களை கொண்ட இந்தச் சமாதானத் திட்டத்தின் கீழ், காஸாவில் சண்டை நிறுத்தப்படும், இஸ்ரேலியப் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், மேலும் காஸாவின் நிர்வாகத்திற்காக ஒரு சர்வதேச 'அமைதி வாரியம்' (Board of Peace) அமைக்கப்படும். இதில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரும் இடம் பெறுவார். அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அமைதித் திட்டத்தை அறிவித்து, இது ஒரு வரலாற்று நடவடிக்கை என்று வர்ணித்தார். அப்போது பிரதமர் நெதன்யாகு, இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாகவும், இது இஸ்ரேலின் போர்க் குறிக்கோள்களை நிறைவேற்றும் என்றும் கூறினார். எனினும், ஹமாஸ் இன்னும் இந்த அமைதித் திட்டத்தை ஆய்வு செய்து வருவதால், இது குறித்து எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. இந்தச் சமாதானத் திட்டத்தின் கீழ், அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், எதிர்காலத்தில் பாலத்தீன தேசம் உருவாவதற்கான வழியும் திறக்கப்படலாம். இருப்பினும், இந்தத் திட்டம் பாலத்தீன தேசத்தை உருவாக்குவதைக் குறிக்கவில்லை என்றும், இஸ்ரேல் இந்த யோசனையை முழு பலத்துடன் எதிர்க்கும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தினார். ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்தால், ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் அதிபர் டிரம்ப் கூறினார். பட மூலாதாரம், PA படக்குறிப்பு, இந்தத் திட்டத்தின் கீழ், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், டிரம்ப் தலைமையிலான "அமைதி வாரியத்தில்" இணைவார். காஸாவுக்கான அமைதித் திட்டத்தை அறிவிப்பதற்கு முன், இஸ்ரேலியப் பிரதமர் வெள்ளை மாளிகையில் இருந்தபடியே கத்தார் பிரதமர் (மற்றும் வெளியுறவு அமைச்சர்) ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். இந்த அழைப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பங்கேற்றார். இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, செப்டம்பர் 9 அன்று கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்காக நெதன்யாகு மன்னிப்பு கேட்டார். மேலும், இந்தத் தாக்குதலில் ஒரு கத்தார் குடிமகன் உயிரிழந்ததற்காகவும் வருத்தம் தெரிவித்தார். ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் கத்தார் மத்தியஸ்தராக இருந்து வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தையில் மீண்டும் பங்கேற்க, இஸ்ரேல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் நிபந்தனை விதித்திருந்தது. ஊடக செய்திகளின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வலியுறுத்தலின் பேரில் இஸ்ரேல் கத்தாரிடம் மன்னிப்பு கேட்டது. எதிர்காலத்தில் இஸ்ரேல் கத்தார் நாட்டின் இறையாண்மையை மீறாது என்றும் நெதன்யாகு கத்தாரிடம் உறுதியளித்தார். இந்தத் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக கத்தார் கூறியது. 'இஸ்ரேல் உங்களைத் தேடி அழிக்கும்' பட மூலாதாரம், Michael M. Santiago/Getty Images படக்குறிப்பு, ஐ.நா. பொதுச் சபையில் செப்டம்பர் 26 அன்று நெதன்யாகு, "உடனடியாகப் பணயக் கைதிகளை விடுவியுங்கள், அவ்வாறு செய்தால் நீங்கள் உயிர் பிழைப்பீர்கள். இல்லையென்றால், இஸ்ரேல் உங்களைத் தேடி அழிக்கும்" என்று கூறியிருந்தார். இந்த நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 26 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரையில், "ஹமாஸ் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், போர் இப்போதே முடிவுக்கு வரும், காஸாவில் இருந்து ராணுவம் அகற்றப்படும், இஸ்ரேல் தனது பாதுகாப்புக் கட்டுப்பாட்டை வைத்திருக்கும், மேலும் எங்கள் பணயக் கைதிகள் திரும்புவார்கள்" என்று நெதன்யாகு கூறியிருந்தார். காஸாவில் பெரிய ஒலிபெருக்கிகள் அமைத்து நெதன்யாகுவின் பேச்சு நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. "உடனடியாகப் பணயக் கைதிகளை விடுவியுங்கள், அவ்வாறு செய்தால் நீங்கள் உயிர் பிழைப்பீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், இஸ்ரேல் உங்களைத் தேடி அழிக்கும்" என்று நெதன்யாகு ஹமாஸை வலியுறுத்தியிருந்தார். அதே நேரம், டிரம்ப்புடன் இணைந்து அமைதித் திட்டத்தை அறிவித்தபோது, ஹமாஸ் இந்தத் திட்டத்தை நிராகரித்தால், காஸாவில் இஸ்ரேல் தனது பணியை முடிக்கும் என்றும் நெதன்யாகு கூறினார். அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்களைக் கொன்றதுடன், 250-க்கும் மேற்பட்டவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தது. ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு படைகளின் முயற்சிகள் மூலம் இதுவரை 207 பணயக் கைதிகள் இஸ்ரேலுக்குத் திரும்பியுள்ளனர். காஸாவில் இன்னும் 48 பணயக் கைதிகள் உள்ளனர், அவர்களில் இருபது பேர் உயிருடன் உள்ளனர். அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸை ஒழிக்கும் நோக்குடன் இஸ்ரேல் காஸாவில் பதிலடி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகளும் பெண்களும் ஆவர். மேலும், 1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் காயமடைந்துள்ளனர். நெதன்யாகு ஏன் கத்தாரிடம் மன்னிப்பு கேட்டார்? பட மூலாதாரம், EPA/Shutterstock படக்குறிப்பு, டிரம்ப்பைச் சந்திப்பதற்கு முன் நெதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கோரினார். தொலைபேசி அழைப்பில் நெதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். இஸ்ரேலோ, நெதன்யாகுவோ ஒரு மத்திய கிழக்கு நாட்டிடம் மன்னிப்பு கோருவது ஒரு அரிதான நிகழ்வு. இதற்கு முன் 2010-ல் காஸாவுக்கு உதவிப் பொருட்கள் ஏற்றிச் சென்ற துருக்கியின் மாவி மர்மாரா கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்காக இஸ்ரேல் துருக்கியிடம் மன்னிப்பு கேட்டிருந்தது. கத்தார் மீதான தாக்குதலுக்குப் பிறகு நெதன்யாகு சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டதாலேயே அவர் மன்னிப்பு கேட்டார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கியபோது பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் வெளிநடப்புச் செய்தனர். "கத்தார் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் அனைத்து சர்வதேச ராஜீய விதிகளையும் மீறிவிட்டது. கத்தார் மத்திய கிழக்கில் பல மோதல்களில் மத்தியஸ்தராகப் பணியாற்றியுள்ளது, ஹமாஸுடனான மத்தியஸ்தத்திலும் அதன் பங்கு முக்கியமானது. கத்தார் மீதான தாக்குதல் இஸ்ரேலின் தன்னிச்சையான போக்காகப் பார்க்கப்பட்டது, மேலும் ஐரோப்பிய கூட்டாளிகள் உட்பட பல நாடுகள் இஸ்ரேலிடமிருந்து விலகிச் சென்றன. கத்தாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அழுத்தம் நெதன்யாகு மீது இருந்தது என்பது வெளிப்படையானது," என சர்வதேச விவகார நிபுணர் பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான் சொல்கிறார். ஆனால் இஸ்ரேல் அல்லது நெதன்யாகு மீது சர்வதேச அழுத்தம் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதே கேள்வி. "நடைமுறையில் பார்த்தால், இஸ்ரேல் அதன் சொந்த வழியில், அதன் சொந்தத் திட்டத்தின்படி முன்னேறி வருகிறது, அதன் சொந்தப் பாதுகாப்புக் குறிக்கோள்கள் சர்வதேச விமர்சனங்களை விட முக்கியம். ஆனால் கத்தாரிடம் மன்னிப்புக் கேட்டதன் மூலம் காஸாவில் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் சமிக்ஞை கொடுத்துள்ளது" என்று கூறுகிறார் பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான். "நெதன்யாகு ஹமாஸுடனான பேச்சுவார்த்தைக்கு எதிராகவே இருந்தார். காஸாவில் இப்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தலையீடு மட்டுமே இருப்பதாகவும், மற்ற நாடுகள் அனைத்தும் பின்வாங்கிவிட்டதாகவும் அவர் நினைத்தார். இந்தச் சூழ்நிலையில், அவர் கத்தாரில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த முடிவெடுத்தார். இப்போது நெதன்யாகு மன்னிப்பு கேட்டுள்ளார், இதற்கு முன் அவர் ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்புதான் மன்னிப்பு கேட்டிருந்தார். அதாவது, டிரம்ப்பின் அழுத்தத்தாலோ அல்லது ஐ.நா.வில் ஏற்பட்ட எதிர்ப்பாலோ நெதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அவர் சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதற்கான சமிக்ஞையையும் அளித்துள்ளார்," என ஃபஸ்ஸுர் ரஹ்மான் கூறினார். பின்வாங்குகிறாரா நெதன்யாகு? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, டிரம்ப்பின் திட்டத்தில் பாலத்தீன தேசம் குறித்து உறுதியான எதுவும் கூறப்படவில்லை. உள்நாட்டு அளவில் நெதன்யாகு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். "இது நெதன்யாகுவின் கூட்டாளிகள் அறிவித்த நிலைப்பாட்டுக்கு எதிரானது. இதற்காக நெதன்யாகு உள்நாட்டில் விமர்சனத்தைச் சந்திக்க நேரிடும்" என்கிறார் சர்வதேச விவகார நிபுணர் மஞ்சரி சிங். தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைதித் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், காஸா மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட மாட்டார்கள். காஸா மக்கள் தாமாக விரும்பிப் பகுதியைக் காலி செய்வதற்கோ அல்லது திரும்புவதற்கோ சுதந்திரம் இருக்கும் என்று நெதன்யாகு செவ்வாயன்று கூறியிருந்தார். மேலும், காஸாவின் பாதுகாப்பிற்காக சர்வதேசப் படைகளை நிலைநிறுத்துவதற்கான முன்மொழிவும் இதில் அடங்கும். நெதன்யாகு தனது பழைய மற்றும் கடுமையான நிலைப்பாட்டிலிருந்து சற்றுப் பின்வாங்குவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சர்வதேச விவகார நிபுணர் மஞ்சரி சிங், "நெதன்யாகு கடுமையான போக்கை பின்பற்றும் திட்டத்திலிருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது. கத்தார் மீதான தாக்குதலுக்குப் பிறகு நெதன்யாகுவும் இஸ்ரேலிய அரசாங்கமும் தங்கள் நாட்டின் பாதுகாப்பே முதன்மையானது என்று கூறியிருந்தன. இப்போது நெதன்யாகு கத்தார் விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார், மேலும் அமைதித் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார், ஒரு வகையில் அவர் சமரசம் செய்து கொள்வது போல் தெரிகிறது" என்று கூறுகிறார். "இஸ்ரேல் உருவாவதில் முக்கியப் பங்காற்றிய பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும் இஸ்ரேலைத் தவிர்க்க முயன்றன, இந்தச் சூழ்நிலையில் தான் முழுமையாக தனிமைப்படுத்தப்படக் கூடாது என்று நெதன்யாகு நினைத்திருக்கலாம்" என்கிறார் ஃபஸ்ஸுர் ரஹ்மான். சிக்கலில் மாட்டினாரா நெதன்யாகு? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, அக்டோபர் 2023-க்குப் பிறகு காஸாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 66,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அமைதி ஒப்பந்தத்தை நெதன்யாகு முழுமையாக ஏற்றுக்கொண்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டால், அவர் உள்நாட்டில் சிக்கலில் சிக்குவார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உண்மையில், நெதன்யாகுவின் லிகுட் கட்சி பல தீவிர வலதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை நடத்தி வருகிறது. இந்தக் கட்சிகள் காஸாவிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்க விரும்பவில்லை. இந்தக் கட்சிகளில் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சின் கட்சியும் அடங்கும். டிரம்ப்பின் அமைதித் திட்டத்தின் மையத்தில் காஸாவை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது உள்ளது. ஸ்மோட்ரிச் போன்ற தலைவர்களுக்கு இது ஒரு அபாயக்கோடு ஆகும். "நெதன்யாகு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார், ஆனால் இது நடைமுறைக்கு வந்தால், நெதன்யாகு தொடர்ந்து பிரதமராக இருப்பது கடினம். ஏனெனில் அவருக்கு ஆதரவளிக்கும் யூதக் கட்சிகள் காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைக் கைவிட ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நெதன்யாகு அமெரிக்கா செல்வதற்கு முன், அவரது அரசாங்கத்தில் உள்ள ஸ்மோட்ரிச் போன்ற வலதுசாரி அமைச்சர்கள் சில விஷயங்களில் சமரசம் செய்யக் கூடாது என்று கூறியிருந்தனர். இதில் காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்குவது அடங்கும். இந்தக் கட்சிகள் நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான் கூறுகிறார். நெதன்யாகு மீது பணயக் கைதிகளின் குடும்பங்களின் அழுத்தமும் உள்ளது. ஐ.நா.வில் உரையாற்றும்போதும் அவர் பணயக் கைதிகளின் குடும்பங்களை நோக்கியே உரையாற்றத் தொடங்கினார். "பணயக் கைதிகளை விடுவிக்க நெதன்யாகு மீது கடுமையான அழுத்தம் உள்ளது. இந்த அழுத்தம் அவரது பேச்சிலும் தெரிந்தது. மீண்டும் மீண்டும் அவர் பணயக் கைதிகள் பற்றி பேசி, 'நீங்கள் எங்கள் நினைவில் இருக்கிறீர்கள்' என்று கூறினார்" என்கிறார் பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான், ஹமாஸை நம்பினாரா நெதன்யாகு? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தத் திட்டம் பாலத்தீன தேசத்தை உருவாக்குவதைக் குறிக்கவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தினார். இந்தத் திட்டத்திற்கு ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை. இருப்பினும், ஹமாஸ் இந்தத் திட்டத்தை நிராகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உண்மையில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. ஹமாஸ் இஸ்ரேலை நம்புவதும் இல்லை, இஸ்ரேல் ஹமாஸை நம்புவதும் இல்லை. இதற்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டபோதும், அவை அதிகம் பலனளிக்கவில்லை. "ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை. ஹமாஸ் இதை ஏற்றுக்கொண்டால், அது ஆயுதங்களைக் கைவிட்டு தனது கட்டமைப்பை கலைக்க வேண்டும். ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்காது என்று நெதன்யாகு கருதுகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் வாய்ப்பளித்தும் ஹமாஸ் அமைதியை விரும்பவில்லை என்று கூறி, மேலும் தீவிர நடவடிக்கையை நியாயப்படுத்த முடியும்" என்று கூறுகிறார் ஃபஸ்ஸுர் ரஹ்மான், கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் (Carnegie Endowment for International Peace) மூத்த ஆய்வாளரான ஆரோன் டேவிட் மில்லர், இதே கருத்தை ஒரு பகுப்பாய்வில் வெளிப்படுத்தியுள்ளார். "ஹமாஸ் திட்டத்தை நிராகரிப்பதை நெதன்யாகு நம்பியிருப்பது போல் தெரிகிறது. ஹமாஸ் இந்தத் திட்டத்தை நிராகரித்தால், அதிபர் டிரம்ப் கூறியது போல, இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவும் கிடைக்கும்." இதற்கிடையில், "நெதன்யாகுவுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், இந்தச் சமாதானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அவருக்கு உள்நாட்டில் அரசாங்கத்தை நடத்துவது மிகவும் கடினம். அவரது கூட்டாளிகள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள், ஆதரவை விலக்கிக் கொள்வார்கள்" என்று மஞ்சரி சிங் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdxqp55wdx9o

TVK Karur Stampede - நீங்கள் செய்தது நியாயமா Vijay சார்?| Open Letter to தமிழக வெற்றிக் கழகம் விஜய்

1 week 4 days ago
தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னைக்கு, அந்த கூட்ட நெரிசல்ல எங்கள் நிருபர்களும் இருந்தாங்க. அதன் பிறகு களத்துக்கு போன எங்கள் செய்தியாளர்கள், இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி மக்களை சந்திச்சு பேசியிருக்காங்க. அதை பல காணொளிகளா பதிவு பண்ணி இருக்கோம். முதல்ல, இறந்துபோன 41 பேருக்கும் எங்களுடைய ஆழ் மனசுல இருந்து அஞ்சலிய செலுத்துறோம். கரூர் அசம்பாவிதத்தை முழுமையாக observe பண்ணோம் என்கிற அடிப்படையில், இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் மற்றும் தவெக ஆற்றிய எதிர்வினைகள் குறித்து சில கேள்விகள் எங்களுக்கு இருக்கு. அந்த கேள்விகள்தான் இந்த காணொளி. எந்த முன்முடிவும் இல்லாம நாங்க இந்த கேள்விகள முன்வைக்கிறோம்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 4 days ago
சினிமாவில். தொடர்து. கோடி. கோடியாக. சாம்பதிக்க முடியாது. பலர். கோடி. கோடியாக. நட்டமடைந்து. எழும்ப. முடியமால். இருக்கிறார்கள். அது. ஒரு. உறுதியான வருமானம். தராது. ஒருமுறை வரும். மறுமுறை. ஏமாற்றி விடும். இதனை. சீமான். நன்கு. அறிவார். இந்த. புலம்பெயர். பணம். உறுதியான. வருமானம். சீமான். மீது. எனக்கு. எந்த வித. காழ்புணர்ச்சியுமில்லை. நீங்கள். அவரை. இந்தியா. பிரதம். தமிழ்நாட்டு முதல்வர். ஆக. தெரிவு. செய்யலாம். நானும். வாழ்த்துவேன். ஆனால். இலங்கை. தமிழர். பிரச்சனையை. ஊறுகாய். மாதிரி. பயன்படுத்துவதற்க்கு. எப்பவும். எதிர்பபேன். நன்றி வணக்கம். நீங்கள். ஒரு நாள். என் பக்கம். வாருவீர்கள்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 4 days ago
இன்றைக்கு. தேசியத். தலைவரின். திருமணநாள். மற்றும். பாலச்சந்திரனின். பிறந்த. நாள். 29. அல்லது. 39. ஆவது. தமையன் மகன். கார்த்திக். பதிவு. செய்துள்ளார். அது. சரி. இந்த. சீமானை. நீங்கள். நம்புவது. எனக்கு. மிகுந்ந. கவலையளிக்கிறது.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 4 days ago
பணம் சம்பாதிப்பதற்கு அரசியலை விடவும் சினிமா சிறப்பான இடம். அரசியலில் சம்பாதிக்க பல சுத்துமாத்துகள் ஏமாற்றுவேலைகள் செய்யவேண்டும். சினிமா அப்படியல்ல கோடி கோடியாக அனைவரும் பார்த்திருக்க சம்பாதிக்கலாம். அத்தகைய சினிமாவை விட்டுவந்த சீமான் பணம் சம்பாதிக்க வந்தார் என்று சொல்வது ஏற்புடையதல்ல. அவர்மீது மக்களைக் காழ்ப்புணர்ச்சி கொள்ள வைப்பதற்கு இன்று அரசியல் செய்வோரிடம் வேறு காரணங்கள் இருக்கவேண்டும். அதனை அறிந்து தெரிவிப்பதே சாலச்சிறந்தது.🤔

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 4 days ago
திமுக அரசு, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என்பவற்றின் மேல் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளும், எழுப்பப்படும் கேள்விகளும் நியாயமானவையே. 10,000 பேர்களே என்று அனுமதி வாங்கப்பட்டாலும், காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் முன்னரே தோராயமாக எவ்வளவு பேர்கள் வருவார்கள் என்று தெரியாதா என்பதே அரச நிர்வாகத்தின் அடிப்படைத் தவறாகத் தெரிகின்றது.அதற்குப் பின்னர் நடந்தவை எல்லாம் இந்த அடிப்படைத் தவறின் தொடர்வுகளே, தொடர் நிகழ்வுகளுக்கும் அழிவுகளுக்கும் தவெகவும், திமுக அரசுமே பொறுப்பு. ஆனாலும் இதற்கு எந்த தரப்பும் மன்னிப்பும் கேட்கப் போவதில்லை. அதைப் போலவே இதில் நேரடியாக பங்கு இல்லாத மற்றைய தரப்புகள் எல்லாம் தங்களின் சுயலாபம் ஒன்றில் மட்டுமே குறியாகவும் இருக்கப் போகின்றார்கள். கள்ளக்குறிச்சி கல்வராயன்மலைக்கு போகாத தலைவர்கள் எல்லோரும் கரூரில் நின்றதன் காரணம் இதுவே. கரூர் மக்களின் இழப்புக்கு ஈடில்லை. நியாயமும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் எந்த மெத்தனத்திற்கும், அதனால் உண்டாகும் அழிவுகளுக்கும் எவரும் பொறுப்பு கூட ஏற்பதில்லை. அடுத்ததாக விஜயை மட்டுமே நம்பி உள்ள அவரது ரசிகர்களின் நிலை. இவர்கள் தவெக என்னும் அரசியல் கட்சியின் தொண்டர்களே கிடையாது. அங்கு அப்படி ஒரு அமைப்பே கிடையாது. உதாரணமாக, தவெக கரூர் மாவட்டச் செய்லாளர் மதியழகனை காவல்துறை பாண்டிச்சேரியில் வைத்து கைது செய்கின்றார்கள். பின்னர் அவர் அப்படியே காணாமல் போகின்றார். அவரின் மனைவி அழுது புலம்பிக் கொண்டே என் கணவர் எங்கே என்று தேடுகின்றார். ஒரு தவெக வழக்கறிஞர் கூட அந்தப் பெண்ணுடன் இல்லை. தவெக தொண்டர்கள் ஒரு சிறு அமைதியான எதிர்ப்பைக் கூட எங்கேயும் காட்டவில்லை. மதியழகனுக்கு மட்டும் இல்லை, இன்று புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டாலும் இதுவே தான் அங்கே நிலை. ஒரு தவெக தொண்டர் கூட எங்கேயும் எதிர்ப்பு காட்டப் போவதில்லை. ஆதவ் அர்ஜூனா கைது செய்யப்பட்டால் லாட்டரி மார்ட்டின் மத்திய அரசு வரை போய் ஆதவ் அர்ஜூனாவை வெளியே எடுத்துவிடுவார். ஆனால் மற்றைய தவெகவினர் ஒரு கைவிடப்பட்ட நிலையிலேயே, கரூர் மக்களைப் போன்றே, உள்ளார்கள். இறுதியில் வந்த உளவுத்துறை அறிக்கையின் படி, மக்களின் கோபம் இரு தரப்புக்குக்கும் மேலேயே இருந்தாலும், விஜய் மேலேயே அதிகமாக இருக்கின்றது என்கின்றார்கள். அதன் எதிரொலியே திமுகவால் அதிகரிக்கப்பட்டிருக்கும் விஜய்க்கு எதிரான நடவடிக்கைகளும், தொடர் கைதுகளும். எடப்பாடியாரிடம் போய்ச் சேர்வதை விடுத்து வேறு எந்த தெரிவுமே இல்லாத ஒரு நிலை விஜய்க்கு. எடப்பாடியாருக்கும் அது இப்போது தெரியும். முதலில் செய்ய வேண்டியது 'ரோட் ஷோ' என்பதை தமிழ்நாட்டில் முற்றாக தடைசெய்யவேண்டும். அரங்கினுள் மட்டுமே இவர்களின் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 4 days ago
பையன் சார், உங்களை ஒரு சின்ன இடைவெளியின் பின் மீண்டும் இங்கே காண்பதில் மிகவும் சந்தோசம்............❤️. நல்ல அழகான பிள்ளையார் படம்........... அவர் அப்படியே தன்னைப் போலவே உங்களையும் யாழ் களத்தில் என்றும் அமரவைக்கட்டும்............. 🤣.................. ஜக்கம்மா எதிர் அக்கம்மா................. அக்கம்மா அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஜக்கம்மாவின் சொந்தம்..............

‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்

1 week 4 days ago
விஜய் அவர்கள் மற்றவர்களை குறை சொல்வதை விடுத்து முதலில் தன் ரசிகர்களை நல்வழிப்படுத்தட்டும்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

1 week 4 days ago
இந்திய றோ புலனாய்வு அமைப்பினரு…. ஜோதிடர்கள், புடவை வியாபாரம் செய்வது போன்ற போர்வையில் இலங்கையில் தங்கி உளவு பார்க்கின்றவர்கள். முன்பு அப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளது.

‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்

1 week 4 days ago
“விஜய் சுயமாக சிந்திக்கவில்லை; உசுப்பேற்றி பேச வைத்துள்ளனர்” - திருமாவளவன் கருத்து சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விஜய் வெளியிட்ட வீடியோவில் சுயமாக சிந்தித்து பேசியதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். அவர் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “செந்தில் பாலாஜி மட்டுமே குற்றவாளி என்று விஜய் சொல்ல விரும்புகிறாரா? அவர் என்ன வகையான குற்றங்களை செய்தார் என சொல்கிறார். ‘ஆட்களை அனுப்பினாரா? கல் எறிந்தாரா? அதனால் தடியடி நடத்தப்பட்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதா?’ இதெல்லாம் அரசியல் நேர்மையற்ற குற்றச்சாட்டு. இது கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்தான். ஒரு சதுர மீட்டரில் 4 அல்லது 5 பேர்தான் நிற்க முடியும். அங்கே 10 முதல் 15 பேர் நின்றிருக்கிறார்கள். 10 மணி நேரம் காத்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது 100 சதவீதம் கண்கண்ட உண்மை. அதனை மறைத்து சதி என்று சொல்வதும், திமுக அரசு மீது பழி போடுவதும் ஆபத்தான அரசியல். அவருக்கே இது நல்லதல்ல. விஜய் இதனை சுயமாக சிந்தித்து சொன்னதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். விஜய் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும். பாஜக தரப்பிலிருந்து ஒரு குழு வந்துள்ளது. அதற்கான தேவை என்ன? விஜய் மீது தவறு இல்லை, அரசு மீதுதான் தவறு என உடனடியாக அண்ணாமலை பேசுகிறார். இது அவர்களுக்கே எதிராக முடியும். எங்கள் கட்சி தொண்டர்கள் எல்லாம் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால், வழிவிட்டு நிற்பார்கள். ஆம்புலன்ஸ்கள் நோயாளியை அழைக்க செல்லும்போது ஆள் இல்லாமல்தான் போகும். பின்னர் நோயாளியை ஏற்றி ஆளோடு செல்வார்கள். இதெல்லாம் என்ன பேச்சு. இது நாகரீகமான அரசியலா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். “விஜய் சுயமாக சிந்திக்கவில்லை; உசுப்பேற்றி பேச வைத்துள்ளனர்” - திருமாவளவன் கருத்து | he does not think on his own Thirumavalavan opinion vijay karur tragedy video - hindutamil.in

”சிறிபாலவும் ஞானரத்னமும் தாஜுதீனை கொல்லவில்லை”

1 week 4 days ago
Simrith / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 06:23 - 0 - 22 வாசிம் தாஜுதீன் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார். விசாரணைகளின்படி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் அனுராதபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். தாஜுதீன் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். "இந்த குற்றங்களை கிராமத்தில் ஊரில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை. இந்த குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர். அவர்கள் குற்றங்களை மூடி மறைத்தனர். வாசிம் தாஜுதீன் 2012 இல் கொலை செய்யப்பட்டார், 2015 இல் பத்திர மோசடி மற்றும் 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்களா இல்லையா என்பது குறித்த விசாரணைகளின் அடிப்படையில் சட்டம் செயல்படுத்தப்படும்," என்று அவர் கூறினார். இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என்று அமைச்சர் கூறினார். Tamilmirror Online || ”சிறிபாலவும் ஞானரத்னமும் தாஜுதீனை கொல்லவில்லை”
Checked
Mon, 10/13/2025 - 12:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed