புதிய பதிவுகள்2

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

2 months 2 weeks ago
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன். அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும் நிலைக்கு படிப்படியாக முன்னேறி வருவதனை அந்த ஆர்ப்பாட்டம் காட்டியதா?. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதபடியால்தான் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெறமுடிந்தது.தமிழ் பிரதேசங்களிலும் இதுதான் நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே தலைமைப் போட்டி. அது இப்பொழுதும் உண்டு.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் போதைப்பொருள் கட்டமைப்புக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்த திட்டவட்டமான விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளின் விளைவாக எதிர்க்கட்சிகள் உஷாரடைந்து விட்டன. இது ஒரு கட்டத்தில் தங்களுடைய மடியில் கை வைக்கும் என்ற நிலை தோன்றிய போது அவர்கள் ஒன்றாகினார்கள்.ஏனென்றால் பாதாள உலகம், போதைப் பொருள் வாணிபம், ஊழல்வாதிகள் என்று எல்லாவிதமான குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்தின் பின் பதுங்கும் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிகம்.அதன் பொருள்,ஜேவிபி இனவாதம் இல்லாதது, பரிசுத்தமானது என்பது அல்ல. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத் தீவை ஆட்சி செய்து வந்தது எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள்தான். தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது கடந்த ஆண்டில்தான். எனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆட்சிக்கு முன் நிகழ்த்த பல குற்றச் செயல்களுக்கும் எதிர்க்கட்சிகள்தான் அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் வாணிபத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை நெருங்கத் தொடங்கியதன் விளைவாகவும் முன்னாள் ஜனாதிபதியாகிய ரணிலைப் போன்றவர்கள் கைது செய்யப்படும் ஒரு நிலைமை தோன்றிய பின்னரும் எதிர்க்கட்சிகள் உஷாரடைந்தன.அதன் விளைவுதான் நுகேகொட பேரணி. பேரணி நடக்கவிருந்த பாதைகளில் மின்கம்பங்களில் ஆங்காங்கே புற் கட்டுக்கள் கட்டப்பட்டிருந்தன.அதன் பொருள் மாடுகள் அதாவது மந்தைகள் அந்த வழியாக வரப்போகின்றன என்பதுதான்.மேலும் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் உயரத்தில் பொருத்தி வைத்திருந்த ஒலிபெருக்கிகளையும் போலீசார் அகற்றினார்கள்.அப்பொழுது உயர்தரப் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கடந்த திங்கட்கிழமைதான் அந்த பரீட்சை முடிந்தது. எனவே பரீட்சையில் படிக்கும் பிள்ளைகளுக்கு அந்த ஒலி பெருக்கிகள் தொந்தரவாக இருக்கும் என்ற ஒரு பொருத்தமான காரணத்தை போலீசார் கூறினார்கள். எனினும்,எல்லாவற்றையும் தாண்டி எதிர்க் கட்சிகள் ஆயிரக்கணக்கானவர்களை அந்த இடத்துக்கு கொண்டுவந்தன.கடந்த 14 மாதங்களிலும் எதிர்க் கட்சிகள் தங்களை அவ்வாறு ஒருங்கிணைத்தது இதுதான் முதல் தடவை.ரணில் விக்கிரமசிங்க அங்கே இருக்கவில்லை. அவர் ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்தியாவிற்குச் சென்று விட்டார்.ஆனால் அவருடைய கட்சிக்காரர்கள் கலந்து கொண்டார்கள். மஹிந்த வரவில்லை. அவர்களுடைய எதிர்கால வாரிசு நாமல் முன்னணியில் நின்றார். ஒரு வகையில் அது நாமலின் எழுச்சியைக் காட்டிய கூட்டம். அதை மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் “சஜித் பலத்தைக் காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று எழுதியிருந்தார். எதிர்க்கட்சிகள் மத்தியில் தலைமைத்துவப் போட்டி உண்டு. அதுதான் கடந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு ஒரு காரணம். இப்பொழுதும் அதே போட்டி உண்டு. நுகேகொட பேரணியில் நாமல் முன்னிலைக்கு வந்து விட்டார்.அவருடைய தோற்றம்,நடை உடை பாவனை எல்லாவற்றிலும் அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் ஆர்வம் தெரிந்தது. ஆனால் தகப்பனைப் போல தோற்ற மிடுக்கும் சன்னமான குரலும் அவருக்கு இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களை ஒன்று திரளுமாறு நிர்பந்தித்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஒரு பலமான அணியாகத் திரள வேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. ஏனென்றால் இப்பொழுதும் அங்கே தலைமைப் பிரச்சினை உண்டு. யாரை யார் தலைவராக ஏற்றுக்கொள்வது என்ற “ஈகோ”க்கள் உண்டு. அரசாங்கத்துக்கு எதிரான தற்காப்புக் கூட்டுத்தான் அது.எதிர்காலத்தில் ஒன்றாக நின்று ஆட்சி அமைக்கும் கூட்டு என்று கூற முடியாது. திருகோணமலை புத்தர் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பி சேகரித்த சனத்தொகையும் அங்கே உண்டு.அந்தப் புத்தர் சிலை விடயத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கக்கின.அதில் சஜித் முக்கியமானவர்.அந்தச் சிலை விடயம் எதிர்க்கட்சிகளை தமிழ் மக்களுக்கு அம்பலப்படுத்தி விட்டது. ஆனால் திருகோணமலை புத்தர் எதிர்க்கட்சிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்து அம்பலப்படுத்தி விட்டார். சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஒரு ரெஸ்ரோரண்டை அகற்றாமல் விடுவதற்காக உள்ளே கொண்டுவரப்பட்ட புத்தரை அரசாங்கம் முதலில் தெளிவான முடிவெடுத்து அகற்றியது.ஆனால் இனவாதத்துக்கு பயந்து பின்வாங்கியது.அந்த விடயத்தில் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததன்மூலம் அரசாங்கமும் தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டது. நுகேகொட பேரணியில் தென்பகுதியில் உள்ள தமிழர்கள் உதிரிகளாகக் கலந்து கொண்டார்கள்.ஆனால் வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் அங்கே போகவில்லை. தமிழ் மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை தங்களுக்கு உரியதாகக் கருதவில்லை என்பதைத்தான் அது காட்டியது. நாமல் ராஜபக்ச சில வாரங்களுக்கு முன் சுமந்திரனை சந்தித்து தமது ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டிருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு மறுத்துவிட்டது.மறுக்கத்தான் வேண்டும். ஏனென்றால் திருமலைச் சிலை விவகாரம் நாமலையும் ஏனைய எதிர்க்கட்சிகளையும் அம்பலப்படுத்தியிருந்த ஒரு பின்னணியில்,அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சி கலந்து கொண்டு இருந்திருந்தால் அது தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பதாக இருந்திருக்கும். நுகேகொட பேரணியில் தமிழ் மக்கள் கலந்து கொள்ளாமல் விட்டதற்கு காரணம் அரசாங்கத்தை தமிழ் மக்கள் எதிர்க்க விரும்பவில்லை என்பதனால் அல்ல.தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க விரும்பவில்லை என்பதனால்தான். இதில் எதிர்க்கட்சிகளுக்கு கூர்மையான ஒரு செய்தி உண்டு. திருமலை புத்தர் சிலையின் பின்னணியில் தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளின் மீது கோபமாக இருக்கிறார்கள். ஆனால் இதே எதிர்க்கட்சிகளில் ஒன்று ஆகிய ஐக்கிய மக்கள் சக்திக்கு அதாவது சஜித்துக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்டிருந்தார். இப்பொழுது சஜித் யார் என்பதை திருமலைப் புத்தர் காட்டிவிட்டார்.தமிழ் வாக்குகளை சஜித்துக்குச் சாய்த்துக் கொடுத்த சுமந்திரனையும் அவர் அம்பலப்படுத்தி விட்டார். கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்த சுமந்திரன் கிட்டத்தட்ட 14 மாத கால இடைவெளிக்குள் நுகேகொட பேரணியில் சஜித்தை ஆதரிக்கவில்லை. நுகேகொட ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த ஒரு காலச் சூழலில்,கடந்த புதன்கிழமை, தமிழரசுக் கட்சி ஜனாதிபதியை சந்தித்தது. அந்த சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சிதான்.அந்தச் சந்திப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் ஏற்கனவே 2015ல் இருந்து தொடங்கி 2019வரையிலும் உரையாடப்பட்ட இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது என்று அங்கே உரையாடப்பட்டிருக்கிறது. சுமந்திரன் தனது “எக்ஸ்” பக்கத்தில் அதுதொடர்பாகப் பதிவிட்டிருந்தார்.அதாவது ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்று ஒரு புதிய யாப்பைத் தயாரிப்பதுதான் சுமந்திரனின் நோக்கமாகத் தெரிகிறது. ஆனால், கஜேந்திரகுமார் அது ஒற்றை ஆட்சிப் பண்புடைய ஒரு தீர்வு என்று விமர்சிக்கின்றார். அனுர அரசாங்கத்தோடு தமிழரசுக் கட்சி பேசவிருக்கும் தீர்வுத் திட்டம் அதுதானா என்ற கேள்வி இப்பொழுது வலிமையாக மேலெழுகிறது. அவ்வாறு பேசப்பட்ட காலம் எதுவென்று பார்த்தால், நுகேகொட ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்.அதன்மூலம் தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சிகளை நோக்கி தான் வரவில்லை என்பதனை சூசகமாக தெரிவிக்க முற்பட்டதா? அந்தச் சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கியது அரசாங்கம்.நுகேகொட ஆர்ப்பாட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாக அவ்வாறு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து,அந்தச் சந்திப்பின் மூலம்,அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக ஒரு செய்தியை வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம். தமிழரசுக் கட்சியும் அவ்வாறு விரும்பியதா? கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட அதே சுமந்திரன் இப்பொழுது அனுரவோடு சேர்ந்து தீர்வுக்கான பேச்சுக்களில் இறங்கப் போகிறாரா?கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டது தவறு என்பதனை திருமலை புத்தர் நிரூபித்து விட்டார்.அன்றைக்கு சஜித்துக்கு வாக்களித்த தமிழ் மக்களை சஜித் திருமலை புத்தர் விடயத்தில் ஏமாற்றி விட்டார். நுகேகொட பேரணியில் தமிழ்மக்கள் விலகி நின்றமை அரசாங்கத்திற்குச் சாதகமானது.ஆனால் அதனை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளை அல்லது திருமலை புத்தர் சிலை விடயத்தில் அரசாங்கத்தின் தளம்பலான முடிவுகளை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதாக வியாக்கியானம் செய்ய முடியாது. https://athavannews.com/2025/1453627

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!

2 months 2 weeks ago
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். https://athavannews.com/2025/1453641

சாய் பாபாவின் தபால் தலை வெளியீடு.

2 months 2 weeks ago
சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: நினைவு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார் புட்டபர்த்தி, நவ. 19: புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் அவர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார். சாய்பாபாவின் நினைவு நாணயத்தையும், தபால் தலையையும் அவர் வெளியிட்டார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23–ந்தேதி சத்யசாய் பாபா பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார். https://makkalkural.net/news/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/

இனித்திடும் இனிய தமிழே....!

2 months 2 weeks ago
Paranji Sankar · இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு. உதாரணமாக, "தேர் ஓடுவது எதனால்? தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில், "அச்சாணியால்" என்பது. தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது அச்-சாணியால் என்று பதிலில் விளக்கம் கிடைக்கும். "நீ வசிக்கும் ஊர் எது? உன் காலில் காயம் வந்தது எப்படி?" என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது. "சாம்பார் மணப்பதேன்? உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் "பெருங்-காயத்தால்" என்பது. இன்று ஆங்கில வழிக் கல்வி பெருகிவிட்ட காலம். முன்னர் பெரும்பாலானோர் தமிழ்வழிக் கல்வியில் பயின்றபோது இத்தகைய சொல் விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும், சிந்தனைத் திறனையும் ஒரு சேர வளர்த்தன... இடைக்காலத்தில் வாழ்ந்த இளஞ்சூரியன், முதுசூரியன் என்ற இரட்டைப் புலவர்களில் ஒருவர் கண் பார்வையற்றவர், ஒருவர் கால் ஊனமானவர். கால் ஊனமானவரைக் கண்பார்வையற்றவர் தோளில் சுமந்து செல்வார். கால் ஊனமானவர் தோளில் இருந்தவாறே எப்படிச் செல்ல வேண்டும் என வழி சொல்வார். இவ்விரு புலவர்கள் எழுதிய வெண்பாக்கள் பலவும் இதேபோல் சொல் விளையாட்டு பாணியில் அமைந்தவை தான். ஒருவர் வெண்பாவின் இரண்டடியில் கேள்வி கேட்க மற்றவர் அடுத்த இரண்டடிகளில் பொருத்தமான பதில் சொல்வார். மதுரைத் தெப்பக் குளத்தில் கால் ஊனமானவர் படியில் அமர்ந்து பார்த்தவாறிருக்க, கண்பார்வை அற்றவர் தம் துணியை நீரில் அலசினார். அப்போது துணி குளத்தில் நழுவி எங்கோ சென்றுவிட்டது. அதைப் பார்த்த கால் ஊனமானவர்? "அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ?" - எனக் கேள்வி கேட்டார். அதாவது, தண்ணீரில் துணியைப் போட்டு துவைக்கிற சாக்கில் அடிஅடியேன்று அடித்தால் அது (கோபித்துக் கொண்டு) நம்மை விட்டுப் போகாதா என்பது அவர் கேள்வியின் பொருள். அதற்கு பார்வையற்றவர் சொன்ன பதில் இதுதான்.. "எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதூரைச் சொக்கலிங்கம் உண்டே துணை" - என்று வெண்பாவை நிறைவு செய்தார். அதாவது கலிங்கம் என்ற சொல்லுக்குத் துணி என்று பொருள். இந்தத் துணி போனால் என்ன? மதுரைச் சொக்கலிங்க மாகிய தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்பதே அவரது பதில். பார்வையற்றிருந்தாலும் அவரது தெய்வ நம்பிக்கையின் ஆழம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இப்போது முழு வெண்பாவையும் பார்க்கலாம்.... "அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத்தப்பினால் நம்மையது தப்பாதோ? - எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை". எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம், திருக்குறளைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டார். "திருக்குறள் 1330 குறள்கள் அல்லவா? திருக்குறளைத் திருக்குறள்கள் என்று தானே சொல்லவேண்டும்? அப்படியிருக்க பன்மையில் சொல்லாமல் ஏன் ஒருமையில் திருக்குறள் என்று சொல்கிறோம்?" என்று கேள்வி கேட்டார். அதற்கு சுஜாதா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? "திருக்குறள் '#கள்'ளை அனுமதிப்பதில்லை". Voir la traduction

சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 9 பேர் உயிரிழப்பு!

2 months 2 weeks ago
சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 9 பேர் உயிரிழப்பு! நாடுமுழுவதும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவைத்துள்ளார். இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453616

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

2 months 2 weeks ago
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை! ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடவில்லை. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக அழைத்து போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பல மாதங்கள் கழிந்தும், இந்த விவகாரம் எந்த முன்னேற்றமுமின்றி அப்படியே இருந்தது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக ரஷ்யாவை பணிய வைக்க, அதனிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான வரியை அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் . இருப்பினும் ரஷ்யா மசிந்து அடிபணியவில்லை. இதன் தொடர்ச்சியாக, மேற்காசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துவதற்கு முன்மொழியப்பட்ட அமைதி திட்டம் போன்று, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா முன்வைத்துள்ள, இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை போர் நிறுத்தத்திற்கான துவக்க புள்ளியாக ஏற்றுக் கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைன் இந்த சமாதான திட்டத்தை ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறும் எனவும், குபியான்ஸ்க் நகரை கைப்பற்றியது போல் ஏனைய முக்கிய பகுதிகளையும் கைப்பற்றுவோம் எனவும் புடின் வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளார். இதேவேளை, டிரம்பின் குறித்த சமாதான திட்டத்தில் ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளதால், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தன்னுடைய மதிப்பை இழக்க நேரிடும் எனவும், இந்த சமாதான ஒப்பந்தத்தை ஏற்க வலியுறுத்தினால், நீண்டகால நட்பை அமெரிக்கா இழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் நலன்களுக்கு துரோகம் இழைக்காத மாற்று திட்டங்களை முன்வைக்க விரும்புவதாகவும் அவர் உறுதியளித்து உள்ளார். மேலும், இந்த முன்மொழிவு ஐரோப்பிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாகவும், உக்ரைனின் இறையாண்மையையும், பரந்த பாதுகாப்பையும் பலவீனப்படுத்தக்கூடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்நிலையில், இந்த சமாதான திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்குமாறு டிரம்ப் நிர்வாகம் உக்ரைனை வலியுறுத்திஉள்ளது. https://athavannews.com/2025/1453607

இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி

2 months 2 weeks ago
நன்றி அண்ணா பகிர்விற்கு. கடந்த வருடமோ/ இந்த வருட ஆரம்பத்திலா என நினைவில்லை, காரைநகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் எலும்புமச்சை மாற்று சிகிச்சைக்காக 1.5 கோடி ரூபா சேர்க்க தொடங்கி பின்னர் இறந்துவிட்டார். எங்கட மக்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்விற்கு இந்த பதிவு பயன்படும்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியது அவசியம் ; ஸ்கொட்லாந்து முதலமைச்சரிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்து

2 months 2 weeks ago
23 Nov, 2025 | 10:41 AM (நா.தனுஜா) இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னிக்கிடம் வலியுறுத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் (முதலமைச்சரே ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் தலைவரும் அரசாங்கத்தின் சகல கொள்கைகள், தீர்மானங்களுக்குப் பொறுப்பானவரும் ஆவார்) ஜோன் ஸ்வின்னிக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது சுமார் 16 வருடங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்துவரும் மிகமோசமான நிலைவரம் தொடர்பில் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும், இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியுடனான தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், தமிழ் மக்களுக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமான அரசியல் அபிலாஷைகள் என்பவற்றை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு ஸ்கொட்லாந்து தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231170

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

2 months 2 weeks ago
ட்ரவிஸ் ஹெட் அசத்தலான சதம், முதலாவது ஆஷஸ் டெஸ்டில் 2 நாட்களில் அவுஸ்திரேலியா வெற்றி; கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு வருவாயில் பெரு நட்டம் Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 11:47 AM (நெவில் அன்தனி) பேர்த் விளையாட்டரங்கில் இரண்டே நாட்களில் நிறைவுக்கு வந்த முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்ரவிஸ் ஹெட் குவித்த ஆட்டம் இழக்காத அதிரடி சதத்தின் உதவியுடன் இங்கிலாந்தை 8 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இந்த டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமையன்று பலம் வாய்ந்த நிலையில் இருந்த இங்கிலாந்து மிக மோசமாக தோல்வி அடைந்தது. மிச்செல் ஸ்டார்க் மிகத் துல்லியமாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து (58 - 7 விக்.) அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார். இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை அடைந்துள்ளது. இது இவ்வாறிருக்க, இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தால் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரவு, செலவுகளை சமநிலைப்படுத்தும் வகையில் இங்கிலாந்துடான ஆஷஸ் டெஸ்ட் தொடரை கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஒதுக்கியிருந்தது. ஆனால், குறுகிய டெஸ்ட் போட்டிகள் கருப்பொருளாக மாறினால் அது மிகவும் கடினமான சூழலை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டி 2 நாட்களில் முடிவடைந்ததால் அவுஸ்திரேலியாவுக்கு 3ஆம், 4ஆம் நாட்களில் கிடைக்கவிருந்த 3 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வருவாய் இல்லாமல் போய் நட்டம் ஏற்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய முதலாம் நாளன்று 19 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவுஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பென் ஸ்டோக்ஸ் திறமையாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்திருந்தார். இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா மேலதிகமாக 9 ஓட்டங்களைப் பெற்று கடைசி விக்கெட்டை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 164 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு 205 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட் 83 பந்துகளில் 16 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 123 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவை இரண்டு நாட்களுக்குள் வெற்றி அடையச் செய்தார். ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (ஹெரி ப்றூக் 52, ஒலி போப் 46, ஜமி ஸ்மித் 33, மிச்செல் ஸ்டார்க் 58 - 7 விக்., ப்றெண்டன் டொகெட் 27 - 2 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 132 (அலெக்ஸ் கேரி 26, கெமரன் க்றீன் 24, ட்ரவிஸ் ஹெட் 21, பென் ஸ்டோக்ஸ் 23 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 45 - 3 விக்., ஜொவ்ரா ஆச்சர் 11 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (கஸ் அட்கின்சன் 37, ஒலி போப் 33, பென் டக்கட் 28, ப்றைடன் கெயார் 20, ஸ்கொட் போலண்ட் 33 - 4 விக்., ப்றெண்ட்ன் டொகெட் 51 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 55 - 3 விக்.) அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 205 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 205 - 2 விக். (ட்ரவிஸ் 123, மானுஸ் லபுஷேன் 51 ஆ.இ., ஜேக் வெதரோல்ட் 23, ப்றைடன் கெயார் 44 - 2 விக்.) https://www.virakesari.lk/article/231189

பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்

2 months 2 weeks ago
மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு இரண்டாவது நேரடித் தோல்வி 23 Nov, 2025 | 04:39 AM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தானுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கை 7 விக்கெட்களால் தோல்வி அடைந்தது. ஏற்கனவே ஸிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்த இலங்கைக்கு எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் மிகப் பெரிய வெற்றிகளை ஈட்டினால் மாத்திரமே இறுதிப் போட்டிக்கு செல்லக்கூடியதாக இருக்கும். சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் ஜனித் லியனகே 41 ஓட்டங்களையும் குசல் ஜனித் பெரேரா 25 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் காமில் மிஷார 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். துடுப்பாட்டத்திற்கு கடினமாக அமைந்த ஆடுகளத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேற பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படுகிறது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் சஹிப்ஸாதா பர்ஹான் 45 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 80 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். சய்ம் அயூப் 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: மொஹமத் நவாஸ் https://www.virakesari.lk/article/231152

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தின் ஆற்றுப்படுத்தல் என்ன? - துரைராசா ரவிகரன் எம்.பி. கேள்வி

2 months 2 weeks ago
23 Nov, 2025 | 11:24 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து தற்போது தனித்திருக்கும் பல ஆண்டுகாலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு அரசாங்கத்தின் வரவு , செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இத் தீவிலே ஆயுதங்களை விரும்பி ஏற்ற இனமல்ல எங்கள் இனம். அரசியல் வழியில் போராடித்தோற்று ஆயுதங்களை ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். 2009 உடன் ஆயுதமும் மௌனிக்கப்பட்டது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே மாறிவரும் அரசுகள் முயல்வதாக அறிக்கைகள் காட்டுகின்றன. செய்திகளில் அரசுகளின் சார்பாளர்களாக நீங்கள் மாறி மாறி எங்களை ஏமாற்றுகிறீர்கள். எங்கள் அயல் வீட்டுப் பிள்ளை – தம்பி ஆனந்தசுதாகரின் மகன் மற்றும் மகளைப் போல பிறந்தது முதல் இறக்கும் வரை பிள்ளைகளும், சகோதரர்களும்,மனைவிகளும், கணவர்மாரும், தந்தையரும் தாய்மாரும், பாட்டன், பாட்டி மாருமாக ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இன்னமும் வடுக்களோடு தான் நகர்கிறோம். எங்களுக்கு ஆரோக்கியமான சமூக வாழ்வுக்கான கதவை உங்கள் அரசு எப்போது திறக்கப்போகிறது. இந்தத்தீவின் நல்லிணக்கத்துக்கான முதற்படியே – எங்களுக்காக குரல்கொடுத்து இப்போதும் சிறையில் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைதான். தயவுசெய்து எங்கள் உறவுகளை விடுவித்து நல்லிணக்கச் சைகையை காட்டுங்கள். உங்கள் வரவு ,செலவுத்திட்டம் முன்மொழியும் ஆரோக்கிய வாழ்வுக்கான வழியை ஈழத்தமிழர்களுக்கும் திறந்து விடுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/231171

தமிழ் மொழி தொடர்பில் கேள்வி எழுப்பிய அநுர

2 months 2 weeks ago
Published By: Digital Desk 1 23 Nov, 2025 | 10:37 AM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மொழியில் குறிப்பிடுமாறும் வலியுறுத்தியுள்ளார். இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு இலங்கையர் தினம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12, 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு பற்றி சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, புத்தசாசன அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பிலான அறிக்கையொன்று ஜனாதிபதி உட்பட சிறுபான்மை பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் அதிகமாக ஆங்கிலமொழியிலேயே விவரிப்புக்கள் காணப்பட்டிருந்தன. இதனை அவதானித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சொற்ப நேரத்திலேயே அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரடியாகவே சுட்டிக்காட்டி குறித்த விடயங்கள் ஏன் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அதிகாரிகள் ஆங்கில மொழியில் நாங்கள் அளிக்கையை தயாரித்துள்ளதாக பதிலளித்தபோது, கட்டாயமாக தமிழ் மொழியில் விடயங்களை விவரிக்கும் வகையில் தயாரிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இதனையடுத்து கலந்துரையாடல் ஆரம்பித்தபோது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த அறிக்கையில் தமிழ் மொழி குறைவாக காணப்படுவது தொடர்பில் தான் கேள்வி எழுப்பவிருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார அதனை அவதானித்து வெளிப்படுத்திய கரிசனைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231165

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கையின் இன்றியமையாத பங்கு; இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் விளக்கம்

2 months 2 weeks ago
Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 10:33 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்கிறது. எனவே கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார். இந்து சமுத்திரத்தில் மூலோபாய நிலைப்பாடு கொண்ட நாடாக இலங்கை இருப்பதால், அதனை ஒத்துழைப்பு கடல்சார் கண்காணிப்புக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக, இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நடத்திய இருதரப்பு கலந்துரையாடல் ஆகும். இரு நாடுகளும் பரஸ்பர நலன் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தின. கொழும்பு பாதுகாப்பு மாநாடு கூட்டம், இலங்கை - இந்திய பாதுகாப்புப் பங்காளித்துவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வந்துள்ள நிலையில், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இந்த மாநாட்டில் ஆற்றிய உரை, பிராந்தியத்தின் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கூர்மையாக எடுத்துக்காட்டியது. உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்வதால், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று கூறினார். இந்தியப் பெருங்கடலை 'நமது மிகப்பெரிய பகிரப்பட்ட பாரம்பரியம்' என்று வலியுறுத்திய தோவால், பிராந்திய கடற்பரப்பை பாதுகாப்பதற்காக உறுப்பு நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டவிரோத கடத்தல், கடற்கொள்ளை மற்றும் பிராந்திய வல்லரசுப் போட்டி ஆகியவை மீண்டும் எழுந்துள்ள நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய, திறந்த, விதிகளின் அடிப்படையிலான கடல்சார் ஒழுங்கின் அவசியத்தையும் இதன் போது அவர் வலியுறுத்தினார். இது இலங்கையின் நிலைப்பாட்டிற்கும், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்திற்கும் வலு சேர்க்கிறது. இந்த மாநாட்டில், ஆழ்கடல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல், மற்றும் பேரிடர் நிவாரணத்தில் கூட்டுச் செயல்பாடு ஆகிய முக்கியத் தூண்களின் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஐந்து தூண்களிலும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மூலம் கூட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231176

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

2 months 2 weeks ago
முதல் STF ல இருந்தவராம் மஹிந்தவுக்காக உயிரையும் குடுப்பாராம் @ island ஒரு சின்ன உதாரணம்...நாமலின் நுகேகொட ஊர்வலத்தில்

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

2 months 2 weeks ago
அய்யா ..இந்த இரண்டிலும் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் .. அதாவது புலம்பெயர்ந்தவர்கள் ..பொத்திக்கொண்டு இருந்தால் சமாதானம் தன்னுடையபாட்டில் வரும் ...இதையும் நீங்கள் 16 வருசமா எழுதிறியள்..உங்கடை நம்பிக்கைக்குரிய சிங்கள சனாதிபதிகள் .. மகிந்த ,மைத்திரி ,ரணில், கோட்டா ...இப்ப .அனுர ..இவர்களில் யாராவது ஒருதர் ...இனப்பாகுபாட்டை ஒழிக்க ஏதாவது முயற்சி எடுத்தார்களா.... இல்லை ..அப்ப உள்ள உங்கடை சனாதிபதி அனுரவின் ...கடந்த 2 நாள் ...செயல்பாட்டை எடுப்பம் ...தூக்கின புத்த சிலையை ..ஒருநாளில் நவதுவாரங்களை பொத்தியபடி பழையைடத்தில் வைத்துவிட்டு போகிறார்...தையிட்டியில் ..கட்டிடம் கட்டுகிறார்..குருந்தூர் மலையில் காணி பிடிக்கிறார்...மட்டக்கிளப்பு முருகன் கோவிலில் புத்த சிலைவைக்கிறார் ...நாமலின் ஊர்வலத்தில் பட்டவர்த்தனமாக தமிழனை கொல்லுவோம் ..வெட்டுவோம் என்று கோசமிடுகின்றார்கள் ...இதற்கானகாணொலிகள் .. இருந்தும் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா....இப்படி ஆயிரம் என்னால் சொல்லமுடியும் ...நீங்கள் .. இங்கு கருத்திடுவதும் ..அர்ச்சனா பார்லிமெண்டில் சத்தம் போடுவதும் ஒன்று...அதாவது அர்ச்சனா புலிபோல நடித்து ...புலிகளை விற்கிறார் ...நீங்கள் தமிழர் மேல் அனுதாபம் கொள்வதுபோல.. தழருக்கு விடிவு ஏற்படுத்தவோ...அல்லது ..பிரச்சினை பிரச்சாரப் படுத்துவதை ...நரித்தனமாக தடுப்பதுபோல்தான் இருக்கிறது உங்கள் கருத்துக்கள் ... கனடாவில் நினைவுத்தூபி...இப்பகொடி ..இது அவர்களால் முடிந்தது ...அதாவது எமது பிரச்சினைகளை உலகறியச் செய்ய சின்ன உதவி....இதன செய்யாமல்விட்டால் ..நம்மினம் நாட்டில் நின்மதியாக இருக்கும் என்றால் செய்யாமல் விடலாம் ...அதுதான் இல்லையே ...ஏன் அதை செய்யக்கூடாது ..என்பதை இலங்கையில் கடந்த 2 நாளில் நடந்த சம்பவத்துடன் ..விளக்க முடியுமா ...அது முடியாது...நான் ஒரு பத்தி எழுத்தளானோ..பத்திரிகை காரனோ அல்ல ..சாதாரண .. பத்திரிகை படிப்பவன் ...அதிகம் எழுதத் தெரியாதவன் ...இந்த கருத்துக்கு .. உங்களுடன் பல ஜம்பாவான்கள் களத்தில் குதிப்பர் ... என்பது தெரியும் ...என்னுடைய நியாயம் இது.....அவ்வளவுதான்...
Checked
Fri, 02/13/2026 - 05:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed