உலக நடப்பு

ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்!

2 months 1 week ago

trump.jpg?resize=720%2C375&ssl=1

ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்!

சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில், ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு 175 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1432614

அரிசியை இலவசமாகப் பெற்ற விவகாரம்: ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா!

2 months 1 week ago

download.webp?resize=750%2C375&ssl=1

அரிசியை இலவசமாகப் பெற்ற விவகாரம்: ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா!

ஜப்பானின் விவசாய அமைச்சராக இருந்த டகு எடோ(Taku Eto) , “நான் அரிசியை வாங்குவதில்லை; ஆதரவாளர்களிடம் இருந்து இலவசமாகவே பெறுகிறேன்” எனத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்  தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஜப்பானில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த கருத்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை  ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை அவரது கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும்  கடுமையான கண்டனம்  தெரிவித்திருந்தன. அத்துடன்  தாகு எதோவை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த விவகாரம்  ஜப்பான் பிரதமர் ஷிகெரு ஈஷிபா தலைமையிலான அரசாங்கத்திற்கு  பெரும் தலைவலியாக மாறியது.

இந்நிலையில் தான் தெரிவித்த  கருத்துதவறானது எனவும், அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்த டகு எடோ, விவசாய அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஷிஞ்ஜிரோ கோயிசுமி புதிய விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1432608

மனிதாபிமான உதவிகள் இல்லை - அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

2 months 1 week ago

20 MAY, 2025 | 02:04 PM

image

மனிதாபிமான உதவிகள் இல்லாததன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயநிலை உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானவிவகாரங்களிற்கான  தலைவர் டொம்பிளெச்சர் இதனை பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் நேற்று ஐந்து டிரக்குகளில் மனிதாபிமான உதவிகள் சென்றன ஆனால் இது சமுத்திரத்தில் சிறுதுளியே இது அங்குள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முற்றிலும் போதாது என அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளிற்கான உணவு சத்துணவு ஏற்றப்பட்ட லொறிகள் காசாவில் நிற்கின்றன ஆனால் அவை எல்லையில் காத்திருப்பதால் பொதுமக்களை சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/215226

காசா விடயத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் கனடா எச்சரிக்கை!

2 months 1 week ago

New-Project-203.jpg?resize=750%2C375&ssl

காசா விடயத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் கனடா எச்சரிக்கை!

காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால், “உறுதியான நடவடிக்கைகளை” எடுப்போம் என்று இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன.

மேலும், இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு மற்றும் கனேடிய தலைவர்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய அரசாங்கத்தை “அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த” மற்றும் “உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்கவும்” அழைப்பு விடுத்தார்.

கடந்த மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள் அல்லது மருந்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலைமை பாலஸ்தீன மக்களுக்கு “பேரழிவை” ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னர் விவரித்தது.

அதேநேரம், சர் கெய்ர், இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மார்க் கார்னி ஆகியோர், 2023 ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான “கொடூரமான தாக்குதலில்” பிடிபட்ட மீதமுள்ள பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கவும் ஹமாஸுக்கு அழைப்பு விடுத்தனர்.

காசா போர் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

காசாவில் சுமார் 58 பணயக்கைதிகள் உள்ளனர், அவர்களில் 23 பேர் வரை உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஹமாஸால் நடத்தப்படும் காசாவின் சுகாதார அமைச்சகம், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையின் போது 53,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவின் அறிக்கை, போர்நிறுத்தத்திற்கான ஆதரவையும், இஸ்ரேலுடன் இணைந்து இருக்கும் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை முன்மொழியும் “இரு-நாடு தீர்வை” செயல்படுத்துவதையும் மீண்டும் வலியுறுத்தியது.

https://athavannews.com/2025/1432535

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் - ரஷ்ய ஜனாதிபதியுடன் ட்ரம்ப் 2 மணி நேர தொலைபேசி உரையாடல்

2 months 1 week ago

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும்

- ரஷ்ய ஜனாதிபதியுடன் ட்ரம்ப் 2 மணி நேர தொலைபேசி உரையாடல்

PrashahiniMay 20, 2025

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடனான 2 மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் ’‘ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் எனது 2 மணி நேர உரையாடலை நிறைவு செய்தேன். அது மிகவும் சிறப்பாக நடந்தது என நான் நம்புகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் தொடர்பாக, இன்னும் முக்கியமாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். அதற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இந்த ரத்தக்களரியான பேரழிவு முடிந்ததும், அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ரஷ்யாவுக்கு மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்க மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது. அதன் ஆற்றல் அளவில்லாதது. அதேபோல், உக்ரைனும் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில், வர்த்தகத்தில் பெரும் பயனாளியாக இருக்க முடியும். ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும்.

புதினுடனான அழைப்புக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதிஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மனி ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருக்கு நான் தகவல் தெரிவித்துள்ளேன். போப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாடிகன், இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளது. செயல்முறை தொடங்கட்டும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.thinakaran.lk/2025/05/20/breaking-news/130235/ரஷ்யா-உக்ரைன்-போர்-நிறுத/

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!

2 months 2 weeks ago

New-Project-187.jpg?resize=750%2C375&ssl

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!

பிரெக்ஸிட்க்குப் பின்னர் பல மாத பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டுள்ளன.

இது மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்குமான பயன் மிக்க ஒப்பந்தம் என்று பிரித்தானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரெக்ஸிட்டிற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் மிக முக்கியமான மறுசீரமைப்பை திங்களன்று (19) பிரித்தானியா ஒப்புக் கொண்டது.

அதன்படி, சில வர்த்தக தடைகளை நீக்கி, அதன் பொருளாதாரத்தை வளர்க்கவும் கண்டத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பாதுகாப்புத் துறையில் அது ஒத்துழைத்தது.

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் திங்களன்று (19) நடைபெறும் EU-UK உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பாதுகாப்பு, மீன்வளம் மற்றும் இளைஞர் இயக்கம் குறித்து ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

இது பிரித்தானிய நிறுவனங்கள் பெரிய EU பாதுகாப்பு ஒப்பந்தங்களில் பங்கேற்க வழி வகுத்ததாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் பிரதிநிதிகள் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொதுவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உரையைப் பெற்றனர்.

மேலும், இந்த ஆவணம் இப்போது 27 ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் திங்கட்கிழமை பிற்பகுதியில் லண்டனில் சந்திப்பார்கள்.

2020 ஜனவரியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியபோது, போரிஸ் ஜான்சன் ஆரம்ப பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டதிலிருந்து இந்தப் பேச்சுவார்த்தைகள் முதல் முறையாகும்.

Athavan News
No image previewஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!
பிரெக்ஸிட்க்குப் பின்னர் பல மாத பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டுள்ளன. இது மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்கு...

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 57பேர் உயிரிழப்பு!

2 months 2 weeks ago

New-Project-88-1.jpg?resize=600%2C300&ss

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 57பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்ற நிலையில் போகோ ஹாரம் எனும் குழு போர்னோ மாகாணம் மாளம் கராண்தி கிராமத்தில் திடீரனெ தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பெண்கள், சிறுமிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொள்ளை கும்பலால் கடத்திச் செல்லப்பட்டதுடன் மற்றொரு கிராமத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 34பேர் .உயிரிழந்துள்ளனர்.

இந்த கிராமங்களிலும் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மொத்தம் 57பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Athavan News
No image previewநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்...
நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பய...

ரஷ்யா உக்ரேன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்!

2 months 2 weeks ago

New-Project-176.jpg?resize=750%2C375&ssl

ரஷ்யா உக்ரேன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை (18) உக்ரேன் மீது போர் தொடங்கியதிலிருந்து அதன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதல் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்ததுடன், ஒரு பெண்ணின் உயிரிழப்புக்கும் வழி வகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையே போர் முடிவுக்கு வருவது குறித்து எதிர்பார்க்கப்படும் தொலைபேசி அழைப்புக்கு முன்னதாக இந்த தாக்குதல் வந்துள்ளது.

ரஷ்யா ஒரே இரவில் 273 ஷாஹெட் ட்ரோன்களை ஏவியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

முக்கியமாக மத்திய கீவ் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு 28 வயது பெண் ஒருவர் இதனால் உயிரிழந்தார்.

மேலும், 4 வயது குழந்தை உட்பட மூன்று பேர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநர் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் குறித்து திங்கட்கிழமை (19) புட்டினுடன் தொலைபேசியில் பேசுவதாக ட்ரம்ப் கூறிய நிலையில் இந்த தாக்குதல் நடந்தது.

30 நாள் போர் நிறுத்தத்திற்கான வொஷிங்டன் மற்றும் கீவ் முன்மொழிவை ரஷ்யத் தலைவர் முன்னர் புறக்கணித்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் இஸ்தான்புல்லில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த அழைப்பை அவர் நிராகரித்தார்.

இதனிடையே, புட்டினுடன் பேசும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி, புட்டினுடன் அதிகரித்து வரும் பதட்டத்தால் விரக்தியில் இருப்பதாக பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முந்தைய நாள் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பின்னர் அவர் கூறினார்.

இதற்கிடையில், கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் சனிக்கிழமை ரஷ்ய ட்ரோன்கள் தெற்கு கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகளை குறிவைத்ததால், ரஷ்ய ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று பிராந்திய இராணுவத் தலைவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 75 உக்ரேனிய ட்ரோன்களை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு நடத்தும் செய்தி நிறுவனமான டாஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2025/1432266

ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்!

2 months 2 weeks ago

New-Project-175.jpg?resize=750%2C375&ssl

ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது 82 வயதான அவரது எலும்புகளுக்கும் பரவியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகிய பைடனுக்கு, சிறுநீர் அறிகுறிகளுக்காக கடந்த வாரம் மருத்துவரைச் சந்தித்த பின்னர் வெள்ளிக்கிழமை (17) புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

புரோஸ்டேட் – புற்றுநோய் என்பது புரோஸ்டேட் சுரப்பியில்/ முன்னிற்குஞ்சுரப்பியில் உள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும், இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.

2021-2025 ஜனாதிபதி பதவிக் காலத்தில் பைடனின் உடல் ஆரோக்கியம் மற்றும் மனக் கூர்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது பைடன் தனது தோல்வியைத் தழுவியது, சக ஜனநாயகக் கட்சியினரிடையே பீதியை ஏற்படுத்திய சில வாரங்களுக்குப் பின்னர், கடந்த ஜூலை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து திடீரென விலகினார்.

ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பைடனை பலமுறை திட்டி வரும் ஜனாதிபதி ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இட்ட ஒரு பதிவில், பைடன் மற்றும் அவரது மனைவி ஜில்லுக்கு அனுதாபம் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1432251

இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் 146 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

2 months 2 weeks ago

New-Project-74-1.jpg?resize=600%2C300&ss

இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் 146 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 146 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மிகவும் கடுமையானவை என கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , இரண்டு நாள்களுக்கு முன்னர் தமது மத்திய கிழக்கு பயணத்தை நிறைவேற்றியதை அடுத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலில் மேலும் 58 பேர் கொல்லபட்டதாகவும் மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கிடையே புதையுண்டு கிடப்பதாகவும் வடக்கு காஸாவிலுள்ள இந்தோனீசிய மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தாக்குதல்களில் 459 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1432164

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு!

2 months 2 weeks ago

New-Project-76-1.jpg?resize=600%2C300&ss

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்ட நிலையில் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிசோரி மாகாணத்தில் சென்ட் லூயிஸ் (St. Louis) நகரில் மாத்திரம் சுமார் 5,000 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சூறாவளி தாக்குதலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2025/1432173

அமெரிக்க சிறைச் சாலையிலிருந்து தப்பிச்சென்ற 10 கைதிகளால் பரபரப்பு!

2 months 2 weeks ago

New-Project-70-1.jpg?resize=600%2C300&ss

அமெரிக்க சிறைச் சாலையிலிருந்து தப்பிச்சென்ற 10 கைதிகளால் பரபரப்பு!

அமெரிக்காவின் நியூ ஓர்லின்ஸ் (New Orleans) சிறைச் சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கைதிகள் நேற்றையதினம் (16) நள்ளிரவுக்குப் பின் கழிவறைச் சுவரை உடைத்துத் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறைச்சாலை சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியில் காணப்படுகின்றமையினால் இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தப்பிச் சென்ற 10 கைதிகளில் ஒன்பது பேர் ஆபத்தானவர்கள் என்றும் அவர்களிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கைதிகளை கைது செய்வதற்கு அந்நாட்டு பொலிசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தப்பிச் சென்ற கைதிகளில் சிலர் கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1432133

நியூயார்க்: புரூக்ளின் பாலம் மீது 277 பேருடன் சென்ற கடற்படை கப்பல் மோதியது - என்ன நடக்கிறது?

2 months 2 weeks ago

நியூயார்க், புரூக்ளின் பால விபத்து, மெக்சிகோ கப்பல் மோதியது

பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு,நியூயார்க்கில் புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோ கடற்படை பயிற்சிக் கப்பல் மோதி நிற்கும் காட்சி.

18 நிமிடங்களுக்கு முன்னர்

நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படையின் பயிற்சிக் கப்பல் மோதியதில் 2 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 19 பேர் காயமடைந்தனர் என்று நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மாலை மோதலுக்கு முன்பு அந்த படகில் மின்தடை ஏற்பட்டதாக எரிக் ஆடம்ஸ் கூறினார். நல்லெண்ணப் பயணமாக வருகை தந்த அந்த கப்பலில் 277 பேர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த குவாடெமோக் என்ற அந்த பயிற்சிக் கப்பல் சனிக்கிழமை மாலை புரூக்ளின் பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்தபோது அதன் உயரமான கம்பங்கள் பாலத்தின் மீது மோதியதை காட்சிகள் காட்டுகின்றன.

கம்பங்களின் சில பகுதிகள் கப்பலின் மேல்தளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மோதலின் போது சில பணியாளர்கள் கம்பங்களின் மீது நின்று கொண்டிருந்தனர் என்றும், இதனால் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "கப்பலில் இருந்த 277 பேரில், 19 பேர் காயமடைந்தனர், அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மேலும் 2 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்." என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, புரூக்ளின் பாலத்திற்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மேயர் கூறியிருந்தார்.

இந்த மோதலால் யாரும் தண்ணீரில் விழவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

22 பேர் காயமடைந்ததாக மெக்சிகோ கடற்படை ஏற்கனவே தெரிவித்திருந்தது. கப்பல் சேதமடைந்ததை உறுதிப்படுத்திய மெக்சிகோ கடற்படை, சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியது.

குவாடெமோக் பயிற்சிக் கப்பல் தனது இரண்டு கம்பங்களின் மேற்பகுதியை இழந்துவிட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நியூயார்க் கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது,

"இயந்திரக் கோளாறு" மற்றும் மின்வெட்டு காரணமாக அந்த கப்பல், பாலத்தின் ஒரு தூணில் மோதியிருக்கலாம் என்று நியூயார்க் காவல் துறை அதிகாரி கூறியுள்ளார்.

நியூயார்க், புரூக்ளின் பால விபத்து, மெக்சிகோ கப்பல் மோதியது

பட மூலாதாரம்,GETTY IMAGES

கப்பல் வருவதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், அது பாலத்தின் மீது மோதியதால் கரையில் இருந்து விரைந்து வெளியேறிவிட்டனர்.

புரூக்ளின் பாலம், மன்ஹாட்டனில் உள்ள தெற்கு தெரு துறைமுகம் மற்றும் புரூக்ளினில் உள்ள டம்போ ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களிடம் நியூயார்க் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

"விபத்து நடந்த இடத்தின் சுற்றுப்புறப் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசலையும், அவசர கால வாகனங்கள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதையும் எதிர்பார்க்கலாம்" என்று நியூயார்க் காவல் துறை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மெக்சிகோ கடற்படையின் கூற்றுப்படி, 297 அடி நீளம் (91 மீ) மற்றும் 40 அடி (12 மீ) அகலம் கொண்ட இந்தக் கப்பல், 1982 ஆம் ஆண்டு முதல் முறையாக கடலில் பயணித்தது.

ஒவ்வொரு ஆண்டும் கடற்படை இராணுவப் பள்ளியில் வகுப்புகள் முடிந்ததும் இது கடலில் பயணிக்கும்.

இந்த ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி 277 பேருடன் மெக்சிகோ துறைமுகமான அகபுல்கோவிலிருந்து புறப்பட்டதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. அதன் இறுதி இலக்கு ஐஸ்லாந்து செல்வதாக இருந்தது.

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgmj10vkxldo

10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம்

2 months 2 weeks ago

10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம்

10+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக லிபியாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. 

அத்துடன், பாலஸ்தீனியர்களை லிபியா ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.hirunews.lk/tamil/405595/10-இலட்சம்-பாலஸ்தீனியர்களை-நிரந்தரமாக-லிபியாவில்-குடியமர்த்த-ட்ரம்ப்-திட்டம்

இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்த தடை .. மகிழ்ச்சியில் ஸ்டார்மர்

2 months 2 weeks ago

இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த அறிக்கையில், இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடந்த கால அட்டூழியங்களுக்கு ஒப்புதல் மற்றும் பொறுப்புக்கூறல் தேவை என்று ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மேலும், "ஆயுத மோதலில் கொல்லப்பட்ட மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூரும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மற்றும் பிறருடன் நாங்கள் இணைகின்றோம். 

இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்த தடை .. மகிழ்ச்சியில் ஸ்டார்மர் | Pm Keir Starmer Commemorates Mullivaikkal Massacre

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 16 ஆண்டுகளைக் குறிக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு மண்டலங்கள் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மீது செல் தாக்குதல் நடத்தியது.

ஆயுத மோதல் முழுவதும், இலங்கை சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமல் ஆக்கப்படல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளைச் செய்தது மற்றும் மோதலின் இறுதி மாதங்களில் அதன் இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

கடுமையான தடை 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நால்வர் மீது எமது அரசாங்கம் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்தது. இந்த நடவடிக்கையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்த தடை .. மகிழ்ச்சியில் ஸ்டார்மர் | Pm Keir Starmer Commemorates Mullivaikkal Massacre

அத்துடன், "நீதி மற்றும் அமைதியைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகிறது" என்று ஸ்டார்மர் மேலும் கூறியுள்ளார். 

அதேவேளை, கடந்த ஆண்டு பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், 2009 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், “15ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினத்தை” நினைவுகூரும் ஒரு செய்தியை வெளியிட்டார்.  

அதில், "முள்ளிவாய்க்கால் என்பது காணாமல் போனவர்களை நினைவுகூருவதோடு, அட்டூழியங்கள் செய்தவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்”  என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை தமிழர்கள் 

மேலும், "நமது நாடு முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள் இந்த புனிதமான நாளைப் பற்றிச் சிந்திக்கும்போது, தமிழ் மக்களுக்கு நீடித்த அமைதி, நல்லிணக்கம் மற்றும் நீண்டகால அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை தொழிலாளர் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது" எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். 

இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்த தடை .. மகிழ்ச்சியில் ஸ்டார்மர் | Pm Keir Starmer Commemorates Mullivaikkal Massacre

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரியா, கடற்படைத்தளபதி வசந்த கரனாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி கருணா என அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்போருக்கு எதிராக தடைகளை விதித்தது. 

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த நால்வருக்கும் தடை விதித்தமை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

https://tamilwin.com/

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

2 months 2 weeks ago

trump.jpg?resize=720%2C375&ssl=1

 ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த  ட்ரம்ப்!

ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா? அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா? என்பதை அந்நாடே முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகின்றது. அத்துடன்  அணு ஆயுத உற்பத்தியை நிறுத்தவில்லை என்றால்  கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தொடர்ந்தும் ஈரானை எச்சரித்து வருகின்றது.

இந்நிலையில் கட்டாரின் தலைநகரான தோஹாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வணிகத் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே  ‘ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வது அல்லது வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது என இரண்டு தீர்வுகள் மட்டுமே அந்நாட்டுக்கு உள்ளன எனவும்,  பிரச்சினையை மிருகத்தனமான முறையில் அல்லாமல், புத்திசாலித்தனமான முறையில் தீர்க்கவே தாம்  விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1432005

நாமலின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கனடாவின் பிரம்டன் மேயர்

2 months 2 weeks ago

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்(Patrick Brown) தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தள பதிவு ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும், சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை ஆகும்.

ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைகள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் , ஸ்லோபடான் மிலோசோவிக், ஹென்றிச் ஹிம்லர் மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்

2 months 2 weeks ago

வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினருடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவையொட்டி 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மே 14, 2025 அன்று லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இந்த நிகழ்வு மிட்சம் மற்றும் மோர்டன் தொகுதியைச் (Mitcham and Morden) சேர்ந்த லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழுக்கான அனைத்துக் கட்சி குழுவின் தலைவருமான Dame Siobhain McDonagh தலைமையில் நடந்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம் | Tamil Tamils Mp Joins Mullivaikkal Event Uk

நிகழ்வில் Stratford and Bow தொகுதி பிரிட்டனின் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமாரன், ஈஸ்ட் ஹாம் தொகுதியைச் சேர்ந்த Rt Hon Sir Stephen Timms, Ealing North MP James Murray, ஓல்ட் பெக்ஸ்லி மற்றும் சிட்கப் தொகுதி எம்.பி. லூயி பிரென்ச் மற்றும் ருய்ஸ்லிப், நார்த்வுட் மற்றும் பின்னர் தொகுதி எம்.பி. டேவிட் சிம்மன்ட்ஸ், ஹேரோ வெஸ்ட் தொகுதி எம்.பி. காரத் தோமஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

தமிழரின் அரசியல் உரிமைகள்

மேலும் நிகழ்வில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட இயக்குநர் பிரான்சிஸ் ஹேரிசன் , இலங்கையின் சமாதானம் மற்றும் நீதிக்கான இயக்கத்தின் இயக்குநர் இவோன் ஸ்கோஃபீல்ட், Freedom from Torture அமைப்பின் Head of Accountability Roslyn Renni, Tamils for Labour அமைப்பின் தலைவர் சென் கந்தையா ஆகியோர் சமூகநீதியும், மக்களவுரிமைகளும் தொடர்பான உரைகளை நிகழ்த்தினர்.

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம் | Tamil Tamils Mp Joins Mullivaikkal Event Uk

இந்நிகழ்வில் International Tamil Youth Organisation (TYO International) ஒருங்கிணைப்பாளராக செயல்படும் மதுஷா குமரேசன், PEARL அமைப்பின் பேரவையின் வழக்குரைஞராக செயல்படும் சிவானி ரவீந்திரன் ,பிரான்சிலிருந்து ரூத் சாருகா தேவகுமார் ஆகிய இளம் தமிழ் செயல்பாட்டாளர்களும் பங்கேற்று உரையாற்றியிருந்தனர்.

நிகழ்வின் முக்கியக் கருத்தாக, நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் (TGTE) துணைப் பிரதமர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் மற்றும் TGTE உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கல் படுகொலையின் நீதி மற்றும் தமிழரின் அரசியல் உரிமைகள் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


https://tamilwin.com/

"உங்களால் உதவமுடியுமா? நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம்" பிபிசி செய்தியாளருக்கு வந்த வட்ஸ் அப் தகவல்

2 months 2 weeks ago

Published By: RAJEEBAN

15 MAY, 2025 | 01:43 PM

image

உங்களால் உதவமுடியுமா நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம் என்ற வட்ஸ்அப் செய்தியொன்று கடந்த வாரம் தனக்கு அனுப்பப்பட்டதாக பிபிசியின்செய்தியாளர் அலைஸ் ஹடி தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

"உங்களால் எனக்கு உதவமுடியுமா? நாங்கள் காசாவில் வசிக்கின்றோம் உள்ளே மரணித்துக்கொண்டிருக்கின்றோம் நானும்  எனது பிள்ளைகளும் ஏனைய சிறுவர்களும் மிக மோசமான மனிதாபிமான நிலையில் இருக்கின்றோம்"

இதுவே அய்மன் என்ற நபரிடமிருந்து கடந்த வாரம் எனக்கு கிடைத்த வட்ஸ் அப் செய்தி. அவர் காசாவின் தென்பகுதியில் உள்ள ஹான் யூனிசில் வசிக்கின்றார்.

இஸ்ரேலின் முற்றுகைதொடர்கின்ற நிலையில் குடும்பத்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

காசாவிற்குள் செல்வதற்கு சர்வதேச செய்தியாளர்களிற்கு அனுமதியில்லை இதன் காரணமாக ஆகவே காசாவில் சிக்குண்டுள்ள மக்களுடன் கையடக்க தொலைபேசி வட்ஸ் அப் மூலமாக மாத்திரம் என்னால் தொடர்புகொள்ள முடியும்.

தொடர்ந்து அனுப்பிய வட்ஸ் அப் செய்தியில் அய்மன் யதார்த்தம் என்பது விளக்கங்களிற்கு அப்பாற்பட்டது என குறிப்பிட்டார்.

நான் சொல்வதை நம்புங்கள் நாங்கள் அனுபவிக்கும் பசியின் கொடுமையால் என்னால் நகரகூட முடியாதுள்ளதுகடவுள் அருள் புரிந்தால் ஒரு வீடியோவை தயாரித்து நான் உங்களிற்கு அனுப்புவேன் என அவர் தெரிவித்தார்.

காசாவில் மக்கள் இணையசேவைக்ககான மின்சாரத்தை பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுவதால் வட்ஸ் அப் மூலம் தொடர்புகொள்வதும் கடினமான விடயம்.

https://www.virakesari.lk/article/214795

கத்தார் சொகுசு விமானத்தை டிரம்ப் பரிசாக ஏற்க முடியுமா?

2 months 2 weeks ago

வெள்ளை மாளிகை "ஒரு விமானத்தை வாங்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு விமானத்தைப் பெறலாம்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜேக் ஹார்டன் , டாம் எட்கிங்டன், ஜோஷுவா சீதம்

  • பதவி, பிபிசி வெரிஃபை

  • 15 மே 2025, 09:55 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தாரிடம் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானத்தை, தனது நிர்வாகம் பரிசாக ஏற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது "ஒரு சிறப்பான செயல்" என்று பாராட்டியுள்ள டிரம்ப், இப்படிப்பட்ட பரிசை நிராகரிப்பது "முட்டாள்தனமாக" இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சில உறுப்பினர்கள், டிரம்பின் இந்த முடிவை "முழுமையாக சட்டவிரோதமானது" என்று விமர்சித்துள்ளனர்.

வெள்ளை மாளிகை இதை முற்றிலும் மறுக்கிறது. மேலும், டிரம்பை ஆதரிக்கும் சிலரும் இதைப் பற்றிய விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

விமானம் குறித்த செய்திகள் "தவறானவை" எனவும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன எனவும் கத்தார் முன்பு கூறியது.

தற்போது கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நேரத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

அதிபர்கள் பரிசுகளை ஏற்றுக்கொள்வது சட்டப்பூர்வமானதா என்பதைக் குறித்து பிபிசி வெரிஃபை ஆராய்ந்தது.

விமானம் குறித்த தகவல்கள்

ஞாயிற்றுக்கிழமையன்று கத்தார் அரச குடும்பத்திடமிருந்து ஒரு போயிங் ஜம்போ ஜெட் விமானத்தை டிரம்ப் நிர்வாகம் ஏற்க திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த விமானம் மறுசீரமைக்கப்பட்டு, அதிபர்கள் பயணிக்கும் விமானமாக அறியப்படும் "ஏர் ஃபோர்ஸ் ஒன்" எனும் பெயரில் தற்காலிகமாக பயன்படுத்தப்படும் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டார். அந்தப் பதிவில், "பாதுகாப்புத்துறை 40 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை தற்காலிகமாக மாற்றுவதற்காக, மிகவும் வெளிப்படையான மற்றும் பொதுவான பரிவர்த்தனையாக 747 விமானத்தை இலவசமாகப் பெறுகிறது." என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "இது கத்தாரின் சிறந்த செயல். நான் அதை மிகவும் பாராட்டுகிறேன். இதுபோன்ற சலுகையை நான் ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன்" என்று டிரம்ப் கூறினார்.

கடந்த பிப்ரவரியில், இரண்டு புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜெட் விமானங்களை போயிங் நிறுவனத்திலிருந்து நேரடியாக பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தைப் பற்றி, "போயிங் குறித்து நான் மகிழ்ச்சி அடையவில்லை" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலாக, வெள்ளை மாளிகை "ஒரு விமானத்தை வாங்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு விமானத்தைப் பெறலாம்" என்றும் கூறியுள்ளார்.

பாம் பீச்

படக்குறிப்பு,டிரம்ப் பிப்ரவரியில் பாம் பீச்சில் விமானத்தை சுற்றிப்பார்த்தார்

மேலே உள்ள படத்தில் காணப்படும் கத்தார் விமானம் பிப்ரவரியில் புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் படம் பிடிக்கப்பட்டது. அங்கு டிரம்ப் அந்த விமானத்தை நேரில் பார்வையிட்டார்.

2015-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விவரக்குறிப்பு சுருக்கத்தின்படி, அந்த விமானத்தில் மூன்று படுக்கையறைகள், தனிப்பட்ட ஓய்வு அறை மற்றும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானம் கத்தார் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும் அது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்படும் என ஒரு கத்தார் அதிகாரி சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இதற்கு பல ஆண்டு காலம் ஆகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, டிரம்ப் பதவிக்காலத்தின் முடிவை நெருங்கும் வரை அந்த விமானம் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை எனக் கணிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறிய பிறகு அந்த விமானம் நேரடியாக அவரது அதிபர் காப்பகத்துக்கு அனுப்பப்படும் என்றும், அதிபர் பதவி முடிந்த பிறகு "அதை பயன்படுத்த மாட்டேன்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

ஆயினும், இந்த நடவடிக்கை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் லாரா லூமர் போன்ற நீண்ட கால டிரம்ப் ஆதரவாளர்களிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது

"இது உண்மையாக இருந்தால், இந்த நிர்வாகத்தின் மீது இது ஒரு பெரும் களங்கமாக இருக்கும்," என லூமர் கூறினார்.

டொனால்ட் டிரம்ப்

இந்தப் பரிசு சட்டப்பூர்வமானதா?

இந்த பரிசை ஏற்றுக்கொள்வது சட்டவிரோதமானது என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் கூறியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனடர் ஆடம் ஷிஃப், அமெரிக்க அரசியலமைப்பின் ஒரு பிரிவை மேற்கோள் காட்டியுள்ளார்.

அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தலைவரும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வெளிநாட்டுத் தலைவரிடமிருந்து "எந்தவொரு பரிசையும்... எந்த வகையிலும்" ஏற்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்த விதி அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் ரீதியில் லஞ்சம் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது" என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர் ஃபிராங்க் கோக்லியானோ.

"இது நிச்சயமாக அரசியலமைப்பின் எல்லைகளை மீறுகிறது. இந்த அளவிலோ அல்லது இது போன்ற ஒரு பரிசையோ நாங்கள் கண்டதில்லை" என்று லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்புச் சட்ட நிபுணர் பேராசிரியர் ஆண்ட்ரூ மோரன் கூறுகிறார்.

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் .

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரொனால்ட் ரீகனின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் போயிங் 707, 2003 இல் அவரது அதிபர் காப்பகத்துக்கு மாற்றப்பட்டது.

1966ஆம் ஆண்டின் வெளிநாட்டு பரிசுகள் மற்றும் அலங்காரச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள், வெளிநாட்டு பரிசுகளை ஏற்கும் விதிமுறைகளை வகுத்துள்ளன.

இந்தச் சட்டங்களின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு மேற்பட்ட பரிசுகளை ஏற்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியமாக கருதப்படுகின்றது.

தற்போது, 480 டாலர் குறைவான மதிப்புடைய பரிசுகளை அமெரிக்க அதிகாரிகள் ஏற்க அனுமதிக்கப்படுகின்றனர்.

விமானம் இறுதியில் தனது "காப்பகத்துக்கு" செல்லும் என டிரம்ப் கூறியிருந்தாலும், தனது அருங்காட்சியக அறக்கட்டளைக்கு செல்லும் என்பதையே டிரம்ப் இப்படி குறிப்பிட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

பொதுவாக தங்களுடைய ஆவணங்களை சேமிக்கும் நூலகத்தையும் (காப்பகம்), நினைவுச் சின்னங்களால் நிரம்பிய அருங்காட்சியகத்தையும் முன்னாள் அதிபர்கள் வைத்திருப்பார்கள். இவை பொதுவாக தனியார் நன்கொடைகளால் நிதியளிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகின்றது.

விமானம் நேரடியாக அதிபருக்கு வழங்கப்படாமல், முதலில் அரசு நிர்வாகத்துக்கு தரப்பட்டு பின்னர் அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டாலும், இது அரசியலமைப்பை மீறுவதைத் தவிர்க்க முடியாது என்று பிபிசி வெரிஃபையுடன் பேசிய நிபுணர்கள் கூறினர்.

கரோலின் லீவிட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எந்தவொரு நன்கொடையும் எப்போதும் சட்டத்திற்கு உட்பட்டே பெறப்படும் என்று கரோலின் லீவிட் கூறினார்

வாஷிங்டனில் உள்ள சிட்டிசன்ஸ் ஃபார் ரெஸ்பான்சிபிலிட்டி அண்ட் எதிக்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜோர்டான் லிபோவிட்ஸ், டிரம்ப் பதவியிலிருந்து விலகிய பிறகு அந்த விமானத்தை பயன்படுத்தினால் அது எல்லையை மீறுவதாக இருக்கும் என கூறினார்.

"ரீகனின் ஏர் ஃபோர்ஸ் ஒன் அவரது அதிபர் காப்பகத்தில் வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் உள்ளது. அந்த விமானம் செயலிழக்கப்பட்டது. ரீகன் அதில் மீண்டும் பயணம் செய்யவில்லை. எனவே அது அருங்காட்சியகப் பொருளாக வைக்கப்படுகின்றது."என்றார்.

விமானத்தை ஏற்றுக்கொள்வது ஏன் சட்டப்பூர்வமாக இருக்க முடியும் என்பதை விளக்கும் ஒரு ஆவணத்தை அமெரிக்க நீதித்துறை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த ஆவணம் இன்னும் பொது வெளிக்கு அளிக்கப்படவில்லை.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டிடம் விமானத்தை பெறுவதில் உள்ள சட்டபூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "இதற்கான சட்ட விவரங்கள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நிச்சயமாக, இந்த அரசாங்கத்திற்கு செய்யப்படும் எந்த நன்கொடையும் முழுமையாக சட்டப்படி செய்யப்படுகிறது" என்றார்.

மத்திய கிழக்கில் டிரம்பின் குடும்பம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

அமெரிக்காவுக்கான முதலீட்டை அதிகப்படுத்தும் நம்பிக்கையில் அதிபர் டிரம்ப் செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அதிபரின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியரால் நிர்வகிக்கப்படும் டிரம்ப் அமைப்பால் பல வணிக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, டிரம்பின் இந்த பயணம் அமைந்துள்ளது

இதில் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோல்ஃப் மைதானங்கள் மற்றும் சொகுசு குடியிருப்புகள் கட்டும் திட்டங்களும் உள்ளன.

ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டிரம்ப் தனது வணிக நிர்வாகப் பொறுப்புகளை மகன்களுக்கு ஒப்படைத்தார்.

எரிக் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எரிக் டிரம்ப் மே 1 அன்று துபையில் இருந்தார்

மே மாதத் தொடக்கத்தில், டிரம்ப் அமைப்பால் ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. கத்தாரின் தலைநகரான தோகாவின் வடக்கே ஆடம்பர கோல்ஃப் மைதானமும், சொகுசு குடியிருப்புகளும் கட்டுவதற்கான ஒப்பந்தம் அது.

"கத்தாரி டயர் மற்றும் டார் குளோபல் ஆகியோருடன் இணைந்து டிரம்ப் பிராண்டை கத்தாரில் விரிவுபடுத்துவதைப் பற்றி நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம்" என்று அச்சமயத்தில் எரிக் டிரம்ப் தெரிவித்தார்.

டார் குளோபல் என்பது சௌதி அரசின் பொதுக் கட்டுமான நிறுவனம். கத்தாரி டயர் என்பது கத்தார் அரசுக்கு சொந்தமான நிறுவனம்.

"துபையின் மையத்தில் 80 தளங்களைக் கொண்ட, "ஆடம்பர வாழ்க்கை மற்றும் உலகத்தரமான விருந்தோம்பலுடன் பிராந்தியத்தின் முதல் டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் & டவர்" கட்டப்படும் என ஏப்ரல் 30 அன்று டிரம்ப் அமைப்பு அறிவித்தது.

எரிக் டிரம்ப் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்தார். மே 1ம் தேதி அன்று நடைபெற்ற டோக்கன் 2049 என்ற கிரிப்டோகரன்சி மாநாட்டில் அவர் பேசினார்.

டிரம்ப் இந்த பயணத்தின் போது தனது குடும்ப வணிகத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்ட போது, அதிபர் தனது தனிப்பட்ட நலனுக்காக எதையும் செய்வதாகக் கூறுவது "அபத்தமானது" என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பதிலளித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgq8ep2rn0o

Checked
Sat, 08/02/2025 - 17:39
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe