தமிழகச் செய்திகள்

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

1 month 1 week ago

சென்னை: கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை இன்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியது: "கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான். கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள அந்தக் கட்சி 71 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அந்தக் கட்சி கர்நாடகாவுக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும், ஆந்திராவுக்கு கேஸ் ஸ்டவ் சின்னம் வாங்கியிருக்கிறது. அக்கட்சியின் தலைவரே சொல்லியிருக்கிறார், கரும்பு விவசாயி சின்னத்தை நான் கேட்கவில்லை; அவர்களாகவே கொடுத்தார்கள் என்று. அதில், தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களுக்குச் சேர்த்து கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டிருக்கிறது. 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் இருப்பதிலேயே தனித்துவமான கட்சி என்று பார்த்தால், திமுக, அதிமுகவுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சிதான். அதை கணக்கில் கொள்ளாமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக கூறுகின்றனர்.

வெள்ள பாதிப்பு பணிகள் காரணமாக, நாங்கள் மனு அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த கால அளவுக்குள்தான் நாங்களும் மனு அளித்தோம். டார்ச் லைட் சின்னத்தை மநீமவுக்கு ஒதுக்கியப் பிறகுதான் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விஷயமே எங்களுக்குத் தெரியவந்தது.

உண்மை என்னவென்றால், கர்நாடகாவில் இருந்து வந்தவர், கடந்த டிசம்பர் 17-ம் தேதி மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு முதல் நாளே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் எப்படி வந்தது தெரியுமா?

தேர்தல் அறிவித்து 10 நாட்களுக்குப் பிறகு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால், இந்த முறை தேர்தல் அறிவிக்கவே இல்லை. டிசம்பர் 17-ம் தேதியே எப்படி அந்த சின்னத்தை ஒதுக்கீடு செய்தார்கள்?

எனவே, திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகத்தான் இதை நான் கருதுகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் இருக்கக் கூடாது என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். நாங்கள் கட்சி ஆரம்பித்தது, விவசாயி சின்னம் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கவில்லையே? நான் கொண்டுபோனதால்தான் அந்த சின்னம் விவசாயி” என்றா சீமான்.

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல் | Seeman met CEO of TamilNadu regarding Election Symbol issue - hindutamil.in

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

1 month 1 week ago
சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு 1210946.jpg  
 

சென்னை: தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை 2012-ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி செப்டம்பர் 29-ல் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்வில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்தாரரான நடிகை விஜயலட்சுமி, மார்ச் 19-ம் தேதி பிற்பகல் 2:15மணிக்கு ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்..

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Vijayalakshmi to appear on March 19 in Seeman case - hindutamil.in

சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?

1 month 1 week ago
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? 10-2.jpg

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு இணையாக, பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. அதாவது, தி.மு.க., ஆட்சியின் அதிருப்தி அலையை அறுவடை செய்ய வசதியாக, தன் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, 20 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான தேர்தல் வியூகத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வகுத்துள்ளார்.

அதன் அடிப்படையில், பா.ம.க., – தே.மு.தி.க., புதிய தமிழகம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்றவற்றிடம், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.

பா.ம.க.,விற்கு, தர்மபுரி, கடலுார், விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு தொகுதிகளையும், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை, தே.மு.தி.க.,விற்கும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியையும், சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியையும் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், பா.ம.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை தவிர, ஓட்டு வங்கி கூடுலாக வைத்துள்ள நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்த்தால், தி.மு.க., கூட்டணிக்கு இணையான பலத்தை, அ.தி.மு.க., அணி பெறும் என, பழனிசாமி நம்புகிறார்.

நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், பா.ஜ., மீது சீமான் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். பா.ஜ., வுக்கு எதிராக, தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக, சீமான் தரப்பினரிடம் பழனிசாமி தரப்பினர் பேச்சு நடத்தினர். ‘இரு திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று கூறி வந்த சீமானுக்கு, விவசாயி சின்னம் விவகாரத்தால், கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

எனவே, பழனிசாமியை சீமானின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சீமானுக்கு நெருக்கமானவரிடம் கேட்ட போது, ‘முதல் கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுஉள்ளோம்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால், குறிப்பிட்ட சில தொகுதிகளில் உடன்பாடு வைக்கலாமா அல்லது 40 தொகுதிகளிலும் கூட்டணியா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில், ஆறு தொகுதிகள் தருவதற்கு பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சீமான் முடிவு தான் இறுதியானது’ என்றார்.

 

https://akkinikkunchu.com/?p=270197

தமிழ்நாடு, கர்நாடகா உட்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் என்ஐஏ சோதனை

1 month 1 week ago
05 MAR, 2024 | 11:50 AM
image

புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்ஐஏ ) சோதனை நடத்தி வருகிறது. தீவிரவாத செயல்களுக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மண்ணடியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் சோதனை நடைபெறுகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடித்தது. இதில் உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை என்ஐஏ வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், அந்தச் சம்பவத்துக்கும் இன்றைய சோதனைகளுக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

சோதனையின் பின்னணி என்ன? முன்னதாக கடந்த ஜனவரி மாதம், கர்நாடகாவில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த உட்பட 8 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிறையில் தீவிரவாதத்தைப் பரப்பியது, தற்கொலைத் தாக்குதல் சதியில் ஈடுபட திட்டமிட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக தலைமறைவாக உள்ளவர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு மத்திய சிறையில் உள்ள கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர், வெளிநாடு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஜுனைத் அகமது, சல்மான் கான். தவிர சையத் சுஹைல் கான், முகமது ஒமர், ஜாகித் தப்ரேஸ், சையத் முதாசீர் பாஷா, முகமது ஃபைசல் ரப்பானி ஆகியோர் தான் அந்த 8 பேர்.

முதன்முதலில் கடந்த ஜூலையில், பெங்களூரு மாநகரப் போலீஸார் 7 பிஸ்டல், 4 கையெறி குண்டுகள், ஒரு மேகசின், 45 லைவ் ரவுண்ட் தோட்டாக்கள், 4 வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தது. 2023 அக்டோபரில் இவ்வழக்கில் என்ஐஏ விசாரணையைத் தொடங்கியது. டிசம்பர் 13, 2023-ல் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை செய்தது. 2024 ஜனவரியில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 5) தமிழகம், கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.

https://www.virakesari.lk/article/177933

சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி

1 month 1 week ago
palaniswami-pti-750x375.jpg சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன், தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் உடலநல குறைவால் உயிரிழந்தமைக்கு தமிழக அரசே காரணம்  என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சாந்தன் உயிரிழப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் சிறப்பு முகாமின் மனிதாபிமானம் அற்ற நிர்வாகத்தின் காரணமாக சாந்தனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து.

எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார்.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் இராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் கழிப்பதற்கு திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1371988

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாருக்கு உண்மையான விடுதலை வழங்குக: எடப்பாடி பழனிசாமி

1 month 2 weeks ago
02 MAR, 2024 | 05:03 PM
image

சென்னை: திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதல்வரையும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “32 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையான விடுதலை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.

தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன் சாந்தன் ஆகியோர் 11.11.2022 அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டுக்கு அனுப்பும்வரை நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் சிறப்பு முகாமின் இத்தகைய மனிதத் தன்மையற்ற நிர்வாகத்தின் காரணமாக திரு. சாந்தன் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு. சாந்தன், கடந்த 28.2.2024 அன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு அவர்கள், சக முகாம்வாசிகள் யாருடனும் பேசவோ பழகவோ, உடற்பயிற்சி நடைபயிற்சி செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டு தனிமை அறையில், சிறை போலவே அடைக்கப்பட்டிருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே 32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்தவர்கள், விடுதலைக் காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று பெருமூச்சு விடும்பொழுது, மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அதிலும், சிறையில் இருக்கும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, மூச்சு முட்ட தனிமைச் சிறையினில் அடைக்கப்படுவோம் என்று நிச்சயமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இதனால், கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு இவர்கள் அனைவரும் தவித்து வந்துள்ளனர். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதன் நோக்கமே அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான்.

 

முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே கூட, எந்த நாட்டுக்குச் செல்லப்போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபொழுது, அவர்கள் இலங்கை சென்றால் ஆபத்து மற்றும் தங்களுக்கு அங்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்றும், அதனால் வெளி நாடுகளில் வாழும் தங்களுடைய குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக, விடுதலையானவர்கள் தங்களை இலங்கை துணைத் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லும்படியும், முகாமில் மறுக்கப்படும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு முதல்வர், UNHCR என தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்று தெரிவித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, நடைபயிற்சிக்கு அனுமதி கேட்டு பல மாதங்கள் ஆன நிலையில், இந்த விடியா திமுக அரசு குறைந்தபட்சம் இந்த கோரிக்கைக்குக் கூட செவி சாய்க்கவில்லை என்பதில் இருந்தே அவர்கள் எத்தகைய மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபொழுது, ஏப்ரல் 2010-ஆம் ஆண்டு பிரபாகரன் அவர்களுடைய வயதான தாயார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக முதலில் சென்னைக்கு வந்தபொழுது, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்து விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது அப்போதைய மைனாரிட்டி திமுக அரசும், மத்திய காங்கிரஸ் அரசும்தான்.

அதேபோன்று இன்று, விடுதலை பெற்ற திரு. சாந்தனை காலத்தே வெளிநாடு செல்ல மத்திய அரசுடன் பேசி, உரிய அனுமதி வாங்கித் தராத காரணத்தால், இறுதிக் காலத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ முடியாமல் மரணமடைந்துள்ளதற்கு இந்த நிர்வாகத் திறனற்ற, மனிதாபிமானமற்ற விடியா திமுக அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.

இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், விடியா திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177757

தருமபுர ஆதீனம் மிரட்டல் புகார் விவகாரத்தில் தொடர் திருப்பங்கள் – என்ன நடக்கிறது?

1 month 2 weeks ago
தருமபுரம் ஆதீனம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 1 மார்ச் 2024

மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர சைவ மடத்தின் மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவரது பெயரை நீக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அது உண்மையா, இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தருமபுர ஆதீனம். இந்த ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் மடாதிபதியாக இருந்து வருகிறார்.

மடாதிபதியின் சகோதரரான விருதகிரி என்பவர், அவருடைய உதவியாளராகவும் இருந்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியன்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில் 'ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் திருவையாறைச் சேர்ந்த மடாதிபதியின் சேவகராகப் பணிபுரியம் செந்தில் என்பவரும் சேர்ந்துகொண்டு, மடாதிபதி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவும் ஆடியோவும் தங்களிடம் இருப்பதாகவும் அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டியதுடன் என் கழுத்தை நெரித்துக் கொலைசெய்யவும் முயற்சி செய்தார்கள்,' எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், 'எங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தொடர்புகொள்வார்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 
என்ன நடந்தது?
தருமபுரம் ஆதீனம்

மேலும், 'விக்னேஷ் என்பவர் இந்தப் பணத்தைக் கேட்டு தன்னை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாகவும்' செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் கொடியரசு, செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், விஜயகுமார், பா.ஜ.கவின் மாவட்டத் தலைவர் அகோரம் ஆகிய நான்கு பேரின் தூண்டுதலின் அடிப்படையிலேயே விக்னேஷும் வினோத்தும் தன்னையும் மடாதிபதியையும் மிரட்டுவதாகவும் இதன் காரணமாக மடத்தில் உள்ளவர்கள் மன உளைச்சலில் இருப்பதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

இதைனையடுத்து வினோத், விக்னேஷ், கொடியரசு, செந்தில், ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகியோர் மீது 323, 307, 389, 506, 120 B ஆகிய பிரிவுகளின் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் ஆடுதுறை வினோத், செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் கொடியரசு, சீர்காழி ஒன்றிய பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ், திருவிடைமருதூர் நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ஆகிய நான்கு பேரை மயிலாடுதுறை காவல்துறை கைதுசெய்துள்ளது. மேலும் ஐந்து பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

மடம் சார்பாக விளக்கம்
தருமபுரம் ஆதீனம்

பட மூலாதாரம்,DHARUMAPURAM ADHEENAM

தருமபுர மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தற்போது உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் நிலையில், இந்தப் புகாரை விருதகிரி அளித்திருக்கிறார். தவிர, மடாதிபதியின் உதவியாளரான செந்தில் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரும் உத்தரப்பிரதேசம் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் மடத்தின் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. "சில நாட்களாக தருமபுரி மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடம் சம்பந்தமான சில போலியான ஆடியோ மற்றும் வீடியோக்களைத் தயாரித்து, மடத்தில் வேலை செய்பவர்களையும் மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமென நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளது.

"மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தருமபுர மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்," என கூறப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இந்த கைது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

திடீர் திருப்பம்
தருமபுரம் ஆதீனம்

இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

அந்தக் கடிதத்தில், "நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன்.

"அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை.

"நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்," எனக் கூறியிருந்தார்.

"அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து விஷயத்தை பிரச்சனையில்லாமல் முடித்துக்கொள்ளுங்கள், வீணாக ரவுடிகளிடம் பிரச்சனை வைத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதைச் செய்யக்கூடியவர்கள் என மடாதிபதியின் உதவியாளர் செந்தில் கூட்டாகச் சேர்ந்துகொண்டு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்," என்று முதல் தகவல் அறிக்கையில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை புகாரிலிருந்து விடுவிக்க மனு கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இப்படி மாற்றி மாற்றி செய்திகள் வெளியான நிலையில், புகார்தாரரும் மடாதிபதியின் சகோதரருமான விருதகிரியிடம் தொடர்புகொண்டு பேசியபோது, "நான் எந்த புகாரையும் வாபஸ் வாங்கவில்லை. இதுபோல செய்தி வெளியிடுவதற்கு முன்பாக என்னிடம் எந்த ஊடகமாவது உறுதிசெய்திருக்க வேண்டாமா? செந்தில் மீது தான் அளித்த புகார் அப்படியே இருக்கிறது," என்று குறிப்பிட்டார். இது தவிர வேறு எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

தருமபுர மடாதிபதி ஊரில் இல்லாத நிலையில், காவல்துறையில் இவ்வளவு பெரிய புகார் அளிக்கப்பட்டிருப்பதும் அது தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/c3glnjr3793o

சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?

1 month 2 weeks ago
ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல்
26 பிப்ரவரி 2024
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திமுக,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு வரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் தலைமையில் இயங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், சென்னையில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்த அதிகாரிகள், அதற்கு சீல் வைத்துள்ளனர்.

ஜாபர் சாதிக் எங்கே? டெல்லியில் கைதான 3 பேருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் கூறுவது எனன? திமுகவில் அவர் என்ன பொறுப்பு வகித்து வந்தார்?

டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்

டெல்லியில் ஒரு குடோன் வைத்து இயங்கிக்கொண்டிருந்த கும்பலை சமீபத்தில் டெல்லி சிறப்பு போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்தக்கடத்தல் கும்பல், சர்வதேச அளவில், பல ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்தப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து பிபிசியிடம் பேசிய ஒரு அதிகாரி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளே தங்களுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறினார்.

“நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், இந்தியாவில் இருந்து சூடோபெட்ரைன்(pseudoephedrine) என்ற போதைப்பொருள் கிலோக்கணக்கில் அவர்களின் நாட்டிற்கு அனுப்பப்படுவதாகக் கூறினர். அதுவும் சத்து மாவு, தேங்காய் பொடி உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து இந்த போதைப்பொருளை அவர்களின் நாட்டிற்கு இந்தியாவின் டெல்லியில் இருந்து அனுப்புவதாகத் தகவல் கொடுத்தனர்,”என்றார் அந்த அதிகாரி.

தகவலின் பேரில், சுமார் 30 நாட்களுக்கும் மேலாக, விமான நிலையத்திற்கு வந்து செல்வோர், பொருட்களை ஏற்றுமதி செய்வோர், மற்றும் அவர்களின் சந்தேகிக்கும் வகையில் இருப்பவர்களை கண்காணித்து வந்ததாகக் கூறினார் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள அந்த அதிகாரி.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்

பட மூலாதாரம்,HANDOUT

அப்படி கண்காணித்து வந்தபோது, மேற்கு டெல்லியில் உள்ள ஒரு குடோனில் இருந்து போதைப்பொருள்கள் கலவை தயார் செய்யப்பட்டு, உணவுப்பொருள்கள், சத்துமாவு உள்ளிட்டவையுடன் கலந்து ஏற்றுமதி செய்வது தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

“சுமார் ஒரு மாதம் கண்காணித்ததில், உறுதியான தகவலின் அடிப்படையில், அந்த குடோனை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சோதனை செய்தோம். சோதனையின்போது, போதைப்பொருளை பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்,”என்றார் அந்த அதிகாரி

கைது செய்யப்பட்டவர்களில் முகேஷ் மற்றும் முஜ்பீர் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், அசோக் குமார், விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ சூடோபெட்ரைன் கைப்பற்றப்பட்டுள்ளது. சூடோபெட்ரைன் என்ற இரசாயனம், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படக் கூடியது.

உலகளவில், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைபொருளுக்கு சந்தை மதிப்பு மிகவும் அதிகம். போலீசாரின் கூற்றுப்படி, இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், ஒரு கிலோ சுமார் ரூ 1.5 கோடியில் இருந்து ரூ 2 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.

 
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டாரா ஜாபர் சாதிக்?
ஜாபர் சாதிக்

பட மூலாதாரம்,ARJAFFERSADIQ/X

படக்குறிப்பு,

ஜாபர் சாதிக்

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், திமுக சென்னை மேற்கு மண்டல அயலக அணியின் முன்னாள் அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் உத்தரவின் பேரில் அவர்கள் செயல்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், “கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் அவருக்கு துணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது,”என்றார்.

இதுதொடர்பாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்? அவர் எங்கே?
ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்

ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பிறகு, அந்த வீட்டை சீல் வைத்துவிட்டு அதிகாரிகள் வெளியேறினர்.

தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை போதைப்பொருள கடத்தல் தடுப்புப் பிரிவும், காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.

 
ஜாபர் சாதிக்கை திமுக நீக்க என்ன காரணம்?

ஜாபர் சாதிக் நீக்கம் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்க வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர் கட்சிக்கு என்ன அவப்பெயர் ஏற்படுத்தினார் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, திமுக,வைப் பொறுத்தவரையில், எப்போதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது, முதலில் தற்காலிகமாக நீக்கிவிட்டு, உரிய கால அவகாசத்திற்கு பிறகு, நிரந்தரமாக நீக்கப்படுவர். அரிதாகவே, இவ்வாறு முழுமையாக கட்சியில் இருந்து நீக்குவார்கள்.

“அவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாலேயே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது இப்போதுதான் தெரியவந்தது. தெரியவந்ததும், அவரை நீக்கினோம்,” என பிபிசியிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ். பாரதி கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்க, பிபிசி சார்பில் ஜாபர் சாதிக்கை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

திரைத்துறையில் ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக் இயக்கிய படங்கள்

பட மூலாதாரம்,ARJAFFERSADIQ/X

ஐஎம்டிபி அளிக்கும் தகவலின்படி, ஜாபர் சாதிக், வெற்றிமாறன் எழுதி, அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதைத் தவிர, இந்திரா, மங்கை மற்றும் மாயவலை ஆகிய படங்களையும் அவர் தயாரித்துள்ளார். இதில், மங்கை படத்தின் முதல் பாடலை இயக்குனர் கிருத்திகா உதயநிதி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் ஜாபர் சாதிக் தயாரித்து வந்த படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cjrkr9xq7pwo

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!

1 month 2 weeks ago
24-65cd981c76f10-600x375.jpg ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த  சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் இன்று  காலமாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை சாந்தன் இலங்கையை சேர்ந்தவர்  என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.

மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். இன்னிலையில் சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1371513

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

1 month 2 weeks ago
தமிழ்நாட்டில் கூட்டணி அமைவதில் சிக்கல்கள் நீடிப்பது ஏன்?
ஸ்டாலின்

பட மூலாதாரம்,MK STALIN / FACEBOOK

படக்குறிப்பு,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 27 பிப்ரவரி 2024, 04:49 GMT

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கூட்டணிகளை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது?

இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தை தேர்வுசெய்வதற்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நாடளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்படும் நிலையில், இந்தியா முழுவதுமே அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகளில் தீவிரமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - அ.தி.மு.க. தலைமையில் பிரதான கூட்டணிகளும் வேறு சில கட்சிகள் தனித்தும் போட்டியிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களில் தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது.

தற்போது தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.

இதில் தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சிக்குப் பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் இடம்பெறும்; அதைத் தவிர வேறு மாற்றங்கள் இருக்காது எனக் கூறப்பட்டது.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஸ்டாலின்-ராகுல் (கோப்புப்படம்)

பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை

தற்போதுவரை இந்தக் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடனான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த முறை தமிழ்நாட்டில் 9 இடங்களிலும் புதுச்சேரியில் ஒரு இடம் என பத்து இட போட்டியிட்ட நிலையில் இந்த முறை எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விரும்பியது.

இந்த நம்பிக்கையில்தான் கடந்த ஜனவரி 28ஆம் தேதி சல்மான் குர்ஷித் தலைமையில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முகுல் வாஸ்னிக், அஜய் குமார் ஆகியோர் அறிவாலயத்திற்கு வந்து தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பேச்சு வார்த்தையில் இடங்களை அதிகரிக்க எந்த வகையிலும் வாய்ப்பில்லை என்பதை தெரிவித்த தி.மு.க குழுவினர், 7-8 இடங்களையே தர முடியும் என்றும் தொகுதிகளிலும் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறியது. இதற்குப் பிறகு அடுத்தகட்டப் பேச்சு வார்த்தை இதுவரை நடக்கவில்லை.

தி.மு.கவுடன் பேச்சு வார்த்தையை இறுதி செய்து அறிவிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாட்டிற்கு வருவதாக இருந்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவரது வருகை ஒத்திப்போடப்பட்டிருக்கிறது.

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரத்தில் பானைச் சின்னத்திலும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. இந்த முறை தனது சின்னத்தில் போட்டியிடவும் கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிடவும் விரும்புகிறது அக்கட்சி. ஆனால், தி.மு.க. தரப்பில் கூடுதல் தொகுதிகளைத் தர மறுப்பதால் பேச்சு வார்த்தையில் பெரிய முன்னேற்றமில்லை.

இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளையே எதிர்பார்க்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டனம், திருப்பூர் தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை கோயம்புத்தூர், திருப்பூர் தொகுதிகளில் தாமே போட்டியிட விரும்புகிறது தி.மு.க.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும் என்று பேச்சுகள் அடிபட்டாலும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்கவில்லை

கமல்ஹாசனின் நிலை என்ன?

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று பேச்சு வார்த்தை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர், பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்ததாக மட்டும் தெரிவித்தனர். மார்ச் 3ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடக்குமெனக் கூறப்பட்டிருக்கிறது.

ம.தி.மு.கவைப் பொறுத்தவரை கடந்த முறை, மக்களவையில் ஒரு இடமும் மாநிலங்களவையில் ஒரு இடமும் அளிக்கப்பட்டன. ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். மாநிலங்களவைத் தொகுதி வைகோவுக்கு அளிக்கப்பட்டது. இந்த முறை ம.தி.மு.கவுக்கு ஒரு மக்களவை இடத்தை மட்டுமே அளிக்க தி.மு.க. முன்வந்திருக்கிறது. விருதுநகர் அல்லது திருச்சி தொகுதியை தி.மு.க. முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளுமே காங்கிரசின் தொகுதிகள் என்பதால் இழுபறி நீடிக்கிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும் என்று பேச்சுகள் அடிபட்டாலும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்கவில்லை.

கடைசி கட்டத் தகவல்களின்படி, இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் காங்கிரசுடனான கூட்டணி இறுதிசெய்யப்படும் என்றும் அன்றைய தினமே மக்கள் நீதி மய்யத்திற்கான இடங்களும் முடிவுசெய்து அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. காங்கிரசிற்கு வழங்கப்படும் இடங்களில் இருந்து ம.நீ.மவுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் வகையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.

சி.பி.ஐ.யைப் பொறுத்தவரை மக்களவை இடம் ஒன்றும் மாநிலங்களவை இடம் ஒன்றும் ஒதுக்கி, கூட்டணி இறுதிசெய்யப்படலாம். சி.பி.எம்மிற்கு மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளே திரும்ப வழங்கப்படலாம். அல்லது மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் அளிக்கப்படலாம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே தெரியவருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்ட அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தற்போது தனித்தனியாகப் போட்டியிடுவதால் ரொம்பவும் திண்டாடிப் போயிருப்பது அந்தக் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள்தான்.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில் அதிமுக தீவிரம் காட்டுகிறது.

அதிமுக, பாஜக என்ன செய்கிறது?

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில்தான் தீவிரம் காட்டுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தீவிரமாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. சில நாட்களில் அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தே.மு.தி.கவைப் பொறுத்தவரை பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடனுமே பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. ஆனால், அக்கட்சியின் எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால் இரு கட்சிகளுமே இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

"அடுத்த திங்கட்கிழமையை ஒட்டி அறிவிப்புகள் வெளியாகலாம். பெரிய கட்சிகள் எங்களுடன்தான் கூட்டணி அமைப்பார்கள்" என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர்.

பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போது அந்த மேடையில் பா.ம.க., தே.மு.தி.க. இடம்பெறாவிட்டால், அக்கட்சிகள் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் அறிவித்திருக்கின்றன.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தேவநாதன் யாதவ் இந்தக் கூட்டணியில் ஒரு இடத்தை எதிர்பார்க்கிறார். பிரதமர் நரேந்தர மோதி தமிழ்நாட்டிற்கு வரும்போது அவருடன் மேடையில் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற பெரிய கட்சிகளை கூட்டணிக் கட்சிகளாக மேடை ஏற்ற நினைத்தது பா.ஜ.க. ஆனால், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் மட்டுமே கூட்டணிக் கட்சிகளாக பிரதமரைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,

டிடிவி தினகரன்

கூட்டணிகள் எப்போது இறுதியாகும்?

இதற்கிடையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடனும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன. ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற ஆர்வம் காட்டினாலும், அதே போன்ற ஆர்வம், பா.ஜ.க. தரப்பிலிருந்து வெளிப்படவில்லை.

ஆனால், கூட்டணிகள் எல்லாம் இறுதிசெய்யப்பட இன்னும் காலம் இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

"இதையெல்லாம் தாமதம் என்றே சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம்வரை கூட்டணியை இறுதிசெய்யலாம். முன்பே கூட்டணிகளை அறிவித்து, இடங்களையும் அறிவிப்பதில் பல சிக்கல்கள் இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள கட்சிக்காரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள், வெளியேறுவார்கள். அதையெல்லாம் பெரிய கட்சிகள் தவிர்க்க நினைக்கும். ஆகவே இன்னும் பல நாட்கள் கழித்தே கூட்டணிகள் இறுதியாகும்" என்கிறார் ஷ்யாம்.

https://www.bbc.com/tamil/articles/c9040gp3y7do

தூத்துக்குடியின் கிராமத்தின் நிலை

1 month 2 weeks ago
Tuticorin Flood: 2 மாதங்களாக நீரில் மூழ்கிக்கிடக்கும் ஊர். 'வீட்டை மீட்கவே முடியாது'

தூத்துக்குடியின் வெள்ளாளன்விளை கிராமத்தின் நிலை இதுதான்.... இது இன்று நேற்று பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் அல்ல... கடந்த டிசம்பரில் பெய்த வரலாறு காணாத கனமழை பாதிப்பின் நீட்சி. 2 மாதங்களாகியும் வெள்ளநீர் இன்னும் வடிந்தபாடில்லை...

பாலாற்றின் குறுக்கே புதிய அணை

1 month 2 weeks ago
பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் ஆந்திரா; தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது?
பாலாற்றின் குறுக்கே புதிய அணை: முனைப்பு காட்டும் ஆந்திர அரசு - எதிர்க்கும் தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம்,FACEBOOK / YSJAGAN

படக்குறிப்பு,

ஜெகன் மோகன் ரெட்டி

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுஜாதா
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 27 பிப்ரவரி 2024, 06:52 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்று உடனடியாக தடையாணை பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை தமிழ்நாடு விவசாயிகள் எதிர்ப்பது ஏன்? கீழ்பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆந்திர அரசு செயல்படுகிறதா? தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? இந்த பிரச்னையின் பின்னணி என்ன?

கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது பாலாறு. இந்த நதி, கர்நாடகாவில் 93 கி.மீ. தொலைவு ஆந்திராவில் 33 கி.மீ. தொலைவும் பாய்கிறது. தமிழ்நாட்டில் தான் அதிகமாக, 222 கி.மீ. தொலைவு பாலாறு பாய்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் பாலாற்றினால் பயன்பெறுகின்றன. விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாக பாலாறு திகழ்கிறது.

சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய `நீர் எழுத்து` புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பகுதிகள் பாலாற்றின் முக்கியத்துவத்தை விளக்கும்.

அதில், "பாலாறு ஓர் ஆறு மட்டுமல்ல, அது பெரிய நீர்த்தேக்கம். ஆற்றின்கீழ் மற்றொரு ஆறு ஓடுகிறது என்பார்கள். ஒரே நேரத்தில் கால்வாயாகவும் நீர்த்தேக்கமாகவும் விளங்கும் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியோ கால்வாய் (California Aquaduct) நவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், இதையே பாலாறு என்ற பெயரில் இயற்கை நமக்கு இலவசமாக வடிவமைத்துத் தந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

 
பாலாற்றின் குறுக்கே புதிய அணை: முனைப்பு காட்டும் ஆந்திர அரசு - எதிர்க்கும் தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வைகோ

எதிர்க்கும் தமிழ்நாடு

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலாற்றில் சிறியதும் பெரியதுமாக 22 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளது. இப்போது 23-வது தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி ஒதுக்கி ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதிக்குட்பட்ட கணேசபுரம் என்ற பகுதியில்தான் தற்போது 22 அடி உயரத்தில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வைகோ தன் அறிக்கையில், "ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை 1892-ம் ஆண்டு மைசூர் மாகாணத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையேயான நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களுக்கு எதிரானது. அதுமட்டுமின்றி, குப்பம் பாலாறு படுகை முழுவதும் யானை வழித்தடம் ஆகும். யானைகள் வழித்தடத்தில் கணேசபுரம் எனும் இடத்தில் அணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தடையானை வழங்கியுள்ளது. எனவே கணேசபுரத்திலிருந்து புல்லூர் வரை யானைகள் வழித்தடம் என்பதால் அந்தப் பகுதிகளில் புதிய திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை தெரிவித்துள்ள வேல்முருகன், "எந்த ஒரு மாநிலமும், தன் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆனால், ஆந்திர அரசு இதையெல்லாம் கடைபிடிக்காமல், பல்வேறு கட்டுமான பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனை அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

 
பாலாற்றின் குறுக்கே புதிய அணை: முனைப்பு காட்டும் ஆந்திர அரசு - எதிர்க்கும் தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம்,FACEBOOK/M.K.STALIN

பேச்சுவார்த்தையில் தொய்வு

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், "தடுப்பணை கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் அனைத்தும் ஆந்திர அரசு பகுதியில் கொண்டு சென்ற விஷயத்தை அறிந்த தமிழக பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அணை கட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இடைக்காலத் தடை வாங்கிய பிறகும் ஆந்திர அரசு வனப்பகுதியில் மேலும் 10 தடுப்பணைகளை கட்டியுள்ளது" என்றார்.

மேலும், இதுதொடர்பாக பாமகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த உத்தரவில், இரு மாநில அரசுகளும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் கூறியது. "பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு இதுவரை மேற்கொண்டதில்லை. தமிழக அரசை சார்ந்த அதிகாரிகளும் ஆந்திர அரசை சார்ந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. அதிமுக, திமுக அரசு இரண்டுமே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை" என்றார் அசோகன்.

ராமாதாஸும் தன் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். "உச்ச நீதிமன்றம் வரை சென்று பாமகவும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்ததால் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு பாலாற்றில் புதிய அணை கட்டமுடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அந்த வழக்கில் சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்த பிரச்னையை இப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பியபோது, "ஏற்கனவே கட்டிய தடுப்பணைகளை என்ன செய்வது? அவற்றை இடிக்க சொல்கிறீர்களா?" என்று கேட்டதாக அசோகன் குறிப்பிடுகிறார்.

புதிய தடுப்பணை கட்டாதவாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என வலியுறுத்துகிறார்.

 
பாலாற்றின் குறுக்கே புதிய அணை: முனைப்பு காட்டும் ஆந்திர அரசு - எதிர்க்கும் தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"தமிழகமும் தடுப்பணைகள் கட்ட வேண்டும்"

இதுதொடர்பாக, பிபிசியிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த விவசாயி வடிவேலு சுப்பிரமணியம், "ஆந்திர அரசுக்கு தடுப்பணை கட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் நீராதாரத்தை காப்பாற்றுவதற்காக தொடர்ந்து தடுப்பணைகளை கட்டி வருகின்றனர்" என்றார்.

தடுப்பணை பிரச்னை தவிர்த்து, தோல் மற்றும் சாக்கடை கழிவுகளும் பாலாற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்திருப்பதாக அவர் வேதனை தெரிவிக்கிறார். பாலாற்றில் மணல் அள்ளுவதும் தொடர் பிரச்னையாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.

"மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குப்பம் கணேசபுரத்தில் யானை வழித்தடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என அரசாணை வாங்கி தடுத்து நிறுத்தினார். இதற்கான வழக்கு தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது. அதையும் மீறி ஆந்திரா அரசு கட்டுவது சட்டத்தை மீறிய செயல்" என்றார்.

தமிழ்நாட்டுப் பகுதியிலும் சிறு சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுதொடர்பாக, திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகையில், "நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆந்திர அரசு எதுவும் செய்யக்கூடாது என ஏற்கனவே தெரிவித்திருந்தார்" என்றார்.

அனைத்து நதிகளினுடைய பாதுகாப்பும் மத்திய அரசின் கைகளில் உள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றார். சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c1v1vr7nxrko

கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி தோல்வி

1 month 2 weeks ago
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி தோல்வி

Published By: DIGITAL DESK 3    27 FEB, 2024 | 10:43 AM

image

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு தமிழகத்தில் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடரப்பட்டு தோல்வியில் முடிந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்  கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, வியாழக்கிழமை (22)  அதிகாலை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள்  மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்களுடன்  இணைந்து நாட்டுப்படகை மடக்கி பிடிக்க முயன்ற போது நாட்டுப்படகில் இருந்த மூவரில் ஒருவர் கடலில் குதித்து தப்பினர்.

மேலும், படகில் இருந்த இருவரை படகுடன் மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர்களை  மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை  நடத்தினர்.

நாட்டுப்படகு வேதாளையை சேர்ந்தது என்பதும், படகில் இருந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் இலங்கையில் இருந்து சுமார் 10 கிலோ தங்கத்தை  கடத்தி வந்த போது  அதிகாரிகளை கண்டதும் தங்க கட்டிகள் அடங்கிய பொதியை கடலில் வீசியதையும் ஒப்புக்கொண்டனர்.

ஸ்கூபா வீரர்கள் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குளிக்கும் மீனவர்களை கொண்டு தங்கத்தை கடலுக்கு அடியில் தீவிரமாக தேடி வந்தனர்.

தங்கம் கிடைக்காததால் கேரளாவில் இருந்து  வரவழைக்கப்பட்ட கடலுக்கு அடியில் கிடக்கும் பொருட்களை ஸ்கேன் செய்யும் அதிநவீன கருவிகளை பயன்படுத்தி தொடர்ந்து தேடினர்.

இருப்பினும், தங்கம் குறித்து எந்தவிதமான தகவல் கிடைக்காததால் தேடும் பணியை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஐந்து நாட்களுக்குப் பின்பு நேற்று மாலை கைவிட்டனர்.

மேலும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த  இருவரிடமும் எழுத்துபூர்வமாக  எழுதி வாங்கி கொண்டு படகுடன் திருப்பி அனுப்பினர்.

வேதாளை, மறைக்காயர்பட்டினம் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில்  மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,  நாட்டுபடகு  மீனவர்கள் சட்டவிரோத கடத்தல் சம்பவங்களால் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/177398

தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

1 month 2 weeks ago
இலங்கை கடற்படை கைது செய்யும் மீனவர்களை தண்டிக்க புதிய நடைமுறை - தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
தமிழ்நாடு - இலங்கை மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அண்மையில், ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில், இரண்டு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இலங்கை கடற்படை கைது செய்யும் தமிழ்நாடு மீனவர்களை தண்டிக்க கடைபிடிக்கப்படும் புதிய நடைமுறை இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்து பக்தர்களிடம் இருந்து பெற்ற தொகையை மீண்டும் அவர்களிடமே அளிக்க இருப்பதாக மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர்.

மறுபுறம் இலங்கை கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் நுழைவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பிரவேசத்தை தடுக்க தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர்.

'இலங்கை கடைபிடிக்கும் நடைமுறையால் மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு'
இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாகக் கைது செய்யப்படும் தமிழ்நாட்டின் மீனவர்கள் இரண்டு வார சிறையடைப்புக்கு பின் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், சிறைபிடிக்கப்படும் விசைப் படகுகள் அதன் உரிமையாளர் நேரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜராகினால் படகு விடுவிக்கப்படும். ஆனால், தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது என்கின்றனர் இந்திய மீனவர்கள்.

விசைப்படகை இயக்கும் மீனவருக்கு ஆறு மாதம் சிறையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவருக்கு ஓராண்டுச் சிறையும் விதித்து இருப்பதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

“எங்களது முன்னோர்கள் மீன்பிடித்த கச்சத்தீவில் தான் நாங்கள் மீன்பிடிக்கிறோம். இந்தியக் கடல் பகுதிகளிலும் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கிறார்கள்", என்கின்றனர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள்.

 
இலங்கையில் வீணடிக்கப்படும் விசைப்படகுகள்
இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

பிபிசியிடம் பேசிய இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத் தலைவர் எமிரேட், "பாஜகவின் 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் 135 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அதில் 25 படகுகள் மட்டுமே மீட்கப்பட்டன். மற்றவை இலங்கையிலேயே பயனற்றுப் போயின. அதேபோல் 2019 முதல் தற்போது வரை 15 நாட்டுப் படகுகள் உட்பட 151 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருக்கிறது. ஆனால் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை ஏதும் மத்திய அரசு எடுக்கவில்லை. இலங்கை அரசும் பறிமுதல் செய்யப்படும் படகுகளை நாட்டுமையாக்கி வருகிறது,” என்கிறார் .

"இது கடலை நம்பித் தொழில் செய்யும் மீனவனின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்து விடும். தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் நல்லுறவில் இல்லாததால், மாநில அரசை பழிவாங்குவதற்காக மீனவர்கள் கைது செய்யப்படும் போது மீட்பு நடவடிக்கைகள் எடுக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி எங்களை வஞ்சிக்கிறது." என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு
இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

2017-ஆம் ஆண்டு கச்சத்தீவு திருவிழா நேரத்தில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதால் கச்சத்தீவு திருவிழாவை இராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணித்தனர்.

அதேபோல் இந்த ஆண்டும் கச்சத்தீவு திருவிழா நெருங்கி வரும் நேரத்தில் இராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இருக்கிறது இலங்கை அரசு.

"இது கச்சத்தீவுக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் வரக்கூடாது என்று மறைமுகமாக தாக்குவது போல இருக்கிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் கைதைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம், கருப்புக்கொடி படகில் ஏந்தி போராட்டம் செய்து வருகிறோம்," என்றார் எமிரேட்.

இது தொடர்பாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை மீனவப் பிரதிநிதிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

'படகுகளை அரசுடமையாக்குவது சேமிப்பை அழிக்கும்'

"தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்குவது மீனவர்கள் சிறுகசிறுக சேமித்த சேமிப்பை அழிக்கிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

இந்திய நாட்டின் பிரதமர் மோதி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் தலையிட்டு நமது மீனவர்களை விடுதலை செய்வதையும், படகுகள் விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்", என தனது சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Facebook பதிவை கடந்து செல்ல
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Facebook பதிவின் முடிவு

10 ஆண்டு சிறை தண்டனை
இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

இந்திய மீனவர்களின் போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய யாழ் மாவட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் உபத் தலைவர் அந்தோணி பிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார், "இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களின் கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறி தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி சிறிய மீன்களையும் அள்ளிச் செல்வதால் கடல் வளங்கள் முழுவதுமாக அழிகிறது" என்றார்.

மேலும், "இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக விரித்து வைத்திருக்கும் வலைகளையும் அறுத்து செல்கின்றனர். இது ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்" என்றார்.

இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ஆறு மாத முதல் ஓராண்டு சிறை தண்டனையை இலங்கை அரசு விதிக்கிறது.

ஆனால் சிறை தண்டனையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கினால் மட்டுமே, இந்திய மீனவர்கள் இங்கு வருவது குறையும் என்று இலங்கை மீனவர் தரப்பு கோரிக்கையை முன்வைக்கிறது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்பு இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது, இந்திய மீனவர்களின் வருகையை தடுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தினர்.

கச்சத்தீவு தொடர்பாக பேசிய இலங்கை மீனவர்கள், “இந்திய மீனவர்களை விடுதலை செய்ததால் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போம் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் கூறுவது தவறானது. ஒரு தொழிலை சமய வழிப்பாட்டுடன் சேர்த்து நிபந்தனையாக விதிப்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டும், நாங்களும் பங்கேற்போம்", என்றனர்.

 
"சட்டத் திருத்தம் தேவையில்லை"
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக சட்டத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், பிபிசி தமிழ் வினவியது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், 'வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நாட்டிற்குள் பிரவேசித்தால், அவர்களுக்கான தண்டனை வழங்கும் சட்டம் ஏற்கனவே இலங்கையில் அமலில் உள்ளது. அந்த சட்டத்தின் இப்போது மாற்றம் கொண்டு வரப்படாது, என்றார்.

“2018ம் ஆண்டு அந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் தடவை பிடிப்பட்டால், பிணையில் விடலாம் என்றும், இரண்டாவது, மூன்றாவது முறை மீண்டும் பிடிபடும் போது அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் சட்டம் உள்ளது. சட்டவிரோத படகுகள் எல்லாம் அரசுடமையாக்கப்படும் என்று ஏற்கெனவே சட்டம் உள்ளது.

இந்திய மீனவர்கள் தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறார்கள். ஆனால் இலங்கை கடல் வளத்தை அழிக்கின்றனர். கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றது. எங்கள் மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும்." என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் கலந்துரையாட முயற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c5166517n5no

உறுதியானது அதிமுக - பாமக கூட்டணி: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1 month 2 weeks ago
25 FEB, 2024 | 10:00 AM
image

மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் அதிமுக - பாமக இடையே கூட்டணி உறுதியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சியில் இறங்கின. இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியை நேரிலும், தொலைபேசியிலும் பேச்சு வார்த்தையை நடத்தினர். மேலும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாமக திட்டமிட்டுள்ளது.

இதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளை தவிர்த்து மாநில கட்சியுடன் கூட்டணி அமைப்பதுஎன முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிடவுள்ளன.

இது தொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: 2026-ல் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, இந்த மக்களவைத் தேர்தலில் மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான் சரியாக இருக்கும். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறோம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன.

இந்த முறை தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி ), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/177227

ஸ்டெர்லைட்: துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க திமுக அரசு மறுப்பது ஏன்?

1 month 2 weeks ago
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 57 நிமிடங்களுக்கு முன்னர்

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய, அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு திமுக அரசு மறுப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

2018-ஆம் ஆண்டு நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அன்றைய அதிமுக அரசின் மீது வலுவான எதிர்ப்பலைகளை உருவாக்கியது.

திமுகவும் அதனை தனக்கு சாதகமாக்கி, ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தது. அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்து அதிமுகவை கடுமையாக சாடியது.

இருப்பினும், காவல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் திமுக தலைமையிலான அரசு குழப்பமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

 
திமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 13 பேர் கொல்லப்பட்டதை எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாகக் கண்டித்தது.

சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் தொடுத்த வழக்கு

2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையினால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் உடல்நல பாதிப்புகளையும் கண்டித்து, ஆலையை மூட வலியுறுத்தி நீண்ட போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தின் நூறாவது நாளில் (மே 22ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது நிகழ்த்தப்பட்ட கடும் வன்முறை மற்றும் துப்பாக்கிச்‌ சூட்டில் 12 பேர் குண்டுகள் பாய்ந்தும், ஒருவர் கூட்ட நெரிசலில் நெஞ்சில் மிதிப்பட்டும் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் சிலரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கி குண்டுகள் மிக அருகிலிருந்து சுடப்பட்டதும், சிலருக்கு தலையில் சுடப்பட்டதும் தெரிய வந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 18வயது ஸ்னோலினின் என்ற பெண்ணின் தலையின் பின் பகுதியில் நுழைந்த குண்டு வாய்வழியாக வெளியே வந்ததை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.

இந்த சம்பவத்துக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாய் வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியாக உயர்த்தி தரவும், அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதனால் கிரிமினல் நடவடிக்கை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் இந்த நிலைப்பாடு, துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது

அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்வது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது.

-துப்பாக்கிச்சூட்டுக்கான காரணங்கள், சூழல்கள் குறித்து கண்டறிதல்,

-சூழலுக்கு ஏற்ப தேவையான படைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனவா, துப்பாக்கிச்சூட்டின் போது எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டனவா என கண்டறிதல்

-காவல் அதிகாரிகள் தரப்பில் அதிக பலம் பயன்படுத்தப்பட்டனவா, அப்படி இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை கூறுதல்

-இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் பரிந்துரைத்தல்

ஆகிய நான்கு நோக்கங்களை விசாரித்த ஆணையம் தனது இறுதி அறிக்கையை 2022 ஜூன் 6 அன்று அரசிடம் வழங்கியது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

17 காவல் அதிகாரிகளை பட்டியலிட்ட அருணா ஜெகதீசன் ஆணையம், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அருணா ஜெகதீசன் அறிக்கை காவல் அதிகாரிகள் தேவையானதை விட அதிகமான பலத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிந்து கூறியது.

இந்த சம்பவத்துக்கு காரணமாக 17 காவல் அதிகாரிகளை பட்டியலிட்ட அருணா ஜெகதீசன் ஆணையம், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கையும் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

மாவட்ட ஆட்சியர், மூன்று தாசில்தார்களை இந்த சம்பவத்துக்கு காரணமாக கண்டறிந்தது. அப்போதைய தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் மற்றும் டிஐ ஜி கபில்குமார் சி ஆகிய ஐ பி எஸ் அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன், பார்த்திபன் உள்ளிட்டோர் அருணா ஜெகதீசன் ஆணையத்தால் பட்டியிலிடப்பட்டிருந்தனர்.

மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் கொடுக்க பரிந்துரைத்தது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் என்ற நிவாரணத் தொகையாக தரவேண்டும் என்பதையும் ஏற்பதற்கில்லை என தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது

'எல்லா பரிந்துரைகளையும் ஏற்பதற்கில்லை' - தமிழ்நாடு அரசு

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை முழுவதுமாக ஏற்கவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு.

காவல் அதிகாரிகள் தேவைக்கு அதிகமான பலத்தை அதிகமாக பயன்படுத்தினர் என்பதையும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஏற்கும்போதிலும், கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ரூ.50 லட்சம் என்ற நிவாரணத் தொகையாக தரவேண்டும் என்பதையும் ஏற்பதற்கில்லை என வாதிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறும்போது "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், தீவிர காயமடைந்த 40 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், லேசாக காயமடைந்த 64 பேருக்கு தலா ரூ.1.5 லட்சமும் வழங்கப்பட்டன. உயிரிழந்த 18வயது ஸ்னோலினின் சகோதரன் ஜான்ராஜ் உட்பட 21 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் “சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகள் தவிர சம்பந்தப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டில் இருந்த 93 பேருக்கு தலா ஒரு லட்சம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதியான பாரத்ராஜ், போராட்டத்தில் பங்கேற்றதற்காக காவலர்களால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அந்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்படிப்பு மேற்கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது” என தமிழக அரசு தான் எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் பட்டியலிட்டுள்ளது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

கொல்லப்பட்ட ஸ்னோலின் குடும்பத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ரஜினி, துறை ரீதியான நடவடிக்கைகள் கண் துடைப்பு மட்டுமே என்கிறார்

துறை ரீதியிலான நடவடிக்கைகள் போதுமா?

தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளே போதும் என்ற நிலைப்பாட்டை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

“சிபிஐ இந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் விசாரணை செய்து ஒரே ஒரு காவலர் அதுவும் கீழ் நிலையில் உள்ள திருமலை என்ற டிஎஸ்பி மீது மட்டும் தான் குற்றம் சுமத்தியுள்ளது” என்கிறார் ஹென்றி திபேன்.

ஸ்னோலின் குடும்பத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ரஜினி துறை ரீதியான நடவடிக்கைகள் கண் துடைப்பு மட்டுமே என்றார். “ஆணையத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சைலேஷ் குமார் யாதவ் ஐ பி எஸ், வழக்கமான பதவி உயர்வு பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியம்? யாரை ஏமாற்றுகிறார்கள்?” என்கிறார்.

தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில், “சிபிஐ எல்லா காவல் அதிகாரிகளையும் விசாரித்தது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையிலான அம்சங்களை சிபிஐ கண்டறியவில்லை (மேற்குறிப்பிட்ட நபர்கள் தவிர) . எக்ஸ்கியுடி மேஜிஸ்திரேட் உத்தரவின் படி தான் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். எனவே அந்த வகையில் காவலர்களின் நடவடிக்கைகளை சிபிஐ ஏற்கெனவே நியாயப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு கிரிமினல் மற்றும் விதிமீறல் பார்வையிலிருந்து விலக்கு அளித்துள்ளது” என்று கூறுகிறது.

"தவறு செய்த அதிகாரிகள் மீது எப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும்? பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் கேட்கவில்லை, சட்டரீதியான நியாயம் கிடைக்க வேண்டுமல்லவா? " என்று பிபிசி தமிழிடம் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் வனிதா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘‘கிரிமினல் நடவடிக்கை எடுக்க சிபிஐ பரிந்துரைக்கவில்லை என்று கூறுகிறார்கள். சிபிஐ என்பது யார்? அவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நிற்பவர்கள். போராடிய மக்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது சிபிஐ என்பது நினைவிருக்கட்டும். இதுவரை அரசால் அமைக்கப்பட்ட ஆணையங்கள் எல்லாமே அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. இந்த ஆணையம் உண்மையை கூறியதால் அதை ஏற்க மறுக்கிறார்கள். குண்டடிபட்டு தான் இறந்தார் ஸ்னோலின் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. இதை அரசு உட்பட யாரும் மறுக்கவில்லையே. இன்னும் வேறு என்ன வேண்டும்?" என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினி.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

ஸ்னோலினின் தாய் வனிதா

அதிகாரிகளை பாதுகாக்கிறதா அரசு?

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை எடுத்த ஐந்து மாதங்களில் மூடிவிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி திபேன்.

அரசாங்கம் அதிகாரிகளையே நம்பியிருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் அவர். ,"இந்த வழக்கை விசாரித்த சிபிஐ இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரே ஒரு காவலரை மட்டும் தான் குற்றம் புரிந்ததாக அடையாளம் கண்டது. அவரும் கீழ் நிலையில் உள்ள காவலர்தான். இந்த அரசு, அதிகாரிகளையே நம்பியிருப்பது துர்திருஷ்டவசமானது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பாதுகாக்கிறது." என்றார்.

ஒரு முறை வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது கூட தெரியாமல், அறிக்கை இனிமே வெளி வரும் என்று கடந்த மாதம் நீதிமன்றத்தில் கூறியதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.

தவறு செய்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தமிழ்நாடு அரசாங்கம் கூறுகிறது.“தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்நிலையில், இது குறித்து மேலும் விசாரிக்க 2023ம் ஆண்டு மே மாதம் முதல் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றும் கூறியது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ பி எஸ் அதிகாரிகள் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று விமர்சிக்கும் ஹென்றி திபேன், "2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதும்,2021 ன் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என்று திமுக கூறியது. அந்த நடவடிக்கை எங்கே என்று தான் கேட்கிறோம்." என‌ கேள்வியெழுப்பினார்.

‘‘13 உயிர்கள் பறி போகின. கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடல்லை. இனிமேலும் திறக்க விடமாட்டார் கடவுள். என் மகளை இழந்து நான் படும் வேதனை எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்" என்கிறார் ஸ்னோலின் தாயார் வனிதா.

இது குறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘இந்த விவகாரத்தில் தேவையான துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலைப்பாடு அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’’ என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c191drwmj4po

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' - ராமதாஸ் கண்டனம்

1 month 3 weeks ago
24 FEB, 2024 | 09:43 AM
image

 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுநருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. மீனவர் ஜான்சன் ஏற்கெனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, விடுதலை செய்யப்பட்ட 18 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்களும், ஜான்சன் விடுதலையான பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டால் ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இது சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசு செய்யும் அத்துமீறலாகும்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிப்பது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும்.  கடந்த 4-ஆம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், கடந்த 16-ஆம் நாள் தீர்ப்பளித்த இலங்கை நீதிமன்றம், 20 மீனவர்களை விடுதலை செய்ததுடன், இரு மீனவர்களுக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து தான் நேற்று மீனவர் ஜான்சனுக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனை வழங்கியிருக்கிறது.

 

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் சிங்கள அரசு மற்றும் நீதிமன்றங்களின் புதிய அத்துமீறல், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் அடுத்தகட்ட அணுகுமுறையாகவே தோன்றுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே தமிழக மீனவர்களைக் கைது செய்வது, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வந்தது. ஆனால்,  அவற்றின் மூலம் தமிழக மீனவர்களை நிலைகுலையச் செய்ய முடியாததால் மீனவர்களை மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் சிறையிலடைக்கும் அணுகுமுறையை  இலங்கை அரசு கையில் எடுத்திருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக கடந்த காலங்களிலும் இத்தகைய உத்திகளை இலங்கை  பயன்படுத்தியிருக்கிறது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பவர்களுக்கு ரூ.25 கோடி  தண்டம் விதிக்கும் சட்டத்திற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. பின்னர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தது. இப்போது அதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது.

வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம் ஆகும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்வதையும்,  சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது. மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப் படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா புறக்கணிப்பு  என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/177169

தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்கள் அதிகமாக இருப்பது ஏன்? செய்ய வேண்டியது என்ன?

1 month 3 weeks ago
விதவைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை விதவைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக தெரிவிக்கிறது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கணவரை இழந்த, ஆதரவற்றோர் விகிதம் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் அந்தக் கொள்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பது ஏன், செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டிற்கான மாநில மகளிர் கொள்கை ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 21ஆம் தேதியன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் சமூக நீதியை உறுதி செய்வது, அவர்கள் உரிமைகளைப் பெற்று, திறன்களை உணர்வு, பெண்கள் சம வாய்ப்புகளுடன் அமைதியான வாழ்க்கை வாழச்செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளுக்கு என சில குறிக்கோள்களை இந்த கொள்கை முன்வைத்திருக்கிறது. பள்ளிக்கூடங்களில் பெண்களின் இடைநிற்றலை குறைத்தல், வளரிளம் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல், எல்லாப் பணியிடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வது, டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல், கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்குவித்தல் ஆகியவையே அந்த இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

 

இந்தக் கொள்கை எல்லா மகளிருக்கும் பொருந்தும் என்றாலும் அதன்படி, தனியாக வாழும் பெண்கள், கணவனை இழந்த ஆதரவற்றோர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், பாதிக்கப்படக்கூடிய தொழில்களைச் செய்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பல முக்கியப் புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவில் 5.6 கோடி கணவரை இழந்த பெண்கள் உள்ளனர் என்றும் இது மொத்த மக்கள் தொகையில் 4.6 சதவீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக கணவரை இழந்த பெண்கள் உள்ளனர்.

கணவரை இழந்த பெண்கள்

பட மூலாதாரம்,M.K.STALIN / X

படக்குறிப்பு,

முதலமைச்சர் முக.ஸ்டாலின்

தேசிய சராசரியை விட அதிகம்

கேரளாவில் 6.7 சதவீதமும் தமிழ்நாட்டில் 6.4 சதவீதமும் கணவரை இழந்த பெண்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் உயிர்வாழ்வதால் கணிசமான முதியோரைக் கொண்ட மாநிலங்களில் கணவரை இழந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பெண்களுக்கு என சிறப்புக் கவனமும் முன்னுரிமையும் அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

அமைப்புகள் என்ன சொல்கின்றன?

தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களுக்கென பல அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. சமூகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள இவர்களுக்கு என செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் இவர்கள்.

"கணவரை இழந்த பெண்களின் பிரச்சனை என்பது மிக முக்கியமானது. எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில்தான் கணவரை இழந்த பெண்கள் அதிகம். ஆனால், சதவீத அடிப்படையில் கேரளா, தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது" என்கிறார் கணவரை இழந்த பெண்களுக்கென பணியாற்றும் கலங்கரை அமைப்பின் இயக்குநரான குழந்தைச்சாமி.

கணவரை இழந்த பெண்கள் அதிகம் இருப்பதற்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. மதுப் பழக்கம், விபத்துகள், தற்கொலை, திருமணம் நடக்கும்போது பெண்ணைவிட ஆணின் வயது அதிகமாக இருப்பது ஆகியவற்றால் மனைவிக்கு முன்பாகவே கணவர்கள் உயிரிழப்பது நடக்கிறது.

விதவை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த பெண்கள் கணவரை இழந்ததில் இருந்து பிரச்சனைகள் துவங்குகின்றன.

"கணவரை இழந்த பிறகு இந்தப் பெண்களுக்கு நடக்கும் சடங்குகள் மிகக் கொடுமையானவை. அதற்குப் பிறகு எல்லா மங்கல நிகழ்வுகளில் இருந்தும் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். இதனால், பல பெண்கள் கணவரை இழந்துவிட்டால் வாழ்க்கையையே இழந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு என ஒரு மறுவாழ்வை ஏற்படுத்திக்கொள்வதில் மிகப் பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன" என்கிறார் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினரும் கல்வியாளருமான கல்யாணந்தி.

இதில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது மறுமணம். "கணவரை இழந்தவர்களில் சிலர் அப்படியே வாழ்ந்து முடித்துவிட நினைப்பார்கள். ஆனால், பல பெண்கள் பல்வேறு கட்டாயங்களின் காரணமாக அப்படி வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஜாதி வழக்கம், குடும்பப் பாரம்பரியம் இதில் முக்கியக் காரணமாக இருக்கும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னொரு திருமணத்தை எதிர்கொள்ள பயந்து, திருமணம் செய்யாமல் இருப்பார்கள். அதேபோல, கணவரின் குடும்பத்தை சார்ந்து இருப்பவர்களால் மறுமணம் செய்ய முடியாது. கணவர் வழியில் வர வேண்டிய சொத்துகள், தன் குழந்தைகளுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் மறுமணம் செய்யாமல் வாழ வேண்டியிருக்கும். இதில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமே கிடையாது" என்கிறார் கல்யாணந்தி.

 
கணவனை இழந்த பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவிலேயே முதல் முறையாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தமிழ்நாடு அரசால் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் முன்னோடி திட்டங்கள்

தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களுக்கு என இந்தியாவிலேயே முதல் முறையாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தமிழ்நாடு அரசால் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதன் தலைவராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரே இருந்துவருகிறார்.

"கணவரை இழந்த பெண்கள் தொடர்பாக ஒரு மாற்றுக் கலாச்சார சிந்தனையை உருவாக்க வேண்டும். கணவரை இழந்த பிறகு பூவைக்கவோ, பொட்டு வைக்கவோ கூடாது என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். அவர்கள் மறுமணம் செய்ய விரும்பினாலும், சமூகக் கட்டாயங்கள் அதற்கு அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு வங்கிக் கடன்களில் முன்னுரிமை தரலாம். தவிர, தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை இவர்களுக்கும் அளிக்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், கூடுதலான உதவித் தொகையை அளிக்க வேண்டும். கழிப்பறைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பதுபோன்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்" என்கிறார் குழந்தைச்சாமி.

கணவரை இழந்த பெண்களின் நலனில் சமூகத்தின் நலனும் அடங்கியிருக்கிறது என்கிறார் கல்யாணந்தி. "தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்கள் போட்டித் தேர்வில் பங்கேற்கும்போது அவர்களுக்கு என இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதனை அவர்கள் பயன்படுத்தலாம். அதற்கு சமூகத்தின் தூண்டுதல் மிக முக்கியமானது. மேலும், ஒற்றைப் பெற்றோராக குழந்தையை வளர்ப்பது மிகக் கடினம். அந்தக் குழந்தைகள் சட்டமீறல்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆகவே, கணவரை இழந்த பெண்களின் நலன் மேம்படும்போது சமூகத்தின் நலனும் மேம்படுகிறது" என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c25qq4l259jo

அர்வி: அரபி எழுத்து, தமிழ் உச்சரிப்பு - அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி, மீட்டெடுக்கப்பட்ட வரலாறு

1 month 3 weeks ago
அர்வி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கமலா தியாகராஜன்
  • பதவி, பிபிசி டிராவல்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

2008ஆம் ஆண்டு ஒரு மாலை வேளையில், தென்னிந்திய நகரமான வேலூரில் உள்ள அரபிக் கல்லூரியில் முகமது சுல்தான் பாகவி 26 வயது மாணவராக இருந்தபோது, அவர் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தைக் கண்டுபிடித்தார். நகரின் லபாபீன் கப்ருஸ்தான் மசூதியில் தொழுகையை முடித்த பிறகு, மசூதியின் முற்றத்தை ஒருவர் சுத்தம் செய்வதைக் கண்டார்.

அவர் குப்பைகளை, காகிதங்களை, இலைகளை சேகரித்து, அவற்றை எரிப்பதற்காக மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே குவித்து வைத்தார். மசூதியை விட்டு பாகவி புறப்படத் தயாரானபோது, மெல்லிய காற்று வீசியது. குப்பை மேட்டில் இருந்து ஒரு காகிதம் பறந்து வந்தது. அந்த காகிதம் ஏதோவொரு புத்தகத்தின் ஒரு பகுதி என உணர்ந்த பாகவி திடுக்கிட்டார்.

சில மசூதிகளில் வறண்டு போன கிணறுகளை அரிய கையெழுத்துப் பிரதிகளை சேமிப்பதற்காகப் பயன்படுத்தியதை அவர் அறிந்திருந்தார். அதில் இதுவும் ஒன்றாக இருக்குமா?

எரிந்து கொண்டிருக்கும் குப்பைக் குவியலைக் கூர்ந்து கவனித்துவிட்டு, நெருப்பிலிருந்து ஒரு முழு புத்தகத்தையும் அவசரமாக வெளியே எடுத்தார் பாகவி. தீயை அணைத்த பிறகு, அரிய எழுத்துக்களால் நிரம்பிய பக்கங்களைக் அவர் கண்டார். உடனடியாக அவருக்கு புரிந்து விட்டது, இதில் உள்ள எழுத்துக்கள் நீண்ட காலத்திற்கு முன் வழக்கொழிந்து போன அர்வி மொழியைச் சேர்ந்தது என.

தற்போது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஜாமியா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் பாகவி, நான்கு வயதிலிருந்தே அர்வி இலக்கியங்களை படித்து வந்தார். ஆனால் அரபு மொழியைப் நன்கறிந்த முஸ்லிம்களில் கூட மிகச் சிலரால் மட்டுமே இதைப் படிக்க முடியும்.

 
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,AHAMED ZUBAIR

படக்குறிப்பு,

அர்வி எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை

தமிழ்நாட்டில் உருவான அர்வி மொழி

கிபி 8ஆம் நூற்றாண்டின் இடைக்கால உலகில் அதிக பயணம் மற்றும் வர்த்தகம் காரணமாக பல புதிய கலப்பு மொழிகள் உருவாகின, அதில் ஒன்று அர்வி. 17ஆம் நூற்றாண்டில், தமிழ் பேசும் மக்கள் நிறைந்த தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அதிகமான முஸ்லிம் அரேபிய வணிகர்கள் வந்திறங்கியபோது, அது இந்தப் பகுதியில் முக்கியத்துவம் பெற்றது.

வணிகர்கள் தங்களுடன் கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள், சிறந்த ஜவுளிகள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு வந்தனர். உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்கள் இடையே இரண்டு வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், உள்ளூர் மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்த அவர்கள் ஏங்கினார்கள். மேலும் அவர்களுக்கு இடையே இருந்த மத ஒற்றுமையும் ஒரு காரணம் என்று பதிவுகள் கூறுகின்றன.

வணிகர்கள் பேசிய அரபு மொழியானது உள்ளூர் மொழியான தமிழுடன் கலந்து, அதை அறிஞர்கள் அரபு தமிழ் அல்லது அர்வி மொழி என்று அழைத்தார்கள். இந்த மொழிக்கான எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை.

அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

எடின்பர்க் பல்கலைக் கழகத்தில், 1750க்கு முன்பான இந்தியப் பெருங்கடலின் வரலாறு எனும் பிரிவில் விரிவுரையாளராக இருக்கும் மஹ்மூத் கூரியா, "அர்வி என்றழைக்கப்படும் அரபுத் தமிழ், அரபு எழுத்துக்கள் கொண்டு எழுதப்படும் பல மொழிகளில் ஒன்றாகும்" என்று விளக்கினார்.

"ஐரோப்பிய காலனித்துவவாதிகளுக்கு முன்பாக இந்தியாவில் தரையிறங்கிய அரேபிய மற்றும் பாரசீக வணிகர்கள் அப்போது இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்" என்று அவர் கூறினார்.

"இந்த மொழிகளின் வளர்ச்சி என்பது கடல் பயணம் மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டது." என்கிறார்.

தமிழ் பேசும் மக்களைக் கொண்ட அருகிலுள்ள இலங்கைக்கும் அர்வி பரவியது. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும், தாய்மொழி பேசுபவர்கள் குறையத் தொடங்கியபோதும் இந்த மொழி அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்று ஒரு நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகள் இதைப் படிக்கிறார்கள், கடற்கரையோரத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில், பல முஸ்லீம் பெண்கள் பண்டைய அர்வி மொழியில் பிரார்த்தனை பாடல்களைப் பாடுவதில் பெருமை கொள்கிறார்கள்.

"பலர் அதன் மதிப்பை உணரவில்லை. எனது சொந்த ஊரான தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் உள்ள குடும்பங்கள் அதை தங்கள் முன்னோர்களுடனான புனிதமான இணைப்பாக கருதுகின்றனர்," என்று பாகவி கூறினார்.

அர்வி எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்ள, ஒருவர் தென்னிந்தியாவின் கடற்கரையோர நகரங்களுக்குச் செல்ல வேண்டும், முக்கியமாக முஸ்லிம் குடியிருப்புகளுக்கு.

 
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,MAHMOOD KOORIA

படக்குறிப்பு,

அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார்.

40 எழுத்துக்கள் மட்டுமே கொண்ட அர்வி மொழி

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து தெற்கே 530கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை அத்தகைய நகரங்களில் ஒன்றாகும். 38,000 மக்கள்தொகையுடன் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது, இங்குள்ள ஜும்மா பாலி மஸ்ஜித் - இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகும், இது கிபி 628இல் கட்டப்பட்டது.

இந்தப் பகுதிகளுக்கு கடல் வழியாக வந்த ஏமன் வணிகர்களால் இந்த மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய புனிதர்களின் இரண்டு பெரிய கல்லறைகள் மசூதியின் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மற்றும் பச்சை மினாரட்டுகளுக்கு அருகில் உள்ளன. கல்வெட்டுகளின் ஒரு முனையில் அரபு மொழியும், மறுபுறம் தமிழ் மொழியும் உள்ளது.

அரபு கடல் வணிகர்கள் மற்றும் உள்ளூர் தமிழ் முஸ்லீம் பெண்கள் இடையே நடந்த திருமணத்தின் காரணமாக 17ஆம் நூற்றாண்டில் அர்வியின் புகழ் பரவியது என்றும், வணிக உறவுகளை ஆழப்படுத்த வணிகர்களுக்கு இது உதவியது என்றும் சில அறிஞர்கள் நம்புகிறார்கள். அந்த வணிகர்கள் ஏற்கனவே அறிந்திருந்த அரபி எழுத்துமுறையை தமிழ் போன்ற சிக்கலான மொழியுடன் இணைத்து அர்வி மொழியில் தேர்ச்சி பெற்றனர்.

"தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அர்வி மொழியில் அதைவிட குறைவாக வெறும் 40 எழுத்துக்கள். ஒரு மொழியில் உடனடியாக தேர்ச்சி பெற விரும்பும் கடல் வணிகர்களுக்கு ஏற்ற மொழியாக இருந்தது அர்வி. புதிய நிலத்தில் வணிகம் செய்து வாழ்வாதாரம் பெற அது உதவியது" என்று கே.எம்.ஏ அகமது சுபைர் கூறினார். சென்னையில் உள்ள தி நியூ கல்லூரியில் அரபு மொழியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார் அகமது சுபைர்.

அவர் மேலும் கூறியதாவது, "வடக்கில் இருப்பது போல இல்லாமல், தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் பாகுபாடு இல்லாமல், பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். வர்த்தகத்தின் மூலம் அரேபியர்கள் செழிப்பைக் கொண்டு வந்ததால் இங்கு அவர்கள் வரவேற்கப்பட்டனர். சில பதிவுகளின்படி, அர்வி ஒரு ரகசிய மொழியாக பயன்படுத்தப்பட்டது. அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடனான வணிகப் போட்டியை எதிர்கொள்ளும் போது ரகசிய முறையில் (உள்ளூர் மக்களுடன்) தொடர்புகொள்வதற்கான வழிமுறையாக இருந்தது." என்கிறார்.

 
அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம்

தமிழ் மற்றும் அரபு மொழிகளின் கலவையாக மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவில், மலையாளம் மற்றும் அரபு கலந்து, அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம் என்று அழைக்கப்படும் மொழியும் செழித்து வளர்ந்தது.

குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி மற்றும் சிந்தி போன்ற பிற பிராந்திய இந்திய மொழிகளும் அரேபிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன என்று சுபைர் கூறினார். அரபு மற்றும் உள்ளூர் மொழியின் இணைப்பால் பிறந்த ஒவ்வொரு மொழியும் தனித்துவமானது. ஆனால் வெளிநாடுகளில் கணிசமான தமிழ் பேசும் மக்கள் தொகை இருப்பதால் அரேபிய வணிகர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய போதும் அர்வி தொடர்ந்து செழித்து வளர்ந்தது என்று சுபைர் கூறுகிறார்.

"வரலாற்று பதிவுகளின்படி, இலங்கை, சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கும் அரபு வர்த்தகர்கள் மூலமாக பயணம் செய்தது அர்வி மொழி." என்கிறார் அவர்.

அரபு தமிழ் மற்றும் அரபு மலையாளம் மிகவும் பிரபலமாக இருந்தன, ஏனெனில் அவை வளமான இலக்கிய மற்றும் பேச்சுவழக்கு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தன, என்று கூறுகிறார் கூரியா. இந்தியா மற்றும் இலங்கை முழுவதும், அரபு தமிழில் எழுதப்பட்ட 2,000 புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன . கேரளாவில், அரிய அரபு மலையாள கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இருப்பினும், கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க, நீங்கள் முதலில் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது மிகவும் சவாலானது. மசூதியின் வளாகத்தில் புத்தகம் எரிக்கப்படுவதைக் கண்ட பாகவி, இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட அர்வி மற்றும் அரபு மலையாள புத்தகங்களை இப்போது வரை சேகரித்துள்ளதாக கூறுகிறார்.

"நான் இந்த புத்தகங்களை பழைய கிணறுகளிலும், கல்லறைகளிலும் (கபருஸ்தான்கள் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் முஸ்லீம் வீடுகளில் பயன்படுத்தப்படாத பழைய மாடி அறைகளில் கண்டேன்," என்று அவர் கூறினார். (தனியார் சேகரிப்பில் இருந்து இந்த நூல்களில் பல இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, மாப்பிள பாரம்பரிய நூலகத்தில் ஆன்லைனில் பதிவேற்றப்படுகின்றன)

 
முஸ்லிம் பெண்களால் எழுதப்பட்ட நூல்கள்
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,MUHAMMED SULTHAN BAQAVI

படக்குறிப்பு,

1314ஆம் ஆண்டின் அர்வி கவிதை புத்தகம் உட்பட இந்தியா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள அர்வி புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை பாகவி சேகரித்து வருகிறார்

காலனித்துவத்தின் விளைவாக, கையெழுத்துப் பிரதிகள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திற்குச் சென்றன, அவை இன்றும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார். "வரலாறு, மதம், மருத்துவம் மற்றும் கலாச்சாரம் ஆகிய பல பிரிவுகளில் இந்த நூல்கள் இருப்பதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். இவற்றில் பல நூல்கள் பெண்களால் எழுதப்பட்டவை" என்று அவர் கூறினார்.

"பிரசவம் மற்றும் பாலுறவு போன்ற பிரச்னைகளை எடுத்துரைக்கும் விதத்தில், கணிசமான எண்ணிக்கையிலான புத்தகங்கள் பிற பெண்களுக்காக பெண் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. உள்நாட்டுப் பிரச்னைகளைப் பிரதிபலிக்கின்றன அல்லது உணவு வகைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கின்றன" என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மதங்கள் பிரிவு விரிவுரையாளர் ஓபிரா கேம்லியேல் கூறினார்.

"முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் எப்படி ஒரு வலுவான குரலையும் அடையாளத்தையும் கொண்டிருந்தனர், எப்படி ஒரு தாய்வழி பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதற்கு இது சான்றாகும்" என்று கேம்லியேல் கூறினார்.

இந்த பேச்சுவழக்குகள் அன்றாடம் பேசப்படுவதில்லை என்றாலும், இந்த புத்தகங்கள் மற்றும் பாடல்களால் அர்வி மற்றும் அரபு மலையாளம் இன்றும் வாழ்கின்றன.

 
தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் பேசப்படும் அர்வி

அர்வி மற்றும் அரேபிய மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பட்ட மதப் பாடல்கள் பாகவியின் சொந்த ஊரான காயல்பட்டினத்தில் இன்னும் பாடப்படுகின்றன, ஏனெனில் உள்ளூர்வாசிகள் இந்த மொழியை நினைவில் வைத்து கொள்ளவும், தங்கள் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் விரும்புகிறார்கள்.

இந்தப் பாடல்களைப் பாடுவதற்கு என ஒன்றுகூடுவது ஒரு பெரிய சமூக நிகழ்வு. காயல்பட்டினத்தில் உள்ள உள்ளூர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் படித்து வரும் 18 வயது கிஜ்ர் மக்ஃபிரா, "இது ஒரு பெண்கள் கிளப் போன்றது" என்று கூறி சிரித்தார். "ஒவ்வொரு வீட்டிலும் அர்வியை நன்கு அறிந்த ஒரு உறுப்பினராவது சரளமாகப் பேசுவார்," என்று அவர் மேலும் கூறினார்.

"எங்கள் ஊரில், முகமது நபி பிறந்த மாதம் (இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தில், தோராயமாக செப்டம்பர் மாதம்) போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது பெண்கள் குழுக்கள் கூடி இந்தப் பாடல்களை ஒன்றாகப் பாடுவார்கள்" என்று மக்ஃபிரா கூறினார்.

"அவர்கள் இந்தப் பாடல்களைப் பாடும்போது அவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்க்கும்போது, அவர்கள் அதை எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டு போற்றுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது மிகவும் உணர்வுப்பூர்வமானது." என்கிறார்.

வீட்டில் உள்ள பெரியவர்களால் ஈர்க்கப்பட்டு அர்வியை கற்றுக்கொள்கிறார் மக்ஃபிரா. இவர் நான்கு வயதிலிருந்தே அரபு மொழியைக் கற்று வந்துள்ளார், மேலும் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் அவருக்கு இது உதவுகிறது. நகரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்ட்ராய்டு கைபேசியுடன் இணக்கமான ஒரு அர்வி கீபோர்டை உருவாக்கியுள்ளனர் .

மக்ஃபிராவின் உறவினரான கிஸ்ர் பாத்திமா கூறுகையில், "அர்வி எழுத்து முறையை பழைய முறையில் கற்றுக் கொள்ளும் இளைஞர்களை ஊர் மக்கள் ஊக்குவிக்கிறார்கள். அவ்வாறு செய்யும் இளைஞர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படுகிறது. இந்த ஊரின் பழமையான பாரம்பரியம் இது” என்றார்.

இவர் சமீபத்தில் தனது அண்டை வீட்டுச் சிறுமிக்கு ரூபாய் 500 பரிசளித்துள்ளார், மேலும் தான் பார்த்ததில் மிக அழகான அர்வி கையெழுத்து அந்த சிறுமியின் கையெழுத்து தான் என்று கூறுகிறார்.

"இந்த மொழியின் பாடல்கள், ஆன்மீகச் சிறப்பு மற்றும் வணிகர்களின் சாகசப் பயணங்களோடு இந்த மொழிக்கு இருக்கும் தொடர்பு, இப்படிப்பட்ட மொழி மேலும் வளர்வதை உறுதி செய்ய இதுவே எங்கள் வழியாகும்," என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c51wzzn3g1vo

ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க கர்நாடக‌ அரசுக்கு பெங்களூரு கோர்ட் உத்தரவு

1 month 3 weeks ago
ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க ரூ.5 கோடி: தமிழக அரசுக்கு பெங்களூரு கோர்ட் உத்தரவு
20 FEB, 2024 | 03:18 PM
image
 

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்க‌ளை மார்ச் 6-ம் தேதி தமிழக‌ அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 - 1996ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச‌ ஒழிப்புத் துறை போலீஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட என ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, ஜெயலிதா உயிரிழந்தார். சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர்.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும். அந்த தொகையில் இவ்வழக்கிற்காக கர்நாடக அரசு செலவு செய்த பணத்தை வழங்க வேண்டும். மீதியுள்ள பணத்தை மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரினார்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கூடாது. அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரினர். இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஜெயலலிதா தொடர்புடைய தங்க, வரை நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வருகிற மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக‌ உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Jayalalithaa-s-Jewellery-is-in-Karnataka

அன்றைய தினம் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி, புகைப்படக்காரர், வீடியோகிராபர் ஆகியோர் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும். நகைகளை கொண்டு செல்ல 6 இரும்பு பெட்டிகளைக் கொண்டு வர வேண்டும். இவ்வழக்கை நடத்துவதற்கு கர்நாடக அரசு செலவழித்த ரூ.5 கோடியை தமிழக அரசு செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கின் அடுத்தக்கட்ட‌ விசாரணை மார்ச் 6‍-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/176873

Checked
Tue, 04/16/2024 - 23:20
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed