புதிய பதிவுகள்2

அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு

3 months 1 week ago
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு October 31, 2025 அமெரிக்க அணு ஆயுதங்களை உடனடியாக சோதனை செய்து பார்க்குமாறு அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். “பிற நாடுகளின் சோதனை திட்டங்களால் நான் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதே அளவில் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். உலகில் எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா இரண்டாவது இடத்திலும், அதை விட மிக குறைவாக ஆயுதங்களை கொண்டு சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், “ஐந்து ஆண்டுகளில் நாம் சமமாக இருப்போம்” என்று டிரம்ப் கூறியுள்ளார். அணு ஆயுதங்கள் அபாரமான அழிக்கும் சக்தியை கொண்டுள்ளன என்று அங்கீகரிக்கும் டிரம்ப், ஆயுதங்களை மேம்படுத்துவதை தவிர தனக்கு “வேறு வழியில்லை” என்றும் கூறியுள்ளார். https://www.ilakku.org/trump-orders-immediate-testing-of-us-nuclear-weapons/

கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்…

3 months 1 week ago
கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்… October 31, 2025 ”மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான யாவராவது ஒருவரைத்தான் எமது சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் நாம் கோரியிருக்கின்றோம் எனவும் கூறினார். மாகாண சபைத் தேர்தல் விரைந்து நடக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. இதில் முதலமைச்சர் வேட்பாளரைப் பொறுத்த வரையில் எங்களது கட்சியின் தெளிவான நிலைப்பாடு, கட்சிக்குள்ளே இருந்துதான் நாங்கள் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம். எனினும், எங்களுடைய கட்சியில் அங்கத்தவராக இருப்பவர்தான் கட்சி என்றும் எடுக்க மாட்டோம். யாழ்ப்பாணத்திலோ – வடக்கு மாகாணத்திலோ எங்களோடு இணங்கிச் செயற்பட்டுக் கட்சியோடு இருந்தவர்கள், கட்சிக்காக வேலை செய்தவர்கள், உழைத்தவர்கள் என அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.” – எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் மேலும் குறிப்பிட்டார். https://www.ilakku.org/chief-ministerial-candidate-from-within-the-party-tamil-nadu-partys-manifesto/

சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு…

3 months 1 week ago
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு… October 31, 2025 சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேற்று மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை இராணுவப் படையினர் கொடுரமாகக் கொன்றனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார். https://www.ilakku.org/சூடானில்-மருத்துவமனை-மீத/

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை!

3 months 1 week ago
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை! 31 Oct, 2025 | 11:38 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெவில் வன்னியாராச்சியை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நெவில் வன்னியாராச்சி சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஒக்டோபர் 02 ஆம் திகதி முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229119

இந்தியா - இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பு : மெய்நிகர் கூட்டத்தில் முக்கியப் பேச்சுவார்த்தை

3 months 1 week ago
இந்தியா - இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பு : மெய்நிகர் கூட்டத்தில் முக்கியப் பேச்சுவார்த்தை 31 Oct, 2025 | 11:01 AM (இணையத்தள செய்திப் பிரிவு) இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை (Power Grid Interconnection) செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை விவாதிப்பதற்காக, 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று ஒரு மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்தியக் குழுவிற்கு இந்திய அரசின் மின்சாரத் துறைச் செயலாளர் ஸ்ரீ பங்கஜ் அகர்வால் தலைமை தாங்கினார். இலங்கைக் குழுவிற்கு இலங்கை அரசின் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமை தாங்கினார். இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர். 2025 ஜூன் 16 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, இருதரப்பினரும் இந்தியா-இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பிற்கான தொழில்நுட்ப அளவுருக்களை (Technical Parameters) உறுதிப்படுத்தியிருந்தனர். இந்த மின் பரிமாற்ற இணைப்பு இலங்கைக்குப் பல முக்கியமான நன்மைகளை வழங்கும், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய முடியும். உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (Renewable Energy) ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். ஏற்றுமதிகள் மற்றும் எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை (Grid Stability) மேம்படுத்தவும், பிராந்திய மின் சந்தையில் ஒருங்கிணைக்கவும் புதிய வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும். இந்த முக்கியத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது குறித்து இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229112#google_vignette

தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா?

3 months 1 week ago
தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா? 31 October 2025 தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது. Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாதாந்தம் ரூபா 570,997 செலவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தச் செலவில் குழந்தைப் பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு, உணவகச் செலவுகள், பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள் மற்றும் வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும். அதிக வரிகள் மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் சுமையுடன் உள்ள நிலையில், மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2024' சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடுகிறது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில், சராசரி மாதாந்த குடும்ப நுகர்வுச் செலவு 2023 இல் ரூபா 103,383 ஆக இருந்தது, 2024 இல் 1.6 வீதமாக அதிகரித்து ரூபா 105,063 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், 2022 இல் (2021 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 74.9 வீத அதிகரிப்பு மற்றும் 2023 இல் (2022 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 16.5 வீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், குடும்பங்கள் தங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு எதிர்மறையான சமாளிப்பு வழிகளை நாட வேண்டியுள்ளது. மத்திய வங்கியின் 2024 செப்டம்பர் 18 முதல் 2025 செப்டம்பர் 18 வரையிலான தரவுகளின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒன்பது மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் சராசரி விலை ரூபா 225 இலிருந்து ரூபா 321.10 ஆக அதிகரித்துள்ளது, இது ஒட்டுமொத்தமாக 42.7 வீத உயர்வாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/428276/sri-lanka-named-south-asias-most-expensive-country-do-you-know-how-many-places

யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை - மூன்று நாளில் 08 பேர் கைது!

3 months 1 week ago
யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை - மூன்று நாளில் 08 பேர் கைது! adminOctober 31, 2025 யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் 08 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவற்துறை போதை தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது கடந்த மூன்று தினங்களிலும் , ஐஸ் போதைப்பொருள் , ஹெரோயின் , கஞ்சா கலந்த மாவா , போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன் , 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 08 பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் , அவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/222106/

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

3 months 1 week ago
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்! சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1451646

2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது!

3 months 1 week ago
2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது! இலங்கை சுங்கத்துறையின் நேற்று மாலை (30) நிலவரப்படி, இந்த ஆண்டிற்கான வரி வருவாய் வசூலில் 2 டிரில்லியன் ரூபா (ரூ. 2,000 பில்லியன்) என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. இலங்கை சுங்கத்துறை தற்சமயம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர வருவாய் இலக்கான ரூ. 2.115 டிரில்லியனை அடையும் பாதையில் உள்ளதாக அதன்படி பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோட குறிப்பிட்டார். இது நாட்டின் வரலாற்றில் ஒரு அரசுத் துறையால் இதுவரை வசூலிக்கப்பட்ட மிக உயர்ந்த வரி வருவாயாகும். மொத்த வருவாயில், மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 630 பில்லியன் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டு இலக்கை சுமார் ரூ. 300 பில்லியன் தாண்டும் என்று இலங்கை சுங்கத்துறை நம்பிக்கை தெரிவித்தது. https://athavannews.com/2025/1451624

இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

3 months 1 week ago
இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல். ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்ற இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார். இது நாட்டில் உள்ள விசேட மருத்துவர்களின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது. அமைச்சர் ஜெயதிஸ்ஸ, சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அந்த சந்திப்பின் போது தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். “இந்தக் கலந்துரையாடலின் போது, பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறிய நமது விசேட மருத்துவர்களிடம், இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு நான் ஒரு சிறப்பு வேண்டுகோளை விடுத்தேன். தற்போது நமது சுகாதார சேவையில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளது,” என்று அவர் கூறினார். அவர்கள் இலங்கையில் பணிக்குத் திரும்பினால், அவர்களின் முந்தைய அனைத்து சேவை சலுகைகளுடன் அதே பதவிகளில் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்று தாம் உறுதியளித்ததாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் கூறினார். https://athavannews.com/2025/1451627

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

3 months 1 week ago
நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை! பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது. ஒக்டோபர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில், நுகர்வோருக்கு வழங்கப்படும் பில்கள் விற்பனையாளர்கள் ஷொப்பிங் பைகள் விலையைக் குறிப்பிடுவதை CAA கட்டாயமாக்கியது. அந்த வர்த்தமானியில், அடர்த்தி குறைந்த பொலித்தீன், அடர்த்தி குறைந்த நேர்த்தியான பொலித்தீன் ஆகியவற்றில் உற்பத்தி பொருட்களை இலவசமாக வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலித்தீன் பைக்கான விலை வியாபார நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நுவர்வோருக்கு பொலித்தீன் பைகளை வழங்குவதை இடைநிறுத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451637

இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

3 months 1 week ago
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா! இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது என்று ஹெக்ஸெத் தனது இந்திய சகா ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பிற்குப் பின்னர் எக்ஸில் பதிவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் வொஷிங்டன் டெல்லியன் பொருட்களுக்கான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள அண்மைய பதட்டங்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது. https://athavannews.com/2025/1451640

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்!

3 months 1 week ago
இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோரரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரை விண்ட்சர் மாளிகையான ரோயல் லோட்ஜை விட்டு வெளியேற வெளியேற உத்தரவிட்டுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியது. மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் உறவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக எழுந்த அழுத்தங்களின் பின்னணியில் இந்ந நடவடிக்கை வந்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அவமானப்படுத்தப்பட்ட இளவரசரைச் சுற்றியுள்ள ஊழலில் இருந்து அரச குடும்பத்தை விலக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இதனை பலர் கருதுகின்றனர். இது தொடர்பில் வியாழக்கிழமை (30) பிற்பகுதியில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆண்ட்ரூ தனது ரோயல் லோட்ஜ் என்ற மாளிகையை விட்டுக்கொடுக்க முறையான அறிவிப்பு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் மாற்று தனியார் தங்குமிடத்திற்குச் செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்ட்ரூ இளவரசராக அல்லாமல் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது. புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மன்னரின் இந்த முடிவு, நவீன பிரிட்டிஷ் வரலாற்றில் அரச குடும்ப உறுப்பினருக்கு எதிரான மிகவும் வியத்தகு நடவடிக்கைகளில் ஒன்றாகும். மன்னர் சார்லஸின் இந்த முடிவினை அவரது குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மேலும் பல கேள்விகளை எதிர்கொண்ட பிறகு, ஆண்ட்ரூ இந்த மாத தொடக்கத்தில் யார்க் டியூக் உட்பட தனது பிற அரச பட்டங்களை கைவிட்டார். ஆண்ட்ரூ ஒரு காலத்தில் ஒரு துணிச்சலான கடற்படை அதிகாரியாகக் கருதப்பட்டார் மற்றும் 1980களின் முற்பகுதியில் அர்ஜென்டினாவுடனான பால்க்லாந்து போரின் போது இராணுவத்தில் பணியாற்றினார். ஆனால் அவர் 2011 இல் இங்கிலாந்து வர்த்தக தூதர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2019 இல் அனைத்து அரச கடமைகளையும் இராஜினாமா செய்தார், பின்னர் 2022 இல் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவரது இராணுவ தொடர்புகள் மற்றும் அரச ஆதரவுகள் பறிக்கப்பட்டன, அதை அவர் எப்போதும் மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451614

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
மிகப்பெரிய துரத்தல்: நாடகத்தின் மத்தியில் இந்தியா எவ்வாறு அமைதியாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியின் நினைவுகள் இந்திய ஆல்ரவுண்டரின் மனதில் இருந்து வெகு தொலைவில் இல்லை, ஆனால் அது மீண்டும் நிகழாது. எஸ். சுதர்சனன் 31-அக்-2025 • 5 மணி நேரத்திற்கு முன்பு ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அமன்ஜோத் கவுர் நடுவில் கட்டிப்பிடிக்கின்றனர் • ஐ.சி.சி/கெட்டி இமேஜஸ் பந்தை பின்னோக்கிய புள்ளியைக் கடந்து கட் செய்தவுடன், அமன்ஜோத் கவுர் மகிழ்ச்சியடைந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் அவளைத் தூக்கி, தரையில் சாய்ந்து, முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் விடத் தொடங்கினார். அமன்ஜோத் அங்கேயே நின்று அவள் முதுகில் தட்டினார். நவி மும்பை மகிழ்ச்சியில் வெடித்தது. இந்திய வீரர்கள் நடுப்பகுதிக்கு விரைந்தனர். டக்அவுட்டில் இருந்தவர்களுக்கு, அணைப்புகள் மிகவும் இறுக்கமாக இருந்தன. மகிழ்ச்சியின் கண்ணீர் வந்தது. சமீபத்திய ஐ.சி.சி போட்டிகளின் நாக் அவுட்களில் இந்தியா பலமுறை கடக்கத் தவறிய ஒரு தடையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இருந்தது . இப்போது இல்லை. 2025 மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா இருந்தது. ஓட்டப் பந்தயத்தில் நீங்கள் எப்போது வெற்றி பெறுவீர்கள்? அதுதான் எங்கள் விளையாட்டின் மையக்கரு. ஆனாலும், இது விளையாட்டின் மிகவும் விவாதிக்கப்படும், அடிக்கடி விவாதிக்கப்படும் மற்றும் பகுப்பாய்வு செய்யப்படும் பகுதிகளில் ஒன்றாகும் - உண்மையில் பெடலை மிதிக்கும் நேரம். ஒரு தூய தீர்ப்பு அழைப்பு. இந்தூரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா சரியாக விளையாடவில்லை. 30 பந்துகளில் 36 ரன்கள் என்பது 24 பந்துகளில் 32 ரன்கள் என்ற சமன்பாடு. பின்னர் 18 பந்துகளில் 27 ரன்கள். அப்போது அமன்ஜோத் நடுவில் இருந்தார். அவர் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அவர்களுக்கு நேரம் போதவில்லை. இந்தியாவுக்கு 12 பந்துகளில் 23 ரன்களும் கடைசி ஓவரில் 14 ரன்களும் தேவைப்பட்டன; அவர்கள் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். இறுதி கிக் ஒருபோதும் வரவில்லை. இந்த சமீபத்திய வரலாறு, வியாழக்கிழமை DY பாட்டீல் ஸ்டேடியத்தில் கூடியிருந்த 34,651 பேர் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அனைவரையும் தங்கள் இருக்கைகளில் சுருட்டியது. உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை அடித்த ரோட்ரிக்ஸுக்கு ஒரு இடைவேளை வழங்கப்பட்டது. 339 ரன்கள் எடுத்த இலக்கை நோக்கி இந்தியா இப்போது 36 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டது. WPL 2025 சீசன் தொடக்க ஆட்டத்தில் ரிச்சா கோஷ் எடுத்த ஆஷ்லே கார்ட்னரை மூன்று பந்துகளுக்குள் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். 30 இல் 34. அன்னாபெல் சதர்லேண்ட் தனது கடைசிக்கு முந்தைய ஓவரில் உச்சத்தில் இருந்தார். அவளால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கிறதா ?. அவள் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தாள். இன்னும் சொல்லப்போனால், இந்த உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளில் இரண்டாவது முறையாக கோஷை அவள் வெளியேற்றினாள். இந்திய விக்கெட் கீப்பரின் காட்டுத்தனமான ஸ்விங் மேல் எட்ஜிலிருந்து பின்னோக்கிப் புள்ளிக்கு மட்டுமே வழிவகுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் முக்கியமான பவுண்டரிகளுடன் அழுத்தத்தைக் குறைத்தார் • கெட்டி இமேஜஸ் 24 இல் 29. டி.ஆர்.எஸ் மூலம் ஸ்மிருதி மந்தனா கேட்ச் ஆகி ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டபோது, டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் மிகவும் சத்தமாக இருந்த ஸ்டாண்டுகளில் ஒன்றில் கூட ஒரு பின் டிராப் சத்தம் கேட்க முடிந்தது. இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் மைதான அனுபவத்தை மேம்படுத்தும் ரசிகர் குழுவான பக்கெட் ஹாட் கல்ட், நம்பிக்கையில்லாமல் அமைதியாகிவிட்டது. இந்தியாவுக்கு ஒரு ஓவருக்கு 7.25 ரன்கள் தேவைப்படும்போது அமன்ஜோத் உள்ளே நுழைந்து கூட்டத்தின் அந்த பிரிவில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். "நான் பந்து வீச்சாளர்களை நோக்கி தாக்குதல் நடத்த வேண்டுமா அல்லது நீங்கள் தாக்குதல் நடத்துவீர்களா?" என்பதுதான் அமன்ஜோத்தின் முதல் கேள்வி, ரோட்ரிக்ஸிடம். அமன்ஜோட் மற்றும் ரோட்ரிக்ஸின் உடலமைப்பு சக்தியை வெளிப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் சராசரி சிக்ஸர்களை அடிக்கும் திறனைக் கொண்டுள்ளனர். ஆனால் அது அந்தக் காலத்தின் தேவையாக இருக்கவில்லை. "நாங்கள் நல்ல ஓட்டப்பந்தய வீரர்கள் என்று அவள் சொன்னாள். ஹம் நிகால் லெங்கே (நாங்கள் எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வோம்)," என்று அமன்ஜோத் ஆட்டத்திற்குப் பிறகு கூறினார். "'பந்தை நீங்கள் பார்க்கிறீர்கள், பாதை நன்றாக இருக்கிறது, நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.' அது ஒரு சிறந்த மேற்பரப்பு. ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் அதை முடிக்க வேண்டும் என்று அவள் சொன்னாள்." ஆஸ்திரேலியா அணியை நீங்கள் முகர்ந்து பார்க்க விரும்ப மாட்டீர்கள். அவர்களுக்கு இப்போது ஒரு அணி இருந்தது. இந்தியா மீண்டும் ஒரு மனவேதனையைத் தாங்க வேண்டுமா? பதற்றம் தெளிவாகத் தெரிந்தது. அசையாமல் இருங்கள். ஆட்டத்தின் நிலை குறித்து ஒரு வரி கூட சொல்லாதீர்கள். என்ன செய்வது என்று பேச வேண்டாம். இடது, வலது, மையமாக அறிவுறுத்தல்கள் வெளிவந்தன. சாவிகள் அடித்து நொறுக்கப்படும் சத்தங்கள் ஊடகப் பெட்டியில் கேட்டன, காலக்கெடு நெருங்கி வந்தது, முடிவு இடைவிடாமல் இருந்தது. இந்த முறை மனவேதனை இருக்காது • கெட்டி இமேஜஸ் 18 இல் 23. தர்லேண்ட் தனது பத்தாவது ஓவரை ஓடவிட்டார், ஆனால் அமன்ஜோட் விலகிச் சென்றதால் தனது ரன்-அப்பை நிறுத்த வேண்டியிருந்தது. கூட்டத்திலிருந்து நீண்ட கோஷம். பின்னர் அமன்ஜோட் முதல் இரண்டு சட்டப்பூர்வ பந்துகளில் இரண்டு மற்றும் ஒரு சிங்கிள் ரன்களை எடுத்து, டெல்லி கேபிடல்ஸில் சதர்லேண்டை ஓரளவு பார்த்த ரோட்ரிக்ஸுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். சதர்லேண்டின் மெதுவான பந்து வந்தது, ரோட்ரிக்ஸ் சீக்கிரமாகவே வந்தார், ஆனால் அவர் காத்திருந்து விக்கெட் கீப்பரைத் தாண்டிச் சென்றார். பின்னர், மற்றொரு வைடுக்குப் பிறகு, அவர் ஒரு லெந்த் பந்தில் தொங்கி அதை பேக்வேர்டு பாயிண்டைத் தாண்டிச் சென்றார். 48வது ஓவரில் இந்தியா 15 ரன்கள் எடுக்க முடிந்தது. இப்போது 12 ரன்களில் 8 ரன்கள் ஒரு நடைப்பயணமாக இருந்தது, மேலும் அமன்ஜோத் 49வது ஓவரின் மூன்று பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் அடித்து காட்டுத்தனமான கொண்டாட்டங்களைத் தொடங்கினார். "ரிச்சா வீழ்ந்த பிறகு, ஆட்டம் சமநிலையில் இருந்தது," என்று அவர் கூறினார். "என் மனதில் இங்கிலாந்து ஆட்டம் இருந்தது, அங்கு நான் ஆட்டத்தை ஆழமாக எடுத்துக் கொண்டேன், ஆனால் எங்களுக்கு 12 [14] தேவைப்பட்டது, அது மிக அதிகம். நான் மீண்டும் அதை விரும்பவில்லை. அவள் என்னை [பவுலரிடம்] சார்ஜ் செய்யச் சொன்னால், நான் சார்ஜ் செய்திருப்பேன். ஆனால் அவள் என்னை கவனமாக விளையாடச் சொன்னாள், பிட்ச் நன்றாக இருந்தது. நாங்கள் கணக்கிட்டோம், அன்னாபெல் சதர்லேண்டின் ஓவரில் இருந்து வந்த ஒன்பது [15] ரன்கள் எங்களுக்கு பெரிதும் உதவியது." இந்திய அணித் தாளில், அமன்ஜோட் 3-வது இடத்திலும், ரோட்ரிக்ஸ் 5-வது இடத்திலும் பேட்டிங் செய்ய திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால் ரோட்ரிக்ஸ் அன்றைய தினம் ஒரு டிராப் மூலம் பேட்டிங் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது, மேலும் ஐந்து நிமிடங்களுக்குள் - துரத்தல் தொடங்கி பத்து பந்துகள் முடிந்த பிறகு - அவர் வெளியேறினார். புகைப்பட இறுதிப் போட்டிக்காக அமன்ஜோட்டும் ரோட்ரிக்ஸும் நடுவில் இருந்தது அன்றைய விசித்திரம் மட்டுமே

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 months 1 week ago
பொதுவாக இந்த இடப்பெயர்வுகள் அகதிகளாக துரத்தப்படுவது நாளாந்த நிகழ்வான இரு சமூகங்களுக்கும் பொதுவான ஒரு நிகழ்வு, சிலர் அதனை மீட்டி பார்க்கிறார்கள் சிலர் அது அவர்களுக்கு வாடிக்கையான விடயமாக இருப்பதனால் அதனை இலகுவாக கடந்து செல்கிறார்கள். ஆனால் இவர்களது வலிகள் உண்மையானவை அது அவர்களின் மனங்களில் இருந்து நீங்காமல் இருப்பதற்கு காரணம் ஒரு வலியினை விட அதிக வலியினை உணரும் போது அதிகமான வலி குறைவான வலியினை புறந்தள்ளி விடுகிறது, இந்த இடப்பெயர்வு இஸ்லாமியர்களின் அதிக உயர் பட்ச வலியாக இருக்கிறது. இந்த வலியினை எம்மால் உணரமுடியாமல் இருப்பதற்கு காரணம் பல மோசமான வலிகளை கடந்து வந்தமையால் இருக்கலாம், அதனால் அவர்களது வலி இல்லை என்றாகி விடுமா? தமது வலிகளை நினைவு கூறுவது எவ்வாறு தவறாகும்?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
அரையிறுதி தோல்வி குறித்து அலிசா ஹீலி: நாங்கள் அதை எங்களுக்கு நாமே செய்து கொண்டோம். ஆஸ்திரேலிய கேப்டன் அவர்கள் செய்ததை விட அதிகமாக ஸ்கோர் செய்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டதாகவும் கூறுகிறார். ESPNcricinfo ஊழியர்கள் 30-அக்-2025 • 10 மணி நேரத்திற்கு முன்பு ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்தில் அலிசா ஹீலி ஒரு முக்கியமான கேட்சை தவறவிட்டார் • ஐசிசி/கெட்டி இமேஜஸ் நவி மும்பையில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிரான 338 ரன்களை தக்க வைத்துக் கொள்ளத் தவறிய பிறகு, ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி, "நாங்கள் எங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதைச் செய்து கொண்டோம்" என்று கூறினார் . "இறுதியில் நல்ல போட்டி," என்று இந்தியா மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து சாம்பியன்களை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுடன் உச்சக்கட்ட மோதலை அமைத்த பிறகு அவர் கூறினார். "அநேகமாக அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால், நாங்கள் அதை எங்களுக்குள் கொஞ்சம் செய்து கொண்டோம். நாங்கள் அதைச் செய்ததாக நான் உணர்ந்தது இதுவே முதல் முறை. எனவே, நாங்கள் பேட்டிங்கை முடிக்கவில்லை, அவ்வளவு சிறப்பாக பந்து வீசவில்லை, களத்தில் எங்கள் எல்லா வாய்ப்புகளையும் கைவிட்டோம், இரண்டாவது கடைசி ஓவர் வரை அங்கேயே இருந்தோம். எனவே, அதிலிருந்து நாம் எதையாவது எடுக்க முடியும், ஆனால் இறுதியில், இறுதியில், அதை விட அதிகமாகிவிட்டது." 34வது ஓவரில் 2 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா 350 ரன்களுக்கு மேல் எடுத்தது போல் தோன்றியது, ஆனால் அவசர அவசரமாக விக்கெட்டுகளை இழந்து 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. களத்தில் அவர்கள் மூன்று கேட்சுகளை தவறவிட்டனர், இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸின் இரண்டு கேட்சுகளும் அடங்கும், அவர் 134 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்தார். "நாங்கள் போதுமான வாய்ப்புகளை உருவாக்கினோம் என்று நினைக்கிறேன். நாங்கள் அழுத்தத்தை உருவாக்கினோம்," என்று ஹீலி கூறினார். "நாங்கள் வாய்ப்புகளை உருவாக்கினோம். எங்களால் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. மேலும், உங்களுக்குத் தெரியும், அதற்கும் நான்தான் காரணம், மேலும் அது ஆஸ்திரேலியா உண்மையிலேயே பெருமைப்படும் ஒன்று என்று நான் நினைக்கிறேன்." தொடர்புடையது புள்ளிவிவரங்கள் - ஆஸ்திரேலியாவை முன்னேறச் செய்ய இந்தியா புதிய உச்சங்களை எட்டியது WWWWWWWWWWWWWWWWL ரோட்ரிக்ஸ்: ஒரு மாத பதட்டத்திற்குப் பிறகு ஒரு கனவு போல உணர்ந்தேன். 'என்ன ஒரு ஆட்டம், என்ன ஒரு செயல்திறன்!' - இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு கிரிக்கெட் உலகம் எதிர்வினையாற்றுகிறது ரோட்ரிக்ஸ் மற்றும் ஹர்மன்ப்ரீத் ஆஸ்திரேலியாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததால் இந்தியா வரலாறு படைத்தது. "இன்று அந்த விஷயத்தில் நாங்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்துவிட்டோம். அதனால்தான் இது ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆண்டு இந்த முறை கொஞ்சம் ஒத்ததாக உணர்ந்தேன், நாங்கள் விளையாட விரும்பிய வழியில் அல்ல, விளையாடச் சென்றது போல் இருந்தது," என்று அவர் கூறினார், இந்த தோல்வியை 2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவிடம் பெற்ற தோல்வியுடன் ஒப்பிட்டார். "எனவே நாங்கள் அதிலிருந்து கற்றுக்கொள்வோம். நாங்கள் வளர்வோம். எங்கள் ஒருநாள் கிரிக்கெட் பின்னர் மேம்படும் என்று நம்புகிறேன்." வெள்ளிக்கிழமை ஏமாற்றம் இருந்தபோதிலும், ஆஸ்திரேலியாவின் பிரச்சாரத்தைப் பற்றி அவள் பெருமிதம் கொண்டாள். "நாங்கள் நம்பமுடியாத கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவள் சொன்னாள். "மேலும், உங்களுக்குத் தெரியும், இறுதியில், நாங்கள் முழு நேரமும் சொல்லி வருவது போல, அரையிறுதி ஒரு நாக் அவுட் ஆட்டம். அன்று மாலை நீங்கள் சரியாக வரவில்லை என்றால், உங்களுக்குத் தெரியும், யாராவது உங்களைப் பிடிப்பார்கள். "இந்த உலகக் கோப்பையைப் பற்றி பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருந்தன. எங்கள் குழுவையும் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் யாரோ ஒருவர் வந்து எங்களுக்காக ஒரு வேலையைச் செய்தார்கள் என்று நினைக்கிறேன். அதனால் அது மிகவும் அருமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆமாம், அதனால்தான் இப்போது உங்களுடன் இந்த உரையாடலை நடத்துவது இன்னும் கொஞ்சம் வேதனையாக இருக்கலாம், நாங்கள் மிகவும் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பதை அறிந்திருந்தும், ஆனால் அந்தத் தடையைத் தாண்ட முடியவில்லை." அரையிறுதியில் 119 ரன்கள் எடுத்து வீணான ஃபோப் லிட்ச்ஃபீல்டைத் தவிர்த்து, அடுத்த தலைமுறை ஆஸ்திரேலிய வீரர்களைப் பாராட்டினார் ஹீலி . "என் வயது வீரர்கள் விளையாட்டை விட்டு விலகிச் செல்வதைப் பார்க்கும்போது, அடுத்த தலைமுறையினர் அங்கு நின்று அதைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்," என்று அவர் கூறினார். "ஃபோப் இன்று பரபரப்பானவர் என்று நான் நினைத்தேன், எங்களை மிகவும் சிறப்பாக உச்சத்தில் நிறுத்தினார், பின்னர் ஒரு சதம் அடித்தார், இது மிகவும் முக்கியமானது என்று நான் நினைத்தேன். அவருக்கு பாராட்டுகள். அவர் விளையாடுவதைப் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது, அடுத்த ODI உலகக் கோப்பைக்கு முந்தைய அடுத்த நான்கு ஆண்டுகள் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். "பேட்டிங்கில் மற்றொரு மாற்றம், அந்த 6வது, 7வது இடத்தைச் சுற்றியே இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பையில் ஆஷ் கார்ட்னர் அந்தப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று நினைக்கிறேன்." 35 வயதான அவர் இது தனது கடைசி ஒருநாள் உலகக் கோப்பை என்பதையும் உறுதிப்படுத்தினார். "நான் இப்போது அங்கு இருக்க மாட்டேன். அவ்வளவுதான்," என்று அவர் கூறினார். "அதுதான் இந்த அடுத்த சுழற்சியின் அழகு - அது எவ்வாறு விரிவடைகிறது என்பதை நாம் பார்க்கப் போகிறோம். நிச்சயமாக, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் ஒரு டி20 உலகக் கோப்பை உள்ளது, இது எங்கள் குழுவிற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஆனால் எங்கள் ஒருநாள் கிரிக்கெட் மீண்டும் கொஞ்சம் மாறப்போகிறது என்று நினைக்கிறேன். "இன்றிரவு நாம் செய்த தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். நாம் வளர்வோம், நாம் சிறப்பாக வருவோம். மேலும் சில இளம் வீரர்கள் இந்தப் பக்கத்தில் அதிக வாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு மிகவும் உற்சாகமான விஷயம்."

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 1 week ago
Sanctions Exposure Questionnaire Our policy is informed by the sanctions regulations of the United Nations, European Union, Australia, and all the countries in which *** operates, including the United States, the United Kingdom, China, Singapore, Japan, France, and New Zealand. Balancing these regulations and maintaining a high standard of financial crime protection means that we cannot support certain business activity, even where it falls within local regulations or the policies of other banks. With limited exceptions for activity licensed by regulators, *** does not support transactions involving: · Iran, Syria, North Korea, Venezuela, Myanmar, Cuba, Afghanistan, Belarus, Russia, or parts of Ukraine not under Ukrainian government control (including but not limited to Crimea and the Donbas) · Any persons or entities sanctioned by the United Nations, Australian Department of Foreign Affairs and Trade, European Union, U.S. Office of Foreign Asset Control, or other sanctions authorities in jurisdictions where *** operates, noting that such persons include members of governments (including those of Eritrea, Lebanon, Sudan, Turkey, Zimbabwe, and countries listed above). You must notify *** in advance if you plan to engage in business related to the above, even where related to humanitarian aid, legal in your location, or covered by a regulatory license. This will help minimise delays in your transaction and allow us to request the appropriate documentation to mitigate potential financial crime risks (including the risk of funds confiscation). About this Questionnaire To balance our business customers’ needs with the range of sanctions regulations applicable in different circumstances, *** needs to understand its customers’ exposures to certain regions and industries. Please answer the questions below using the following definitions: Your Entity The entity (e.g. company, association) you represent to ***, including any joint ventures or subsidiaries. Related Parties Any individuals or entities legally or structurally linked to your entity, including Parent Company/Group, beneficial owners, directors, affiliates, agents, or officers. Business Activity Includes current and planned operations, customers, suppliers, joint ventures, agreements, and origin, destination, and end-user of goods. Your Details Customer (Entity) Name Date Completed Contact Person Name, Position 1. Global Exposure 1.1 Does your entity, or its related parties, have activity in any of the following sanctioned areas? (e.g. operations, sourcing from, selling to) Country/Region Yes / No Iran Y ☐ / N ☐ Syria Y ☐ / N ☐ North Korea Y ☐ / N ☐ Crimea/Sevastopol regions Y ☐ / N ☐ Other occupied regions of Ukraine (e.g., Donetsk, Luhansk) Y ☐ / N ☐ Cuba Y ☐ / N ☐ Afghanistan Y ☐ / N ☐ Belarus Y ☐ / N ☐ Myanmar Y ☐ / N ☐ Russia Y ☐ / N ☐ Venezuela Y ☐ / N ☐ 1.2 If you answered ‘Y’ to any items in Q1.1, please answer the following questions with regard to that activity. Use as much space as needed to answer. · Do any of these countries contribute to more than 1% of your, or your related party’s, revenue? If so, please provide an estimate of % for each country. · What is the nature of the business with each country for which you answered ‘yes’? Please describe - The types of goods or services involved - How those goods/services are sourced and exchanged (e.g., where they’re first designed and created, any shipping or other transport arrangements, any other countries involved, the ultimate end-user) - The parties involved (incl. your entity/related party, any partners or agents, any trading partners or counterparts, any suppliers or distributors). · Do you take any steps to manage sanctions risk associated with the activity? If yes, please describe. · What banking products and/or payment services do you use in relation to the activity? 1.3 Does your entity, or its related parties, have business activity in any of the following sanctions-sensitive areas? Country/Region Yes / No Cambodia Y ☐ / N ☐ Central African Republic Y ☐ / N ☐ Dem. Republic of the Congo Y ☐ / N ☐ Ethiopia Y ☐ / N ☐ Eritrea Y ☐ / N ☐ Haiti Y ☐ / N ☐ Iraq Y ☐ / N ☐ Lebanon Y ☐ / N ☐ Libya Y ☐ / N ☐ Nicaragua Y ☐ / N ☐ Somalia Y ☐ / N ☐ Sudan (Republic of) Y ☐ / N ☐ South Sudan Y ☐ / N ☐ Yemen Y ☐ / N ☐ Zimbabwe Y ☐ / N ☐ 1.4 If you answered ‘Y’ to any items in Q1.3, please describe the activity undertaken with each relevant country, guided by the points below. Use as much space as needed to answer. · What types of goods or services are involved? · Who is the ultimate end-user of the goods or services? · What other parties are involved? (incl. your entity/related party, any partners or agents, any trading partners or counterparts, any suppliers or distributors). 2. Industry Exposure 2.1 Does your entity’s business relate to any of the following? Goods, Services, or Technology Any goods or services provided to or designed for military, defence, police, or security sectors Y ☐ / N ☐ Advanced optical equipment/systems, or thermal or infrared optical equipment/systems Y ☐ / N ☐ Explosives or explosive propellants Y ☐ / N ☐ Aviation/aerospace (e.g. operation, leasing, design, parts for planes, helicopters, gliders) Y ☐ / N ☐ Export of equipment or software for surveillance, or for intercepting telecommunications Y ☐ / N ☐ Nuclear material Y ☐ / N ☐ High-performance computer parts/software (e.g., for a supercomputer, data centre, or advanced AI) Y ☐ / N ☐ Quantum, hypersonic, or advanced bio- technologies Y ☐ / N ☐ Drones/UAVs, or equipment for use with drones/UAVs Y ☐ / N ☐ Manufacture or export of semiconductor devices, integrated circuits, or related parts or equipment (incl. silicon wafers, printed circuit boards, manufacturing equipment or software) Y ☐ / N ☐ Export of equipment for navigation or for electronic testing (or export of related services) Y ☐ / N ☐ Export of CNC or Additive Manufacturing (AM) machine tools (or export of related services) Y ☐ / N ☐ Export of turbine oil or turbine oil additives Y ☐ / N ☐ Export of ball, roller, or spindle bearings Y ☐ / N ☐ Items appearing on the Australian Defence and Strategic Goods List Y ☐ / N ☐ 2.2 If you answered yes to any item above, please describe your entity’s involvement, guided by the points below. Use as much space as needed to answer. · What relevant goods/services are involved in your business? · What countries do the goods/services come from, go to, and if relevant, travel through? · Who is the ultimate end-user of the goods or services? What steps do you take to understand who (and in what country) will be the ultimate end-user for your product? 3. Direct Exposure 3.1 Is your entity or any related party the target of any sanctions, by any regulator (regardless of location/authority)? Related parties include any individuals or entities legally or structurally linked to your entity, including Parent Company/Group, beneficial owners, directors, affiliates, agents, or officers. Y ☐ / N ☐ If yes, who is the entity targeted by sanctions, and what authority imposes the sanctions? 3.2 Does your entity or any related party have any business interest or relationship with persons or entities targeted by any sanctions? This includes but is not limited to suppliers, distributors, partners, and customers. Y ☐ / N ☐ If yes, please list the approximate % of annual revenue derived, and how that revenue is managed. End of Questionnaire அண்மையில் எனது பழைய வர்த்தக வங்கி கணக்கின் பெயரை சரி செய்வதற்காக எனது பழைய வங்கியினை அணுகிய போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், புதிதாக இன்னொரு வங்கியில் வர்த்தக கணக்கினை ஆரம்பிக்க முயன்ற போது புதிய நடைமுறையாக பொருளாதார தடை தொடர்பான கேள்விகளை இணைத்துள்ளார்கள், தப்பியோடிய தமிழ் வர்த்தகர்கள் இந்த நாடுகளுக்கு சென்ற்றால் ஒன்றும் செய்ய முடியாதா?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
நியுசிலாந்தின் அணித்தலைவர் சோபி டிவைனிற்கான பிரியாவிடை, 2024 வெளியான காணொளி. நியுசிலாந்தின் பழங்குடி மக்கள் பேசும் மெளரி மொழியில் உள்ளது.
Checked
Sat, 02/07/2026 - 08:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed