புதிய பதிவுகள்2

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

2 weeks ago
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது! யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1448885

ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம்

2 weeks ago
ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம். ஜேர்மனி அரசு 2025 செப்டம்பர் முதல் 2026 டிசம்பர் வரை 154 முக்கிய பாதுகாப்பு ஆயுத கொள்முதல்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு வெறும் 8% மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள பெரும்பான்மையான கொள்முதல்கள் ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி எடுத்துள்ள இந்த “யூரோப் ஃபர்ஸ்ட்” கொள்கை, ஐரோப்பிய பாதுகாப்பு தொழில் துறையை வலுப்படுத்துவதோடு, உக்ரைன்–ரஷ்யா போரை அடுத்து ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பு உற்பத்தியில் சுயாதீனமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448927

4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்!

2 weeks ago
4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்! ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa), 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனம் செலவுகளைக் குறைத்து புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதன் விளைாவக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக AFP செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது உலகளவில் சுமார் 103,000 பேரைப் பணியமர்த்துகிறது. அதன் வலையமைப்பில் யூரோவிங்ஸ், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், சுவிஸ், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் இத்தாலியின் புதிய முதன்மை விமான நிறுவனமாக அண்மையில் கையகப்படுத்திய ஐடிஏ ஏர்வேஸ் ஆகியவை அடங்கும். ஜேர்மனி இரண்டாவது வருட மந்தநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வேலையின்மை மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. அதே நேரத்தில் நாட்டின் பெரிய நிறுவனங்கள் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள், சீனாவின் போட்டி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் மெதுவான முன்னேற்றத்தை சமாளிக்க போராடி வருகின்றன. லுஃப்தான்சா மட்டுமே ஜேர்மன் நிறுவனமான ஊழியர்களைக் குறைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு, தொழில்துறை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான போஷ், உலகளவில் 13,000 வேலைகளை குறைப்பதாகக் கூறியது, இது அதன் பணியாளர்களில் 3% ஆகும். மறுசீரமைப்புடன், லுஃப்தான்சா 2028 முதல் 2030 வரையிலான ஆண்டுகளுக்கு புதிய நிதி இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 8% முதல் 10% வரை சரிசெய்யப்பட்ட இயக்க இலாபத்தை அடைவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வேகமாக மாறிவரும் விமானப் போக்குவரத்துத் துறையில் போட்டித்தன்மையுடன் இருக்கவும், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் கடினமான பொருளாதார சூழலுக்குத் தயாராகவும் நிறுவனத்தின் முயற்சியை இந்த வேலை குறைப்புகள் பிரதிபலிக்கின்றன. https://athavannews.com/2025/1448910

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks ago
கரூரில் அரசியல் பலத்தை காட்ட விஜய் தாமதமாக வந்தார்.. எப்.ஐ.ஆரில் போலீசார் பரபரப்பு தகவல் Mani Singh SUpdated: Monday, September 29, 2025, 13:20 [IST] கரூர்: அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக விஜய் வேலுசாமிபுரம் வந்தார் என்று போலீஸ் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தவெக தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். மரக்கிளை முறிந்த‌தால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை என எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. Also Read "அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாம‌தம். மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர், மரக்கிளை முறிந்த‌தால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர் - அசாதாரண சூழல் * ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை * கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்த‌த்தால் மக்கள் உடல் நிலை சோர்வு. கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்" என்று எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர் அறிக்கை போலீஸ் எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பதாவது:- கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 கரூர் அவர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது. கரூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளராகிய நான் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ புறக்காவல் நிலைய ருந்து 21.00 மணிக்கு கிடைக்கப்பட்ட மருத்துவமனை தகவலீ, அடிப்படையில் வழதிவு செய்த விபரம் பின்வருமாறு. தமிழக வெற்றிக்கழகம் மேற்கு மாவட்ட அவர்கள் அவரது கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் கரூர் மாவட்டத்தில் செயலாளர் திரு.மதி பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தின் (456/Pet/1/5DOP/KRR/2025 Dt. 26.09.25) அடிப்படையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 ம் தேதி கரூர் நகர உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் ந.க.எண்.278/கா.து.கா/கா.உ./கரூர்/2025 நாள்.26.09.25 செயல்முறை ஆணையின்படி 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு இன்று 27.09.2025 ம் தேதி கனம் காவல் துறைத்தலைவர் மத்திய மண்டலம் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் ஊர்க்காவல்படையை சேர்ந்த சுமார் 500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். Recommended For You எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன் தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் திணறல் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகளிடமும் பொது செயலாளர் புஷி ஆனந்திடமும் மற்றும் இணை செயலாளர் CTR நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிடமும் நானும் காவல் துணைக்கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன். நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் மடுபட்டதால், போதிய பாதுகாப்பில் போலீசார் வழங்கியபோதும், தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர கையாளவில்லை. ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி தகர கொட்டகை உடைந்தும் மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே விழுந்தனர். வேண்டும் என்றே லேட் ஆக வந்த விஜய் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. தவெக கட்சியின் கரூர் ஏற்பட்டாளர்களுக்கு விஜய் அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு மாலை 03.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. You May Also Like குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் அவர்கள் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியும் அந்த நீண்ட தாமரத்தின் காரணமாக இவை நேர்ந்தன.. என்று கூறபப்ட்டுள்ளது. https://tamil.oneindia.com/news/karur/vijay-came-late-to-show-off-his-political-strength-in-karur-shocking-information-in-police-fir-739261.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks ago
என்னது விஜை என் அபிமான நடிகரா…. ஆனாலும் என் மேல் இப்படி அவதூறு பரப்ப கூடாது. என் அபிமான நடிகன் என்றால் அது எப்போதும் நம்ம பரட்ட சார்தான். “ கு…கு..கூ…கூலி பவர் ஹவுசூ” இங்கே உங்களுக்கும் இன்னும் சிலருக்கும் அனைவருக்கும் எனையோரை பற்றி சில மட்டமான பார்வை இருக்கிறது. இவர் ஒரு நடிகரின் அரசியல் வரவை ஆதரிக்கிறார் ஆகவே இவர் ஒரு விசிலடிச்சான் குஞ்சு ஒரு நடிகர் எனவே அவர் மொக்கனாகதான் இருப்பார் இவை இரெண்டுமே உங்கள் போன்றோரின் மேட்டுகுடிவாதம். அரசியல் என்பது எந்த நிலையில் இருப்பவராலும் செய்ய முடியும் அவருக்கு அந்த தன்மை இருப்பின். முக முத்து அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் என்ன முக்கியும் முடியவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாத துறையில் இருந்து வந்த ஜெ அரசியலில் மிளிர்ந்தார். அதே போல் நல்லாட்சியை கொடுத்த ரீகனும், சுவாஸ்னேகரும் கூட நடிகர்கள்தான். என்னை பொறுத்தவரை நான் எவரையும் அவரின் தொழிலை பார்த்து எதிலும் ஒதுக்குவதில்லை. விஜை கொள்கைகள் என்ன, அவரின் அரசியல் எதை ஆதரிக்கிறது எதை எதிர்கிறது என ஆராய்ந்த போது அது எனக்கு ஏற்புடையதாக தெரிந்ததால் ஆதரித்தேன். இதையேதான் ஆரம்பத்தில் சீமான் களத்துக்கு வந்த போதும் செய்தேன். ஆதரவு அவரை இனம் கண்ட பின் எதிர்ப்பாக மாறியது. நாளைக்கு விஜை தடம்புரண்டாலும் இதுவே. எங்களுக்கு டவுட்.. இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு ஏன்? அத்தனை டாக்டர் எப்படி? தவெக வழக்கறிஞர் கேள்வி Rajkumar RUpdated: Monday, September 29, 2025, 14:16 [IST] மதுரை: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் இந்திய முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் இரவோடு இரவாக கரூர் வந்ததோடு, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த அனைவரின் உடல்களையும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என தவெக தரப்பு வழங்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சம்பவம் உலுக்கியுள்ள நிலையில், மருத்துவமனையில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்குறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக கரூர் மற்றும் அதனைச் சுற்றி இருந்த மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். Also Read இந்நிலையில், உயிரிழந்த அனைவரின் உடல்களையும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என தவெக தரப்பு வழங்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? அதுவும் ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? Recommended For You குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்பது விதி, உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? விஜய் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனால் சந்தேகம் இருக்கிறது. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய்." என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/41-dead-in-karur-crowd-crush-at-vijay-s-campaign-tvk-lawyer-raised-questions-on-medical-procedures-739283.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

சமையல் செய்முறைகள் சில

2 weeks ago
இது ஒரு நல்ல கேள்வி கு . சா ........ நான் மச்சம் சாப்பிடுவதை விட்டு ஒரு 18/20 வருடங்கள் இருக்கும் ........பிரான்ஸ் வந்தபின்னும் சாப்பிட்டானான் ........! __ வீட்டில குழல் புட்டு அவிக்க சொல்லிவிட்டு மாதகல் போய் முரல்கருவாடு சிற்பம் வாங்கி வந்து அடுப்புத் தணலுக்குள் சுட்டு புட்டுடன் சாப்பிடுறனான் .......! __கருமேகங்கள் குவிந்து மழை பொழியும் நேரம் பொன்னாலையில் ஓரா, பண்ணைப்பாலத்தில் ஒட்டி , மற்றும் காரையூர் , சின்னக்கடை சந்தை , பாசையூர், கொழும்புத்துறை படகுகளில் வரும் மீன்கள், நாவற்குழியடியில் விசேஷமான கயல் என்று வாங்கி விழுங்கிய நாட்கள் பல ......! __ அன்று முற்றவெளி முனியப்பர் கோயிலில் இறைச்சி படையலிட்ட நாளில் இருந்து (பின்பு அது நிறுத்தியாச்சுது ) கவனாவத்தையோடு மற்றும் பல கோவில்களின் வேள்வி இறைச்சிகள் , பரந்தனில் இருந்து வவுனியா மடு ஈறாக காட்டு வேலைகள் விதம் விதமான இறைச்சி வகைகளுக்கு குறைவில்லை . .......! __ கோழி முட்டை , மீன் முட்டை என்று பலப்பல முட்டைகள் எதையுமே விட்டதில்லை ......! __ ப்ளவுஸ் ,மொக்கங் கடை என்று கொழும்பு ஈறாக எத்தனை எத்தனையோ கடை சாப்பாடுகள் ......! அப்படியெல்லாம் சாப்பிட்டதால்தானோ என்னமோ இப்போ பல வருடங்களாக முட்டை கூட தொடுவதில்லை . ......ஆனால் அந்த சுவை இன்னும் நாக்கில் ........! மலரும் நினைவுகளை மீட்ட கேள்வி தொடுத்த உங்களுக்கு நன்றி . .......! 😇

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks ago
சீமான் விருப்பம்போல் நடக்கிறதா! பகற்கனவு!!. சீமான் விருப்பம்போல் நடைபெற்றிருந்தால் இப்போது தமிழ்நாடு தனிநாடாக மிளிர்ந்திருக்கும். உலகில் தமிழனுக்கு என்று ஒரு அரசும் பிறந்திருக்கும். திராவிடம் என்று தமிழினத்தின் காலைச் சுற்றிய பாம்பிடமிருந்து கடிபடாமல் மீண்டிருக்கும். இலங்கையிலும் அதற்கு ஒரு வாரிசு உருவாகியிருக்கும்.😌

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks ago
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? இங்கிலாந்து ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? - பாகிஸ்தான் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா தென்னாபிரிக்கா 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? கொழும்பு 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து

மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை

2 weeks ago
திறந்து மறுநாளே மூடப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம்; மூன்றரை வருடங்களுக்கு பின் நாளை மீண்டும் அங்குரார்ப்பணம் 29 Sep, 2025 | 10:45 AM யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணிக்கு மீள அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. அந்நிகழ்வில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, வர்த்தக வாணிப பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்த்தன, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. விவசாயிகள் தமது அறுவடைகளுக்குத் தகுந்த விலையை பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோர் மலிவு விலையில் மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. 2022இல் திறந்துவைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் மறுநாளே மூடப்பட்டது. அதன் பின்னர் கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேலாக பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள், கடைக்கான முற்பணத்தை வழங்கியபோதும் இதுவரை வியாபார நடவடிக்கை நடைபெறவில்லை. அந்தப் பகுதியைப் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும். விவசாயிகளுக்கும் தென்பகுதி வியாபாரிகளும் இந்த வியாபார நிலையத்தை நோக்கி வருவதற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். அதற்காக தமக்கு சில சலுகைகளை வழங்கவேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்தின் பின் இந்த பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் மீள திறக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/226376

பூநகரியில் விபத்து; 5 வயது சிறுமி பலி!

2 weeks ago
Published By: Digital Desk 1 29 Sep, 2025 | 10:30 AM பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் 18வது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூநகரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், அதன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உடன் பயணித்த சிறுமியும் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுமி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரி பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/226373

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

2 weeks ago
பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றாலும் கோப்பையை வாங்காத இந்தியா - சூர்யகுமார் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் 41 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி, பைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பை வென்றுள்ளது. துபை சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற பரபரப்பான பைனலில், இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நடப்பு ஆசிய கோப்பையில், மூன்றாவது முறையாக பாகிஸ்தான் உடனான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா நீக்கம் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த பாண்ட்யா, முழு உடற்தகுதியை எட்டாததால் அணியில் சேர்க்கப்படவில்லை. ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு, கடந்த ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டிருந்த ஷிவம் துபே மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆல்ரவுண்டர் பாண்ட்யா இல்லாததால் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக, அதிரடி ஃபினிசர் ரிங்கு சிங் உள்ளே கொண்டுவரப்பட்டார். பாகிஸ்தான் அணி, கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியது. நேற்றைய ஆட்டத்திலும் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கவில்லை. டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டனுடன் மட்டும் ரவி சாஸ்திரி உரையாடினார். பாகிஸ்தான் கேப்டனுடன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் பேசினார். பட மூலாதாரம், Getty Images பவர்பிளேவில் அசத்திய ஃபர்ஹான்–ஜமான் ஹர்திக் பாண்ட்யா இல்லாததால், முதல் ஓவரை துபே வீசினார். வழக்கமாக பவர்பிளேவில் சொதப்பும் பாகிஸ்தான், நேற்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடியது. ஃபர்ஹான் தாறுமாறாக பேட்டை சுழற்றியும் முதல் இரு ஓவர்களில் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே கிடைத்தன. துபே ஓவரை குறிவைத்து தாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் அவர் களமிறங்கியது போல இருந்தது. ஆனால், தன்னால் முடிந்த வரையில் துபே கட்டுப்பாட்டுடன் வீசி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். பும்ராவின் இரண்டாவது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்சர் விளாசிய ஃபர்ஹான், டி20 கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சில் 3 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிரடி காட்டிய ஃபர்ஹானுக்கு மற்றொரு தொடக்க வீரர் ஜமான் உறுதுணையான நிற்க, பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் எடுத்தது. பட மூலாதாரம், Getty Images அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் நடப்பு ஆசிய கோப்பையில் இந்தியாவின் துருப்பு சீட்டாக திகழும் குல்தீப் யாதவ் தனது முதல் இரு ஓவர்களில் 23 ரன்களை கொடுத்தார். 150 ஸ்ட்ரைக் ரேட்டில் 57 ரன்கள் குவித்த ஃபர்ஹான் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி கைப்பற்ற, ஆட்டத்தில் முதல் திருப்புமுனை ஏற்பட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு நடப்பு தொடரில் நான்கு முறை ' டக் அவுட்' ஆன சைம் அயூப் களமிறங்கினார். ட்ரிங்க்ஸ் இடைவேளைக்குப் பிறகு துபே ஓவரில் சைம் அயூப் இரு பவுண்டரிகளை விளாச, 12–வது ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்களைத் தாண்டி நல்ல நிலையில் இருந்தது. குல்தீப் யாதவ் பந்தில் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து சைம் அயூப் (14) ஆட்டமிழக்க, நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹாரிஸ், அக்சர் படேலின் அடுத்த ஓவரிலேயே ரன் ஏதுமின்றி நடையைக் கட்டினார். பட மூலாதாரம், Getty Images ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப் இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், வருண் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக இரண்டாவது சிக்சர் அடிக்கும் முயற்சியில் ஜமான் (46) பாயிண்ட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்தார். அக்சர் படேலின் அடுத்த ஓவரில் தலத்தும் (1) பெவிலியன் திரும்ப, தனது கடைசி ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, ஷாஹின் ஷா அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரஃப் என 3 விக்கெட்டுகளை குல்தீப் தூக்கினார். பந்து உள்ளே வருகிறதா வெளியே செல்கிறதா என்ற குழப்பத்திலேயே 3 விக்கெட்டுகளும் விழுந்தன. அடுத்த ஓவரில் ஹாரிஸ் ராஃப்பை பவுல்டாக்கிய பும்ரா, விமானம் வீழ்வது போல சைகை காண்பித்து அவர் பாணியிலேயே பதிலடி கொடுத்தார். இப்படியாக, தொடர்ச்சியாக 6 ஓவர்களில் விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்தது. இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தில் முகமது நவாஸ் விக்கெட்டை பும்ரா கைப்பற்ற, 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி 9 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு பறிகொடுத்தது மரண அடியாக அமைந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பட மூலாதாரம், Getty Images பைனலில் ஏமாற்றிய அபிஷேக் சர்மா 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கடைசி இரு ஆட்டங்களில் அப்ரிடியின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய அபிஷேக் சர்மா, இந்தமுறை இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த தொடரில் இந்தியா அணியின் பேட்டிங் தூணாக விளங்கும் அபிஷேக் சர்மா (5) விக்கெட்டை, இரண்டாவது ஓவரிலேயே ஒரு குறைவேகப்பந்தில் ஃபஹீம் அஷ்ரஃப் கைப்பற்றினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஃபார்மில் இல்லாத கேப்டன் சூர்யகுமார் யாதவ், அடுத்த ஓவரிலேயே அப்ரிடியின் குறைவேகப்பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பிட்ச்சின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தை கூடக் குறைத்து மாற்றி மாற்றி வீசினர். ஃபஹீம் அஷ்ரஃபின் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக ஒரு கட்டர் பந்தில் கில்லும் (12) ஆட்டமிழக்க, ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம்சன், திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ச்சியாக மூன்றாவது ஓவரை வீசிய ஃபஹீம் அஷ்ரஃப் பந்துவீச்சில் திலக் வர்மா, பவுண்டரியும் சிக்சரும் விளாச, பவர்பிளே முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. பட மூலாதாரம், Getty Images ஆபத்பாந்தவனாக மாறிய திலக் வர்மா பவர்பிளேவுக்குப் பிறகு இந்திய அணியின் மீது சுழல் தாக்குதலை பாகிஸ்தான் தொடுக்க, திலக், சாம்சன் இருவரும் நிதானமாக விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப்பை காட்டினர். இந்திய வீரர்கள் நிலைத்து நின்று விளையாடி, செட்டில் ஆக கூடாது என்பதற்காக முதல் 10 ஓவர்கள் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். தேவைப்படும் ரன் ரேட் உயர்ந்தபடி இருந்ததால், அதிரடியை தொடங்கிய சாம்சன் அயூப் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் ஒரு அபார சிக்சர் அடித்தார். ஆனால், லெக் ஸ்பின்னர் அப்ரார் வீசிய அடுத்த ஓவரில், இன்சைட் அவுட் ஷாட் அடிக்க முயன்று 24 ரன்களில் பாயிண்டில் ஃபர்ஹானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 6–வது விக்கெட்டுக்கு துபே இயங்கிய நிலையில், ஹாரிஸ் ராஃப் வீசிய 15–வது ஓவரில் 1 சிக்சர் 2 பவுண்டரிகள் உள்பட 17 ரன்களை இந்தியா குவித்தது. கடைசி 30 பந்துகளில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்ரார் அஹமது, ஹாரிஸ் ராஃப் ஓவர்களில் துபே சிக்சர்கள் விளாசினார். 12 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த துபே (33), ஃபஹீம் பந்தில் லாங் ஆஃப் திசையில் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பட மூலாதாரம், Getty Images கடைசி ஓவரில் என்ன நடந்தது? கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட, நடப்பு தொடரில் முதல்முறையாக ஆடும் லெவனில் வாய்ப்பு பெற்ற ரிங்கு சிங் களம்புகுந்தார். குறைவான ஓவர் ரேட் காரணமாக உள்வட்டத்தில் கூடுதல் பில்டர் நிற்க வைக்க பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டது. ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் பந்தில் திலக் வர்மா இரு ரன்கள் ஓட, அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் அடித்து ஆட்டத்தை கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார். மூன்றாவது பந்தில் திலக் வர்மா சிங்கிள் எடுத்த நிலையில், ஸ்கோர் சமமானது. நான்காவது பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி விளாச, ஒன்பதாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. வழக்கத்துக்கு மாறாக டாப் ஆர்டர் கைகொடுக்காத நிலையில், கடைசி வரை நிலைத்து நின்று விளையாடிய திலக் வர்மா 69 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு ஆட்டத்தை வென்றளித்தார். பட மூலாதாரம், Getty Images ஏன் இந்தியா கோப்பையை வாங்க மறுத்தது? ஆசிய கோப்பை பைனலில் கடைசி ஓவர் திரில்லரில் வென்ற பிறகும், இந்திய அணிக்கு கோப்பையும் மெடலும் வழங்கப்படாதது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மொஷின் நக்வி. இவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் செபாஷ் ஷெரீப் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருக்கிறார். வெற்றிபெறும் அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மொஷின் நக்விதான் வெற்றிக் கோப்பையை வழங்குவதாக இருந்தது. ஆனால், இந்திய அணி நிர்வாகம், ஆசிய கோப்பை மற்றும் வீரர்களுக்கு அணிவிக்கப்படும் மெடல்களை மொஷின் நக்வியிடம் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உள்ளூர் நேரப்படி ஆட்டம் 10.30 மணிக்கே முடிவடைந்த போதும், நள்ளிரவு வரை பரிசளிப்பு நிகழ்ச்சி தாமதமானது. தாமதமாக தொடங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா மட்டும் நக்வியிடம் இரண்டாமிடம் (runners-up) பிடித்த அணிக்கான காசோலையை பெற்றுக்கொண்டார். பட மூலாதாரம், Getty Images ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும் தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மேடையில் இருந்த பிற விருந்தினர்களிடம் பெற்றுக்கொண்டனர். இந்திய அணியினர் விருது பெறும்போது மொஷின் நக்வியை தவிர்த்து மற்ற அனைவரும் கை தட்டினர். இந்திய அணி மீது பாகிஸ்தான் கேப்டன் விமர்சனம் இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல; அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை. நாங்கள் கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்து எங்கள் கடமையைச் சரியாக செய்துவிட்டோம்." என்றார். தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் தன்னுடன் கைகுலுக்கிய சூர்யகுமார் யாதவ், கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுப்பதாக சல்மான் அகா குற்றம்சாட்டினார். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி, அவர் அப்படி நடந்துகொண்டார் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில், நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்பது ஓர் அணியாக எடுத்த முடிவு என்று தெரிவித்த சூர்யகுமார், இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தங்களுக்கு யாரும் அறிவுறுத்தவில்லை என்றார். சூர்யகுமார் கூறியது என்ன? பரிசளிப்பு விழா முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்." எனக் கூறினார். மொஷின் நக்வி நடந்துகொண்ட விதம் குறித்து நவம்பரில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் முறையிட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இப்படியாக, சர்ச்சையுடன் தொடங்கிய ஆசிய கோப்பை, எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காணப்படாமல் மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்ச்சையுடனே முடிந்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn95e9pvz20o

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks ago
மிக்க நன்றி செம்பாட்டான். உங்களுக்கு இது பிடித்திருந்தது மிக்க மகிழ்ச்சி. உங்களின் எழுத்து நடை மிகவும் இரசிக்கத்தக்கது. நாங்கள் பலரும் அதை ஆடுகளத்தில், கள போட்டிகளில் பார்த்திருக்கின்றோம். மற்றைய பகுதிகளிலும் நீங்கள் எழுதுங்கள்..........🫱‍🫲. கொஞ்சம் சோம்பேறித்தனம், எதையுமே அவ்வளவு பொருட்டாக எண்ணாத ஒரு மனம் இருந்தால், பலவற்றையும் கோர்த்து எழுதுவது சுலபமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி!

2 weeks ago
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி! கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திர உறவுகள் இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும், இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும் தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் இணைவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். டோக்கியோவில் உள்ள Reiyukai மண்டபத்தில் நேற்று (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில், மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஜப்பானில் வசிக்கும் பலர் கலந்து கொண்டனர். இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியேயோ வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகள் அல்லது நலன்களை எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரும் எதிர்பார்த்த மாற்றத்திற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அரசாங்கத்தின் ஒரு வருட பயணத்தின் வெற்றியை அளவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிறுவுதல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல், ஊழல் மற்றும் மோசடி இல்லாத ஆட்சியை நிறுவுதல் மற்றும் அரச இயந்திரத்தை செயற்திறனுள்ளதாக்குதல் போன்ற மக்கள் எதிர்பார்க்கும் புதிய மாற்றங்களுக்கு அரசாங்கம் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க பணிகளை நிறைவேற்றியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்தோடு வெளியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் பொருளாதாரத்திற்குள் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கவில்லை என்றும், எதிர்காலத்தில் சில வரி விகிதங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கட்டியெழுப்பப்படும் இலங்கையில் முதலீடு செய்து, நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்காளராகுமாறு ஜப்பானில் வாழும் இலங்கையரிடம் இதன் போது கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி பதிலளித்தார். ஜப்பானில் வாழும் இலங்கை சமூகத்தினரிடையே உரையாற்றிய ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது: இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்திற்கு நீங்கள் பல்வேறு வழிகளில் ஆதரவளித்துள்ளீர்கள். செப்டம்பர் 21 ஆம் திகதி ஏற்பட்ட அந்த அரசியல் திருப்பத்தில் நீங்கள் பங்கேற்பாளராகவும் பங்குதாரர்களாகவும் மாறிவிட்டீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து இப்போது ஒரு வருடம் நிறைவடைகிறது. இந்த ஒரு வருட காலத்தை எந்த அளவுகோலால் அளவிட வேண்டும்? கடந்த ஆண்டு நல்லதா கெட்டதா என்பதை, நாங்கள் அரசாங்கத்தை அமைத்தபோது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளால் அளவிட வேண்டும். அவ்வாறின்றி, நாங்கள் ஆட்சி அமைத்தபோது வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தவர்களின் கருத்துகளின் அடிப்படையில் அல்ல. அன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்க எந்த நோக்கத்திற்காக ஆதரித்தீர்கள்? வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களான நீங்களோ அல்லது எங்கள் அரசாங்கத்தை உருவாக்க பங்களித்த இலங்கையில் உள்ள எவருமோ தனிப்பட்ட ரீதியில் எதையும் சம்பாதிக்கும் நோக்கிலோ, சலுகை பெற வேண்டுமென்றோ தனிப்பட்ட முறையில் ஏதாவது பெற வேண்டும் என்ற நோக்கத்துடனோ செயல்படவில்லை. எனவே, நீங்கள் அனைவரும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் சென்று ஒரு நாடாக, ஒரு தேசமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் விருப்பத்துடன் மட்டுமே பங்களித்தீர்கள். ஏற்கனவே இருந்த பாதைக்கு பதிலாக ஒரு புதிய பாதையை உருவாக்கும் நோக்கத்துடன் நீங்கள் செயல்பட்டீர்கள். முதலில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியிருந்தது. இன்று, நாட்டின் பொருளாதாரத்தை நாம் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஸ்தீரப்படுத்தியுள்ளோம். ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதேபோன்று, சட்டத்தின் ஆட்சியை நீங்கள் எதிர்பார்த்தீர்கள். ஒவ்வொரு வளர்ந்த நாட்டிலும் இருக்கும் காரணி என்னவென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நாங்கள் காண்கிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் சட்டத்தை அணுகக்கூடியவர்களும் அணுக முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பது எங்கள் கருத்தாக இருந்தது. அதிகாரத்தாலும் செல்வத்தாலும் இந்த நிலை உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று, சட்டத்தை அணுக முடியாத யாரும் நம் இலங்கையில் வசிக்கவில்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதில், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல் மற்றும் மோசடி மற்றும் ஊழலைக் குறைத்தல் மற்றும் திறமையான அரச பொறிமுறை என்பன அவசியம். இன்று, இலங்கையில் 76 ஆண்டுகால அரசியல் அதிகாரத்திற்குப் பிறகு, பொதுமக்களின் பணம் திருடவோ அல்லது வீணாக்கவோ செய்யாத ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், அரச பொறிமுறையானது இந்த பழைய பழக்கங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். அதை மாற்றுவதற்கான முதல் படியை நாங்கள் எடுத்துள்ளோம். சிறந்த அரச சேவையை உருவாக்க தேவையான அடிப்படை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். வலுவான இராஜதந்திர உறவுகளை உருவாக்குவதும் மிக முக்கியம். உலகில் எந்த நாடும் இனி தனிமையில் வாழ முடியாது. பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளால் நாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளோம். எனவே, தேசிய எல்லைகள் இருந்தாலும், பொருளாதாரத்தில் இனி தேசிய எல்லைகள் கிடையாது. சந்தையில் தேசிய எல்லைகள் இல்லை. அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரு அரசு முன்னேற, வலுவான, நிலையான மற்றும் தெளிவான வெளிநாட்டு உறவுகள் அவசியம். கடந்த ஆண்டில், நமது இராஜதந்திர உறவுகளில் பராமரிக்கப்பட வேண்டிய சமநிலையை எம்மால் குறிப்பிடத்தக்க அளவில் பராமரிக்க முடிந்தது என்று நான் நினைக்கிறேன். இந்த அடிப்படைகளை நிறுவாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மேலும், வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் மதங்கள் நம் நாட்டில் வாழ்கின்றன. அவர்களுக்கு அவற்றின் தனித்துவமான கலாச்சாரங்கள் உள்ளன. எனவே, நமது நாடு பல்வேறு மக்கள் நிறைந்த நாடு. நமது நாட்டை முன்னோக்கி நகர்த்த, இந்த மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஆனால் நீண்டகால அரசியல் போராட்டத்தின் காரணமாக, இந்த மக்கள் பல்வேறு இன மோதல்கள் மற்றும் மத மோதல்களை உருவாக்குவதன் மூலம் ஒருவருக்கொருவர் அந்நியப்படுத்தப்பட்டனர். புவிசார் அரசியல் இயக்கம் அத்தகைய இன ஆதாரங்கள் மற்றும் சித்தாந்தங்களுடன் கட்டமைக்கப்பட்டது. எனவே, மோதல்கள் நிறைந்த ஒரு நாடு, ஒருவருக்கொருவர் பிரிவினையையும் வெறுப்பையும் விதைக்கும் ஒரு நாடு முன்னேற முடியாது. எனவே, நம் நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை, மொழி வேறுபாடுகள் மற்றும் மத வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளும் ஒருமித்த கருத்தைக் கொண்ட ஒரு அரசை நாம் கட்டியெழுப்ப வேண்டும். கடந்த ஆண்டு இலங்கையின் வரலாற்றில் எந்த இன மோதல்களும் அதிகரிக்காத ஆண்டு என்று நான் நினைக்கிறேன். ஆனால் நாம் மேலும் முன்னேற வேண்டும். ஒரு வலுவான கட்டிடத்தை கட்டியெழுப்ப, நமக்கு மிகவும் வலுவான அடித்தளம் தேவை. ஆனால் நம் நாடு அடித்தளம் உடைந்த ஒரு நாடு. இன்று நாம் அந்த அடித்தளத்தை அமைத்துவிட்டோம். கடந்த ஆண்டு நமது நாட்டை முன்னோக்கி கட்டியெழுப்ப தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்த ஆண்டு. இப்போது நாம் இந்த அடித்தளத்தின் மீது கட்டிடங்களை கட்டத் தொடங்க வேண்டும். இந்த அடித்தளத்தில் நாட்டை கட்டியெழுப்பும்போது, அரசாங்கத்திற்கு சவால்கள் உள்ளன. நாட்டிற்கு ஒரு சவால் உள்ளது. மக்களுக்கும் ஒரு சவால் உள்ளது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால் வருவாயை ஈட்டுவதாகும். நாடு எதிர்கொள்ளும் சவால் பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்ய தேவையான டொலர்களை ஈட்டுவதாகும். மேலும் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் அவசியம். எனவே, அரசாங்கம் வருவாயை ஈட்ட வேண்டும். இலங்கையில் முதல் முறையாக, வரவு செலவுத் திடத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் வருவாயை விட இந்த ஆண்டு அதிக வருவாயை ஈட்ட முடிந்தது. அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து வருவாயை ஈட்டுவதற்கு பதிலாக, அரசாங்கம் ஒரு வெளியில் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அந்த வெளிப் பொருளாதாரத்தை தயார் செய்வதற்கு தேவையான சட்ட ஆதரவு மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் வகிபாகமாகும். வெளிப் பொருளாதாரம் வளரும்போது, வரி விகிதம் குறைந்து மக்கள் நிவாரணம் பெறுவர். அதன்படி, இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்த புதிய வரிகளையும் அறிமுகப்படுத்தாதிருக்க எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் சில வரி விகிதங்களை குறைப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். இவ்வாறு எங்களிடம் பொருளாதாரத் திட்டங்கள் உள்ளன. அதற்காக, வெளியிலே பாரிய பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும். அதில், சுற்றுலாத் துறையில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். 2030 ஆம் ஆண்டுக்குள் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 8 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக, வர்த்தகர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருவதோடு சுற்றுலாத் துறைக்குத் தேவையான சூழலை உருவாக்குகிறது. மேலும், இலங்கையின் பிம்பத்தை மேம்படுத்துவது இந்த விடயத்தில் முக்கியமானது. இலங்கை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியிடப்படுகின்றன. மேலும், நாடு தற்போது தேவையான முதலீடுகளைப் பெற்று வருகிறது. நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசாங்கம் அதிக முதலீடு செய்ய வேண்டும். அதேபோன்று, தனியார் துறை பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். அரசாங்கத்திடம் அதிக எண்ணிக்கையிலான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பெயர் இருந்தபோதிலும், அவை அந்த நிலத்திற்கு ஏற்ப வருமானத்தை ஈட்டுவதில்லை. எனவே, மிகவும் மதிப்புமிக்க எமது வளமான நிலத்தை மிகச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும். எனவே, தோட்டங்களை வைத்திருக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பலனற்ற அனைத்து நிலங்களையும் வழங்குமாறு நாங்கள் அறிவித்துள்ளோம். அவற்றில் முதலீடு செய்ய உங்களை அழைக்கிறோம். உங்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் பணியாகும். மேலும், தொழில்வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. இன்று, அந்த பொறுப்பை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். எனவே, சில ஆண்டுகள் கடினமாக உழைத்தால், நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமையை பொருளாதார ரீதியாக நாம் போக்க முடியும். மேலும், அரச சேவையை செயற்திறனுள்ளதாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். டிஜிட்டல் மயமாக்கலை அதன் முக்கிய அங்கமாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அடுத்த ஆண்டுக்குள், அரசாங்கத்துடனான அனைத்து கொடுக்கல் வாங்கலும் ஒன்லைனில் செலுத்தப்படும். மேலும், கேள்வி மனுக்கல், மற்றும் சுங்கப் பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். அதை வெற்றிகரமாக மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நமது நாட்டின் சட்டங்களை இயற்றியவர்களே அந்தச் சட்டங்களுக்கு மாறாகச் செயல்பட்டுள்ளனர். சட்டம் இருந்தாலும், அது செயல்படுத்தப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். சட்டம் மட்டும் போதுமானதல்ல. அது செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இப்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று, 40 கட்சிகள் ஒரே அறையில் கூடும் அளவுக்கு அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் பிரஜைகள், சட்டத்திற்கு பயப்பட வேண்டும். அந்த கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும். மேலும், தேசிய பிரச்சினையை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே மேலும் மோதல்கள் இல்லாத வகையில் நாட்டை ஆளுவதே எங்கள் அணுகுமுறையாகும். வடக்கின் மக்கள் போரினால் மோசமாக பாதிக்கப்பட்டனர். இனிமேல் போர் இல்லாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வடக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி மற்றும் சட்டப் பாதுகாப்பு வழங்கி சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ள ஒரு நாட்டையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். நமது குழந்தைகளை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றவும் நாங்கள் பாடுபடுகிறோம். போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. இன்று, இவற்றைக் கட்டுப்படுத்த நாங்கள் பாடுபடுகிறோம். போதைப்பொருள் மற்றும் குற்றங்களின் இந்த மறைவான அரசை மூட முடிவு செய்துள்ளோம். மேலும், இந்த பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும். நாம் மேல்மட்டத்தில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சியைக் காட்டினாலும், மக்களின் வாழ்க்கை மாறவில்லை என்றால், அது பலனளிக்காது. மக்களின் வாழ்க்கையை எப்போதும் ‘அஸ்வெசும’வுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாது. அவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவே, விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். கிராமங்களுக்கு பொருளாதாரத்தையும் விரிவுபடுத்த வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் நமது நாட்டு மக்கள் ஒரு புதிய மாற்றத்தை, ஒரு புதிய பயணத்தை விரும்பியிருந்தால், அந்த புதிய மாற்றத்திற்கும் புதிய பயணத்திற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்கிறோம். அந்தப் பயணத்தில் உங்கள் பங்களிப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களிடமிருந்து ஒரு கிண்ணம் நீர் கூட எங்களுக்கு வேண்டாம். நாட்டிற்கு முதலீடுகளைக் கொண்டு வாருங்கள். மேலும், வெளிநாட்டில் பணிபுரியும் போது நீங்கள் பெற்ற அனுபவங்களை எங்கள் நாட்டிற்கு கொண்டு வாருங்கள். அதற்குத் தேவையான வசதிகளை நாங்கள் தயார் செய்து தருகிறோம். அதன்படி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணத்தின் ஒரு பகுதியாக மாற உங்களுக்கு வாய்ப்பு உள்ளது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1448799

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

2 weeks ago
மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு! நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (NDDCB) தெரிவித்துள்ளது. இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிரோண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனி வீதி, அங்குலானை,வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவை மற்றும் பல இடங்களில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாகி வருவதாகவும் NDDCB குறிப்பிட்டுள்ளது. மேலதிகமாக, கண்டி மாவட்டத்தில் சில பகுதிகள் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் NDDCB தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை போதைப்பொருள் குற்றங்களுக்காக 206 சிறுவர்கள் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்தக் சிறுவர்கள் 39 பேர் நன்னடத்தையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1448821

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks ago
அப்படியொன்றும் கெட்டுப்போகவில்லை 300 கோடி சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வருகிறான் என் தலீவன் ஒரு 30,000 அணில்குஞ்சுகளையாவது பலி கேட்காதா என்ன...? (பாகுபலி நாசர் டோனில் வாசிக்கவும் )
Checked
Tue, 10/14/2025 - 00:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed