2 months 3 weeks ago
"கண்ணியத்தை இழப்பதா? அல்லது கூட்டாளியை இழப்பதா?" அமெரிக்காவின் திட்டங்களால் கடும் வேதனையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி! Sun News Tamil
2 months 3 weeks ago
அண்ணை சும்மா வாவண்ணை உன்னுடைய கப்பாசிட்டி எனக்கு தெரியும் பின்னாடி மட்டும் இருந்து கொண்டு எனக்கு ஜாடை மட்டும் காட்டண்ணை .... யாரவது ஒருத்தன் பூனைக்கு மணியை கட்டுவமண்ணை. நீயும் நானும் புலம் பெயர் நாட்டில் இருந்து குழறு வதால் ஒன்றும் நடக்காதண்ணை. சோம்பறித்தனத்தை இனத்துக்காக ஒதுக்கி வையன்னை. டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை நாட்டில் தான் நிற்பேன். வாவண்னை ஒரு கை பார்போம். ,பகிடிக்காக இல்லை . கோசான் , ஐஸ்டின் அண்ணை போன்ற intellectuals உம் நமக்கு அவசியம்.
2 months 3 weeks ago
வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் முதல்நாள் நிகழ்வு 21 Nov, 2025 | 02:02 PM மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான வெள்ளிக்கிழமை (21) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்திருந்தனர். இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231006
2 months 3 weeks ago
இந்தப் படத்தில்... வைத்தியசாலையில் உள்ள பொலிசாருடன் மல்லுக்கட்டிய, துவேச பிக்குகளுடன், துலார குணதிலக்க... பச்சை சேர்ட்டுடன் காணப்படுகின்றார். இந்தப் பட ஆதாரங்களே... இவனை கைது செய்ய போதுமானது.
2 months 3 weeks ago
Nov 21, 2025 - 03:54 PM 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் கல்வியாண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை ரீதியான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இனுள் பிரவேசிப்பதன் ஊடாக, குறித்த வெட்டுப் புள்ளிகள் தொடர்பான முழுமையான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்கு ஏற்ப தமக்குக் கிடைத்துள்ள பாடசாலை எது என்பதனை அறிந்துகொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக https://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்தினூடாகப் பிரவேசித்து, தமக்கு ஒதுக்கப்பட்ட பாடசாலையைத் துல்லியமாகப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, தரம் 06 இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், மேற்குறிப்பிட்ட இணையத்தளங்களைப் பயன்படுத்தி உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://adaderanatamil.lk/news/cmi8prbeu01uno29ns8uz7mno
2 months 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த மே மாதம் நடந்த இந்தியா, பாகிஸ்தான் மோதலில் சீன ஆயுதங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கூறுகிறது (கோப்புப் படம்) 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் மேலாதிக்கம் செலுத்தியதாகவும், சீனா தனது ஆயுதங்களைச் சோதித்துப் பார்க்கவும் அவற்றை ஊக்குவிக்கவும் இந்த மோதலைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனால், இந்த நான்கு நாள் மோதலில், பாகிஸ்தான் எல்லையில் இருந்த பல "பயங்கரவாத கட்டமைப்புகளை" அழித்ததாகவும், இந்த ராணுவ மோதலில் இந்திய ராணுவம் "வெற்றி அடைந்ததாகவும்" இந்தியா தெரிவித்தது. அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையத்தின் (யு.எஸ்.சி.சி) அறிக்கையில் 108, 109 ஆகிய பக்கங்களில், "பிரெஞ்சு ரஃபேல் ஜெட் விமானங்கள் குறித்து 'அவதூறு' பரப்புவதற்கும் தனது சொந்த ஜெ-35 போர் விமானங்களை "ஊக்குவிப்பதற்கும்" போலி சமூக ஊடக கணக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தி சீனா ஒரு 'திட்டமிடப்பட்ட பிரசாரத்தை' தொடங்கியது" என்று கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஓரிடத்தில், "நான்கு நாள் மோதலின்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் அடைந்த வெற்றியில் சீன ஆயுதங்கள் பங்கு வகித்தன" என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதியன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை 'கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்' என்றும் அந்த அறிக்கை விவரித்துள்ளது. இந்த அறிக்கை இந்தியாவில் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. இது இந்தியாவின் ராஜதந்திரத்திற்குப் பெரும் பின்னடைவு என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது. இதற்கிடையில், பாஜக மறைமுகமாக எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து விமர்சிக்கிறது. பட மூலாதாரம், Getty Images அறிக்கை என்ன சொல்கிறது? மொத்தமாக 745 பக்கங்களைக் கொண்ட அறிக்கையின் ஒரு பகுதி, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் சீனாவின் மூலோபாய செல்வாக்கு அதிகரிப்பது பற்றிப் பேசுகிறது. அதில், இந்தியா, சீனா இடையிலான பதற்றத்தைக் குறைக்க நடைபெற்ற உயர்மட்ட ராணுவ சந்திப்புகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட தியான்ஜின் பயணமும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அதில், சீனா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், பாகிஸ்தானின் ராணுவ நெருக்கடியைத் தனது பாதுகாப்புத் திறன்களைப் பரிசோதிக்கவும் மேம்படுத்தவும் சீனா பயன்படுத்தியது என்றும் ஓரிடத்தில் கூறப்பட்டுள்ளது. "கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் ராணுவங்களுக்கு இடையிலான மோதலில் சீனாவின் பங்கு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் பாகிஸ்தான் ராணுவம் சீன ஆயுதங்களை நம்பியிருந்தது, அதோடு சீன உளவுத்துறையையும் அது பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது" என்று அறிக்கை கூறியது. பட மூலாதாரம், Getty Images "ஜம்மு-காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதியில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய கிளர்ச்சியாளர் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததில் இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் தொடங்கியது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதோடு, "50 ஆண்டுகளில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எல்லைகளில் இவ்வளவு தீவிரமான தாக்குதல்களை நடத்துவது இதுவே முதல்முறை. மோதல் முழுவதிலும் இந்திய ராணுவ நிலைகள் குறித்து பாகிஸ்தானுக்கு சீனா நேரடி தகவல்களை வழங்கியதாகவும், மோதலை அதன் ராணுவ திறன்களுக்கான ஒரு பரிசோதனைக் களமாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் இந்திய ராணுவம் கூறியது. பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அதே நேரத்தில் சீனா அதன் பங்கை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை" என்றும் அறிக்கை கூறுகிறது. "இந்தியா, பாகிஸ்தான் மோதலில் சீனா மறைமுகமாக தலையிட்டதா? அமெரிக்கா சொல்வது என்ன?", சீனா, பாகிஸ்தான் இடையிலான ஒத்துழைப்பும் இந்தியாவும் 2025ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடனான தனது ராணுவ ஒத்துழைப்பை சீனா அதிகரித்தது. இது இந்தியா-சீனா இடையிலான பாதுகாப்பு விவகாரங்களில் பதற்றத்தை ஆழப்படுத்தியதாக அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையில், "இந்தியாவுக்கு எதிரான நான்கு நாள் மோதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் வெற்றி, சீன ஆயுதங்களைக் காட்சிப்படுத்தியது. ஆனால், இந்த மோதலின் ஊடாக சீனா இந்தியாவுடன் 'மறைமுகப் போரை' நடத்தியதாகக் கூறுவது சீனாவின் பங்கினை மிகைப்படுத்துவதாகும்" என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சீனா தனது ஆயுதங்களின் திறன்களைச் சோதிக்கவும் மேம்படுத்தவும் இந்த மோதலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டதாக அறிக்கை கூறுகிறது. "இந்தியாவுடனான அதன் தற்போதைய எல்லைப் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பாக வளர்ந்து வரும் சீனாவின் விருப்பங்களை வைத்துப் பார்க்கையில், இது பயனுள்ளதாக இருந்துள்ளது," எனக் கூறப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தரான சீனா, 2019 மற்றும் 2023க்கு இடையில் அந்நாட்டு ஆயுதங்களில் 82 சதவிகிதத்தை வழங்கியிருந்தது. HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு, PL-15 வான்வழி ஏவுகணைகள், J-10 போர் விமானங்கள் போன்ற மேம்பட்ட ஆயுத அமைப்புகள் போரில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. இந்த மோதல், ஒரு களப் பரிசோதனையை மேற்கொள்வதற்கான வாய்ப்பை சீனாவுக்கு வழங்கியது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த மே 10ஆம் தேதியன்று, இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி (வலது), விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விளக்கினர். சீனா, 40 ஜெ-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், KJ-500 விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை ஜூன் மாதத்தில் பாகிஸ்தானுக்கு விற்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அதே மாதத்தில் பாகிஸ்தான் 2025-26க்கான தனது பாதுகாப்பு பட்ஜெட்டில் 20 சதவிகித அதிகரிப்பை அறிவித்தது. இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு, பல்வேறு நாடுகளில் உள்ள சீன தூதரகங்கள் இந்த மோதலில் தங்கள் ஆயுதங்களுக்கு கிடைத்த வெற்றியைப் பாராட்டியதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக "இந்த மோதலில், பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்களை வீழ்த்த சீன ஆயுதங்களைப் பயன்படுத்தியது, ஒரு முக்கிய விற்பனைப் புள்ளியாக முன்வைக்கப்பட்டது" என்று அறிக்கை கூறுகிறது. இந்த மோதலில் ஆறு இந்திய ரஃபேல் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. எனினும், இந்தியா இந்தக் கூற்றை ஒருபோதும் உறுதி செய்யவில்லை. மேலும், இரு நாடுகள் இடையே நடந்த மோதலில் எத்தனை இந்திய விமானங்கள் சேதமடைந்தன என்பதையோ, அவை எந்த விமானங்கள் என்பது பற்றியோ எந்தத் தகவலையும் இந்தியா வழங்கவில்லை. சீனா தனது ஜெ-35 விமானங்களை ஊக்குவிக்கவும், பிரெஞ்சு ரஃபேல் விற்பனையைப் பாதிக்கக்கூடிய வகையிலும் தவறான பிரசாரத்தைத் தொடங்கியதாக பிரெஞ்சு உளவுத்துறை அமைப்புகளை மேற்கோள் காட்டி அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீன ஆயுதங்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் எச்சங்கள் என்று கூறி போலி சமூக ஊடக கணக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வீடியோ கேம்களால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பரப்புவது இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நடந்தவை என்றும் கூறியுள்ளது. ரஃபேல் விமானங்களை வாங்கும் செயல்முறையை நிறுத்துமாறு சீன தூதரக அதிகாரிகள் இந்தோனேசியாவை வற்புறுத்தியதாகவும், இது சீனா தனது பாதுகாப்பு உபகரணங்களைப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு விற்பதற்கான வாய்ப்பை உருவாக்கியதாகவும் அறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம், Reuters இந்தியாவில் எதிர்வினை காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் இந்த அறிக்கை தொடர்பாக பிரதமர் மோதி மற்றும் மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை விமர்சித்துப் பேசியுள்ளார். அறிக்கையில் உள்ள சில கூற்றுக்களைக் குறிப்பிட்டு, "அதிபர் டிரம்ப் இதுவரை, ஆபரேஷன் சிந்தூரை தான் நிறுத்தியதாக 60 முறை கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பிரதமர் முற்றிலும் மௌனமாக இருக்கிறார். இப்போது இந்த அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தின் அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து வந்துள்ளது. இது இந்தியாவால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு பிரதமரும், வெளியுறவு அமைச்சகமும் ஆட்சேபனை எழுப்பி எதிர்ப்புத் தெரிவிப்பார்களா? நமது ராஜதந்திரம் மற்றொரு கடுமையான அடியைச் சந்தித்துள்ளது" என்று தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், ஜெய்ராம் ரமேஷின் அறிக்கை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏப்ரலில் நடந்த பஹல்காம் தாக்குதலை ஒரு 'கிளர்ச்சித் தாக்குதல்' என்று ஓர் அதிகாரபூர்வ அமெரிக்க அறிக்கை எப்படிக் குறிப்பிட முடியும்? நான்கு நாட்கள் நடந்த ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ராணுவ வெற்றியைப் பெற்றதாக எப்படிப் பேச முடியும்? இந்தியாவுக்கு சாதகமாக ஆதாரங்களையும், ராஜதந்திரத்தையும் வழங்க மோதி அரசு தவறியது ஏன்? இதற்கு மோதி அரசு நாடாளுமன்றத்தில் பதில் கூற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று இந்தியா பெயரிட்டது. பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியா அமெரிக்க அறிக்கையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி மறைமுகமாக எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியுள்ளார். "சீனாவின் கூற்றை இவ்வளவு தீவிரமாக யார் முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதுதான் உண்மையான கேள்வி. இந்திய விமானப் படை அதன் அனைத்து சொத்துகளும் பாதுகாப்பாக உள்ளன என்றும், மோதலின்போது செயல்பாட்டுத் தகவல்களைப் பகிர்வது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் தெளிவாகக் கூறியது. இருந்த போதிலும், எத்தனை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது போன்ற புள்ளிவிவரங்களை யார் கோரினர். சீனப் பிரசார இயந்திரத்தை இயக்கியவர்கள் வெளியாட்கள். ஆனால் அதன் ஊதுகுழல் இந்தியாவுக்குள் இருக்கிறது. அதை யார் இயக்கினார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c157g37e9wlo
2 months 3 weeks ago
தெற்கில் தொடரும் போதை படகுகள்: சிக்கிய சஜித் கட்சி உறுப்பினர்! தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படை குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு செயல்பாட்டின்போது இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது. படகிலிருந்து போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. யாழ்ப்பாணம்.com
2 months 3 weeks ago
இந்திய 'A' அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பங்களாதேஷ் 'A'! Nov 21, 2025 - 09:06 PM தொடரின் மிகவும் சவால் மிக்க அணியாகக் கருதப்பட்ட இந்திய 'A' அணியை வீழ்த்தி, 'ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்' T20 கிரிக்கெட்த் தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் 'A' அணி இன்று (21) தகுதி பெற்றது. தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியின் வெற்றியாளர் 'சுப்பர் ஓவர்' (Super Over) மூலம் தீர்மானிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களைப் பெற்றது. இதற்குப் பதிலளித்தாடிய இந்திய அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு அதே 194 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணியின் வெற்றியீட்ட இறுதிப் பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இதன்போது பங்களாதேஷ் வீரர்களின் மோசமான களத்தடுப்பு காரணமாக இந்தியாவால் 3 ஓட்டங்களைப் பெற முடிந்ததால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. வெற்றியாளரைத் தீர்மானிக்க வீசப்பட்ட சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் முதல் இரண்டு பந்துகளிலேயே ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவை என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டும் முதல் பந்திலேயே வீழ்ந்தது. எனினும், வீசப்பட்ட இரண்டாவது பந்து அகலப் பந்தாக அமைந்ததால் பங்களாதேஷ் அணி வெற்றியீட்டியதுடன், இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. https://adaderanatamil.lk/news/cmi90w82c01uyo29nmo1tklrz
2 months 3 weeks ago
போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! -சஜித் பிரேமதாச- தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் எக்ஸில் பதவிட்ட எதிர்க்கட்சித் தலைவர், நேற்று போதைப்பொருள் தொடர்பான கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் பொருத்தமான நடவடிக்கை எடுக்க தனி விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பன்னாலையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்தக் கப்பலில் இருந்து சுமார் 4 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ அடங்கிய 376 கிலோ விற்கும் அதிகமான போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. https://athavannews.com/2025/1453436
2 months 3 weeks ago
அததெரண கருத்துப்படம்.
2 months 3 weeks ago
இதுவரை தலைவர் பதிவி எந்த தமிழருக்கும் கிடைக்கவில்லை.முதல் தமிழராக பேராசிரியர் அமிர்தலிங்கம் பெற்றுக் கொண்டதை கொண்டாடுகிறார்.பாராட்டுகிறார்.
2 months 3 weeks ago
தர்மஸ்தலா வழக்கில் புகார் அளித்தவருக்கு எதிராகவே சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை தாக்கல் பட மூலாதாரம், Anush Kottary/BBC படக்குறிப்பு, வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, புகார்தாரரை அவர் சடலங்களை புதைத்ததாகக் கூறிய 17 இடங்களுக்கு அழைத்துச் சென்றது. கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசிக்காக, பெங்களூருவில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் தர்மஸ்தலா வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), முன்னாள் துப்புரவுத் தொழிலாளி சி.என். சின்னையா மற்றும் அவருடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு எதிராக 4,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இவர்கள் மீது, 'பாலியல் வன்முறை மற்றும் கொலைக்குப் பிறகு பெண்களின் சடலங்களை சட்டவிரோதமாகப் புதைத்ததாக' பொய்க் கதைகளை உருவாக்கியது மற்றும் போலி சாட்சிகளை உருவாக்கிய சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நுட்பமாகப் பார்த்தால் இந்த 4,000 பக்க அறிக்கை, ஆதாரமற்ற வழக்குகள் மற்றும் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதில் இருந்து நீதிமன்ற நடைமுறைகளைப் பாதுகாப்பதற்காக பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 215இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட புகாராகக் கருதப்படுகிறது. சி.என். சின்னையா தவிர, கிரிஷ் மட்டன்னவர், மகேஷ் ஷெட்டி திமரோடி, டி. ஜெயந்த், விட்டல் கௌடா, சுஜாதா பட் ஆகியோரின் பெயர்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் மீது போலி சாட்சிகளை உருவாக்கியது, போலி ஆவணங்கள் தயாரித்தது, மற்றும் பிற சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்குடன் தொடர்பில்லாத பெயர் வெளியிட விரும்பாத கர்நாடகாவின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், "நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுப் பொய் சொல்வது சிறிய குற்றம் அல்ல. இது ஒரு தீவிரமான குற்றமாகக் கருதப்படுகிறது" என்றார். வழக்கின் பின்னணி என்ன? கடந்த ஜூலை 3ஆம் தேதி, சின்னையா பெல்தங்கடி என்பவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தான் ஒரு செல்வாக்குமிக்க குடும்பம் மற்றும் அவர்களின் ஊழியர்களுடைய அறிவுறுத்தலின் பேரில் நூற்றுக்கணக்கான சடலங்களைப் புதைத்ததாகக் கூறியிருந்தார். கடந்த 1995 முதல் 2014க்கு இடையே புதைக்கப்பட்ட இந்த சடலங்களில், பல பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. போலீஸ் புகாரைத் தொடர்ந்து, அவர் ஒரு நீதிபதி(magistrate) முன்னிலையிலும் வாக்குமூலம் அளித்தார். தனது கூற்றை உறுதிப்படுத்த, அவர் ஒரு மண்டை ஓட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தார். பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, புகார்தாரர் தலை முதல் கால் வரை கருப்பு நிற உடையணிந்து சாட்சியமளிக்க நீதிபதி முன் ஆஜரானார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது மனதின் பாரத்தைக் குறைக்கவே கர்நாடகாவின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலாவுக்கு வந்ததாக அவர் கூறினார். அவர் இந்தக் குற்றச்சாட்டை மதத் தலமான தர்மஸ்தலா குறித்து தெரிவித்ததால் இது தொடர்ந்து தலைப்புச் செய்தியானது. இந்த இடத்தில், இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் புகழ்பெற்ற மஞ்சுநாத சுவாமி கோவில் உள்ளது. விசாரணையில் என்ன நடந்தது? பெண்களின் சடலங்களைப் புதைத்ததாக சின்னையா கூறிய இடங்களுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அவரை அழைத்துச் சென்றது. அவர் உறுதிப்படுத்திய 14க்கும் மேற்பட்ட இடங்கள் மேஜிஸ்திரேட்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன. சில இடங்களில் இருந்து மனித எலும்புக்கூடு எச்சங்களை விசாரணைக் குழு கண்டுபிடித்தது. அவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதையடுத்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டில் சின்னையாவை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது. தடயவியல் சோதனையில், அவர் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் முன் "ஒரு பெண்ணுடையது" என்று காண்பித்த மண்டை ஓடு உண்மையில் ஒரு பெண்ணுடையது அல்ல என்று தெரிய வந்தது. இரண்டு மருத்துவமனைகளில் (ஒரு அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை) நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில், அது ஓர் ஆணின் மண்டை ஓடு என்று கண்டறியப்பட்டது. பின்னர், தனக்கு அந்த மண்டை ஓட்டைத் தனது கூட்டாளி ஒருவரே கொடுத்ததாக அவர் கூறினார். படக்குறிப்பு, கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் சட்டவிரோதமாக சடலங்களைப் புதைத்ததாகக் கூறி ஒரு நபர் ஏற்படுத்தினார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை வியாழக் கிழமையன்று, சிறப்புப் புலனாய்வுக் குழு கூடுதல் சிவில் நீதிபதி மற்றும் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) சி.எச். விஜேந்திராவின் நீதிமன்றத்தில் ஒரு புகாரைத் தாக்கல் செய்தது. இப்போது, போலி ஆதாரங்களைச் சமர்ப்பித்தது, ஆதாரங்களைத் திரித்தது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான இந்த அறிக்கையை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். சின்னையா மற்றும் அவரது கூட்டாளிகள், சின்னையாவின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த நோட்டீஸுக்கு எதிராக கிரிஷ் மட்டன்னவர் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு ஆரம்பத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்குத் தடை விதித்தது, ஆனால் நவம்பர் 12 அன்று அந்தத் தடை நீக்கப்பட்டது. கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புகார்தாரர் (சின்னையா) அவரது ஐந்து கூட்டாளிகளின் முழு கட்டுப்பாட்டில் இருந்தார் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு கூறியது. அரசுத் தரப்பில் வழக்குடன் தொடர்புடைய, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது முதல் அறிக்கைதான் என்றும், மற்ற இடங்களில் விசாரணை முடிந்த பிறகு ஒரு துணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையில் பங்கலேகுட்டே மலைப் பகுதிகளில் தோண்டியபோது, அங்கிருந்து ஐந்து மண்டை ஓடுகளும் மேலும் சில மனித எச்சங்களும் மீட்கப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g9dz29qzdo
2 months 3 weeks ago
அப்ப இதை எழுதியது யார்😂? நீங்கள் எழுதும் ஒரு கருத்திலேயே உங்களோடு நீங்களே முரண்பட்டுத் தான் எழுதுகிறீர்கள் என்றால், உங்கள் கருத்துகளை வேறு யார் கவனிக்கப் போகிறார்கள்?
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
வியட்நாமில் ஒரு பாலத்தையே இழுத்துச் சென்ற பெரும்வெள்ளம்! 21 Nov, 2025 | 01:17 PM மத்திய வியட்நாமில் 40க்கு மேற்பட்டோரின் உயிர்களை காவு வாங்கிய மழை, வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால், லாம் டோங் (Lam Dong) மாகாணத்தில் ஓடும் டா நிம் ஆற்றின் (Da Nhim River) மீது பல தசாப்தங்களாக உறுதியாக நின்ற தொங்கு பாலம் உடைந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காட்சி வைரலாகியிருக்கிறது. அந்நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 9 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், டா நிம் ஆற்றின் நீர்மட்டம் வெள்ளம் காரணமாக உயர்ந்திருப்பதோடு, அடித்துச் செல்லும் அந்த வெள்ளத்தில் வியாழக்கிழமை (20) ஆற்றின் மேலே பல ஆண்டுகாலமாக உள்ளூர் பிரதேசவாசிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த தொங்குபாலம் உடைந்து வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. https://www.virakesari.lk/article/231003
2 months 3 weeks ago
21 Nov, 2025 | 05:04 PM (ஸ்டெப்னி கொட்பிறி) விசேட தேவையுடையவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ தெரிவித்துள்ளார். கொழும்பு 7இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற “விசேட தேவையுடையவர்களுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் (German Federal Ministry for Economic Cooperation and Development) சார்பாக, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் சங்கத்தின் (GiZ) இலங்கை தொழில் பயிற்சித் திட்டம் (VTSL) மற்றும் சுவிஸ் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் (Swiss Agency for Development and Cooperation - SDC) ஆதரவுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், இலங்கையின் விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புப் போட்டி மேடை (Disability Job Match Pavilion) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது தொழில் வாய்ப்புக்காக சுமார் 100க்கும் மேற்பட்ட விசேட தேவையுடையவர்கள் தங்களது சுயவிவரக் கோவையை சமர்ப்பித்தனர். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், விசேட தேவையுடையவர்களின் தொழில் வாய்ப்புகளில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த சிக்கல்களைக் கண்டறிந்து அவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதேவேளை நாம், விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு விசேட தேவையுடையவருக்கும் தனித்துவமான திறன்கள் பல உள்ளன. அவற்றை கண்டறிந்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி, அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும். இது, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிப்பு வழங்கும். விசேட தேவையுடையவர்களுக்குச் சிறந்த தொழிற்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் சங்கத்தின் (GiZ) இலங்கை தொழில் பயிற்சி திட்டம் (VTSL) உட்பட பல தரப்பினர் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, விசேட தேவையுடையவர்களுக்காக சிறந்த தொழிற்கல்வி பயிற்சிகளை வழங்கி, அவர்களின் தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசேட தேவையுடையவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் அமைவதற்கு பல வழிமுறைகளை உருவாக்கிக் கொடுப்பது மிகவும் அவசியமாகும். அந்த வகையில், தொழில்நுட்பத்துறை, வர்த்தகத்துறை, உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறைகளில் விசேட தேவையுடையவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மட்டத்திலும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக பல கல்வி முறைகளை உருவாக்க வேண்டும். விசேட தேவையுடையவர்களுக்கு கல்வி மிக அவசியம். விசேட தேவையுடையவர்களின் இலட்சியத்தைக் கண்டறிந்து, அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றுவதற்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு பங்களிப்பு வழங்கும் என நாலக களுவெவ மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231009
2 months 3 weeks ago
2000 களில் மாணவனாக வந்த, ஒற்றையாளாக இருந்த எனக்கும் இதே அனுபவம் தான். ரியூசன் இலவசம் (50% பணி செய்த காரணத்தால்), மருத்துவ காப்புறுதி 90% இலவசம். வீட்டு வாடகையும், உணவும் தான் செலவு. அமெரிக்காவின் வறுமைக் கோட்டிற்குக் கீழானது என்று எனக்கும் அன்று தெரியாமல் வந்த சம்பளத்தில் ஊருக்கு அப்பாவின் செலவுக்கும் அனுப்பி, எஞ்சிய சேமிப்பில் முதல் வாகனமாக மூவாயிரம் டொலர்களுக்கு ஒரு பழைய காரை வாங்கி அதில் பழகி சாரதி அனுமதிப் பத்திரம் எடுக்கவும் முடிந்தது. இத்தனைக்கும் நான் மாநில அரசின் உணவு உதவியைக் கூட பெற்றுக் கொள்ள முயலவில்லை (ஒரு கௌரவ கவரி மான் சின்ட்றோம் தான்😂!). இப்படி குடியேறிகளாக வந்த என்னையும் உங்களையும் போன்ற பலரை இலவசங்கள், சலுகைகள் கொடுத்து நிமிர்த்தி விட்டிருக்கிறார்கள். அதே உதவிக் கரங்களை இனி வரும் குடியேறிகளுக்கும் ஓரளவு கொடுப்பதற்கு நாம் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், எம்மிடையேயும் சிலர் விசித்திரமாக இருக்கிறார்கள். உதாரணமாக, "பெரும்பாலான அமெரிக்கர்களின் வரியை உயர்த்தாமலே, படிப்புக் கடன் -student loan பெற்றவர்களுக்கு அரசு ஒரு பகுதிக் கடனைக் கட்டி அவர்களை மீட்கும்" என்று பைடன் அறிவித்த போது, எதிர்ப்புக் காட்டிய என் ஈழத்தமிழ் அமெரிக்க நண்பர்கள் பலர், இதே சலுகையெல்லாம் அனுபவித்து தற்போது செல்வந்தர்களாக இருப்போர் தான்! "என்ன டிசைனோ?" என்று அடிக்கடி நான் யோசிப்பதுண்டு😂!
2 months 3 weeks ago
New York போஸ்ட் இலிருந்து.... சர்வதேசம் எங்கும் பேசு பொருளாகி உள்ள, அந்தத் பெடியனின... அந்தரங்க உறுப்பு. 😂 ஒரு நாள், சில வினாடிகள் செய்த வேலையால்... சர்வதேசப் பத்திரிகைகளில் இடம் பிடித்த... தற்குறி. 🤣
2 months 3 weeks ago
சுத்துமாத்து சுமந்திரனின் தமிழரசு கட்சி, திருகோணமலையில்... புத்தர் சிலை போராட்டம் நடக்கும் போது, பொந்துக்குள் ஒளித்து இருந்து விட்டு, ஜனாதிபதியை சந்திக்க அடுத்த நாள், எல்லோரும் தவறாமல் வரிசை கட்டி போயிருக்கின்றார்கள்.
2 months 3 weeks ago
பேராசிரியருக்கு வாழ்த்துக்கள் நிச்சயம் உரித்தாக வேண்டும்! ஆனால், தமிழரசு ஏன் இதை "வரலாற்று சாதனை,தமிழனுக்கு முதல் அங்கீகாரம்" என்று தலைப்புப் போட வேண்டி வந்திருக்கிறதென விளங்கவில்லை😂. இலங்கையின் கல்விப் புலத்திலும், தற்போது உலகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் பல ஈழத்தமிழர்கள் தலைமை பொறுப்புகளில் சத்தமில்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவை சாதனைகள், நல்ல விடயங்கள். ஆனால், யூ ரியூபர்களின் அலட்டல் வீடியோக்களுக்கு இத்தகைய கல்விப் புல ஆளுமைகள் சில்லறைக் காட்சிப் பொருளாவதில் உடன்பாடில்லை!
Checked
Thu, 02/12/2026 - 17:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed