புதிய பதிவுகள்2

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மோசமான பல கூறுகள் புதிய வரைவிலும் உள்ளன ; வரைவை உடன் வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தல்

1 month 2 weeks ago
‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்! 05 Jan, 2026 | 03:31 PM பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத அதேவேளை நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவர தீர்மானித்துள்ளது. இம் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் பேரவைக்கான இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்களால் டிசம்பர் 30ம் திகதி நீதி அமைச்சின் அலுவலகத்தில் நீதியமைச்சரிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் அல்லது வேறு பெயரில் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் அடிப்படையில் ஜனநாயக விரோத, மனித உரிமைகுக்கு எதிரான அபாயங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்புக்காவல் உத்தரவுகலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அதேவேளை , தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகலின் கீழ் நீதிமன்ற நடைமுறை மூலம் விசாரணைகளை நடத்தி சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் இயலுமாநதாக இருக்குப் போதே, தற்போதைய அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே ‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற பெயரில் புதிய சட்டங்களை கொண்டு வர முனைகிறது எனபதும் வலியுறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/235262

அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
நானும் அதையே சரியாக இருக்கும் என நினைக்கின்றேன் ஒரு வங்கி இலக்கம் புதிதாக உருவாக்கி அதை முன்னோடி அமைப்பின் பெயரில் பாவிக்கலாம் . அந்த வங்கி கணக்கு ஏராளன் பெயரில் இருக்கும். உதவி செய்ய விரும்புபவர்கள் அந்த இலக்கத்திற்கு தங்கள் பங்களிப்பினைச் செலுத்தலாம். . புலர் நிறுவனம் ஏற்கனவே ஒரு ஒரு கட்டமைப்பாக இயங்குவதால் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை வேறு ஒரு கட்டமைப்பிற்காக பயன்படுத்துவது ஒரு சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்🙏

ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் முன்னிலை

1 month 2 weeks ago
ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை Jan 5, 2026 - 12:30 PM முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கக் காலத்தில், விவசாய அமைச்சின் செயல்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. அந்தச் சம்பவம் தொடர்பில், அப்போதைய அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, அவர் இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk0t9x0h03iso29njj76o0uk

அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டு செயற்பாடு என்று எமது புலர் அறக்கட்டளையின் வருடாந்த செயற்பாட்டறிக்கையிலும் குறிப்பிடலாம் அல்லது தனியாகவே முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 என செயற்பாட்டறிக்கை வரவு செலவு விபரம் தயாரிக்கலாம். எல்லோருடைய கருத்தையும் பெற்று செயற்படுவோம். @குமாரசாமி அண்ணையும் யாழில் இருந்து புலர் அறக்கட்டளைக்கு உதவும் நல்லுள்ளம். அவரையும் எமது மூடப்பட்ட(எல்லோரும் தகவல் பரிமாற முடியாது, அட்மின் மட்டும் விபரங்களை போடுவார்) whatsapp குழுவில் ஏற்கனவே நான் இணைத்துள்ளேன். அது போல Telegram ல் ஒரு குழுவை(Mobile number தெரியாமல் பெயர் மட்டும் இருக்கும்) உருவாக்கி தகவல்களை பரிமாறலாம். whatsapp business இலும் நம்பர் தெரியாது குழு உருவாக்கலாம் என நினைக்கிறேன். தொழிநுட்பம் தெரிந்த யாழ் உறவுகள் விளங்கப்படுத்துங்கோ.

அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
இல்லத் தாத்தா..ஏராளன் புலரில் தற்போது எப்படி இயங்குகிறாரோ அப்படியே விடுவது தான் சிறந்தது..பாவம் தன் முயற்சியால் ஏற்படுத்திக் கொண்ட விடையத்திற்கு எந்த வித இடையூறும் இல்லாமல் இருக்க வேணும்.ஏராளனுக்கு புதியவற்றை இணைக்க விருப்பம் இருந்தாலும் போக, போக அது ஒரு தலையிடியாக மாறக் கூடாது.அவர்களது மற்ற உறுப்பினர்களும் எல்லாவற்றுக்கும் ஒத்துளைப்பார்கள் என்று இல்லை.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
இன்று வெனிசுலாவில் அரங்கேறி வரும் அமெரிக்காவின் அதே "கடத்தல்" தந்திரம், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் ஒரு மண்ணில் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. அந்த வரலாற்றுப் பாடத்தின் பெயர்: 'Mogadishu War' (1993). 1993-ல் சோமாலியாவின் உள்நாட்டுப் போரில் தலையிட்ட அமெரிக்கா, அங்கிருந்த முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டது. இதற்காக உலகின் மிகச்சிறந்த படைப்பிரிவாகக் கருதப்படும் Delta Force மற்றும் Rangers களமிறக்கப்பட்டனர். நவீன ஆயுதங்கள், அதிநவீன ஹெலிகாப்டர்கள் என ஒரு சினிமா பாணியில் அந்தத் தாக்குதல் தொடங்கியது. அமெரிக்காவின் கர்வத்தை உடைக்கும் விதமாக, சோமாலிய வீரர்கள் எளிய ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவின் பெருமைமிகு இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தினர். வானில் பறந்த அந்த இரும்புப் பறவைகள் மண்ணில் சரிந்தபோது, அமெரிக்காவின் திட்டமும் சுக்குநூறானது. ஒரு சில மணிநேரங்களில் முடியும் என்று நினைத்த அந்த நடவடிக்கை, 15 மணிநேரக் கொடூரப் போராக மாறியது. அடி என்றால் அப்படி ஒரு அடி…கனவிலும் கூட அப்படி ஒரு அடிவிழும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்… அந்த எதிர்த்தாக்குதலில் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 73-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிக முக்கியமாக, உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் மொக்டிஷோ நகரின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டன. உலகமே தொலைக்காட்சியில் பார்த்த அந்த காட்சிகள், அமெரிக்காவின் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரியானது. ஒரு வல்லரசின் அராஜகம், வீரமும் விசுவாசமும் நிறைந்த ஒரு எளிய தேசத்தின் முன்னால் எப்படிப் பாழாகிப் போகும் என்பதற்கு இதுவே சாட்சி. இந்த வரலாற்று அவமானத்திற்குப் பிறகு, சோமாலியா பக்கம் எட்டிப் பார்க்கவே அமெரிக்கா நீண்ட காலம் அஞ்சியது. இன்று வெனிசுலாவில் நடக்கும் அதிகார ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால் அதே போன்ற ஒரு 'வெற்றி' கிடைக்கும் என அமெரிக்கா கணக்குப் போடலாம். ஆனால், வரலாறு எப்போதும் ஒரு பாடத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது: "மண்ணின் மைந்தர்களின் வீரம், எந்த நவீன ஆயுதத்தையும் விட வலிமையானது." (குறிப்பு: இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் புகழ்பெற்ற 'Black Hawk Down' திரைப்படம் எடுக்கப்பட்டது) email

அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
எனது கருத்தும் இதுவே. கடந்தகால உதவித்திட்ட அனுபவங்களிலிருந்து, ஏராளன் வெற்றிகரமாக நடத்தி வரும் அமைப்புக்கு இடையூறு ஏற்படுத்தாமல் விடுவது நல்லது என்று தோன்றுகிறது.

முல்லைத்தீவு சிறுமி மரணம் - நிபுணர் குழுவின் அதிரடி அறிக்கை வெளியானது

1 month 2 weeks ago
முல்லைத்தீவு சிறுமி மரணம் - நிபுணர் குழுவின் அதிரடி அறிக்கை வெளியானது 05 January 2026 முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். அதன்படி, சம்பவத்தின் போது, மருத்துவமனை அறிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம் என கருதும் பட்சத்தில் அது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதி உத்தியோகத்தரை, சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவரை, தனியாக செயற்பட விடாது, மற்றுமொருவரின் கண்காணிப்பின் கீழ் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எமது செய்தி சேவைக்குக் குறிப்பிட்டார். முழுமையான அறிக்கை கிடைத்ததன் பின்னரே முறைமைசார் விசாரணைக்கான பணிப்புரைகளை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். சிறுமிக்கு உரிய முறையில் மருத்துவம் வழங்கப்படவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்தநிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/439109/mullaitivu-girls-death-expert-committees-action-report-released

கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்

1 month 2 weeks ago
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர் 05 January 2026 "கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள்" என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் "அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றும் , டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை" என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் அதன் முக்கியமான புவியியல் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா அதன் மீது ஆர்வம் காட்டினாலும், அங்குள்ள மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை. அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை பாதிக்கும் என டென்மார்க் எச்சரித்துள்ளது. அதேசமயம், வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அதன் ஆதிக்க மனப்பான்மை சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/439137/us-has-no-right-to-annex-greenland-danish-prime-minister

தையிட்டி விகாரைக்கெதிராக  போராடியவா்களுக்கு  சொந்தப் பிணை

1 month 2 weeks ago
சுமந்திரன் எடுத்துத் தந்தால் தமிழிழமே வேண்டாம் என்று சொன்ன தமிழ்சிறி அவர்களுடய கவனத்துக்கு இதைக் கொண்டு வருகின்றேன்.

தையிட்டி விகாரைக்கெதிராக  போராடியவா்களுக்கு  சொந்தப் பிணை

1 month 2 weeks ago
தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை adminJanuary 5, 2026 யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராகப் போராடிய வேலன் சுவாமிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான வழக்கில் இன்று (ஜனவரி 5, 2026) முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக காவல்துறையினா் இன்று புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் இருந்த ஐவர் மற்றும் புதிதாகக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் உள்ளிட்ட அனைவரையும் சொந்தப் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான நல்லதம்பி சிறிகாந்தா, குமாரவடிவேல் குருபரன் தலைமையில் 13 சட்டத்தரணிகள் கொண்ட குழு முன்னிலையானது. போராட்டக்காரர்கள் நீதிமன்றக் கட்டளையை மீறினர் என்றும், இன நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்தனர் என்றும் கூறி காவல்துறைத் தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அமைதியாகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. காவல்துறையினரே அங்கு சட்டத்தை மீறி வன்முறையைத் தூண்டியுள்ளனா் எனத் தொிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தவிசாளர் நிரோஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டதற்கான மருத்துவ அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இத்தகைய தற்காலிக கட்டளைகள் 14 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகாது என்பதைச் சுட்டிக்காட்டி வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வாதிட்டார். “பொதுத் தொல்லை” (Public Nuisance) தொடர்பான சட்டம். இதனை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கப் பயன்படுத்த முடியாது என்றும், காவல்துறையினா் மேலிடத்து உத்தரவின் பேரில் இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா சாடினார். 🔍 பின்னணி: தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாக விகாரை கட்டப்படுவதாகக் கூறி தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதில் வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/225683/

ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் முன்னிலை

1 month 2 weeks ago
ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் முன்னிலை : adminJanuary 5, 2026 நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) இன்று (ஜனவரி 5, 2026, திங்கட்கிழமை) காலை இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளாா். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்தின் (Ministry of Agriculture) அலுவலகத்தை அமைப்பதற்காக ஒரு தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் போது அரசாங்கத்தின் விதிகளுக்குப் புறம்பாக அதிகப்படியான வாடகைத் தொகை செலுத்தப்பட்டமை மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களுடன் அவர் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். விவசாய அமைச்சகத்திற்காக ராஜகிரியவில் உள்ள குறித்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் நடைபெற்று வந்தன. இதில் அமைச்சரவையின் அனுமதி மற்றும் கேள்விப்பத்திர நடைமுறைகள் (Tender Procedures) சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து ஆணைக்குழு தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. https://globaltamilnews.net/2026/225679/

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
நான் மேலே கூறியவை யாவும் எடுகோள்களே. செய்திக்கு அப்பால் சென்று, என்ன நடக்கிறது என்பதை உய்துணர முயலும் முயற்சி மட்டுமே. இப்படித்தான் நடக்கிறது என்றால்… இந்த சங்கியிலின் ஓரங்கமாகவே நான் டிரம்பின் முதலாவது தேர்தல், பிரெக்சிற், கொவிட் உருவாக்கம், டிரம்பின் 2ம் தேர்வு ஆகியவற்றை காண்கிறேன். பிகு இவை 100% சதிகோட்பாட்டு என புறம்தள்ள தக்க கருத்துக்கள் என்பதை முழுதாக ஏற்கிறேன்.

அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 2 weeks ago
குமாரசாமி, இந்த எண்ணத்தைத் தவிர்க்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஏராளன் ஏற்கனவே ஒரு அமைப்பை உருவாக்கி, அதனூடாக பல்வேறு செயற்திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார். அவரது அமைப்பிற்கும் செயற்பாடுகளுக்கும் தனித்துவமான சில கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. எனவே, எந்தவித இடையூறும் இல்லாமல் அவர் தனது புலம் அமைப்பில் தொடர்ந்து செயற்படுவதுதான் உகந்ததாக இருக்கும். அதே நேரத்தில், அவரது முயற்சிகளுக்கு உதவுவதை யாழ்கள உறுப்பினர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். “எலி வளையானாலும் தனி வளை வேண்டும்” என்பதுபோல, ஒவ்வொரு முயற்சியும் தனது தனித்தளத்தில் வளர்வதே சிறந்தது. நாம் முன்னெடுக்க உள்ள அடிப்படை சுகாதார வசதி திட்டம் தனித்துவமானது. அதைச் செயற்படுத்துவதற்காக ‘முன்னோடி’ என்ற உதவி நிறுவனத்தை ஆரம்பிப்பது குறித்து ஏற்கனவே ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்காததும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஏராளனும் இதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். தற்சமயம், அவர் இந்தத் திட்டத்திற்கு தன்னாலான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘முன்னோடி’ தற்போது ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆகவே, அதை உறுதியுடன் செயற்படுத்துவோம். ‘முன்னோடி’க்கு தனியான கணக்கு இருப்பது பங்களிப்பாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையையும் நமக்குச் செயற்பாட்டு இலகுவையும் அளிக்கும். துளித் துளியாகச் சேர்ப்போம். எதிர்காலத்தில் அது நிறைந்த குடமாக மாறலாம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

1 month 2 weeks ago
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 05 Jan, 2026 | 08:35 AM தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார். விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார். அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்புத் திட்டம் குறித்து வினவியபோது, அது பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சுமை என அவர் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது பற்றித் தான் எவ்விதக் கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்து அந்தப் பதிலைத் தவிர்த்துக்கொண்டார். நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/235232

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCID யில் முன்னிலை

1 month 2 weeks ago
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCID யில் முன்னிலை Jan 5, 2026 - 09:49 AM முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார். அதற்கமையவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச நிறுவனத்தின் போக்குவரத்து முகாமையாளராக பணியாற்றிய இந்திக ரத்னமலல நேற்று கைதானார். அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை, முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக, அவரது மகன் ஜொஹான் பெர்னாண்டோவிற்கு போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk0nj1jj03ilo29nxi2h1ips
Checked
Mon, 02/23/2026 - 22:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed