புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks ago
42வது கேள்வியும் கூட. ஆராவது 100 அடிப்பினமா என்பது கூட, வேடிக்கையாக இருந்தது. உங்கள் வருத்தம் புரிகிறது. நாமதான் இன்னும் கொஞ்சம் மேலே பார்க்கவேண்டும். பெண்கள் இப்போ எங்கேயே போய்விட்டார்கள். சமீபத்தில் நடந்த உலக தடகளப் போட்டிகள் பார்த்தீர்களோ தெரியாது. எல்லா ஓட்டப் போட்டிகளும் நெருப்பா இருந்தது. மிகவும் இரசித்தேன்.

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks ago
இது கதையா பயண அனுபவமா. தலைப்பிலேயே கதை என்று இருப்பதால், கதை என்றே எடுத்துக் கொள்ளவேணுமோ. இப்படி பல விடயங்களை கோர்த்து எழுதும் போது வாசிப்பில் ஒரு உற்சாகம். அடுத்து என்ன கதை சொல்லப் போகிறார் என்று. சும்மா அங்கே போனேன் இங்கே போனேன் என்று சொல்லாமல், தங்கள் பழைய அனுபவங்களையும் கோர்த்து எழுதவது மிக நன்றாகவே இருந்தது. அந்த வாசிகசாலைக்குப் போகவேண்டும் என்று மிக ஆவலாக உள்ளது. எப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன். விமானத்தில் படம் பார்க்காமல் எப்பிடி. எப்படி பயணம் செய்கிறீர்கள். இப்படி எழுதுபவர்களின் மனநிலயே வேறை போல. அதுதான் அவர்களால் எழுத முடிகிறது. நாம இரசிக்க மட்டும்தான் போல. நான் எப்போதும் யோசிப்பதுண்டு. எப்படி இவர்களின் கண்களில் மட்டும் இப்பிடியான விடயங்கள் விழுகிறது. இப்பிடியான அனுபவங்கள் எப்படி அவர்களுக்கு மட்டும் வாய்க்கிறது. நாமும்தான் பயணம் போறம்.

சௌதி அரேபியாவில் பாகிஸ்தானின் அணுஆயுத ஏவுகணைகள் எந்த நாட்டை குறிவைக்கும்?

2 weeks ago
அமெரிக்காவால் கிட்டத்தட்டக் கைவிடப்பட்டுள்ளநிலையில் இஸ்ரேலில் தொங்கிக்கொண்டு நிற்கும் வடவரின் நிலைதான் கவலைக்கிடமாகிப்போகும்போல் உள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

2 weeks 1 day ago
அக்ரோபர் மாதத்தில் உலகின் முதல் சிறந்த சுற்றுலா தளத்து நாடாக இலங்கை இடம் பிடித்துள்ளது என ஒரு செய்தி வாசித்தேன். கேபிள் கார் விபத்து இந்த தரப்படுத்தலுக்கு பின்னடைவான செய்தியாக அமையப்போகின்றது. அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும்போது மேலும் மேலதிக விபத்துக்கள் இடம்பெறும் முன்னரே உறுதி அற்ற/ஸ்திரம் அற்ற கேளிக்கை உபகரணங்கள்/இயந்திரங்களை பாவனையில் இல்லாமல் நீக்கிவிட வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

2 weeks 1 day ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 29 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 29 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாம தேரர் சோழர்களைப் பற்றி சித்தப்பிரமை உள்ளவரா? விஜய அல்லது விசயகுமாரனுக்குப் பிறகு முதலாம் சம்கதிஸ்ஸ [Samghatissa] நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார். அவர் லம்பகண்ண குலத்தைச் சேர்ந்தவர் என்று மகாவம்சம் கூறுகிறது [முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதிமூன்றாமானவனான விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் முதலாமானவன் இவனாகும்.]. ஆனால் இராசவலியவில் அவர் லெமினி வம்சத்தைச் [Lemini dynasty] சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. மகாவம்சம் வழக்கம் போல் மூன்று லம்பக்கண்ணர்களான [Lambakanna] சம்கதிஸ்ஸ, சம்கபோதி மற்றும் கோதகபய [Samghatissa, Samghabodhi and Gothakabhaya] பற்றிய கதையுடன் வருகிறது. சம்கதிஸ்ஸவுக்கு விஷம் கொடுத்து, அதனால் அவன் இறந்தபின், சம்கபோதி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்று, மகாவம்சம் கூறுகிறது. சம்கபோதி ஒரு நீதியுள்ள அரசர், அவரைப் பற்றிய கதைகள் மகாவம்சம் மற்றும் இராசவலிய இரண்டிலும் உள்ளன. ஆனால், தீபவம்சத்தில் அத்தகைய கதைகள் ஒன்றும் இல்லை; அவர் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த நல்லொழுக்கமுள்ள மன்னர் என்று அது வெறுமனே கூறுகிறது. அவருக்குப் பின் அபய மேகவன்னா (Abhaya Meghavanna / மகாவம்சத்தின்படி கோதகபய / Gothakabhaya மற்றும் இராசவலியவின் படி கோலு அப / Golu Aba) பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். மன்னனின் மகன் ஜெத்ததிஸ்ஸ [Jetthatissa] வெற்றி பெற்று பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் இராசவலியவில் கலகண்டேது [Kalakandetu] ஆகும். ஜெத்ததிஸ்ஸனுக்குப் பிறகு, அவனுடைய தம்பி மகாசேனன் [Mahasena] இருபத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சத்தின்படி, சில பிக்குகள் உண்மையானவர்கள் அல்ல என்று அவர் நினைத்தார். அதனால் அவர்களுடன் இந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க முயன்றதுடன், அவர் துன்மார்க்க மக்களையும் சமாளிக்க முயன்றார். மகாவம்சத்தின்படி, ஜெத்ததிஸ்ஸ ஆட்சிக் காலத்தில் பிரிவினைவாத பிக்குகள் அங்கு இருந்தனர் என்பதையும் அறிகிறோம். மேலும் சோழ நாட்டைச் சேர்ந்த பிக்கு சங்கமித்ரர் மற்றும் அவனது செயல்களைப் பற்றிய ஒரு கதையும் அங்கு உள்ளது. ஆனால், இந்தக் கதை தீபவம்சத்தில் இல்லை. சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களான முதலாம் ஜெத்ததிஸ்ஸ, மகாசேனன் என்பவர்களை மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான ஜெத்ததிஸ்ஸ இலங்கைக்கு அரசனானான். மகாவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் சோழர்களைப் பற்றி சித்தப்பிரமையாக இருக்க வேண்டும்! அவர் பொதுவாக தமிழ் பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பேசுவதில்லை. Part: 29 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is Mahanama, the author of the Mahavamsa, paranoid about Cholas?' Then Samghatissa ruled for four years. The Mahavamsa says that he belonged to the Lambakanna clan, but the Rajavaliya says he belonged to Lemini dynasty. The Mahavamsa, as usual comes with a tale about three Lambakannas, Samghatissa, Samghabodhi and Gothakabhaya. Samghatissa was poisoned and Samghabodhi succeeded him as per the Mahavamsa, and ruled for two years. Samghabodhi is a righteous king and there are tales about him in both the Mahavamsa and the Rajavaliya. There are no such tales in the Dipavamsa; it simply says that he is a virtuous king ruled for two years. He was succeeded by Abhaya Meghavanna (Gothakabhaya as per the Mahavamsa and Golu Aba as per the Rajavaliya) and ruled for thirteen years. King’s son Jetthatissa succeeded and reigned for ten years. He is Kalakandetu in the Rajavaliya. After Jetthatissa, his younger brother king Mahasena reigned twenty-seven years. He, as per the Dipavamsa, thought that some Bikkhus are not genuine and tried to discuss the issues with them. He tried to deal with the wicked people. As per the Mahavamsa, the sectarian Bikkhus were there during the Jetthatissa’s reign. There is a story about a Bikkhu Samghamitta from Chola country and his actions. This story is not in the Dipavamsa. Mahanama, the author of the Mahavamsa, must be paranoid about Cholas! He does not usually speak about Tamil Pandiya kings. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 30 தொடரும் / Will follow துளி/DROP: 1861 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 29] / எனது அறிவார்ந்த தேடல்: 1279 https://www.facebook.com/groups/978753388866632/posts/31528774886771081/?

"மூன்று கவிதைகள் / 12"

2 weeks 1 day ago
"மூன்று கவிதைகள் / 12" விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம் விலங்குகளை ஒவ்வொன்றாக அடக்கி அடக்கி குப்பை மனிதர்கள் செழிக்க விட்டோம்! ஆசையில் மூழ்கி அசிங்கத்தைப் பூசி புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக பாதை தவறி அழுக்கைச் சுமந்து மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே! ........................................................ பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே உன் அறிவும் உனக்குப் பெரிதோ? சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும் உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ? பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன் உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ? வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம் தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ? பாசத்தின் அருமை உனக்குத் தெரியுது வேசமிடும் மனிதனுக்கு அன்பு தெரியாதோ? மோசமான இலங்கை அரசியல் உலகில் மனிதம் வளராது இறந்தது எனோ? ............................................ யாழின் தென்றலில் நல்லூர் வளாகத்தில் நடந்து சென்றோம் கைகள் கோர்த்தே! புனித நிலத்தில் ஞானம் சேர மனம் நிறைந்து ஆனந்தம் பெருகியதே! நல்லூர் மேளமும் கடல் ஓசையும் மனதில் நிலைத்து என்றும் வாழுமே! கடல் சறுக்கல் டால்பின் பாய்தல் ஈழ சுற்றுலாவைப் பறை சாற்றுமே! தெற்கும் மேற்கும் மனிதம் நிலைத்தால் வடக்கும் கிழக்கும் மீண்டும் தளிருமே! ஒற்றுமை கீதம் உள்ளத்தில் பாடினால் வேற்றுமை நீங்கி சொர்க்கம் ஆகுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "மூன்று கவிதைகள் / 12" https://www.facebook.com/groups/978753388866632/posts/31528636796784890/?

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
தனது 13 வயது மகனை பறிகொடுத்த தாய் ஒருவர் பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுக்கின்றார் நாங்கள் விஜய் சேரை பார்க்க தான் வந்தோம் விஜய் சேர் மேல எந்த குறையும் சொல்ல மாட்டோம். நிலைமை தொடரலாம்

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

2 weeks 1 day ago
நான் இப்போதெல்லாம் சிலரை மதிப்பதில்லை....காரணம் அவர்களை மதித்தால் தானே அவமானப்படுத்துவார்கள்.😎 இது பிறருக்கு மரியாதை கொடுத்ததின் விளைவு.👇 சொந்த அனுபவமாக்கும்.👈

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
பவர் கட், ஆம்புலன்ஸ் படையெடுப்பு.. கரூர் சம்பவத்தில் பல சந்தேகங்கள்.. எடப்பாடி பழனிசாமி கேள்வி Pavithra ManiUpdated: Sunday, September 28, 2025, 9:28 [IST] கரூர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். குழந்தைகள், இளைஞர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், குடியரசுத் தலைவர்கள், பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதுகாப்பு குறைபாடு அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "பொதுக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்பட்டது. எங்களுக்கு ஊடகங்கள் மூலம் வந்த தகவலின்படி நெரிசல் ஏற்பட்டபோது அங்கு மின் நிறுத்தம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு தவெக 4 மாவட்டங்களில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அங்கு எல்லாம் மக்கள் கூட்டம் இருந்தது என்பதை ஆய்வு செய்து அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைக்காட்சியில் பார்க்கும்போதே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த அரசு ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றது. எல்லாவற்றுக்கும் நாங்கள் உரிய பாதுகாப்பு கொடுத்தோம். திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தவே நீதிமன்றம்செல்ல வேண்டியிருக்கிறது. விலை மதிக்க முடியாத அதிமுக கூட்டங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதில்லை. என்னுடைய கூட்டங்களுக்கும் இதே நிலை தான். உரிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை தடுத்திருக்கலாம், மனித உயிர் விலை மதிக்கத்தக்கது. அதனால் அரசியல் கட்சிகளும் மக்களின் உயிரின் மதிப்பை உணர்ந்து, கடந்த கால கூட்டங்களை ஆராய்ந்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மிகுந்த வேதனையுடன் இந்தக் கருத்தை பகிர்கிறேன். மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கூட்டம் வந்தால், எப்படி சமாளிப்பது என்ற அனுபவம் உள்ளது. அதை இவர்களும் கடைபிடிக்க வேண்டும். மெரினா கடற்கரை வான் சாகச நிகழ்ச்சியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத காரணத்தால் பலர் உயிரிழந்தனர். அதில் இருந்து அரசு பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது. சந்தேகம் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றிருக்க கூடாது. அரசு கடமையில் இருந்து தழுவியது தான் உயிரிழப்புக்கு காரணம். விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் பல ஆம்புலன்ஸ்கள் வந்தன. இது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு பேச வேண்டும். இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறாமல் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்தது இதற்கு முன்பு நடைபெற்றதாக தெரியவில்லை. ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார். https://tamil.oneindia.com/news/karur/edappadi-palanisamy-raised-doubt-on-dmk-government-over-karur-stampede-738965.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards கரூர் விஜய் பரப்புரை: ஆம்புலன்ஸ் கூட போகாத இடத்தில் அனுமதி! ஆட்சியர், எஸ்பியை சஸ்பெண்ட் பண்ணுங்க.. அண்ணாமலை அட்டாக் Mani Singh SUpdated: Sunday, September 28, 2025, 19:01 [IST] கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் 40 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டு உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் வருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:- கரூர் சம்பவத்தில் 40 அப்பாவி உயிர்களை பறிகொடுத்துள்ளோம். மருத்துவமனையில் இன்னும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு முன்பு இப்படி நடந்தது கிடையாது, இனியும் இப்படி நடக்கக் கூடாது - அண்ணாமலை மருத்துவ உதவி தேவைப்பட்டால் பாஜகவினர் செய்வார்கள். எதோ பல தவறுகள், சில குளறுபடிகள் நடந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தை சரியாக கையாள்கின்றோமா என்று பார்த்தால் இல்லை.. எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான். வேலுச்சாமிபுரம் என்பது மிக குறுகலான இடம். அங்கு ஏன் போலீசார் அனுமதி கொடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் கூட போக முடியாத இடத்தில் போலீசார் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து அரசு தவறி வருகிறது.. 500 போலீசார் பாதுகாப்புக்கு வந்து இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் அங்கு 100 பேர் கூட இல்லை. ஸ்பாட்டில் 100 போலீசார் கூட இல்லை. மாவட்ட ஆட்சியர், எஸ்பியை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பதவியில் இருந்து விலக வேண்டும். விஜய் தான் அக்யூஸ்டு நம்பர் ஒன் என்று நான் சொல்ல மாட்டேன். வீக் எண்ட் அரசியலில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும். கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். https://tamil.oneindia.com/news/karur/karur-vijay-rally-annamalai-demands-suspension-of-collector-sp-for-allowing-event-where-even-ambul-739095.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி பிரேமலதா, எடப்பாடி, அண்ணாமலை அனைவரும் உடைத்து பேசுகிறார்கள். விஜை மட்டும் சைலண்ட் மோடில்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
தலைவர் அளவுக்கு எல்லாம் போகதேவையில்லை. முன்பே சொன்னதுதான். என்னை பொறுத்தவரை கருணாவும், சீமானும் ஒன்றே. கருணா சுழியன் என்பதால்தான், கூட இருந்த தளபதிகள் எல்லாம் மாவீரர் ஆகி விட, அவரால் இன்றுவரை சுகபோகமாக உயிர்வாழ முடிகிறது, என சொல்வோரும் உளர். அதேபோலத்தான் சீமானும். சீமான் விஜையை முந்த கூடும், முதல்வராக, ஏன் பிரதமராக கூட வரக்கூடும். ஆனால் தமிழினத்துக்கோ, தமிழ் தேசிய கொள்கைக்கோ அதனால் ஒரு குண்டுமணியளவு கூட நன்மை வராது. மாறாக மலையளவு தீமையும், துரோகமும் விளையும். கருணா, சீமான் தனிபட்டு வெல்லலாம் - அதனால் இனம் வெல்லும் என இவர்களை ஆதரிப்பது மடமை. மொசபிடிக்கும் நாயை மூஞ்சிய பார்த்தா தெரியும். கருத்து

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
இந்த குழந்தைகளை தூக்கி கொண்டு வந்ததை குறை சொல்லுவதை என்னால் ஏற்க முடியாமல் உள்ளது. சிலவேளை புலம் பெயர்ந்தமையால் நமக்கு தெற்காசியாவின் பழக்க வழக்கம் மறந்து விட்டிருக்க கூடும். அங்கே கணவனும் மனைவியும் தன்னெழுச்சியாக எங்கேயும் போனால் பிள்ளைகளையும் கூட்டிச்செல்வதே வழமை. தனியே ஆண்கள் மட்டும் போக இது திமுக/அதிமுக பிரியாணி+குவாட்டர் கூட்டம் அல்ல. விஜையை பார்க்க போனார்களோ, அரசியல் உரையை கேட்க போனார்களோ, இதில் பலர் இதற்கு ஒரு திருவிழா போலவே போனார்கள். போன வாரம் உச்ச நீதிமன்றும் சொல்லி, விஜை கூட பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம் என சொல்லி இருந்தார். ஆனால் - நீதிபதி, ஸ்டாலின், விஜை அனைவருக்கும் தெரியும் என்ன சொன்னாலும் வருவார்கள். அப்போ தக்க ஏற்பாட்டை அரசும், தவெகவும் செய்திருக்க வேண்டும். அப்போ விஜை வெளியே போகாமல் இருக்கவா முடியும்? அப்படி இருந்தால் வேர்கிங் புரொம் ஹோம் அரசியல்வாதி என்பார்கள். ஆகவே தகுந்த இடத்தை கொடுக்க வேண்டியது காவல்துறையின் பணி. உனக்கு அதிக கூட்டம் வருகிறது நீ அரசியல் பரப்புரை செய்யாதே என்பது பிழையான வாதம். அதேபோல் பெண்களுக்கும் ஒரு வோட்டு, ஆண்களுக்கும் ஒரு வோட்டு எனும் போது பெண்களை மட்டும் எப்படி வர வேண்டாம் என்பது. அது உரிமை மீறல் இல்லையா? நெரிசலில் ஆண்கள் இறக்கவே இல்லையா? அல்லது ஆண்கள் இறந்தால் பரவாயில்லையா? ஒரு ஜனநாயக நாட்டில் - என்ன காரணத்துக்காவேனும் - மக்கள் அரசியலில் ஆர்வம் காட்டினால் - அதை ஊக்குவிக்கவேண்டுமே தவிர, கூட்டம் அதிகமாகிவிடும் நீ வராதே என்பது - சரியான வாதம் இல்லை. ஒரு அரசின் முதலாவது கடமை தன் மக்களின் உயிர் பாதுகாப்பு. விஜைக்கு இரு வாரங்களில் 5 மாவடங்களில் கூடிய கூட்டத்தை பார்த்த பின்னும், ஏன் ஒரு 100 அடி வீதியை கொடுத்து, அதற்குள் விஜையின் 60 அடி வாகனம் போயே தீரவேண்டும் என அடம் பிடித்தார்கள்? ஒரு அடிப்படை risk assessment செய்யிருந்தாலே இந்த இடம் பொருத்தமில்லை என தெரிந்திருக்கும். விஜை கேட்ட விஸ்தாரமான, ஸ்டாலின் அண்மையில் பேசிய இடத்தை மறுத்து இதை கொடுத்த அரசுதான் இதில் முதல் குற்றவாளி. இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம், திமுக ஒரு சின்ன அசம்பாவிதத்தை எதிர்பார்த்து செய்ய அது கைமீறி போய்விட்டது என ஒரு சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால்… அப்படி இல்லை எனிலும், இது ஒரு விபத்தே ஆயினும், இதற்கு பாரிய பொறுப்பு அரசிடமே. விஜை மீது தப்பில்லை என்பதல்ல. ஆனால் எந்த அரசியல்வாதியும் தனக்கு கூடும் கூட்டத்தை வேண்டாம் என்பார்களா? உதயநிதிக்கோ, சீமானுக்கோ இப்படி கூட்டம் கூடினால், இல்லை வேண்டாம் என மறுப்பார்களா? அதேபோல் விஜை லைட்டை போட்டார், ஷட்டரை மூடினார் என்பதெல்லாம் அபத்தமான கதைகளாவே தெரிகிறது. இதையேதான் அவர் முன்னைய கூட்டங்களிலும் செய்தார். அப்போ விஜை என்ன பொம்மை போல வந்து, பொம்மை போல போக வேண்டுமா? ஏனைய அரசியல்வாதிகள் போலத்தான் அவரும் தன்னை காண வந்தோரிடம் interact பண்ணினார். உண்மை இரெண்டு தான் ஏனையோர் கனவு கூட காண முடியாத கூட்டம் விஜைக்கு கூடியது. அதனால், ஸ்டாலின், உதய், எடப்பாடி போன்றோருக்கு கூடும் கூட்டத்தை கட்டுபடுத்த எடுக்கும் நடவடிக்கையை, ஏற்பாட்டை விட பலமடங்கு விஜை கூட்டத்துக்கு தேவை பட்டது. அதை அரசு செய்யவில்லை. இதில் விஜையில் மட்டுமே 100% பிழை என கூறக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அது நடந்த கோரத்தின் பின்னான அவரின் நடத்தை. அவரின் மனநிலை கடுமையாக பாதிக்கபட்டே விட்டது என்றால் - அதில் விமர்சிக்க ஏதும் இல்லை, ஆனால் இப்படியான மனநிலையோடு முதல்வராக ஆசைபடக்கூடாது.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
https://www.facebook.com/share/p/1CTeuhWX9i/?mibextid=wwXIfrஎல்லா மீட்டிங்க்கும் சொன்ன டைம்க்கு வராம, அவரோட ரசிகர்களை மணிக்கூர் கணக்குல காக்க வைப்பது, அந்த ஏரியா முழுக்க பொது மக்களுக்கு அசௌகரியம் கொடுப்பது, போலீஸையும் காத்திருக்க வைப்பது, விஜய்யோட பெரிய தப்பு. ஒவ்வொரு மீட்டிங்க்லயும் இத அவர் செய்வது வேணும்ன்னே செய்றார்னா அவர் சரி செய்ய வேண்டிய பெரிய குற்றம் இது. அவர் நேத்திக்கு சென்னைக்குப் புறப்பட்டது சரியான முடிவு. நிச்சயம் போலீஸ் அத insist பண்ணி இருப்பாங்க. அவரால அந்த சிச்சுவேஷன்ல எதுவுமே செஞ்சிருக்க முடியாது. சினிமா ஹீரோ மாதிரி வேன்ல இருந்து குதிச்சு கீழ வந்திருந்தா பிரச்னை இன்னும் பெருசாகி இருக்கும். அந்த எடத்துல இருந்து போனது சரியான முடிவு. இந்த mob mentality விஷயத்துல உலகம் முழுக்கவே இப்படித்தான். அவர் ஆஸ்பத்திரிக்குப் போறேன்னு கெளம்பி இருந்தாலும், இதே பிரச்னை தான் நடந்திருக்கும். அவரோட presence நடந்துட்டு இருந்த வேலைகளுக்கு இடையூறா இருந்திருக்கும். அவர் கரூரைச் சுத்தி எங்க தங்கி இருந்தாலும், கூட்டம் கூடி இருக்கும், மீடியாக்காரன் கூட்டமா வந்திருப்பான். அதுக்குன்னு தனி பாதுகாப்பு கொடுக்க வேண்டியதிருக்கும். அவருக்கு அந்த சூழ்நிலைல பாதுக்காப்பான எடம் அவரோட சென்னை வீடு மட்டும் தான். அவர் அங்க போனது தான் சரி. இந்த மாதிரி ஒரு சம்பவம் யாரையும் பாதிக்கும். விஜய்யை நிச்சயம் பாதிச்சிருக்கும். அதுவும் 30+ங்கறது பெரிய கணக்கு. அதுவுமில்லாம, அவர் பொதுவாவே கொஞ்சம் எமோஷனல் ஆளு தான். ஜல்லிக்கட்டு, அனிதா மரணத்தப்ப, தனியா அவர் சில விஷயங்கள் செஞ்சிருப்பார். அவருக்கு நிச்சயம் வருத்தம் இருந்திருக்கும். அதனாலயே, ஃப்ளைட் ஏறதுக்கு முன்னாடி ஒரு அறிக்கை விட்டிருக்கனும். கட்சி நிர்வாகிகள் என்ன செஞ்சிருக்கனும்ன்னு ஒரு நோட் கொடுத்திருக்கனும். பப்ளிக்ல. சொல்லப்போனா, இப்படி ஒரு சம்பவம் எப்ப வேணும்ன்னாலும் வரலாம்ன்னு முன்கூட்டியே அவர் இதுக்கெல்லாம் prepare ஆயிருக்கனும். அதுவும் ஒரு கட்சியோட planningல இருக்க வேண்டிய விஷயம். இந்த மாதிரி சிச்சுவேஷன் வந்தா யார் என்ன செய்யனும்ன்னு ஒரு ப்ளான் இருந்திருக்கனும். இந்த மாதிரி மரணங்களே நடந்தாலும் அத எப்படி ஹேண்டில் பண்றதுன்னு, both politically and socially, அவரோட டீம்க்குத் தெரிஞ்சிருக்கனும். Risk, Safety, DRன்னு என்ன வேணும்ன்னாலும் அதுக்கு பேர் வச்சிருக்கலாம். விஜய் இருக்காட்டியும், அவரோட டீம் அந்த எடத்துலயும், ஆஸ்பத்திரிலயும் இருந்திருக்கனும். காணோம்ன்னு தான் சொல்றாங்க. விஜய் ரசிகர்களுக்குள்ள ஒரு குரூரத்தை உருவாக்கினதுல பெரும்பங்கு புஸ்ஸி ஆனந்த்க்கு உண்டு. மேடைலயே அவரோட நடவடிக்கைகள்ல அது தெரியும். பப்ளிக்லயே இப்படின்னா மத்த எடங்கள்ல அவர் எப்படி இருந்திருப்பார்ன்னு சொல்ல வேண்டியதில்ல. அவர்ட்ட இருப்பது ஒரு ஹிட்லர் மனநிலை. சத்தம் போட்டு, அடக்கி எல்லாத்தயும் சாதிக்க முடியும்ன்னு ஒரு மனநிலை. ஆனா விஜய் அவருக்கு நேரெதிர் சாஃப்ட். ஆனந்த் is not fit for politics. விஜய் எப்பவோ இவரை அனுப்பி இருக்கனும். இனிமேலும் வச்சிருந்தா அவரோட ரசிகர்களும், அவரோட ரசிகர்களால விஜய்யும் தான் பாவம்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
குழந்தைகளை தூக்கி கொண்டு விஜய்யை பார்க்க வந்த தமிழ்நாட்டவர்கள் மீதும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் விஜய் கூட்டத்திற்கு அனுமதி வழங்காவிட்டால் தான் திமுக அரசு விஜய்க்கு பயந்து அவர் கட்சியை ஒடுக்க பார்க்கின்றது ஜனநாயகத்தின் மீதான அரசின் அடக்கு முறை என்று குற்றம் சாட்டுவார்கள்.இப்படியான குற்றசாட்டுக்களை விஜய் இரசிகர்கள் முன்னைய கூட்டங்களில் கட்டுபாடுற்ற முறையில் நடக்கிறார்கள் என்ற முறைபாடுகள் வந்த போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
உலகில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களின் கருத்தை தூக்கிப் பிடித்து சீர்தூக்கி பார்த்தால் எதுவுமே தேறாது. அரசியலில் தேறாத ரசிகர்களை நம்பி அரசியலில் இறங்கியதின் பலன் தான் கருவூர் அவலங்கள். இது உலக அரசியலில் வரலாற்று சாதனை.இந்திய அரசியல் என்றாலே உலகில் ஒரு ஏளன பார்வை உண்டு. இது இன்னும் வலு சேர்க்கும். அரசியல் முதலைகள் நிறைந்த குளம் என சீமான் கருத்து சொல்லியுள்ளார்.அதில் அவர் பல இடங்களில் இணக்கமான அரசியல் மேடை பேச்சுக்களை பேசியுள்ளார்.பேசுபவர். அதை சீமான் விமர்சகர்கள் அங்கே விலைபோய்விட்டார்.இங்கே விலை போய் விட்டார்.குறுக்காலை விலை போய் விட்டார்.பெட்டி வாங்கி விட்டார். ஏ டீம்.பீடீம் எக்ஸ் வை டீம்/டீல் என்பார்கள்.😂

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
தமிழ்நாட்டு அரசியல் அறிவும் இல்லாமல்....உலக அரசியல் அறிவும் இல்லாமல் தனது ரசிக தோழர்களின் ஒழுக்கமின்மை இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்கிறீர்கள்?😝 ஒழுங்கான சினிமா நடிகர் கூட இல்லாதவர். சும்மா பிரமாண்டம் காட்டும் நடிகர் அவர்.😎 இதனால் தான் ரசிகர்கள் மரங்களிலும் வீட்டு கூரைகளிலும் வீட்டு மதில்களிலும் ஏறி காயமடைந்தார்கள் இது அண்மை நாட்களாக வந்த செய்தி. இப்போது உயிரிழப்புகள். இப்படி மக்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறிதான். எல்லாம் இருக்கட்டும்..... தங்கள் அபிமான நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றால் ஏன் சீமானுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது?😋

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

2 weeks 1 day ago
பகிடி அல்ல. குரங்குகளுக்கு ஈவு இரக்கம் பார்க்க கூடாது.--------- மீதி கூட்டங்கள் அந்த பக்கம் அண்டாது. எதுவுமே பழக்கத்திற்கு வந்து விட்டால் குரங்கிற்கு பழைய புத்தி வந்துவிடும்.😂
Checked
Tue, 10/14/2025 - 00:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed