தமிழகச் செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மிரட்டும் கொரோனா; 17 பேருக்கு தொற்று பாதிப்பு

2 months 1 week ago
தமிழகத்தில் மீண்டும் மிரட்டும் கொரோனா; 17 பேருக்கு தொற்று பாதிப்பு
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 12 நாட்களில் 17 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4 பேர் உட்பட 12 நாட்களில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து நோய் தொற்று வேகமாக பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா பரவல் குறைந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 11 ஆம் தேதி 67 பேரிடம் நோய் அறிகுறிகள் தென்பட்டதில் சோதனை மேற்கொண்டதில், சென்னை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 4 பேர் உட்பட 12 நாட்களில் 17 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் இது குறித்து பயம் கொள்ள வேண்டாம் எனவும், தொற்று ஏற்பட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் பொது சுகாதராத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/310699

கோவையில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - மழைநீரில் சிக்கிய பேருந்தில் பயணிகள் பத்திரமாக மீட்பு

2 months 1 week ago
கோவை, கனமழை
படக்குறிப்பு, சிவானந்தா காலனி, கோவை கட்டுரை தகவல்
  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 13 அக்டோபர் 2024

கோவையில் கடந்த ஒரு வாரமாக, இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது. இன்று மாலை 3 மணிக்கு மேல், மிகக்கடுமையான இடியும், மின்னலுமாக இருந்தது. சிறிது நேரத்தில் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்த அடர்மழை காரணமாக, கோவை மாநகரமே ஸ்தம்பித்தது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் வளி மண்டலச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 25 மாவட்டங்களில், அக்டோபர் 13-ஆம் தேதியிலிருந்து 3 நாட்களுக்கு அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதில் கோவைக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ கொடுக்கப்பட்டிருந்தது.

கோவை, கனமழை
வெள்ளத்தில் மிதந்த சாலைகள்

கோவை நகரின் பிரதான சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளமென பாய்ந்தோடியது. அவிநாசி சாலையில், 10 கி.மீ., துாரத்துக்கு தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் கட்டும் பணி நடப்பதையொட்டி, அதன் இரு புறங்களில் உள்ள சர்வீஸ் சாலைகளில், மழைநீர் செல்வதற்கான வடிகால்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அவை முழுமையடையாததாலும், ஆங்காங்கே தடைகள் இருப்பதாலும், மழை வெள்ளம் அவிநாசி சாலை முழுவதும் ஆறு போல ஓடியது.

அவிநாசி சாலையிலுள்ள அண்ணா மேம்பாலத்தின் சுரங்கப் பாதைகள் முழுவதும் தண்ணீரால் நிரம்பியது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டது. இதே போல, நகரின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் பாதைக்குக் கீழே உள்ள சுரங்கப் பாதைகளில் வெள்ளம் நிரம்பி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கோவை, கனமழை
பேருந்தில் புகுந்த வெள்ளம்

சங்கனுார் அருகே சிவானந்தா காலனி பகுதியிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதை இரு புறமும் சாலைகள் மேடாக அமைந்துள்ளதால், இரு புறமும் இருந்து பாய்ந்து வந்த வெள்ளம் பாலத்திற்கு கீழே குளம் போல தேங்கியது. உக்கடம்–பிரஸ் காலனி இடையில் இயக்கப்படும் தனியார் டவுன்பஸ், இந்தப் பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரின் வழியாகக் கடந்து செல்ல முயன்ற போது, இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் நின்று விட்டது. பஸ்சுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கவுண்டம்பாளையத்திலிருந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து, பஸ்சில் ஏறிச் சென்று, கயிறுகள் உதவியுடன், உடனடியாக பயணிகளை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.

அங்கு தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் மூலமாக வெளியேற்றி, கிரேன் உதவியுடன் பஸ்சை வெளியே மீட்டுக் கொண்டு வந்தனர். இதே பகுதிக்கு அருகில் கவுண்டம்பாளையம் சிடிசி டெப்போ அருகிலுள்ள பள்ளி வாசலுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது.

 
கோவையில் கனமழை
படக்குறிப்பு, சி.எம்.சி. சாலை, கணபதி, கோவை
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்

பீளமேடு, கணபதி, மசக்காளிபாளையம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, உக்கடம், காந்திபுரம் என கோவையின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது.

கோவை காமராஜர் சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, கிராஸ்கட் சாலை, பூ மார்கெட், அவினாசிலிங்கம் கல்லூரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கணபதி சிவசக்தி காலனி பகுதியில் பெய்த கன மழை காரணமாக, மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.

மேலும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு, வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவற்றிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

செளரிபாளையம் ராஜீவ் காந்தி நகர், ஹட்கோ காலனி போன்ற பகுதிகளிலும் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அய்யர் லேஅவுட் பகுதியில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. பூ மார்க்கெட் பகுதியில் பெய்த மழை காரணமாக மார்க்கெட் வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக பூ வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 
மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?

தீபாவளி நெருங்கிவருவதால், காந்திபுரம், ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், ஏராளமான மக்கள் ‘ஷாப்பிங்’ செய்ய வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த மழையில் சிக்கிக் கொண்டனர். அனைத்துப் பகுதிகளிலும் வாகனங்கள் செல்ல முடியாமல், மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரின் அனைத்து ரோடுகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிப் பல மணி நேரம் ஸ்தம்பிக்கும் நிலை இருந்தது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இருவரும் இணைந்து, மழை பாதிப்புக்குள்ளான பல பகுதிகளையும் நேரில் கள ஆய்வு செய்தனர். ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பிபிசி தமிழிடம் கூறுகையில், “இன்று கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டதால், ஏற்கெனவே மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் வேறு பகுதிகள் எதிலும் பெரிய பாதிப்பு இருப்பதாக இதுவரை தகவல் இல்லை. மாநகரப் பகுதிகளில்தான் பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியிருக்கிறது. அதை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்றார்.

கோவை கனமழை
படக்குறிப்பு, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இருவரும் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரில் கள ஆய்வு செய்தனர்.

“ஆபத்தான வீடுகளில் குடியிருக்கும் மக்களை, உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு வருவாய்த்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டுள்னர்,” என்று மழை பாதிப்புக்கான நடவடிக்கைகள் பற்றி அவர் தகவல் தெரிவித்தார்.

மேலும், “மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் இயங்குகின்றன. எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், 1077 அல்லது 0422-2301114 ஆகிய அவசர தொடர்பு எண்களை 24 மணி நேரமும் அழைக்கலாம் என அறிவித்து இருக்கிறோம். இன்று ஒரு நாள் மட்டும்தான் கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட் உள்ளது. நாளையிலிருந்து ‘எல்லோ அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்,” என்றும் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

மாவட்டத்தின் வேறு எந்தப் பகுதியிலும் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, “சிவானந்தா காலனியில் மழை வெள்ளத்தில் பஸ் சிக்கியதாகத் தகவல் வந்ததும், அடுத்த 10 நிமிடத்தில் தீயணைப்புத் துறையினர் சென்று மீட்டு விட்டோம். சில பகுதிகளில் வீடுகள், கடைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாகத் தகவல் வரும்பட்சத்தில், அவற்றை வெளியேற்றி, மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பட்டியல் சாதி மக்களின் கோவில் வழிபாட்டு உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவது ஏன்? பிபிசி கள ஆய்வு

2 months 1 week ago
கோயில் நுழைவு போராட்டம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் இருக்கும் பல கோவில்களுக்குள் சென்று வழிபடுவதில் பட்டியல் சாதியினர் இன்னமும் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் இருக்கும் உண்மை நிலையைக் கண்டறியவும், இந்தப் பிரச்னையைக் களைய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அறியவும் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

இந்தக் கள ஆய்வில், இன்றளவும் கோவிலுக்குள் சென்று வழிபடுவதில் மாநிலத்தின் பல கிராமங்களில் பட்டியல் சாதியினர் பல சவால்களை எதிர்கொள்வதை அறிய முடிந்தது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் இத்தகைய பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஆனாலும், தமிழ்நாட்டின் பல கிராமங்களில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களிலும் பட்டியல் பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்?

 
 

"அரசாங்க கோவில்தான். அதுக்காக நீங்க எல்லாம் சாமி கும்பிட வரலாமா?"

"உன் தாத்தா கோவிலுக்குள்ள வரல. உன் அப்பாவும் வரலை. நீ மட்டும் வரலாமா?"

"தனியா கோவில் கட்டி கும்பிடுங்க.. எங்க கோவிலுக்கு ஏன் வரணும்?"

சாதிதிருவண்ணாமலை, தென்முடியனூர் கிராமத்தில் கோவில் வழிபாட்டு உரிமையைக் கோரியபோது பட்டியல் சாதியினர் இந்த வார்த்தைகளை எதிர்கொண்டதாகக் கூறுகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பல கிராமங்களில் உள்ள கோவில்களில் இதே நிலை நீடிக்கிறது. "பழைய வழக்கத்தை மாற்றுவதற்குச் சிலர் முயல்வதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக" ஆதிக்க சாதியினர் கூறுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள வழுதலம்பேடு ஊராட்சியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த சம்பவம் இது.

சின்ன வழுதலம்பேடு, பெரிய வழுதலம்பேடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதியில் 200 பட்டியல் பிரிவு குடும்பங்களும் 600க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதி குடும்பங்களும் வசிக்கின்றன.

விவசாயக் கூலிகள் நிரம்பியுள்ள இந்தப் பகுதியில் பொதுமக்கள் வழிபடுவதற்கு எட்டியம்மன் என்ற கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது பட்டியல் பிரிவு மக்கள் தரப்பில் நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை,

  • தாங்கள் வசிக்கும் காலனிக்குள் அம்மன் வரவேண்டும்
  • கோவிலில் அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும்
  • மண்டல அபிஷேகம் செய்வதற்கு அனுமதி
  • கும்பாபிஷேகத்திற்கு தங்களின் காணிக்கைப் பணம் இடம்பெற வேண்டும்
 
கோவிலுக்கு சீல்
கோயில் நுழைவு போராட்டம்

'கோவிலுக்கு உங்க காசு தேவையில்லை' என அவர்கள் (ஆதிக்க சாதியினர்) கூறியதால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை" என்கிறார் வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கணபதி.

இதையடுத்து இரு தரப்பையும் அழைத்து கும்பிடிப்பூண்டி டி.எஸ்.பி கிரியாசக்தி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டது. மறுநாள் (ஆகஸ்ட் 9) கோவிலுக்குச் சென்ற பட்டியல் பிரிவு மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

'பட்டா நிலத்துக்குள் பட்டியல் பிரிவு மக்கள் வரக்கூடாது' எனக் கூறி ஆதிக்க சாதியினர் தகராறு செய்துள்ளனர். இதைக் கண்டித்து பட்டியல் பிரிவு மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரத்தில் வழுதலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவி மணிமேகலை உள்பட 7 பேர் மீது சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுதொடர்பாக, வழுதலம்பேடு கிராமத்தின் நிலையை அறிய பிபிசி தமிழ் நேரில் சென்றது. இரு தரப்பிலும் பாதுகாப்புக்கு தலா இரண்டு காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். கோவிலின் முன்பு எஸ்.ஐ ஒருவர் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
20 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
கோயில் நுழைவு போராட்டம்

கடந்த 20 ஆண்டுகளாகவே எட்டியம்மனை வழிபட முடியாத அளவுக்கு ஆதிக்க சாதியினர் இடையூறு செய்வதாகக் கூறுகிறார், வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்.

கடந்த 1997ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்த பிறகு 2001ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அப்போது, 'எங்கள் காலனியில் சாமி ஊர்வலம் வர வேண்டும்' என பட்டியல் பிரிவு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

"இதை ஆதிக்க சாதியினர் ஏற்கவில்லை. அன்றைய மாவட்ட ஆட்சியர் தலையீட்டின் பேரில் கோவிலுக்குள் சென்று பட்டியல் பிரிவு மக்கள் வழிபாடு நடத்தினர். இதனால் ஏற்பட்ட மோதலில் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது."

மீண்டும் இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டு 2011ஆம் ஆண்டு திருவிழா நடத்தப்பட்டது. அப்போதும் இதே பிரச்னை ஏற்பட்டு கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதாகக் கூறுகிறார் சிவக்குமார்.

"அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் இருப்பதால், அது பொதுவானது, ஒரு சாதியினர் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது என அதிகாரிகள் கூறியதை ஆதிக்க சாதியினர் ஏற்கவில்லை" என்கிறார், வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கணபதி.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கும்பாபிஷேக நிகழ்வைக் காணச் சென்ற தங்களுக்குச் சொல்ல முடியாத அளவுக்கு அவமரியாதை ஏற்பட்டதாகக் கூறுகிறார், இதே கிராமத்தைச் சேர்ந்த மாலதி.

அதுகுறித்துப் பேசிய மாலதி, நாங்கள் சாமி கும்பிடச் சென்றபோது, சாதியைச் சொல்லித் திட்டினார்கள். எட்டியம்மனை கும்பிட்டால் போதுமென்று வேறு வழியில் சென்றோம். அதிலும் விட மறுத்து அவமானப்படுத்தி அடிக்க வந்தார்கள். அதன் பிறகு சாலையில் உட்கார்ந்து விட்டோம். போலீசார் வந்து சமாதானப்படுத்தி கோவிலுக்குக் கூட்டிச் சென்றார்கள்," என்றார்.

 
கோயில் நுழைவு போராட்டம்

பட்டியலின மக்கள் கூறும் தகவல்களை வழுதலம்பேட்டில் வசிக்கும் ஆதிக்க சாதி மக்கள் முழுமையாக மறுக்கின்றனர்.

கோவில் திருவிழாவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே சாதியை முன்னிறுத்தி பட்டியலின மக்கள் தகராறு செய்வதாகக் கூறுகிறார், செங்கேணி என்ற பெண்.

அவர்களுக்கென தனி மருத்துவமனை, பள்ளிக்கூடம் இருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டம்கூடத் தனியாகத்தான் செய்கிறார்கள். கோவிலில் மட்டும் உரிமை இருப்பதாகக் கூறிக்கொண்டு ஏன் வரவேண்டும்?" எனக் கேள்வி எழுப்புகிறார் செங்கேணி.

"பழைய வழக்கத்தின்படியே அனைத்தும் நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதை அவர்களும் ஏற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்தனர்," எனக் கூறும் ஊர்ப் பெரியவர் முனியசாமி, அவர்கள் அதன்பிறகு வேண்டுமென்றே பிரச்னை செய்வதாகக் கூறுகிறார்.

"அவர்கள் கேட்டதையெல்லாம் செய்வதாகக் கூறினோம். காணிக்கைப் பணத்தை பூசாரியின் தட்டில் போடுமாறும் கோவிலுக்குத் தனியாகக் கொடுக்க வேண்டாம் என்றும் சொன்னோம். கும்பாபிஷேகம் நடந்த நேரத்தில், பொதுவெளியில் வராமல் பட்டா நிலம் வழியாக அவர்கள் வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம்," என்றார் முனியசாமி.

 
மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?
கோயில் நுழைவு போராட்டம்

இதன்பின்னர், இரு தரப்பிலும் சுமூகத் தீர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இரு தரப்பிலும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதே நாளில் பட்டியல் பிரிவு மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினார். ஆனால், இந்த நிகழ்வை பிற சமூகத்தினர் முற்றுமுழுதாகப் புறக்கணித்துவிட்டனர்.

இதன்மூலம் நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டதாகக் கூறுகிறார், வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்.

‘அனைவரும் சமம்’ என்று அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதை உறுதிப்படுத்தும் வேலையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறினார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.

"இரு தரப்பினரையும் ஒன்றாக வழிபட வைக்கும்போதுதான் நிரந்தரத் தீர்வு ஏற்படும். எளிய மக்களின் பக்கம் மாவட்ட நிர்வாகம் நிற்க வேண்டும். அதேநேரம், சட்டம் சொல்வதை பிற சமூகத்தினரிடம் எடுத்துக் கூறியுள்ளோம்" என்கிறார்.

 
கோயில் நுழைவு போராட்டம்
படக்குறிப்பு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்
கோவில் பொங்கல் திருவிழாவில் ஏற்பட்ட மோதல்

திருவள்ளூரைப் போலவே திருவண்ணாமலையிலும் இதே சிக்கலை பட்டியல் பிரிவு மக்கள் எதிர்கொண்டுள்ளனர். தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூர் கிராமத்தில் கடந்த ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. அப்போது அங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பட்டியல் பிரிவு மக்கள் வழிபாடு நடத்தினர்.

இதனால் ஏற்பட்ட மோதலில், தங்களுக்கென தனி கோவிலைக் கட்டும் முடிவை ஆதிக்க சாதியினர் அறிவித்தனர். தற்போது தென்முடியனூர் கிராமத்தின் நிலையை அறிய பிபிசி தமிழ் சென்றது.

விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட கிராமத்தில் 6500க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியினரும் 1500க்கும் மேற்பட்ட பட்டியல் பிரிவு மக்களும் வசிக்கின்றனர். நாம் சென்ற நேரம் கோவில் பூட்டப்பட்டிருந்தது.

வாரம் ஒருமுறை மட்டும் பூட்டைத் திறந்து பூசாரி பூஜை செய்வதாகவும் பிற சமூகத்தினர் யாரும் கோவிலுக்குள் வருவதில்லை என்றும் கூறுகிறார் தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகன்.

"இங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்குள் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியல் பிரிவு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. 1997ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் சென்றுவிட்டாலும் பொது வழிபாட்டுக்குரிய கோவிலாக இன்னும் மாறவில்லை" என்றார் அவர்.

 
தென்முடியனூர் - தற்போதைய நிலவரம்
கோவில் நுழைவுப் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டு நடந்த கோவில் நுழைவு சம்பவத்துக்குப் பின்னர், வெளியில் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாககக் கூறுகிறார், தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன்.

"கோவிலுக்குள்ள போய் நாங்க சாமி கும்பிட்ட பின்னாடி, 'கோவிலை விட்டு போயிருங்க'னு அவங்க சொல்றாங்க. இது அரசாங்க கோவில்னு சொன்னா, 'அதுக்குன்னு ஒரு வரைமுறை இல்லையா... உன் தாத்தா கோவிலுக்குள்ள வரல. உன் அப்பாவும் வரலை. நீ மட்டும் வரலாமா?'ன்னு கேட்கறாங்க" என்கிறார் சத்தியசீலன்.

தென்முடியனூர் கிராமத்தில் சுடுகாடு உள்பட அனைத்திலும் சாதிப் பாகுபாடுகள் தொடர்வதாகவும் பட்டியல் சாதி மக்கள் பிற சமூகத்தினரின் தெரு வழியாகச் சென்றாலே தீட்டு பட்டுவிட்டதாகக் கூறி தண்ணீர் ஊற்றுவதாகவும் கூறுகிறார் சத்தியசீலன்.

கோவில் நுழைவு சம்பவத்துக்குப் பிறகு பட்டியலின மக்கள் 20 பேர் மீதும் ஆதிக்க சாதியினர் மூன்று பேர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார், தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகன்.

“கடந்த ஓராண்டாக பட்டியல் பிரிவு மக்களுக்கு சலூன் கடைகளில் யாரும் முடி வெட்டுவதில்லை” என்கிறார் ஆசிரியர் முருகன்.

கோவில் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் முன்னின்று பேசியதற்காகத் தனது பெட்டிக்கடை கொளுத்தப்பட்டதாக கூறுகிறார், இதே கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி.

"என் கடையை எரித்தது யாரென்று போலீசாரிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்ணாமலையார் கோவில், திருப்பதி கோவில்களுக்கு மட்டும் அனைவரும் செல்கிறார்கள். இங்கு மட்டும் ஏன் தடுக்கிறார்கள்?

'கோவிலுக்குள் சென்றது தவறு என எழுதிக் கொடுக்குமாறு கேட்டார்கள். 'உயிரே போனாலும் கையெழுத்து போடமாட்டேன். 'நீ நீயாவே இரு. கோவில் கோவிலாகவே இருக்கட்டும்' எனச் சொல்லிவிட்டேன்" என்றார் இந்திராணி.

இவரின் கடை கொளுத்தப்பட்டது தொடர்பாக சாதி வன்கொடுமை சட்டத்தின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

 
தனிக் கோவில் கட்டப்பட்டதா?
கோயில் நுழைவு போராட்டம்
படக்குறிப்பு, இந்திராணியின் கடை கொளுத்தப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், தங்களுக்கென மாரியம்மன் கோவில் ஒன்றை ஆதிக்க சாதியினர் கட்டியுள்ளனர். அங்கு அவர்கள் மட்டும் வழிபாடு நடத்தி வருவதாகவும் புதிதாக ஒரு கோவிலைக் கட்டும் வேலையில் தீவிரம் காட்டி வருவதாகவும் ஆசிரியர் முருகன் கூறுகிறார்.

பிபிசி தமிழ் அங்கு சென்றபோது, சிறிய அளவிலான அந்தக் கோவில் பூட்டப்பட்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதியினர் பேச முன்வரவில்லை.

ஆதிக்க சாதியினர் தரப்பில் அ.தி.மு.கவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நல்லதம்பி, தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் லோகேஸ்வரியின் கணவர் ஏழுமலை ஆகியோரிடம் பேசியபோது, "நாங்கள் எதையும் கூற விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத பிற சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இத்தனை ஆண்டுகளாக எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்லை. கோவில் விவகாரத்தைச் சிலர் பெரிதாக்கி விட்டார்கள். இதனால் ஊருக்குத்தான் கெட்ட பெயர். அவர்களுக்கென தனியாகக் கோவில் இருக்கும்போது இந்தக் கோவிலில் ஏன் உரிமை கேட்க வேண்டும்?" என்றார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பும் மனது வைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

"இரு தரப்பிலும் சுமூகத் தீர்வை எட்டுவதற்குக் காலம் தேவைப்படும். தென்முடியனூர் கிராமத்தில் கோவில் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என பிபிசி தமிழிடம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

 
தொடரும் சாதிக் கட்டுப்பாடுகள்
கோயில் நுழைவு போராட்டம்

பழங்காலங்களில் வழிபாட்டு முறைகளில் என்ன மாதிரியான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்ததோ, அதே கட்டுப்பாட்டுகள் தற்போதும் தொடர்வதாகக் கூறுகிறார், திருவள்ளூரில் வசிக்கும் திரைப்பட இயக்குநர் கோபி நயினார்.

"எல்லா காலங்களிலும் பொது சமூக வழிபாட்டுக்கான இடங்களாக கோவில்கள் இருந்ததில்லை" எனக் கூறும் கோபி நயினார், "சிறு குழுக்கள், சில சமூகத்தினர், குறிப்பிட்ட நில எல்லைகள் ஆகியவற்றுக்குள் வசிப்பவர்களுக்கானதாக கோவில்கள் இருந்தன.

பிற்காலத்தில் சாதி தீண்டாமையின் மையமாக அது மாறிவிட்டது. கோவில் வழிபாட்டு முறைகளைப் பொருத்தவரை ஜனநாயகபூர்வ சூழல்களை உருவாக்காத வரையில் சண்டை தொடர்வதை நிறுத்த முடியாது" என்றார் கோபி நயினார்.

 
கோயில் நுழைவு போராட்டம்
படக்குறிப்பு, திரைப்பட இயக்குநர் கோபி நயினார்

பெரும்பாலான கிராமக் கோவில்களில் அர்ச்சனை உள்படப் பல்வேறு விதங்களில் 25 வகையான பாகுபாடுகள் பட்டியல் சாதி மக்கள் மீது காட்டப்படுவதாகக் கூறுகிறார் மதுரையிலுள்ள எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்.

திருவண்ணாமலையின் போளூர், சேலம் மாவட்டம் திருமலைகிரி, விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆழம்பள்ளம், விருதுநகர் சேதுபுரம் ஆகிய கிராமங்கள் உள்படக் கடந்த 20 மாதங்களில் தமிழ்நாட்டில் 17 குற்ற வழக்குகள் கோவில் நுழைவு தொடர்பாகப் பதிவு செய்யப்படுள்ளதாகக் கூறுகிறார் எவிடென்ஸ் கதிர்.

எஸ்.சி, எஸ்.டி ஆணையம் சொல்வது என்ன?

இதை ஆமோதிக்கும் மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவர் புனிதபாண்டியன், கோவில் நுழைவு தொடர்பான புகார்களின் அடிப்படையில் நேரடி ஆய்வு நடத்தப்பட்டதாகக் கூறினார்.

மதுரையில் பாப்பாகுடி கிராமத்தில் பட்டியல் பிரிவு மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டபோது, நேரடியாக அங்கு சென்று, மனக் கசப்புகளை மறந்து சரிசமமாக வழிபாடு செய்வதற்கு ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறுகிறார், புனித பாண்டியன்.

"விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் உள்ளிட்ட சில கோவில் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டதால், ஆணையத்தால் விசாரணை நடத்த முடியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

கோயில் நுழைவு போராட்டம்
படக்குறிப்பு, மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையத் துணைத் தலைவர் புனிதபாண்டியன்
அறநிலையத்துறை அமைச்சரின் பதில்

அறநிலையத்துறை கோவில்களில் பட்டியல் சாதியினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

அவர், "கும்மிடிப்பூண்டி வழுதலம்பேடு கிராமத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் சுமூகமாகப் பேசி மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றதாகவும், இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு காணப்பட்டதாகவும்" கூறினார்.

அதோடு, அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

ஆனால், கும்மிடிப்பூண்டியில் உள்ள வழுதலம்பேடு கிராமத்தில் தற்போது வரை பிரச்னை நீடிப்பதையும் பிபிசி தமிழின் கள ஆய்வில் காண முடிந்தது. இதுதொடர்பாகக் கேட்டபோது, அமைச்சர் சேகர்பாபு, தென்முடியனூர் கிராமத்தில் நிலவும் சாதிப் பாகுபாடு தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் கூறவில்லை.

தீண்டாமையின் அனைத்து வடிவங்களும் அரசமைப்புச் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் மாநில எஸ்.சி, எஸ்.டி, ஆணைய துணைத் தலைவர் புனிதபாண்டியன், "இதுபோன்ற சமூகச் சிக்கல்கள் நேரும்போது, அதை வெறும் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்காமல், அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள உரிமைகளை அனைவரும் சமமாக அனுபவிக்கும் வழிவகைகளை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இருப்பதாக" தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

முரசொலி செல்வம் காலமானார்

2 months 1 week ago
முரசொலி செல்வம்: சட்டமன்றக் கூண்டில் ஏற்றி கண்டிக்கப்பட்டபோது என்ன செய்தார்?

முரசொலி செல்வம்

பட மூலாதாரம்,@MKSTALIN/X

படக்குறிப்பு, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலி நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வந்தவர் 'முரசொலி' செல்வம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 44 நிமிடங்களுக்கு முன்னர்

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகனும் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியின் முன்னாள் ஆசிரியருமான 'முரசொலி' செல்வம், வியாழக்கிழமை (அக். 10) காலமானார். முதலமைச்சர்களின் உறவினராக இருந்தாலும்கூட, எவ்வித பதவியையும் விரும்பாதவர் என்கிறார்கள் அவருடன் பழகியவர்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவரும் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியின் முன்னாள் ஆசிரியருமான 'முரசொலி' செல்வம் காலமானார். அவருக்கு வயது 84.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலி நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வந்த 'முரசொலி' செல்வம், மிக அமைதியானவராக அறியப்பட்டவர். அவர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகன், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மைத்துனர் என்றபோதும், தி.மு.க.விலோ, அரசிலோ எவ்வித பதவிகளையும் வகிக்காதவர்.

'முரசொலி' செல்வமாக மாறிய பன்னீர்செல்வம்

முரசொலி செல்வத்தின் இயற்பெயர் பன்னீர்செல்வம். 1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் காலமானார்.

அதற்கு அடுத்த மாதத்தில் மு. கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரத்தம்மாளின் இளைய மகனாக இவர் பிறந்தார். சர். ஏ.டி. பன்னீர்செல்வத்தின் நினைவாக, அவருக்கு பன்னீர்செல்வம் என்ற பெயரைச் சூட்டியதாகத் தனது கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார் மு. கருணாநிதி. முரசொலியை கவனிக்கத் தொடங்கிய பிறகு இவரது பெயர் 'முரசொலி செல்வமாக' மாறிப் போனது.

இளைஞராக இருந்த காலத்தில் இருந்தே தனது சகோதரர் முரசொலி மாறனுடன் இணைந்து, முரசொலியின் பணிகளை இவரும் கவனித்து வந்தார். 1989இல் முரசொலி மாறன் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, முரசொலியின் ஆசிரியர் பொறுப்பு முரசொலி செல்வத்திற்கு வந்து சேர்ந்தது. முரசொலி இதழில் 'சிலந்தி' என்ற பெயரிலும் 'முரசொலி எஸ். செல்வம்' என்ற பெயரிலும் இவர் தொடர்ந்து எழுதி வந்தார்.

 
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலி நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வந்தவர் 'முரசொலி' செல்வம்

பட மூலாதாரம்,ARIVALAYAM

"இவரது சகோதரரான முரசொலி மாறன் நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக இருந்தார். கட்சிப் பொறுப்புகளிலும் இருந்தார். ஆனால், செல்வம் இதுபோன்ற எதையும் விரும்பியதில்லை. ஒரு பத்திரிகையாளராகவே தனது பொது வாழ்க்கையை நடத்திச் செல்ல விரும்பினார்" என்கிறார் அவருடன் நெருங்கிப் பழகிய திராவிட இயக்க வரலாற்று ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சங்கொலி திருநாவுக்கரசு.

கடந்த சில ஆண்டுகளாக முரசொலி ஆசிரியர் பொறுப்பில் செல்வம் இல்லாத நிலையிலும், ஓர் ஆசிரியருக்கு உரிய எல்லா பொறுப்புகளோடும் அவர் நடந்துகொள்வார் என்கிறார் திருநாவுக்கரசு.

"எல்லா பக்கங்களையும் வாசிப்பார். நான்றாக இருந்தால் அழைத்துப் பாராட்டுவார். இல்லாவிட்டால், ஏன் இப்படி வந்தது எனக் கேள்வி எழுப்புவார். மரணம் வரை அவர் முரசொலியின் பத்திரிகையாளராகவே இருந்தார்."

கடந்த 8ஆம் தேதிகூட, ஆளுநருக்கு பதிலளிக்கும் வகையில், சனாதனம் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்ததாகக் குறிப்பிடுகிறார் அவர்.

 
'முரசொலி' செல்வத்தின் இறுதிச்சடங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,@UDHAYSTALIN/X

படக்குறிப்பு, 'முரசொலி' செல்வத்தின் இறுதிச்சடங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க.வின் பொதுச் செயலாளரான துரைமுருகன், செல்வத்திற்கு மிக நெருக்கமானவர்.

"விளம்பரத்திற்கு அலைவது, வீண் பெருமை பேசுவது, அவசியமற்று உதவிகள் கேட்பது இவையெல்லாம் செல்வத்தின் அகராதியில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் காணப்படாத உயர் குணங்கள். செல்வத்திற்கு எப்போதும் எடுத்தெறிந்து பேசத் தெரியாது. அறவே பிடிக்காதவரிடம்கூட அரை மணிநேரம் சிரித்தே பேசுவார்" என 'முரசொலி சில நினைவலைகள்' நூலின் வாழ்த்துரையில் குறிப்பிடுகிறார் துரைமுருகன்.

சட்டமன்ற கூண்டில் 'முரசொலி' செல்வம்

முரசொலி செல்வத்தின் பொதுவாழ்வில் மிக முக்கியத் தருணமாக, அவர் சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிகழ்வைச் சொல்லலாம்.

 
சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்ட 'முரசொலி' செல்வம்

பட மூலாதாரம்,ARIVALAYAM

படக்குறிப்பு, சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்ட 'முரசொலி' செல்வம்

கடந்த 1991ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினரான பரிதி இளம்வழுதி சட்டமன்றத்தில் உரை ஒன்றை நிகழ்த்தினார். ஆனால், அவரது உரையின் ஒரு பகுதி, அன்று மதியம் அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகரால் நீக்கப்பட்டது. ஆனால், முரசொலியின் வெளியூர் பதிப்புகளில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெற்றன.

வெளியூர் செல்லும் பதிப்புகள் மதியம் இரண்டு மணிக்கே அச்சாகிவிடுவதால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெற்றிருந்தன. சென்னை பதிப்பில் மட்டும் அந்தப் பகுதிகள் நீக்கப்பட்டன.

இதையடுத்து முரசொலியின் ஆசிரியரான முரசொலி செல்வம் மீது உரிமைப் பிரச்னை தொடரப்பட்டது. அந்த விவகாரத்தை விசாரித்த உரிமைக் குழு, விளக்கம் கேட்டு செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் விளக்கமளித்த நிலையிலும் உரிமைக் குழுவின் முன் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அங்கு ஆஜரான முரசொலி செல்வத்திடம், மன்னிப்பு கேட்கும்படி கூறப்பட்டது. ஆனால் செல்வம் மறுத்துவிட்டார்.

 
'முரசொலி' செல்வத்தின் உடல் தாங்கிய வாகனம்

பட மூலாதாரம்,@UDHAYSTALIN/X

படக்குறிப்பு, 'முரசொலி' செல்வத்தின் உடல் தாங்கிய வாகனம்

இதற்குப் பிறகு 1992ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி செல்வம் கைது செய்யப்பட்டு, சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா முன்பு நிறுத்தப்பட்டார். அடுத்ததாக சட்டமன்றம் கூடும் நாளில், அங்கு ஆஜராகி, அவையின் கண்டனத்தைப் பெற வேண்டுமென அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, செப்டம்பர் 21ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அன்றைய தினம் கறுப்புச் சட்டை அணிந்து சட்டமன்றத்திற்குச் சென்ற முரசொலி செல்வம், அங்கிருந்த கூண்டில் ஏற்றப்பட்டார். இதற்கு சி.பி.ஐ., சி.பி.எம். பா.ம.க. எம்ஜிஆர் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதற்குப் பிறகு, அவையின் கண்டனம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு அவையிலிருந்து முரசொலி செல்வம் அனுப்பப்பட்டார்.

"வாடிய முகத்துடன் அந்தக் கூண்டுக்குள் செல்வம் நின்றிருந்தால் என்னகம் வாடிப் போயிருக்கும். அந்தச் செல்வத்தின் பெயரை இந்தச் செல்வத்துக்கு எத்துணைப் பொருத்தமாக அப்போதே வைத்தேன் என்று என்னையே நான் பாராட்டிக்கொண்டேன்" என இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதினார் மு. கருணாநிதி.

மறைந்த முதலமைச்சர் மு. கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரத்தம்மாளின் இளைய மகனாகப் பிறந்தவர் முரசொலி செல்வம்.

நீண்ட நாட்களாக முரசொலி நாளிதழின் ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம், சமீபகாலமாக பெங்களூருவில் வசித்து வந்தார். அக்டோபர் 10ஆம் தேதியன்று காலை அவர் மாரடைப்பினால் காலமானார். அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, கோபாலபுரம் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முரசொலி செல்வத்தின் மனைவி செல்வி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரியாவார். இந்தத் தம்பதிக்கு எழிலரசி என்ற மகள் இருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சென்னை ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் நிலை என்ன? இரு ரயில்களும் மோதியது எப்படி?

2 months 1 week ago
சென்னை அருகே ரயில் விபத்து
படக்குறிப்பு, சென்னை அருகே ரயில்கள் மோதியதில் பெட்டிகள் கவிழ்ந்து கிடக்கும் காட்சி
11 அக்டோபர் 2024
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் சுமார் 13 பெட்டிகள் தடம்புரண்டன. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து காரணமாக அவ்வழியே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து நேரிட்டது எப்படி?

பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் உரிய இடத்திற்குச் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து காரணமாக, அவ்வழியேயான ரயில் சேவைகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

2 ரயில்கள் மோதி விபத்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு சுமார் 8.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. அங்கேயுள்ள லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் பின்பிறமாக மோதியுள்ளது. இதில், 12 அல்லது 13 பெட்டிகள் தடம்புரண்டதாக ரயில்வே கூறியுள்ளது. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விபத்து நேரிட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். இதுவரையிலும் 5-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொன்னேரி அரசு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
சென்னை அருகே ரயில் விபத்து
படக்குறிப்பு, விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடக்கின்றன

ரயில்வே உயர் அதிகாரிகளும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கவரைப்பேட்டை அருகே உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி பொன்னேரி ரயில்வே ஊழியர்களும், சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் இருப்புப் பாதை போலீசாரும் விரைந்துள்ளனர்.

விபத்து நேரிட்ட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருப்பதால் மீட்பு பணிகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பெட்டிகளின் இடிபாடுகள்முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே உயிரிழப்பு ஏதேனும் உள்ளதா என்ற விவரம் தெரிய வரும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகளின் நிலை என்ன?

ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகளில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றவர்கள் சிறப்பு ரயிலில் இன்று அதிகாலை தார்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து பொன்னேரிக்கு பேருந்து வழியாக அழைத்து வரப்பட்ட பயணிகள், பிறகு அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு மின்சார ரயில்களில் அழைத்து வரப்பட்டனர்.

தீவிரமாகக் காயமடைந்த மூன்று பயணிகள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைய்ல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிதளவு காயங்களை எதிர்கொண்ட பயணிகளுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை அருகே ரயில் விபத்து - ஒரு பெட்டியில் தீ, 13 பெட்டிகள் தடம் புரண்டன - 2 ரயில்கள் மோதியது எப்படி?

பட மூலாதாரம்,HANDOUT

மேலும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கிய பிறகு, அதிகாலை 04:45 மணிக்கு சிறப்பு ரயிலில் தார்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து 18 மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேட்டியளித்தார். அதில் ரயில் விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்து நடந்த ரயில் தடத்தில் அடுத்த 15 மணிநேரங்களில் ரயில் போக்குவரத்து சரிசெய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

2 ரயில்களும் மோதியது எப்படி?

இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 8.30 மணியளவில் விபத்து நேரிட்டது. மைசூரு - தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இந்த விபத்தில் சிக்கியது. இந்த ர யில் பொன்னேரி ரயில் நிலையத்தை இரவு 8.27 மணிக்கு கடந்து சென்றது. கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் பிரதான தண்டவாளத்தில் செல்லுமாறு அந்த ரயிலுக்கு கிரீன் சிக்னல் தரப்பட்டது. கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை அந்த ரயில் அடைந்ததும், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் பிரதான தண்டவாளத்திற்குப் பதிலாக அங்கிருந்து லூப் லைனுக்குள் நுழைந்துவிட்டது. சுமார் 75 கி.மீ. வேகத்தில் சென்ற பயணிகள் ரயில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்புறமாக மோதியது.

 
சென்னை அருகே ரயில் விபத்து
படக்குறிப்பு, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள், மீட்புக் குழுவினர், உயர் அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

ரயிலின் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக உள்ளனர். சரக்கு ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டது. 12-13 பெட்டிகள் தடம்புரண்டன. உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. எனினும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள், மீட்புக் குழுவினர், உயர் அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டுவிட்டனர். சிகிச்சை தேவைப்படும் நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக, அவ்வழியே ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் ரயிலில் சென்ற பயணிகள் உரிய இடத்திற்குச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே ரயில் விபத்து
படக்குறிப்பு, விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடக்கின்றன.
பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு

"விபத்தில் இருந்து மீட்கப்பட்ட அனைத்து பயணிகளையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவு/தண்ணீர்/சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகளோடு அவர்களை தர்பங்கா அழைத்து செல்ல சென்னையில் ஒரு புதிய ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது" என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளரின் உதவிச் செயலாளர் கணேஷ், "விபத்தில் லேசான காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எலும்பு முறிவு போன்ற பலத்த காயமடைந்தவர்கள் சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகள் அனைவரும் பேருந்துகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். அங்கிருந்து, சிறப்பு ரயில் மூலம் அவர்கள் உரிய இடத்திறகு அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

சென்னை அருகே ரயில் விபத்து
படக்குறிப்பு, மீட்கப்பட்ட பயணிகள் பிளாட்பாரத்தில் நிற்கின்றனர்.
ரயில் சேவைகளில் மாற்றம்

இந்த விபத்து காரணமாக வழக்கமாக இயங்கும் மற்ற ரயில்கள் திருப்பி விடப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் படி, அக்டோபர் 10ஆம் தேதி அன்று 11.35 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்பட்டு ஆலப்புழாவிற்கு செல்லும் ரயில் (13351), ரேணிகுண்டா - மேல்பாக்கம் - காட்பாடி வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால் நாயுடுபேட்டை, சூலூர்பேட்டை, சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு அந்த ரயில் வராது.

ஜபல்பூர் - மதுரை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (02122) அக்டோபர் 10 அன்று 16.25 மணிக்கு ஜபல்பூரில் இருந்து புறப்பட்ட நிலையில், அது ரேணிகுண்டா, மேலப்பாளையம் வழியாக திருப்பி விடப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு வராது.

உதவி எண்கள் அறிவிப்பு

கவரப்பேட்டை விபத்து குறித்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள சென்னை மண்டல உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 044-25354151 மற்றும் 044-2435499 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம்.

- இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் உடனுக்குடன் சேர்க்கப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

திருச்சி விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது - வானில் சுமார் இரண்டரை மணி நேரம் வட்டமடித்தது ஏன்?

2 months 1 week ago
திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு
படக்குறிப்பு, திருச்சியில் வானில் இரண்டரை மணி நேரம் வட்டமடித்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்
23 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானத்திலேயே சுமார் இரண்டரை மணி நேரம் வட்டமடிக்க நேரிட்டது. நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் தீயணைப்பு வண்டிகளும் நிறுத்தப்பட விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்த விமானம், பிறகு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியது. இதன் பிறகே விமானத்தில் இருந்த பயணிகளும், விமான நிலையத்தில் கூடியிருந்த அவர்களின் உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்திற்கு என்ன நேரிட்டது? விமானம் வானத்திலேயே 2 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்தது ஏன்?

புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலை 5.44 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தல் 140-க்கும் அதிகமானோர் இருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானம் மேலே புறப்பட்ட பிறகு விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டனர்.

 
திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு

பட மூலாதாரம்,HTTPS://WWW.FLIGHTAWARE.COM/LIVE/FLIGHT/AXB613

வானில் வட்டமடித்த விமானம்

சிறிது நேரத்திலேயே விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டதால் உதவுவதற்கு வசதியாக மருத்துவர்கள் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக அதில் இருந்த எரிபொருளை காலியாகச் செய்யும் பொருட்டு, வானத்திலேயே விமானம் வட்டமடிக்கத் தொடங்கியது. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலே திருச்சி விமான நிலையப் பகுதியில் அந்த விமானம் வானில் வட்டமடித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அன்னவாசல் முக்கணமலைப்பட்டி, கீரனூர், அம்மாசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் விமானம் வானில் நீண்ட நேரம் வட்டமடித்ததை பொதுமக்கள் அச்சத்துடன் நோக்கினர். அந்த விமானம் பத்திரமாக தரையிறங்க வேண்டி, புதுக்கோட்டை மாவட்டம் உச்சாணி கிராமத்தில் உள்ள கோவிலில் சிறப்பு ஆராதனை வழிபாடும் நடத்தப்பட்டது.

திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு
படக்குறிப்பு, திருச்சி விமான நிலையம்
விமான நிலைய இயக்குநர் கூறியது என்ன?

இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன், "திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்திலேயே விமானத்தை தரையிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, விமானத்தில் உள்ள எரிபொருளை குறைக்க வானத்திலேயே விமானம் வட்டமடிக்கச் செய்யப்படுகிறது. பெரிய அளவில் அசம்பாவிதங்களை தவிர்க்க 20 மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வண்டிகளும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. " என்று கூறியதாக ஏ.என்ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

விமானம் பத்திரமாக தரையிறங்கியது

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த விமானத்தை 8.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது. அந்த திட்டடப்படியே, விமானம் சரியாக 8.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை மீண்டும் நெருங்கியது. மெல்லமெல்ல உயரத்தை குறைத்த அந்த விமானம் சரியாக 8.15 மணிக்கு திட்டமிட்டபடி ஓடுபாதையைத் தொட்டது. அதன் சக்கரங்கள் ஓடுபாதையை உரசியபடி பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியது. இதனால், திருச்சி விமான நிலையத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த பரபரப்பும் பதற்றமும் தணிந்தது.

திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு

பட மூலாதாரம்,HTTPS://WWW.FLIGHTAWARE.COM

படக்குறிப்பு, திருச்சியில் விமானம் வானில் வட்டமடித்த பாதை
"லேன்டிங் கியர் சரியாக இயங்கியது"

இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமான போக்குவரத்துத் துறை ஆணையம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. விமானத்தின் லேன்டிங் கியர் வழக்கம் போல் சரியாக இயங்கியது. இதனால், விமானம் எந்த சிக்கலும் இல்லாமல் இயல்பான முறையில் தரையிறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக விமான நிலையம் முழுவதும் முழுமையான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது." என்று கூறப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறியுள்ளது.

 
திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு
படக்குறிப்பு, திருச்சி விமான நிலையம்
விமானம் வட்டமடித்தது ஏன்?

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் விமானப்படை அதிகாரி ராம், ‘‘விமானம் ‘டேக் ஆஃப்’ ஆக ஆரம்பித்ததும் முதலில் நடப்பது, அதன் சக்கரங்கள் உள்ளே செல்வதுதான். வெறும் நுாறடியில் பறக்கும் போதே சக்கரங்கள் உள்ளே போவதற்கான தொழில்நுட்பச் செயல்பாடுகளைத் துவக்கி விடுவோம். இது சில நிமிடங்களில் நடந்து விடும். அதற்கு மேலும் சக்கரங்கள் உள்ளே செல்லாதபட்சத்தில் விமானத்தை இயக்காமல் கீழே மீண்டும் இறக்கி விட வேண்டும். ஆனால் விமானத்தை ‘டேக் ஆஃப்’ செய்யும்போது இருக்கும் விமான எடையுடன் கீழே இறக்க முடியாது. அதனால் எரிபொருள் எடையைக் குறைக்க வேண்டும். ஒரு சில பெரிய ரக விமானங்களில் எரிபொருளை வெளியில் விட்டு, காற்றில் ஆவியாக்குவதற்கான சிறப்பு தொழில் நுட்பம் இருக்கும். ஆனால் இந்த விமானத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். அதனால் விமானத்தைத் தொடர்ந்து இயக்கி, எரிபொருளைக் குறைக்கும் முயற்சி நடக்கிறது." என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "ஷார்ஜாவுக்கு திருச்சியிலிருந்து 1500 ‘நாட்டிக்கல் மைல்’ (2800 கி.மீ.,) இருக்கும் என்பதால், முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். அதனால் பெருமளவில் எரிபொருளைத் தீர்த்தபின்பே, விமானத்தை இறக்குவதற்கு முயற்சி செய்வார்கள். இதில் விமானத்தை கீழே இறக்கும்போது, அந்த சக்கரங்கள் மீண்டும் உள்ளே போய் விடக் கூடாது. அதற்கு Down & Lock என்று பச்சை சிக்னல் வரும். அந்த சிக்னல் வந்து விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஷார்ஜாவுக்கு நான்கு மணி நேரம் விமானம் செல்லும். ஆனால் அவ்வளவு நேரம் பறக்கவோ, எரிபொருளைக் குறைக்கவோ தேவையில்லை. கொஞ்சம் எரிபொருளைக் குறைத்து விட்டாலும் போதுமானது.’’ என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Samsung Employees Strike: கார்பரேட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா திமுக? - கொதிக்கும் காம்ரேட்டுகள்

2 months 1 week ago

'கொடிபிடித்த காம்ரேட்டுக்கள்..

கொதித்த சாம்சங் நிறுவனம்!'

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். கூடவே 'தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர்.

இதற்கு நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 9-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் இறங்கினார்கள். இந்த போராட்டமானது தொழிற்சாலையிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொடங்கியது. இதனால் நிறுவனத்தின் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஒப்பந்த பணியாளர்களை வைத்து சுமார் 60% அளவுக்கு மட்டுமே சாம்சங் நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடிந்தது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 
Samsung Employees Strike | சாம்சங் போராட்டம்
 
Samsung Employees Strike | சாம்சங் போராட்டம்
 

இதையடுத்து 'போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு வர வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும். வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி வருவதாகத் தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என நிர்வாகம் எச்சரித்தது. மறுபக்கம், "தொழிற்சங்கம் தொடங்கியது சட்டப்படியான நடவடிக்கைதான். தினம்தோறும் 12 மணி நேரம் வேலை கொடுத்து சக்கையாகப் பிழிகிறார்கள். எனவேதான், 8 மணி நேர வேலை, சராசரி ஊதியம் ரூ.36,000 வழங்க வேண்டும்" எனத் தொழிலாளர்கள் கொதித்தார்கள். இதற்கிடையில் தொழிலாளர் நலத்துறை, சாம்சங் இந்தியா நிறுவனம், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோருக்குள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அப்போதெல்லாம், 'தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க முடியாது' என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
 

தி.மு.க., செய்திருப்பது துரோகம்.. கருங்காலித்தனம்..!

இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு கோரிக்கைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகத் தொழிலாளர்கள் சென்றனர். அவர்களை காவல்துறை கைது செய்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. பிறகு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இச்சூழலில், கடந்த 7-ம் தேதி அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், வி.சி.கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு போராட்டம் முடிவுக்கு வந்ததாகச் செய்திகள் வெளியாகின. அதற்குத் தொழிற்சங்கத்தினர் தரப்பிலிருந்து, "தொழிலாளர் வர்க்க வர்க்க போராட்டத்தில் தி.மு.க., அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம் கருங்காலித்தனம்" எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 
முதல்வர் ஸ்டாலின்
 
முதல்வர் ஸ்டாலின்
 

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் தலைவர் முத்துக்குமார், "பேச்சுவார்த்தையின்போது ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சங்கத்தோடு பேசுவதற்கு நிர்வாகம் சம்மதிக்க வேண்டும். அரசின் முன்னால் பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தோம். அப்போது 'உங்களது கோரிக்கைகள் குறித்து சாம்சங் நிர்வாகத்திடமும், முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டு எங்கள் முடிவைச் சொல்லுகிறோம்' என அமைச்சர் த.மோ.அன்பரசன் தெளிவுபடச் சொன்னார். பிறகு வெளியே வந்து பேச்சுவார்த்தையில் நடந்த அனைத்து விஷயங்களையும் ஊடகங்களில் தெரிவித்தோம். இதற்கிடையில் ஏற்கனவே அமைச்சர்களும், சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்கக் கூடிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஆவணத்தை வெளியிட்டார்கள். அதை சாம்சங் தொழிற்சாலையிலிருந்து முன்கூட்டியே அழைத்து வரப்பட்ட ஒரு சில அப்பாவி தொழிலாளிகளை வைத்துச் செய்திருந்தார்கள்.

 
 

இரவோடு இரவாகக் கைது!

இதன் மூலமாகவே தொழிற்சங்கத்துக்கும் சாம்சங் நிறுவனத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியிட்டார்கள். மேலும் தொழிற்சங்க போராட்டம் குறித்தும் தலைவர்கள் குறித்தும் அவதூறு செய்திகளை சாம்சங் நிர்வாகம் திட்டமிட்டு உருவாக்கி வைரல் செய்து வருகிறது. இதற்கு அமைச்சர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். இது தொழிலாளர் வர்க்க போராட்டத்தில் தி.மு.க., அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம், கருங்காலித்தனம். பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறார்கள். முதலில் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்றார்கள். பிறகு அமைச்சர்கள் புறவழியான சதித் திட்டத்தின் மூலம் நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உடன்பாடு ஏற்பட்டதாகச் செய்தி வெளியிடுகிறார்கள். இது குழப்பம் ஏற்படுத்தும் செயல். சாம்சங் நிறுவனம் மற்றும் அமைச்சர் பெருமக்களின் இந்த இழிவான செயலை சி.ஐ.டி.யூ., வன்மையாகக் கண்டிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

 
டி.ஆர்.பி.ராஜா
 
டி.ஆர்.பி.ராஜா
 

இதற்குத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "சாம்சங் ஊழியர்களின் கோரிக்கை சார்ந்து 7 முறை பேச்சுவார்த்தை நடந்தது. முதலமைச்சரின் உத்தரவுப்படி 3 அமைச்சர்களும் 10 மணி நேரத்திற்கு மேலாகப் பேசியிருக்கிறோம். எதற்காகப் போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான ஊதியம் மறுக்கப்படும்" என்றார்.

ஆனாலும், பின்வாங்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடுப்பான ஆளும் தரப்பு தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்கத் திட்டமிட்டது. அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்காகச் சென்ற தொழிலாளர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், எச்சூர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பெரிய பந்தலை காவல்துறையினர பிய்த்து எறிந்திருக்கிறார்கள்.

இரவோடு இரவாகத் தொழிற்சங்க நிர்வாகிகளின் பலரது வீடுகளுக்குச் சென்று அவர்களில் பலரைக் கைது செய்திருக்கிறார்கள். முன்னதாக தொழிலாளர்கள் சென்ற லோட் வண்டி விபத்தில் சிக்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற நிர்வாகிகளையும் காவல்துறை கைது செய்தது கொடுமையிலும் கொடுமை. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

 
எடப்பாடி பழனிசாமி
 
எடப்பாடி பழனிசாமி
 

குற்றங்களைச் செய்தவர்களைப் பிடிப்பதில் விடியா தி.மு.க அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கத் திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம். உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்குச் சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரியப் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்" என வெடித்திருந்தார்.

 
 

அடக்குமுறை.. கொதித்த தலைவர்கள்!

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் பெரு நிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து தேடித் தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் தி.மு.க., அரசின் கொடுங்கோன்மைச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.

பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ், "கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலைக் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரைக் கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

 
சீமான்
 
சீமான்
 

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் தங்களின் முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது" எனக் கொதித்துள்ளார்.

இச்சூழலில் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாகவே களத்துக்குச் சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். முன்னதாக சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அப்போது தொடர் போராட்டத்தில் கைதான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை எனக் காவல்துறை பதில் அளித்தது. இதையடுத்து சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

 
 

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும். தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும் போல் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதேபோலத்தான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாகப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.

 
Samsung Employees Strike | சாம்சங் போராட்டம்
 
Samsung Employees Strike | சாம்சங் போராட்டம்
 

முன்னதாக தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது மீட்புப் பணிக்கு வந்த காவல்துறையுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் சூர்யா பிரகாஷ், எலன் ஆகியோர் காவல்துறையைத் தள்ளிவிட்டதாக சுங்கவார் சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிறுத்திய காவல்துறை அவர்களைச் சிறையில் அடைத்தனர். கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும் ஏற்கெனவே தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன. தற்போது சாம்சங் விவகாரம் அவர்களை மேலும் சூடாகியிருக்கிறது. இது தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Samsung Employees Strike: கார்பரேட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா திமுக? - கொதிக்கும் காம்ரேட்டுகள் | dmk alliance communist parties condemns dmk in Samsung Employees Strike issue - Vikatan

இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?

2 months 2 weeks ago
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?

 

இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது.

அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர்.

மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஏ.கே.மூர்த்தி பேசும்போது, “கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இலங்கை சிறையில் மொட்டை அடித்து அவமானப்படுத்துகிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்த தமிழக அரசுக்கு மீனவர்கள் படும் பாடு தெரியவில்லையா? இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வுகாண முன்வர வேண்டும். தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்பதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

எல்லையில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு சிறைகளிலும் வாடும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

உடமைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரு நாட்டு பிரதிநிதிகள் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டார்கள் அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் 5 பேரை மட்டும் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

https://athavannews.com/2024/1403168

உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி

2 months 2 weeks ago
சென்னை: இந்திய விமானப்படை சாகச நிகழ்வில் என்ன நடந்தது? புகைப்படத் தொகுப்பு
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி
6 அக்டோபர் 2024, 14:24 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. பணயக் கைதிகளை மீட்பது போன்ற சாகசங்களையும் விமானப்படை வீரர்கள் செய்து காட்டினர்.

சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சாகசங்களை செய்து காட்டிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள்
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியின் ஒரு காட்சி.
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் திரண்டிருந்த மக்கள்

இந்த நிகழ்ச்சியை நேரில் காண பெரும் திரளான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டிருந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் விமான சாகசங்களை நேரில் பார்க்க கூடியிருந்தனர். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகையால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,X/MKSTALIN

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலையில் குவிந்த மக்கள்
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வானில் சாகங்களை செய்து காட்டிய இந்திய விமானப்படை போர் விமானம்
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை இந்த நிகழ்வு படைத்திருக்கிறது
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லிம்கா புத்தகத்தில் இந்த சாகச நிகழ்வு இடம்பெற இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்தது.
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய விமானப்படை நிகழ்ச்சியில் சாகசங்களை செய்து காட்டிய போர் விமானங்கள்
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகத்திலேயே அதிக மக்கள் நேரில் பார்த்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை இந்த நிகழ்வு படைத்திருப்பதாகவும், இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெற இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசங்களை காட்டும் சில புகைப்படங்களை பார்க்கலாம்.

சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டனர்.
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியில் ஒரு காட்சி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

திருவண்ணாமலை: பட்டியல் பிரிவு பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பா?

2 months 2 weeks ago
திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவு மக்கள் போராடினர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

'பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது' என்று பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக திருவண்ணாமலையில் சர்ச்சை எழுந்துள்ளது.

"பாதை மறுக்கப்பட்டதால் நாள் முழுக்க சடலத்தை வைத்துப் போராடினோம்", என்று பட்டியலின மக்கள் கூறுகின்றனர்.

"சுடுகாட்டுப் பாதையை வழிமறித்து தனி நபர் ஒருவர் வீடு கட்டியதால் தான் பிரச்னை ஏற்பட்டது" என்கிறார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

பட்டியல் பிரிவு பெண்ணின் சடலத்தைக் கொண்டு செல்வதில் என்ன பிரச்னை?

 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்துள்ள மோத்தக்கல் கிராமத்தில் ஆயிரத்துக்கும் குறைவான பட்டியல் பிரிவினரும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பிற சமூகத்தினரும் வசிக்கின்றனர்.

பட்டியல் பிரிவைச் சேர்ந்த 54 வயதான கிளியம்மாள் என்பவர், தனது மகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார்.

சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு ஏன்?

சொந்த ஊரில் அடக்கம் செய்ய தீர்மானித்து கிளியம்மாளின் உடலை சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மோத்தக்கல் கிராமத்திற்கு உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர்.

"கிராமத்தின் ஒருபுறம் பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதி உள்ளது. அதன் பின்புறம் வழியாக இறந்தவர்களின் உடலை வழக்கமாக கொண்டு செல்வோம். தற்போது அந்தப் பாதை கரடுமுரடாக இருப்பதால் அதனை பயன்படுத்த முடியவில்லை. இதனால், வேறுவழியின்றி பொதுப் பாதையில் கிளியம்மாளின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் தீர்மானித்தோம்" என்று மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் கூறினார். .

ஆனால், பொதுப் பாதையில் கிளியம்மாளின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு போராட்டம்

"பொதுப் பாதை வழியாக ஆம்புலன்ஸில் கிளியம்மாளின் சடலம் வந்தது. ஆனால், அதே பாதையில் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்வதற்கு மட்டும் எங்களை அவர்கள் (பிற சமூகத்தினர்) விடவில்லை. இதைப் பற்றி டி.எஸ்.பி முருகனிடம் முறையிட்ட போது, 'சடலத்தைக் கொண்டு செல்லுங்கள். ஆனால் பட்டாசு வெடிக்க வேண்டாம்' என கூறினார்" என்று பிபிசி தமிழிடம் மஞ்சுநாதன் குறிப்பிட்டார்.

அங்கே, இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில், சடலத்தைக் கொண்டு செல்ல வசதியாக, 'சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையை சீரமைத்துத் தருமாறு' அதிகாரிகளிடம் பட்டியல் பிரிவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

"சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் மாலை வரையில் பாதை சரிசெய்யப்படவில்லை" என்று மஞ்சுநாதன் கூறினார்.

ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவு மக்கள் போராடினர். இதையடுத்து, அங்கிருந்த நில உரிமையாளர்கள் சிலரிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நில உரிமையாளர் ஒருவர் தனது நிலம் வழியாக உடலைக் கொண்டு செல்ல சம்மதம் தெரிவித்த பின்னரே, அவ்வழியே சுடுகாட்டுக்கு கிளியம்மாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 
திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, நில உரிமையாளர்கள் சிலரிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிற சமூகத்தினர் கூறுவது என்ன?

பட்டா நிலம் வழியாக பட்டியல் பிரிவு பெண்ணின் சடலத்தைக் கொண்டு சென்றதால் தான் பிரச்னை ஏற்பட்டதாக கூறுகிறார், மோத்தக்கல் கிராமத்தில் வசிக்கும் பிற சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதியின் பின்புறம் வழியாக சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது அவர்களின் வழக்கம். அந்தப் பாதையில் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இதன் காரணமாக பட்டா நிலத்தில் உடலைக் கொண்டு சென்றுள்ளனர். இதனால் தேவையற்ற பிரச்னை ஏற்பட்டது" என்று கூறினார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டதால் பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டதாக ரமேஷ் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?

இதுகுறித்து டி.எஸ்.பி முருகனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "பிரச்னை என்பது பாதை தொடர்பானது. மாவட்ட ஆட்சியரிடம் தான் நீங்கள் பேச வேண்டும்" என்றார். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"சுடுகாட்டுக்குச் செல்வதற்கு பட்டியல் பிரிவு மக்களுக்கு பாதை ஒன்று உள்ளது. அந்தப் பாதையை அதே சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வீடு கட்டி மறித்துவிட்டார். பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் இது தான். மோத்தக்கல் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் வசிக்கும் இடத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. அதற்கான பாதையில் 13 தனி நபர்களின் பட்டா நிலங்கள் உள்ளன. இவர்கள் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாரும் சடலத்தைக் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று பாஸ்கர பாண்டியன் கூறினார்.

சுரேஷ் என்பவர் கட்டி வரும் வீட்டுக்கு எதிரில் உள்ள பட்டா நிலத்தை சமன்படுத்தி, அதன் வழியே பெண்ணின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், "அந்த பட்டா நிலத்தின் உரிமையாளர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

 
திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
பொதுவழியில் செல்வதற்கு அனுமதி மறுப்பா?

பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கிளியம்மாளின் உடலை பொதுவழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு கிளம்பியதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த பாஸ்கர பாண்டியன், "பொது வழியில் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அதில் எந்த தடையும் இல்லை." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

2 months 2 weeks ago
வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
1638251875-8288.jpg&w=&h=&outtype=webp
வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அதை அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது.
 
ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு விட்டது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. திமுக அரசின் சமூக நீதி மோசடி கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1989 ஆம் ஆண்டு வரை ஒரே தொகுப்பாக பிணைக்கப்பட்டு அவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. எனது தலைமையில் வன்னியர் சங்கத்தினர் பத்தாண்டுகளுக்கு தொடர்ந்து நடத்திய சமூகநீதிப் போராட்டத்தின் பயனாகவே 1989 ஆம் ஆண்டில் 202 சாதிகளைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இட ஒதுக்கீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, 107 சாதிகளைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு 20% இட ஒதுக்கீடும், மீதமுள்ள 95 பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 30% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டன.
 
அதனால், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டால் ஒவ்வொரு சமூகமும் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளது என்பதை அறிய வேண்டுமானால், 1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்கள் சார்ந்த வகுப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? பொதுப்பிரிவில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? என்ற விவரங்கள் தனித்தனியாக வெளியிடப் பட வேண்டும்.
 
இந்த விவரங்களை வெளியிட வேண்டும் என பல பத்தாண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வரும் போதிலும், சமூகநீதியில் தாங்கள் நடத்திய தில்லுமுல்லுகள் அம்பலமாகி விடும் என்பதற்காக தமிழகத்தை ஆட்சி செய்த எந்தக் கட்சியும் இந்த விவரங்களை வெளியிடாமல் மறைத்து வருகின்றன.
 
இத்தகைய சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பதாக ஒரு தகவலை தமிழக அரசு ஊடகங்களுக்கு கசிய விட்டது. அதில் எந்த புள்ளிவிவரமும் முழுமையாக இல்லை. வன்னியர்களைத் தவிர பிற சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களும் இல்லை.
 
சில புள்ளி விவரங்கள் பத்தாண்டுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், சில விவரங்கள் ஓராண்டுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதை மடை மாற்றம் செய்யவே சில திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தமிழக அரசு திட்டமிட்டு வெளியிட்டது என்பதை அந்த விவரங்களை பார்த்த உடனேயே அறிய முடியும்.
 
தமிழக அரசு வெளியிட்ட அந்த புள்ளி விவரங்கள் திரிக்கப்பட்டவை; அரைகுறையானவை என்று குற்றஞ்சாட்டிய நான், அதை ஏற்க முடியாது என்றும், அனைத்து சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்.
 
இந்த நிலையில், கடலூரைச் சேர்ந்த எஸ்.பி.கோபிநாத் என்ற வழக்கறிஞர், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை, சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகியவற்றிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, நான்காம் தொகுதி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் ஆகியவற்றிலும் 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வழங்கும்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஒருவர் என்னென்ன விவரங்களைக் கேட்கிறார்? என்பதை முழுமையாக அறிந்து கொண்டு அவர் கேட்கும் தகவல்களை துல்லியமாக வழங்க வேண்டியது அரசுத் துறைகளின் கடமை ஆகும். ஆனால், வழக்கறிஞர் கோபிநாத் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்காத பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஊடகங்களுக்கு கசிய விடப்பட்ட புள்ளி விவரங்கள் அடங்கிய கடிதத்தையே பதிலாக வழங்கியுள்ளது. இதன் மூலம் திராவிட மாடல் அரசு நடத்தி வரும் சமூகநீதி மோசடிகளும், தில்லுமுல்லுகளும் அப்பட்டமாக அம்பலமாகியிருக்கின்றன.
 
வழக்கறிஞர் கோபிநாத் எழுப்பிய வினாக்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை, சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 31 விழுக்காட்டில் எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு விழுக்காடு கிடைத்துள்ளது? பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30 விழுக்காட்டில், அந்தப் பிரிவில் உள்ள எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது?
 
20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகங்களுக்கும், சீர் மரபினருக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? என்ற விவரங்களை சாதிவாரியாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த விவரங்களை வெளியிடாத தமிழக அரசு, வன்னியர்களை ஏமாற்றுவதற்காக திரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களையே மீண்டும் வெளியிட்டிருக்கிறது. அதே திரைக்கதை, அதே வசனத்தை எழுதி மக்களை ஏமாற்ற மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
 
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டிருந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவத்தின் விவரங்களை தமிழக அரசு வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அரசு நினைத்தால் அந்த விவரங்களை ஒரு வாரத்தில் திரட்டி விட முடியும். ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி சூறையாடல்கள் நடப்பதால் தான் அவை குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
 
மடியில் கனமில்லை என்றால் திராவிட மாடல் அரசுக்கு வழியில் பயம் தேவையில்லை. சில சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு அதிகமாகவும், வன்னியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகையை விட மிகவும் குறைவாகவும் பிரதிநிதித்துவம் இருப்பதால் தான் இந்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்பது இதிலிருந்து உறுதியாகியுள்ளது.
 
வன்னிய மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும், மீண்டும் அந்த மக்களுக்கு துரோகங்களையும், சமூக அநீதியையும் தான் இழைத்து வருகிறது. அதனால் தான், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதை தடுக்கும் வகையில் பொய்யான, திரிக்கப்பட்ட, அரைகுறையான புள்ளி விவரங்களை வெளியிட்டு, ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து அதுகுறித்து பத்தி பத்தியாக செய்தி வெளியிடச் செய்த தமிழக அரசு, அனைத்து சமூகங்களுக்குமான 35 ஆண்டுகால புள்ளி விவரங்களை வெளியிட மறுக்கிறது. தங்களின் சமூகநீதி முகத்திரை கிழிந்து விடும் என்று அஞ்சுகிறது.
 
உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக, பொம்மையான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு, திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அதை அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தும். திராவிட மாடல் ஏமாற்று அரசு அணிந்திருக்கும் சமூகநீதி முகமூடியை கிழித்து அதன் சமூகநீதி மோசடிகளை அம்பலப்படுத்தும். மக்கள் மன்றத்தில் திமுகவின் சமூகஅநீதிகளை தோலுரித்து சரியான பாடம் புகட்டப்படுவதை உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு மாநாடு நடத்தவே விஜய் திணறிப் போய்விட்டார்… தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து!

2 months 2 weeks ago
ஒரு மாநாடு நடத்தவே விஜய் திணறிப் போய்விட்டார்… தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து!
1728181291-3323.jpg&w=&h=&outtype=webp
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அதன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே அக்டோபர் 27ம் தேதி நடத்துகிறார். இதற்கான பந்தல்கால் நடும் விழா சமீபத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி  N ஆனந்த் இந்த பந்தல்கால் ஊன்றி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார்.
 
கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்காக ஏற்கனவே திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அது நடக்காமல் போனது. இதனால் விஜய் கட்சிக்கு மாநாடு நடத்துவதில் அழுத்தம் தரப்பட்டுள்ளது எனவும், ஒரு மாநாடு நடத்தவே திணறுகிறார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
 
இந்நிலையில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விஜய் கட்சி மாநாடு பற்றி பேசும்போது “ஒரு மாநாடு நடத்தவே திணறுகிறார்கள். அரசியல் என்பது ஒரு டேக் (சினிமாவில் எடுக்கப்படும் காட்சி) சொன்னதும் முதல்வர் ஆவது கிடையாது” என கேலியான தொனியில் விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் 5 வயது சிறுவன் கொலை - பாலியல் தாக்குதலில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

2 months 2 weeks ago
காஞ்சிபுரம், சிறுவன் கொலை,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 அக்டோபர் 2024

காஞ்சிபுரத்தில் 5 வயது சிறுவனை கொன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இதுபோன்ற புகார்கள் அதிகம் வருவதாக கூறுகிறார், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.

போக்சோ குற்றங்களுக்கு யார் காரணம்? குழந்தைகளை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்?

இந்த வழக்கில் கைதாகியுள்ள அரசு ஊழியரின் பெயர் ராஜேஷ். காஞ்சிபுரம் நில அளவைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஷ், பரந்தூர் விமான நிலையம் தொடர்பான நில அளவைப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், கருக்குப்பேட்டையைச் சேர்ந்த 5 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக அவர் அத்துமீற முயன்ற போது இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் சம்பவம் - என்ன நடந்தது?

மயக்கம் அடைந்த நிலையில் சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அவனது தாய் அழைத்துச் சென்றதாகவும், சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் இருந்ததை காவல்துறையின் கவனத்துக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர். காவல் துறையினர் சிறுவனின் தாயிடம் விசாரித்த போதுதான், சிறுவனையும், அவனது 10 வயது சகோதரியையும் ராஜேஷ் அழைத்துச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது.

சிறுவனின் சகோதரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜேஷ் தன்பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தி சிறுவனை கடுமையாக தாக்கியது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

"சிறுவனின் தாய் சற்று அலட்சியமாக இருந்துவிட்டதுதான் இந்த கொலைக்கு காரணம். சிறுவனிடம் அந்த நபர் தவறாக நடந்து கொண்டது இது முதல்முறை அல்ல. முன்னரே இதுபோன்று சில முறை அவர் நடக்க முயன்றிருக்கிறார்." என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், காஞ்சி தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் சங்கரநாராயணன்.

 
காஞ்சிபுரத்தில் ஐந்து வயது சிறுவனை அடித்துக் கொன்றதாக போக்சோ வழக்கில் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படக்குறிப்பு, இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் காவல் நிலையம்
போக்சோ குற்றங்களுக்கு அதிகம் காரணமாக இருப்பது யார்?

காஞ்சிபுரம் சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் குழந்தைகள் நல ஆர்வலர் கன்யா.

தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிபிசி தமிழிடம் அவர் கூறினார். காஞ்சிபுரம் சம்பவத்தை சுட்டிக் காட்டிப் பேசிய கன்யா, "குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான நபர்களால் தான் அவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் உறவினர்களாகவோ, குடும்ப நண்பர்களாகவோ உள்ளனர். 'குட் டச்' 'பேட் டச்' குறித்து வகுப்பெடுக்க வந்த ஆலோசகரே கூட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது." என்றார்.

குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்துப் பேசிய கன்யா, தாங்கள் சொல்லும் விஷயத்தை பெற்றோர் அடிக்காமல் கேட்க வேண்டும் என குழந்தைகள் விரும்புவதாக கூறுகிறார்.

"நெருங்கிய உறவினர் யாராவது குழந்தைக்கு அடிக்கடி முத்தம் கொடுத்தால் அந்த முத்தம் எங்கே, எவ்வாறு கொடுத்தார் எனக் கேட்டால் தெளிவாக குழந்தைகள் கூறிவிடுவார்கள். குழந்தைகளுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்து பேச வைக்க வேண்டும். அதனை பெற்றோர் கவனமாக கேட்க வேண்டும். குழந்தைகள் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது" என்கிறார் கன்யா.

காஞ்சிபுரத்தில் ஐந்து வயது சிறுவனை அடித்துக் கொன்றதாக போக்சோ வழக்கில் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படக்குறிப்பு, குழந்தைகள் நல ஆர்வலர் கன்யா  
போக்சோ வழக்குகளை கையாள்வதில் நீடிக்கும் சிக்கல்

அதேநேரம், "போக்சோ வழக்குகளை கையாள்வது தொடர்பான சிக்கல்களை தமிழக அரசு களைய வேண்டும்" என்று குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு வலியுறுத்தியுள்ளார். .

"சிறார் நீதி சட்டத்தின்படி, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தைகள் நல காவல் அலுவலர் இருக்க வேண்டும். ஆனால், அவர் முழுநேர அலுவலராக நியமிக்கப்படுவதில்லை" எனவும் அவர் கூறுகிறார்.

காவல்நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள ஓர் அதிகாரி, இதை கூடுதல் பொறுப்பாக கவனிப்பதாகவும் குழந்தைகளுக்குத் தனி அலகு (Unit) ஏற்படுத்தாத வரையில் பிரச்னை தீர வாய்ப்பில்லை எனவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

போக்சோ சட்டத்தைக் கண்காணிக்கும் மிக முக்கியமான தலைமை அமைப்பாக உள்ள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

"தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் முந்தைய ஆட்சியில் ஆணையத்தின் தலைவர் மற்றும் நிர்வாக பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை தி.மு.க அரசு நீக்கிவிட்டது. அவர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கிவிட்டனர். இன்றளவும் அந்த தடை நீக்கப்படவில்லை" என்கிறார் தேவநேயன்.

 
காஞ்சிபுரத்தில் ஐந்து வயது சிறுவனை அடித்துக் கொன்றதாக போக்சோ வழக்கில் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படக்குறிப்பு, தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதாஜீவன் பதில்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், " குழந்தைகள் நல உரிமை ஆணையம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என நம்புகிறோம். தீர்ப்பு வந்துவிட்டால் குறுகிய காலத்தில் ஆணையத்தின் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவோம்" என்றார்.

குழந்தை திருமணம் எங்காவது நடந்தால் மட்டுமே 1098 என்ற எண்ணுக்கு பலரும் போன் செய்வதாகக் கூறும் அமைச்சர் கீதா ஜீவன், "குழந்தைகள் தொடர்பான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இந்த எண்ணில் பேசலாம். இந்த எண்ணை தொடர்பு கொண்டு தனது தந்தை மீது ஒரு குழந்தை புகார் கொடுத்தது. அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்" என்று தெரிவித்தார்.

போக்சோ சட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், மருத்துவ பரிசோதனை, விசாரணை என அனைத்தையும் விரைந்து முடித்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கீதா ஜீவன் கூறினார்.

"மீண்டும் மீண்டும் வழக்கு என்ற பெயரில் அந்தக் குழந்தையைத் தொல்லை செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து காவல்துறையினருக்கு தொடர் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன." என்றார் அமைச்சர் கீதா ஜீவன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

50 தமிழக மீனவர்கள் நீதிமன்றங்களால் விடுவிப்பு!

2 months 2 weeks ago
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட 50 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!
05 OCT, 2024 | 04:37 PM
image

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 பேர் தமிழக மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (04)  விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், அவர் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.  

அத்துடன், தமிழகத்தில் நேற்றுமுன்தினம் உணவுத் தவிர்ப்புப் போராட்டமும் இடம்பெற்றது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே, இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50 மீனவர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த 37 மீனவர்களும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.   

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை விதித்து அவர்களை விடுவித்தது.  

அத்துடன் 13 மீனவர்களுக்கு எதிரான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  

மேலும் 4 மீனவர்களுக்கு தலா ஓர் ஆண்டும், இன்னொருவருக்கு ஒன்றரை ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/195554

கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் செந்தில் பாலாஜியை தி.மு.க தாங்கிப் பிடிப்பது ஏன்?

2 months 2 weeks ago
செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க

பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN

படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 அக்டோபர் 2024

அமலாக்கத் துறை வழக்கு ஒன்றில் கைதாகி பிணையில் வெளிவந்த செந்தில் பாலாஜி 'தியாகம் செய்ததாக' முதல்வரே குறிப்பிட்டதும் அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் கடும் விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது.

மோசடி வழக்கு ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஓராண்டிற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் பிணையில் வெளிவந்தவுடன் அதற்கு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்தார். "உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சமூக வலைதளங்களிலும் எதிர்க்கட்சிகளிடமும் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன.

 

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில் பாலாஜியை தியாகி என முதலமைச்சரே சொல்வது வெட்கக்கேடானது. தி.மு.க-வை வளர்க்க போராடியவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை. பல கட்சிகளுக்கு சென்று வந்தவருக்குதான் தியாகி பட்டம்," என்று குறிப்பிட்டார்.

பா.ஜ.க., மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவரான எச்.ராஜாவும் இதனைக் கடுமையாக விமர்சித்தார்.

"குளித்தலையில் தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜி மிகப் பெரிய ஊழல்வாதி என்றார் ஸ்டாலின். தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்று சொன்னார். அவரை ஸ்டாலின் இன்று தியாகி என்கிறார்," என்றார்.

 
‘ஏற்றுக்கொள்ள முடியாது’

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாசும், முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்ததைக் கடுமையாக விமர்சித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்ததுதான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதலமைச்சர் விளக்கமளித்திருக்கிறார்,” என்றார்.

ராமதாசு, மேலும் அந்த அறிக்கையில், "பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது," என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 
செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்
‘இது விபரீதமான போக்கு’

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், இந்தப் போக்கு நல்லதல்ல என்கிறார். “நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளபோது, அரசியல் அவசரம் காட்டுவது விபரீதமாகத்தான் முடியும்,” என்கிறார்.

இப்படிச் அவருக்கு அவசரமாக அமைச்சர் பதவி வழங்குவதால், செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீன் ரத்தாகலாம் என்கிறார் ஷ்யாம்.

“அவர் அமைச்சராகிவிட்டதால், சென்னையில் இந்த வழக்கை நடத்தக்கூடாது, வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என யாராவது உச்சநீதிமன்றத்தை நாடி, நீதிமன்றம் அதற்கு ஒப்புக்கொண்டால், அது இன்னும் விபரீதமாக முடியும்,” என்க்கிறார்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தந்த அவர், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இதுபோன்ற காரணங்களைச் சொல்லித்தான் தி.மு.க-வின் பொதுச் செயலாளர் அன்பழகன், வழக்கை கர்நாடக மாநிலத்தில் விசாரிக்கும் தீர்ப்பைப் பெற்றார், என்கிறார்.

“அந்த வழக்கு எப்படி முடிவுக்கு வந்தது என எல்லோருக்குமே தெரியும்," என்கிறார் ஷ்யாம்.

செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க

பட மூலாதாரம்,X/V_SENTHILBALAJI

படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி
‘தி.மு.க இதனை எளிதாக எடுத்துக்கொள்கிறது'

இதுபோன்ற சட்ட விவகாரங்களை எளிதாக எடுத்துக் கொள்வது நல்லதில்லை என்கிறார் ஷ்யாம்.

"இந்த விஷயத்தை தி.மு.க., மிகவும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். சூழல் வேகமாக மாறிவருகிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்தபோது இருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு என உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் முறையிட்டவுடன், அதனைத் தனி மனுவாகத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,” என்கிறார் அவர்.

“அமைச்சர் பதவி அளிப்பதையெல்லாம் அவசரப்படாமல் பொறுமையாகச் செய்திருக்கலாம். எந்தக் காரணத்திற்காக இதைச் செய்திருந்தாலும் அரசியல் ரீதியாக இது நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும்," என்கிறார் ஷ்யாம்.

மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டால், அதனை அந்தத் தருணத்திற்கு ஏற்றபடி எதிர்கொள்ளலாம் என்ற எண்ணம் தி.மு.க-விடம் இருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

"இப்போது தேர்தல் வந்தால்கூட தி.மு.க-தான் வெல்லும் நிலை இருக்கிறது என நினைக்கிறார்கள். இந்த நிலைமை மாறினால், அப்போது அதற்கேற்றபடி அதைச் சமாளிப்பார்கள்," என்கிறார் அவர்.

செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க
படக்குறிப்பு, பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
‘தி.மு.க. முழுமையாக மாறிவிட்டது’

மேலும் பேசிய பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், இந்தப் போக்கு, தி.மு.க. முழுமையாக மாறிவிட்டதன் அடையாளம் என்கிறார்.

இப்போது இருப்பது முன்பிருந்த தி.மு.க., அல்ல என்னும் அவர், தி.மு.க., அடிப்படையாகவே மாறிவருகிறது என்கிறார். “எந்த விஷயம், கட்சி நிர்வாகிகளை ஈர்த்து வைத்திருக்கும் எனப் பார்க்கிறார்கள்,” என்கிறார்.

முன்பு தி.மு.க உறுப்பினர்களை கொள்கை கட்டிப்போட்டிருந்தது என்று கூறும் ராதாகிருஷ்ணன், இப்போது ஒருவர் கட்சிக்குத் தீவிரமாக வேலை பார்த்தால் அவரைக் கைவிடமாட்டோம் எனக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காட்ட நினைப்பதாகக் கூறுகிறார்.

இதுகுறித்து மேலும் பேசிய ராதாகிருஷ்ணன், “செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்குக் கடுமையாக வேலை செய்திருக்கிறார். ஆகவே, அதற்காக அவரை நான் கைவிடாமல் இருக்கிறேன் எனச் சொல்ல நினைக்கிறார் ஸ்டாலின். ஆகவே, ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பது கேள்வியல்ல. கட்சிக்கு என்ன வேலை பார்த்தாய் என்பதுதான் முக்கியம் என கட்சித் தலைமை முடிவுசெய்துவிட்டதைத்தான் இது காட்டுகிறது," என்கிறார் ராதாகிருஷ்ணன்.

செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க

பட மூலாதாரம்,X/V_SENTHILBALAJI

படக்குறிப்பு, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டுள்ளது
‘அர்த்தமில்லாத விமர்சனங்கள்’

ஆனால், இதுபோன்ற விமர்சனங்களில் அர்த்தமில்லை என்கிறார் தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்.

தன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சிறையிலிருந்து வந்த பிறகு கட்சித் தலைவர் என்ற முறையில் வாழ்த்துத் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறார் அவர்.

"செந்தில் பாலாஜி வழக்கு முடிந்துபோன ஒன்று. செந்தில் பாலாஜி கரூரில் அண்ணாமலையைத் தோற்கடித்தார் என்பதற்காகவும், தி.மு.க-வின் பெயரைக் கெடுப்பதற்காகவும் இதைச் செய்கிறார்கள்,” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

செந்தில் பாலாஜியிடம் கொடுத்த மூன்று லட்ச ரூபாய் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே கிடையாது என்று சொல்பவர்கள் எப்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார்கள்? என்று கேள்வியெழுப்புகிறார் கான்ஸ்டைன்டீன்.

“உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வழக்கறிஞரை ஆஜராகச் செய்ய எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும்? அந்த அளவு பணத்தை, பாதிக்கப்பட்டதாகச் சொல்பவர்கள் கொடுக்க முடியுமா? ஆகவே இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அது பா.ஜ.க. செய்யும் அரசியல்,” என்கிறார்.

மேலும் பேசிய கான்ஸ்டைன்டீன், செந்தில் பாலாஜி பல நாட்கள் சிறையில் இருந்தார். ஆனால், இன்றுவரை குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவில்லை, என்கிறார்.

“இந்தியா முழுவதும் மத்திய ஏஜென்சிகளால் வழக்குத் தொடரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க-வுக்கு மாறியிருக்கிறார்கள். ஆனால், செந்தில் பாலாஜி அப்படிச் செய்யவில்லை. அந்த விசுவாசத்திற்காக அவரை கட்சித் தலைவராக பாராட்டுகிறார் முதலமைச்சர்,” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

‘தியாகம்’ என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்தைப் பற்றிப் பேசிய கான்ஸ்டைன்டீன், ''செந்தில் பாலாஜி மக்களுக்குத் தியாகம் செய்தார் என யாரும் சொல்லவில்லை, பா.ஜ.க-வின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு விசுவாசமாக இருந்தது ஒரு தியாகம். அதைக் கட்சித் தலைவர் பாராட்டுவதில் என்ன தவறு?" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

‘தி.மு.க-வின் செயலில் முரண்பாடில்லை’

இந்த விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்து, வழக்குத் தொடர்ந்த தி.மு.கவே இப்போது அவரைப் பாராட்டுவது சரியா என்ற விமர்சனம் சரியானதில்லை என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

"நாங்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட சிலர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அந்த வழக்கில்தான் அவர் கைதுசெய்யப்பட்டார். ஆகவே இதில் முரண்பாடில்லை," என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

இதற்கிடையில், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி சுமார் 20 வழக்குகளை விசாரித்து வருவதால், செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கத் தனியாக ஒரு நீதிபதியை நியமிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி

அ.தி.மு.க-வின் சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில் பாலாஜியை, 2011-ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.

இந்நிலையில், பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கான நியமனங்களுக்கு பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

2015-ஆம் ஆண்டு வாக்கில், பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை தரவில்லையெனக் கூறி தேவசகாயம் என்பவர் புகார் அளித்தார். உயர்நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகு செந்தில் பாலாஜி மீதும் அவரது சகோதரர் அசோக் உள்பட வேறு நாற்பது பேர் மீது சென்னை மத்தியக் குற்றப்புலனாய்வு துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும் கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கினார்.

இருந்தபோதும் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை செந்தில் பாலாஜிக்கு ஜெயலலிதா அளித்தார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு, டி.டி.வி. தினகரனின் ஆதரவாளராக இருந்துவந்தார் செந்தில் பாலாஜி.

தினகரன், 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத்' தொடங்கியபோது, அதிலும் இருந்துவந்தார்.

ஆனால், விரைவிலேயே அக்கட்சியிலிருந்து வெளியேறி, 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு வேகம் எடுத்தது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி நடந்ததில், ரூ.1.62 கோடி அளவுக்குச் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது.

செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க
படக்குறிப்பு, சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி
கைது முதல் ஜாமீன் வரை

இதற்கிடையில், தி.மு.க சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில் பாலாஜி, மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக்கப்பட்டார்.

இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, தன் மீது புகார் கூறியவர்களுடன் சமரசத்தை எட்டிவிட்டதால் தன் மீதான விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மோசடி வழக்கை முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதற்குப் பிறகு அமலாக்கத்துறை சுறுசுறுப்படைந்தது. செந்தில் பாலாஜி, அவருடன் தொடர்புடையவர்களது இடங்களில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறையில்கூட சோதனை நடத்தப்பட்டது.

இதற்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இருந்தபோதும் அவர் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவந்த நிலையில், தனது அமைச்சர் பதவியை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில், ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி இந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அன்றைய தினமே சிறையிலிருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி. இதற்குப் பிறகு காரியங்கள் வேகமாக நடந்தன.

செப்டம்பர் 29-ஆம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த மூன்றே நாட்களில் செந்தல் பாலாஜி மீண்டும் அமைச்சரானது பலரது புருவங்களை உயர்த்தியிருப்பதோடு, விமர்சனங்களுக்கும் உள்ளானது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

இலங்கை தூதரகம் முன் முற்றுகைப் போராட்டம் - பாட்டாளி மக்கள் கட்சி

2 months 2 weeks ago

இலங்கை தூதரகம் முன் முற்றுகைப் போராட்டம்

image_c597c45bcb.jpg

இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சென்னையில் பாமக சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான இந்திய எல்லைக்கும், இலங்கை எல்லைக்கும் இடைப்பட்ட கடல் பரப்பு மிகவும் குறுகியது ஆகும். அதனால், தமிழ்நாட்டு மீனவர்களாக இருந்தாலும், இலங்கை மீனவர்களாக இருந்தாலும் எல்லையைக் கடக்காமல் மீன்பிடிக்க முடியாது. அதே நேரத்தில் அந்தப் பகுதிகளில் தான் இரு நாட்டு மீனவர்களும் காலம் காலமாக மீன் பிடித்து வருகின்றனர் என்பதால், அவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள மீனவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், அதை மதிக்காத சிங்கள கடற்படை, பல நேரங்களில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் கைது எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளும் அதிகரித்து வருகின்றன.

சிங்களக் கடற்படையினரின் அண்மைக்கால கொடிய அத்துமீறல்களுக்கு எடுத்துக்காட்டு தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் தான். வங்கக்கடலில் இரு படகுகளில் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கடல் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கைக் கடற்படை இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, அனைத்து மீனவர்களுக்கும் இலங்கை ரூபாய் மதிப்பில் தலா ரூ.3.5கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது. அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் கைது செய்து 6 மாதங்கள், ஓராண்டு, ஒன்றரை ஆண்டு என சிறை தண்டனை விதித்து வருகிறது சிங்கள அரசு. இத்தகைய கொடூர அணுகுமுறை காரணமாக கடந்த ஜூன் 16&ஆம் தேதி மீன்பிடி தொடங்கிய பிறகு இன்று வரையிலான மூன்றரை மாதங்களில் மட்டும் 404 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி 54படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இன்றைய நிலையில் மட்டும் இலங்கை சிறைகளில் 162 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்ட மீனவர்களால் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, அவர்கள் பிடித்து வரும் மீன்களை சுத்தம் செய்தல், பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் பத்து மடங்கு குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது தெரியவில்லை. மீனவர்களைக் காக்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் கடமையை முடித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் ஓர் அங்கம் ஆவர். கடல் மீன்கள் ஏற்றுமதியால் மட்டும் மத்திய அரசு பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டுகிறது. அவர்கள் எல்லையில்லாமல் இலங்கைச் சிறைகளில் வாடுவதை அனுமதிக்க முடியாது.

எனவே, இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சென்னையில் பாமக சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி - பாமக பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-தூதரகம்-முன்-முற்றுகைப்-போராட்டம்/175-344804

இந்திய பெண்ணை மணந்த இலங்கையர் - நாடு கடத்துவதற்கு மதுரை நீதிமன்றம் தடை

2 months 2 weeks ago
02 OCT, 2024 | 10:21 AM
image
 

இந்திய பெண்ணை மணந்த இலங்கையரை நாடு கடத்துவதற்கு இந்திய உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்த சரவணபவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையை சேர்ந்த நான், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தபோது, ராமநாதபுரம் சிவசக்தியை திருமணம்செய்ய முடிவு செய்தேன்.

ஆனால், நான் இலங்கை குடியுரிமை பெற்றவன் என்பதால், எனது திருமணத்தை பதிவு செய்யமுடியவில்லை. எனினும், சிவசக்தியை இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில், எனது 3 மாத விசாகாலம் முடிவடைந்ததால், காலநீட்டிப்புக்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தேன். ஆனால், எனது திருமணம் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லாததால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து, எனது விசா காலத்தை நீ்ட்டிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “இந்திய குடியுரிமை பெற்றவரை வெளிநாட்டு நபர் திருமணம் செய்தால், அவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகால விசா நீட்டிப்பு வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, “வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவருக்கான விசா நீட்டிப்பு தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு முறையாக திருமணம் நடைபெற்றதா என்பதை மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்து, விசா நீட்டிப்பு வழங்க வேண்டும். அதுவரை மனுதாரரை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது” என உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/195291

கோவை ஈஷா யோகா மையத்தில் காவல்துறை சோதனை, சமூக நலத் துறை விசாரணை - என்ன நடக்கிறது?

2 months 2 weeks ago
கோவை ஈஷா மையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஈஷா மையம் 1992-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்டது (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 1 அக்டோபர் 2024
    புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்

கோவை வெள்ளியங்கிரி மலைடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈஷா யோகா மையத்தின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் தனது இரண்டு மகள்களை ஈஷா மையத்திலிருந்து மீட்டு தருமாறு தொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.

அந்த மையத்தில் தனது மகள்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டுகிறார், எனினும் தங்கள் சொந்த விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருந்து வருவதாக அவரது மகள்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

யாரையும் திருமணம் செய்து கொள்ளவோ, துறவறம் மேற்கொள்ளவோ கட்டாயப்படுத்துவதில்லை என்று ஈஷா யோகா மையம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை அக்டோபர் 4-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

ஈஷா யோகா மையம் 1992-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்டது.

ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் சிலரின் இருப்பிடமாக இருக்கிறது என்று அந்த மையம் கூறுகிறது.

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது இரண்டு மகள்களை மீட்டு தருமாறு கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழத்தில் வேளாண் பொறியியல் துறையின் முன்னாள் தலைவர். அவருக்கு 42 வயதிலும், 39 வயதிலும் மகள்கள் உள்ளனர்.

அவரது மூத்த மகள் மெகட்ரானிக்ஸ் படிப்பில் இங்கிலாந்தில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். நல்ல சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்த அவர், திருமணம் செய்து பின் 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அவர் ஈஷா மையத்தில் இணைந்தார்.

மென்பொருள் பொறியாளரான இளைய மகளும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவரும் பின்பு ஈஷா மையத்தில் இணைந்துள்ளார். தற்போது இருவரும் ஈஷா மையத்தில் தங்கியிருக்கின்றனர்.

தனது மகள்களுக்கு “மருந்துகள் கொடுத்து அவர்களது மூளையின் செயல்பாட்டை குறைத்து” விட்டதாகவும் இதனால் குடும்பத்துடன் எந்த உறவையும் அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை எனவும் காமராஜ் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

ஈஷா மையத்துக்கு வருபவர்கள் சிலரை அவர்கள் மூளைச்சலவை செய்து, சந்நியாசிகளாக மாற்றுகின்றனர் என்றும் பெற்றோர்கள் சந்திக்கக் கூட அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் காமராஜ் தெரிவித்திருந்தார்.

அந்த மையத்தில் பணிபுரியும் மருத்துவர் மீது போக்சோ வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜூன் 15-ஆம் தேதி மாலை 6 மணியளவில், அவரது மூத்த மகள் அவரை அழைத்து பேசியதாகவும், அப்போது ஈஷா யோகா மையத்தின் மீது தான் தொடுத்திருக்கும் வழக்குகளை பின் வாங்கும் வரை தனது இளைய மகள் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் காமராஜ் குறிப்பிட்டிருந்தார்.

 
கோவை ஈஷா மையம்
படக்குறிப்பு, ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ்
மகள்கள் என்ன கூறுகின்றனர்?

இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது அவரது மகள்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். தனது மகள்கள் ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக காமராஜ் கூறும் நிலையில், தாங்கள் சுய விருப்பத்துடன் அங்கு தங்கி வருவதாகவும் தங்களை யாரும் வற்புறுத்தவில்லை என்றும் மகள்கள் தெரிவித்தனர்.

ஈஷா யோகா மையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கே ராஜேந்திர குமார், வயது வந்தவர்களுக்கு தங்கள் வாழ்க்கை குறித்து, முடிவு எடுக்க உரிமை உண்டு என்று வாதாடினார்.

நீதிமன்றம் அவர்களின் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடுவது தேவையற்றது என்று தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

தந்தையின் கோரிக்கை என்ன?

தனது இளைய மகள் சென்னையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஜக்கி வாசுதேவ் பேசியதாகவும் அதில் அவர் ஈர்க்கப்பட்டார் என்றும் காமராஜ் தெரிவிக்கிறார்.

கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு சென்றவர் ஈஷா மையத்தில் இணைந்துள்ளார். தனது மகளுடன் சேர்ந்து அவரது கல்லூரியில் படித்த 20 பெண்கள் தங்கள் வேலையை விட்டு, ஈஷா மையத்தில் இணைந்ததாக காமராஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டு இரு மகள்களும் ஈஷா மையத்தில் இணைந்தனர். அதே ஆண்டில் ஆட்கொணர்வு மனு தொடுத்து, மகள்களை பார்க்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2017- ஆம் ஆண்டு எனது மகள்களை எனக்கு எதிராக, 'நான் ஈஷா மையத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதாக' மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வைத்தனர். அந்த வழக்கு முடிய ஆறு ஆண்டுகள் ஆனதால் அதுவரை என்னால் அவர்களை காண இயலவில்லை. கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டுக்கு பின் அவர்களை சந்திக்க மீண்டும் அனுமதி கிடைத்தது.” என்றார்.

மேலும், “மூத்த குடிமக்கள் சட்டத்தின் படி, பெற்றோர் பார்த்துக் கொள்ளும் கடமையிலிருந்து தவறுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தேன். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்ற போது, பெற்றோர்கள் ஈஷா மையத்துக்கு வந்தால் அவர்களை பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துவிட்டனர்” என்றார்.

 
கோவை ஈஷா மையம்
படக்குறிப்பு, ஈஷா நிலையத்துக்கு வந்த காவல் துறையினர்
நீதிமன்றம் என்ன கூறியது?

இந்த வழக்கை விசாரித்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஈஷா மையத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், “தனது மகளுக்கு திருமணம் செய்துவிட்டு, பிற பெண்களை மொட்டை அடித்து, சந்நியாசிகளாக” யோகா மையங்களில் வாழ ஏன் ஊக்குவிக்கிறார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பெண்களிடம், “நீங்கள் ஆன்மிகப் பாதையில் செல்வதாக கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோர்களை புறந்தள்ளுவது பாவம் என்று தோன்றவில்லையா?” என்று நீதிபதிகள் கேட்டனர்.

நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், வழக்கு தொடுத்தவர் மற்றும் ஈஷா மையத்தில் இருக்கும் இரு பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். ஈஷா மையத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் ‘தீவிரத்தன்மையை’ கருத்தில் கொண்டும், காவலில் இருப்பவர்கள் தங்கள் முன் ‘பேசிய விதத்தை’ வைத்துப் பார்க்கும் போதும், ‘குற்றச்சாட்டுகளின் பின் உள்ள உண்மையை கண்டறிய மேலும் ஆராய வேண்டியுள்ளது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை புறநகர் காவல்துறையினர் ஈஷா மையம் மீது இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தின் முன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

 
கோவை ஈஷா மையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதில்லை என விளக்கம் அளித்துள்ளது
ஈஷா மையம் கூறுவது என்ன?

இந்த விவகாரம் குறித்து ஈஷா யோகா மையத்தை பிபிசி தொடர்பு கொண்டது. அப்போது ஈஷா யோகா மையத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் எழுத்துப்பூர்வ விளக்கத்தை பிபிசியிடம் பகிர்ந்தார்.

அதில், “ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை.

"இரண்டு பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். மிக சமீபத்தில் காமராஜ் ஈஷா யோகா மையம் சென்று தன்னுடைய மகள்களை சந்தித்த CCTV காட்சிகளும் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது." என்று கூறப்பட்டுள்ளது

மேலும் "2016-ஆம் ஆண்டு இதே காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தீர விசாரித்த கோவை மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று கோவை ஈஷா யோகா மையத்தில் இருவரையும் (காமராஜின் மகள்கள்) சந்தித்து நீதி விசாரணை நடத்தியது.

அந்த தீர்ப்பில் நீதிபதிகள் 'பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை, பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்களது சுயவிருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்' என்று கூறியுள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளது.

ஈஷா யோகா மையத்தில் விசாரணை

இதையடுத்து செவ்வாய்கிழமை (அக்டோபர் 1), கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான 150 காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா தலைமையிலான 50-க்கும் மேற்பட்டோர், ஈஷா யோகா மையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அங்குள்ள பெண்கள், எந்த மாதிரியான சூழல்களில் இந்த மையத்துக்கு வந்தனர், அங்கு அவர்கள் வாழ்க்கை முறை எவ்வாறாக இருக்கிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விரிவான விசாரணையின் அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்

2 months 2 weeks ago
ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நடிகர் ரஜினிகாந்திற்கு உடம்பில் எந்த இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து செல்லும் பிரதான ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை முடிவடைந்துள்ளதாகவும் அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய இதயத்திலிருந்து ரத்தத்தை கொண்டு செல்லும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை இன்று அளிக்கப்பட்டது.

இதயவியல் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரைக் கொண்ட மருத்துவக் குழு ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளித்தனர். ரத்தக் குழாய்க்குள் அனுப்பப்பட்ட சிறு குழாய் மூலம் (கேதீட்டர்) வீக்கம் ஏற்பட்டிருந்த பகுதியில் ஒரு 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

"திட்டமிட்டபடி சிகிச்சை நடைபெற்றது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இன்னும் இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்" என அவர் சிகிச்சைபெற்றுவந்த தனியார் மருத்துவமனை அளித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட பிரச்னை என்ன?

இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான ரத்தக் குழாயான aorta-வில் சில சமயங்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இந்த வீக்கம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றாலும், பெரும்பாலும் வயிற்றுப் பகுதியிலோ நெஞ்சுப் பகுதியிலோதான் ஏற்படும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டால் அது Abdominal Aortic Aneurysm என்றும் நெஞ்சகப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் அது Thoracic Aortic Aneurysm என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்த வீக்கத்தை அப்படியே விட்டுவிட்டால், ரத்தக் குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தாக முடியலாம். ஆனால், முன்கூட்டியே சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில், பெரிய பிரச்னையின்றி வாழ்வைத் தொடர முடியும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவது, புகைபிடிக்கும் பழக்கம் என இந்தப் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன.

நடிகர் ரஜினிகாந்திற்கு உடம்பில் எந்த இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

 
ரஜினிகாந்த் குறித்து அவரது மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கை
படக்குறிப்பு, ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
ரஜினிகாந்த்தின் உடல் நல பிரச்னைகள்

2011-ஆம் ஆண்டிலிருந்தே ரஜினிகாந்த்தின் உடல்நலம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கும் 'ராணா' என்ற படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்த போது ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

முதலில் சென்னையில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த் பிறகு, சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அவர், இரு வாரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால், அவருடைய உடல் நலத்தில் என்ன பிரச்னை, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

2016-ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் 'கபாலி' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்த பிறகு, அவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு சில பரிசோதனைகளைச் செய்து கொண்டதாகவே அப்போது தகவல்கள் வெளியாயின.

அங்கிருந்து திரும்பியவுடன் ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தின் படப்பிடிப்பில் நடித்தார். அந்தத் தருணத்தில் என்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ரஜினிகாந்த் தான் புதிய அரசியல் கட்சி துவங்கவிருப்பதாக 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் அதற்குப் பிறகு அக்டோபர் 2-ஆம் தேதி புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகுமெனவும் கூறப்பட்டது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் அந்த ஆண்டு இறுதியில், சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை எனக் கூறப்பட்டு, ஒரு அறிக்கை வெளியானது.

 
ரஜினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஜினி மக்கள் மன்றம் 2021 ஜூலை மாதம் கலைக்கப்பட்டது

அதில் அவரது உடல் நலம் குறித்த பல தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது, "2011ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரஜினி வெளியிட்டதாகக் கூறப்பட்ட அறிக்கையில், அவர் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத இந்த தருணத்தில் எனது அரசியல் பிரவேசம் குறித்து எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு மருத்துவர்கள் கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் அதை உங்கள் உடல்நிலை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியும். இப்போது உங்களுக்கு வயது 70. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு எனவே கொரோனா காலத்தில் மக்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்" என்று அறிக்கை கூறியது.

 

இந்த அறிக்கையை தான் வெளியிடவில்லையெனக் கூறிய ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் இருந்த தகவல்கள் உண்மைதான் எனத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, உடல் நிலை காரணமாக, தான் அரசியல் கட்சி எதையும் துவங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது ரஜினி மக்கள் மன்றம் 2021 ஜூலை மாதம் கலைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு ரஜினிகாந்த் தீவிரமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் நடித்து, த.ச. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

ராமநாதபுரத்தில் மீட்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயம்!

2 months 3 weeks ago
money-2.jpg?resize=750,375 ராமநாதபுரத்தில் மீட்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயம்!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவிகள் மூவர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ராஜராஜ சோழன் (கி.பி. 985-1012) பெயர் பொறிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

சுரேஷ் சுதா அழகன் மெமோரியல் அரசு மேல்நிலைப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும்,கே மணிமேகலை, எஸ் திவ்யதர்ஷினி மற்றும் எஸ் கனிஷ்கஸ்ரீ ஆகியோரே இந்த நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர்.

குழி தோண்டி விளையாடிக் கொண்டிந்த வேளையில் அவர்கள், பழங்கால நாணயங்கள், பானை ஓடுகள் மற்றும் கல் கல்வெட்டுகளை மீட்டுள்ளனர்.

தகவல் அறிந்த பாரம்பரிய சங்க செயலாளரும், ராமநாதபுரம் தொல்லியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான வி.ராஜகுருஇ குறித்த இடத்தை பார்வையிட்டபோது, அங்கு சீன பீங்கான், பானை ஓடுகள்,இரும்புத்தாது, சிவப்பு பானை ஓடுகள் இருப்பதை கண்டதாக தெரிவித்தார்.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஒரு மனிதன் கையில் பூவுடன் நிற்கிறார். அவரது இடதுபுறத்தில் நான்கு வட்டங்கள் உள்ளன. அவருக்கு மேலே ஒரு பிறை உள்ளது. வலதுபுறம் திரிசூலமும் தீபமும் உள்ளது.

நாணயத்தின் மறுபுறம், கையில் சங்கு ஏந்தியபடி ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

‘ஸ்ரீராஜராஜா’ என்ற பெயர் தேவநாகரி எழுத்துக்களில் அவரது இடது கைக்கு அருகில் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் விளிம்புகள் தேய்ந்துவிட்டன.

முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றியதன் நினைவாக ஈழத்து நாணயங்கள் தங்கம்இ வெள்ளி மற்றும் செம்புகளில் வெளியிடப்பட்டதாக வி.ராஜகுரு கூறினார்.

இலங்கையில் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் சோழர்கள் ஆண்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

https://athavannews.com/2024/1401797

Checked
Sun, 12/22/2024 - 12:59
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed