ஊர்ப்புதினம்

பேஸ்புக் நிறுவனத்திற்கு பெருந்தொகை டொலர்களை வாரி வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள்

3 months 1 week ago

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் வேட்பாளர்கள் பெருந்தொகை டொலர்களை விளம்பரங்களுக்கு செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேஸ்புக் Ad Library மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 13 முதல் செப்டெம்பர் 10 வரையான காலப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக 49,300 டொலர்களை செலவிட்டுள்ளார்.

பேஸ்புக் விளம்பரம்

ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும், அவரை விளம்பரப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள Join Ranil என்ற பேஸ்புக் பக்கத்திற்கு செலவிடப்பட்ட தொகை 38,400 டொலர்களை அண்மித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு பெருந்தொகை டொலர்களை வாரி வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள் | Election Candidated Who Spends Dollar For Fb Ad

அதன்படி, ஏறக்குறைய மூன்று மாத காலப்பகுதியில் 90,000 டொலர்களும் இலங்கையின் ரூபா பெறுமதியில் 27 மில்லியன் ரூபாவாகும்.

இந்தத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை விட இந்தத் தொகை அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பட்டியலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாமிடத்தில் உள்ளார்.

அமெரிக்க டொலர்

இந்தக் காலப்பகுதியில் அவர் 48,600 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு பெருந்தொகை டொலர்களை வாரி வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள் | Election Candidated Who Spends Dollar For Fb Ad

அநுரகுமார திஸாநாயக்க மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தக் காலப்பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக 20,400 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிதிகள் அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்கு முழுவதுமாக டொலர்களில் செலுத்தப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/election-candidated-who-spends-dollar-for-fb-ad-1726277951#google_vignette

மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

3 months 1 week ago

Published By: VISHNU   14 SEP, 2024 | 02:35 AM

image

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை(13) மாலை 4.30மணியளவில் மன்னார் நகர பேருந்து நிலையத்தில்  இடம் பெற்றது.

DSC_0092.JPG

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம் பெற்றது.

DSC_0116.JPG

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கினர்.

DSC_0128.JPG

குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,  தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர்  சிரேஷ்ட   சட்டத்தரணி சிறிகாந்தா, முன்னாள் யாழ் மேயர் மணிவண்ணன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

DSC_0154.JPG

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து, தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து உரை நிகழ்த்தினர்.

DSC_0123.JPG

இதன் போது சுமார் ஆயிரம் பேர் வரை குறித்த கூட்டத்தில் கலந்து  கொண்டிருந்தனர்.

DSC_0162.JPG

https://www.virakesari.lk/article/193638

கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தது - விஜயகலா பகிரங்கம்!

3 months 1 week ago

Published By: VISHNU   14 SEP, 2024 | 02:09 AM

image
 

இறுதி யுத்தத்தில் மக்கள் பலர் கொல்லப்பட்டதோடு . பொதுமக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்ததோடு தமது சொத்துக்கள் உடமைகளையும் இழந்தனர். கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர்.

2005ல் தமிழ் மக்கள் ரணிலுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து ரணிலை வெற்றி பெறச்செய்வோம் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று சுழிபுரத்தில் இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்க விற்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2 வருடங்களுக்கு முன்னர் மக்கள் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு வாங்க வீதிகளில் வரிசையில் நின்றது வரலாறு.

அந்த நிலையினை மாற்றியமைத்ததோடு நாட்டில் பொருளாதாரத் தன்மையினை ஒரு நிலைக்கு கொண்டு வந்தவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே அத்தோடு அவரின் ஆட்சி காலத்தில் தான்

வடக்கிற்கான 3 பாதைகளும் திறக்கப்பட்டதோடு உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பொதுமக்களின் காணிகள் பலவும் விடுவிக்கப்பட்டன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 90 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. யுத்தத்தை முடித்த ராஜபக்ஷ்கள் மக்களுக்கு சரியான  வழிகாட்டல்களை செய்யவில்லை. வாழ்வாதார உதவிகளை செய்ய முன்வரவில்லை

2013 ம் ஆண்டு  ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது காணி விடுவிப்பிற்காக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு  உண்ணாவிரதம் இருந்தார்.

2005 இல் தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களித்திருந்தால் நாம் துன்பப்பட்டிருக்கமாட்டோம். அந்த தவறை மீண்டும் வடக்கு கிழக்கு மக்கள் விடக்கூடாது.

2005ல் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிக்கவுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து ரணில் விக்ரமசிங்காவை வெற்றி அடையச் செய்வதன் மூலம்  நாட்டினை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடிவதோடு தமிழருக்கான தீர்வினையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/193636

யாழில். விபத்து - தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

3 months 1 week ago

Published By: VISHNU   14 SEP, 2024 | 02:12 AM

image
 

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/193634

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம்

3 months 1 week ago

Published By: VISHNU   13 SEP, 2024 | 11:32 PM

image
 

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் வெள்ளிக்கிழமை (13) உத்தியோகப்பூர்வமாகப் பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் பெயரிடப்பட்டன . 

IMG-20240913-WA0019.jpg

இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம அவர்களும், முதலீட்டு பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு கொண்டனர்.

IMG-20240913-WA0016.jpg

இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

IMG-20240913-WA0015.jpg

https://www.virakesari.lk/article/193632

தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்!

3 months 1 week ago
43.jpg?resize=750,375 தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்!

ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்குமாறும், ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கோாிக்கை விடுத்துள்ளாா்.

யாழில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கோாிக்கை விடுத்துள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”எட்டு மாவட்டங்களிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்த வாக்குக்களை விட அதிக வாக்குகள் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துள்ளது.

மக்களிடம் நாம் சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம். ஆனால் சிலர் சங்கு சின்னத்துக்கு வாக்களித்த பின்னர் விரும்பிய மற்றைய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சிலர் கூறு கின்றனர். இது எனதோ இப்பொதுக் கட்டமைப்பை சார்ந்தவர்களுடைய கருத்தோ இல்லை.

தற்போதைய நிலவரப்படி எவருமே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதானல் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டு பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.

நல்லூர் திருவிழாவிற்கு காப்புக்கடை போடுவது போன்று, கொக்கட்டிசோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இனிப்பு கடை போடுவது போன்று, வடக்கு கிழக்கில் வந்து தங்கி பிரச்சாரம் செய்கின்றனர்.

அவர்களுக்கு முகவர்களாக சில தமிழர்கள் செயற்படுகின்றனர். எமது இனத்திற்காக அவர்கள் சிந்தித்து சங்கு சின்னத்திற்கு ஆதரவு வழங்க முன் வரவேண்டும்” என அரியநேந்திரன் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1399355

யாழில். தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்

3 months 1 week ago

Published By: VISHNU   14 SEP, 2024 | 02:02 AM

image

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 

அந்நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க கோரி யாழ், நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வெள்ளிக்கிழமை (13) மனு தாக்கல் செய்துள்ளனர். 

குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முன்னெடுப்பதாகவும் அன்றைய தினம் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்வராசா கஜேந்திரன் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/193635

அனுரவுக்கு தமிழ் மக்களிடம் சென்று வாக்கு கேட்கும் உரிமையில்லை

3 months 1 week ago

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால், எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் கட்சிதான் எமது கட்சியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக மக்களைக் கொன்ற கட்சிதான் ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களையும் ஜே.வி.பி. கொன்றது. இந்திய மருத்துகளைக் கொண்டு வந்த அதிகாரிகளையும் இந்தக் கட்சி கொலை செய்தது. இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு அழைப்பும் விடுத்தது. எனவே, இந்தக் கட்சியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்கு கேட்கும் உரிமை கிடைக்காது.

வடக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்திகளைச் செய்யக்கூடிய தலைவர் சஜித் பிரேமதாஸதான் என்பதை அந்தப் பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.

அதேபோல் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் சஜித்துக்கு பேராதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். குறித்த பகுதிகளுக்குச் சென்றபோது சஜித்துக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/309409

யாழ். நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்!

3 months 1 week ago

யாழ்ப்பாணத்தில் உள்ள நாவலர் மண்டபத்தை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சாவடியாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரி சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் இராமச்சந்திரக் குருக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் என்ற உன்னத புருஷரைச் சைவத் தமிழ் உலகம் என்றும் நினைவில் கொள்ளும் வகையிலும் அவர் தம் கொள்கைகளை பேணும் நினைவாலயமாக ஆறுமுகநாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டது. 

பொதுச் செயற்பாடுகளுக்கும் பொதுச் சேவைகளுக்கும் இந்த மண்டபம் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த போதிலும் அதன் புனிதத் தன்மையைப் பேணவேண்டும் என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. 

நாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், அங்கு புனிதம் பேண வேண்டிய கட்டாயம், ஆன்மிக ஸ்தலமாக குறித்த மண்டபம் போற்றப்பட வேண்டும்.

கடந்த காலத்து நிர்வாகங்களோடு முரண்பாடு காரணமாக  நாவலர் கலாசார மண்டப வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 

தற்போது, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அதிக கவனம் எடுத்து இந்த மண்டபத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், தேர்தல் முதலான பொது விடயங்களில் கடமைக்கு அமர்த்தப்படுகின்றவர்களுக்கு இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதில் நிச்சயம் அசௌகரியம் ஏற்படும். 

இக்கலாசார மண்டபத்தின் புனிதத்தையும் சட்டதிட்ட நடைமுறைகளையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும். எனவே, தயவுசெய்து இத்தகைய நிலைமையினைக் கருத்திற்கொண்டு இந்த மண்டபத்தை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தும் செயற்பாட்டைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

   யாழ். நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்! (newuthayan.com)

சங்குக்கான ஆதரவு புதிய திசை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகும் ; செல்வின் !

3 months 1 week ago
13 Sep, 2024 | 05:24 PM
image
 

 (எம்.நியூட்டன்) 

தமிழர் விவகாரங்களுக்கு தீர்வுகாணும் முயற்சியை புதிய திசை நோக்கியதாக நகர்த்துவதற்கான ஆரம்பப் புள்ளியாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழர்கள் அனைவரும் சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடியிடுவோம் என தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்தார்.  

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பரப்புரை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் பேச்சி அம்மன் கோயில் முன்றலில் இரா.மயூதரன் தலைமையில் இன்று  வெள்ளிக்கிழமை (13)   இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

அபிவிருத்தி என்று எம்மை ஏமாற்றிவிட்டு எமக்கு எதிரான செயற்பாடுகளே இலங்கை அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மயிலிட்டி துறைமுகம் அதற்கு சாட்சியாகும். 

மயிலிட்டியை சேர்ந்த மக்களின் மீன்பிடி நடவடிக்கைக்காக துறைமுகத்தை புனரமைத்து தருவதாக வாக்குறுதியளித்த நிலையில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டபோதிலும் இதுவரை இந்த மண்ணுக்கு சொந்தமான மக்கள் தொழிலினை சீரான முறையில் மேற்கொள்வதற்கேற்ற அடிப்படை விடயங்கள் எவையும் செய்துதரப்படவில்லை.    

வெளிமாவ்ட்ட பலநாட் படகுகளும், பறிமுதல் செய்யப்படும் இந்திய இழுவைப் படகுகளுக்குமாகத்தான் இத்துறைமுகம் பயன்படுவருகிறது.  

கடல் மீது நாம் கொண்டிருக்கும் உரிமையை எம்மிடம் இருந்து பறித்தெடுக்கும் வகையிலேயே எமது கடற்றொழிலினை மேற்கொள்ள பல்வேறு வழிகளில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  

அபிவிருத்தி என்ற போர்வையில் மயிலிட்டி மக்களாகிய நீங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டதை போன்றே தமிழர்களாக நாமும் ஏமாற்றப்படு வருகின்றோம். சிதறிப்போய் இருக்கும் நாம், தமிழர் தேசமாக ஒன்றிணையும் போதே இந்த அவலங்களுக்கு முடிவுகட்ட முடியும்.  

செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே நாம் அனைவரும் சென்று சங்கு சின்னத்துக்கு நேராக ஒரு புள்ளடியை மட்டும் இட்டு தமிழர் ஒற்றுமையை வெளிக்காட்டுவோம்.   

தென்னிலங்கை வேட்பாளர்களை இரண்டாம் மூன்றாம் தெரிவுகளாக கூட தமிழர்கள் சிந்திக்கவே முடியாது. ஆகவே எமது வாக்கினை சங்குக்கு மட்டுமே வாக்களிப்போம் என்றார். 

IMG-20240913-WA0104.jpg

IMG-20240913-WA0103.jpg

சங்குக்கான ஆதரவு புதிய திசை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகும் ; செல்வின் ! | Virakesari.lk

நேர்மையான தீர்வு வழங்க ரணில் விக்கிரமசிங்கவால் தான் முடியும்; அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு - அங்கஜன்

3 months 1 week ago

(எம்.நியூட்டன்)

தமிழ் மக்களுக்கான நேர்மையான தீர்வினை வழங்க  ரணில் விக்கிரமசிங்கவால்தான் முடியும். அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முடிவைப் பார்த்து மக்கள் தீர்மானிக்க மாட்டார்கள். மக்கள் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவைத்தான் தெரிவு செய்வார்கள். அவரால்தான் தமிழ் மக்களின் பிரச்சினையை நேர்மையாக தீர்க்க  முடியும்.

இலங்கை தமிழ் அரசு கட்சிதான் தமிழ் மக்களின் கட்சி என கூறுவார்கள்.  ஆனால், இன்று இதன் நிலை என்ன? கட்சியில் நேரத்துக்கு ஒரு கதை. 

சிலர்  கட்சியை கைப்பற்றி முடிவுகளை தாமாக அறிவிக்கிறார்கள். முடிவுகளை  ஜனநாயக ரீதியாக எடுக்காமல் தாமே முடிவுகளை எடுத்து மக்கள் மீது திணிக்கிறார்கள். இதனால்தான் எதிர்க்கட்சி தலைவருக்கு வாக்களிக்குமாறு அறிவிக்கிறார்கள். இது மக்களின் முடிவல்ல. தமிழ் மக்களின் முடிவு. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வது என்பது மக்களின் முடிவாக உள்ளது. எதற்காகவென்றால், அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவே.

கடந்த இரண்டு வருட காலமாக எங்களை மூச்செடுக்க செய்துள்ளார்கள். அடுத்து வரும் ஐந்து வருடங்கள் மிக முக்கியமான காலகட்டமாகும். பொருளாதார ரீதியில் எங்களை மீட்டெடுப்பதற்கு தகுதியான தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கும் தான் நாங்கள் வாக்களிக்க வேண்டும். அவர் வந்தால்தான் இந்த நாடு முன்னேறும். அதன் மூலம் நாங்கள் முன்னேற முடியும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் முடிவை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள். தமிழ் அரசுக் கட்சி தற்போது குழப்பம் நிறைந்த கட்சியாகவே உள்ளது. அதற்குள் இருக்கும் சுய நலன்கள், ஜனநாயகமற்ற முறையில் எடுக்கின்ற தீர்மானங்கள் மக்களை அவமானப்படுத்துகிறது  மக்களுக்கு தலைமைத்துவம் தேவைப்படும் நேரத்தில் அதிகாரமாக, தன்னிச்சையாக ஒருவர்  எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு என்ற அதிகாரத் தொனியில் மக்கள் மீது திணிக்கிறார்கள். இதனை  ஏற்க முடியாது.

இம்முறை ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முழுமையான வாக்குகளை அளிப்பார்கள். 

அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு என்பவற்றோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  நல்லிணக்க செயற்பாடு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கான உச்ச அதிகாரம் பகிர்வதற்கான பணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கில் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வடக்கு இளைஞர்களுக்கு  அங்கீகாரம் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஐந்து வருட காலத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியில் மட்டுமன்றி தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு ஒரு நேர்மையான தீர்வினை முன்வைப்பதற்கு அவரால்தான் முடியும். எனவே, அவரை வெற்றி பெறச் செய்வோம் என்றார்.

நேர்மையான தீர்வு வழங்க ரணில் விக்கிரமசிங்கவால் தான் முடியும்; அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு - அங்கஜன் | Virakesari.lk

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்; 18 ஆம் திகதி முதல் கண்காணிப்புப்பணிகள் ஆரம்பிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு

3 months 1 week ago

Published By: Vishnu

13 Sep, 2024 | 05:59 PM
image
 

(நா.தனுஜா)

நாட்டுக்கு வருகைதரவிருக்கும் 9 நாடுகளைச்சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது.

அதற்கமைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் இரண்டு குழுக்கள் கடந்த சில வாரங்களில் நாட்டை வந்தடைந்ததுடன், அவை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பித்துள்ளன.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் செயன்முறையைக் கண்காணிப்பதற்காக சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான 13 பேரடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டை வந்தடையவுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மேலும் 9 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாகவும், அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் நாட்டில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இவ்வாறு வருகைதரவிருக்கும் தேர்தல் கண்காணிப்பாளர்களில் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பில் (சார்க் அமைப்பு) உள்ளடங்கும் நாடுகளையும், ரஷ்யாவையும் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்; 18 ஆம் திகதி முதல் கண்காணிப்புப்பணிகள் ஆரம்பிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு | Virakesari.lk

தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - மணிவண்ணன்

3 months 1 week ago
13 Sep, 2024 | 05:47 PM
image
 

தமிழ் மக்களின் விருப்பங்கள், அபிலாஷைகளை நிறைவேற்றாத தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் எமக்கு என்ன தேவை என கூறியுள்ளோம். ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எந்த சுபீட்சமும் இல்லை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில் தமிழர் தாயகத்தில் என்ன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது? அரசாங்கத்துடன் சேர்த்து இயங்கியவர்களுக்கு கூட அபிவிருத்தி சார்பான அமைச்சை கூட கொடுக்கவில்லை.

பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் விமானத்துக்கு கூட தடைகளை ஏற்படுத்தும் முகமாக சர்வதேச விமான நிலையத்தை கூட அவர்கள் அபிவிருத்தி செய்யவில்லை. காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை கூட அபிவிருத்தி செய்யவில்லை. 

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில் வடக்கு, கிழக்கில் செய்த அபிவிருத்தி என்ன? ஒரு சர்வதேச மைதானங்களை கூட அமைக்கவில்லை. சர்வதேச மைதானங்களை அமைத்தால், அந்த இடம் தானாக அபிவிருத்தி அடையும். நட்சத்திர ஹோட்டல்கள் வரும் தமிழர் தாயக பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்துவிடும் என்ற நோக்கிலேயே சர்வதேச மைதானங்களை அமைக்கவில்லை.  

தமிழர் தாயகத்தில் பொருளாதார மையங்கள் கூட இல்லை. 

நாம் எம்மை பொருளாதார ரீதியாக முன்னேற்ற எங்களுடைய கைகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும். அதன் ஊடாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் கொண்டுவர முடியும்.

தமிழர்கள் விரும்பிய எதனையும் செய்யாத தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்காது, தமிழர்களுக்கு என்ன தேவை என தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

2009ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு பிளவுபட்டுள்ள எங்களுடைய தமிழ் இனத்தை ஒன்றிணைக்க வேண்டும். 

அதற்காகவே தமிழ் தேசிய கட்சிகளில் 7 தமிழ் அரசியல் கட்சிகள், கடற்தொழிலாளர்கள், அமைப்புக்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் உள்ளடங்கிய 80 சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம். தமிழரசு கட்சியில் கூட பெரும்பாலானவர்கள்  தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றார்கள்.

எனவே, தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை காட்ட தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். 

தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - மணிவண்ணன் | Virakesari.lk

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள்

3 months 1 week ago
இலங்கை: கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள்
இலங்கை மனித புதைக்குழி
படக்குறிப்பு, கொழும்பின் பிரதான பகுதியில் தற்போது மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் பல பத்தாண்டுகளாக அவ்வப்போது மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது தொடரும் நிலையில், தற்போது தலைநகரத்தின் முக்கிய வளாகம் ஒன்றிலும் மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாதுகாப்பு வளையமுமான பகுதி ஒன்றிலிருந்தே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்குள் செல்லும் இங்குறுகடை சந்தியிலிருந்து நிர்மாணிக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகப் பகுதியிலுள்ள பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் கடந்த ஜுலை மாதம் 13ஆம் தேதி இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கொழும்பு புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பிரதம நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் கடந்த 5ஆம் தேதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை நடத்திய தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இந்த மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மனிதப் புதைகுழி எந்த காலப் பகுதிக்குச் சொந்தமானது?

இந்த மனிதப் புதைகுழி எந்த காலப் பகுதிக்குச் சொந்தமானது என்பது தொடர்பில் இதுவரை சரியாக அனுமானிக்க முடியவில்லை என பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவிக்கிறார்.

''இங்குள்ள குழப்பகரமான நிலைமையால், இந்த இடம் மிகவும் சிக்கலான பகுதியாக உள்ளது. இங்கு வீதிகள் இரண்டு முறை அமைக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்ற பகுதியாகவும் இது இருக்கிறது. அதனால், இந்த விவகாரம் மிகவும் சிக்கலான ஒன்றாகியுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

 
இலங்கை மனித புதைக்குழி
படக்குறிப்பு, இந்தப் புதைகுழி எந்த காலப் பகுதி சேர்ந்தது எனத் தெரிய வரவில்லை

''காலப் பகுதி தொடர்பில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கும் வரை, காலப் பகுதி குறித்து எதையும் எம்மால் கூற முடியாது. நாங்கள் இன்னும் எலும்புக் கூடுகளை முழமையாகக் காணக்கூடிய அளவிற்குக்கூட வரவில்லை.

மேல் பகுதியை மாத்திரமே அகழ்ந்து கொண்டிருக்கின்றோம். எலும்புக் கூடுகளை முழுமையாக எடுப்பதற்கு இன்னும் ஓரிரு தினங்கள் எடுக்கும்," என அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவிக்கிறார்.

காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர் புதைந்துள்ளனரா?

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இந்தப் புதைகுழியில் புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் தலையீடு செய்துள்ளனர்.

''இந்த இடத்தில் கடற்படை முகாமொன்று இருந்தது. துறைமுக போலீஸ் என்பது 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதி மற்றும் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் ஒரு இடமாகப் பிரபல்யமடைந்து காணப்பட்டது.

இதனாலேயே, இந்த மனிதப் புதைக்குழி 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதிக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

 
இலங்கை புதைக்குழிகள்
படக்குறிப்பு, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையடுத்து, இவ்விவகாரத்தில் அவர்களின் உறவினர்கள் தலையிட்டுள்ளனர்

அரசாங்கத்திற்கு உண்மையைக் கண்டறியும் அரசியல் தேவை இல்லாமை காரணமாகவே, கடந்த காலங்களில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான எதிர்கால விசாரணைகள் நடத்தப்பட்டவில்லை என அவர் குற்றம் சாட்டுகிறார்.

அரசாங்கத்திற்கு எதிராக வன்முறைகள் அல்லது எதிர்ப்புகள் எழும் பட்சத்தில், அதைத் தடுத்து நிறுத்துவதற்கான சிறந்த அடக்குமுறையாக இந்தக் காணாமல் ஆக்குதலைப் பயன்படுத்த முடியும் என அவர் கூறுகிறார்.

இலங்கையில் இதுவரை 22 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

'கார்பன் ஆய்வுகள் தொடர்பில் நம்பிக்கை இல்லை'

இலங்கையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வுகள் குறித்து நம்பிக்கை இல்லை என காணாமல் போனோர் குடும்பங்கள் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிடுகின்றார்.

''குறிப்பாக அண்மைக் காலத்தில் கார்பன் ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்ட மனித எச்சங்கள் சரியாக ஆய்வு நடத்தப்பட்டது என நம்ப முடியவில்லை. அரசாங்கத்தின் தேவைகளுக்கு அமைய தீர்மானங்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையே எமக்குள்ளது" என அவர் கூறுகின்றார்.

கடந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முல்லைத்தீவில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி
படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முல்லைத்தீவில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி

''இந்த மனித எச்சங்களிலுள்ள டி.என்.ஏவுடன், ஒப்பிட்டுப் பார்க்கும் வகையிலான உறவினர்களின் டி.என்.ஏ வங்கியொன்று கிடையாது. அதனால், இந்த மனித எச்சங்கள் யாருடையது என்பதை அடையாளம் காணும் வகையிலான உபாயங்கள் இல்லை. அத்துடன், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் ஊக்கமளிப்பதில்லை. அந்தந்த குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தலையீடு செய்வதற்கான ஊக்குவிப்பு இல்லை. அதனால், இந்த விடயம் வெற்றியளிக்கவில்லை," என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 20க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகள்

இலங்கையில் கடந்த 30 ஆண்டு காலத்தில் மாத்திரம் சுமார் 20க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நான்கு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றின் பிரகாரம், 20 மனிதப் புதைகுழிகள் இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி மற்றும் கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

'மனிதப் புதைகுழிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது'

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக மனிதப் புதைகுழிகள் தொடர்பான வழக்குகளில் முன்னிலையாகும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக வழக்கறிஞர் கே.வி.நிறஞ்சன் தெரிவிக்கின்றார்.

 
இலங்கை மனித புதைக்குழிகள்
படக்குறிப்பு, இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (கோப்புப்படம்)

''கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழிக்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புப் கூடுகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அவர் குறிப்பிடுகிறார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையை, தொல்லியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்தார்.

இந்த இடைக்கால அறிக்கையின் பிரகாரம், குறித்த மனிதப் புதைகுழி 1994ஆம் ஆண்டுக்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியைக் கொண்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே கொழும்பிலும் தற்போது மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!

3 months 1 week ago
13 SEP, 2024 | 12:16 PM
image
 

கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது.   

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,    

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார்.       

அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.   

அவருக்கு குறித்த காணியை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த காணி தரகர் ஒருவரே அடையாளம் காட்டி, காணி உரிமையாளருடன் பேச்சுக்களையும் நடத்தியுள்ளார்.   

அதனை அடுத்து காணியை கொள்வனவு செய்வதற்கு 85 இலட்ச ரூபாய் பணத்தினை ரொக்கமாக தயார் செய்திருந்தார்.   

அந்த பணத்தினை கனடா வாசி தன்னுடன் வைத்திருந்தார்.   

அவர் அசந்த நேரம் பார்த்து, காணி தரகர் 85 இலட்ச ரூபாய் பணத்தினை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.   

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/193566

5000 ரூபாய்த்தாள் வந்ததும் வந்தது 85 லட்சத்தையும் சுலபமா சுருட்ட முடிந்தது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முதல் முறையாக விசேட தேவையுடையோருக்கு விசேட அடையாள அட்டைகள் விநியோகம்

3 months 1 week ago
13 SEP, 2024 | 11:46 AM
image
 

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக முதன் முறையாக  விசேட தேவையுடையவர்களுக்கான விசேட அடையாள அட்டையை தேர்தல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

1726203545837.jpg

அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 526 விசேட தேவையுடையவர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

முதல் தடவையாக இன்று மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வாக்களிப்பு  அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

இந்த அடையாள அட்டை பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் என கூறப்படுகிறது.

1726203545818.jpg

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எச்.எம் சுபியான் தலைமையில் நடைபெற்ற விசேட தேவையுடையோருக்கான அடையாள அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜெ முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி மற்றும் சமூக மாவட்ட சமூக சேவை அதிகாரி உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

விசேட தேவையுடையவர்கள் இந்த அடையாள அட்டையினூடாக சிரமமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். 

1726203545802.jpg

1726203545787.jpg

1726203545772.jpg

1726203545779.jpg

https://www.virakesari.lk/article/193559

1915 இல் தூக்கிலிடப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு!

3 months 1 week ago
Gasset-fe.jpg?resize=556,354 1915 இல் தூக்கிலிடப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு!

கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  7 ஆம் திகதி தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதியினால் பொது  மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1915  ஆம் ஆண்டு ஜூன் மாதம்  25 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஆளுநரால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணையைத் தொடர்ந்து,எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலும் நேற்று வெளியிடப்பட்டது.

108 ஆண்டுகளுக்கு முன்பு காலனித்துவ நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸின் கொலை தொடர்பான விசாரணைக்கு 2023 டிசம்பரில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1399306

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியான நிலையை எங்களிற்கு சாதகமாக பயன்படுத்த விரும்பாததால் அமைதியாகவுள்ளோம் - சீனா

3 months 1 week ago

Published By: RAJEEBAN   13 SEP, 2024 | 10:49 AM

image
 

இலங்கை கடற்பரப்பில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு சீன கப்பல்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா சில நாடுகள் இது தங்களிற்கு கிடைத்த வெற்றி என சில நாடுகள் கருதுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரக அதிகாரி யன்வெய் சூ  இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவின் நட்பு நாடான இலங்கை ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என சீனாவில் சமூக ஊடக பயனாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தரப்பொன்றின் அழுத்தம் காரணமாகவே இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்தது என குறிப்பிட்டுள்ள அவர் சில நாடுகள் இதனை தமக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என சில நாடுகள் கருதுகின்றன, ஆனால் இலங்கையின் நெருக்கடியான நிலைமையை பயன்படுத்த விரும்பாததால் நாங்கள் அமைதியாகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையின் சுதந்திரம் இறைமையை மதிக்கின்றது என சீன இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளின் அழுத்தம் காரணமாகவே சீனாவின் ஆராய்ச்சி கப்பல்களிற்கு இலங்கை தடைவிதித்தது என முணுமுணுப்புகள் காணப்படுகின்றன, இலங்கையால் தனியாக அவ்வாறான கடல் ஆராய்ச்சியில் ஈடுபட முடியாததன் காரணமாகவே சீனா உதவியது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193557

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பதவி இடைநிறுத்தம்!

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   13 SEP, 2024 | 03:18 PM

image
 

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வெள்ளிக்கிழமை (13) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து, ஜனாப் பயாஸ் ரசாக் மாவட்ட நீதிபதியாகவும், ஜீவராணி கருப்பையா பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/193590

உயர்தரப் பரீட்சை செய்திகள் - 2024

3 months 1 week ago
உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு!
13 SEP, 2024 | 01:30 PM
image
 

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதன்படி, கல்விப் பொது தராதர  உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/193581

Checked
Sun, 12/22/2024 - 16:01
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr