2 months ago
சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி Dec 21, 2025 - 05:01 PM புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும் போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றுவது அவசியமாகும். அதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை மற்றும் கெளரவத்துடன் தாய்நாட்டை மீண்டும் விரைவாக கட்டியெழுப்ப முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார். இன்று (21) முற்பகல் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார். நமது நாடு ஒரு சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக நாடு அனைத்து வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளாகியுள்ளது. இன்று அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு, தாய்நாட்டை மீண்டும் உலகில் மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும் என்று தெரிவித்தார். ஒரு அரசாங்கமாகவும் ஜனாதிபதியாகவும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை, நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்துவேன் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதற்கு தேவையான பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் தொழிலிலிருந்து, பொதுமக்களுக்கு சேவை செய்யும் சமூகப் பணியாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாக இங்கு தெரவித்தார். இன்று முற்பகல் தியதலாவ, இராணுவ கல்வியியல் கல்லூரிக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வீரமிக்க தலைவர்களை உருவாக்கிய இராணுவத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமான தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வு இதுவாகும். வதிவிட கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண் 93, 94B குறுகிய கால பாடநெறி எண்23, வதிவிட பாடநெறி எண்62 மற்றும் தன்னார்வ பெண் கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண்19 ஆகியவற்றைச் சேர்ந்த 240 கெடட் உத்தியோகத்தர்கள் வெற்றிகரமான இராணுவப் பயிற்சிக்குப் பிறகு அதிகாரிகளாக இராணுவ சேவையில் இணைந்தனர். இவர்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த பல கெடட் உத்தியோகத்தர்களும் பயிற்றுவிக்கப்பட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களின் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டதுடன், திறமை வாய்ந்த கெடட் அணிக்கு விருதினையும், கெடட் வீரர்களுக்கு கௌரவ சின்னங்களையும், ஒவ்வொரு பாடநெறியிலும் முதலிடம் பெற்ற அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கினார். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் நாட்டிற்கும் மக்களுக்கும் இராணுவம் ஆற்றிய சேவை பாராட்டத்தக்கது என்றும், அண்மைய சூறாவளியின் போது மக்களை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை வழங்குவதில் ஆற்றிய சிறந்த பணிக்கு நன்றி தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களாக தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியைப் பெற்ற நீங்கள், இன்று அதிகாரிகளாக மாறியுள்ளீர்கள். அரசாங்கத்திற்கும், ஜனாதிபதியாக எனக்கும், உங்கள் மீது பாரிய எதிர்பார்ப்பு உள்ளது. நமது நாடு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அந்த சவால்களை வெற்றிகொள்ள, இந்த தாய்நாட்டின் பாதுகாப்பு, அமைதி மற்றும் மக்களுக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த உங்கள் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளனர். நீங்களும் நானும் இன்று கால்களை வைத்திருப்பது, கடந்த காலங்களில், வீரச் செயல்கள் மூலம், நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கான போராட்டத்தில் உயிர்கள் தியாகம் செய்யப்பட்ட பூமியில் ஆகும். எனவே, கைவிட முடியாத ஒரு பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இலங்கை இராணுவமாக, நமது தாய்நாட்டின் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அசைக்க முடியாத பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இந்த விடயத்தில் உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது. சூறாவளியினால் நமது நாடு பேரழிவைச் சந்தித்தது. மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சிலருக்கு உணவு வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்னும் சிலரது உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய சவாலாக அமைந்தது. அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு சவாலிலும் இலங்கை இராணுவம் பெரும் பங்காற்றியுள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். படையினர் மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். உங்களுக்கு இருப்பது தொழில் ரீதியான பொறுப்பு மாத்திரமல்ல. பல்வேறு வகையான தொழில்கள் உள்ளன. உங்கள் நண்பர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கே உரிய பொறுப்பு மற்றும் மதிப்பு உள்ளது. நீங்கள் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளீர்கள் என்றும் அதே நேரம் ஒரு பாரிய பொறுப்பு உங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்றும் நான் நினைக்கிறேன். நமது தாய்நாட்டை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நமது தாய்நாடு பல தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. ஒருபுறம், நமது அரச பொறிமுறை பலவீனமாகவும் வீழ்ச்சி அடைந்தும் இருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது பொருளாதாரம் பெரும் சவாலுக்கு உள்ளாகி சரிவடைந்து கொண்டிருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது சமூகத்தின் நல்வாழ்வு முற்றிலுமாக தோழ்வி கண்ட ஒரு சகாப்தம் இருந்தது. மனித உறவுகள் பெறுமதியற்ற உறவுகளாக மாறிக்கொண்டிருந்தன. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. மதஸ்தலங்களுக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. நமது நாடு அனைத்து மனித உறவுகளும் உடைந்த ஒரு சகாப்தத்தில் நுழைந்து கொண்டிருந்தது. அதன்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்ன? நாம் வரலாற்று பாரம்பரியத்தையும் வரலாற்று சாதனைகளையும் கொண்ட ஒரு நாடு. ஆனால் நமது நாடு எல்லா வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளானது. இப்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு, இந்த தாய்நாட்டை உலகில் உயர்ந்த, மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும். ஒவ்வொருவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் உள்ளன. ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும், நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் தேவையான பொறிமுறையைத் தயாரிக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் ஒரு தொழிலாக அன்றி, மாறாக மக்களுக்கு சேவை செய்யும் ஒரு சமூகப் பணியாக மாற்றும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் அதே போன்ற பொறுப்புகள் உள்ளன. இங்கு கூடியிருக்கும் பெற்றோருக்கும் நமது நாட்டிற்கான பொறுப்புகள் உள்ளன. நமது மதஸ்தலங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படுவதன் மூலமோ அல்லது ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதன் மூலமோ இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கான உறுதியான தீர்மானத்துடன் நாம் அனைவரும் செயல்பட்டால் மாத்திரமே நாம் ஒரு நாடாக முன்னேற முடியும். ஒரு நாடாக நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்துவோம் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். மேலும் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகள் மற்றும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முறையாக நிறைவேற்றுமாறு பொதுமக்களையும் நான் அழைக்கிறேன். நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் தைரியமாக தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற முடிந்தால், வரலாற்றில் நம் நாடு பெற்ற பெருமை மற்றும் கௌரவத்துடன் தாய்நாட்டை மிக விரைவில் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmjfnctey02z4o29nqk7ccx9z
2 months ago
இந்தியாவை வீழ்த்தி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தை 13 வருடங்களின் பின்னர் சுவீகரித்தது பாகிஸ்தான் Published By: Vishnu 21 Dec, 2025 | 08:29 PM (நெவில் அன்தனி) துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய இளையோர் அணியை 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் இளையோர் அணி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய சம்பியன் பட்டத்தை 13 வருடங்களின் பின்னர் சுவீகரித்தது. சமீர் மின்ஹாஸ் குவித்த பாகிஸ்தானுக்கான சாதனைமிகு அதிரடி சதம், அலி ராசா பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன பாகிஸ்தான் இளையோர் அணியை இலகுவாக வெற்றி பெறச்செய்தன. இப் போட்டியில் சில தனிப்பட்ட மைல்கல் சாதனைகளை நிலைநாட்டிய மின்ஹாஸ் தனி ஒருவராக 172 ஓட்டங்களைக் குவித்தார். அவர் பெற்ற எண்ணிக்கையைக் கூட இந்தியாவின் மொத்த எண்ணிக்கை நெருங்கவில்லை. இம் முறை 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் தோல்வி அடையாத அணியாக இந்தியாவும் ஒரு தோல்வியுடன் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடின. முதல் சுற்றில் ஏ குழுவில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் அந்த தோல்வியை நிவர்த்திசெய்துகொண்டது. இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய இளையோர் அணித் தலைவர் ஆயுஷ் மஹாத்ரே களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். இந்தத் தீர்மானம் எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்திய இளையோர் அணியினருக்கு புரிந்துகொள்ள வெகுநேரம் செல்லவில்லை. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் இளையோர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 347 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப விரர் சமீர் மின்ஹாஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 113 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 9 சிக்ஸ்களை விளாசி 172 ஓட்டங்களை குவித்தார். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான சர்வதேச போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்னர் ஷாஸெய்ப் கான் பெற்ற 159 ஓட்டங்களே பாகிஸ்தானின் முந்தைய தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. அத்துடன் அவர் பெற்ற 172 ஓட்டங்களில் 122 ஓட்டங்கள் பவுண்டறிகள் மூலம் பெறப்பட்டது. பவுண்டறிளால் மட்டும் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் சமீர் மின்ஹாஸ் நிலைநாட்டினார். இந்தப் போட்டியில் 35 ஓட்டங்களைப் பெற்ற உஸ்மான் கானுடன் 2ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களையும் 56 ஓட்டங்களைப் பெற்ற அஹ்மத் ஹுசெய்னுடன் 3ஆவது விக்கெட்டில் 137 ஓட்டங்களையும் சமீர் மின்ஹாஸ் பகிர்ந்து பாகிஸ்தான் இளையோர் அணியை பலமான நிலையில் இட்டார். பந்துவீச்சில் தீப்பேந்த்ரா 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிலான் பட்டேல் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹெனில் பட்டேல் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பாகிஸ்தான் இளையோர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 348 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடத்தாடிய இந்திய இளையோர் அணி 26.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது. இந்திய இளையோர் அணியில் இருவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பின்வரிசை வீரர் தீப்பேஷ் தேவேந்த்ரன் 36 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் வைபவ் சூரியவன்ஷி 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்தவீச்சில் அலி ராஸா 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹுஸெய்பா அஹ்சான் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்துல் சுப்ஹான் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் சையாம் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: சமீர் மின்ஹாஸ் https://www.virakesari.lk/article/234042
2 months ago
.
2 months ago
மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த லெதம், கொன்வே சதங்கள் குவித்து அசத்தல் 18 Dec, 2025 | 06:27 PM (நெவில் அன்தனி) மெற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மௌன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து ஓட்ட மழை குவித்து பலமான நிலையில் இருக்கிறது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து, ஆரம்ப வீரர்கள் பெற்ற சதங்களின் உதவியுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 334 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 323 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். முதலாவதாக ஆட்டம் இழந்த டொம் லெதம் 246 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 137 ஓட்டங்களைக் குவித்தார். 91ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் டொம் லெதம் பெற்ற 15ஆவது சதம் இதுவாகும். மறுபக்கத்தில் 279 பந்துகளை எதிர்கொண்ட டெவன் கொன்வே 25 பவுண்டறிகள் அடங்கலாக 178 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார். இது அவர் பெற்ற 6ஆவது டெஸ்ட் சதமாகும். கொன்வேயுடன் களத்திலிருக்கும் ஜேக்கப் டவி 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந் நிலையில் மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரை சமப்படுத்த முடியும் என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் களம் இறங்கியது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை. மைல்கல் சாதனைகள் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் ஜோடியாக 86.4 ஓவர்கள்வரை துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய பந்துவீச்சாளர்களை நையப்புடைத்தனர். அவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 323 ஓட்டங்களானது நியூஸிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப விக்கெட்டில் பகிரப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஜோர்ஜ்டவுனில் 1979இல் க்ளென் டேர்னர், டெரி ஜாவிஸ் ஆகிய இருவரும் பகிர்ந்த 387 ஓட்டங்களே ஆரம்ப விக்கெட்டுக்கான நியூஸிலாந்தின் முந்தைய அதிகூடிய எண்ணிக்கையாகும். டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் பகிர்ந்த 323 ஓட்டங்களானது சொந்த மண்ணில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட முதலாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாகும். இதற்கு முன்னர் 1930இலும் பின்னர் 1999இலும் முதலாவது விக்கெட்டில் பகிரப்பட்ட 276 ஓட்டங்களே முந்தைய சாதனையாக இருந்தது. கொன்வே பெற்ற ஆட்டம் இழக்காத 178 ஓட்டங்களானது முதலாம் நாளில் பெறப்பட்ட தனிநபருக்கான 3ஆவது அதிகூடிய எண்ணிக்கையாகும். இலங்கைக்கு எதிராக 214இல் ப்றெண்டன் மெக்கலம் பெற்ற 195 ஓட்டங்களும் பங்களாதேஷுக்கு எதிராக 2022இல் டொம் லெதம் பெற்ற ஆட்டம் இழக்காத 186 ஓட்டங்களும் இதற்கு முன்னர் நியூஸிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் முதலாவது நாளில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கைகளாகும். இவை இரண்டும் கிறைஸ்ட்சேர்ச்சில் பதிவான மைல்கல் சாதனைகளாகும். https://www.virakesari.lk/article/233757
2 months ago
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரை இப்போதைக்கு 3 - 0 என சுவீகரித்தது அவுஸ்திரேலியா 21 Dec, 2025 | 12:43 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் மீதம் இருக்க இப்போதைக்கு தொடரை 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா சுவீகரித்துக் கொண்டது. அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் கடும் முயற்சிக்கு பின்னர் போட்டியின் கடைசி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் அவுஸ்திரேலியா 82 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரை 11 நாட்களுக்குள் அவுஸ்திரெலியா வென்றமை விசேட அம்சமாகும். பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களிலும் பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி 4 நாட்களிலும் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றவாது டெஸ்ட் போட்டி 5 நாட்களிலும் நிறைவடைந்தன. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 435 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களிலிருந்து கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 352 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மத்திய வரிசை விரர்களான ஜெமி ஸ்மித், வில் ஜெக்ஸ். ப்றைடன் கார்ஸ் ஆகியோர் இங்கிலாந்தை தோல்வியிலிருந்து மீட்க எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகள் கைகூடாமல் போயின. அவுஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சுகளும் சிறப்பான களத்தடுப்புளும் இங்கிலாந்தை தோல்வி அடையச் செய்தன. ஜெமி ஸ்மித், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் கிட்டத்தட்ட 30 ஓவர்கள் தாக்குப் பிடித்து 91 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர். தொடர்ந்து வில் ஜெக்ஸ் ப்றைடன் கார்ஸ் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெல் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியைத் தாமதப்படுத்தினர். இந்த மூவரும் 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ஓட்டங்களையும் பெற்றதுடன் முழுப் போட்டியிலும் 6 பிடிகளை எடுத்த அலெக் கேரி ஆட்ட நாயகனானார். இந்த டெஸ்ட் போட்டி முடிவுடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷப்பில் அவுஸ்திரேலியா இதுவரை விளையாடிய தனது ஆறு போட்டிகளிலும் வெற்றியீட்டி 72 புள்ளிகளைப் பெற்று 100 சதவீத புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 371 (அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82, மிச்செல் ஸ்டாக் 54, ஜொவ்ரா ஆச்சர் 53 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 89 - 2 விக்., வில் ஜெக்ஸ் 105 - 2 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 286 (பென் ஸ்டோக்ஸ் 83, ஜொவ்ரா ஆச்சர் 51, ஹெரி ப்றூக் 45, ஸ்கொட் போலண்ட் 45 - 3 விக்., பெட் கமின்ஸ் 69 - 3 விக்., நேதன் லயன் 70 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 349 (ட்ரவிஸ் ஹெட் 170, அலெக்ஸ் கேரி 72, உஸ்மான் கவாஜா 40, ஜொஷ் டங் 70 - 4 விக்., ப்றைடன் கார்ஸ் 80 - 3 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: வெற்றி இலக்கு 435 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 352 (ஸக் க்ரோவ்லி 85, ஜெமி ஸ்மித் 60, வில் ஜெக்ஸ் 47, ஜோ ரூட் 39, ப்றைடன் கார்ஸ் 39, ஹெரி ப்றூக் 30, பெட் கமின்ஸ் 48 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 62 - 3 விக்., நேதன் லயன் 77 - 3 விக்.) https://www.virakesari.lk/article/234001
2 months ago
25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்! Dec 21, 2025 - 01:25 PM வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கரிக்கட்டை மற்றும் ஹிதாயத் நகர் உள்ளிட்ட கிராம மக்கள் நேற்று மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டை - ஹிதாயத் நகர் மஸ்ஜிதுக்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது, "நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், எங்களுக்கு அநீதி இழைக்காதீர்கள், " பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடு காட்டாது, அனைவருக்கும் நிவாரணங்களை வழங்குங்கள் ", " அரசாங்கம் கொடுத்த 25,000 ரூபாவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குங்கள்" இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். மேற்படி வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் 25,000 ரூபா பணத்தை வழங்குவதற்காக வீரபுர கிராம சேவகர் பிரிவில் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் , உண்மையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுத்ததுடன் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ஹிதாயத் நகர் பகுதியில் சுமார் மூன்று மணி நேரமாக ஒரு வழிப்பாதையாகவே வாகனங்கள் பயணித்தன. பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சுமுகமாக கலந்துரையாடியதுடன், அவர்களின் கருத்துக்களையும் அமைதியான முறையில் கேட்டறிந்துகொண்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முந்தல் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரும், கணக்காளரும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களிடம் குறிப்பிட்டனர். மேலும், 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் போது பொய்யான தகவல்களை வழங்கி அரச பணத்தை பெற முயற்சி செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். குறித்த கொடுப்பனவு வழங்குவதில் எவ்விதமான பாகுபாடுகளும் இன்றி, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு தாம் முயற்சி எடுப்பதாக இதன்போது முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் ஆகியோரினால் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிடம் தெரிவக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியாக களைந்து சென்றனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது முந்தல் மற்றும் மதுரங்குளி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -புத்தளம் நிருபர் ரஸ்மின்- https://adaderanatamil.lk/news/cmjffmp5402yzo29nrnlch3v9
2 months ago
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு - ஏழு பேர் பலி Published By: Digital Desk 2 21 Dec, 2025 | 05:03 PM தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். பெக்கர்ஸ்டாலில் இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 12 அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள்,வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 63பேர் கொல்லப்பட்டதாக பொலிஸாரின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/234033
2 months ago
காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம் Dec 21, 2025 - 12:14 PM வடக்கு ரயில் மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளை (22) முதல் 'யாழ் ராணி' ரயில் மூலம் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையும், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் முன்னெடுக்கப்படவுள்ள நாளாந்த ரயில் சேவைக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjfd3loz02yxo29n58l4wjd2
2 months ago
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் : முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி விடுவிக்கப்பட்டதில் சிக்கல் 21 Dec, 2025 | 05:02 PM (நமது நிருபர்) கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்தமைக்கு எதிராக சட்டமா அதிபரிடம் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமாரவிடம் கடந்த 17ஆம் திகதி அறிவித்தது. இந்த விடுவிப்பு சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதனால், இது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படுவதாயின், அடுத்த கட்டம் குறித்து உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதித்துவம் ஊடாக மன்றுக்கு அறிவிக்குமாறு நீதிவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்தமை தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளது. அவர் சட்டமா அதிபரினால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக நான்காவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் காரணத்திற்காகவும் திகதி வழங்கப்படமாட்டாது. அரச சட்டத்தரணிக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணையை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்குமாறு கோர வேண்டாம். இச்சம்பவம் நடந்து நீண்ட காலம் கடந்துவிட்டது. வேறெந்த விடயத்திற்காகவும் விசாரணையைத் தள்ளிப்போட முடியாது எனத் தெரிவித்த நீதிவான், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று பிரதிநிதி ஒருவருடன் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இரண்டாவது சந்தேகநபரின் விடுவிப்பு தொடர்பாக சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மன்றுக்குத் தெரிவித்தார். இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் போதுமான சாட்சிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, பிரதிவாதிகள் தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இச்சம்பவம் தொடர்பான ஆரம்பத் தகவல்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை குற்றப்புலனாய்வுப்பிரிவிடம் கோரியும் கிடைக்கவில்லையென மன்றுக்குத் தெரிவித்தனர். இதனைப் பரிசீலித்த நீதிவான், இதற்கு விசேட கட்டளைகள் தேவையில்லை என்றும், ஒரு வார காலத்திற்குள் அந்த ஆவணங்களின் பிரதிகளை பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்குமாறும் குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாக இருப்பதற்கு உதவியளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கு பகிரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் அவர் தங்கியிருந்த தென்னந்தோட்டத்தைப் பராமரித்த லக்ஸிரி அமரசிங்க ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234035
2 months ago
ஓம்…. இவர்கள் பின்னால் மற(கழண்ட)வன்புலவு சங்கியானந்தாத்தை இயக்கும் காவிக்கரம் போல் ஒரு காவிக்கரம் இருப்பதாகவே எனக்கு படுகிறது.
2 months ago
போராடினாலும் போராடாவிட்டாலும் இழக்கவே போகிறாய் போராடி பார்ப்பதில் தப்பில்லையே.
2 months ago
அதைவிட 2000 ரூபாக்காக பொதுமக்கள் கமராவும் கையுமாக அலையப் போகிறார்கள்.
2 months ago
வாகீசன் உமாகரனின் சகோதரர்! ஆய்வாளர் நிலாந்தன் ஒரு அலசல் எழுதியிருக்கின்றார்.
2 months ago
நகரத்தை அண்மித்துள்ள பழைய பூங்காவில் உள்ள நூறாண்டு கால மரங்களை அழித்து... காங்கிரீட் காடாக்குவது பிழை.
2 months ago
நான் நினைக்கிறேன் அவர் உங்கள் அளவு படிக்கவில்லை என…. சரி அதை விடுவோம் அடுத்தவர் படிப்பை பற்றி நாம் கதைத்தால் பிறகு நம்மை இன்னொருவர் நோண்டினால் கதை கந்தலாகி விடும். இந்த கட்டுமானம் அமைவது சரியா, பிழையா உங்கள் நிலைப்பாடு என்ன? சுமன் தரும் தமிழ் ஈழத்தில் வாழ்வதை விட காலம் பூராவும் அனுரவுக்கு காவடி எடுத்து வாழ்வை முடிப்பது சுகமானது😂
2 months ago
2 months ago
பொதுவாக ரப் பாடல்கள் சமுதாய கருத்துகளையும அடிமட்ட மக்களின் அவலங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை வெளிக் கொணர்வதாகவும் இருக்கும். பொப் மாறி யின் பாடல்கள் இன்றும் விரும்பப்படுவதற்கு, அதுவே காரணம். ஆனால் இவரது பாடல்களில் அதைக் காண முடியாது. வெறுமனே அழகு பதுமைகளாக பெண்களை வர்ணிக்கும் பாடல்களும், பக்தி காவடியாடும் பாடல்களுமே இவரது இசையில் மித மிஞ்சி இருக்கும் தமிழ் மொழியை அறிவியல் மொழியாக அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்வதை விடுத்து வெறும் பழமைவாத கருத்துகளை வைத்து தமிழ் வளர்சியை தடுக்கும் பார்ப்பன அடிமைக் கூட்டமாக தமிழர்களை வைத்திருக்கும் மனப்பாங்கை இவர் கொண்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இவரின் இசைத்திறமை பாராட்டத்தக்கதே.
2 months ago
2026 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி விவரம்- தமிழக வீரர்கள் யார் யார்? 21 Dec 2025, 12:52 AM 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று (டிசம்பர் 20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் முனைப்பில் களமிறங்குகிறது. துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறும். இந்தியா, இலங்கையில் இந்த போட்டிகள் நடைபெறும். இந்திய அணி வீரர்கள்: கேப்டன்: சூர்யகுமார் யாதவ் அபிஷேக் சர்மா சஞ்சு சாம்சன் திலக் வர்மா ஹர்திக் பாண்டியா சிவம் துபே அக்சர் படேல் ரிங்கு சிங் ஜஸ்பிரித் பும்ரா ஹர்ஷித் ராணா அர்ஷ்தீப் சிங் குல்தீப் யாதவ் வருண் சக்கரவர்த்தி வாஷிங்டன் சுந்தர் இஷான் கிஷன் சுப்மன் கில் இந்த உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 2026 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் பங்கு பெறும் அணிகள்: குரூப் A: இந்தியா நமீபியா நெதர்லாந்து பாகிஸ்தான் அமெரிக்கா குரூப் B: ஆஸ்திரேலியா அயர்லாந்து ஓமன் இலங்கை ஜிம்பாப்வே குரூப் C: வங்கதேசம் இங்கிலாந்து இத்தாலி நேபாளம். மேற்கிந்தியத் தீவுகள் குரூப் D: ஆப்கானிஸ்தான் கனடா நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவும் இலங்கையும் போட்டி நடத்தும் நாடுகள் என்பதால் டி20 உலகக் கோப்பை தொடர்ல் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ICC T20 உலகக் கோப்பை – சாம்பியன் பட்டியல் வரிசை நாடு / அணி மொத்த வெற்றிகள் வெற்றி பெற்ற ஆண்டுகள் 1 இந்தியா 2 முறை 2007, 2024 2 மேற்கிந்தியத் தீவுகள் 2 முறை 2012, 2016 3 இங்கிலாந்து 2 முறை 2010, 2022 4 பாகிஸ்தான் 1 முறை 2009 5 இலங்கை 1 முறை 2014 6 ஆஸ்திரேலியா 1 முறை 2021 https://minnambalam.com/2026-icc-mens-t20-world-cup-indian-team-squad-details/
2 months ago
97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்- இன்று திமுக மா.செ.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை 21 Dec 2025, 7:19 AM தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை SIR- இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாக்காளர்கள் நீக்கம், மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க திமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீடியோ கான்பரன்ஸ் மூலம் இக்கூட்டம் நடைபெற உள்ளது. https://minnambalam.com/97-37-lakh-voters-deleted-cm-stalin-to-hold-consultation-with-dmk-district-secretaries-today/
2 months ago
கொஞ்சம் மாற்றங்கள் உள்ள இன்னோர் அலசல்.. தமிழ்நாட்டை நோக்கிச்சென்ற தமிழ்த்தேசியப் பேரவை - நிலாந்தன் “சென்னையில் திறவுகோல்” என்ற தலைப்பில் மு.திருநாவுக்கரசு, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 2006ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் இந்தியாவின் வெளியுறவு முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்றால் தமிழகம் பெருமெடுப்பில் கொந்தளிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதாவது டெல்லியைக் கையாள்வதற்கான திறவுகோல் தமிழகத்தில்தான் உண்டு என்ற பொருள்பட கட்டுரையின் சாராம்சம் அமைந்திருந்தது. தமிழக வெகு சனங்கள் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்தளித்து எழுந்தால் இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று கட்டுரை கூறுகிறது. இது எழுதப்பட்டது 18.11.2006 இல். அதாவது 2009 மே மாதத்துக்கு முன். இறுதிக்கட்டப் போரில் தமிழகம் நொதிக்கத் தொடங்கியது. எனினும் அதனை அப்போது இருந்த திமுக அரசாங்கம் மடை மாற்றியது என்றும், அதனால்தான் இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற முடிந்தது என்றும் ஒரு குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு. இக்குற்றச்சாட்டு காரணமாக கலைஞர் கருணாநிதியை இப்பொழுதும் விமர்சிக்கும் ஈழத் தமிழர்கள் உண்டு. இவ்வாறான குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான உறவு பெருமளவுக்கு பலவீனமடைந்திருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாடு ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை; கொந்தளிக்கவில்லை. தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் உருவாக்கப்பட்டமை, ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை போன்ற இரண்டு குறிப்பிடத்தக்க விடயங்களைத்தவிர கடந்த 16 ஆண்டுகளாக தமிழகம் ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை. கடந்த 16 ஆண்டு கால ஈழத்தமிழர்களின் ஐநாமைய அரசியலில்,ஐநா கூட்டத்தொடர்களின்போது இந்திய மத்திய அரசாங்கம் 13ஆவது திருத்தத்தைத்தான் ஒரு தீர்வாக தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. கடந்த ஐநா தீர்மானத்தின் போதும் அதுதான் நிலைமை. கடந்த 16 ஆண்டுகளிலும் இந்தியா ஐநாவில் ஒரு முறை மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. கடந்த பதினாறு ஆண்டுகளிலும் இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்து வருகின்ற பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் கீழ், ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாடுகளில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. ஐநாவில் இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் மாறாத நிலைப்பாடு அதைத்தான் உணர்த்துகின்றது. அவ்வாறு இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தத் தக்க விதத்திலோ அல்லது ஈழத் தமிழர்களோடு தனது சகோதரத்துவத்தை நிரூபிக்கும் விதத்திலோ தமிழ்நாடு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு கொதிக்கவில்லை.கொந்தளிக்கவில்லை. 2009க்குப் பின் திமுகவுக்கு எதிராகவும் ஏனைய திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும் “தமிழ் எதிர் திராவிடம்” என்ற துருவநிலை அரசியலை முன்னெடுக்கும் சீமான், தன்னை ஈழப் போரின் ஆகப் பிந்திய வாரிசாகக் காட்டிக்கொள்கிறார். ஆனால் அவரால் சில பேரணிகளை ஒழுங்குபடுத்தியதற்குமப்பால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழுத் தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் விதத்தில் பேரெழுச்சிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ ஒருங்கிணைக்க முடியவில்லை. எனினும் ஈழத் தமிழர்கள் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்தும் ஒரு பேசு பொருளாக அல்லது பேசப்பட வேண்டிய ஒரு விவகாரமாக இருந்து வருகிறது என்பதைத்தான் நடிகர் விஜய் அண்மையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தெரிவித்த கருத்துக்கள் காட்டுகின்றன. அதாவது தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் சூழல் இப்பொழுதும் உண்டு. ஆனால் அது ஒர் உள்ளுறையும் சக்திதான். அதனை மகத்தான ஒரு மக்கள் சக்தியாக, எழுச்சியாக, கொந்தளிப்பாக மாற்ற சீமானால் முடியவில்லை. திராவிட இயக்கக் கட்சிகளும் அதில் ஆர்வம் காட்டவில்லை. தமிழ்நாட்டில் இறுதிக்கட்டப் போர் வரையிலும் 19க்கும் குறையாத தமிழர்கள் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எந்த ஒரு தமிழ்ச் சமூகமும் அவ்வாறு ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை. ஒரு நீரிணையால் பிரிக்கப்படுகின்ற தமது சகோதர மக்களுக்காக அவ்வாறு அதிக தொகையினர் தீக்குளித்தமை என்பது தமிழகத்தில் மட்டுமே நடந்திருக்கிறது. நவீன அரசியலில் ஒப்புவமை இல்லாத போற்றுதலுக்குரிய தியாகம் இது. முதலாவது முள்ளிவாய்க்கால் நினைவாலயம் தமிழகத்தில் தஞ்சாவூர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சசிகலாவின் கணவருடைய காணியில் கட்டப்பட்டது. தமிழ் இனஅழிப்புக்கு எதிராக உலகின் முதலாவது தீர்மானம் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. எனவே ஈழத் தமிழர்களுக்காக பல விடயங்களை முதலில் செய்தது தமிழகம்தான்; தீக்குளித்தது தமிழகம்தான். அப்படிப்பட்ட தமிழகம் கடந்த 16 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது. இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் சூழலில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையானது கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக ஒரு விஜயத்தை மேற்கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியப் பேரவையில் பங்காளிகளாக இருக்கும் ஏனைய கட்சித் தலைவர்களும் தமிழகம் செல்வதற்குத் தயாராக இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், தவறாசா ஆகிய மூவரும் மருத்துவக் காரணங்களுக்காகப் பயணம் செய்யமுடியாத ஒரு நிலைமை தோன்றியதால் ஐங்கரநேசன் மட்டும் அந்தத் தூதுக்குழுவில் இணைந்தார். இத்தூதுக்குழுவானது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினும் உட்பட ஏனைய கட்சித் தலைவர்களையும் மூத்த ஈழ உணர்வாளர்களும் சந்தித்திருப்பதாகத் தெரிய வருகிறது. 2009க்குப் பின்னர் தமிழ்நாட்டை நோக்கிச் சென்ற ஒப்பீட்டளவில் பெரிய தமிழ்த் தேசிய அரசியல் தூதுக்குழு இதுவெனலாம். ஏற்கனவே தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனித்தனியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை நோக்கித் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகத் திரண்ட ஒரு சந்தர்ப்பம் சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் கைதியாகிய சாந்தனின் விடயத்தில் இடம்பெற்றது. சாந்தனை விடுவிக்கக்கோரி அப்போது இருந்த தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தார்கள். அதன்பின் இப்பொழுது ஒரு தூதுக்குழு தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது. இத்தூதுக்குழு தமிழ் நாட்டுக்குச் சென்றிருக்கும் அதே காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரைச் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இவ்வாறு ஒரே சமயத்தில் பிராந்திய அரசியலைக் கையாள முற்படுவது வரவேற்கத்தக்கது. அரசியல் என்பது சாத்யக்கூறுகளின் கலை.பிராந்தியத்திலும் அனைத்துலக அளவிலும் காணப்படும் வாய்ப்புக்களை கெட்டித்தனமாகக் கையாளாமல் ஈழத் தமிழர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது. கடந்த வாரம்,யாழ்ப்பாணத்தில் நடந்த மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளர்,யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை அகற்ற வேண்டும், இங்கு சீனத் தூதரகத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருக்கும் ஒரு காலச்சூழலில்,கிழக்கைரோப்பாவில், உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதில்லை என்ற முடிவை அறிவித்திருக்கும் ஒரு காலச் சூழலில், தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். https://www.nillanthan.com/8024/
Checked
Sat, 02/21/2026 - 16:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed