புதிய பதிவுகள்2

உயிரை பறிக்கும் “மாவா”!!

2 months 2 weeks ago
1985 கால பகுதிகளில் இல்லை தோழர், இது 1989 பகுதிகளில் ஆரம்பித்து இருக்க வேண்டும் டிஸ்கி இருந்தால் பகிடி தலைவர் அதையும் (மாவா) சேர்த்திருப்பார் .. மண்ணுகேத்த பொண்ணு (1985)

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்

2 months 2 weeks ago
யாரப்பா அது குளியறையில் பாட்டு பாடுறது.. அப்புறம் ஹம்மிங்க் செய்வது ..? மருந்தகத்தில் காச கொடுத்து ப்ரசர் குளிசை வாங்குறீங்க.. மன வலி போக்கும் என்னுடைய இசை மருந்துக்கு காச கொடுத்துட்டு அப்புறம் நீங்க கண்டினியு பண்ணுங்க.. 😁

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

2 months 2 weeks ago
உண்மையில் நான் எழுதியது பகிடி இல்லை. இது என்னால் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். உங்களுக்கு நினைவிருக்கலாம், அத்தனை எதிர் கருத்து இருந்த போதும் தான் அரசியலில் இறங்க யோசிப்பதாக நெடுக்ஸ் சொன்னபோது அதை நான் வரவேற்றேன். அப்படியாவது ஒரு வினைதிறானவர் முன்னுக்கு வரவேண்டும் என்பதால். என் போன்றவர்களை நம்பினால் இன்னும் அழிவே மிஞ்சும். நீங்கள் 2017 க்கு பின் கோஷானின் கருத்து எதையும் வாசிக்கவில்லையா? இதில் எந்த கடும்கருத்து நிலையும் எனக்கு இல்லை.

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

2 months 2 weeks ago
எனது பார்வையில் தமிழருக்கு அதிகபட்ச நன்மை தந்திருக்கக் கூடிய அரசியல் தீர்வை உருவாக்குவதற்கான அருமையான இறுதிச் சந்தர்ப்பம் 2002 பேச்சுவார்ததைகள். அதை உதைத்து தள்ளிய பின் இனி செய்யக்கூடியது ஒன்று தான், தமிழரசுக் கட்சியானது எப்படி இனவாதத்தை எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளை காண முயலாமல், மக்களுக்கு இனவாத பூச்சாண்டி காட்டி மக்களை உசுப்பேற்றி தங்கள் பின் வந்த இரண்டு தலைமுறையை நாசப்படுத்தியதோ அதே போல் நாமும் ஏற்கனவே தோல்வியடைந்த. எமது அணுகுமுறைகளை மாற்றாமல் அதை அப்படியே தொடர்ந்து அதே பூச்சாண்டி காட்டி மக்களை உசுப்பேற்றி அடுத்த தலைமுறையையும் நாசப்படுத்தி விட்டு அந்த மகிழ்வுடன் நிம்மதியாக கண்ணை மூடுவது தான்.

🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”

2 months 2 weeks ago
🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul” ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களே காற்றில் அலையும் ஜீவன்களே அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்! உங்கள் துன்பம் மறக்கமுடியாதது உங்கள் பெயர்கள் மறையமுடியாதது உங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்! குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும் கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும் நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும் நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்! உங்களை கைவிட்ட உலகிற்கு இந்த தீபம் வழிநடத்தட்டும்! நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்! முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களே நாங்கள் உங்களைப் போற்றுகிறோம் உங்களுக்காகப் பேசுகிறோம்! ஒவ்வொரு தீபத்திலும் ஒவ்வொரு கண்ணீரிலும் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் உங்களை நினைவில் கொள்கிறோம்! 🕯️ உங்கள் ஒளி நிலைத்திருக்கட்டும் 🕯️ உங்கள் உண்மை உயரட்டும் 🕯️ உங்கள் நினைவு என்றென்றும் ஒளிரட்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “A Lamp for Every Soul” O spirits of Mullivaikkal, restless in the wind, gentle in the waves we bow our heads before you. May your suffering never be forgotten. May your names never fade from memory. May your dreams live through us. To the mothers who shielded their children, to the babies who never saw the sunrise, to the youth who carried only hope we light this lamp. May this flame guide you where the world failed you. May peace hold you in the embrace we could not give. O souls of Mullivaikkal we honour you. We speak for you. We remember you in every lamp, every tear, every heartbeat. 🕯️ Let your light endure. 🕯️ Let your truth rise. 🕯️ Let your memory shine forever. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1910 [🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”] https://www.facebook.com/groups/978753388866632/posts/32502659262715967/?

நல்லூர் மாவீரர் நினைவாலய ஆவணக் காப்பகத்தின் "மாவீரர் பட்டியல் மேம்படுத்தல்" உம் வேண்டுகோளும்

2 months 2 weeks ago
எனது ஆவணங்கள் நல்லூரில் பதிவிடப்பட்டுள்ளது, மிகுந்த மகிழ்வாக உள்ளது. எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போய் எங்கடை அடுத்த தலைமுறைகளுக்கு வரலாற்றை கற்பியுங்கோ. 😍🤩 வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் | ஆவணம் தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து வீரச்சாவடைந்த போராளிகளின் புகழுடல்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது குறித்து இவ் ஆவணத்தில் (50+பக்கங்கள்) அலசப்பட்டுள்ளது. மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 2 weeks ago
வணக்கம் சுவி..நலமா? சென்னை MRTS railway மேம்பாலம் டிசம்பரில் திறக்க உள்ளது. துறைமுகம்-மதுரவாயில் மேம்பால வேலைகள் தூரம் நீட்டிப்பு செய்யப்பட்டு, வேலைகள் மந்தமாக நடக்கின்றன. சென்ற மாதம் சென்னை சென்றபோது பார்த்தேன். மக்கள் பாவனைக்கு வர இன்னும் 5 வருடங்கள் ஆக்கும்.

நல்லூர் மாவீரர் நினைவாலய ஆவணக் காப்பகத்தின் "மாவீரர் பட்டியல் மேம்படுத்தல்" உம் வேண்டுகோளும்

2 months 2 weeks ago
நல்லூர் நினைவாலயத்தில் செய்ய வேண்டிய திருத்தங்கள்: நல்லூர் மாவீரர் நினைவாலய ஆவணக் காப்பகத்தை அறிந்தவர்கள் இத்திருத்தங்களை அவர்களிடத்தில் தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லைப்படை முதல் பெண் மாவீரர் வீரவேங்கை ரதி ஆவார் (வீரச்சாவு: 1999). --> எனினும் அங்கே தவறுதலாக வீரவேங்கை தெய்வானை (வீரச்சாவு: 2000) என்று எழுதப்பட்டுள்ளது. https://eelam.tv/watch/border-force-first-woman-maaveerar-veeraveengkai-rathi-%E0%AE%8E%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A4_BronIRZ7v31JVGZ.html கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் ஒலிமுகம் பிழையாக உள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் ஒலிமுகம் பிழையாக உள்ளது. (தவறுதலாக ஈச்சங்குளத்தினுடையதை போட்டுள்ளீர்கள்) ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தின் ஒலிமுகம் பிழையாக உள்ளது. (தவறுதலாக கிளி. ஒலிமுகத்தை போட்டுள்ளீர்கள்) பிரின்ட் அடிக்கும் போது மாறி அடித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். தயவு கூர்ந்து சரி செய்துகொள்ளுங்கள். எழுத்துப்பிழை: "சிக்கைப்பட்ட" --> சிதைக்கப்பட்ட துயிலுமில்லங்கள்

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 2 weeks ago
மிக்க நன்றி ஈழப்பிரியன்.. நலமே. தாங்கள் நலமா? அரசியலில் பிடிப்பும் ஆர்வமும் எப்பொழுதும் இல்லை.ஈழத்தின் அரசியல் புரியாத ஒன்று. ஆகவே முன்பு போல் இங்கே களமாட இயலவில்லை, ஐயா.

இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி

2 months 2 weeks ago
இன்னும் பல வருடங்கள் ஆயுள், ஆரோக்கியத்தோடு இருவரும் வாழ வேண்டும்.இதை விட வேறு எப்படி சொல்வது.,மிகவும் நெகிழ்வான சந்திப்பாக அமைந்திருக்கும்.!

நல்லூர் மாவீரர் நினைவாலய ஆவணக் காப்பகத்தின் "மாவீரர் பட்டியல் மேம்படுத்தல்" உம் வேண்டுகோளும்

2 months 2 weeks ago
நல்லூரில் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நல்லூர் மாவீரர் நினைவாலய ஆவணக் காப்பகத்தின் மாவீரர் பட்டியல் மேம்படுத்தலிற்கான படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படிவத்தின் மூலம் தவறவிடப்பட்ட மாவீரர்களின் பெயர் விரிப்புகள் மற்றும் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை நாங்கள் இப்படிவத்தில் எழுதி நல்லூரில் உள்ள அவர்களின் பணிமனையில் கொண்டுசென்று கையளிக்கலாம். எனினும் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிப்போரிற்கான மின்னஞ்சல் முகவரி விரைவில் வெளியிடப்படும் என்றும் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. www.tamilwln.com

இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி

2 months 2 weeks ago
இதுபோன்று தானம் கொடுத்தவரும் பெறுபவரும் சந்திப்பது அரிதிலும் அரிது .......உங்கள் நண்பரின் வாழ்க்கையில் அது நடந்திருக்கு . ........! தகவலுக்கு நன்றி நிழலி .......!

இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி

2 months 2 weeks ago
உங்கள் நண்பர் மறுபிறவி எடுத்துள்ளார். தானம் கொடுத்தவை காலம் காலமாக போற்ற வேண்டும். எமது இனத்தில் இரத்ததானம் செய்வதே மிகக் குறைவு.

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

2 months 2 weeks ago
வானத்தில் பறக்க வேண்டியதை… கீழே விழுத்தி, ஒரு அழகிய வாண வேடிக்கையே காட்டியதற்கு… பரிசு கொடுக்கத்தான் வேண்டும். பாரத் மாதாகீ ஜே….

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

2 months 2 weeks ago
இந்திய விமானப்படைக்கே பரிசு கொடுக்க வேண்டும். விமானத்தையே விழுத்தி சாகசம் புரிந்துள்ளனர்.

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

2 months 2 weeks ago
அந்த விமானம் புறப்படுவதற்கு முன், அதன் எரிபொருள் தாங்கியிலிருந்து எரிபொருள் வழிந்து கொண்டிருந்ததை… எவரும் பெரிதாக கவனத்தில் எடுக்கவில்லை என்கிறார்கள்.
Checked
Fri, 02/13/2026 - 05:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed