டிரம்ப் வைச்சான் பாரு ஆப்பு இந்தியாவுக்கு.
டிரம் இந்தியாவில் ஆப்பிள் கைபேசிகளை தயாரிக்க அமெரிக்க விருப்பவில்லை என அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்
டிரம் இந்தியாவில் ஆப்பிள் கைபேசிகளை தயாரிக்க அமெரிக்க விருப்பவில்லை என அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்
உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை; பங்கெடுக்காத ட்ரம்ப், புட்டின்.
மூன்று ஆண்டுகளில் மொஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையிலான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் வியாழக்கிழமை (15) குறிப்பிட்டனர்.
அதற்கு பதிலாக கிரெம்ளின் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை அனுப்பியது.
ஞாயிற்றுக்கிழமை, “எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல்” இஸ்தான்புல்லில் உக்ரேனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த புட்டின் முன்மொழிந்தார்.
புதன்கிழமை (14) தாமதமாக, கிரெம்ளின் குழுவில் ஜனாதிபதி ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறியது – ஆனால் புட்டினின் பெயர் பட்டியலில் இல்லை.
கிரெம்ளினின் தூதுக்குழு அறிவிப்புக்குப் பின்னர், மத்திய கிழக்கில் மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
பங்கேற்பதற்கான விருப்பத்தை பரிசீலித்து வருவதாக அமெரிக்கத் தலைவர் முன்னதாகவே கூறியிருந்தார்.
பேச்சுவார்த்தையில் புட்டின் நேரில் கலந்து கொள்வார் என்று ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் இல்லாதது, 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போரில் ஒரு பெரிய திருப்புமுனைக்கான எதிர்பார்ப்புகளைக் குறைக்கிறது.
உக்ரேன் அல்லது ரஷ்யாவை விட அமைதியை அதிகம் விரும்பும் ட்ரம்பிற்கு காட்டும் ஒரு வெளிப்படையான போட்டியில், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “அவர் பயப்படவில்லை என்றால்” பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு புட்டினுக்கு சவால் விடுத்தார்.
புதன்கிழமை இரவு ஜெலென்ஸ்கி துருக்கிக்குச் சென்றிருந்தபோது, புட்டின் கலந்து கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்பேன் என்று அவர் கூறியதாக உக்ரேன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதன்கிழமை தனது இரவு காணொளி உரையில், புட்டினின் பங்கேற்பு குறித்து தெளிவு ஏற்பட்டவுடன் துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகள் குறித்து உக்ரைன் முடிவு செய்யும் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய நிலப் போரை நிறுத்த இரு தரப்பினரும் 30 நாள் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார்.
உடனடி 30 நாள் போர் நிறுத்தத்தை ஜெலென்ஸ்கி ஆதரிக்கிறார், ஆனால் அத்தகைய போர் நிறுத்தத்தின் விவரங்கள் விவாதிக்கப்படக்கூடிய பேச்சுவார்த்தைகளை முதலில் தொடங்க விரும்புவதாக புடின் கூறியுள்ளார்.
இஸ்ரேலுடன் சிரியா சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் - சிரிய ஜனாதிபதியிடம் டிரம்ப் வேண்டுகோள்
14 May, 2025 | 04:22 PM
சிரியாவுடன் இஸ்ரேலுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரிய ஜனாதிபதி அஹமட் அல் சராவை சந்தித்தவேளை டிரம்ப் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சிரிய ஜனாதிபதி தனது நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் அனைவரும் வெளியேறவேண்டும் என உத்தரவிடவேண்டும் என டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரியா மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதே குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் 4 இராணுவ வீரர்கள், பொதுமக்கள் 9 பேருமாக 13பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இராணுவ தகவல் சேவைத் தலைவர் தெரிவித்தார்.
குறித்த வெடி விபத்து இடம்பெற்ற பகுதியில் மக்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும்வரை
தற்போது அங்கு கிருமி நீக்கும் செயல்முறை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
Published By: Digital Desk 3
14 May, 2025 | 11:38 AM
அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகள் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக செவ்வாய்க்கிழமை (13) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றப்பின் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்குக்கு பயணம் இதுவாகும்.
இந்த விஜயத்தில் டொனால்ட் ட்ரம்ப்புடன் இலான் மஸ்க், ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், பிளாக்ராக் தலைமை நிர்வாக அதிகாரி லாரி ஃபிங்க் மற்றும் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட பல வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி,
அமெரிக்காவுக்கு சவுதி அரேபியாவை விட "உறுதியான நட்புறவு கொண்டோர்கள் வேறு யாரும் இல்லை". சிரியாவுக்கு எதிரான அனைத்து தடைகளும் நீக்கப்படும், தற்போது நாடு "சிறந்த வாய்ப்புடன்" முன்னேற வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
எண்ணெய் வளம் மிக்க பொருளாதாரத்தை அதன் செயற்கை நுண்ணறிவு திறன்களை அதிகரிப்பதன் மூலம் பன்முகப்படுத்த ஆர்வமுள்ள சவுதி அரேபியாவை உயர்மட்ட நிர்வாகிகள் சந்திக்கின்றனர்.
ஹுவாங் இந்த விஜயத்தின் போது Nvidia தனது 18,000க்கும் மேற்பட்ட சமீபத்திய AI சிப்களை சவுதி நிறுவனமான Humain-க்கு விற்பனை செய்யும் என்று அறிவித்தார். https://www.virakesari.lk/article/214669
உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார்
உலகின் மிகவும் ஏழ்மையான ஜனாதிபதி என்று அறியப்பட்ட, லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா காலமானார். இறக்கும் போது அவருக்கு 89 வயதாகும்.
இடதுசாரி அரசியல்வாதியான முஜிகா, பல முற்போக்கான சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய ஒரு தலைவராக இருந்தார். அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் அறியப்படுகிறார்.
முஜிகாவின் மரணத்தை உருகுவேயின் தற்போதைய ஜனாதிபதி யமண்டு ஓர்சி உலகுக்கு அறிவித்தார். 'அவர் ஒரு உண்மையான தலைவர்.' ஒரு நேர்மையான நண்பர். அவர் உருகுவே மக்களின் இதயத்துடிப்பு. "சரி, விடைபெறுகிறேன்," முன்னாள் ஜனாதிபதிக்கு ஓர்சி ஒரு புகழாரமும் சூட்டினார்.
முஜிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தான் ஒரு புற்றுநோய் நோயாளி என்றும், இனி வாழ அதிக காலம் இல்லை என்றும் 2024 ஆம் ஆண்டு செய்தியாளர்களிடம் முஜிகா கூறினார். முஜிகா சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
கியூபப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட முஜிகா, 1960களில் ஆயுதம் ஏந்திய இடதுசாரி கெரில்லா போராளி ஆவார். அந்த நேரத்தில், உருகுவே மாநிலம் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது. இராணுவத்தால் கைது செய்யப்பட்ட முஜிகா, 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். அதாவது, பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார்.
உருகுவேயின் ஜனாதிபதியாக முஜிகா 2009 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். முஜிகா 2010 முதல் 2015 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார், அந்தக் காலத்தில் உருகுவேயின் பொருளாதாரம் ஒரு ஏற்றத்தை சந்தித்தது.
அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டையும் பெற்றன.
உருகுவே மக்கள், தாங்கள் இதுவரை சந்தித்த ஜனாதிபதிகளிலேயே மிகவும் பணிவானவர் ஜோஸ் முஜிகா என்று நம்புகிறார்கள்.
ஏனென்றால், ஜனாதிபதியாக இருந்தபோதும், முஜிகா ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கிராமப்புறத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.
இறக்கும் வரை, முஜிகா ஒரு பழைய மற்றும் பாழடைந்த வோக்ஸ்வாகன் காரைப் பயன்படுத்தி வந்தார். முஜிகாவைப் போலவே, இந்த வோக்ஸ்வாகனும் உலகில் பிரபலமானது.
https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உலகின்-ஏழ்மையான-ஜனாதிபதி-காலமானார்/50-357329
Published By: DIGITAL DESK 3
12 MAY, 2025 | 04:21 PM
நிகர இடம்பெயர்வை குறைப்பதற்காக குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கும், வெளியேறும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
குடியேற்ற விதிமுறைகளின் படி, பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10 வருடங்கள் வசித்திருப்பது கட்டாயம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விசாவுக்கும் புதிய ஆங்கில மொழி அறிவுக்கு மேலதிகமாக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டவுள்ளது.
நிகர இடம்பெயர்வை குறைப்பதற்கான சீர்திருத்தங்களை பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இன்று அறிவிப்பார்.
2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது, நிகர இடம்பெயர்வு அதிகரித்தது.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 903,000 ஐ எட்டியது. அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 728,000 ஆகக் குறைந்தது.
ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான பிரெக்ஸிட்டு ஒப்பந்தத்துக்கு முந்தைய அதிகபட்சமான 329,000 ஐ விட அதிகமாக உள்ளது.
சட்டப்பூர்வ இடம்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க பிரித்தானியா அரசாங்கம் அழுத்தத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட்
12 மே 2025, 09:31 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கையாக, இரு நாடுகளும் பரஸ்பர வரி விதிப்புகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
தற்போதைக்கு 90 நாட்களுக்கு இந்த வரி குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என இருநாடுகளுக்கு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு விதித்த 145 % வரியை 30%-ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.
அதே போல சீனா, அமெரிக்க பொருட்களுக்கு விதித்த 125% வரியை 10% ஆக குறைக்கும்.
சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகள் பரஸ்பரம் விதித்த வரிகளில் 115% வரியை புதன்கிழமை முதல் குறைக்கும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.
இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து தொடர்ந்து விவாதிக்க ஒரு செயல்முறை உருவாக்கப்படும் என்றும், அதற்கு அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் சீனாவின் துணை பிரதமர் ஹி லிஃபாங் தலைமை தாங்குவர் என்றும் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மற்றும் உலக பொருளாதாரத்துக்கும் முக்கியம் என்பதை உணர்த்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கட்ட பதிலடிக்கு பிறகு உடன்பாடு
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,டிரம்ப் உலக நாடுகள் மீதான வரிகளை அதிகரித்தார்
பல கட்ட பதிலடி வரி விதிப்புக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
தனது வர்த்தக போரின் மூலம் உலக பொருளாதாரத்தில் டிரம்ப் அதிர்வலைகளை ஏற்படுத்திய வேகத்தைக் கருத்தில் கொண்டால் இந்த 90 நாட்கள் என்பது நீண்ட காலமாகக் கருதப்படும் என்கிறார் பிபிசி வணிக செய்தியாளர் ஜோனாதன் ஜோசப்ஸ் கூறுகிறார்.
மேலும், ''கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதிலிருந்து அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றம் உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த உடன்பாடு, பதற்றத்தைக் குறைக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது'' என பிபிசி வணிக செய்தியாளர் ஜோனாதன் ஜோசப்ஸ் கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைக்க பிரித்தானியா நடவடிக்கை !
அதிக அளவிலான வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைத்துக்கொள்ளும் திட்டங்களை பிரித்தானிய அரசாங்கம் இன்று (11) அறிவித்துள்ளது.
திறனாளர் விசாக்களை பட்டதாரிகள் செய்யும் வேலைகளுக்கு மட்டும் வழங்கி நிறுவனங்களில் உள்நாட்டு ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய திட்டங்களின் கீழ், திறனாளர் விசாக்கள் பட்டதாரிகளுக்கு மட்டும் வழங்கப்படுவதுடன் குறைவான திறன்கள் தேவைப்படும் தொழில் விசாக்கள் நாட்டின் தொழில்துறைச் செயல்பாட்டுக்கு முக்கியமானதாக விளங்கும் வேலைகளைச் செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் இதனை ஈடு செய்ய நிறுவனங்கள், பிரித்தானிய ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டங்கள் , நாளை (மே 12) வெளியிடப்படவுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சி அறிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரேன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு.
அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் ரஷ்யா- உக்ரேன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
“அமெரிக்க ஜனாதிபதியாக , ஐரோப்பியர்களுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் அமைதியைக் கொண்டுவர தான் உறுதியாக இருப்பதாகவும், அது ஒரு நீடித்த அமைதியாக இருக்கும் என்றும் ட்ரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரேன் இந்த நிமிடமே தயாராக இருப்பதாகத் ட்ரம்ப்பிடம் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வியாழக்கிழமையன்று (மே 8) அமெரிக்க ஜனாதிபதியுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது செலன்ஸ்கி அவ்வாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அத்துடன் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துடன் தொடங்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது தயார்நிலையை ரஷ்யா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் செலன்ஸ்கி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விருப்பம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published By: DIGITAL DESK 3
09 MAY, 2025 | 09:56 AM
ஜப்பானில் பிரேசிலின் செல்வாக்கு மிக்க 30 வயதுடைய அமண்டா போர்ஜஸ் டா சில்வா என்ற பெண்ணின் மரணம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமண்டா போர்ஜஸ் டா சில்வா ஜப்பானை நேசித்ததோடு, பார்முலா 1 கார் பந்தய ரசிகையுமாக இருந்துள்ளார்.
இவர் ஜப்பானில் பாதுகாப்பாக இருப்பதாக தனது தாயாரிடம் கூறியிருந்த நிலையில், தனது நாட்டுக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள நரிட்டா நகரத்தில் வாடகை குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையை சுவாசித்து மூச்சு திணறி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் சந்தேகத்துக்கிடமாக காணப்பட்டதோடு, பின்னர் குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டது. அதில், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய, வேலையில்லாத 31 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் கட்டடத்துக்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 31 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க முயற்சிக்காமல் அவர் குடியிருப்பை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கையடக்க தொலைப்பேசி, நகைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் உட்பட பல தனிப்பட்ட பொருட்களும் காணாமல் போயுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் பொலிஸாரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளன.
அமண்டா போர்ஜஸ் டா சில்வா போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும், அவரது மரணம் வேண்டுமென்றே சம்பவிக்கப்பட்டதா என ஜப்பானிய பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் பிரேசிலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
பிரபலமான பார்முலா 1 கார் பந்தய ரசிகையான அமண்டா போர்ஜஸ் டா சில்வாவை இன்ஸ்டாகிராமில் சுமார் 13,000 பேர் பின்தொடர்கின்றனர்.
தற்போது ஜப்பானில் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களை வெளிநாட்டவர்கள் செய்வதாக சமூக ஊடகங்களில் தேசிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.
The cardinal electors of the Catholic Church elected an American from among their own ranks on Thursday to serve as the new pope. Chicago-born Cardinal Robert Prevost was elected and accepted his fate as the next Bishop of Rome, leader of the world's 1.4 billion Catholics.
Prevost chose Leo XIV as his papal name.
உலக கத்தோலிக்க திருச்சபைக்கான பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்கவைசேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரேவோஸ்ட் ...ஆவர். திருச்சபையில் லீயோ XIV ....என
அழைக்கப்படுவார் .
மன்னிக்கவும் ஏற்கனவே கோஷன் இணைத்துவிடடார் ஒரே தலைப்பின் கீழ் இணைந்துவிடவும்.
வத்திகனில் கர்தினால்கள் கூடி பாப்பரசரை தேரும் கூட்ட கட்டிடத்தின் புகைகூண்டில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.
புதிய பாப்பரசர் தெரிவானதை இது குறிக்கிறது.
டயர் நிக்கோல்ஸ் மரணம்- பொலிஸ் அதிகாரிகள் மூவர் விடுதலை.
அமெரிக்காவில் கருப்பினத்தவரான டயர் நிக்கோல்ஸ் (Tyre Nichols) என்பவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மெம்பிஸ் நகரில் பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய டயர் நிக்கோல்ஸை பொலிஸார் அடித்து துன்புறத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை குறித்த சம்பவதத்தில் படுகாயமடைந்த டயர் நிக்கோல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தலையில் ஏற்பட்ட பலத்த அடி காரணமாகவே அவர் உயிர் இழந்துள்ளார் என அவரது பிரேத பரிசோதனை அறிக்கை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நாடு தழுவிய போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து குறித்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் கருப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில் மூவரை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய பாப்பரசர் தெரிவு மாநாடு இன்று!
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21ஆம் திகதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு இன்று (07) தொடங்கும் என்று வத்திக்கான் அறிவித்தது.
அதன்படி இன்று(07) பாப்பரசர் தேர்வு தொடங்குகிறது. வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடைபெறுகின்றது.
இதற்காக வத்திக்கானில் 250 கர்தினால்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பார்கள்.
வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கர்தினால்கள் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்வதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து இரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள்.
கர்தினால்களை தவிர இரண்டு அவசர கால வைத்தியர்கள், கார்டினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கர்தினால்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை நீக்க வேண்டும்.
புதிய பாப்பரசர் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்புகள் நடை பெறும். ஒவ்வொரு கர்தினால் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.
போப் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பிலிப் நேரி பெராவ், பசேலியோஸ் கிளீமிஸ், அந்தோனி பூலா, ஜோர்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகிய 4 கர்தினால்கள் வாக்களிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் போர்; அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் பேச்சுவார்த்தை!
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை தணிக்க முயற்சிக்கும் வகையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இந்த வாரம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர்.
மே 9 முதல் 12 வரை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் கலந்து கொள்வார் என்று பீஜிங் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் வொஷிங்டனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று அவர்களது அலுவலகங்கள் அறிவித்தன.
வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்களுக்கு 145% வரை புதிய இறக்குமதி வரிகளை விதித்துள்ளார்.
சீனா அமெரிக்காவிலிருந்து வரும் சில பொருட்களுக்கு 125% வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தை பல மாதங்கள் நீடிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி மாதம் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங் கலந்து கொண்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் உயர்மட்ட தொடர்பு இதுவாகும்.
கனடா விற்பனைக்கு அல்ல – மார்க் கார்னி
கனடா விற்பனைக்கு அல்ல என அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வீட்டுமனை வியாபாரத்தில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு சில இடங்கள் ஒருபோதும் விற்பனைக்கு வராது என்பது தெரிந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் தாம் கனடியர்களை சந்தித்தததாகவும், கனடா விற்கபடக்கூடிய நாடல்ல, எதிர்காலத்திலும் அல்ல,” எனவும் அவர் தெளிவாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் நாங்கள் முன்னேற்றமடைந்துள்ள ஒத்துழைப்பு தான் மிகப்பெரிய வாய்ப்பு. பாதுகாப்பு தொடர்பாகவும், தமது அரசாங்கம் புதிய முதலீடுகளை மேற்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
எங்கள் கூட்டுறவையும் பாதுகாப்பையும் கட்டமைக்க நாங்கள் முழுமையாக செயல்பட தயாராக இருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
ஜேர்மனியின் புதிய சேன்சலராக கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவர் ஃபிரிடிரிக் மெர்ஸ் Friedrich Merz இன்று தெரிவு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவடைந்த போதிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முதலான சில காரணங்களால் ஆட்சியமைப்பதில் பல்வேறு தாமதம் ஏற்பட்டுவந்தது.
இந்நிலையில் 208 இருக்கைகளை வென்ற CDU/CSU கட்சியும், 120 இருக்கைகளை வென்ற SPD கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன.
அந்தவகையில் இன்று ஜேர்மனியில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ளதாகவும் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.00 மணிக்கு ஜேர்மனியின் நாடாளுமன்றம் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இதன்போது பிரெட்ரிக் மெர்ஸின் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் பெரும்பான்மையை அவர் நிரூபித்த பின்னர் ஃபிரிடிரிக் மெர்ஸை ஜேர்மனியின் 10ஆவது சேன்ஸலராக ஜனாதிபதி உறுதி செய்வார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஃபிரிடிரிக் மெர்ஸ்ஸுக்கு தேவையான 316 வாக்குகள் கிடைக்கவில்லை எனவும், இதனால் அவர் சேன்சலராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வலது சாரி கட்சியான ஆல்டர்நடிவ் ஃபியூர் டெயுச்ச்லாந்து புதிய தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் ஓலாப் ஷோல்ஸ் (Olaf Scholz ) தற்காலிக சேன்சலராகத் திகழ்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! விமானச் சேவைகள் நிறுத்தம்!
ரஷ்யா மீது உக்ரேன் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் கொண்டாட்டங்கள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 8ஆம் திகதி முதல் நடைபெற உள்ளன. இதையடுத்து, உக்ரேனுடனான போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்திருந்தார்.
இப் போர்நிறுத்தம் மே 8ஆம் திகதி தொடக்கத்தில் இருந்து மே 10ஆம் திகதி இறுதி வரை, அதாவது 72 மணி நேரம் நீடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. மேலும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்கும்படி உக்ரேனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி ஏற்க மறுத்த நிலையில், அந்நாடு தற்போது ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ரஷ்யாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரேன் நடத்திய ட்ரோன்கள் தாக்குதல் காரணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள 4 விமான நிலையங்களிலும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால், இருநாடுகளின் எல்லையிலுள்ள பகுதிகள் மற்றும் ரஷ்யாவின் மத்தியப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களினால் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும், வோரோனெஸ் மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரேன் இணையக்கூடாது என்பதற்காக,அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.
“இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி என்று அழைக்கப்படும் சர்ச்சைக் குறிய உயிரியல் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் நிதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உத்தரவொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று (05) பிறப்பித்தார்.
குறித்த ஆராய்ச்சியானது தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றுக் கிருமிகள் எவ்வாறு அதிகமாக பரவக்கூடும் அல்லது மக்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும் என்பதை இந்த ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு இருப்பினும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வகத்தில் மிகவும் ஆபத்தான நோய்க்கிருமியை உருவாக்கி, அது வெளியேறி ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தத் துறை நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.
இந்த ஆராய்ச்சியை இன்னும் இறுக்கமாகக் கண்காணித்து கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
COVID-19 தொற்றுநோய் காலத்தில் இவ்வகை ஆராய்ச்சிகள் ஆராய்ச்சி ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் சர்ச்சைக்குரியதாக மாறியது.
குறிப்பாக COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV2 வைரஸ், சீனாவின் வுஹானில் உள்ள ஒரு சீன அரசாங்க ஆய்வகத்திலிருந்து பரவியதாகக் கூறப்பட்டது.
அத்துடன் COVID தொற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் குறித்த ஆராய்ச்சி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.