புதிய பதிவுகள்2

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
தமிழ்நாட்டு அரசியல் அறிவும் இல்லாமல்....உலக அரசியல் அறிவும் இல்லாமல் தனது ரசிக தோழர்களின் ஒழுக்கமின்மை இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்கிறீர்கள்?😝 ஒழுங்கான சினிமா நடிகர் கூட இல்லாதவர். சும்மா பிரமாண்டம் காட்டும் நடிகர் அவர்.😎 இதனால் தான் ரசிகர்கள் மரங்களிலும் வீட்டு கூரைகளிலும் வீட்டு மதில்களிலும் ஏறி காயமடைந்தார்கள் இது அண்மை நாட்களாக வந்த செய்தி. இப்போது உயிரிழப்புகள். இப்படி மக்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறிதான். எல்லாம் இருக்கட்டும்..... தங்கள் அபிமான நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றால் ஏன் சீமானுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது?😋

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

2 weeks 1 day ago
பகிடி அல்ல. குரங்குகளுக்கு ஈவு இரக்கம் பார்க்க கூடாது.--------- மீதி கூட்டங்கள் அந்த பக்கம் அண்டாது. எதுவுமே பழக்கத்திற்கு வந்து விட்டால் குரங்கிற்கு பழைய புத்தி வந்துவிடும்.😂

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
https://www.facebook.com/share/17374e3Pc1/ தான் இருந்த வாகனத்திற்குள் விளக்கை அணைத்து மீண்டும் போட்டு மக்கள் ஆரவாரம் செய்து தெரிந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டு மீண்டும் மீண்டும் செய்தத ரசித்திருக்கிறது இந்த நடிக மாமேதை....

சமையல் செய்முறைகள் சில

2 weeks 1 day ago
மனிசருக்கு எதிரியே நாக்கு தான்.மூளை வேண்டாம் வேண்டாம் எண்டு எச்சரிச்சாலும் நாக்கு சொல்வழி கேக்காது.😂 இஞ்சை பார் சிறித்தம்பி நெத்தலி பிரட்டலுக்காக பிளைட் எடுத்து சிலோனுக்கு போகோணும் போல கிடக்காம்.😄 சைவ பழத்துக்கு(சுவியர்) நெத்தலி பொரியல்-லெமென் றைஸ் காம்பினேஷன் என்னெண்டு தெரியும்? ஒரு வேளை கேள்வி ஞானமாய் இருக்குமோ? 😂

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 weeks 1 day ago
“கும்பலைக் கூட்டுறான் கொடியை நாட்டுறான் கொஞ்சநேரம் நின்று பாத்தால் உண்டியலை நீட்டுறான்…” கட்சி வளர்ச்சிக்காக உண்டியலை நீட்டியவர் கருணாநிதி அல்லவா?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
1) இந்தியா 2) இலங்கை 3) அவுஸ்திரேலியா 4) பாகிஸ்தான் 5) தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா 7) இந்தியா 8) நியூசிலாந்து 9) இங்கிலாந்து 10) அவுஸ்திரேலியா 11) இந்தியா 12) நியூசிலாந்து 13) இங்கிலாந்து 14) - இந்தியா 15) தென்னாபிரிக்கா 16) நியூசிலாந்து 17) இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா 19) தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து 21) இந்தியா 22) இலங்கை 23) தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா 25) இந்தியா 26) இலங்கை 27) அவுஸ்திரேலியா 28) நியூசிலாந்து 29) இந்தியா 30) அவுஸ்திரேலியா 31) வங்காளதேசம் 32) தென்னாபிரிக்கா,அவுஸ்திரேலியா,இந்தியா ,நியூசிலாந்து 33) அவுஸ்திரேலியா 34) அவுஸ்திரேலியா 35) மும்பை 36) கொழும்பு 37) பாகிஸ்தான் 38) வங்காளதேசம் 39) இந்தியா 40) வங்காளதேசம் 41) ஆம் 42) ஆம் 43) அவுஸ்திரேலியா 44) இந்தியா 45) அவுஸ்திரேலியா 46) இந்தியா 47) அவுஸ்திரேலியா

குட்டிக் கதைகள்.

2 weeks 1 day ago
Baskar Jayraman Mookkammal serSnootdp0 6r10he1sf4530pm0te8t1 efbtgma1c86ca:26c27g63,89c · #இதுதான்_பிரபஞ்ச_விதி விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் அவரை அனுமதிக்கச் சொன்னார். 2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து, "இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... மேலும் , அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் வாங்க வேண்டாம்" என்றும் தனது ஊழியர்களிடம் கூறி சென்றார். நோயாளி சுமார் 15-20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது, மருத்துவர் (மருத்துவமனையின் உரிமையாளரும்) அவரது இறுதி அறிக்கையை பரிசீலனைக்கு பெற்றார். அதனுடன் அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் ரசீது வழங்கப்பட்டது. டாக்டர் அவருடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து, "இவரிடம் ஒரு பைசா கூட வாங்க வேண்டாம். அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வாருங்கள்" என்றார். நோயாளி சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவர் நோயாளியிடம், "தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?" நோயாளி கூறினார், "நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கே என்று ஞாபகம் இல்லை..." டாக்டர் சொன்னார், "நாலு வருஷத்துக்கு முன்னாடி, சூரியன் மறையும் சமயத்துல ஊருக்கு அப்பால் அந்த காட்டில் ஒரு காரை சரி பண்ணினீங்க. இப்போது ஞாபகம் வருகிறதா?" "ஆமா சார், நல்லா ஞாபகம் இருக்கு..." "அன்றைய தினம் நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, கார் பழுதாகி விட்டது. சுற்றிலும் வெறிச்சோடிய காடுதான் இருந்தது. குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் கவலையும் பயமும் படர்ந்திருந்தது. நாங்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். சிறிது நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது. நீங்கள் பைக்கில் வந்தீர்கள்... பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் பிரச்சனைக்கு காரணம் கேட்டீர்கள். பிறகு காரின் பானட்டைத் திறந்து சரிபார்த்தீர்கள்... சில நிமிடங்களில் கார் ஓடத் தொடங்கியது. நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வீடு வந்து சேர்ந்தோம். அந்த வனாந்திரக் காட்டில் இரவைக் கழிக்க வேண்டும்' என்ற எண்ணமே எங்களுக்குக் குமுறலை ஏற்படுத்தியதால், எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்களிடம் அனுப்பியது போல் உணர்ந்தோம். நீங்கள் ஒரு கேரேஜ் நடத்துகிறீர்கள் என்று சொன்னீர்கள். அத்தகைய கடினமான சூழ்நிலையில் உங்கள் உதவிக்கு விலை இல்லை, அது விலைமதிப்பற்றது. ஆனாலும், நான் உங்களிடம்,: "எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டேன். அந்த நேரத்தில், நீங்கள் கூப்பிய கைகளுடன் பேசிய வார்த்தைகள்,* எனது விதியும் கொள்கையும் என்னவெனில்... பிரச்சனையில் இருப்பவரின் உதவிக்காக நான் எதையும் திரும்பப் பெறுவதில்லை. இந்த வேலையின் கணக்கை என் கடவுள் வைத்திருப்பார்." என்றீர்கள். அந்த வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தன. பெயரளவிலான வருமானம் உள்ள ஒருவரால் இவ்வளவு உயர்ந்த எண்ணங்களும், மதிப்புகளும் இருக்க முடியும் என்றால்..., அவற்றை நாமும் பின்பற்றினால் என்ன?' என்று அன்று நினைத்தேன். அன்றிலிருந்து, இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன். நான்கு வருடங்கள் ஆகியும், எனக்கு எந்தக் குறையும் இல்லை. உண்மையில், நான் முன்பை விட ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெறுகிறேன். இன்று, இந்த மருத்துவமனை என்னுடையது. நீங்கள் இங்கே என் விருந்தாளி. உங்கள் சொந்த விதியின்படி... என்னால் உங்களிடமிருந்து எதையும் வாங்க முடியாது. இது போன்ற சேவைகள் கடவுளின் அருளாகும். "நீங்கள் இப்போது சந்தோஷமாக வீட்டிற்குச் செல்லுங்கள், உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்." மருத்துவர் கூறிவிட்டு கேபினை விட்டு வெளியே சென்றார். *அந்த நபர் அறையில் வைக்கப்பட்டிருந்த இறைவனின் படத்தைப் பார்த்ததும், அவன் கைகள் தானாக உயர்ந்து, தானாக இணைந்தன... அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனது இதயம் அளவற்ற ஆனந்ததால் நிறைந்தது. நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன. அதுவும் ஆர்வத்துடன். அனைத்து பாவ, புண்ணிய கணக்குகளும் சரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுதான் பிரபஞ்ச விதி.......! 👍 Voir la traduction

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks 1 day ago
நாங்கள் விலங்குகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை. எங்களிடமும் வடக்கிருந்து மரணிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போ எல்லாம் மருந்து மாத்திரைகளில் வாழ்வு போய்க் கொண்டிருப்பதால் திசைகளை எல்லாம் மறந்துவிட்டோம். “கப்பலில் வந்த கொண்டையினரை திறக்க கதாநாயகன் வெளிப்படுவார். அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும். பார்த்தால் அவர் அந்த நாட்டு மொழி பேசுவார். எல்லோரும் ஆச்சரியமாக அவரைப் பார்க்க”, சும்மாதானே கொண்டையினருக்குள்ளே இருக்கிறேன் என்று நாலு நாளா உங்கள் மொழியை படித்தேன் என்று அவர் சொல்லுவார்”.புஸ்பா 2 படத்தில் இந்தக் காட்சியைச் சொல்லி “யாருக்கு கதை விடுறீங்கள்?” என்று புளூச் சட்டை மாறன் டைரக்டரை வாங்கியிருப்பார். படத்தைப் பார்த்தால் அந்தக் காட்சி ஒரு கனவுக் காட்சி. ஆக படங்களை பார்க்க வைக்க ஒரு புளூச்சட்டை மாறன் தேவைதானே. நீங்கள் கதை சொன்னவிதத்தில் கூடவே நானும் உங்களுடன் பயணித்ததை நீங்கள் கவனிக்கவில்லைப் போலும். நன்றாகச் சொன்னீர்கள். பலதையும் கோர்த்து ஆக்கபூரவமான விசயங்களையும் சேர்த்துச் சொன்னீர்கள். ஏன் எங்களையும் கூட உங்களுடன் சேர்ந்து எழுத வைத்தீர்கள். நன்றி யசோதரன். ஆனாலும் பூனைகளும், பொலிஸுகளும் உங்களை ஏன் நாடி வருகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவம் இன்று யேர்மனிய அரசுத் தொலைக்காட்சியான Tagesschauவில் செய்தியாக இடம் பெற்றிருந்தது. இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில், இதுபோன்ற ஒரு அவலமான நிகழ்வொன்றை யேர்மனியரும் சந்தித்திருக்கிறார்கள். 24.07.2010 அன்று யேர்மனியின் டுயிஸ்பெர்க் (Duisburg) நகரில் நடைபெற்ற Love Parade இசை விழாவில், எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெருக்கத்தில், குறுகிய சுரங்க வழியிலிருந்து வெளியேற முடியாமல் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் இன்றும் மீள முடியாத மனநிலை மற்றும் உடல் பாதிப்புகளில் இருக்கிறார்கள். இந்தத் அவலம் நிகழ்ந்ததும், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுமதி வழங்கிய நகர மேயருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நகர மேயருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிகழ்வை குறித்த மேலதிக தகவலுக்கு, https://en.wikipedia.org/wiki/Love_Parade_disaster Love Parade அவலத்தில் ஒரு குழந்தையும் உயிரிழக்கவில்லை, ஏனெனில் பெற்றோர் அவர்களை விழாவிற்கு அழைத்துச் செல்லவில்லை. இதைத் தங்கள் அபிமான நடிகர்களை, தலைவர்களைக் காணவரும் தமிழ்நாட்டுக் குடும்பங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். எம்ஜிஆர் அரசியலில் இறங்கும்போது அவருக்கு இருந்த அரசியல் ஞானமும், கருணாநிதி மற்றும் திமுக பற்றி இருந்த அனுபவமும், இப்போது அரசியலில் ஈடுபட முயல்கின்ற நடிகர் விஜய்க்கு இல்லை என்பதே உண்மை. திமுக தனது அரசியல் வெற்றிக்காக எந்தெந்த வழிகளையும் நாடும் என்பதை எம்ஜிஆர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். எம்ஜிஆர் தனது கட்சியை தொடங்கிய காலத்தில், மலையாளர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதும், எம்ஜிஆர் படங்களை வெளியிடும் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதுமாகச் சம்பவங்கள் பல நடந்தன. திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, திரைகளை கத்தியால் கிழித்து, எம்ஜிஆர் படத் தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி (சாண்டோ சின்னப்பா தேவர் உட்பட)பல வழிகளிலும் எம்ஜிஆருக்கு கருணாநிதி இடைஞ்சல்கள் செய்தார். ஆனால் இதனை எல்லாம் தாங்கி, எம்ஜிஆர் முதல்வரானார். அவர் நடித்த "நீதிக்குத் தலை வணங்கு" திரைப்படத்தில் உள்ள ஒரு பாடல் வரிகள் இப்படி இருந்தன, "பாதுகாவல் போர்வையிலே ஜாதி இன பேதம் சொல்லி ஊர் பகையை வளர்ப்பவன் நீ ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ள நரி போலிருந்து ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன் நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்" இந்தக் கருத்துகள் இன்றும் அரசியல் சூழலில் பொருந்தக்கூடியவை. விஜய் அரசியலுக்கு குதித்திருப்பது, நீரின் ஆழத்தை அறியாமல் ஆற்றில் இறங்கி நீச்சலடிப்பது போன்றதொரு நிலை. அரசியல் ஆறு எவ்வளவு ஆழமாக இருக்கிறது, எத்தனை முதலைகள் வாயைப் பிளந்து அங்கே காத்திருக்கின்றன என்பதையும் அவர் சரியாக தெரிந்து கொள்ளவில்லை. கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு, அரசு உடனடியாக நிதி ஒதுக்கியது. முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றார். இப்படியான அறிவிப்பு திமுகவின் பழைய அரசியல் நடவடிக்கை. இது “தகப்பன் பத்தடி பாய்ந்தால், மகன் பதினாறு அடி பாய்கிறான்” என்பதுபோல் இருக்கிறது. கரூரில் நடந்த விபத்தையும், யேர்மனியில் நடந்த Love Parade பேரழிவையும் ஒப்பிடும்போது, இதுவொரு தனிநபர் தவறு அல்ல. அமைப்புகளின், அனுமதிகளின், திட்டமிடலின் தோல்வி என்பதையும் காண முடிகிறது. கூடவே திமுகவின் கருணாநிதியின் அரசியல் பாதை என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். அரசியல் உலகில் முன்நோக்கு, அனுபவம், திட்டமிடல் இன்றி இறங்கும் முயற்சிகள், கடின சோதனைகளுக்கு உள்ளாகும். பார்க்கலாம் விஜய் என்ன செய்யப் போகின்றார் என்று.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 1 day ago
குரங்கிலிருந்து மனிதன் உருவாகி நாகரீகம் அடைந்தான் என சொல்கிறார்கள். எனக்கு என்னமோ மனிதன் எவ்வளவுதான் நாகரீகம் அடைந்து விண்வெளியை தொடும் அளவிற்கு முன்னேறினாலும் குரங்கின் குணமும் செயல்களும் மாறவேயில்லை என தோன்றுகின்றது. ஏனென்றால் படித்தவர்கள் தான்,படிப்பில் முன்னேறியவர்கள் தான் ,மூளைசாலிகள் தான் போர் எனும் மனித குலத்தை அழிக்கும் செயல்களுக்காக ஆயுதங்களை கண்டு பிடிக்கின்றார்கள்.அரசியல் காரணங்களுக்காக சக மனிதர்களை அழிக்கின்றார்கள். அரசியல் காரணங்களுக்காக மக்களை பஞ்சத்தில் அழிய விடுகின்றார்கள். பாமரன் அன்னியவனை பலியெடுக்கவும் மாட்டான். பலியெடுக்கவும் மாட்டான்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 1 day ago
அரசியல் என்று வந்து விட்டால் இவை தவிர்க்க முடியாதவை. முதலிலேயே சீமான் சொல்லி விட்டார் நாங்கள் 15 வருடங்களாக களத்தில் நின்று கொஞ்சம் கொஞ்சமாக வளருவமாம் தம்பி வந்து அடுத்த முதல்வர் நான் தான் என்பாராம். நாங்க பொத்திக்கொண்டு இருக்கணுமா என்று. மற்றும் தலைவர் மற்றும் புலிகள் இவ்வுலகில் வாழ வெல்ல தகுதியுடையோர் அல்ல. மற்றும் வெற்றி பெற்றவன் மட்டுமே உலகில் புத்திசாலி வீரன் சாதனையாளன்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 weeks 1 day ago
வணக்கம் வாத்தியார் .......! இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் பெண் : என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் பெண் : நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலைகோதி காதோரத்தில் எப்போதுமே உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன் கையோடு தான் கைகோர்த்து தான் உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன் பெண் : வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் பெண் : நீயும் நானும் சேரும் முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே நேரம் காலம் தெரியாமல் நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே பெண் : உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன் உன் தீண்டலில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன் பெண் : வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்......! --- அக்கம் பக்கம் யாருமில்லா ---

மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு

2 weeks 1 day ago
Die Abhängigkeit der deutschen Arzneimittelfirmen vom US-Markt ist groß. Die Vereinigten Staaten sind das wichtigste Exportland für die Branche. 2024 gingen dem Statistischen Bundesamt zufolge Waren im Wert von 27 Milliarden Euro und damit knapp ein Viertel der deutschen Pharmaexporte in die USA. Damit ist die deutsche Pharmabranche wesentlich stärker vom US-Markt abhängig als etwa der Maschinenbau und die Chemieindustrie. Besonders gefragt waren etwa Impfstoffe. https://www.zeit.de/wirtschaft/2025-09/medikamente-zoelle-usa-trump-auswirkungen-deutschland-gxe

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks 1 day ago
பூனையாயினும் ஒரு நல்ல ஆத்மா தான் நிம்மதியாய் வாழ்வை முடிக்க ஒரு இடத்தை தெரிந்துவைத்திருக்கும் . .......அதன் கணிப்பு வீண் போகவில்லை . .....நிஜமாகவே ஒரு நல்ல இடத்தைத்தான் தெரிந்தெடுத்து வைத்திருக்கு ......கதையும் மிக மிக நன்றாய் இருந்தது . ......! 👍
Checked
Tue, 10/14/2025 - 03:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed