1 week 5 days ago
நீங்கள் சொல்வது சரியானது தான். அவர்களுக்கு குழந்தைகளையும் இழுத்து கொண்டு நேரில் சென்று உணவு தண்ணீர் இல்லாமல் பல மணி நேரம் காத்திருந்து விஜய்யை பார்க்க வேண்டுமாம் 🙄
1 week 5 days ago
பையா உங்களின் பூஸ்ட் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தைத் தருகின்றது . ......கந்தப்புவே எதிர்த்தாலும் முதலாவதா வந்து கல்லா கட்டுறம் .........! 👍
1 week 5 days ago
பால் குடிப்பதாயினும் பொறுமை முக்கியம் . .......! 😂
1 week 5 days ago
இவர்கள் பெங்களூரில் இருந்து கிளம்புமுன் தத்தமது ஜாதகத்தைக் கணித்திருக்க வேண்டும் ...........! 😇
1 week 5 days ago
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு! 01 Oct, 2025 | 01:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு) காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செப்டம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். காசா போரை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி உள்ள நேரத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால், இது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடப்பு ஆண்டில் நெதன்யாகு அமெரிக்காவுக்குச் செல்வது இது 4வது முறையாகும். வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கூறினார். பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து உறுதியான தகவல் வெளியாகாத போதும், காசா மற்றும் மேற்கு கரைப் பகுதிகளைத் தன்வசம் எடுத்துக்கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருப்பதாகக் கூறப்படுகிறது. வருங்காலத்தில் காசாவை யார் நிர்வகிப்பது என்பது பற்றியும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், காசா போர் முடிவுக்காக, டிரம்ப் மேற்கொள்ளும் அமைதி முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. டிரம்ப் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்தபோதும், "டிரம்பின் முடிவுக்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவைச் சந்திக்க நேரிடும்" என்று நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தார். இந்நிலையில் காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், "பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றங்களைத் தணிக்க உகந்த அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கிறது மற்றும் ஆதரிக்கிறது. காசாவில் உடனடி மற்றும் விரிவான போர்நிறுத்தத்தை அடையவும், அனைத்து கைதிகளையும் விடுவிக்கவும், உள்ளூர் மனிதாபிமான நெருக்கடியை அவசரமாகத் தணிக்கவும் சீனா அனைத்து தொடர்புடைய தரப்பினரையும் அழைக்கிறது.” என்றார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்பின் முயற்சிக்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. டிரம்புக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவாக நிற்கின்றன. எகிப்து, ஜோர்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், "போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன வழிகள் உள்ளனவோ, அவற்றை மேற்கொள்ள டிரம்ப் முழு அளவில் தயாராக இருக்கிறார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார். டிரம்பின் மத்தியஸ்தம் மூலம் காசாவில் அமைதி ஏற்படுமா, அல்லது நெதன்யாகுவின் ஆக்கிரமிப்பு நோக்கம் வெற்றி பெறுமா என்ற கேள்விகளுடன் மத்திய கிழக்கு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. https://www.virakesari.lk/article/226574
1 week 5 days ago
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது! 01 Oct, 2025 | 12:46 PM இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, ஜோதிட நிலையம் நடத்திவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில், இந்தியாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று வாடகை வீட்டில் குடியமர்ந்து ஜோதிட நிலையம் நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (30) சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் மூவரும் கணவன் - மனைவி மற்றும் பிள்ளை என்பதும் அவர்கள் இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, பருத்தித்துறை பகுதிக்குச் சென்று விடுதி ஒன்றில் தங்கி, ஜோதிடம் கூறி வந்த நிலையில், அண்மையில் தும்பளை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு பெற்று, அங்கு குடியமர்ந்து, அவ்வீட்டை ஜோதிட நிலையமாக மாற்றி ஜோதிடம் கூறி வந்ததாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/226569
1 week 5 days ago
1 week 5 days ago
கவலைய விடுங்கோ தலைவரே நீங்கள் போட்டில கலந்து கொண்டது மகிழ்ச்சி இந்த உலக கிண்ண மகளிர் போட்டி யாழ் களத்தில் முதல் முறை நடத்துவதால் சிறு தடுமாற்றம் அடைந்து விட்டீங்கள்............... போட்டியில் நீங்கள் கடசி இடமோ கடசிக்கு முதல் இடமோ அல்லது அதற்க்கு மேலை வந்தாலும் நீங்கள் தான் வெற்றியாளர்..............உங்களுக்கு மகளிர் கிரிக்கேட்டை பற்றி பெரிய அனுபவம் இல்லாட்டியும் போட்டியில் கலந்து கொண்டது தனி கெத்து👍...............................
1 week 5 days ago
பங்கு பற்ற முடியமைக்கு வருந்துகிறேன்.பங்கு பற்றி கலக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
1 week 5 days ago
இண்டைக்கு நியுசிலாந் அணிக்கு பெரிய அடி காத்து இருக்கு................50ஓவர் விளையாட்டில் நியுசிலாந் மகளிர் பெரிசா சாதிச்சது கிடையாது அவுஸ்ரேலியா மகளிர் பெரிய புள்ளியோட வெல்லுவினம்👍...........................
1 week 5 days ago
நான்சொன்னது சீமானின் விஐயலட்சிமி சம்பந்தப்பட்ட வழக்கில். மட்டுமே. தமிழக அரசு மத்தியரசு நீதிமன்றம். அனைத்தும். சீமான். சார்பாக. அவரது விருப்பம்போல். நடக்கிறது. மற்றும். பிரபாகரன். சீமானுக்கு. தலைவராக இருக்கலாம். ஆனால். சீமான். தலைவரின். சீடனாக. ்தொண்டனாக அவரை பின்பற்றுபவராக. அவரது அமைப்பில் படைவீரனாக. இருக்க முடியாது. ்்்்்எனது நண்பன். ஒருவன். புலிகள். காலத்தில். அவனது கடையில வேலை செய்த. பெண்ணுடன் தொடர்பிலிருந்து. பிள்ளை உண்டாகி விட்டது. பெண் சாதி குறைந்தவர். பெண்ணின். பெற்றேர். புலிகளிடம் புகார் அளித்து விட்டார்கள் அவனை புலிகள் கூப்புட்டு விசாரித்தார்கள். அவன் தான். தான். அப்பா என்று விட்டான். அவனது் குடும்பத்தில் ஒன்பது. பேர். சகோதரங்கள். மற்றவர்கள். வெளிநாட்டில். புலிகள். அவர்களை. காலியாணம். செய்ய. சொல்லி. தீர்ப்பு. வழங்கிவிட்டார்கள். அவனது. சகோதரங்கள். ஒரு கிழமையில். அவனை. ஜேர்மனிக்கு. எடுத்துவிட்டார்கள். இங்கே. அவனது அரசியல். தஞ்சம். எற்கப்பட்டு. பாஸ்போட். கொடுத்துவிட்டார்கள். வேலையும். எடுக்க உதவினார்கள். அவன். சகோதரங்களை விட்டு பிரிந்து. அவளை குப்பிட்டு. மேலும். ஒரு பிள்றையைப் பெற்று வாழ்கிறான் ஊராவர்கள். அவனுடன். உறவு கொண்டாடுவது இல்லை புலிகள். அமைப்பு. இவருக்கு என்ன. தீர்ப்பு வழங்கும்.?.?? டொன்மார்க். கார்த்திக். மனேகரன். இவர். தலைவரின். தமையனின் மகன். முகதூலைப்பாருங்கள். அங்கிருந்து. கோடி கோடியாகப். பணம் அனுப்புகிறார்கள். 2009 ஆண்டில். 25;000குரோணர். அவசார கால நாதி பெறப்பட்டது. அந்தப் பணம். சீமானுக்கு. போகிறது. நான் சொல்லவில்லை. தலைவரின். தமையன். மகன். கார்த்திக். பதிவிலுண்டு. இதை நான் சொல்லவில்லை. சீமான். விஐயலட்மி. வழக்கை மட்டுமே. குறிப்பிட்டேன்
1 week 5 days ago
வயது கூட தான் ஆனால் இவான்ட பந்து வீச்சு எனக்கு மிகவும் பிடிச்சு இருக்கு...................இந்த உலக கோப்பையோட பல இலங்கை மகளிர் ஓய்வை அறிவிப்பினம் 19வயதுக்கு உள் பட்ட இலங்கை மகளிர் நல்லா விளையாடுகினம் ஆன படியால் அடுத்த வருடம் இவர்களின் இடத்தை இளம் மகளிர் பிடிப்பினம்👍.............................
1 week 5 days ago
இன்னொரு முன்னனி இந்தியா மகளிர் இந்த உலக கோப்பையில் விளையாட வில்லை , அந்த இளம் மகளீரும் அணியில் இடம் பிடித்து இருந்தால் இந்தியா அணிக்கு கூடுதல் பலமாய் இருந்து இருக்கும்..............காயம் காரனமாக அணியில் சேர்க்க பட வில்லை☹️.....................
1 week 5 days ago
இலங்கை மகளிர் ஒரு ஓவரில் மூன்று முன்னனி விக்கேட்டை எடுத்து இருந்தா..................விளையாட்டை மேல் ஓட்டமாய் நேரடியாக பார்த்துட்டு இருந்தேன்...............6விக்கேட் போன கையோட இன்னும் ஒரு விக்கேட்டை எடுத்து இருந்தா இந்தியா மகளிர 200ரன்னுக்கை மடக்கி இருக்கலாம் , முதல் மழை வந்து கிட்ட தட்ட ஒன்டர மனித்தியாலம் விளையாட்டு தடை பட்டட்து , இரண்டாவது தடவை மழை வந்து ஒரு ஓவர் மீண்டும் குறைக்கப் பட்டது இந்தியா மகளிர் இலங்கை மகளிர்களை விட திறமையா விளையாடக் கூடியவை , நீங்கள் சொல்வது மிக சரி👍.............................
1 week 5 days ago
உண்மை!இப்படிப்பட்ட உளவியல் பாதிப்புள்ள ஒருவரால் எப்படி மக்களை வழிநடத்த முடியும்.முதலில் விஜை ரசிகர்மன்றத்தலைவரை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தூக்கி விட்டு விஜயகாந் பண்ருட்டி இராமச்சந்திரனை வைத்திருந்தது போல அரசியல் அறிவு கொண்ட அரசியல் சாணக்கியரை பொதுச்செயராளராக அமர்த்த வேண்டும்.
1 week 5 days ago
நான் அந்த காலத்தில் இருந்தே மகளிர் கிரிக்கேட்டை பார்த்து வருகிறேன் கந்தப்பு அண்ணா செம்பாட்டன் சொல்ல வருவது போன மாதம் இந்தியா மகளிர் எதிர் அவுஸ்ரேலியா மகளிர் விளையாடின ஒரு விளையாட்டில் 400க்கு மேல அவுஸ்ரேலியா மகளிர் ரன்ஸ் அடிச்சு இருந்தினம் அடுத்து ஆடிய இந்தியா 413 ரன்ஸ் அடிச்சால் வெற்றி , இந்தியா மகளிர் விட்ட பாடு இல்லை ஒரு கட்டத்தில் 413 ரன்ஸ் அடிச்சு வெல்லும் வாய்ப்பு இருந்தது , ஆனால் கடசியில் விக்கேட்ட தொடர்ந்து இழக்க வெற்றி அவுஸ்ரேலியா 43ரன்ஸ்சால் வென்று விட்டினம் தொடர்ந்து உலக கோப்பையில் அவுஸ்ரேலியா மகளிர் அணி வெல்வதில் எனக்கு பெரிய விருப்பம் கிடையாது இந்த முறை இந்தியாவில் நடப்பதினால் இந்தியா மகளிர் கோப்பைய வெல்ல முயலுவினம்...............எனது தெரிவு இந்தியா மகளிர்🙏👍.....................
1 week 5 days ago
நல்லதொரு கட்டுரை பலதை விளங்கி கொள்ள உதவியாக இருந்தது நன்றி.
1 week 5 days ago
உண்மை தான் கரூரில் அப்படி செய்திருந்தால் பழனிசாமியும் பாஜகவும் திமுக பொலிஸ் அநீதி என்று தீவிரமாக குரல் கொடுத்து விஜய் இரசிகர்கள் வாக்கை அள்ள முயற்சிப்பார்கள். கரூரில் விஜய்யை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தை உயரத்தில் இருந்து எடுக்கபட்ட காணொளிகளில் மக்கள் கூட்டத்தின் நெருக்கத்தை பார்க்கும் போது நடுக்கம் தான் ஏற்படுகின்றது. இதற்கு தங்கள் குழந்தை போதாது என்று சகோதரன் குழந்தை சகோதரி குழந்தையையும் தூக்கி கொண்டு வந்திருக்கின்றார்கள். பழனிசாமியும் பாஜகவும் பொலிஸ் பாதுகாப்பு குறைபாடு தான்இறப்பு துயரத்திற்கு காரணம் என்கின்றார்கள்
1 week 5 days ago
https://www.facebook.com/share/p/1CgNcrNBrr/?mibextid=wwXIfrவிஜயின் முதல் பிரச்சாரக்கூட்டம் பற்றி எழுதும் போதே கூட்டத்தை பார்த்து பயமாக இருக்கிறது, ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என்று எழுதியிருந்தேன். விஜய்க்கு கூடுகிற கூட்டம், மற்றும் கட்டுப்பாடற்ற அவரது ரசிகர்கள் செய்யும் காரியங்களை பார்த்த பலரும், இது போன்ற அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்கள். அதே போலவே கரூர் சம்பவம் மனதை உலுக்கி விட்டது. வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு சம்பவமாக பதிந்து விட்டது. விஜய்க்கு கூடும் கூட்டம் தான் அவருடைய அரசியல் முதலீடு. கட்டுப்பாடில்லாத கூட்டம் கூடுவதை விஜயும் விரும்புகிறார். அதனால் தான் எந்த இடத்திலும் தன் ரசிகர்களை கட்டுப்படுத்த அவர் விரும்புவதில்லை. ரசிகர்கள், தொண்டர்கள் துன்பப்படுவதையோ, பொதுமக்கள் துன்பப்படுவதையோ பற்றி விஜய் கவலைப்படுவதே இல்லை. இந்த விமர்சனங்கள் எல்லாம் விஜய்க்கு தெரியுமா என்பதே சந்தேகம் தான். கட்சியில் எந்த இரண்டாம் கட்ட தலைவர்களும் இல்லை என்ற நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அருஜுனா, ஜான் சொல்வதை தான் அவர் நம்ப போகிறார். அப்படியே தெரிந்தாலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த, ரசிகர்களை ஒழுங்குபடுத்த விஜய் விரும்பவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. ரசிகர்களும் நாம் இப்படி நடந்து கொள்வதை தான் விஜயும் விரும்புகிறார் என்று நினைத்து மேலும் மேலும் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் கலெக்ஷன் ரிப்போர்ட் சொல்வதை போல், களத்தில் என்ன நடந்தாலும் மாஸ் காட்டிட்டோம் என்பது மட்டும் தான் விஜய் மற்றும் அவரது ரசிகர்களின் பிரச்சாரமாக இருக்கிறது. விஜய் எந்த ஊருக்கு சென்றாலும் அவரை பார்ப்பதற்காக வரும் ரசிகர்களை தன்னுடைய அரசியலுக்கு கிடைக்கும் ஆதரவாக காட்டிக்கொள்வதற்கு தான் விஜய் முயற்சி செய்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் பேச வேண்டிய இடத்தில மட்டும் வேனில் இருந்து வெளியே வருகிறார். உதாரணமாக கரூரையே எடுத்துக் கொண்டால் பைபாஸ் சாலையில் இருந்து அவர் பேசவேண்டிய இடத்திற்கு வர வேண்டும். பைபாஸிலேயே மிகப்பெரிய கூட்டம் நிற்கிறது. அங்கேயே அவர் வேனில் இருந்து வெளியே வந்து கை காட்டியிருந்தால் விஜயை பார்த்த சந்தோஷத்தில் பாதி கூட்டம் கலந்திருக்கும். ஆனால் விஜய் அதை செய்வதில்லை. திருச்சியிலும் அதுதான் நடந்தது. வேனிற்குள்ளேயே அமர்ந்து கொள்வதால் பொது மக்களால், ரசிகர்களால் அவரை பார்க்க முடிவதில்லை. இவ்வளவு தூரம் வந்துட்டோம், அவர் பேசற இடத்துல அவரை பார்த்துட்டு போயிடுவோம் என்று மொத்த கூட்டமும் அவர் வாகனத்தின் பின்னாலேயே வருகிறது . நாமக்கல்லில் இருந்து அவர் பின்னால் வந்த கூட்டம், பைபாஸ் சாலையில் நின்றிருந்த கூட்டம், அவர் பேசும் இடத்தில ஏற்கனவே காத்திருக்கும் பெருங்கூட்டம் என அனைத்தும் சேர்ந்து யாராலும் கட்டுப்படுத்த முடியாத கூட்டமாக மாறுகிறது. எல்லா கூட்டமும் ஒரே இடத்தில கூடிய பிறகு விஜய் வெளியே வருகிறார். இதைத்தான் விஜய் விரும்புகிறார். குறைந்த பட்சம் பைபாஸ் சாலையில் இருந்து அவர் பேசும் இடம் வரை வேனில் நின்று கொண்டு கையசைத்து வந்திருந்தால் கூட இவ்வளவு கூட்டம் கூடியிருக்காது. ஆனால் அதை செய்ய விஜய்க்கு மனமில்லை. விஜயுடைய ஒரே டார்கெட் கூட்டம். அதனால் தான் தாமதமாக வருகிறார். காவல்துறை என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலை தான் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இருக்கிறது. அதனால் தான் திருச்சியில் தடையை மீறி ரோட் ஷோ நடத்தினார். சாலையில் இறங்கிய பிறகு யாராலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது விஜய்க்கும் தெரியும். ஒருவேளை காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் அதையும் விஜய் தன்னுடைய அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வார். அந்தளவு சுயநலமாக சிந்திக்கிறார். அதே போல் தன் ரசிகர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவும், அவர்களை ஒழுங்குபடுத்தவும் விஜய் தயாராக இல்லை. ஏனென்றால் அவரது ரசிகர்கள் செய்யும் முட்டாள்தனங்கள் கூட அவருக்கு விளம்பரமாக மாறும் காலமிது. இப்படிப்பட்ட ஒரு கூட்ட த்தை கையில் வைத்திருக்கிறோம் என்பதை விஜய் பெருமையாக நினைக்கிறார். சமூக வலைத்தளங்களில் நான் பார்த்த வரையில் ஒரு விஜய் ரசிகர் கூட இறந்து போன 40 உயிர்களுக்காக கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலை எல்லாம் விஜய்க்கு கெட்ட பெயர் வந்து விடுமா? கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடுமா? விஜயுடைய அரசியலுக்கு சிக்கல் வந்துவிடுமா என்பது மட்டும் தான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பது போல் சுயநலமான தலைவனுக்கு சுயநலமான தொண்டர்கள். இதோடு அரசியலை விட்டு ஒதுக்கினால் தமிழ்நாடு தப்பிக்கும்.ஏனென்றால் விஜயால் ஒருபோதும் மக்களுக்கான அரசியலை செய்ய முடியாது. https://www.facebook.com/share/v/17CgqSJ4mm/?mibextid=wwXIfr
1 week 5 days ago
பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பணம் adminSeptember 30, 2025 யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/220984/
Checked
Mon, 10/13/2025 - 18:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed