2 weeks 1 day ago
இதை நான் அடியோடு எதிர்கிறேன். பாஜகவுடன் கூட்டணி போவதற்கு விஜை கடையை மூடி விட்டு மீண்டும் நடிக்க அல்லது ஓய்வெடுக்க போகலாம். அப்படி செய்வாராயின், சீமானை போல பண நலனுக்கு இல்லை எனிலும், சுய நலனுக்கு நேரத்துக்கு ஒரு நிறம் மாறும் பச்சோந்திதான் விஜை என்பது ஐயம் திரிபற நிருபணம் ஆகும். தமிழ் நாட்டின் இப்போதைய மிக பெரும் ஆபத்து, திமுகவோ, அதிமுகவோ, ஊழலோ அல்ல - மிக பெரும் ஆபத்து, அதிமுக கூட்டணி மூலம் பாஜக ஆட்சியில் பங்கெடுத்து, அதிமுகவை விழுங்கி (சிவசேனாவுக்கு செய்தது போல்), தமிழ் நாட்டில் திமுகவுக்கு அடுத்த சக்தி என வருவதே. இதற்குத்தான் விஜை துணை போவார் எனில் மூட்டை கொடோனிலேயே இருந்திருக்கலாம். பாஜகவுடன் இதுவரை திமுக, அதிமுக கூட்டணி வைத்தாலும், தமிழ் நாட்டில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். அதேபோல் வாய்பாயின் பிஜேபி அல்ல அமித் ஷாவின் பிஜேபி. இந்த ஆபத்து உணர்ந்தே, தலைக்கு மேல் சொத்து குவிப்பு கத்தி தொங்கிய போதும், ஜெ கூட்டணியை மறுத்தார். பிஜேபி இருக்கும் கூட்டணி வென்று ஆட்சி அமைப்பதற்கு, எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் திமுக ஆட்சியே தொடரலாம். குறிப்பு இப்படி எழுதியமைக்காக நீங்கள் என்னை திமுக சொம்பு 200 ரூபாய் உபி என இப்போ திட்ட தொடங்க வேண்டும்.
2 weeks 1 day ago
மனிதர்கள் உருவாகியிராதிருந்தால் உலகம் உருப்படியாக இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.🤔
2 weeks 1 day ago
விற்பனைக்கு தயார் என்றால் எங்கேயும் போகலாம். மஹராஸ்டிரத்தில் பிஜேபி வேட்பாளருக்கு சீமான் வாக்கு சேகரிக்கவில்லையா? பின் ஜெ யை ஆதரிக்கவில்லையா? பிஜேபி, அதிமுகவிடம் ஒரு நல்ல விலைக்கு போனவர் திமுகவிடமும் போவார்தானே? பிகு ஆனால் ரோ சீமானை கையில் எடுத்ததும், முத்துகுமார் கொலையும் அரசியலுக்கு அப்பாலான விடயங்கள். இது இந்திய தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாடு சம்பந்தபட்டது. தமிழரசன், முத்துகுமார் போன்றோர் முன்னெடுத்த, இந்தியாவில் இருந்து பிரிந்து போகும்-தமிழ் தேசிய அரசியலில் இருந்து, நாதகவை பின்வாங்க செய்து, ஒன்றிய இந்தியாவுக்குள் தமிழ் தேசியம் பேசும் சீமானின் பம்மாத்து அரசியலுக்குள் கட்சியை முடக்கியது சம்பந்தமானது. இதில் முத்துகுமார் போல் கொலையாகாமல் தப்பிக்க சீமான் கொடுத்த விலை. ஒன்று முத்து குமாரின் உயிர். மற்றையது பிரிவினைவாத தமிழ் தேசிய கொள்கை.
2 weeks 1 day ago
இதில் இவர்களின் சதி இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை.விஜை கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டிருக்கிறது.
2 weeks 1 day ago
சுப முத்துகுமார் என்பதை மாறி எழுதிவிட்டேன். இந்த சருவசட்டியையா பெரிசா தூக்கி கொண்டு வாறியள் (கருத்து பஞ்சம்?)
2 weeks 1 day ago
சுப உதயகுமார் இறந்துவிட்டாரா?ஆம்ஆத்மி கட்சியில் தேர்தலில்நின்றதாக கேள்வி,சீமான் விலைபோய் விட்டார் என்று ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதன்மூலம் பொய்யை உண்மையாக்க நினைக்க வேண்டாம்.சீமான் பாஜகவிடம் விலை போனதாக சொன்னீர்கள் இப்பொழுது திமுகவிடம் விலைபோனதாகச்சொல்கிறீர்கள்.அவரோ தனித்து நிற்பதில் உறுதியாக இருக்கிறார்.என்னுடைய ஊகம் அதிமுக தவெக கூட்டணி அமையும் சாத்தியம் முன்பே இருந்தது.நேற்றைய சம்பவம் அதற்கான அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது.அப்படி அமைவதை நான்வரவேற்கிறேன்.கொள்கை எதிரி கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று சொல்லி சமாளிக்க ஏண்டியதுதான்.விஜை உறுதியான துணிந்த தலைவராகத் தெரியவில்லை.திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜையின் அரசியல் முடிந்து விடும் சினிமாவுக்கு திரும்பினாலும் முன்னைய மதிப்பு இருக்காது.அல்லது கமல் போல் திமுகவில் ஐக்கியமாகவேண்டும்.
2 weeks 1 day ago
அதுவும் அந்த மாலை நேரத்தில் கைலியிலோ, டிரவுசருடனோ வரவில்லை, இருவரும் ரொம்ப நேர்தியாக வேட்டி சட்டையில் வந்தார்களாம். 40 பேர் இறக்க வேண்டும் என் அல்லாமல் ஒரு சின்ன தள்ளுமுள்ளு, சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதி என பிளான் பண்ணி அதுவே கை மீறி போய் இருக்க கூடும். உளவுத்துறை தோல்வி.. கரூர் துயரச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியே பொறுப்பு.. பொன்வில்சன் சரமாரி விமர்சனம் Vignesh SelvarajPublished: Sunday, September 28, 2025, 22:36 [IST] சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த உயிர்பலிகளுக்கு காரணம் அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா? இவ்வளவு வகையிலும் விசாரிக்கப்பட வேண்டும் என அரசியல் விமர்சகர் பொன் வில்சன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதது. இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கரூரில் நடந்த இந்த துயரச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியே பொறுப்பு என்றும், காவல்துறை பாதுகாப்பு குறைபாடே இதற்குக் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன் வில்சன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். பொன் வில்சன் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கூட்டத்தில் இப்படி ஒரு இழப்பு எந்தக் காலத்திலும் ஏற்பட்டதில்லை. பச்சிளம் குழந்தைகள் 10 பேர் இறந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் யார் மீது குறை என்பது இப்போதைக்கு தெரியாது. அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா? இவ்வளவு விஷயங்களும் இதில் இருக்கிறது. இதில் எல்லா வகையிலும் விசாரிக்கப்பட வேண்டும். ஆளுங்கட்சி தரப்பில் தான் அதிகபட்ச தவறுகள் இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. தவெகவை பொறுத்தவரை புதிய கட்சி, அங்கு கட்டுப்பாடற்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த கட்சி. காவல்துறை அனுபவம் மிக்கது. உளவுத்துறை கையில் இருக்கிறது. இதையெல்லாம் கையில் வைத்திருக்கிறீர்கள். ஏற்கனவே, திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூரில் தவெக நடத்திய கூட்டத்தை பார்த்துவிட்டோம். அந்தக் கூட்டம் எவ்வளவு கட்டுப்பாடின்றி இருக்கிறது, எவ்வளவு கூட்டம் வருகிறது? எந்த வயது வரம்பில் அதிகமானோர் வருகிறார்கள், பெண்கள், குழந்தைகள் எவ்வளவு பேர் வருகின்றனர், அடிப்படை தேவைகள் இருந்ததா என்பதகெல்லாம் உளவுத்துறை தகவல் இருக்கும் இல்லையா? அந்த அனுபவத்தை வைத்துத்தானே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எவ்வளவு கூட்டம் வரும் என்று கணிக்க வேண்டும்.. அனுமதி கொடுக்கும் இடத்தில் பாதுகாப்பை சரிவர தர வேண்டும். உங்கள் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/ponwilson-calls-for-probe-into-multiple-angles-behind-karur-stampede-during-vijay-campaign-739131.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
2 weeks 1 day ago
இறந்த சிறுவர்களில் ஒருவர் ஓன்றரை, இரண்டு வயது இருக்கும் குழந்தை இறந்து விட்டது.அவரது தாயார் வாய் பேச முடியாதவர் அந்த தாய் போகும் வாகனத்தின் ஜன்னலில் அடித்து அழும் காட்சி பார்க்வே முடியாமலிருந்தது.
2 weeks 1 day ago
விஜை வாகனம் அந்த வீதியை விட கொஞ்சம் அப்பால் நிற்க முயல - இல்லை வீதிக்குள்தான் போக வேண்டும் என நிர்பந்திக்கபட்டதாம். உள்ளே வந்ததும் கரண் கட் ஆகி விட்டதாம். 8 நிமிடத்தில் செந்தில் பாலாஜியும்… 15 நிமிடத்தில் அன்பில் மகேசும் ஸ்பாட்டுக்கு வந்தார்களாம்…. #மங்காத்தா?
2 weeks 1 day ago
28 Sep, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்துக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (28) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, தான் சிறையில் இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய பங்களிப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் இதன் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து விசாரித்தார் என்றும் ஐக்கிய தேசிய கட்சி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226339
2 weeks 1 day ago
Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 03:09 PM மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28) 57 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொது போக்குவரத்து கள் அனைத்தையும் நிறுத்தி,வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம். அரச அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை யாற்றுகின்றவர்கள் நாளைய தினம் கடமைகளுக்கு செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காலை திங்கட்கிழமை (29) காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகும்.குறித்த பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும்.பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும். குறித்த போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும்.போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்படும். எனவே மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள்,வர்த்தகர்கள்,பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர்,உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும். https://www.virakesari.lk/article/226328
2 weeks 1 day ago
'நூலிழையில் உயிர் தப்பினேன்' - கரூர் கூட்ட நெரிசலில் உயிர் தப்பியவரின் திகில் அனுபவம் படக்குறிப்பு, துர்காதேவி கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 28 செப்டெம்பர் 2025, 03:34 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் "காலையில் இருந்து வந்த யாருமே அங்கிருந்து செல்லவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கிய நான் சில இளைஞர்களின் உதவியால் தப்பினேன்." என கூட்ட நெரிசலில் சிக்கிய துர்காதேவி பிபிசியிடம் தெரிவித்தார். "யாருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்," என்கிறார் கரூர் கூட்ட நெரிசலை நேரில் கண்ட லட்சுமி. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உயிரிழந்த ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா (தாய் மற்றும் குழந்தைகள்) கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார். கரூரில் மதியம் 12 மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்த நிலையில் மாலை வேளையில் தான் விஜய் அங்கு சென்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. 'உணவு, தண்ணீர் தட்டுப்பாடு' தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்தவரான துர்கா தேவி தான் நூலிழையில் கூட்ட நெரிசலில் இருந்து தப்பியதாகக் குறிப்பிடுகிறார். "காலை நேரத்தில் கூட்டம் அளவாகவே இருந்தது. விஜயின் வருகை தாமதம் ஆகவே கூட்டம் அதிகரித்தது. வெளியூர் மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். நேற்று பிரசார கூட்டம் நடைபெற்றதால் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை. மாலை கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பாகவே பலர் மயக்கமடைந்தனர்." என்றார். சில இளைஞர்கள் உதவியால் தான் உயிர்பிழைத்ததாக குறிப்பிடும் துர்கா தேவி, "காலையில் இருந்து வந்தவர்கள் யாருமே அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. நேரம் ஆகஆக கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது. மாலையில் கட்டுக்கடங்காத அளவிலான கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. நானும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டேன். எங்கள் ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் நான் ஒரு கட்டடத்தின் மீது ஏற உதவி செய்தார்கள். அதனால் காயமின்றி பிழைத்தேன்." என்றார். படக்குறிப்பு, லட்சுமி மயக்கமடைந்த குழந்தைகள் கூட்ட நெரிசலுக்கு முன்பே குழந்தைகள் பலரும் மயக்கமடைந்ததை தன் கண்களால் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார் அதே ஊரைச் சேர்ந்தவரான லட்சுமி. பிபிசியிடம் பேசிய அவர், "காலையில் பெரிய அளவிலான கூட்ட நெரிசல் இல்லை. முதலில் ஏற்பாடுகள் சரியாகவே இருந்தது. ஆனால் கூட்டம் அதிகரிக்கவே யாராலும் சமாளிக்க முடியவில்லை. பல குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்." எனத் தெரிவித்தார். படக்குறிப்பு, ஆனந்த் குமார் காலையிலிருந்தே கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் காத்திருந்ததாக கூறுகிறார் அதே ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஆனந்த் குமார். "கரூரில் இதுபோன்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை. விஜய் மாலை தான் வந்தாலும் மதியத்திலிருந்தே கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை எவ்வாறு அழைத்து வந்தார்கள் எனத் தெரியவில்லை. ரசிகர்கள் மிகவும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். பாலத்தின் மீதும் பயங்கர கூட்ட நெரிசலாக இருந்தது. ஊர் முழுவதும் குழுமியிருந்த கூட்டம் விஜய் பேச இருந்த இடம் அருகே மொத்தமாக சென்றது தான் கூட்ட நெரிசலுக்கு காரணம்." என்றார் அவர். திருமண நிச்சயத்திற்கு முன்பு உயிரிழந்த பொறியாளர் படக்குறிப்பு, பொறியாளர் ரவியின் தாயார் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் சிவில் பொறியாளரான ரவியும் ஒருவர். செய்தியாளர்களிடம் பேசிய அவரின் தாயார், "என் மகன் கடந்த சில மாதங்களாக சொந்தமாக தொழில் செய்து வருகிறான். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை என் மகனுக்கு பெண் பார்க்க இருந்தோம். அதனால் என்ன வாங்கி வர வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருந்தான். நண்பர்களுடன் பிரசாரத்தை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் எனக் கூறிவிட்டுச் சென்றான். அவனின் செல்போன் எடுக்கவில்லை. அதன் பின்னர் அரசு மருத்துவமனையிலிருந்து அழைத்து வரச் சொன்னார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தால் அவன் உயிருடன் இல்லை." என உருக்கத்துடன் தெரிவித்தார். வேடிக்கை பார்க்கப் போன இடத்தில் பலியான 2 வயது சிறுவன் படக்குறிப்பு, பேரனை பறிகொடுத்த சோகத்தில் வசந்தா இந்த கூட்ட நெரிசலில் வேலுசாமிபுரத்தை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்த வசந்தா என்பவரது 2 வயது பேரனும் உயிரிழந்துள்ளார். "எனது பேரனை அவனின் அத்தை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். சாலையின் ஓரமாக தான் அவர் நின்றுள்ளார். ஆனால் கூட்டம் அதிகமாகி நகரத் தொடங்கிய போது ஏற்பட்ட நெரிசலில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தனர்." எனத் தெரிவித்தார். இதில் குழந்தை உயிரிழந்த நிலையில் காயமடைந்த அவரது அத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூட்ட நெரிசலில் கரூரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான ஜெயபால் காயமடைந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் தந்தை அழகிரி பிபிசியிடம் பேசுகையில், "நண்பர்களுடன் கூட்டத்திற்கு சென்றிருந்தான். அங்கு கூட்ட நெரிசல், உயிரிழப்பு என செய்தி வந்தபோது பதறிப்போய் அவனுக்கு அழைத்தால் அவன் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. அவன் நண்பர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 1 மணி நேரம் கழித்து தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அழைத்து கூறினார்கள்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c701n1r4729o
2 weeks 1 day ago
Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 12:47 PM சீனாவிலுள்ள உலகின் மிக உயரமான ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து குய்சோவில் உள்ள மற்றொரு பாலத்தின் பொறியியல் சாதனையை இந்த பாலம் முறியடித்துள்ளது. சீனாவின் கரடுமுரடான தெற்கு மாகாணமான குய்சோவில் உள்ள நதி மற்றும் பரந்த பள்ளத்தாக்கின் மேலே 625 மீட்டர் உயரத்தில் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/226300
2 weeks 1 day ago
28 Sep, 2025 | 05:38 PM (லியோ நிரோஷ தர்ஷன்) 1995 உலக மகளிர் மாநாட்டின் 30ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பீஜிங்கில் உலக மகளிர் உச்சி மாநாட்டை நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த வாரம் இறுதியில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் சபையின் நான்காவது உலக மகளிர் மாநாடு பீஜிங்கில் நடைபெற்றது. அந்த மாநாட்டைக் கொண்டாடுவதற்கும், பீஜிங் பிரகடனம் மற்றும் செயற்றிட்டத்தின் அமுலாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், சீன அரசாங்கமும் ஐ.நா. பெண்கள் அமைப்பும் இணைந்து நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. மேலும், 2025 ஆண்டில் மற்றொரு உலக மகளிர் உச்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முன்மொழிந்துள்ளார். உலகளாவிய ரீதியில் பெண்களின் வளர்ச்சிக்கான முயற்சிகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டாலும், குறிப்பிடத்தக்க வாய்ப்புகளையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சீனா, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அனைத்து அம்சங்களிலான வளர்ச்சியை மேம்படுத்துவதில், சீனா ஒரு ஆதரவாளராக மட்டுமல்லாமல், ஒரு தீவிரமான செயல்படுத்துபவராகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226316
2 weeks 1 day ago
28 Sep, 2025 | 05:23 PM இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற 'யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025' இன் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தனர். உலகளாவிய அளவில் 150 இற்க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025, இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை கொண்டாடுவதோடு, சேவை, மனவொற்றுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்கும். இந்தியாவின் முன்னேற்றத்தையும் பண்பாட்டு மதிப்புகளையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/226340
2 weeks 1 day ago
ஆசிய கோப்பை: அபிஷேக் சர்மா, சூர்ய குமார், கில் விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா பட மூலாதாரம், Getty Images 28 செப்டெம்பர் 2025, 13:58 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. நான்கு ஓவர்களில் மூன்று பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணி 33 ரன்களுக்குள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது. முதலிலே விக்கெட்டை இழந்த இந்தியா இந்தியா அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். ஆனால், இரண்டாம் ஓவரில் முதல் பந்திலே அபிஷேக் சர்மா 5 ரன்களில் அவுட்டானார் சிறந்த ஃபார்மில் இருந்த அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை ஃபஹீம் அஷ்ரப் வீழ்த்தினார். மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் சூர்யகுமார் யாதவை ஆட்டமிழக்கச் செய்தார். சூர்ய குமார் ஒரு ரன்னில் ஆவுட்டானார். நான்காவது ஓவரின் கடைசி பந்தில் ஷுப்மான் கில்லை ஃபஹீம் அஷ்ரஃப் அவுட்டாக்கினார். கில் 12 ரன்கள் எடுத்தார். நான்கு ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன்களை எடுத்தது. தடுமாறிய பாகிஸ்தான் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2 ஓவர் முடிவில் 11-0 என்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடி வந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய சொன்னது. ஃபகர் ஜமான், சாஹிப்சாதா ஃபர்ஹான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் சிவம் துபே பந்து வீசினார். முதல் 4 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான், 5வது பந்தில் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். பின் நிதானமாக விளையாடிய ஃபகர் ஜமான், சாஹிப்சாதா தங்களின் பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை சேர்த்தனர். 9 ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடி வந்த பாகிஸ்தான், அந்த ஓவரின் 4வது பந்தில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 38 பந்துகளில் 57 ரன்களை விளாசி ஃபர்ஹான் ஆட்டமிழந்தார். அவருக்கு பதிலாக சைம் ஆயுப் களமிறங்கியுள்ளார். அதன்பிறகு 12.5வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சைம் ஆயுப். குல்தீப் யாதவ் இவரின் விக்கெட்டை எடுத்தார். அதன்பின் ஐந்து பந்துகளுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான். இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை நிதானமாக ரன்களை சேர்த்து வந்த பாகிஸ்தான் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தொடங்கியதால் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது. 14வது ஓவரின் 4வது பந்தில், அக்சர் படேல் முகமது ஹாரிஸை டக் அவுட்டாக்கி பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். 15 ஓவர் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்திருந்தது பாகிஸ்தான். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின் மீண்டும் 16வது ஓவரை வீச வந்த குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே கேப்டன் சல்மான் ஆகாவை அவுட்டாக்கினார். 8 ரன்கள் மட்டுமே சேர்த்த சல்மான் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு பாட்னர்ஷிப் சரியாக அமையாததால் பாகிஸ்தான் அணி ரன்களை சேர்க்க சற்று சிரமப்பட்டது. தொடர்ந்து 16.4வது ஓவரிலேயே மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். இது ஷாஹீன் அஃப்ரிடியின் விக்கெட் ஆகும். LBW முறையில் அவரை டக் அவுட் ஆக்கி திருப்பி அனுப்பினார். பின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டாக ஃபஹீம் அஷ்ரவை அவுட்டாக்கினார் குல்தீப் யாதவ். இந்த நிலையில் 17 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் 17வது ஓவரில் பும்ரா தனது பங்கிற்கு ஹரிஸ் ரவுஃபின் விக்கெட்டை வீழ்த்தினார். 19 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். பின் கடைசி ஓவரில் மீண்டும் பும்ரா களமிறங்கி முதல் பந்திலேயே நவாஸ் விக்கெடுட்டை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சாஹிப்சாதா ஃபர்ஹான் 57 ரன்கள் எடுத்தார். இறுதிப் போட்டியின் சமீபத்திய நேரடி ஸ்கோரைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம், Getty Images ஹர்திக் பாண்ட்யா இல்லை டாஸின்போது வழக்கம்போல் இந்த முறையும் இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. டாஸ் பிறகு வென்ற பேசிய சூர்யகுமார் யாதவ், "நாங்கள் முதலில் பந்துவீச உள்ளோம். நாங்கள் முதலில் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறோம். ஆனால் இன்று சேசிங் செய்ய விரும்புகிறோம். கடந்த 5-6 போட்டிகளில் நாங்கள் நன்றாகவே விளையாடியுள்ளோம்" என்றார். மேலும் இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக பங்கேற்கவில்லை என தெரிவித்தார். அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் கான் ஆகியோரும் இப்போட்டியில் இடம்பெறவில்லை. பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, "நாங்களும் முதலில் பேட் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினோம்." என்றார். மேலும், "இன்றைய போட்டிக்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம். இதுவரை சிறந்த போட்டியை நாங்கள் விளையாடவில்லை. ஆனால் இன்றைய போட்டி சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறோம்" என்றார். பட மூலாதாரம், Getty Images அணி விவரம் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் தூபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்லா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியில் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான், ஃபகர் ஸமான், சைம் ஆயுப், சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், முகமது ஹரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை தொடர் வரலாற்றிலேயே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல்முறையாக இறுதிப்போட்டியில் மோதவதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. பட மூலாதாரம், Getty Images ஆசிய கோப்பை 2025 இது 17வது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகும். ஆசிய கோப்பை வரலாற்றில் இந்த முறை முதல்முறையாக எட்டு அணிகள் பங்கேற்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் யூஏஇ, ஓமன், ஹாங்காங் அணிகள் பங்கேற்றன. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. அதில் இந்தியா, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நடப்பு தொடரில் 2 முறையும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்தியா. தோல்வியே காணாத இந்திய அணி நடப்பு ஆசிய தொடரில் குரூப் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் விளையாடிய 6 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இதனால் சூர்ய குமார் தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. நடப்பு தொடரின் லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியாவுடன் மட்டுமே பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. அதுதவிர போட்டியிட்ட ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், இலங்கை என மற்ற அணிகளுடனான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp8j5pdyy8vo
2 weeks 1 day ago
Published By: Vishnu 28 Sep, 2025 | 06:44 PM ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு குழந்தை மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226346
2 weeks 1 day ago
'விஜய் வாகனம் வந்தவுடன்..' கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது எப்படி? பட மூலாதாரம், Sam Daniel/BBC படக்குறிப்பு, கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு. கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 28 செப்டெம்பர் 2025, 15:06 GMT புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நெரிசலை நேரில் பார்த்தவர்களும் அனுபவித்தவர்களும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். என்ன நடந்தது? கரூர் வேலுச்சாமிபுரத்தில் சனக்கிழமையன்று விஜய்யின் வாகனம் நின்ற இடத்திற்கு சரியாக எதிரில் இருக்கிறது ரேவதியின் வீடு. சனிக்கிழமையன்று இரவு நடந்த பயங்கரத்தை அவரால் இப்போதும் மறக்க முடியவில்லை. "காலையிலிருந்தே இந்த இடத்தில் அதிக கூட்டம் இருந்தது என்றாலும் மூன்று மணிக்குப் பிறகு கூட்டம் வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்தது. ஏழு மணிக்கு அவர் வரும்போது, அவர் வாகனத்தின் பின்னாலும் பெரிய அளவில் கூட்டம் வந்தது. அவர் வாகனத்தை சாலையின் ஒரு பக்கத்தில் நிறுத்துவதற்காக, அந்தப் பக்கம் இருப்பவர்களை எதிர்பக்கம் வரச்சொன்னார்கள். ஏற்கனவே எதிர் பக்கத்தில் ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. இந்த இரண்டு கூட்டமும் ஒன்றாகச் சேர்ந்ததும் பெரும் நெரிசலாகிவிட்டது" என்கிறார் ரேவதி. களத்தில் நடந்தது என்ன? பட மூலாதாரம், Sam Daniel/BBC படக்குறிப்பு, கரூரின் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் 12 மணியளவில் பேசுவார் எனக் கூறப்பட்டிருந்ததால் காலை முதலே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது ரேவதி குறிப்பிடும் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில்தான் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலர் பலியாயினர். விஜய்யின் வாகனம் நின்ற பகுதியிலும் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. "அவர் இங்கே வந்து பேச ஆரம்பிக்கும்போதே நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது என்றாலும் அவ்வளவு மோசமில்லை. ஆனால், அவர் பேச ஆரம்பித்ததும் அருகில் இருந்த தகர கூரையின் மீது ஏற ஆரம்பித்தார்கள்." என விவரிக்கிறார் இதனை நேரில் பார்த்த வெங்கமேட்டைச் சேர்ந்த வெங்கடேஷ். மேலும் "அந்தத் தகரம் தங்கள் மீது விழுந்துவிடும் என அதற்குக் கீழே இருந்த பெண்கள் வேறு பக்கம் நகர்ந்தார்கள். அதே நேரம் தகரமும் சரிந்து விழுந்தது. இதனால், அருகில் இருந்த சந்துக்குள் ஓட ஆரம்பித்தார்கள். அப்படி ஓடியவர்களில் பலர் கால் இடறி கீழே விழ, குழப்பம் ஏற்பட்டது. பலர் விழுந்தவர்கள் மேலே ஏறியே ஓட ஆரம்பித்தார்கள். கீழே விழுந்தவர்கள் மயங்கிக்கிடக்கிறார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள்" என வெங்கடேஷ் கூறினார். 4 மணிக்கு மேல் அதிகரித்த கூட்டம் பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, 110 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒவ்வொரு வாரத்தின் சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பேசிவருகிறார். அதன்படி இந்த வாரம் நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் பேசுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. கரூரின் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் 12 மணியளவில் பேசுவார் எனக் கூறப்பட்டிருந்ததால் காலை முதலே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. சுமார் 4 மணிக்கு மேல் கூட்டம் மெல்லமெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது. நாமக்கல்லில் விஜய் பேசும்போதே பிற்பகலாகியிருந்தது. அங்கு பேசி முடித்துவிட்டு அவர் கரூரை வந்தடையும்போது மாலையாகியிருந்தது. அவர் பேசத் திட்டமிட்டிருந்த வேலுச்சாமிபுரத்திற்கு ஒரு கி.மீ. தூரத்திலிருந்த பாலத்திற்கு அருகிலிருந்தே பெரிய அளவில் கூட்டம் இருந்தது. பாலத்திற்கு அருகில் மாலை 6 மணியளவில் வந்து சேர்ந்த விஜய், பேச வேண்டிய இடத்திற்கு வந்து சேரும்போது சுமார் ஏழு மணியாகிவிட்டது. ஏற்கனவே விஜய் பேசவேண்டிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் இருந்த நிலையில் அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களும் பரப்புரை நடந்த இடத்துக்கு வந்தனர் வாகனத்தின் லைட் அணைக்கப்பட்டது இதற்கிடையில் விஜய்யின் வாகனத்திற்காக தொண்டர்கள் வழிவிட வேண்டியிருந்ததால், அதுவும் நெரிசலை அதிகரித்தது. அவரது வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு, அதைச் சுற்றி தகரத்தைப் போட்டு மூடப்பட்டிருந்தது. நெரிசல் அதிகரித்ததால், கூட்டத்தினர் அந்த தகரத் தடுப்பின் மீது ஏறினர். அதனால், அந்தத் தடுப்பு கீழே விழுந்தது. அதேபோல, அருகில் இருந்த கடைகளின் முன்னால் இருந்த தகரக் கூரைகளில் நிறையப் பேர் ஏறினர். அவர்களது எடை தாங்காமல் அந்த கூரைகள் சரிந்து, அதில் நின்று கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்தனர். இந்த நிகழ்வை நேரில் பார்த்த கோமதி, நெரிசலுக்கு வேறொரு காரணத்தையும் சொல்கிறார். "விஜய் கரூர் பகுதிக்குள் வரும்போது பைபாஸ் பகுதியிலிருந்தே வண்டிக்குள் விளக்கை எரியவிட்டுத்தான் வந்தார். ஆனால், போலீஸ் குடியிருப்பு அருகில் வாகனம் வந்தபோது உள்ளே எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்துவிட்டார்." என்றார். பின், "கண்ணாடி ஷட்டரையும் சாத்திவிட்டார். இந்தக் கூட்டத்தில் இருந்த பலர் விஜய்யை பார்த்தால் போதும் என்றுதான் வந்திருந்தார்கள். விளக்கை அணைத்து, ஷட்டரையும் மூடிவிட்டதால் அவர்களால் விஜய்யை பார்க்க முடியவில்லை. இதனால், அங்கிருந்த கூட்டம் விஜய் பேசும் இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தது." என்றார். மேலும் "இங்கே ஏற்கனவே கும்பல் இருந்தது. அந்த கும்பலோடு இந்த கும்பலும் சேரவே எல்லோரும் நசுக்க ஆரம்பித்துவிட்டார்கள்" என்கிறார் கோமதி. பட மூலாதாரம், Sam Daniel/BBC படக்குறிப்பு, விஜய் பேசவேண்டிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் இருந்த நிலையில் அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களும் பரப்புரை நடந்த இடத்துக்கு வந்தனர் யார் மீது தவறு? விஜய் பேச ஆரம்பித்தபோது, அவர் பேசிக்கொண்டிருந்த பகுதியின் எதிர்ப்புரத்திலும் நெரிசல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்த சாக்கடையின் மேல் பகுதி உடைந்து விழவும் அதன் மீது நின்று கொண்டிருந்த சிலர் கீழே விழுந்தனர். இதையடுத்து ஏற்பட்ட பதற்றமும் பரபரப்பும் நெரிசலை அதிகரித்தது. கீழே விழுந்தவர்கள் மீதே ஏறி பலர் ஓட ஆரம்பித்தனர். "இந்த இடத்தில் ஆட்கள் நிற்கவே இடம் இல்லாமல் இருந்தது. அப்படியிருக்கும்போது விஜய்யின் வாகனத்திற்கு இடமேயில்லை. அவர் போலீஸ் குடியிருப்பு அருகிலேயே பேசியிருந்தால் பிரச்னை வந்திருக்காது. பத்தாயிரம் பேர் இருக்கக்கூடிய இடத்தில் இடத்தில் முப்பதாயிரம் பேர் குவிந்தால் என்ன நடக்கும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த ஜஸ்டின். அந்த இடத்தில் எங்கு தவறு நடந்தது என்பது குறித்து தங்கள் தரப்பைத் தெரிவிக்க தவெக சார்பில் யாரும் முன்வரவில்லை. ஆனால், சமூகவலைதளங்களில் அக்கட்சியினர் சிலர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர். அதாவது, போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்றும் விஜய் பேசுவதற்கு கேட்ட இடம் கொடுக்கப்படவில்லையென்றும் விஜய் அந்த இடத்தை வந்தடைந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. பட மூலாதாரம், TVK 'விஜய் கேட்ட இடத்தை ஒதுக்காதது ஏன்? கரூரில் விஜய் தனது வாகனத்தை நிறுத்திப் பேசுவதற்கு பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி உள்பட நான்கு இடங்களை கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் பகுதிகள் ஒதுக்கப்படாமல், கரூரில் இருந்து ஈரோட்டை நோக்கிச் செல்லும் சாலையில் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசுவதற்கு காவல்துறை அனுமதி அளித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் & ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், த.வெ.க கேட்ட பகுதிகள் ஒதுக்க முடியாதவையாக இருந்தன என்றார். "அவர்கள் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியைக் கேட்டார்கள். ஆனால், அந்தப் பகுதி அதிக ரிஸ்க் உள்ள பகுதியாக இருந்தது. குறிப்பாக, அந்த இடத்தின் ஒரு பகுதியில் பெட்ரோல் பங்க் இருந்தது." என்கிறார் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம். மேலும் பேசிய அவர், "மற்றொரு பக்கம் ஆறும் பாலமும் இருந்தன. லைட் ஹவுஸ் பகுதி இல்லாவிட்டால் உழவர் சந்தை பகுதியைக் கொடுங்கள் என்றார்கள். அதுவும் மிகக் குறுகலான இடம். ஆனால், வேலுச்சாமிபுரம் இதுபோன்ற கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்பதால் அந்த இடம் அவர்களது ஒப்புதலோடு வழங்கப்பட்டது" என்றார். பட மூலாதாரம், Sam Daniel/BBC மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? அதேபோல, இந்தக் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைப் பொறுத்தவரை எந்த அளவிற்கு வழங்க வேண்டுமோ அந்த அளவுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். "ஒரு கூட்டத்தின் தன்மையைப் பொருத்து காவலர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள். மிகக் குறைவான ரிஸ்க் கொண்ட கூட்டம் ஒன்றால் 250 - 300 பேருக்கு ஒரு காவலர் இருப்பார். நடுத்தரமான ரிஸ்க் என்றால் 100 - 150 பேருக்கு ஒரு காவலர் நிறுத்தப்படுவார். அதிக ரிஸ்க் உள்ள கூட்டம் என்றால் 50 பேருக்கு ஒருவர் நிறுத்தப்படுவார்கள். இந்தக் கூட்டத்திற்கு காவலர்கள், ஒரு எஸ்.பி., 3 ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி., 17 ஆய்வாளர்கள், 58 துணை ஆய்வாளர்கள் என 500 பேர் நிறுத்தப்பட்டனர்" எனத் தெரிவித்தார் டேவிட்சன் தேவாசிர்வாதம். மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, மின்சார வயர்களை ஒட்டியுள்ள மரங்களில் சிலர் ஏறியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ஆனால், அவர்களை காவல்துறை கீழே இறக்கிய பிறகு மின்சாரம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த சம்பவங்கள் எல்லாம் விஜய் அந்தப் பகுதிக்கு வருவதற்கு முன்பே நடந்ததாகவும் மின்வாரிய அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த நிகழ்வில் உயிரிழந்த 40 பேரில் பெரும்பாலானவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgq5zle2y7o
2 weeks 1 day ago
புரிகிறது. விஜையை யானைவிளாம்பழம் கொண்டது போல, கோது இருக்க சுளை தின்ன விளைகிறார். தம்பிகள் இதுதாண்டா அண்ணன் என பயர் விடுவதன் காரணமும் இதுவே. இதை நான் எழுதலாம் என நினைத்தேன். ஆனால் சீமானின் மீது வக்ரத்தை கக்குகிறார் என்பார்கள் என்பதால் தவிர்த்தேன். சீமான் சின்ன கருணாநிதி என முன்பே எழுதியுள்ளேன் - அவர் நரி என்பதில் எனக்கு எள்ளளவும் எப்போதும் சந்தேகமில்லை. ஆனால் தலைவரை போல் தன் புத்தியை இனத்தின் பொது நலனுக்கு பாவிக்கும் நல்ல புலி இல்லை. அதை தன் கல்லாவை நிரப்ப, முடிந்தால் பதவியை அடைய என சுயநலனுக்கு மட்டுமே பாவிக்கும், கருணாநிதி போன்ற குள்ள நரி - சீமான்.
2 weeks 1 day ago
Published By: Digital Desk 1 28 Sep, 2025 | 03:28 PM 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு பெரிய ரஷ்ய வான்வழித் தாக்குதலில் உக்ரேனில் சுமார் நால்வர் பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனின் தலைநகர் கீவ் மீது குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 12 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா, யுக்ரைனின் ஏழு பகுதிகளை நோக்கி சுமார் 600 ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவியதாக அதன் விமானப்படை தெரிவித்துள்ளது. மோசமான இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட சபோரிஜியா பகுதியில் குறைந்தது 16 பேர் காயமடைந்ததாகவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். உக்ரேன் பதிலடி கொடுக்கும் என்றும், இந்தத் தாக்குதல் மாஸ்கோ தொடர்ந்து சண்டையிட்டு கொல்ல விரும்புகிறது என்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டணம் தெரிவித்துள்ளார். அண்மைய தாக்குதல்கள் குறித்து ரஷ்யா எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/226320
Checked
Tue, 10/14/2025 - 03:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed