உலக நடப்பு

விலா எலும்புகளை உடைத்து கண்கள், மூளையை அகற்றி கொடூரம்; உலகையே அதிரவைத்த உக்ரைன் பத்திரிகையாளர் மரணம்

3 months ago

விலா எலும்புகளை உடைத்து கண்கள், மூளையை அகற்றி கொடூரம்; உலகையே அதிரவைத்த பத்திரிகையாளர் மரணம்

விலா எலும்புகளை உடைத்து கண்கள், மூளையை அகற்றி கொடூரம்; உலகையே அதிரவைத்த பத்திரிகையாளர் மரணம்

ரஷ்ய இராணுவக் காவலில் சித்திரவதையை அனுபவித்து உக்ரைன் பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷினாவின் மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஒரு இதயத்தை உடைக்கும் செய்தி வெளிவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், விக்டோரியா ரோஷ்சினா என்ற பெண் பத்திரிகையாளர், ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா பகுதியில் உக்ரேனிய குடிமக்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது குறித்து செய்தி வெளியிட்டார். இப்போது அந்த பத்திரிகையாளரின் மரணம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. இறப்பதற்கு முன், 27 வயதான விக்டோரியா ரஷ்ய இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு பல மாதங்களாக சித்திரவதை செய்யப்பட்டார்.

CBS அறிக்கையின்படி, விக்டோரியாவின் உடல் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டபோது, தடயவியல் அறிக்கைகள் கொடூரமான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற சிகிச்சையின் அதிர்ச்சியூட்டும் அறிகுறிகளைக் கண்டறிந்தன. அவரது உடலில் கீறல்கள், உடைந்த விலா எலும்புகள், கழுத்தில் ஆழமான காயங்கள் மற்றும் அவரது கால்களில் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், மூளை, கண்கள் மற்றும் காற்றுக் குழாய் ஆகியவை அகற்றப்பட்ட கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

விக்டோரியா ரோஷ்சினா உக்ரேனிய செய்தித்தாள் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவுடன் தொடர்புடையவர். அவர் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தரைவழி அறிக்கையிடலைச் செய்து வந்தார். உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் ஆசிரியர் செவ்கில் முசேவா, விக்டோரியாவை ஒரு போராளிப் பத்திரிகையாளராகக் கருதினார். மற்றவர்கள் சென்றடைய முடியாத இடத்தில் ஒரு பத்திரிகையாளர் இருக்க வேண்டும் என்று விக்டோரியா கூறுவார் என்று அவர் கூறினார். அவரது கொலை உக்ரேனிய மற்றும் சர்வதேச பத்திரிகைத் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு இந்தக் கொலையை நேரடிப் போர்க்குற்றம் என்று கூறி, ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியது. உக்ரைனிய வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, ரோஷ்சினா ரஷ்ய காவலில் இறந்தார். இதற்கான வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது.

ஒருபுறம் கார்கிவ் மற்றும் டினிப்ரோ மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தாலும், மறுபுறம் தரைவழி செய்தி வெளியிடுவது பத்திரிகையாளர்களுக்கு ஒரு சவாலான வேலையாக மாறியுள்ளது. ஆனாலும், உண்மையை அம்பலப்படுத்த பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்துக்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். விக்டோரியாவின் மரணம் இந்த சவாலுக்கு உதாரணமாக உள்ளது.

https://thinakkural.lk/article/317483

காசாவில் கடும் தாக்குதலுடன் முடக்கம்; போசணை குறைபாடு 80% உச்சம்

3 months ago

காசாவில் கடும் தாக்குதலுடன் முடக்கம்; போசணை குறைபாடு 80% உச்சம்

- போரை நிறுத்த நெதன்யாகு அரசுக்கு இராணுவத்தில் இருந்து அழுத்தம்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் அங்கு போசணை குறைபாடு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

போர் தொடரும் சூழலை அதனை முடிவுக்குக் கொண்டு வரும்படி இஸ்ரேலுக்குள்ளும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பில் இஸ்ரேல் ரிசர்வ் படையினரும் அரசுக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.

காசாவில் இரண்டு மாதங்களாக நீடித்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த மார்ச் 02 ஆம் திகதி தொடக்கம் காசாவுக்கான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் முடக்கி வருகிறது. இந்த முற்றுகை 60 நாட்களை கடந்திருக்கும் சூழலில் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் போசணை குறைபாடு தொடர்பாக சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 80 வீதம் அதிகரித்திருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் ஆறு மாதம் தொடக்கம் இரண்டு வயது வரையான குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களில் 92 வீதமானவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச போசணை கிடைப்பதில்லை என்றும் காசா மக்கள் தொகையில் 65 வீதமானவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

காசாவுக்கு உணவு, மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகள் செல்வது அனுமதிக்கப்படாத சூழலில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருப்பதோடு அங்கு எஞ்சியுள்ள உணவு மற்றும் மருந்து பொருட்கள் தீர்ந்து வருவதாகவும் தொண்டு அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.

இஸ்ரேல் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் செல்வதை தடுத்து வருகின்றபோதும் அவைகளை வழங்குவதற்கு தயாரான நிலையில் இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது. காசா எல்லையில் உதவிகளுடன் 3,000 டிரக் வண்டிகள் காத்திருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

முற்றுகைக்கு மத்தியில் இஸ்ரேல் காசா மீது நடத்தும் உக்கிர தாக்குதல்களில் நேற்றும் (01) பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக கான் யூனிஸின் கிழக்கு பகுதியில் தமது பயிர் நிலத்திற்கு செல்லும் மூவர் இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக பார்த்தவர்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. காசாவில் உணவுப் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் இவர்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட முயன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் நேற்று இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு தெற்கு நகரான கான் யூனிஸில் இளம் பெண் ஒருவர் தனது காயத்தினால் உயிரிழந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. கான் யூனிஸின் தெற்காக அல் மனாரா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலிய செல் தாக்குதல் ஒன்றில் மற்றொருவர் கொல்லப்பட்டிருப்பதோடு டெயிர் அல் பலாஹ் நகரின் கிழக்காக வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் பலரும் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பதோடு இவ்வாறாக கடந்த மார்ச் 18 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் குறைந்தது 2,308 பேர் கொல்லப்பட்டு மேலும் 5,973 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 595 சிறுவர்கள் மற்றும் 308 பெண்கள் இருப்பதாக மனித உரிமைகளுக்கான பலஸ்தீன நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 52,400ஐ தாண்டியுள்ளது.

கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த முயற்சிகளும் முன்னேற்றம் காணாத நிலையில், இஸ்ரேல் போரை தொடர்வதில் உறுதியாக உள்ளது. எவ்வாறாயினும் அண்மைய வாரங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரிசர்வ் படை வீரர்கள் கையொப்பம் இட்ட கடிதங்களில் போரை நிறுத்தி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு பிரதமர் நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

‘இஸ்ரேல் மோசமான நிலைக்கு சென்றுவருவதாகவே எம்மால் முடிவுக்கு வர முடிகிறது’ என்று இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் முன்னாள் தலைவர் டன்னி யடோம் குறிப்பிட்டுள்ளார்.

‘நெதன்யாகுவுக்கு அதிக தொந்தரவு தருவது அவரது சொந்த நலன்கள் என்பது எமக்கு தெரியும். முன்னுரிமை அடிப்படையில் பார்த்தால் பணயக்கைதிகள் அன்றி அவரது நலன்கள் மற்றும் அரசின் ஸ்திரத்தன்மையை தக்கவைப்பதே முதலிடத்தில் உள்ளது’ என்று அவர் சுட்டிக்காட்டியதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் எட்டப்பட்ட முதல் கட்ட போர் நிறுத்தத்தில் 30க்கும் அதிகமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் காசாவில் தொடர்ந்து 59 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதோடு இவர்களில் 24 பேர் தொடருந்தும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இஸ்ரேல் இராணுவத்தின் அனைத்து தரப்புகளிடம் இருந்தும் கடிதங்கள் வருவதோடு இவ்வாறு 12,000க்கும் அதிகமான கடிதங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

போர் ஆரம்பித்த தொடக்கத்தில் அதில் பங்கேற்க இஸ்ரேல் இராணுவ ரிசர்வ் படைகள் ஆர்வம் காட்டியபோதும் அவர்களில் பங்கேற்பு தற்போது 50–60 வீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் கடந்த ஒரு வாரமாக நீடிக்கும் காட்டுத் தீ ஜெரூசலத்தின் அருகாமை பகுதி உட்பட பல பகுதிகளுக்கும் பரவி உள்ளது. தீயை கட்டுப்பாடுத்த 155 தீயணைப்பு படைப் பிரிவுகள் செயற்பட்டு வருவதாக ‘தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த காட்டுத் தீ ஜெரூசலம் நகரை நெருங்கி இருக்கும் நிலையில் ‘நாடு அவசர நிலை’ ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இந்தத் தீ கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவு மோசமடைந்திருப்பதாக தீயணைப்புப் படை தலைவர் எயால் கஸ்பி தெரிவித்துள்ளார். தீயை இன்னும் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாக இஸ்ரேலிய தீ மற்றும் மீட்பு சேவை நேற்று குறிப்பிட்டுள்ளது.

https://www.thinakaran.lk/2025/05/02/breaking-news/127256/காசாவில்-கடும்-தாக்குதலு/#google_vignette

ரஷ்யா – வடகொரியா இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

3 months ago

New-Project-7-1.jpg?resize=600%2C300&ssl

ரஷ்யா – வடகொரியா இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார்.

புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே மிஷுஷ்டின் இதனை தெரிவித்தார்.

அண்டை நாடுகள் என்ற முறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்யாவும் வடகொரியாவும் விரும்புகின்றன எனவும் இதற்கான சின்னமாகவே புதிய பாலம் திகழும்,” எனவும் மிஷுஷ்டின் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Athavan News
No image previewரஷ்யா - வடகொரியா இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள்...
ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழா...

மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!

3 months ago

New-Project-13.jpg?resize=750%2C375&ssl=

மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!

ஜெருசலேமின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க சர்வதேச உதவியை நாடு கோரியுள்ளது.

அனர்த்தத்தினால் இதுவரை குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இஸ்ரேலில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவு தினத்தன்று இந்த மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

ஜெருசலேம் முதல் டெல் அவிவ் வரையிலான பிரதான நெடுஞ்சாலையில் தீ எரிவதையும், சுற்றியுள்ள மலை உச்சிகளில் அடர்ந்த புகை பரவுவதையும் சமூக ஊடகங்களில் காணொளிகள் மற்றும் படங்கள் காட்டுகின்றன.

பலர் தங்கள் வாகனங்களை கைவிட்டு தீப்பரவலிலிருந்து தப்பி ஓடுவதைக் காண முடிந்தது.

இஸ்ரேலிய ஊடகங்களின்படி, 160 க்கும் மேற்பட்ட மீட்பு மற்றும் தீயணைப்பு குழுக்கள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

பல விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்க முயற்சி செய்கின்றன.

மேலும் நாட்டின் இராணுவமும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன என்று அது கூறியது.

இருப்பினும், வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று தீயை கட்டுப்படுத்துவதில் சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

c0qrdj18_wildfires_625x300_01_May_25.jpg

https://athavannews.com/2025/1430229

யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து!

3 months ago

யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து!

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE+%E0%AE%B5%E0%AE%B3+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21+

யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

யுக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா அணுகுவதற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்தது. 

குறித்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்படத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், யுக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கருத்து மோதல் காரணமாக ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது. 

இந்தநிலையிலேயே, அமெரிக்காவுடனான கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குத் தயாரென யுக்ரைன் நேற்று அறிவித்தது. 

இதனையடுத்து அமெரிக்காவும், யுக்ரைனும் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 

அத்துடன், இரு நாடுகளும் புனரமைப்பு முதலீட்டு நிதியை உருவாக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.hirunews.lk/tamil/404313/யுக்ரைனுடனான-கனிம-வள-ஒப்பந்தத்தில்-அமெரிக்கா-கைச்சாத்து

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

3 months ago

30 APR, 2025 | 10:35 AM

image

நியூசிலாந்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

https://www.virakesari.lk/article/213309

உலக அளவில் அச்சுறுத்தும் போர் சூழல்; இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த 100 நாடுகள்

3 months ago

உலக அளவில் அச்சுறுத்தும் போர் சூழல்; இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த 100 நாடுகள்

உலக அளவில் அதிகரிக்கும் போர் சூழல், மாறிவரும் புவியியல் அரசியல் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக அதிகரித்துள்ளன.

உக்ரைன்- ரஷ்யா போர், காசா- இஸ்ரேல் போர், தென் கொரியாவுக்கு வடகொரிய மிரட்டல், தாய்வாணுக்கு சீனா மிரட்டல், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் என உலகின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ராணுவ ஒதுக்கீட்டிற்கான நிதியை அதிகரித்துள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், 2023- ஆம் ஆண்டை விட 2024- ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக ராணுவ நிதி 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது 2023- ஆம் ஆண்டை 9 புள்ளி 4 சதவிகிதம் அதிகம்.

இரு பெரிய போர்களின் மையமாக உள்ள ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் ராணுவ நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்துள்ளது. மற்ற செலவினங்களை குறைத்து விட்டு, ராணுவப் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிப்பதால், சமூக முன்னேற்ற திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் நேட்டோ கூட்டணிக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகியவற்றால் ரஷ்யா உள்பட பல ஐரோப்பிய நாடுகளின் ராணுவச் செலவு 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பனிப்போரின் முடிவில் பதிவு செய்யப்பட்ட அளவை விட அதிகம் என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவச் செலவு 2024 ஆம் ஆண்டில் $149 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டை விட 38 சதவீதம் அதிகமாகும், ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1 சதவிகிதம் ஆகும். உக்ரைனின் மொத்த ராணுவச் செலவு 2 புள்ளி 9 சதவீதம் அதிகரித்து 64.7 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது ரஷ்யாவின் ராணுவச் செலவில் 43 சதவீதமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34 சதவீதத்துடன், மற்ற நாடுகளை விட மிகப்பெரிய ராணுவச் சுமையை உக்ரைன் சுமக்கிறது. மேலும் தற்போது, உக்ரைன் அனைத்து வரி வசூலையும் ராணுவத்திற்காக செலவிடுகிறது… இதனால் சில ஆண்டுகளில் அந்நாடு மிகப்பெரிய பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளும் என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஜெர்மனியின் ராணுவ நிதி ஒதுக்கீடும் 28 சதவீதம் அதிகரித்து, 88.5 பில்லியன் டாலர்களை தொட்டுள்ளது. ஜெர்மனி, இந்தியாவை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய ராணுவ நாடாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவ நிதி ஒதுக்கீடும் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. காசாவை தாக்கி வரும் இஸ்ரேலின் ராணுவ நிதியை 65 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், பிராந்திய பிரச்சனைகளில் சிக்கியுள்ள ஈரான், தனது ராணுவ நிதியை 10 சதவிகிதம் குறைத்துக்கொண்டுள்ளது. ஈரான் மீது பல்வேறு நாடுகளும் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அமெரிக்காவின் ராணுவச் செலவு 5.7 சதவீதம் அதிகரித்து 997 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது 2024 இல் உலக ராணுவ நிதியில் 37 சதவீதம். அதிகரித்து வரும் சிக்கலான புவிசார் அரசியல் உலகில் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநாட்ட உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் ராணுவப் படைகளை பலப்படுத்தி வருகின்றன.

https://thinakkural.lk/article/317420

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

3 months ago

New-Project-1-2.jpg?resize=600%2C300&ssl

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து இருநாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்ததுடன் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை இரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது.

அத்துடன் இருநாட்டு அரசுகளும் தங்கள் இராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன.

இந்நிலையில் , இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

“அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச உள்ளார். இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெளியுறவுத்துறை மட்டுமின்றி, பல்வேறு அளவுகளிலும் இருநாட்டு அரசுகளிடம் பேச உள்ளோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1430010

வரலாறு காணாத மின் தடை; இருளில் மூழ்கிய ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்!

3 months ago

ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸில் வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டுள்ளது.

franve-300x178.jpg

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு மின் தடையைச் சந்தித்துள்ளன. அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதித்துள்ளன. ஸ்பெயினின் தேசிய மின்சார கட்ட ஆபரேட்டரான ரெட் எலக்ட்ரிகா, இதை உறுதிப்படுத்தியுள்ளது. அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த இடையூறு காரணமாக மக்கள் பெரும் அவஸ்தையை எதிர்கொண்டுள்ளனர். தவிர, போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து சமிக்ஜைகள் செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐரோப்பிய மின் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் கோளாறுதான் இதற்குக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்போன் டவர்கள் இயங்காததால் செல்போனிலிருந்து அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், இருண்ட கடைகளுக்குள் மக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தொலைத்தொடர்புகளும் பாதிப்புக்குள்ளாகின. மேலும், விமானச் சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. மாட்ரிட் மற்றும் லிஸ்பனின் மெட்ரோ அமைப்புகளில் பல பயணிகள் சிக்கித் தவித்தனர். நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதைகளில் ரயில்கள் சிக்கிக்கொண்டன என்று யூரோநியூஸ் போர்ச்சுகல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரெட் எலக்ட்ரிகா, மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த பெரிய மின்தடைகளுக்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பிரான்சில், மின் இணைப்பு வழங்கல் நிறுவனம் (RTE), ஒரு சிறிய தடை ஏற்பட்டதாகவும், ஆனால் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதாகவும் அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/317374

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை

3 months ago

New-Project-358.jpg?resize=750%2C375&ssl

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் (FBI) கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் வொஷிங்டன் எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

இசைக்கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதி மிலிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் ஒரு நேர்காணலின் போது பேசிய ரணில் விக்கிரமசிங்க, தாக்குதல்களுக்குப் பின்னால் சஹ்ரான் ஹாஷிம் தான் மூளையாக செயல்பட்டார் என்று FBI விசாரணையில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.

இந்த நிலையில், தாக்குதல் குறித்து இலங்கை வேறுபட்ட கதையை ஊக்குவிக்க முயன்றால், அது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கோபப்படுத்தக்கூடும் என்றும், அவர் அதிக வரிகளை விதிப்பதன் மூலமோ அல்லது தனது பதவிக் காலத்தில் உக்ரேனின் தலைமையை நடத்தியது போன்ற இராஜதந்திர நடவடிக்கை எடுப்பதன் மூலமோ எதிர்வினையாற்றக்கூடும் என்றும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப், தன்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், விசாரணைகளுக்கு உதவ FBI ஐ நியமித்ததையும் ரணில் விக்ரமசிங்க இதன்போது நினைவு கூர்ந்தார்.

https://athavannews.com/2025/1429882

புதிய பாப்பாண்டவரை தெரிவு செய்வதற்கான பணிகள் 7 ஆம் திகதி ஆரம்பம்!

3 months ago

ab3666294fa657c7f32022fe333c86e8.jpg?res

புதிய பாப்பாண்டவரை தெரிவு செய்வதற்கான பணிகள் 7 ஆம் திகதி ஆரம்பம்!

போப் பிரான்சிஸ்ஸின்  மறைவைத் தொடர்ந்து புதிய போப்பைத் தெரிவு செய்வதற்கான பணிகள் எதிர் வரும் மே மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவால் தனது 88 ஆவது வயதில்  கடந்த 21 ஆம் திகதி மரணம் அடைந்தார். இதனையடுத்து  அவரது உடல்  கடந்த 26ஆம் திகதி  ரோமில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

88 வயதான  போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வத்திக்கான் ஈடுபட்டு வருகின்றது.

அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த  மே மாதம்  7ஆம்  திகதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப்பைத்  தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் உள்ளனர் எனவும், அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429874

உக்ரைனில் மூன்று நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவு!

3 months ago

image_76c37538e1.jpg?resize=600%2C375&ss

உக்ரைனில் மூன்று நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவு!

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ள நிலையில் 8-10 திகதிளில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

மனிதாபிமானக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் மே 8 ஆம் திகதி நள்ளிரவில் ஆரம்பித்து 72 மணித்தியாலங்கள் தொடரும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இந்த போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க ரஷ்யாவும், உக்ரைனை வலியுறுத்தியுள்ளது.

இந்த காலகட்டத்தில், அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவர துப்பாக்கிச் சூட்டை நிறுத்துங்கள் என்றும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புடினை வலியுறுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்தது.

இதேவேளை, புடின் ஈஸ்டர் தினத்திற்கு 30 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429876

கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!

3 months ago

New-Project-352.jpg?resize=750%2C375&ssl

கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!

ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற கனடாவின் பொதுத் தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கனேடியன் CTV மற்றும் CBC செய்திகள் செவ்வாயன்று (29) கணித்துள்ளன.

இருப்பினும், அவர்கள் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பார்களா அல்லது சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பார்களா என்று இன்னும் சொல்ல முடியாது.

பெரும்பான்மைக்குத் தேவையான 343 தேர்தல் இடங்களில் 172 இடங்களை லிபரல் கட்சி இன்னும் பெறவில்லை என்று CBC தெரிவித்துள்ளது.

லிபரல்கள் 133 இடங்களுடன் முன்னிலை வகித்தனர்.

கன்சர்வேடிவ்கள் 93 இடங்களைப் பெற்றனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்வதற்கு முன்பு மக்கள் செல்வாக்கு குறைந்திருந்த லிபரல்களுக்கு இது மீண்டும் ஒரு மீள் வருகையை இந்த தேர்தல் எடுத்துக் காட்டுகின்றது.

அதேநேரம், இந்த வெற்றி கார்னியின் பொருளாதார அனுபவம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பால் தூண்டப்பட்ட ஒரு வியத்தகு அரசியல் திருப்பத்தைக் குறிக்கிறது.

கனடாவை இணைப்பதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர்ச்சியான வர்த்தக விரோதங்கள், குறிப்பாக தேர்தல் நாளில் சமூக ஊடகங்கள் மூலம் அந்த அச்சுறுத்தல்களை அவர் மீண்டும் பற்றவைத்த பின்னர் மையப் பிரச்சாரப் பிரச்சினையாக மாறியது.

கனடா மற்றும் இங்கிலாந்து இரண்டிலும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான கார்னி, தனது பொருளாதாரச் சான்றுகளைப் பயன்படுத்தி நாட்டைப் பாதுகாக்கத் தான் சிறந்த முறையில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு அப்பால் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதாக அவர் உறுதியளித்தார், மேலும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையாக எச்சரித்தார்.

https://athavannews.com/2025/1429841

தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றிய புதிய பகுதி!

3 months ago

New-Project-339.jpg?resize=750%2C375&ssl

தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றிய புதிய பகுதி!

பிலிப்பைன்ஸுடனான பிராந்திய தகராறு அதிகரித்து வரும் நிலையில், தென் சீனக் கடலில் ஒரு சிறிய மணல் திட்டை சீன கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளதாக பீஜிங் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய சாண்டி கே மணல் திட்டுப் பகுதியில் நான்கு அதிகாரிகள் கருப்பு நிற உடை அணிந்து சீனக் கொடியை ஏந்தியபடி நிற்பதைக் காட்டும் படங்களை சீன அரச ஒளிபரப்பு சேவையான CCTV வெளியிட்டது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் சீனா அந்தப் மணல் திட்டுப் பகுதி மீது “கடல்சார் கட்டுப்பாட்டையும் இறையாண்மை அதிகார வரம்பையும் செயல்படுத்தியதாக” CCTV கூறியது.

சீனாவும் பிலிப்பைன்ஸும் பல்வேறு தீவுகளுக்கு உரிமை கோரியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பின்னர் பிலிப்பைன்ஸ் மூன்று மணல் திட்டுகளில் இறங்கியதாகக் கூறியது.

பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினர் தரையிறங்கிய மணல் திட்டுகளில் ஒன்று சாண்டி கேயா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

https://athavannews.com/2025/1429760

ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு!

3 months ago

New-Project-346.jpg?resize=750%2C375&ssl

ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு!

ஹவுத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமனில் உள்ள தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரழந்துள்ளதாக ஆயுதக் குழுவின் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது.

சாதா மாகாணத்தில் உள்ள மையத்தில் தாக்குதல் நடந்தபோது மேலும் 47 புலம்பெயர்ந்தோர் காயமடைந்தனர்.

அவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக ஹவுத்திகளின் அல் மசிரா அலைவரிசை தெரிவித்துள்ளது.

அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.

மார்ச் 15 அன்று ஹவுத்திகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதிலிருந்து, அமெரிக்க மத்திய கட்டளைப் படைகள் 800க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் வந்தது.

https://athavannews.com/2025/1429805

இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்; காசாவில் ‘முழு அளவில் பஞ்ச’ அபாயம்

3 months ago

இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்; காசாவில் ‘முழு அளவில் பஞ்ச’ அபாயம்

- போர் நிறுத்த பேச்சில் தொடர்ந்தும் இழுபறி

damithApril 28, 2025

இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் காசாவில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் ‘முழு அளவில் பஞ்சம் ஒன்று ஏற்படும்’ சூழல் தொடர்பில் தொண்டு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

காசாவுக்கான உதவிகள் செல்வதை இஸ்ரேல் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கி இருக்கும் நிலையில் அங்கு உணவு, மருந்து, எரிபொருள் உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் தீர்ந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘காசாவில் எதிர்வரும் நாட்கள் தீர்க்கமானதாக அமையவுள்ளன. குண்டுகள் மற்றும் ரவைகளால் கொல்லப்படாதவர்கள் மெதுவாக உயிரிழந்து வருகின்றனர்’ என்று ஐ.நாவின் மனிதாபிமான நிறுவன தலைவர் ஜொனதன் விட்டோல் எச்சரித்துள்ளார். காசா நகரில் நேற்று முன்தினம் (26) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

‘மனிதாபிமான உதவியாளர்களாக உதவிகள் மறுக்கப்படுவதை ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை எம்மால் பார்க்க முடிகிறது. மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதற்கு எந்த நியாயமும் கூற முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் உலக உணவுத் திட்டத்தின் கையிருப்புகள் தீர்ந்து வருவதை உறுதி செய்த விட்டோல் அர்த்தபூர்வமான உணவு விநியோகங்கள் எதுவும் தற்போது இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

உலக உணவுத் திட்டம் வெளியிட்ட அறிவிப்பில், காசா பகுதியில் விநியோகிப்பதற்கு ‘சரிட்டி கிட்சன்’ அமைப்புக்கு கடைசி விநியோகங்களை வழங்கியதாகவும், அந்த உணவுகள் சில நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்றும் எச்சரித்தது.

மாவு மற்றும் சமையல் எரிவாயு தீர்ந்த நிலையில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுடனான காசாவில் உள்ள 25 பேக்கரிகளும் மூடப்பட்டதோடு குடும்பங்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாரங்களுக்கு போதுமான உணவுப் பொதிகளும் தீர்ந்துள்ளன.

பஞ்சம் அச்சுறுத்தல் நிலையை தாண்டி உண்மையாகி வருவதாக காசா ஊடக அலுவலகம் வெள்ளிக்கிழமை (25) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமது குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீன குடும்பங்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளன’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் 50 குழந்தைகள் உட்பட 52 பேர் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்திருப்பதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினசரி பட்டினி நிலையை எதிர்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா பகுதியை முழுமையாக முடக்கிய நிலையிலேயே இஸ்ரேல் அங்கு தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசா நகரின் செய்தூன் பகுதியில் இஸ்ரேல் நேற்று காலை நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் இரு சிறுமிகள் உட்பட பலஸ்தீனர்கள் மூவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தரப்புகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

மறுபுறம் கடந்த சனிக்கிழமை இரவு மத்திய காசாவின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் பத்து பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இதில் அல் மகாசி அகதி முகாமுக்கு வடக்காக பொதுமக்கள் குழுவொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டிருப்பதோடு அல் சவைதா சிறு நகரில் இஸ்ரேலிய படை மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதல்களில் மேலும் நால்வர் பலியாகியுள்ளனர். குறிப்பாக கடந்த சனிக்கிழமை காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 40 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 51,495 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 117,524 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு மாத போர் நிறுத்தத்தின் பின்னர் கடந்த மார்ச் நடுப்பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்ததை அடுத்தே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. மீண்டும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக கெய்ரோவில் உள்ள மத்தியஸ்தர்களை சந்தித்த ஹமாஸ் பிரதிநிதிகள் காசாவில் இஸ்ரேலுடன் பல ஆண்டு போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணக்கத்தை வெளியிட்டிருந்தபோதும் ஆயுதங்களை களைவதை நிராகரித்துள்ளது.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஐந்து தொடக்கம் ஏழு ஆண்டுகள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் இணக்கத்தை வெளியிடும் வகையில் மத்தியஸ்தர்கள் இடையே அந்த அமைப்பு நம்பிக்கையை வளர்த்து வருவதாக இந்த பேச்சுவார்த்தை தொடர்பான நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘போர் நிறுத்தம் ஒன்று அல்லது அதன் காலம் பற்றிய திட்டத்தை நாம் நிராகரிக்கவில்லை என்பதோடு பேச்சுவார்த்தை கட்டமைப்புக்குள் அதனை விவாதிக்க நாம் தயாராக உள்ளோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எந்த தீவிரமான முன்மொழிவுக்கும் நாம் தாயாராக உள்ளோம்’ என்று ஹமாஸ் தலைமைக்கான ஊடக ஆலோசகர் தாஹிர் அல் நொனோ குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஹமாஸ் தனது அயுதங்களை களைய வேண்டும் என்ற இஸ்ரேலின் பிரதான கோரிக்கையை நொனோ நிராகரித்துள்ளார். காசாவை இராணுவமற்ற பகுதியாக மாற்ற இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

‘ஆயுத போராட்டம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல என்பதோடு ஆக்கிரமிப்பு இருக்கும் வரை எமது கைகளில் ஆயுதம் தொடர்ந்து இருக்கும்’ என்று நொனோ குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இஸ்ரேலின் பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக இஸ்ரேலிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஷர்ரன் ஹஸ்கல் குறிப்பிட்டார். ‘ஹமாஸ் எஞ்சியுள்ள 59 பணயக்கைதிகளையும் விடுவித்து ஆயுதங்களை கீழே வைத்தால் போர் நாளைக்கே முடிவுக்கு வரும்’ என்று ஹஸ்கல் கடந்த வாரம் ஜெரூசலத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.

https://www.thinakaran.lk/2025/04/28/world/126214/இஸ்ரேலின்-தொடரும்-தாக்க-5/

ரஷ்யாவுக்காகப் போரிட வீரர்கள் அனுப்பியதை ஒப்புக் கொண்ட வடகொரியா!

3 months ago

New-Project-336.jpg?resize=750%2C375&ssl

ரஷ்யாவுக்காகப் போரிட வீரர்கள் அனுப்பியதை ஒப்புக் கொண்ட வடகொரியா!

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட படைகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.

வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA-வில் வெளியான ஒரு அறிக்கையில், ஜனாதிபதி கிம் ஜாங் உன் பிறப்பித்த உத்தரவின்படி, குர்ஸ்க் எல்லைப் பகுதியை ரஷ்யப் படைகள் “முழுமையாக விடுவிக்க” தங்கள் வீரர்கள் உதவியதாக பியோங்யாங்கின் இராணுவம் கூறியது.

வட கொரிய வீரர்களின் “வீரத்தை” ரஷ்ய தலைமைத் தளபதி வலேரி ஜெராசிமோவ் பாராட்டிய சில நாட்களுக்குப் பின்னர் பியோங்யாங்கின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மொஸ்கோ முதல் முறையாக போரில் வடகொரியாவின் ஈடுபாட்டைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.

வட கொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட 11,000 வீரர்களில் குறைந்தது ஆயிரம் பேர் மூன்று மாதங்களில் உயிரிழந்துள்ளதாக நம்புவதாக மேற்கத்திய அதிகாரிகள் முன்னதாக கூறியிருந்தனர்.

தென் கொரிய மற்றும் மேற்கத்திய உளவுத்துறை, கடந்த ஆண்டு வடகொரியா குர்ஸ்க்கு ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியதாக நீண்ட காலமாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் வடகொரியாவின் புதிய அறிவிப்பின்படி, பியோங்யாங் மற்றும் மொஸ்கோ இடையேயான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்று KCNA தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1429745

கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு!

3 months ago

New-Project-321.jpg?resize=750%2C375&ssl

கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு!

கனடாவின் மேற்கு நகரமான வான்கூவரில் நடந்த ஒரு திறந்த வெளி நிகழ்வின் போது, நபரொருவர் தான் பயணித்த வாகனத்தை கூட்டத்திற்குள் வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் சாட்சியங்களை மேற்கொள்காட்டு குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.

எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்தாத வான்கூவர் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கூட்டத்தின் வழியாக ஒரு கருப்பு SUV வாகனம் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்தியதாக சாட்சிகள் விவரிக்கின்றனர்.

என்ன நடந்தது என்பது குறித்து வான்கூவர் பொலிஸார் எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஆனால் கிழக்கு 41வது அவென்யூ மற்றும் ஃப்ரேசர் தெருவில் இரவு 8 மணிக்குப் பின்னர் ஒரு சாரதி கூட்டத்திற்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

https://athavannews.com/2025/1429677

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய செலன்ஸ்கி!

3 months ago

2f49b8a8-1f7c-43da-9a54-fc33bd74883c-1.j

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய செலன்ஸ்கி!

நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் திறந்தவெளி முற்றத்தில் இன்று இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், உக்ரேன் ஜனாதிபதி  வொலோடிமிர் செலன்ஸ்கி உட்பட பல உலகத் தலைவர்கள் வத்திகானுக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில்  பிரான்சிஸ் திருத்தந்தையின்  நல்லடக்க ஆராதனைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி  வொலோடிமர் செலன்ஸ்கியும்  இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429622

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் படுகொலை!

3 months ago

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் படுகொலை!

அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் என அடையாளம் காணப்பட்ட ஒரு அமெரிக்க நபர், 2024 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ் சண்டையிட்டபோது கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் 21 வயதான மைக்கேல் அலெக்சாண்டர் க்ளாஸ், ஏப்ரல் 4, 2024 அன்று கிழக்கு ஐரோப்பாவில் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் என அடையாளம் காணப்பட்ட ஒரு அமெரிக்க நபர், 2024 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ் சண்டையிட்டபோது கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் 21 வயதான மைக்கேல் அலெக்சாண்டர் க்ளாஸ், ஏப்ரல் 4, 2024 அன்று கிழக்கு ஐரோப்பாவில் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

பிப்ரவரி 2024 இல் மத்திய புலனாய்வு அமைப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட ஜூலியான் கல்லினாவின் மகனாவார் உக்ரைனில் கொல்லப்பட்ட மைக்கேல் க்ளாஸ்.

அமெரிக்காவின் மீதான உள்நாட்டு கோபமும், ஒன்லைன் தீவிரமயமாக்கலும், நடுத்தர வர்க்க அமெரிக்க இளைஞரை கிழக்கு உக்ரைனின் கொலைக் களங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.

இராணுவத்தில் பணியாற்றிய பெற்றோருக்குப் பிறந்த ஒரு உயர்நிலைப் பள்ளி கால்பந்து வீரர் இந்த மைக்கேல் குளோஸ். புலன்விசாரணை இணையபக்கம் ஒன்றில், பிப்ரவரி 2022 முதல் ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரில் க்ளாஸும் ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில், க்ளாஸ் பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவு வட்டாரங்களில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கும் காசா போருக்கும் அமெரிக்கா அளித்த ஆதரவிற்காக அவர் தமது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார்.

துருக்கியில் இருந்தபோது, க்ளாஸ் ரஷ்யாவுக்குச் செல்லும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வழக்கமாக பாலஸ்தீனம் பற்றிய வீடியோக்களை கவனிப்பதுடன் அமெரிக்கா மீது மிகவும் கோபமாக இருந்தார் என்றே அவருக்கு நெருக்கமான ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவிற்கு விசா பெற்ற பிறகு, அவர் மாஸ்கோவிற்கு செல்வதற்கு முன்பு ரஷ்யா முழுவதும் பயணம் செய்தார், அங்கு அவர் தனது ஆவணங்கள் காலாவதியாகும் முன்பு இராணுவத்தில் சேர்ந்தார்.

அங்கு அவர் பெரும்பாலும் நேபாள ஒப்பந்த வீரர்களுடன் பயிற்சி பெற்றார். இராணுவத்தில் சேர்ந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் உக்ரைனுக்கு ஒரு தாக்குதல் பட்டாலியனின் உறுப்பினராக அனுப்பப்பட்டார்.

ஆனால் அவர் மரணம் தொடர்பில் விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. அவரது பெற்றோர் ரஷ்ய அரசாங்கத்தைத் தொடர்புகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://seithy.com/breifNews.php?newsID=332503&category=WorldNews&language=tamil

Checked
Sat, 08/02/2025 - 17:39
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe