2 weeks ago
ஆரோக்கியமான விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும், ஆக்கங்களும் இடம்பெறும் ஒரு தளத்தில், அவசரப்பட்டு, பெரும்பாலும் ஒரு பிரச்சார நோக்கில், பொய்ச் செய்திகளை இணைப்பது நியாயம் இல்லை அல்லவா......... நீண்ட நாட்களாக களத்தில் பிதாமகர்கள் போன்று இருப்பவர்களே இப்படிச் செய்யலாமா.............. ஆதவன், தமிழ்வின் போன்ற பொய்யும், புனைவுகளும் நிறைந்த ஊடகங்கள் போன்றே இந்தக் களமும் போய் விடும் அல்லவா..............
2 weeks ago
2 weeks ago
கரூர் சம்பவம்.. செந்தில் பாலாஜி காரணம்.. கடிதம் எழுதிவிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட விஜய் ரசிகர் Velmurugan PUpdated: Monday, September 29, 2025, 20:29 [IST] விழுப்புரம்: கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. அதேநேரம் இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை யாருமே எடுக்கவே கூடாது என்பதற்காகவே இந்த பதிவு. இது 1970களில் இருந்து இன்று வரை தொடர்கிறது. எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி கமல், அடுத்ததாக விஜய், அஜித் வரை இருக்கிறது.இனி வரும் காலத்திலாவது இது மாறினால் சிறப்பாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள சூழலில் நடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் கடவுளாக பார்க்கும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சில ரசிகர்கள் அவர் மீது உள்ள அன்பின் மிகுதியில் செய்யும் விஷயங்கள் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. Also Read நடிகர் விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பார்த்தால் போதும், அவரது பேச்சை கேட்டால் போதும் என்று கூட்டம் கூட்டமாக தவெக நடத்தும் அரசியல் கூட்டங்களுக்கு ரசிகர்கள் வருகிறார்கள். அப்படித்தான் நடிகர் விஜய் நடத்திய கரூர் கூட்டத்திற்கும் பல ஆயிரம் பேர் வந்தார்கள். காலை முதலே விஜய்யை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் தண்ணீர் கிடைக்காமலும், மூச்சுவிடக்கூட முடியாமலும் பரிதவித்து போனார்கள். Recommended For You விஜய் வந்துவிட்டு கிளம்பி செல்லும் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் பலர் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். சிலர் மிதிப்பட்டும் இறந்து போனார்கள். ஒட்டுமொத்தமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம்சாட்டி தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதேநேரம் அரசும் குறுகிய இடத்தில் தான் தங்களுக்கு இடம் தந்ததாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகிறார்கள் . மேலும் சதி என்றும் பரப்பி வருகிறார்கள். இதனை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை ஒருபோதும் எடுக்காதீர்கள்.. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) https://tamil.oneindia.com/news/villupuram/senthil-balaji-is-the-reason-behind-the-karur-incident-what-vijay-fan-did-after-writing-a-letter-739387.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards 👆என்னத்த சொல்ல🤦♂️
2 weeks ago
வினா 1 , வினா 30 ம், 30 க்கும் பிறகு வரும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?
2 weeks ago
“உசிரு போற நேரத்திலும் ஊத்த மாட்டான் பாலை, நீ காலை நீட்டி படுத்துகிட்டா எவ்ளோ பெரிய மாலை”… எஸ்பிபி பாடிய பாடல். அந்த எஸ்பிபிக்கே இருக்கும் போது வழக்கு போட்ட இசைஞானி செத்த பின் அண்ணாமலையில் தீபம் ஏற்றவில்லையா. விஜயகாந்த், உடல் நலம் குன்றிய பின்னும், எப்போதும் போதையில் இருக்கும் தெலுங்கன் அவருக்கெலாம் தமிழகத்தை ஆள ஆசை வருவது காலக்கொடுமை என மேடையில் அவமானப்படுத்திவிட்டு, செத்தவுடன் “வானத்தை போல மனம் படைத்த மன்னவனே” என பாடி கூலிக்கு மாரடித்தாரே இன்னொருவர். இதுதான் இவர்களின் இரெட்டை முகம். இவர்களையும் நல்லவர்கள் என நம்பி அலையும் ஒரு கூட்டம்.
2 weeks ago
இவர் கோட்டையில் பொலிசாருடன் முரண்படும் சிறு காணொளி பார்த்தேன். பொலிசாரை இப்படி சீண்டுவதற்கு ஒரு தில் வேணும். உள்ளே போவதற்கு ஆயத்தமாகவும் இருக்க வேண்டும் என்று அப்போதே நினைத்தேன்.
2 weeks ago
இப்படி நடக்ககூடும் என இதே திரியில், சம்பவம் நடந்து சில மணிகளுக்குள் எழுதியுள்ளேன். அப்படி நடந்தால் சீமானுக்கு வழமையாக கட்டும் டின்னில் ஒண்டை எடுத்து விஜைக்கு கட்டிவிட வேண்டியதுதான்😂. நீங்களும், புலவரும் என்னை மீளவும் 200 உபி என சொல்ல ஆரம்பிக்கலாம்.
2 weeks ago
காலை முகூர்த்தத்திற்கு இரவு 8 மணிக்கு போய் தாலி கட்டு என்று சொல்லும் அரைப்போதை அணில்கள் என்று தமிழர்களை விழித்து எழுதியிருப்பதை கண்மையாக வண்டிக்கிறேன்.
2 weeks ago
அண்மையில் துப்பரவு தொழிலாளர்கள் கொஞ்ச சம்பளம் கூடக் கேட்டுப் போராடினார்களே என்னாச்சு? உயிரோடு இருக்கும் போது ஒத்தை ரூபா கொடுப்பதானாலும் கணக்கு பார்க்கிறார்கள். சாராயத்தைக் குடித்தோ இப்படி ஏதாவது வழியில் இறப்பவர்களுக்கு லட்சக் கணக்கில் வாரி இறைக்கிறார்கள். இனிமேல் கூட்டங்களுக்கு போகும்போது வீட்டார் ஆள் திரும்ப வருதா? அல்லது பணம் வருதா என்று ஏங்கப் போகிறார்கள்.
2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
2 weeks ago
கொஞ்சம் பொறுங்கோ அணிலுக்கு துணையாக நிறைய இராமார்கள் களமிறங்கி இருக்கிறார்கள். நைட்டோட நைட்டாக அணில் இராமரிடம் சரணாகதி என்று கதை வருது. இல்லை அண்ணை நீங்கள் உ.பி யும் இல்லை அணிலும் இல்லை ஆனால் சீமான் போபியாவால் பாதிக்கப்பட்டதால் இவை எல்லாவற்றிலும் இருப்பீர்கள். அதாவது கூத்தமைப்பு போபியாவால் பாதிக்கப்பட்ட என்னைப் போல் ,இப்போது அணிலுக்கு ஆதரவாக இராமர்கள் குதித்திருப்பதால் உங்களின் அடுத்த தெரிவு எது என்று பார்க்க ஆசை. மற்றைய தலைவர் , அமல் , கருணா பிள்ளையான், சாணக்கியன், அர்ஜ்ஜுனா, அனுர இதெல்லாம் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஈழ தமிழரும் தவிலடிக்கும் விடையம் யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே . England இல இருந்திருந்தால் இலங்கை அரசியலில் ஏகபத்தினி விரதனாக இருந்திருக்கலாம். இலங்கையில் இருப்பதால் தசரதனாக தான் இருக்க முடியும்.
2 weeks ago
விஜைக்கு எதிராக வீரமணி, சுபவீ போராட்டம் என்ற நாதகவின் தம்பிகள் பரப்பிய செய்தி, வழமை போலவே கஞ்சா, கப்ஸா கதை என்பது நிரூபணமாகியுள்ளது. ஆளுனருக்கு எதிரான போராட்டத்தை மாற்றி அடித்துள்ளார்கள். பார்க்கவே பொய் என தெரியும் செய்தியை இணைத்தமைக்கு சிறி அண்ணா எந்த மன்னிப்பும் கேட்க மாட்டார் என்பதை நான் உத்தரவாதப்படுத்துகிறேன்😂. தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் கி.வீரமணி தலைமையில் நடந்தது.பிகு இணைப்புக்கு நன்றி
2 weeks ago
அண்ணன் தனியே நின்று நம்ம அணிலுக்கு டிபெண்டர் ஓடும்போதே தெரிகிறது நம்ம அண்ணன் ஒரு நடுநிலை சிகரம் என்று , கொஞ்சம் வேகத்தை குறைச்சு ஓட்டுங்க அண்ணை கொண்டை தெரிகிறது. அப்படியே விஜய் எதற்கு 7,8 மணி லேட்டாக வந்தார் என்று ஆதாரபூர்வமாக காரணம் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம். Stampede நடக்கும் என்று காவல்துறை ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்ததாகவும் வேண்டுமென்றே ஜனக்கூட்டத்திற்கு நடுவில் வாகனத்தை குறிப்பிட்ட இடத்திற்கு செலுத்தியதாகவும் அறிக்கை வந்துள்ளது தவறாக , பொய்யாக இருந்தால் விஐய் வழக்கு தொடர்ந்து அதனை பொய் என்று நிரூபிக்கலாம். விஜய் தலை தெறிக்க ஓடியதிலேயே பய தான் கேப்மாரி என்று தெரிகிறது. அதுவரை மக்களை கொலை செய்தது அணில் தான்
2 weeks ago
https://www.facebook.com/share/v/168YHEgZUF/ இத்தனை உயிரிழப்புகளின் பின்னரும் சென்னை விமான நிலையத்தில் சிரித்தபடி செல்ஃபி .....
2 weeks ago
இந்த பேனரும், இந்த செய்தியும் நாம் தமிழர் தம்பிகள் வீட்டில் தயாரித்த கப்ஸா என நினைக்கிறேன். திக வோ, வீரமணியோ, சுபவீ யோ இப்படி அறிக்கை விட்டதாகவோ, அல்லது பேனருடன் போராட்டம் நடத்தியதாகவோ நான் வாசிக்கவில்லை.
2 weeks ago
கரூர் படுகொலையை பின்புறமாக இருந்து செயல்படுத்தியவர்களின் முகம் தெரிகிறது. நன்கு திட்டமிடல் இருக்கும் போல. எல்லாத்தையும் மறச்ச நீ கொண்டைய மறைக்கலயே என்கிற கதையா சம்பவத்திற்கு பிறகு நடக்கிற ஒவ்வொரு நாடகங்களும் சந்தேகத்தை மேலும் மேலும் உறுஜிதப்படுத்துகிறது. புரிஞ்சவன் பிஸ்தா குகன் அருமைநாட்டார்
2 weeks ago
இதெல்லாம் 15 வருடமாக முக்கியும் டிரோனில் காட்டும் அளவுக்கு கூட்டம் வரவில்லை என்ற வெப்பு 😂
2 weeks ago
வேண்டுமென்றே ட்ரான் ஷாட்டில் மக்கள் கூட்டத்தை திரளாக படம் பிடித்து மாஸ்காட்ட ஆசைப்பட்டு அணில் குஞ்சுகளை கொலை செய்திருக்கிறது T VK கொலைக்கும்பல்
2 weeks ago
அர்ச்சுனா எம்.பிக்கு பிணை! கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது. இன்று காலை அவர் வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். அண்மையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது வந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். Athavan Newsஅர்ச்சுனா எம்.பிக்கு பிணை!கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.
இன்று காலை அவர் வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது கை
2 weeks ago
கரூர் சம்பவத்தின் கதாநாயகன் விஜய் சார் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை போய் சந்திக்கவே இல்லையாம். ரொம்பத்தான் ஷாக் ஆயிட்டார் போல....
Checked
Tue, 10/14/2025 - 00:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed