ஊர்ப்புதினம்

ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

3 months ago
IMG-20240921-WA0092.jpg?resize=750,375 ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

https://athavannews.com/2024/1400368

தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறந்து வைப்பு

3 months ago

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்றையதினம்(20) திறந்து வைக்கப்பட்டது.

நல்லூரிலுள்ள(nallur) தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (20) மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இந்த ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

 வரலாற்று ஆவணக் காட்சியகம் 

தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகம் மாவீரர்களின் பெற்றோரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறந்து வைப்பு | Thiyaka Theepam Thileepan Nallur

தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.  

தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

https://ibctamil.com/article/thiyaka-theepam-thileepan-nallur-1726848928

அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி, மருத்துவர்கள் இல்லை; நோயாளர்கள் அவதி!

3 months ago

Published By: DIGITAL DESK 3   20 SEP, 2024 | 04:50 PM

image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பன் பிரதேச வைத்தியசாலையானது பிரதேச வைத்தியசாலை  தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு வைத்தியர்கள் பகலில் கடமையில் உள்ளனர். ஆனால் இரவு வேளைகளில் வைத்தியர்கள் எவரும் கடமையாற்றுவதில்லை.

இரவு வேளைகளில் வைத்தியசாலைக்கு அவசர நோயாளர்கள் செல்லும் போது நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவது வழமையாகும். 

இந்நிலையில், நேற்றைய தினம் 19/09/2024 அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு நாகர்கோவில் பகுதியிலிருந்து வலிப்பு ஏற்பட்டு சிறுமி ஒருத்தியை அவரது பெற்றோர் இரவு 8:30 மணியளவில் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையினுடைய நோயாளர் காவு வண்டி இல்லை. அது ஏங்கே என்று கேட்டபோது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியரும் இல்லாத நிலையில், நோயாளர் காசு வண்டியும் இல்லை அவசர நோயாளர்களின் நிலை என்ன என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தும் அம்பன் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியை அழைத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். இதனால் சுமார்  50 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.

IMG_20240919_213704.jpg

IMG_20240919_211553.jpg

https://www.virakesari.lk/article/194194

மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில் -நன்றிக்காக வாக்களிப்போம் - மீனவ அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்!

3 months ago

மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில்;

நன்றிக்காக வாக்களிப்போம் - மீனவ அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்!

இந்திய எல்லை தாண்டிய மீனவர்களினால் அழிக்கப்பட்டு வந்த  எமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருபவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிப்பீடம்  ஏற்ற வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழில் சங்கங்கள் கூட்டாக அழைப்புவிடுத்தன.

 புதன்கிழமை யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்ஃ எமது மீனவர்கள் இந்திய எல்லை தாண்டிய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடியினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இவ்விடையம் இன்று நேற்று ஆரம்பித்த விடையம் அல்ல நாங்கள் இலங்கையை ஆட்சி செய்த ஐந்து ஜனாதிபதிகளிடம் இந்திய மீனவர்கள் அத்துமீறல் தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.

 தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்திலும் இந்திய மீனவர்களின் வருகை காணப்பட்டாலும் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் வடபகுதிக் கடலில் அத்துமீறி வருகை தந்த இந்திய ரோலர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதுடன் ஏமது மீனவர்கள் சுதந்திரமாக அமையும் படியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்தியா தரப்புகளுடனும் எமது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் எல்லை தாண்டும்  இந்திய ரோலர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

ஆகவே எமது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்த ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியன் ரோலர்களை முற்றும் முழுதாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில்; (newuthayan.com)

அரசியல் அந்தகர்களே தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார்கள் -பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

3 months ago

தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் காரணம் வெளிப்படையானது. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிகழுகின்ற நிலையில் அவர்களுக்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் இடையூறாக இருக்கிறார்.

ஆனால் தமிழ்த் தேசியம் பேசுகின்ற சிலரும் தமிழ்ப் பொதுவேட்பாளர் மீது வசைபாடுகின்றனர். யானை பார்த்த அந்தகர்களைப் போன்று, தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதன் தார்ப்பரியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அரசியல் அந்தகர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து இணுவில் அண்ணா சனசமூகநிலைய முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.09.2024) இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்ப் பொதுவேட்பாளர் இந்தியாவின் ஆலோசனையின் பேரில் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்த அரசியல் அந்தகர்கள் விமர்சிக்கின்றார்கள். எதற்கெடுத்தாலும் இந்தியாவைக் குற்றம் சாட்டும் மனோநிலையில் உள்ள அரசியல் அந்தகர்களின்  விமர்சனமே இது.

இதுவரையில்  இந்தியா தமிழ்ப் பொதுவேட்பாளருக்குச் சாதகமான கருத்துகள் எதனையும் எங்கும் தெரிவித்திருக்கவில்லை.  மாறாக, கொழும்பு அரசியலில் தலையீடு செய்ய விரும்பும் எந்தவொரு வெளிநாட்டு அரசியல் சக்திக்கும் பொதுவேட்பாளர் என்பவர் இடையூறாகவே அமைவார். 

தமிழ்ப் பொதுவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைப்பதற்காகவே நிறுத்தப்பட்டுள்ளார் என சஜித் பிரேமதாசாவுக்கு வாக்குக் கேட்டுத் திரியும் தமிழ் அரசியல் வாதிகள்  விமர்சிக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகச் செயற்படுவதாயின் இந்த அரசியல்வாதிகளைப்  போன்றே ரணிலிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பொதுவேட்பாளரை நிறுத்தாமல் நேரடியாகவே அவருக்குப் பிரச்சாரத்தை செய்திருக்கமுடியும்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் யாரோ ஒருவரின் வெற்றி வாய்ப்பைப் பாதிப்பார். அதற்காக யாரோ ஒருவரின் சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பார் என்று கூறுவது அபத்தமானது. தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இக்காலகட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத முடிவு.

எவரது தூண்டுதலில் பேரிலும் எடுத்த முடிவு அல்ல இது. தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொது அமைப்புகளும் நீண்டகாலமாக ஆராய்ந்து தமிழ்த் தேசிய அரசியலை வீறுடன் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக எடுத்த ஓர் உறுதியான முடிவு இது. ஆகவே தமிழ் மக்கள் இந்த விமர்சனங்களை எல்லாம் கருத்திற் கொள்ளாது சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து பொதுவேட்பாளர் என்ற கோட்பாட்டை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். (ப)

#Elam #uthayan #News #digital #uthayan news #ja

45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம்

3 months ago

45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப்படகு மீனவர்கள், 10 விசைப்படகு மீனவர்கள் என 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் 10 கோடி ரூபா அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதியன்று கைது செய்தனர்.

அவர்களை  புத்தளம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் முற்படுத்தியபோது  நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  10 மீனவர்களும்  நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது இந்த 10   மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கமைய , 45 தமிழக மீனவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம் (newuthayan.com)

வல்லிபுர ஆழ்வார் தீர்த்தக்கடலில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்!

3 months ago

வல்லிபுர ஆழ்வார் தீர்த்தக்கடலில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்!

துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தத்தில் கடலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞரை தேடும் முயற்சி தொடர்ந்தும்  நடைபெற்று வரும் நிலையில் அவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

 

716623117.jpg

 

வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் கடலில் நீராடிய அம்பனைச் சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது-54) என்ற குடும்பத் தலைவர் உயிரிழந்தார்.

அன்றைய தினம் தம்பு வீதி, நுணாவில் சாவகச்சேரியைச் சேர்ந்த தயாசீலன் வைஷ்ணவன் (வயது -28) என்பவர் தாயாருடன் ஆலயத்துக்கு வருகை தந்த நிலையில் தனது உடமைகளை தயாரிடம் ஒப்படைத்துவிட்டு கடலில் நீராட சென்ற நிலையில் அவர் கரை திரும்பி வரவில்லை என

அவரின் தாயாரால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடற்படையினர் டோறா படகைப் பயன்படுத்தி தேடுதல் நடத்திவருகின்ற போதிலும் இதுவரை எவ்விதமான தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

வல்லிபுர ஆழ்வார் தீர்த்தக்கடலில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்! (newuthayan.com)

லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் - தூதரகம் வேண்டுகோள்

3 months ago
20 Sep, 2024 | 12:02 PM
image
NSC-_976x90_.gif

லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என லெபனானிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் பேஜர்கள் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆயிரக்கணக்கில் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர்  லெபனானில் உள்ள இலங்கையர்களிற்கு இலங்கை தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையர்கள் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளை பொதுநிகழ்வுகளை நீண்டதூர பயணங்களை தற்காலிகமாக தவிர்க்கவேண்டும் என இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இக்காலப்பகுதியில் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தற்காலிகமாக தவிர்க்குமாறும் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் - தூதரகம் வேண்டுகோள் | Virakesari.lk

யாழில் சகோதரன் உயிர்மாய்ப்பு; சகோதரியும் உயிர்மாய்க்க முயற்சி

3 months ago

Published By: DIGITAL DESK 3   20 SEP, 2024 | 11:23 AM

image
 

யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு,  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சகோதரியான இரண்டு மாத குழந்தையின் தாயாரும் உயிர் மாய்க்க முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/194165

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட தம்பதியினர் விளக்கமறியலில்

3 months ago

Published By: DIGITAL DESK 3   20 SEP, 2024 | 11:05 AM

image
 

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சங்கானை வைத்தியசாலை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற வேளை ஊரவர்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை கணவன் - மனைவி இருவரும் சுன்னாகம் பகுதியிலும் கடந்த வாரம் நபர் ஒருவருடைய சங்கிலியை அறுத்ததாகவும், அதனை யாழ். நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்னர். 

விசாரணைகளின் பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/194160

மீண்டும் தனது சேவையை ஆரம்பித்தது நெடுந்தாரகை

3 months ago

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று வியாழக்கிழமை (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு வியாழக்கிழமை (19) உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற ஆளுநர், படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபாய் செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமது தீவில் நீண்டகாலமாக காணப்பட்ட போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில், ஆளுநருக்கு நெடுந்தீவு மக்கள் நன்றியை தெரிவித்தனர். ஆளுநரின் கடும் முயற்சியின் பயனாக நெடுந்தாரகை மீண்டும் தமது சேவையை ஆரம்பிப்பதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.

நெடுந்தாரகை பயணிகள் படகின் திருத்தப் பணிகளுக்காக துரித நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும், துறைசார் அமைச்சுக்கும் இதன்போது ஆளுநர் நன்றியை தெரிவித்தார். தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்,

பயணிகள் சேவையை வியாழக்கிழமை (19) ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும் நெடுந்தீவில் இருந்து ஒரு தடவை குறிகட்டுவான் இறங்குத்துறைக்கு பயணிக்க உள்ளது. நெடுந்தாரகை படகில் ஒரு தடவையில் 80 பேர் பயணிக்க முடியும் என்று ஊவாமாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/309596

ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?

3 months ago

எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
September 19, 2024
Eelanadu-Edito-Logo-1-696x221.jpg

தேர்தல் பரப்புரைகள் நிறைவுறுகின்றன. இன்னும் மூன்று தினங்களில் நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். தேர்தல் முடிவுகள் ஒன்றில் சாதாரணமான ஒன்றாக இருக்கலாம் அல்லது ஒரு வரலாற்று மாற்றமாக இருக்கலாம். எது நடப்பினும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பில் எந்தவோர் அதிசயமும் நடந்துவிடப் போவதில்லை. எப்போதும் போல, தமிழரின் வாழ்வு வழமைபோல் உப்புச்சப்பு இல்லாத நிலைமை என்று சொல்லக்கூடிய நிலையிலேயே தொடரப்போகின்றது. இந்த இடத்தில் எழும் கேள்வி – தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கும் வாக்களித்தால் என்ன அதிசயம் நிகழ்ந்தவிடப் போகின்றது – அதேபோல், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதால் என்ன அதிசயம் நடந்துவிடப் போகின்றது?

தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் தென்னிலங்கை வேட்பாளர்களில் சிலர் வெற்றி பெற்றிருக்கின்றனர் – சிலர் தோல்வியடைந்திருக்கின்றனர். வெற்றி பெற்றவர்கள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு மாறாக, அதனை கூர்மைப்படுத்தும் வேலைகளையே செய்திருக்கின்றனர். இது எதனை உணர்த்துகின்றது, நீங்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் எதைச் செய்ய நினைக்கின்றார்களோ, அதனையே செய்வார்கள். அவ்வாறாயின் தமிழ் மக்கள் வழங்கும் வாக்கின் பெறுமதி என்ன? கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் இதனைத் தெளிவாக நோக்கலாம் – தமிழ் மக்களின்
வாக்குகளை பெற்றவர்களில் மைத்திரிபால ஒருவரே அதிகாரத்துக்கு வந்தார்

ஆனால், அவரும் எதனையும் தமிழ் மக்களுக்காகச் செய்யவில்லை. இந்த ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தவரையில் யார் வெற்றி பெறுவார்
என்பதைக் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. அநுரகுமார சிங்கள
மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறாரென கணிப்புகள் கூறுகின்றன.
கோட்டபாயவின் ஆதரவுத் தளம் முழுவதும் அநுரவுக்கு மாறியிருப்பதாகவும்
கூறப்படுகின்றது. இந்த நிலையில் அநுரகுமார வெற்றிபெற்றால் தோல்வி
யடையப் போகும் ஒருவருக்கு அளிக்கப்படும் தமிழ் வாக்குகளின் பெறுமதி என்ன? கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சஜித் பிரேமதாஸவுக்கே
தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால், அவர் வெற்றிபெறவில்லை.

அப்போதும் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் அரசியல்வாதிகள்
கோரியிருந்தனர். இப்போதும் தமிழ் அரசு கட்சியின் ஓர்அணி, சஜித்
பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றது. சுமந்திரன் தேர்தல்
பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார். சஜித் வெற்றி பெறுவதற்கான
வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கணிப்புகள் உண்டு.
ஏனெனில், சஜித் வெற்றிபெற வேண்டுமாயின் அவருக்கு தமிழ், முஸ்லிம்,
மலையக மக்களின் முழுமையான வாக்குகள் கிடைக்க வேண்டும் அதற்கான வாய்ப்பு தற்போதில்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய உணர்வுள்ள
மக்களுக்கு முன்னால் தமிழ் பொது வேட்பாளர் ஒரு தெரிவாக இருக்கின்றார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் அரசியல்
வாதிகளும் இருக்கின்றனர். அவர்களும் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் மூன்றாக பிரிகின்றது? இது
தமிழ் மக்களின் ஜனநாயக பலத்தை காண்பிப்பதற்கு உகந்த ஒன்றல்ல.
ஆனால், இதனை இலகுவாக சரி செய்ய முடியும் – எப்படி?

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொது
வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊhடாக தமிழ் மக்களின் ஒற்றுமையை
காண்பிக்க முடியும். இதன்மூலம் தென்னிலங்கை அதிகார போட்டியிலிருந்து நாங்கள் விலகி நிற்க முடியும். அதிகாரத்துக்கு வருபவருடன் தமிழ் மக்களின் தலைவர்கள் பேச முடியும். இது ஒன்றுதான் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனமானமுடிவாகும். ஏனைய முடிவுகள்
எவையுமே புத்திசாதுர்யமான முடிவுகளாக இருக்க முடியாது. அவைகளை முட்டாள்த்தனமான தீர்மானங்கள் என்று கூறுவதைத் தவிர, வேறு சொற்களை கண்டுபிடிப்பது கடினமானது.
 

https://eelanadu.lk/எது-புத்திசாலித்தனம்-எத/

அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!

3 months ago

 

அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று (20) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.05 இற்கு Emirates விமானமான EK-649 இல் துபாய் நோக்கி புறப்பட்டதாக விமான நிலைய தவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள “கோல்ட் ரூட்” முனையத்தை பயன்படுத்துவதற்கும் அவர் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பசில் ராஜபக்ச துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

 

http://www.samakalam.com/அமெரிக்கா-நோக்கி-பறந்தார/
 

 

திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி

3 months ago

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சட்டத்தரணி மணிவண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் திலீபனின் நினைவிடத்திற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில்,இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

இதன் போது சட்டத்தரணி மணிவண்ணன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சியில் உள்ள வழக்கொன்றுக்காக சென்றதால் இந்த வழக்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

அத்துடன் எதிராளிகள் தரப்பில் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தலைமையில் சட்டத்தரணிகள் திருக்குமரன், மகிந்தன், றமணன், ரிசிகேசன், கௌதமன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையானார்கள்.

இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் ஏ.ஆனந்தராஜா, 2011ஆம் ஆண்டு புலிச் சின்னங்களைப் பயன்படுத்த தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது .எனினும் இறந்தவர்களின் நினைவேந்தல் நடத்த தடை இல்லை. இதன் பின்னர் 13 வருடங்களாக மக்கள் நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர். அவற்றைத் தடுப்பதற்கு ஜனாதிபதியோ, பாதுகாப்பு அமைச்சோ, பாராளுமன்றமோ எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்து வருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் காலம் என்பதால், அதைக் கருத்திற்கொண்டு அஞ்சலிக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் பொலிஸார் கோரினார்கள்.இதற்கு, தேர்தல் காலத்தின்போது வாகனப் பேரணிகள் நடத்துவதற்கு மட்டுமே தடை விதிக்க முடியும் என்று தெரிவித்த நீதிவான் அவ்வாறு வாகனப் பேரணிகள் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதங்களை எதிர்த்தரப்பினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அத்துடன் வழக்கை நீதிவான் முடிவுறுத்தினார்.

“மேலும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கும் அதிகாரம் பொலிஸாரிடம் இருப்பதால், இது தொடர்பில் பொலிஸாரே இறுதி முடிவை எடுக்கலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/309557

வட மாகாணத்தில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மானிப்பதற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்!

3 months ago
வட மாகாணத்தில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மானிப்பதற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்! வட மாகாணத்தில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மானிப்பதற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்!

வடக்கு மாகாணத்தில் சன் பவர் குழுமத்தினால் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 32 ஆயிரம் வீடுகளுக்கான நிதி மூலத்திற்குரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட வங்கி ஒன்றின் ஊடாக இந்த திட்டத்திற்கான நிதி வழங்கப்படவுள்ளது. தலா 50 இலட்சம் ரூபா செலவில் முற்றுமுழுதாக இலவசமாக பயனாளர்களுக்கு இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள சன் பவர் குழுமத்தினால் சுமார் நான்காயிரம் ஏக்கர் காணியில் சூரிய மின்கல பூங்கா (Solar Park) நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான முழுமையான காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கடன் விடுவிப்பு தொடர்பான சான்றுபடுத்தல் பெறப்படவுள்ளது. இந்த இரண்டு செயற்பாடுகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலவச வீட்டு திட்டத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தலா ஐம்பது இலட்சம் ரூபா செலவில் 32 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. வீட்டு நிர்மாணப்பணிகள் அனைத்தும் சன் பவர் குழுமத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளன. வீடு முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பின்னரே பயனாளர்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்குரிய முன்மொழிவிற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1400220

தயவுசெய்து அனைவரும் வாக்களியுங்கள் : 22 ஆம் திகதிக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கிறோம் - தேர்தல்கள் ஆணைக்குழு

3 months ago

Published By: DIGITAL DESK 7   19 SEP, 2024 | 04:14 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமது குடும்பத்தை கருத்திற் கொண்டு அவதானத்துடன் செயற்படுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாகவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். போலிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்காதீர்கள். எதிர்வரும் 22ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.ஆணைக்குழு மீது நம்பிக்கை வையுங்கள். தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகஸ்தர்கள் கட்டாயம் சேவையில் ஈடுபட வேண்டும்.  கடமைக்கு சமூகமளிக்காவிடின் தாபன விதிக்கோவைக்கமைய அது ஒரு குற்றமாக கருதப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானவுடன் ஊடக நெறிக்கோவையை வெளியிட்டோம். அனைத்து ஊடகங்களும் முறையாக செயற்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வெளியிடல் மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

பல்கலைக்கழக பணியாட் குழுவினருக்கும், மாணவர்களுக்கும்  விடுமுறை வழங்கல்

அரச சேவையிலும், தனியார் துறையிலும் பணி புரிபவர்களுக்கு சம்பளம் இல்லது சொந்த விடுமுறை இரத்தாகாத வகையில் விடுமுறை வழங்குவது குறித்து 2024.09.04 ஆம் திகதி அறிவித்திருந்தோம்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பின் போது அரச பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும், மாணவர்களுக்கும் வாக்களிக்க செல்லும்  வகையில் விடுமறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதியுடையோர்.

வாக்கெடுப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்,  நிலைய பணியாட்குழுவினர், வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள், வேட்பாளர்களினால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒவ்வொரு வேட்பாளர் சார்பாக முறைப்படி நியமிக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலைய முகவர்கள்,

 தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுமதிப் பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காணிப்பு ஒழுங்கமைப்புக்களின் முகவர்கள், தெரிவத்தாட்சி அலுவலரின் அனுமதிபெற்ற அலுவலர்கள் ஆகியோர் மாத்திரமே வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கெடுப்பு நிலைய , வாக்கெண்ணும் நிலைய தகாத செயற்பாடுகள்

வாக்கெடுப்பு மத்திய நிலையத்திலும், வாக்கெண்ணும் நிலையங்களிலும் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்தல், நிழற்படமெடுத்தல், காணொளி பதிவேற்றம் செய்தல், ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருள் பாவித்து விட்ட வருகை தருதல் என்பன தகாத செயற்பாடுகளாக கருதப்படும். தடை செய்யப்பட்ட இச்செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உறுதிப்படுத்தப்படுதலுக்கான  ஆவணங்கள்

காலை 7 மணிமுதல் 4 மணி வரை வாக்களிப்பதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்களிக்க செல்பவர்கள் வாக்குச்சீட்டுடன் தேசிய அடையாள அட்டையை கொண்டுச் செல்ல வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாதவிடத்து தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வாரள் அடையாள அட்டை, சிரேஷ்ட பிரஜைக்கான அடையாள அட்டை, தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள தற்காலிய அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றினை வாக்களிப்பு நிலைய உத்தியோகஸ்தர்களிடம் காண்பித்து வாக்களிக்க முடியும்.

வாக்களிக்கும் முறைமை

வாக்காளர்கள் தமது வாக்கினை வேட்பாளர் ஒருவருக்கு 1 என்று இலக்கமிட்டோ அல்லது ( ) புள்ளடியிட்டோ வழங்க முடியும்.  1 என்று இலக்கமிட்டு வாக்களித்ததன் பின்னர் 2 , 3 என்று விருப்பு வாக்கினை அளிக்க முடியும் . புள்ளடியிட்டு வேட்பாளருக்கு வாக்களித்திருந்தால் விருப்பு வாக்களிக்க முடியாது.

பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களித்து விட்டு வீடு செல்ல வேண்டும். ஏதேனும் வாக்களிப்பு மத்திய நிலையத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெற்று அதனால் வாக்களிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிப்பு செயற்பாடுகள் முற்றாக இடைநிறுத்தப்படும். பிறிதொரு தினத்தில் அந்த தொகுதிக்கு வாக்களிப்பை நடத்த நேரிடும். அவ்வாறு நேர்ந்தால் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவது தாமதமாகும். ஆகவே பொது மக்கள் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.

பிரச்சார அலுவலகங்கள் நீக்கம்.

நேற்று புதன்கிழமை (18)  நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நிறைவடைந்துள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரச்சார  நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. வாக்களிப்பு மத்திய நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் வேட்பாளரின் இல்லம் காணப்படுமாயின் அதில் தேர்தல் பதாதைகள் மற்றும் பிரச்சார சுவரொட்டிகளை காட்சிப்படுத்த முடியாது.

வாக்கு எண்ணும் பணிகள்.

நாடளாவிய ரீதியில் 13423 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகள் 1713 மத்திய நிலையங்கள் ஊடாக எண்ணப்படும். சனிக்கிழமை (21)  பி.ப. 4.15 மணிக்கு தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். தபால் மூல வாக்குகள் எண்ணப்படும் போது ஒரு வேட்பாளர் சார்பில் அவரது 2 பிரதிநிதிகளும்,  ஏனைய வாக்குகள் எண்ணப்படும் போது ஒரு வேட்பாளர் சார்பில் அவரது 5 பிரதிநிதிகளும் கலந்துக் வாக்கு எண்ணல் மத்திய நிலையத்துக்கு வருகை தர முடியும். வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் தொலைபேசிகளை பாவிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

விருப்பு வாக்கு எண்ணல்.

தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கினை எவரேனும் வேட்பாளர் பெறாத சந்தர்ப்பத்தில் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படவில்லை. இம்முறை விருப்பு வாக்குகளை எண்ணும் சாத்தியம் காணப்படுகிறது.

பொது இடங்கள், வீடுகளில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கூட்டம் கூட்டமாக  வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் வீடுகளுக்கு செல்லுங்கள். பொது இடங்களில் ஒன்று கூடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.  உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னர் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்  செயற்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடும் போது வீடுகளில் இருங்கள். தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெற்று இழப்புக்கள் ஏற்பட்டால் அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பாதிக்கப்படுவார்கள். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.ஆகவே தமது குடும்பத்தை கருத்திற் கொண்டு பொறுப்புடன் செயற்படுங்கள்.

பொலிஸ், முப்படையினர் தயார்

சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் தேர்தலை நடத்த பாதுகாப்பு தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள். தேர்தல் சட்டத்துக்கும், பொதுச்சட்டத்துக்கும் முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக செயற்படுவபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உத்தியோகபூர்வ அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாகவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். எதிர்வரும் 22 ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். ஆணைக்குழு மீது நம்பிக்கை வையுங்கள். தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள். உங்கள் வாக்கு உங்களின் உரிமை அதனை ஜனநாயக முறையில் வெளிப்படுத்துங்கள். பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிமைகளை கொண்டாடுங்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/194109

17.5 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வர்த்தகக் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாடு

3 months ago

Published By: VISHNU  19 SEP, 2024 | 08:26 PM

image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி சுமார் 17.5 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வர்த்தகக் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியுடன் 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைப்பதற்கான இணக்கப்பாடு இலங்கையால் எட்டப்பட்டுள்ள நிலையில், சீன எக்ஸிம் வங்கி, உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு, வர்த்தகக் கடன்வழங்குனர்கள், சர்வதேச பிணைமுறிதாரர்கள் ஆகியோருடன் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் மூலம் இலங்கையால் சுமார் 17 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைக்கமுடியும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் வட்டிவீதங்களைக் குறைப்பதற்கும், நாட்டின் நிதியியல் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும் முடியும் என ஜனாதிபதி செயலகம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜுன் 21 - ஜுலை 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்கம் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. இப்பேச்சுவார்த்தைகளில் சட்ட மற்றும் நிதியியல் ஆலோசகர்களான க்ளிஃபோர்ட் சான்ஸ் எல்.எல்.பி, லிஸார்ட், வைட் அன்ட் கேஸ் மற்றும் ரொத்ஸ்சைல்ட் அன்ட் கோ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

அதேபோன்று இலங்கையின் பிணைமுறிகளில் 50 சதவீத பிணைமுறிகளின் உரித்தாளர்களான 10 முக்கிய தரப்பினரை உள்ளடக்கியிருக்கும் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவின் நிர்வாகக்குழு கடந்த ஜுன் 27 - 28 ஆம் திகதிகளில் பாரிஸில் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது.

அதனையடுத்து கடந்த ஜுலை மாத முற்பகுதியில் கடன் ஸ்திரத்தன்மை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இலங்கைக்கும் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவினருக்கும் இடையில் 37 பில்லியன் டொலர் பெறுமதியுடைய மொத்த சர்வதேச கடன்களில் 12.5 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/194129

ஒன்று கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டால் கைது-தேர்தல் ஆணைக்குழு!

3 months ago
images-2-2.jpg?resize=311,162 ஒன்று கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டால் கைது-தேர்தல் ஆணைக்குழு!

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு பின்னர் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு ஒன்றுக்கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டால் அவர்களை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

மேலும் அவசர நிலைமைகளில் முப்படையினர் அழைக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1400148

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்-பிரதிப் பொலிஸ் மா அதிபர்!

3 months ago
images-3-3.jpg?resize=275,183 ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்-பிரதிப் பொலிஸ் மா அதிபர்!

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும் என்றும் பொலிஸாருக்கோ பாதுகாப்பு பிரிவினருக்கோ அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1400172

இந்த தேர்தலில் எவரும் இனம், மதம் பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

3 months ago
இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!
18 SEP, 2024 | 05:14 PM
image

(எம்.மனோசித்ரா)

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இருக்கின்றனர்.  

நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவருக்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 

பம்பலப்பிட்டியில் இன்று  புதன்கிழமை  (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 

இலங்கை மக்களுக்கு பொதுவாகக் காணப்படும் சவால்களைப் பற்றியே பேசுகின்றனர். அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

பெருந்தோட்ட மக்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவையேற்படின் அந்த மக்களை பாதுகாப்பதற்கான சட்டங்களையும் அறிமுகப்படுத்துவோம். ஏனையயோரைப் போன்று அவர்களும் கன்னியத்துடன் வாழ வேண்டும். 

அனைத்து இன மக்களது தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இன பேதமின்றி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.  

சில விடயங்களுக்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டாலும், அவர் துணிச்சலுடன் தீர்மானங்களை எடுக்கின்றார். இதற்கு முன்பிருந்த தலைவர்கள் ஏனையோருக்கு பயந்து சிறுபான்மை மக்களுக்கான தீர்மானங்களை எடுப்பதற்கு பின்வாங்குவார்கள். 

மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் அது நன்மைக்கான மாற்றமாகவே இருக்க வேண்டும். மாறாக வீழ்ச்சிக்கான மாற்றமாக இருக்கக் கூடாது.  

மக்களை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலேயே இன்று பங்களாதேஷில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் தற்போதுள்ள நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/194037

Checked
Sun, 12/22/2024 - 22:04
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr