புதிய பதிவுகள்2

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

1 week 5 days ago
இந்திய றோ புலனாய்வு அமைப்பினரு…. ஜோதிடர்கள், புடவை வியாபாரம் செய்வது போன்ற போர்வையில் இலங்கையில் தங்கி உளவு பார்க்கின்றவர்கள். முன்பு அப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளது.

‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்

1 week 5 days ago
“விஜய் சுயமாக சிந்திக்கவில்லை; உசுப்பேற்றி பேச வைத்துள்ளனர்” - திருமாவளவன் கருத்து சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விஜய் வெளியிட்ட வீடியோவில் சுயமாக சிந்தித்து பேசியதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். அவர் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “செந்தில் பாலாஜி மட்டுமே குற்றவாளி என்று விஜய் சொல்ல விரும்புகிறாரா? அவர் என்ன வகையான குற்றங்களை செய்தார் என சொல்கிறார். ‘ஆட்களை அனுப்பினாரா? கல் எறிந்தாரா? அதனால் தடியடி நடத்தப்பட்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதா?’ இதெல்லாம் அரசியல் நேர்மையற்ற குற்றச்சாட்டு. இது கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்தான். ஒரு சதுர மீட்டரில் 4 அல்லது 5 பேர்தான் நிற்க முடியும். அங்கே 10 முதல் 15 பேர் நின்றிருக்கிறார்கள். 10 மணி நேரம் காத்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது 100 சதவீதம் கண்கண்ட உண்மை. அதனை மறைத்து சதி என்று சொல்வதும், திமுக அரசு மீது பழி போடுவதும் ஆபத்தான அரசியல். அவருக்கே இது நல்லதல்ல. விஜய் இதனை சுயமாக சிந்தித்து சொன்னதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். விஜய் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும். பாஜக தரப்பிலிருந்து ஒரு குழு வந்துள்ளது. அதற்கான தேவை என்ன? விஜய் மீது தவறு இல்லை, அரசு மீதுதான் தவறு என உடனடியாக அண்ணாமலை பேசுகிறார். இது அவர்களுக்கே எதிராக முடியும். எங்கள் கட்சி தொண்டர்கள் எல்லாம் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால், வழிவிட்டு நிற்பார்கள். ஆம்புலன்ஸ்கள் நோயாளியை அழைக்க செல்லும்போது ஆள் இல்லாமல்தான் போகும். பின்னர் நோயாளியை ஏற்றி ஆளோடு செல்வார்கள். இதெல்லாம் என்ன பேச்சு. இது நாகரீகமான அரசியலா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். “விஜய் சுயமாக சிந்திக்கவில்லை; உசுப்பேற்றி பேச வைத்துள்ளனர்” - திருமாவளவன் கருத்து | he does not think on his own Thirumavalavan opinion vijay karur tragedy video - hindutamil.in

”சிறிபாலவும் ஞானரத்னமும் தாஜுதீனை கொல்லவில்லை”

1 week 5 days ago
Simrith / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 06:23 - 0 - 22 வாசிம் தாஜுதீன் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார். விசாரணைகளின்படி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் அனுராதபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். தாஜுதீன் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். "இந்த குற்றங்களை கிராமத்தில் ஊரில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை. இந்த குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர். அவர்கள் குற்றங்களை மூடி மறைத்தனர். வாசிம் தாஜுதீன் 2012 இல் கொலை செய்யப்பட்டார், 2015 இல் பத்திர மோசடி மற்றும் 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்களா இல்லையா என்பது குறித்த விசாரணைகளின் அடிப்படையில் சட்டம் செயல்படுத்தப்படும்," என்று அவர் கூறினார். இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என்று அமைச்சர் கூறினார். Tamilmirror Online || ”சிறிபாலவும் ஞானரத்னமும் தாஜுதீனை கொல்லவில்லை”

அளவுக்கு அதிக கடன்சுமையால் வன்னியில் பெண்கள் உயிர்மாய்ப்பு; அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டு!

1 week 5 days ago
கடன்தொல்லை காரணமாக, வன்னியில் பெண்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பது அதிகரித்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பெண்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச் சின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டுக்கு கூடுதலான வருவாய் ஈட்டித்தருபவர்களாக பெண்கள் காணப்பட்ட போதிலும், சில மாவட்டங்களில் பெண்களின் வாழ்க்கை நிலை மிகவும் பின்னடைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக வன்னி மாவட்டத்தில் பெண்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். கடன்கள் காரணமாக உயிர்மாய்க்கும் பெண்களின் எண்ணிக்கை வன்னியில் அதிகளவில் உள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் இயலுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். கடந்த வருடம் 3 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்ட பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று சிறுவர் அதிகாரசபை கூறியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையையும் விட அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கச் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ஏனெனில், பலர் பல்வேறு காரணங்களுக்காக முறைப்பாடுகளை வழங்காமல் விட்டிருக்கலாம் - என்றார். அளவுக்கு அதிக கடன்சுமையால் வன்னியில் பெண்கள் உயிர்மாய்ப்பு; அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டு!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

1 week 5 days ago
யாழ்ப்பாணம் 4 மணி நேரம் முன் பருத்தித்துறையில் சட்டவிரோதமாக இயங்கிய சோதிட நிலையம் அகற்றம்! பருத்தித்துறையில் இந்தியாவைச் சேர்ந்தவர்களால் அனுமதிபெறாது சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட சோதிட நிலையம் ஒன்று பொலிஸாரால் நேற்றுமுன்தினம் முற்றுகையிடப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இந்தியா, பெங்களூரைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து, பருத்தித்துறை தும்பளை வீதியில் உள்ள தங்ககம் ஒன்றில் ஒரு மாதத்துக்கு மேலாக தங்கியிருந்துள்ளனர். பின்னர் இரண்டு வாரத்துக்கு முன்னதாக அதே பகுதியில் வீடொன்றை வாடகைக்குப் பெற்று அங்கு சோதிட நிலையத்தை நடத்தியுள்ளனர். தகவலறிந்த நகரசபைத் தலைவர் அனுமதி பெற்று நிலையத்தை அமைக்குமாறும், அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தினார். எனினும் அவர்கள் அங்கிருந்து வெளியேறாததனால் பொலிஸாரின் உதவியுடன் அங்கு சென்று அவர்களது ஆவணங்களைப் பரிசோதித்தபோது அவர்கள் ஆவணங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமாக நிலையத்தை நடத்தியமை உறுதிப்படுத்தியதை அடுத்து அவர்களை எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றினர் . பருத்தித்துறையில் சட்டவிரோதமாக இயங்கிய சோதிட நிலையம் அகற்றம்!

‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டேன்’ - டிரம்புடனான பேச்சுவார்த்தையின் பின் நெதன்யாகு ஆவேசம்

1 week 5 days ago
01 Oct, 2025 | 12:39 PM அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாட்டுக்குத் திரும்பிய நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் திட்டம் குறித்து அவர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். டெல் அவிவ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கவுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த நெதன்யாகு, "பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்" என ஆவேசமாகக் கூறினார். நெதன்யாகு மேலும் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்சத் திட்டத்திற்கு மட்டுமே இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது என்றார். அவர் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திப் பேசியபோது, "போர் நிறுத்தம் வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. அதற்கு ஒருபோதும் தனிநாடு அங்கீகாரம் அளிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வைத்த காசா அமைதித் திட்டத்தை ஹமாஸ் மறுபரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரச் சில நாட்கள் எடுக்கும் என்றும், அதன்பின்னர் தான் இதற்கு முழுமையான தீர்வு காணப்படும் என்றும் ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226570

கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மயங்கிய பாடசாலை மாணவனுக்கு மூளை பாதிப்பு ; தந்தை பொலிஸில் முறைப்பாடு!

1 week 5 days ago
கொழும்பு நீச்சல் கழகத்திற்கு (Colombo Swimming Club) எதிராக, கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். பாடசாலை மாணவனின் தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாவது, எனது மகன் கொழும்பு நீச்சல் கழகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது எனது மகன் நீச்சல் தடாகத்தில் விளையாடியுள்ள நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து எனது மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்திய பரிசோதனையில் மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. மகனுக்கு எவ்வளவு நேரம் ஒட்சிசன் வழங்கப்பட்டது, அம்புலன்ஸ் எப்போது வந்தது என வைத்தியர்கள் கேட்ட கேள்விகளுக்கு எங்களிடம் பதில் இல்லை. ஏனென்றால், கொழும்பு நீச்சல் கழகத்தின் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை எங்களிடம் வழங்கவில்லை. அவர்களிடம் சிசிடிவி கமராக்களும் இல்லை. எனது மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டமைக்கு கொழும்பு நீச்சல் கழகத்தின் கவனக்குறைவே காரணம். எனவே நான் இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தேன். எனது மகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அந்த தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மயங்கிய பாடசாலை மாணவனுக்கு மூளை பாதிப்பு ; தந்தை பொலிஸில் முறைப்பாடு! | Virakesari.lk

சிறுவர்களின் பாதுகாப்புக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக செயல்படுவோம் - பொலிஸ்

1 week 5 days ago
இன்று சர்வதேச சிறுவர்கள் தினம் ! சரணடையச் சொன்னார்கள், பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், சாப்பிட பிஸ்கட் கொடுத்தார்கள் அப்புறம் சுட்டுக் கொன்றார்கள். தோழர் பாலன்

சர்வதேச நீதி கோரி யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

1 week 5 days ago
சர்வதேச நீதி கோரி யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் நிறைவு 01 Oct, 2025 | 06:27 PM வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (1) நடைபெற்றது. யாழ். செம்மணியில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் இன்று வரை முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் இறுதி நாளான இன்றைய தினம் பகல் 1 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீப்பந்தங்களை ஏந்தி நின்றனர். அதேவேளை சர்வதேச சிறுவர் தினத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரியும் கோஷங்களை எழுப்பினர். உள்நாட்டு யுத்தத்தின்போது நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் “அணையா விளக்கு” பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பித்தனர். இதில் கலந்துகொண்டவர்கள் “சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம்”, “தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம்” என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். https://www.virakesari.lk/article/226587

கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு காவல்துறையா அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களா?

1 week 5 days ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 1 அக்டோபர் 2025, 01:52 GMT கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 2 தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு தெளிவான விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். "ஒருநபர் ஆணையம் விசாரணையை அறிக்கை கிடைத்த பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்பது உறுதி செய்யப்படும்," எனத் தெரிவித்தார் ஸ்டாலின். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெங்களூரு ஆர்சிபி வெற்றிக் கொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். கரூரைப் போலவே, கடந்த ஜனவரியில் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 37 பேரும் (பிபிசி புலனாய்வில் 82 பேர் பலியானது தெரியவந்தது) பெங்களூருவில் ஜூன் மாதம் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேரும் உயிரிழந்தனர். இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? கடந்த காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் யார்யார் தண்டிக்கப்பட்டார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கரூரில் என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? கருர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 105, 110, 125 பி, 223 மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, அலட்சியத்தால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது, சட்டப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியது போன்றவற்றை குறிக்கின்றன. பட மூலாதாரம், Getty Images அனுமதி பெறும் நடைமுறை என்ன? ஒரு கட்சி அல்லது அமைப்பு பொது நிகழ்ச்சி நடத்த விரும்புகிறதென்றால் அவர்கள் முதலில் விருப்பமான இடங்களைக் குறிப்பிட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை தகவல்கள் என்னென்ன? நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வருவார்கள்? நிகழ்ச்சிக்கு முடிவு செய்யப்பட்டுள்ள இடங்கள் எந்த நேரத்திற்குள் நிகழ்ச்சி நடத்தப்படும்? என்னென்ன வசதிகள் செய்து தரப்படும்? எத்தனை வாகனங்கள் வரும், வாகனங்களுக்கான நிறுத்துமிடம் எங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? ஒவ்வொரு காவல்நிலையத்திலும் பார்ட் 4 என்கிற பதிவு பராமரிக்கப்படும். அதில் அந்த சரகத்திற்கு உட்பட்ட கடந்த கால நிகழ்வுகள் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் இருக்கும். அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்கின்ற இடத்தில் நிகழ்ச்சியை சுமூகமாக நடத்த முடியுமா என்பதை பொறுத்து இடம் தேர்வு செய்து அனுமதி வழங்கப்படும். பரப்புரையைத் தாண்டி பேரணி நடத்தப்படுகிறது என்றால் அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி. "பேரணி எந்த இடத்தில் தொடங்கி எங்கு முடிவடைகிறது, எத்தனை மணிக்கு தொடங்கி எப்போது முடிவடையும், எந்த வழித்தடத்தில் பேரணி நடத்தப்பட உள்ளது, எத்தனை பேர் வர உள்ளார்கள்? என்பன போன்ற தகவல்களை வழங்க வேண்டும். காவல்துறை அந்த இடங்களின் தன்மை, போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கான சாத்தியமான இடையூறுகள் போன்றவற்றை ஆராய்ந்து தான் அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ செய்வார்கள்." என்றார் அவர். ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு என்ன? நிகழ்ச்சிக்காக அனுமதி பெறுகிற போது ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிப்பது ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பு என்கிறார் கருணாநிதி. அரசியல் நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும், அதனை தீவிரமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். "நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தண்ணீர், உணவு, கழிப்பிடம், நிழற்குடை, போதுமான இடவசதிகள், நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை சமாளிக்க தன்னார்வலர்கள் போன்றவற்றை ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்." என்றார் கருணாநிதி. ஒரே இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வெவ்வேறு இடங்களில் பெரிய திரைகள் அமைத்து ஒளிபரப்பு செய்வது, நேரலை செய்வது போன்ற ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ளலாம் என்று சில பரிந்துரைகளையும் அவர் முன்வைத்தார். பட மூலாதாரம், Karunanidhi படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி காவல்துறையின் பொறுப்பு என்ன? நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதோடு, தேவையான கட்டுப்பாடுகளை விதித்து முறையான பாதுகாப்பு வழங்குவது காவல்துறையின் முதன்மையான கடமை என்கிறார் கருணாநிதி. காவல்துறையின் பொறுப்புகளை விளக்கிய அவர், "கூட்ட நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவை தான் காவல்துறையின் முதன்மையான பொறுப்புகள். நிகழ்ச்சி நடைபெறும் இடம் மட்டுமல்லாது அதனை ஒட்டியுள்ள இடங்களை ஆராய்வதும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூட்டம் அதிகமாகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பதும் காவல்துறையின் பணி" என்றும் தெரிவித்தார். நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? நெரிசல் ஏற்பட்டால் அதற்கு இரண்டு தரப்புக்குமே பொறுப்புண்டு என்கிறார் கருணாநிதி. கடந்த கால கூட்ட நெரிசல் சம்பவங்களில் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரிபரந்தாமன். "நிகழ்ச்சி நடத்துவது என்பது இரு தரப்பின் பொறுப்பு என்கிறோமோ அதே போல நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டால் அதை இரு தரப்பின் தோல்வியாகவே பார்க்க வேண்டும்." என்று கூறுகிறார் கருணாநிதி. வருகின்ற கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தவறினால் ஒருங்கிணைப்பாளர்கள் தான் பொறுப்பாவார்கள் எனக் கூறும் அவர் காவல்துறையும் தனக்கு பொறுப்பில்லை என்று தட்டிக்கழிக்க முடியாது என்கிறார். "காவல்துறைக்கு உளவு அறிக்கையின் மூலம் எத்தனை பேர் கூடுவார்கள் என்கிற கணிப்பு இருக்கும். அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவார்கள் அல்லது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் காவல்துறை நிகழ்ச்சிக்கு முன்பாகவோ அல்லது நிகழ்ச்சியின்போதோ தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார். இரு தரப்பிலிருந்தும் ஒலி பெருக்கிகள் மூலம் முறையான அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Hariparanthaman படக்குறிப்பு, ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரிபரந்தாமன் விசாரணை எப்படி நடக்கும்? கூட்ட நெரிசல் வழக்குகளை விசாரிப்பதும் குற்றத்தை நிரூபிப்பதும் கடினமானது என இருவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் முன்பிருந்ததைவிட விசாரணை தற்போது நவீனமடைந்துவிட்டது என்கிறார் கருணாநிதி, "நிகழ்ச்சி நடத்த யார் பெயரில் அனுமதி பெறப்படுகிறதோ, யார் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளார்களோ அவர்களிடம் முதலில் விசாரணை நடத்தப்படும். அதோடு கூட்ட நெரிசல் எதனால் நடைபெற்றது, அதற்கு யார் காரணம், யாராவது ஒருவரின் குறிப்பிட்ட செயல் காரணமா என்கிற நோக்கிலும் விசாரணை நடத்தப்படும். நிகழ்ச்சியின் முழு காணொளி பதிவுகள் இப்போது கிடைக்கின்றன, நேரலை செய்யப்படுகிறது, சிசிடிவி காட்சிகள் உள்ளன, நேரடி சாட்சிகளின் பதிவுகள் உள்ளன. இவையெல்லாம் விசாரணையை எளிமையாக்கும்." என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் நடத்திய பல நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார் ஹரிபரந்தாமன். "சட்டப்பூர்வமாக பார்த்தால் கூட்ட நெரிசல் வழக்குகளும் சாலை விபத்து வழக்குகளைப் போன்றது தான். கடந்த ஆண்டு தான் மெரினாவில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் யாரும் விசாரிக்கப்பட்டதாகவோ தண்டிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில் அலட்சியம் தான் முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் அதனை நிரூபிப்பது கடினம்." என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly17055x1vo

சிறுவர்களின் பாதுகாப்புக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக செயல்படுவோம் - பொலிஸ்

1 week 5 days ago
01 Oct, 2025 | 02:41 PM அனைத்து சிறுவர்களுக்கும் அன்பும் பாதுகாப்பும் நிறைந்த, வளமான வாழ்க்கையை உருவாக்குவதற்காக தொடர்ந்து பாடுபடுவது எமது கடமையாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்து சிறுவர்களுக்கும் உலக சிறுவர் தின வாழ்த்துக்களை முன்வைத்து பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் நமது எதிர்காலம். அவர்களின் பாதுகாப்பும் நலனும் நமது முக்கிய பொறுப்பாகும். சிறந்த கல்வி, பாதுகாப்பான சூழல், நற்பண்பு வளர்ச்சிக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகள் வழங்குவதே இலங்கை பொலிஸின் நோக்கம். எல்லா சிறுவர்களும் நலமுடன், பாதுகாப்புடன் வளர வேண்டும் என்பது எமது முக்கிய நோக்கமாகும். சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அவர்கள் கனவுகள், ஆசைகள் நிறைவேற உதவுவதே எமது கடமை. இன்று சிறுவர் தினத்தில், நாம் அனைவரும் குழந்தைகளுக்கு ஒரு நன்மையான, அன்பான, பாதுகாப்பான சூழலை உருவாக்க முனைந்திட வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதே நோக்கத்தில், சமூகத்துடன் இணைந்து, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக செயல்படுவோம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/226584

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 week 5 days ago
வணக்கம் வாத்தியார் . ......! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா வா வா பெண் : பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க ஆண் : பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க பெண் : மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம் ஆண் : தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத தாபம் பெண் : தனிமையே போ இனிமையே வா நீரும் வேரும் சேர வேண்டும் ஆண் : காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது பெண் : காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது ஆண் : ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும் பெண் : என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும் ஆண் : விரகமே ஓா் நரகமோ சொல் பூவும் முள்ளாய் மாறிப் போகும் ......! --- பனி விழும் இரவு ---

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 5 days ago
சீமானின் விருப்பம் தனி தமிழ் நாடா? அப்படியானால் அதை வெளிப்டையாக அறிவித்து இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டை பிரிப்பதற்கான போராட்டடதை தொடக்க அவருக்கு என்ன தடை உள்ளது? எந்த தடையும் இல்லையே! அதை செய்ய அவருக்கு என்ன பைத்தியமா! அவரது உண்மையீன விருப்பம் தமிபிமாரை உசுப்பேற்றி அரசியலில் தரகு வேலை செய்து பணம் சம்பாதிப்பதே. அந்த நோக்கத்தில் அவர் நிச்சயம் வெற்றிபெறுவார்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
42 வது கேள்வியில் யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா என்று கேட்டிருந்தேன். Ashleigh Katherine Gardner 115 ஒட்டங்களை நியூசிலாந்து அணிக்கு எதிராக பெற்றார். 13 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 5 புள்ளிகள் 2) ஆல்வாயன் - 5 புள்ளிகள் 3)கிருபன் - 5 புள்ளிகள் 4)புலவர் - 5 புள்ளிகள் 5)செம்பாட்டான் - 5 புள்ளிகள் 6)வாதவூரான் - 5 புள்ளிகள் 7)அகஸ்தியன் - 5 புள்ளிகள் 8)நியூபேலன்ஸ் - 5 புள்ளிகள் 9)ரசோதரன் - 5 புள்ளிகள் 10)வீரப்பையன் - 5 புள்ளிகள் 11) சுவி - 4 புள்ளிகள் 12) கறுப்பி - 3 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 3 புள்ளிகள் 14)வாத்தியார் - 1 புள்ளி 15)வசி - 1 புள்ளி இதுவரை வினாக்கள் 1, 2, 41 , 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

'45 அடி உயரம்' - 9 பேர் இறந்த எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்தில் நடந்தது என்ன?

1 week 5 days ago
பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் 30 செப்டெம்பர் 2025 சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த போது முகப்பு சாரம் சரிந்து குறைந்தது 9 பேர் பலியாகி உள்ளனர். பிரதமர் மோதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இறந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் சுமார் 45 அடிக்கு மேல் பணி செய்து கொண்டிருக்கும்போது திடீரென சாரத்தின் ஒரு பகுதி சரிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல்மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ராட்சத வளைவு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, திடீரென சாரம் சரிந்து விழுந்தது. அதில், 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலரும் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக சிஐடியூ மாநில துணைத் தலைவர் விஜயன் பிபிசியிடம் பேசுகையில், " சுமார் 45 மீட்டர் உயரத்தில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்றது. ஒருபக்கம் பணிகள் நிறைவடைந்து மற்றொரு பக்கத்தில் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான், அந்த சாரம் ஒரு பக்கத்திலிருந்து சரிந்துவிட்டது. அதன் மேல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்துவிட்டனர். பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தும் அதனுடன் சேர்ந்தே விழுந்துவிட்டனர்." என்றார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு மொத்தமாக 3,200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் வட இந்திய தொழிலாளர்கள் தான். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியின் கருத்துப்படி 45 அடி உயரத்தில் பாதுகாப்பு உடை அணிந்து 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளனர். ஆனாலும், திடீரென சாரம் சரிந்து விழுந்ததால், இதுவரை 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக காவல்துறை, மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டோருடன் பேசி இருக்கிறோம். அடுத்ததாக BHEL நிறுவனத்திடம் தான் பேசி உள்ளோம். ஏனென்றால் அந்த நிறுவனம் தான் ஒப்பந்ததாரர்கள்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "இருவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமாக உள்ளனர். மற்ற ஒன்பது பேர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன" என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் சம்பவ நடந்த இடத்தில் அனைத்து அதிகாரிகளும் இருப்பதாகவும் விபத்து குறித்து காவல்துறையினர் சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோதி இரங்கல் இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "எண்ணூரில் பெல் (BHEL) நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் ராதாகிருஷ்ணனையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்." என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், இச்செய்தி அறிந்து வருத்தமடைந்ததாகவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என மோதி தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yvl1lze3eo

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 5 days ago
கரூர் சம்பவத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அனுப்பியிருப்பது சில செய்திகளை சொல்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு திமுக காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லார் மனதிலும் இருக்கிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பரிடம் இந்த செய்தியை சொன்னபோது அவரது முதல் ரியாக்ஷன் திமுகவை பற்றி தான் இருந்தது. ஏரியா மளிகை கடை அண்ணாச்சி திமுகவை வறுத்தெடுத்து விட்டார். மக்கள் செண்டிமெண்ட் விஜய் பக்கம் தான் இருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. விஜய் பக்கம் தவறு இருக்கிறது என்றாலும் அதை மன்னிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். திமுகவின் வேகமான நடவடிக்கைகளே அவர்களுக்கு வில்லனாகி போனது. கரூர் அரசு மருத்துவமனையின் முதல் விஷுவல் காட்சிகளை மக்கள் பார்க்கும் பொழுது அங்கெ செந்தில்பாலாஜி இருந்தது, அடுத்த ஒரு மணி நேரத்தில் அன்பில் மகேஷ் அங்கெ வந்தது, சென்னையில் முதல்வர் தலைமை செயலகம் சென்றது, சம்பவம் நடந்து முழுமையாக இறப்பு எண்ணிக்கை கூட வெளிவருவதற்கு முன்னதாக 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. அதையடுத்து உடனடியாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது, இரவோடு இரவாக ஸ்டாலின் கரூர் வந்தது, துபாயிலிருந்து உதயநிதி வந்து சென்றது என திமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் ஜெட் வேகத்தில் துல்லியமாக இருந்தது. அந்த அதீத துல்லியமே சந்தேகப்பட வைத்தது. இதே திமுக ஆட்சியில் நடக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுங்கள் என்று பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தொண்டை தண்ணீர் வத்த கத்திய போதும் கண்டுகொள்ளாத ஸ்டாலின் அரசு, இந்த சம்பவத்தில் யாருமே எதையுமே கேட்கும் முன்னர், எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டது. திமுக இவ்வளவு விரைவாக செயல்படுவதிலேயே சந்தேகம் பலமானது. தனது துரித செயல்பாடுகள் மூலம் ஒட்டுமொத்தமாக விஜயின் மீது பழி போட்டுவிடலாம் என்கிற திமுகவின் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் மண்ணை வாரி போட்டன. எடப்பாடி, சீமான் இருவருமே அடக்கி வாசித்தனர். உச்சமாக அண்ணாமலையின் பிரஸ்மீட் மக்களின் பார்வையை ஒட்டுமொத்தமாக திமுக பக்கம் திருப்பியது. அரசு, மக்கள், விஜய் என்று அனைவர் மீதும் குறை சொன்னவர், அரசின் நிர்வாக தோல்வியை தெளிவாக சுட்டிக்காட்டியதை கட்சி பாகுபாடின்றி மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அந்த பக்கம் திமுகவும் தன் பங்குக்கு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை இறக்கி விட்டது. அரசின் மீது எந்த தவறும் இல்லை, விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் மீது தான் மொத்த தவறும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த வாதத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் அண்ணாமலை சொன்னது போல் மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டரை சஸ்பெண்ட் செய்திருந்தால் கூட ஓரளவு திமுக பக்கம் நியாயம் இருந்திருக்கும். நேற்று வரை விஜய்க்கு தனது பூரண ஆதரவை வழங்கிய மீடியா அப்படியே யூடர்ன் போட்டது. கரூர் பிரச்சார காட்சிகளை வைத்து தவறு எங்கே நடந்தது என்று விசாரணை ஆரம்பித்தார்கள், விஜய் ரசிகர்களின் அடாவடிகளை தொடர்ச்சியாக ஒளிபரப்பினார்கள். இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பி வந்தார்கள். திமுகவின் தொடர் நடவடிக்கைகளை போல் பாஜகவும் தொடர்ச்சியாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக பாஜக தலைவர்கள் அனைவருமே கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மத்திய நிதியமைச்சர் நேரில் கரூர் விரைந்தார். இதற்கு அடுத்த கட்டமாக தான் உண்மை கண்டறியும் குழு. இத்தனை அரசியல் நிகழ்வுகளையும் சேர்த்து பார்த்தால் இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் நமக்கு புரிகிறது.. ஏனெனில் அரசியல் கட்சிகள் ஒரு பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள் என்றால் அதன் மூலம் சில ஆதாயங்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம். நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை காட்சிகளை பார்த்த பொழுதே அவர்களது அறிக்கை எப்படி இருக்கும் என தெளிவாக தெரிகிறது. அதே போல் உண்மை கண்டறியும் குழுவிடம் மக்கள் சொன்ன விஷயங்கள், மற்றும் அவர்களது கேள்விகளை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக ஆளும்கட்சிக்கு எதிராக தான் அறிக்கை கொடுப்பார்கள் என்பது வெளிப்படை. ஆக இந்த சம்பவத்தில் திமுகவுக்கு நேர் எதிர் நிலைப்பாடு எடுக்கிறது பாஜக. அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்பதற்காக இதை செய்கிறது என்று கடிவாளம் கட்டியது போல் ஒற்றை பார்வையில் இந்த நிகழ்வுகளை பார்க்கக்கூடாது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணிகள் இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்பதை விடவும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் கூட அது பாஜகவுக்கு வெற்றி தான். ராகுல்காந்தி விஜயிடம் பேசியிருக்கிறார் என்ற செய்தியை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ராகுல் + விஜய் பேச்சு செய்தி பரவக்கூடாது என்பதற்காக தான் விஜய் + குருமூர்த்தி சந்திப்பு என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்பது இப்போது புரியும். கரூர் துயரத்துக்கு பின்னால் திமுக இருக்கிறது, செந்தில்பாலாஜி இருக்கிறார் என்ற சந்தேகங்களை இன்னும் மக்கள் மனதில் ஆழமாக விதைத்தால் கூட அது தேர்தல் அரசியலுக்கு பயன்படும். 2026 தேர்தலில் செந்தில்பாலாஜியை பெரிதும் நம்பியிருக்கிறது திமுக. அந்த இடத்தில கொஞ்சம் டேமேஜ் செய்ய முடியும். நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் செண்டிமெண்ட் ஒத்துழைத்தால் செந்தில்பாலாஜியை தள்ளி வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது செந்தில்பாலாஜியால் திமுகவுக்கு பயனில்லாத ஒரு நிலையை உருவாக்கலாம். அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு நேர் எதிரான ஒரு அறிக்கையை பாஜக முன்வைக்கும் போது, திமுகவுக்கு எதிராக இருப்பவர்கள் அதை ஆதரித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இங்கே பாஜகவுக்கு எதிராக ஒரு பொதுக்கருத்தை முன்வைத்து அதை எப்படி அனைத்து கட்சிகளையும் திமுக ஏற்றுக்கொள்ள வைத்ததோ, அதே அரசியலை இன்று திமுகவுக்கு எதிராக செய்யப்போகிறது பாஜக. கரூர் சம்பவத்தில் மக்கள், ஒன்று திமுகவின் நிலைப்பாட்டில் இருக்க வேண்டும், அல்லது பாஜகவின் நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். விஜயும் பாஜக வெளியிடும் அறிக்கையை ஆதரித்தே ஆக வேண்டும். இது போன்ற செக்மேட் அரசியலை திமுக தான் எப்போதும் செய்யும், இன்று பாஜக அதை திறம்பட செய்கிறது. அரசுத்தரப்பின் தோல்விகளை நீதிமன்றம் கேள்வி கேட்கும் பொழுது திமுகவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படும். திமுக எப்போதும் கேள்விகளுக்குள் சிக்கிக் கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் தற்போது விஜய் தரப்பு மற்றும் பாஜக தரப்பு இணைந்து கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதனால் தான் விஜய் பாஜக பக்கம் போகிறார், விஜயை ஆர் எஸ் எஸ் தான் இயக்குகிறது என்ற நேரெட்டிவை நேற்றே கையில் எடுத்திருக்கிறது திமுக. ராகுல் + விஜய் பேச்சு அவர்கள் தொடர்பில் இருப்பதை காட்டுகிறது. விஜயுடன் ராகுல் பேசியிருக்கிறார் என்று தெரிந்து தான், ஸ்டாலினை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார் ராகுல் என்று செய்தி வெளியே வந்ததோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஸ்டாலினை தொடர்பு கொண்டது பற்றி ராகுல் ட்வீட் போடவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். கரூர் துயர சம்பவம் தமிழக அரசியலில் சில திருப்பங்களை ஏற்படுத்த போகிறது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. பின்குறிப்பு : இந்த பதிவு விஜயை நியாயப்படுத்துவதோ, திமுகவை நியாயப்படுத்துவதோ, அல்லது பாஜகவை நியாயப்படுத்துவதோ அல்ல. நடக்கின்ற சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியலை சுட்டிக்காட்டுவதற்கான பதிவு. இவையனைத்துமே என்னுடைய அனுமானங்கள் மட்டுமே. இந்த சம்பவத்தை பொறுத்தவரை விஜய், அரசு, மக்கள் என்ற வரிசையில் அனைவரின் மீதும் தவறு இருக்கிறது என்ற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது ஒரு பாஜக ஆதரவாளரின் கருத்து என்றாலும் சிலவிடயங்களில் கேள்விகளில் நியாயமிருக்கிறது. தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்தவர்களைக் கண்டு பிடிக்காமல் இருக்கும் திமுக அரசு இரவோடு இரவாக இவ்வளவு வேகமாக ஏன் செயல்படுகிறது? என்னய்யா இது?விஜய் தரப்பு வாதம் உப்புச் சப்பில்லாமல் இருக்கிறது.பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் சண்டை பிடித்து ஆசிரியரிடம் முறையிடுவது போன்று குழைந்தனமாக இருக்கின்றது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
@கந்தப்பு க‌ந்த‌ப்பு அண்ணா 42 கேள்விக்கு நீங்க‌ள் இப்ப‌வே புள்ளிய‌ போட‌லாம்.............அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் 100 அடித்து விட்டா🙏👍...................................

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

1 week 5 days ago
உண்மை தான். தீவிர தமிழ் தேசியர்கள் போல் நடைமுறை சாத்தியமற்ற கொள்கைகளை பிடிவாதமாக கட்டி பிடித்து அழிய அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 5 days ago
அரசியலில் யாரும் ஓடிப்பிடித்து விளையாட முடியாது என்பதை உணர விஜய்க்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றது. அவ்வளவுதான் தம்பி விஜயுடன் நாங்கள்.... அண்ணா விஜயுடன் நாங்கள்.... நம்ம பிள்ளை விஜயுடன் நாங்கள்..... நிற்போம் என்ற வார்த்தைகள் தான் காதில் கேட்கின்றது தி மு க வும் அதன் காவல்துறையும் தான் மக்களுடன் நாங்கள்..... மக்களின் நலன்களுக்காக நாங்கள்..... என்று கூவியவர்கள். ஆனாலும் சரியான நேரத்தில் மக்களைக் கவிழ்த்து விட்டார்கள்
Checked
Mon, 10/13/2025 - 15:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed