உலக நடப்பு

கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!

5 hours 19 minutes ago
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்! கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!

அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கனவாகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையினான பயண நேரத்தை 1 மணிநேரமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு  விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. . இதற்கு முன்பு இது போன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார்.

ஆனால் தற்போது அவருக்கு சொந்தமான போரிங் கம்பெனி சுரங்கப்பாதை அமைப்பதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளதால் தனது கனவை நனவாக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1413381

செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

5 hours 23 minutes ago
செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது.

அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

எனினும், அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அந்த நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானிகள் மேற்கொண்ட பணி என்ன என்பதை விவரிக்கவில்லை.

1200 பேரைக் கொன்று 250 பேரை பயணக் கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்குப் பின்னர் 2023 ஒக்டோபரில் காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100 வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுத்திகள் குறிவைத்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைப்பதாக ஹவுத்திகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஹவுத்திகளை குறிவைத்து அமெரிக்கா செங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனது வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1413449

பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?

20 hours 53 minutes ago
நெல்சன் அமென்யா, கென்யா, அதானி,

பட மூலாதாரம்,GETTY IMAGES/AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், எஸ்தர் கஹூம்பி
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது.

கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது. யார் அவர்? இதனால் ஏற்பட்ட சர்ச்சை என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

யார் அந்த மாணவர்?

தனியார் நிறுவனங்களுக்கும் அரசிற்கும் இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார் நெல்சன் அமென்யா.

கென்யாவின் சமீபத்திய வரலாறு. ஊழல் நடவடிக்கைகளால் உருவான பெரியபெரிய ஒப்பந்தங்களால் நிறைந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்க சட்டங்கள் இருந்தாலும், தொடர்ந்து இத்தகைய ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது.

பிரான்ஸில் தற்போது எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும் 30 வயதான அமென்யா, இந்திய பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்திற்கும் கென்ய அரசுக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் என்று சில ஆவணங்களை அவர் ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.

 

இது அந்த நாட்டின் மிகப்பெரிய, அந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய விமான நிலையமான ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் தொடர்புடையது. மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறது அந்த விமான நிலையம்.

"இதனை முதன்முறையாக பார்த்த போது, மற்றொரு அரசாங்க ஒப்பந்தம் என்று தான் நினைத்தேன். அந்த விவகாரத்தின் தீவிரம் எனக்கு தெரியவில்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தார் அமென்யா. ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவருடைய பிம்பம் உயர்ந்து வருகிறது.

அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஜோமோ விமான நிலையத்தை புதுப்பித்து, நிர்வாகம் செய்வதற்கான குத்தகை ஒப்பந்த முன்மொழிவு அது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை அதானி குழுமம் முன்மொழிந்திருந்தது.

தொடர்ந்து அந்த ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது கென்யாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் இந்திய பன்னாட்டு நிறுவனமே அனைத்துவிதமான லாபத்தையும் சம்பாதிக்கும் என்றும் அவர் உணர்ந்திருந்தார்.

இது ஒரு நியாயமான முன்மொழிவாக அவருக்கு தெரியவில்லை. அவர் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்ததை படித்த போது, அதிகமாக முதலீடு செய்தாலும் கூட, கென்யாவால் அதில் நிதிசார் லாபம் ஈட்ட முடியாத வகையில் அது இருந்ததாக கூறுகிறார் அமென்யா.

அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து பேசிய போது, அது நிச்சயமாக உண்மையானது என்று கூற தனக்கு காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். "இந்த ஆவணங்கள் அரசின் அதிகாரப்பூர்வ துறைகளில் இருந்து எனக்கு கிடைத்தன," என்று அவர் தெரிவித்தார்.

நெல்சன் அமென்யா, ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம், அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜோமோ விமான நிலைய ஊழியர்கள், அந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
நான் கொஞ்சம் பயந்தேன் - அமென்யா

அதானி குழுமம் இஸ்ரேல், அமீரகம், ஃபிரான்ஸ், தன்சானியா, ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் , உள் கட்டுமானம், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறைகளில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் நிறுவனர் கௌதம் அதானி இந்தியாவின் முக்கிய தொழிலதிபராக திகழ்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவராகவும் அவர் அறியப்படுகிறார்.

தன்னுடைய முதலீட்டை அதானி குழுமம் 30 ஆண்டுகளில் ஈட்ட முடியவில்லை என்றால், அந்த இழப்பை கென்யா ஈடுகட்ட வேண்டும் என்கிற வகையில் ஒப்பந்தம் இருப்பதை அமென்யா கண்டறிந்தார்.

"அதிபர், கென்ய விமானத்துறை, அமைச்சர் போன்றோர் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மக்களை ஏமாற்றிவிட்டனர்," என்று அவர் குற்றம்சாட்டினார்.

தனது கையில் உரிய ஆவணங்கள் இருந்த போதிலும் அடுத்து செய்வதறியாது தடுமாறினார் அமென்யா. அவரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. கென்யாவில் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் பலரும் கடந்த காலத்தில் தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டனர்.

"நான் கொஞ்சம் பயந்தேன். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய பணியை, வாழ்க்கையை நான் பணயம் வைக்கிறேன். நான் அப்படி செய்ய வேண்டும்?" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல என்று உணர்ந்திருக்கிறார்.

"கோழைகள் தான் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமே" என்கிறார் அவர்.

அவருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களை அவர் முழுமையாக ஆராய்ந்த பிறகு, அமென்யா அந்த ஆவணங்களை அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றினார். அது கென்யாவில் பெரும் போராட்டத்திற்கு வழிவகை செய்தது.

ஜோமோ விமான நிலைய ஊழியர்கள், அந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்சன் அமென்யா, ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம், அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 30 ஆண்டுகள் ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தி, நிர்வகிக்க அதானி குழுமம் திட்டமிட்டிருந்தது
மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறவில்லை

"இதனை நான் என் நாட்டிற்கு செய்யும் கடமையாக நினைத்தேன். நான் என் நாட்டில் இருந்து தொலை தூரத்தில் இருந்தாலும் கூட, என் நாட்டிற்காக நான் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. நான் கென்யா முன்னேறிய நாடாக, ஊழலற்ற நாடாக, தொழில்மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதை நான் பார்க்க வேண்டும்" என்று பிபிசியிடம் கூறினார் அமென்யா.

அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதற்கான சமிக்ஞை தானா இந்த விமான நிலைய ஒப்பந்தம் என்று தான் கவலைப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

அதானி குழுமத்தின் ஒப்பந்தமானது வழக்கத்திற்கு மாறான விதிமுறைகளைக் கொண்டிருந்தது. வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்ததால் தான் அது ஒரு எச்சரிக்கையாக மாறியது. அதில் கென்யாவின் சட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்தது என்றும் குற்றம் சாட்டுகிறார் அமென்யா.

"இந்த அதிகாரிகள், அதானி குழுமம் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. கொள்முதல் செயல்முறைகளையும் அவர்கள் முறையாக பின்பற்றவில்லை."

வரி செலுத்துவோரின் பணம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வகை செய்யும். பொது கருத்துக் கேட்பு கூட்டம் உட்பட சட்ட தேவைகளை, இந்த விவகாரத்தில் தவிர்த்துவிடலாம் என்று சில அரசு அதிகாரிகள் நம்பியதாகவும் குற்றம்சாட்டுகிறார் அவர்.

கென்ய விமான நிலைய ஆணையம் ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாக, பங்குதாரர்களுடன் ஆலோசிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.

"இது ஏப்ரல் மாதத்தில் நடந்தது. ஜூலை மாதத்தில் நான் இந்த ஆவணங்களை வெளியிட்டேன். அந்த திட்டம் தொடர்பாக எந்த பொது கருத்துக் கேட்புக் கூட்டமும் நடைபெறவில்லை. அப்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக ஒரே ஒரு மாதம் மட்டுமே இடைவெளி இருந்தது," என்கிறார் அமென்யா.

"நான் இந்த ஆவணங்களை வெளியிட்டவுடன், அவசர அவசரமாக போலியாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றை நடத்த முயன்றனர். அவர்கள் கென்ய விமான நிலைய ஆணையத்தின் ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர்," என்றார் அவர்.

அதானி குழுமம் கூறியது என்ன?

கென்யாவில் பல அரசு அதிகாரிகளும், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளும், இந்த ஒப்பந்த செயல்முறைகளில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.

அதானி குழுமத்தினரும் அமென்யாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறுகிறது.

"கென்யாவில் அரசு மற்றும் தனியார் துறை இடையிலான ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றியே திட்டம் முன்மொழியப்பட்டது. உலக தரத்திலான விமான நிலையத்தை உருவாக்குவதும், பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி கென்ய பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்துவதுமே அதானி குழுமத்தின் நோக்கம்" என்று பிபிசியிடம் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆலோசனைகள் ஒப்பந்தமாக இறுதி வடிவம் பெறவில்லை என்பதால் அங்கே ஒப்பந்தம் ஏதும் கையெழுத்திடப்படவில்லை என்று அதானி குழுமம் கூறுகிறது.

எரிசக்தி தொடர்பான மற்றொரு முன்மொழிவும் ஆலோசனை கட்டத்தில் தான் இருக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது.

"குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளில் கென்ய சட்டங்களை மீறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கிறோம்," என்று அதானி குழுமம் கூறியது.

இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், "எங்களின் ஒவ்வொரு திட்டத்தையும், இணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை முழுமையாக பின்பற்றி அர்பணிப்புடன் நிர்வகிக்கின்றோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

நெல்சன் அமென்யா, ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம், அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எந்த சட்ட நடைமுறைகளையும் மீறவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது அதானி குழுமம்
அமெரிக்காவின் பங்கு

ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டை கென்ய அரசு மாற்றிக் கொள்வதற்கு அமென்யா மட்டும் காரணமில்லை.

அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த பிறகே கென்யா நடவடிக்கையைத் துவங்கியது.

அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் அமெரிக்க அதிகாரிகள்முன் வைத்த குற்றச்சாட்டை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்தனர்.

கடந்த நவம்பர் மாதம், கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, அதானி குழுமத்துடனான இரண்டு திட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "முறைகேடு தொடர்பான மறுக்கமுடியாத ஆதாரங்கள் அல்லது நம்பிக்கைக்குரிய தகவல்கள் இருக்கின்ற போது, நான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கமாட்டேன்," என்று ரூட்டோ கூறினார்.

விசாரணை முகமைகள் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக ரூட்டோ அறிவித்ததை கென்ய மக்கள் கொண்டாடினார்கள்.

"இந்த அறிவிப்பு வந்த போது நான் வகுப்பில் இருந்தேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை," என்று அமென்யா கூறினார்.

"எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்" என்று அவர் கூறினார்.

அவரை ஒரு ஹீரோவாக உணரவில்லை என்று கூறுகிறார். அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல குறுஞ்செய்திகள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து குவிந்தன.

நெல்சன் அமென்யா, ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம், அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது
அமென்யா என்ன செய்கிறார்?

வகுப்பு முடிந்து நாற்பது நிமிடங்கள் கழித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "அடியோஸ் அதானி" என்ற புகழ்பெற்ற பதிவை பதிந்தார் அமென்யா.

"அது ஒரு முக்கியமான தருணம்… நான் செய்த பணிகளுக்கு பலன் கிட்டியது"

பல தனிப்பட்ட ரீதியிலான அழுத்தங்களை பல மாதங்கள் எதிர்கொண்ட பிறகே இந்த வெற்றியை உணர்ந்தேன்.

அதானியின் விமான நிலைய ஒப்பந்த ஆவணங்களை வெளியிட்ட பிறகு அதானி குழுமமும் கென்ய அரசியல்வாதி ஒருவரும் அமென்யா மீது மானநஷ்ட வழக்கை தொடுத்தனர். தொடர்ந்து இந்த தளத்தில் இயங்குவதா என்ற கேள்வியை அவருக்குள் அது எழுப்பியது.

"அரசாங்கத்திடம் இருந்து ஒரு சிலர் என்னிடம் வந்தனர். அவர்கள் எனக்கு பணம் தரவும் முன்வந்தனர். ஆனால் அவர்கள் என்னிடம் வந்து, இந்த பணத்தை வாங்கிக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்," என்று நினைவு கூறினார் அமென்யா.

அதை நான் செய்திருந்தால் அது மிகப்பெரிய தவறாக இருந்திருக்கும். அது கென்ய மக்களை ஏமாற்றும் செயல் என்றார்.

"விமான நிலையம் தரம் உயர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தியவர்களை அவர்கள் கொண்டாடுவதை நான் பார்த்தேன். அவர்கள் ஹீரோக்களா? உங்கள் நாட்டில் விமான நிலையம் வர இருப்பதை தடுப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?" என்று டிசம்பர் மாதம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ கூறினார்.

"அது எப்படி கட்டப்படும் என்பது பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. இந்த விமான நிலையத்தில் கால் வைக்காதவர்கள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதையாவது எதிர்க்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

மற்றொரு புறம், அமென்யா இன்னும் மான நஷ்ட வழக்குகளை எதிர் கொண்டு வருகிறார். சட்ட உதவிகளுக்காக அவர் நிதி திரட்டிவருகிறார். கென்யாவில் அவருக்கு எதிர்காலம் இருக்குமா என்பது நிச்சயமற்றது என்றும் அவர் கூறினார்.

"உளவுத்துறைகளிடம் இருந்தும் அச்சுறுத்தல்கள் வந்தன. நான் செய்தது தொடர்பாக பலர் அங்கே கோபத்துடன் உள்ளனர் என்பதால் கென்ய மக்கள் நான் மீண்டும் அங்கே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்," என்று அமென்யா தெரிவிக்கிறார்.

நியாயமான செயலுக்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக கூறும் அமென்யா, "நம்மை காப்பாற்ற ஒருவர் வருவார் என்று நாம் காத்துக் கொண்டிருக்க தேவையில்லை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

1 day 15 hours ago

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

ஒரு குழந்தை மரணமானதாகவும் 15 பேர்வரை படுகாயமடைந்ததாகவும் 68 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு டாக்ரர் என சந்தேகிக்கப்படுகிறது.

https://www.cnn.com/world/live-news/magdeburg-germany-christmas-market-deaths-12-20-24/index.html

 

உக்ரைனில் உள்ள ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதம்!

1 day 17 hours ago

உக்ரைனில் உள்ள ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதம்!
%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா இன்று காலை நடத்திய தாக்குதல் காரணமாக ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது 

அல்பேனியா, அர்ஜென்டினா, வட மெசிடோனியா, பலஸ்தீன், போர்த்துக்கல் மற்றும் மொன்டெனெக்ரின் ஆகிய நாடுகளின் இராஜதந்திர நிலையங்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளன 

உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதல்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 

இந்தத் தாக்குதலில் மேலும் எழுவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 

இதன் காரணமாக கட்டடங்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன 

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக உக்ரைன் முழுவதும் வான்வழி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

https://www.hirunews.lk/tamil/391363/உக்ரைனில்-உள்ள-ஆறு-இராஜதந்திர-நிலையங்கள்-சேதம்

எம்.எச்.370 விமானத்தின் மர்மம் நீங்குமா ? 10 ஆண்டுகளின் பின் மீண்டும் விமானத்தை தேடும் பணி

1 day 17 hours ago

எம்.எச்.370 விமானத்தின் மர்மம் நீங்குமா ? 10 ஆண்டுகளின் பின் மீண்டும் விமானத்தை தேடும் பணி
%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.370+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE+%3F++10+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF+

விமான வரலாற்றில் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றான 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பயணிகள் விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மலேஷிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசியன் விமான சேவைக்கு சொந்தமான எம்.எச்.370 என்ற விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் பயணித்த வேளை மர்மமான முறையில் காணாமல் போனது.

பயணத்தை ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்ததுடன், விமானம் வழமையான பாதையில் இருந்து விலகி சென்றமை பதிவாகி இருந்தது.

கடந்த பல ஆண்டுகளாக காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை வெற்றி கிட்டவில்லை.

இந்த நிலையில், விமானத்தினை மீண்டும் தேடும் பணிகளுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்பினிட்டீசுடன் 7 கோடி டொலருக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக, இன்று மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

புதிய தேடுதல் நடவடிக்கைகள் இந்து சமுத்திரத்தின் தெற்கு பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்ட 15 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.hirunews.lk/tamil/391364/எம்-எச்-370-விமானத்தின்-மர்மம்-நீங்குமா-10-ஆண்டுகளின்-பின்-மீண்டும்-விமானத்தை-தேடும்-பணி

'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி

2 days 2 hours ago
சிரியா கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா

பட மூலாதாரம்,HAYAT TAHRIR AL-SHAM

படக்குறிப்பு, சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அகமது அல்-ஷாராவிடம் பிபிசி பேசியது கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெரேமி போவென்
  • பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி நியூஸ்

சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ, தங்கள் நாட்டால் அச்சுறுத்தல் இல்லை என்றும், சிரியாவின் தற்போதைய தலைவர் அகமது அல்-ஷாரா கூறியுள்ளார்.

சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்தப் பேட்டியில், சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை முந்தைய ஆட்சியை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களையும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டவர்களையும் ஒரே மாதிரியாக நடத்தக்கூடாது," என்று அல்-ஷாரா கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், சிரிய முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத்தின் ஆட்சியைக் கவிழ்த்த திடீர் தாக்குதல்களுக்கு ஷாரா தலைமைத் தாங்கினார்.

அகமது அல்-ஷாரா, கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) தலைவர். முன்பு அவர் அபு முகமது அல்-ஜொலானி எனும் பெயரால் அறியப்பட்டார்.

 

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அகமது அல்-ஷாரா தெரிவித்தார்.

கடந்த 2016 இல் அல்-கொய்தாவிலிருந்து பிரிந்துவந்து தொடங்கப்பட்ட குழுவாக, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு அறியப்படுவதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. உட்பட பல சர்வதேச அமைப்புகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஒரு பயங்கரவாத குழு அல்ல என்று ஷாரா கூறினார்.

அக்குழுவைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களையோ அல்லது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையோ குறிவைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். முந்தைய அசத் ஆட்சியில் நடந்த குற்றங்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக அக்குழுவினர் கருதுகின்றனர்.

சிரியா, அகமது

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஒரு பயங்கரவாத குழு அல்ல என்று ஷாரா கூறினார்
பெண் கல்வி பற்றி கருத்து

மேலும், சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற அவர் விரும்புவதாகக் கூறப்படும் கருத்தையும் மறுத்தார்.

ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான கலாசாரங்களுடன் வித்தியாசமானவை என அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகமாக இருந்தது. சிரியாவில், வித்தியாசமான மனநிலை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை தான் நம்புவதாக அவர் கூறினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப் பற்றி குறிப்பிடுகையில், "எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன," என்று ஷாரா கூறினார்.

அதுகுறித்து மேலும் பேசிய அவர், "பல்கலைக்கழகங்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்." என்றும் அவர் குறிப்பிட்டார்.

அகமது அல்-ஷாரா

பட மூலாதாரம்,HTS

படக்குறிப்பு, சிரிய மக்களுள் பலர் அகமது அல்-ஷாராவை நம்பவில்லை
மது அருந்துவது குறித்து என்ன கூறினார்?

மேலும், மது அருந்துவது அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "பல விஷயங்கள் சட்ட ரீதியானவை என்பதால் அதைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்லை" என்று ஷாரா தெரிவித்தார்.

"அரசியலமைப்பை இயற்றுவதற்கு சிரிய சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று உள்ளது. இந்த குழு சட்ட ரீதியான பிரச்னைகள் குறித்து முடிவு செய்யும். எந்த ஆட்சியாளரோ அல்லது அதிபரோ, அந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

ஷாரா நேர்காணல் முழுவதும் நிதானமாக இருந்தார். குடிமக்கள் அணியும் உடைகளை அணிந்திருந்தார். மேலும், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, அதன் கடந்த கால பயங்கரவாதத்திலிருந்து விலகவில்லை என நம்புபவர்களுக்கு, `அது உண்மையில்லை' என்று உறுதியளிக்க அவர் முயன்றார்.

சிரிய மக்களுள் பலர் அவரை நம்பவில்லை.

அடுத்த சில மாதங்களில், சிரியாவின் புதிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், சிரியா எந்த மாதிரியான நாடாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் எப்படி ஆட்சி செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றிய சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன?
19 DEC, 2024 | 08:58 AM
image

சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய கிளர்ச்சிக்குழு கலைக்கப்படும் என அந்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சிரிய கிளர்ச்சிகுழு கலைக்கப்படும் அதன் உறுப்பினர்கள் சிரிய இராணுவத்தில் இணைக்கப்படுவார்கள் என எச்டிஎஸ் அமைப்பின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார்.

அனைவரும் சட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் பல்லின சமூகத்தை கொண்ட நாட்டில் ஐக்கியம் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா ஐக்கிய தேசமாக தொடரவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சமூக நீதி நிலவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிரிய அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவேண்டும் என்றால் சிரியா மீதான சர்வதேச தடைகள் நீங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/201616

உக்ரேன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் - ரஷ்யா

2 days 6 hours ago

20 DEC, 2024 | 10:08 AM

image
 

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரேன் மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரேனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் வழங்கி, பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடுகளான சீனா உள்ளிட்டவை ஆதரவாக செயல்படுகின்றன.

தற்போது உக்ரேனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரேனும், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்ய - உக்ரேன் இடையேயான போர் இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் சமீபத்தில் இருநாடுகள் இடையேயான மோதல் சற்று குறைந்திருந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக மீண்டும் மோதல் வலு பெற்றுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, பிரித்தானியா தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரேன், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது தான் காரணம். இதனால் கோபமான ரஷ்யா, உக்ரேன் மீதும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் மோதல் மீண்டும் தீவிரமானது. இதற்கிடையே தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்ட்  ட்ரம்ப் போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போதே, தான் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் வந்து இருக்காது. இருப்பினும் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை என்னால் நிறுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தேர்தலில் வென்ற பிறகு உக்ரேன், ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

https://www.virakesari.lk/article/201708

பிரித்தானியத் தொழில் அமைச்சர் பங்களாதேஷில் ஊழல் மோசடி!

2 days 6 hours ago

பிரித்தானியத் தொழில் அமைச்சர் பங்களாதேஷில் ஊழல் மோசடி!
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%21

பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். 

பங்களாதேஷில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் ஊடாக அவரது குடும்பத்தினர் 3.9 பில்லியன் பவுண்ட்கள் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பிரித்தானிய திறைசேரியின் பொருளாதார செயலாளராக நாட்டின் நிதிச் சந்தைகளில் ஊழலைக் கையாள்வதற்கான பொறுப்பை வகித்தபோது அவர், 

2013ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான ஒப்பந்தம் ஊடாக பங்களாதேஷின் அணுமின் நிலையமொன்றுக்கான செலவினை அதிகரிக்கப்படுத்தியதாக துலிப் சித்திக் மீது குற்றம் சாட்டப்படுகிறது. 

பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட துலிப் சித்திக்கின் உறவினரான ஷேக் ஹசீனா மீது பங்களாதேஷின் ஊழல் தடுப்பு ஆணைக்குழு நடத்திய விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 

இதனிடையே, குறித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் மற்றும் ஷேக் ஹசீனாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய அமைச்சர் துலிப் சித்திக் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

https://www.hirunews.lk/tamil/391299/பிரித்தானியத்-தொழில்-அமைச்சர்-பங்களாதேஷில்-ஊழல்-மோசடி

ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி

2 days 15 hours ago

ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி
ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்களம் கண்டுள்ள சமார் 100க்கும் மேற்பட்ட வடகொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் இன்று தெரிவித்துள்ளார்.

“டிசம்பரில், வட கொரிய துருப்புக்கள் போரில் ஈடுபட்டதாகவும், இதன் போது குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்,” என்று தென் கொரியாவின் உளவு நிறுவனம் அளித்த விளக்கத்திற்குப் பின்னர் லீ தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான தனது போர் முயற்சிகளுக்கு உதவ ரஷ்யா சுமார் 10,000 வட கொரிய வீரர்களை நியமித்ததாக மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் படைகளின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா, குர்ஸ்க் பகுதி உட்பட ரஷ்யப் படைகளை வலுப்படுத்த வட கொரிய துருப்புக்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும, “காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று லீ மேலும் கூறினார்.

இந்நிலையில், ரஷ்யாவில் இழப்புகள் இருந்தபோதிலும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஒரு புதிய சிறப்பு நடவடிக்கைப் படைக்கு பயிற்சி அளிக்கத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

இறந்த வட கொரிய வீரர்களின் முகங்களை ரஷ்யா எரிக்கிறதா?

குர்ஸ்க் பிராந்தியத்தின் முன்னணியில் உள்ள பல கிராமங்களில் ரஷ்யாவிற்காகப் போராடும் வட கொரிய துருப்புகள் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாகவும் கடந்த திங்களன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அளவிலான வட கொரிய இழப்புகளை உக்ரைன் விவரித்தது இதுவே முதல் முறை ஆகும்.

உயிரிழந்த வடகொரிய துருப்புகளின் உடல் குர்ஸ்க் பகுதியில் அடக்கம் செய்வதற்கு முன்பு அவர்களின் அடையாளங்களை மறைக்க ரஷ்ய வீரர்கள், உயிரிழந்தவர்கள் முகங்களை எரிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் தெரிவித்திருந்தார்.

ரஷ்யா, வட கொரிய வீரர்களின் இருப்பை மறைக்க முயற்சிப்பதாகவும், பயிற்சி மற்றும் தயாரிப்புகளின் போது கூட அவர்கள் தங்கள் முகங்களைக் காட்டுவதைத் தடை செய்வதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர், வட கொரியப் படைகளிடையே கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் தகவல்கள் அமெரிக்காவிடம் இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

 

https://oruvan.com/100-north-korean-soldiers-killed-fighting-for-russia/

சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி

3 days 1 hour ago
சிரியாவின் செட்னயா சிறையில் ரகசிய அறை இருந்ததா என்பது குறித்து அக்குழு விசாரணை நடத்திவருகிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஹுசம் அசல்
  • பதவி, பிபிசி அரபு சேவை, அமான் நகரிலிருந்து

சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், ஜோர்டானியரான பஷீர் அல்-படாய்னே, 38 ஆண்டுகளாக சிரியாவில் காணாமல் போன தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி சரிந்த பிறகு, ஜோர்டானின் இர்பிட்டை சேர்ந்த 83 வயதான பஷீர் அல்-படாய்னே, தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

கடந்த 1986ஆம் ஆண்டு, ஒசாமா தனது பள்ளியின் கடைசி ஆண்டைத் தொடங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் ஒரு வாரம் சிரியாவுக்கு சென்றிருந்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை. ஒசாமா காணாமல் போய் 38 ஆண்டுகள் ஆகின்றன. பஷீர் தனது மகனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் அன்றிலிருந்து தொடர்ந்து தேடி வருகிறார்.

 
'எலும்புக்கூடு போல் இருந்தார்'

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அல்-படாய்னேவும் அவரது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த செய்தியை அவர் கேள்விப்பட்டார்.

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள செட்னயா சிறையிலிருந்து ஒரு நபர், "நான் இர்பிட்டை சேர்ந்தவன்" என்று கூறி சிறையிலிருந்து வெளியேறும் காணொளி வெளிவந்தது.

பின்னர் ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம், ஜோர்டான் நாட்டவரான ஒசாமா, சிரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஜோர்டான் திரும்பினார் என அறிவித்தது. அந்த நபர் தனது நினைவுகளை இழந்திருந்தார்.

அதன் பிறகு, அதிகாரிகள் இர்பிட்டில் விடுவிக்கப்பட்ட கைதிக்கும் அல்-படாய்னே குடும்பத்தினருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். "அவர் என் கையை நீண்டநேரம் பிடித்து முத்தமிடத் தொடங்கினார்," என்று அல்-படாய்னே பிபிசியிடம் கூறினார்.

ஒசாமாவின் தோற்றத்தை "ஒரு எலும்புக்கூடு" என்று அல்-படாய்னே விவரித்தார். மேலும் "அவர் நினைவாற்றலை இழந்துவிட்டார் என்றும் ஒசாமாவின் தோற்றம் அதிர்ச்சியளிப்பதாகவும், அவருடைய எல்லா அம்சங்களும் மாறிவிட்டன" என்றும் அல்-படாய்னே தெரிவித்தார்.

ஒசாமா, தனது தாயின் பெயரைக் குறிப்பிட்டது, பழைய குடும்பப் புகைப்படங்களில் தன்னை அடையாளப்படுத்தியது ஆகியவற்றை ஒசாமாவின் சகோதரி பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் அப்போதுதான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

ஜோர்டான் சிரியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜோர்டானும் சிரியாவும் 360 கி.மீ தொலைவிலான நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன

அந்த நபர் ஜோர்டானிய தலைநகர் அம்மானில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் மூலம், அவருக்கும் அல்-படாய்னே குடும்பத்திற்கும் இடையே எந்த மரபணு உறவும் இல்லை என்பது தெரிய வந்தது.

சமூக ஊடகங்களில் பல முரண்பாடான கருத்துகள் எழுந்ததால், அந்த மனிதரின் அடையாளத்தைச் சுற்றி நிச்சயமற்ற தன்மை வளரத் தொடங்கியது.

அந்தக் காணொளியில் இருப்பவர், சிரியாவில் உள்ள டார்டஸ் நகரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர்கள் ஒன்றாகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் முகநூலில் ஒருவர் கூறினார்.

மேலும், அந்த நபர் டார்டஸ் கிராமப்புறப் பகுதியில் உள்ள கஃப்ரூன் சாதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், "1986இல் பெய்ரூட்டில் இருந்து, சிரிய உளவுத்துறையால் கடத்தப்பட்டதாகவும்" அவர் குறித்துப் பேசிய மற்றொரு பெண், முகநூலில் கூறினார்.

மரபணு பரிசோதனை
செட்னயா சிறைச்சாலை

பட மூலாதாரம்,WHITE HELMETS

படக்குறிப்பு, செட்னயா சிறைச்சாலை, மனித உரிமைக் குழுக்களால் "மனிதப் படுகொலை கூடம்" என்று குறிப்பிடப்படுகிறது

லெபனான் தலைநகரில் இருந்து கடத்தப்பட்டு சிரிய சிறைக்கு மாற்றப்பட்டதாக நம்பும் ஹபீப் சாதே எனப்படும் தனது உறவினரைப் போல் அந்த நபர் இருப்பதாக கேடலினா சாதே கூறுகிறார்.

தனது தாத்தாவின் சகோதரரான சாதே, சிரிய அரசின் மீது குற்றம் சுமத்திய பல்லாயிரக்கணக்கான மக்களைத் தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோசமான ராணுவ வளாகமான செட்னயா சிறையில், இருப்பதாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்திற்குச் செய்தி வந்ததாகவும் அவர் கூறுகிறார்.

அந்த நபர், கைது செய்யப்பட்டு காணாமல் போன தங்கள் உறவினர்தான் என்பதை மரபணு பரிசோதனை மூலம் நிரூபிக்க முடியும் என்றும் அந்தக் குடும்பத்தினர் நம்புகின்றனர்.

"காணாமல் போன அந்த நபர், தற்போது ஜோர்டானில் உள்ளார். ஜோர்டான் அதிகாரிகளிடம் சோதனை முடிவுகளைச் சமர்பிப்போம். காஃப்ரூன் சாதே கிராமத்தில் வசிக்கும் எங்கள் தாத்தாவிடம் இருந்து பரிசோதனைக்காக ஒரு மரபணு மாதிரி எடுக்கப்படும்" என்றும் பிபிசியிடம் சாதே தெரிவித்தார்.

"சகோதரரைக் கண்டுபிடித்தால், தன் தாத்தா நிம்மதியாக இருப்பார்" என்றும் அவர் கூறினார்.

ஜோர்டானுக்கு திரும்பிய கைதியுடன் சென்ற முன்னாள் ஜோர்டானிய தொழிலாளர் துறை அமைச்சர் 'நெடல் அல்-படாய்னே' பேசியபோது, விடுவிக்கப்பட்ட அந்தக் கைதி, காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினராக இருக்கலாம் என்று எண்ணிய நபர்களிடம் இருந்து தனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாகக் குறிப்பிட்டார்.

தாங்கள் அந்த நபருடன் தொடர்புடையவர்கள் என நம்பும் குடும்பங்கள், மரபணு பரிசோதனை செய்து, சோதனை முடிவுகளை அனுப்புமாறு நெடல் கேட்டுக் கொண்டார்.

செட்னயா சிறையில் உள்ள ஒரு ரகசிய அறை, பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு படம் பிடிக்கப்பட்டது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, செட்னயா சிறையில் உள்ள ஒரு ரகசிய அறை, பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு படம் பிடிக்கப்பட்டது

இதற்கிடையில் விடுவிக்கப்பட்ட அந்த நபர், ஜோர்டானில் உள்ள பஷ்தாவியின் உறவினர் 'அகமது' என்று காசிம் பஷ்தாவி மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

அவரது உறவினர் அகமது, லெபனானில் கடத்தப்பட்டு சிரியாவுக்கு மாற்றப்பட்ட ஒரு பாலத்தீன போராளி என்று பஷ்தாவி பிபிசியிடம் கூறினார்.

கடந்த 1995ஆம் ஆண்டில், அகமது, செட்னயா சிறையில் இருப்பதாக, விடுவிக்கப்பட்ட கைதி ஒருவர் அவர்களது குடும்பத்தினரிடம் கூறினார். சிறையில் அவரைக் கண்டறிய முயன்றபோது, சிரியாவில் உள்ள பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் பஷ்தாவி கூறினார்.

அந்த நபர் காணாமல் போன தங்கள் உறவினரா, இல்லையா என்பதை அறிய மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பஷ்தாவி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

'கடவுளின் கருணைக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்'
செட்னயா சிறைச்சாலை
படக்குறிப்பு, செட்னயா சிறைச்சாலை

விடுவிக்கப்பட்ட அந்த கைதிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று மரபணு சோதனை முடிவில் தெரிய வந்தபோது, அவரைத் தனது மகன் ஒசாமா என்று நினைத்திருந்த அல்-படாய்னே குடும்பத்தினர் விரக்தி அடைந்தனர்.

"எங்களால் எதுவும் செய்ய முடியாது, நாங்கள் கடவுளின் கருணைக்காக காத்திருக்கிறோம்," என்று ஒசாமாவின் சகோதரர் முகமது அல்-படாய்னே பிபிசியிடம் கூறினார்.

மகனைப் பற்றிய தகவல்களைப் பெற தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அவரது தந்தை மேற்கொண்டார். மகனை நினைத்து ஏங்கி, அந்த சோகத்தின் காரணமாக, அவரின் தாய் தனது கண் பார்வையை இழந்தார். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாய் இறந்துவிட்டார் என்றும் அல்-படாய்னேவின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

"அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, நாங்கள் அவரைத் தேடுவதை நிறுத்தவில்லை, அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதைக் கண்டறிய சிரியாவில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ள முயல்கிறோம்," என்றும் முகமது அல்-படாய்னே கூறினார்.

செட்னயா சிறையில் உள்ளவர்களின் உடல்கள் அமிலத்தில் கரைக்கப்படுவதாக ஊடகங்களில் பரவும் கதைகள் குறித்துக் கவலை அடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், அவரது குடும்பத்தினர் தங்களது நம்பிக்கையைக் கைவிட மறுத்து, காணாமல் போன தங்கள் உறவினரைத் தொடர்ந்து தேடத் திட்டமிட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

பயங்கரவாதிகளின் கைகளில் சிரியா; மௌனம் கலைத்த சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி

3 days 20 hours ago

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியது. அதிபர் பஷார் அசாத் ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருவதுடன், அதைக் கொண்டாடியும் வருகின்றனர்.

மேலும், சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் திகதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தப்பிச் சென்ற பஷார் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு ரஷ்யா அரசாங்கம் அடைக்கலம் தந்துள்ளது. இந்த நிலையில், தப்பிச் சென்ற அசாத் முதல்முறையாக சிரியா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில்,

“என்னைப் பொறுத்தவரை கிளர்ச்சியாளர்களை எதிர்த்துச் சண்டையிடத்தான் விரும்பினேன். நான் சிரியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பவில்லை. அதேபோல், என் பதவியை ராஜினாமா செய்து, இன்னொரு நாட்டிடம் தஞ்சமடைய கோர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.

நாடு தற்போது பயங்கராவதிகளின் கைகளில் சிக்கி உள்ளது. தனிப்பட்ட ஆதாயத்துக்காக நான் ஒருபோதும் பதவியை விரும்பவில்லை. சிரியா மக்களின் நம்பிக்கையுடன் அவர்களால் ஆதரிக்கப்படும் பாதுகாவலராக நான் இருப்பதாகக் கருதுகிறேன். சிரியா மீண்டும் சுதந்திரமாகச் செயல்படும்” என அதில் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. அபாயகரமான ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கையில் போவதை தடுக்கும் வகையில் சிரியா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. அதாவது, சிரியாவைக் கைப்பற்றியிருக்கும் கிளர்ச்சிப் படையினருக்கு அந்த ஆயுத தளவாடங்கள் கிடைத்து, அதன் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறிவருகிறது.

குறிப்பாக, சிரியாவிலுள்ள ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. மிகவும் சக்திவாய்ந்த அந்தத் தாக்குதலின் அதிா்வுகள் அருகிலுள்ள நிலநடுக்க ரிக்டா் அளவுகோல்களில் பதிவாகின. இஸ்ரேல் நிலநடுக்கவியல் ஆய்வு மையத்தில் 3.1 அலகுகளாக இது பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதல், கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிரியாவில் நடத்தப்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த தாக்குதலாகும் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நாட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை இனியும் நியாயப்படுத்த முடியாது என்று கிளா்ச்சிப் படையின் தலைவா் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/313879

4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்கள்?

4 days 1 hour ago
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களே மனிதர்களை கொன்று தின்றார்களா ?

பட மூலாதாரம்,RICK SCHULTING

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்
  • பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர்

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாமர்செட் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 37 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும், அவர்களை மனிதர்களே உண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டனில் வெண்கலக் காலத்தின் ஆரம்பம் மிகவும் அமைதியானதாக இருந்த நிலையில், இதுதான் அந்தக் காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர்களின் எலும்புகள் 1970களில் குகைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் இந்த எலும்புகளை வீசி எறிந்திருக்கலாம் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்தச் சம்பவம் 'பழிவாங்கும்' நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் எனவும், இதன் விளைவுகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் எதிரொலித்ததாகவும் கூறுகிறார், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிக் ஷூல்டிங்.

இந்த வன்முறையில் இறந்தவர்களை "மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்கும் நோக்கிலும்" சடலங்களை "அவமதிக்கும் நோக்கிலும்" ஒரு சடங்காக உட்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

 
எத்தனை பேர் உயிரிழந்தனர்?

மூவாயிரத்திற்கும் அதிகமான எலும்புத் துகள்கள் சாமர்செட் பகுதியில் மெண்டிப் ஹில்ஸ் என்ற இடத்தில் சார்டர் வாரன் எனப்படும் குகையில் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வாராய்ச்சியாளர்களால் சோதனை செய்யப்பட்டது.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என 37 பேர் உயிரிழந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்தக் காலத்தில் பிரிட்டனில் இருந்த கிராமங்களில் பெரும்பாலும் 50 முதல் 100 பேர் வரை வாழ்ந்து வந்தனர் என்றும் இந்தத் தாக்குதல் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிவின் விளிம்பில் தள்ளியிருக்கும் என்றும் தெரிவித்தனர்.

பிரிட்டனில் வெண்கல காலம் கி.மு. 2500-2000 முதல் கி.மு. 800 வரை நீடித்தது. இந்தக் காலகட்டத்தில்தான் மனிதர்கள், ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்கள் கல்லில் செய்யப்படுவதற்குப் பதிலாக வெண்கலத்தில் செய்யப்படத் தொடங்கினர். புதுப்புது விவசாய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன, பெரிய மற்றும் நிரந்தரமான நிலங்கள் பிரிக்கப்பட்டன.

கல்லால் ஆன ஆயுதங்களால் தாக்குதல்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களே மனிதர்களை கொன்று தின்றார்களா ?

பட மூலாதாரம்,RICK SCHULTING

படக்குறிப்பு, கடுமையான வன்முறைச் செயல்களில் கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன

இந்தத் தாக்குதல் திடீரென நடத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் எந்தவித பதில் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்று தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு வல்லுநர்கள் தெரிவித்தனர்.

எலும்புகளில் காணப்படும் கீறல்கள் மற்றும் வெட்டுகள் ஆகிய அடையாளங்கள், தாக்குதல் நடத்தியவர்கள் வேண்டுமென்றே கல்லால் ஆன ஆயுதங்களைக் கொண்டு மனிதர்களைத் துண்டுகளாக வெட்டிச் சாப்பிட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

"இந்த அடையாளங்களை ஒரு விலங்கின் எலும்பில் பார்த்திருந்தால், சந்தேகமே இன்றி இரைச்சிக்காக இவை வெட்டப்பட்டுள்ளன என்பதைக் கூறிவிடுவோம்," என்கிறார் பேராசிரியர் ஷூல்டிங்.

தாக்குதல் நடத்தியவர்கள் மனிதர்களை பசி மற்றும் பஞ்சம் காரணமாக உண்ணவில்லை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஏனென்றால், அருகில் இருந்த விலங்குகளின் எலும்புகள் போதுமான உணவு இருந்ததை உறுதி செய்கிறது.

இதுதான் இந்தக் காலகட்டத்தில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட பெரியளவிலான வன்முறை நிகழ்வு.

உறவுச் சிக்கலால் நிகழ்ந்ததா?
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களே மனிதர்களை கொன்று தின்றார்களா ?

பட மூலாதாரம்,RICK SCHULTING

படக்குறிப்பு, இதிலுள்ள கீறல்கள், உறுப்புகள் துண்டிக்கப்பட்டதைக் காட்டுகிறது

அந்தக் காலத்தில், வளங்களுக்கான தேடலில்தான் வன்முறை உருவானது என்பதை நிரூபிக்க மிகக் குறைந்த ஆதாரங்களே உள்ளன.

இதனால், உறவுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தகுந்த முறிவுதான் இந்த வன்முறைக்கு அடிப்படையான காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

"கோபம், பயம், மனக்கசப்பு போன்ற காரணங்களால் தூண்டப்பட்டால் மட்டும்தான் ஒரு மனிதரை இப்படி பல்வேறு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்ய முடியும்," என்று கூறுகிறார் ஷூல்டிங்.

"இதை ஒரு தனிநபர் செய்யவில்லை. ஒரு சமூகத்தை அழிக்க மற்றொரு சமூகம் ஒன்றுகூடி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்," என்றார் ஷூல்டிங்.

"இது தவறு என்று நினைத்தீர்கள் என்றால், இதற்காக நீங்கள்தான் ஏதாவது செய்திருக்க வேண்டும். சட்டத்திடம் சென்று நியாயம் கேட்க முடியாது," என்றார் ஷூல்டிங்.

இந்த விஷயத்தில் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இரண்டு பக்கமும் வன்முறையை அதிகரிக்கும் ஆட்கள் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமடைந்து இருக்கும்.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களே மனிதர்களை கொன்று தின்றார்களா ?

பட மூலாதாரம்,RICK SCHULTING

பிரிட்டனில் வெண்கல காலத்தின் தொடக்கம் பெரும்பாலும் அமைதியான வன்முறையற்ற காலமாகவே கருதப்பட்டது. ஏனெனில் தாக்குதல்களுக்கான ஆதாரம் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டது.

வாள் அல்லது கோட்டைப் பாதுகாப்பு போன்ற அமைப்பு எதுவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னர் இந்தக் காலகட்டத்தில் வெறும் 10 பேர் மட்டுமே இதுபோன்ற வன்முறைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதாக அறியப்பட்டிருந்தது, என்றார் ஷூல்டிங்.

வரலாறு வன்முறை மிகுந்ததா?
1970 களில் சாமர்செட்டில் உள்ள குகைகளில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன

பட மூலாதாரம்,ANTONY AUDSLEY

படக்குறிப்பு, கடந்த 1970களில் சாமர்செட்டில் உள்ள குகைகளில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன

இது ஒருமுறை மட்டுமே நடந்த தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்தச் சம்பவத்திற்கு பின்விளைவுகள் இருந்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.

"ஏதோ ஒரு கட்டத்தில் மக்கள் அனைவரும் இந்த வன்முறையில் இருந்து பின்வாங்கி, சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளனர்," என்றார் ஷூல்டிங்.

ஆனால், இதற்காகவே கடந்த காலம் வன்முறை மிகுந்து இருந்ததாக எண்ணிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் ஷூல்டிங்.

"வெண்கல காலத்தைத் தாண்டி மனிதனின் இயற்கை குணத்தைப் பற்றி அறிய இது நமக்கு வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன்," என்றார் அவர்.

இந்த ஆராய்ச்சி 'ஆன்ட்டிக்விட்டி' (antiquity) ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’

4 days 5 hours ago

‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’ Screenshot-2024-12-17-190357.png

வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று டிசம்பர் 16ஆம் திகதி தொலைபேசிவழி பேசிய அவர், தாம் கடந்த பல ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ள இத்தகைய ஐந்து மனிதக் குவியல் புதைகுழிகளில் சிரியா தலைநகருக்கு 40 கிலோமீட்டர் வடக்கே உள்ள அல் குட்டேஃபா பகுதியும் ஒன்று என்றார்.

“இந்த ஐந்து இடங்களைத் தவிர வேறு பல மனிதக் குவியல் புதைகுழிகளும் நிச்சயம் இருக்கும். அவற்றில் சிரியா நாட்டு மக்களைத் தவிர அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்னும் வேறு பல வெளிநாட்டவரும் இருப்பார்கள்,” என்றார் முஸ்தஃபா.

முஸ்தஃபாவின் குற்றச்சாட்டுகளை ராய்ட்டர்ஸ் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

தமது ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக திரு அசாத் பேரளவில் சிவில் போர் தொடுத்து வந்ததில் 2011ஆம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

மனித உரிமை மீறல்களைத் தமது அரசாங்கம் செய்யவில்லை என்று திரு அசாத் தொடர்ந்து மறுத்து வந்ததுடன் தமது எதிராளிகளைத் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டார்.

அசாத் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றதை அடுத்து முஸ்தஃபா சிரியாவைச் சென்றடைந்தார்.

சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்தோரின் உடல்கள் இராணுவ மருத்துவமனைகளிலிருந்து வெவ்வேறு உளவுத்துறை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு பின்னர் மனிதக் குவியல் புதைகுழி ஒன்றுக்கு மாற்றப்படும் என்றும் இதற்கு சிரியா ஆகாயப் படையின் உளவுத்துறைப் பிரிவு பொறுப்பாக இருந்தது என்றும் முஸ்தஃபா பேட்டியின்போது கூறினார்.

பாதுகாப்பற்ற இந்தப் புதைகுழி இடங்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்று கவலை தெரிவித்த திரு முஸ்தஃபா, விசாரணைக்கு ஆதாரங்களைக் காக்க வேண்டும் என்றார்.

 

https://akkinikkunchu.com/?p=303657

இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!

4 days 7 hours ago
இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா! இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மெஸ்கோவின் சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது பணிப்பாளரான Andrey Kaprin அண்மையில் ரஷ்ய வானொலியில் இந்த தகவலை வெளியிட்டதாக அந் நாடு அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் TASS செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தடுப்பூசியானது புற்றுநோயைத் தடுப்பதற்காக பொது மக்களுக்கு வழங்கப்படுவதற்குப் பதிலாக, புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும்.

மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்படும் புற்றுநோய் தடுப்பூசிகளைப் போலவே, ஒவ்வொரு நோயாளிக்கும் தடுப்பூசி தனிப்பயனாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தடுப்பூசி எந்த வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும், எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும், அது எவ்வாறு வழங்கப்படும் என்பது போன்ற விடயங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

ரஷ்யாவில் புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. 2022 இல் மாத்திரம் 635,000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் மனித பாப்பிலோமா வைரஸ்களுக்கு (HPV) எதிரான தடுப்பூசிகள் போன்ற புற்றுநோயைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட தடுப்பூசிகள் சந்தையில் ஏற்கனவே உள்ளன.

அமெரிக்காவில், புளோரிடா பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் மூளை புற்றுநோய்க்கான தனிப்பயனாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை பரிசோதித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1412741

ஹிஜாப் அணியவில்லையாம்.. யூடியூப்பில் பாடிய பாடகிக்கு ஈரான் கொடுக்கும் தண்டனை.. நீதித்துறை அறிவிப்பு

5 days 4 hours ago

டெஹ்ரான்: ஈரானை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதி ஆன்லைன் கான்சர்ட் நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று ஈரான். இஸ்லாமிய நாடாக அறியப்படும் இந்த நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

பெண்கள் பொதுவெளியில் நடமாடும்போது ஹிஜாப் அணிய வேண்டும். மேலும் இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஈரான் நாட்டை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதிக்கு ரசிகர்கள் உள்ளனர். கடந்த 11ம் தேதி பரஸ்து அஹமதி ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். பரஸ்டு அஹமதி உடன் மொத்தம் 4 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
இதில் பரஸ்டு அஹமதி கருப்பு நிற ஆடை அணிந்து ஹிஜாப் அணியாமல் பாடல்கள் பாடியுள்ளார். முன்னதாக அந்த வீடியோவில், அவர், ‛‛நான் பரஸ்டு. எனக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால் நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துகிறேன்'' என்று கூறியிருந்தார். அதாவது ஈரான் நாட்டில் பொதுவெளியில் பெண்கள் பாட அனுமதியில்லை. அதேபோல் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக உள்ளது. இருப்பினும் ஈரானின் இந்த உத்தரவை பரஸ்டு அஹமதி விரும்புவது இல்லை. இதனால் தான் அவர் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் ஹிஜாப் அணியாத காரணத்தினால் மாஷா அமினி என்ற பெயர் கொண்ட பெண் போலீஸ் கஸ்டடியில் இறந்தார். இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெண்களை கொதிப்படைய வைத்தது. அப்போது அதனை எதிர்த்து பரஸ்டு அஹமதி பாடல் பாடியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது பரஸ்டு அஹமதி விவகாரம் ஈரானில் சர்ச்சையாகி உள்ளது. இதுபற்றி ஈரான் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. நீதித்துறை சார்பில் மிஷான் ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‛‛பாடகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி அவர் மீது அவரது இசைக்குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்''என்று கூறியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/international/iranian-singer-who-performed-without-hijab-to-face-appropriate-action-says-judiciary-department-662997.html

சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்!

5 days 5 hours ago
சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்! சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைமுறைக்கு வரவிருந்த மிகவும் சர்ச்சைக்குரிய “ஹிஜாப் மற்றும் கற்பு சட்டம்” அமலாக்கத்தை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) இடைநிறுத்தியுள்ளது.

சட்டத்திற்கு எதிராக உள்நாட்டு, சர்வதேச கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த திடீர் இடைநிறுத்தம் வந்துள்ளது.

சட்டம் தெளிவற்ற நிலையில் உள்ளதாக கூறியுள்ள ஈரானிய ஜனாதிபதி சூத் பெசெஸ்கியன் (Masoud Pezeshkian), அதை நடைமுறைப்படுத்துவதற்கு சீர்திருத்தம் அவசியம் என்றும் விவரித்தார்.

இதன் விளைவாக குறித்த சட்டமூலம் மறுபரிசீலனைக்கு உட்படவுள்ளது.

பொது வெளியில் தலைமுடி, முன்கைகள் அல்லது கீழ் கால்களை முழுமையாக மறைக்கத் தவறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அபராதம், 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை குறித்த சட்டமானது முன்மொழிந்தது.

அதேநேரம், இது மனித உரிமை ஆர்வலர்களால் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

பல தசாப்தங்களாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆட்சியாளர்களால் தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாகக் கருதப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்பட்ட கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் முன்பு எதிர்ப்புகளைத் தூண்டின.

புதிய சட்டத்தின் கீழ் அந்த கட்டுப்பாடுகளானது மேலும் இறுக்கம்மாக்கப்படுவதுடன், அதனை மீறும் நபர்களுக்கு எதிராக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராத விதிப்பினையும் கட்டாயப்படுத்தும்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ஹிஜாப் விவகாரத்தில் ஈரானியப் பெண்களை நடத்துவதை அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான பெஜேஷ்கியன் வெளிப்படையாக விமர்சித்தார்.

ஹிஜாப் விவகாரத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.

2022 ஆம் ஆண்டிலிருந்து ஈரானில் ஹிஜாபைச் சுற்றியுள்ள பதட்டங்கள் அதிகமாகவே உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பல இளம் ஈரானியப் பெண்கள், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில், பொது இடங்களில் தங்கள் ஹிஜாப்களை மீறி அகற்றியுள்ளனர்.

ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமான கடும்போக்கு பிரிவுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், கடந்த வாரம், 300 க்கும் மேற்பட்ட ஈரானிய உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் புதிய ஹிஜாப் சட்டத்தை “சட்டவிரோதமானது மற்றும் செயல்படுத்த முடியாதது” என்று பகிரங்கமாக கண்டித்தனர்.

மேலும், ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளை மதிக்குமாறும் பெசேஷ்கியனை வலியுறுத்தியுள்ளனர்.

https://athavannews.com/2024/1412619

ரஷ்ய கதிரியக்க பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவர் கொலை

5 days 5 hours ago

 

ரஷ்ய கதிரியக்க பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவர் கொலை

December 17, 2024  11:54 

ரஷ்ய பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவர் கொலை

 
ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகினர்.

ரஷ்யாவின் கதிரியக்க வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரிலோஃப் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=197417

 

பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்!

5 days 15 hours ago

பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்!
%E0%AE%AA%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+25+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21

பதவியிலிருந்து விலக்கப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக் காலத்தில், சுமார் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக 'பைனான்சியல் ரைம்ஸ்' விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு பகுதியில் இந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. 

100 டொலர் நாணயங்கள், மற்றும் 500 யூரோ நோட்டுக்களைக் கொண்ட தொகுதியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் விபரங்கள் தெரிவிக்கின்றன. 

ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த பணத்தொகை, மொஸ்க்கோவில் உள்ள வங்கியில் வைப்பிடப்பட்டன.

இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள அசாத்தின் உறவினர்கள், ரகசியமாக சொத்துக்களை வாங்கியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணபரிமாற்றல்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டதற்கு இது நல்லதொரு உதாரணம் என 'பைனான்சியல் ரைம்ஸ்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை,கடந்த 2011 ஆம் ஆண்டு சிரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெற்றன. 

இந்த போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவத்தின் பலத்தை அவர் உபயோகித்தார். 

அந்த காலகட்டத்தில் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.hirunews.lk/tamil/390949/பஷர்-அல்-அசாத்தின்-ஆட்சியில்-25-கோடி-அமெரிக்க-டொலர்கள்-ரஷ்யாவிற்கு-எடுத்துச்-செல்லப்பட்டுள்ளதாக-தகவல்

மயோட்டியில் சூறாவளி: நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

5 days 15 hours ago

மயோட்டியில் சூறாவளி: நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
December 16, 2024

சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சிடோ சூறாவளி மணிக்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து சென்றதுடன், மயோட்டியை முழுவதுமாக தரைமட்டமாக்கியது.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மடகாஸ்கருக்கு வடக்கே பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தைத் தாக்கிய மிகத் தீவிரமான புயலாக மயோட்டி மீது சூறாவளி வீசியதாக பிரான்ஸ் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

பிரெஞ்சு உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லியோ குறைந்தது 11 பேர் சூறாவளி தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக ஆரம்பத்தில் -கூறினார்.

பின்னர், இறப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக மயோட் அதிகாரிகளின் தகவல்களை மேற்கொள்ளிட்டு AFP செய்திச் சேவை கூறியுள்ளது.

ஆனால் உள்ளூர் ஊடகங்களுடன் பேசிய தீவின் அரசியற் தலைவர் Francois-Xavier Bieuville, ‍‍சூறாவளி தாக்கத்தினால் மயோட்டி முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று கூறினார்.

இதனிடையே, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மாயோட் மக்களுக்கு பிரான்ஸ் “உடன் இருக்கும்” என்றும் 250 மீட்புப் பணியாளர்களை அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மடகாஸ்கரின் வடமேற்கில் அமைந்துள்ள மயோட் ஒரு முக்கிய தீவு, கிராண்ட்-டெர்ரே மற்றும் பல சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும்.

தீவின் 300,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் உலோக தகரங்களைக் கொண்ட கூரைகளையுடைய குடிசைகளில் வாழ்கின்றனர்.

இந்த நிலையில் சூறாவளி தாக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

மின்சாரம், தண்ணீர் மற்றும் இணைய இணைப்புகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

பாரிஸில் உள்ள அரசாங்கம் பொருட்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுடன் ஒரு இராணுவ போக்குவரத்து விமானத்தை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சனிக்கிழமை (14) காலை சூறாவளி முழு பலத்துடன் தாக்குவதற்கு முன்பே, மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாகவும், கட்டிடங்களின் கூரைகள் தூக்கி ஏறியப்பட்டதாகவும், மின் கம்பிகள் சாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

1934 ஆம் ஆண்டிலிருந்து தீவு இதுபோன்ற கடுமையான அனர்த்த நிலைமையை சந்தித்ததில்லை என்று உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
 

https://www.ilakku.org/மயோட்டியில்-சூறாவளி-நூற/

Checked
Sun, 12/22/2024 - 12:59
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe