புதிய பதிவுகள்2

அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு

3 months 1 week ago
30 ஆண்டுகள் கழித்து அணு ஆயுத சோதனை நடத்தவுள்ள அமெரிக்கா! - ட்ரம்ப் அதிரடி உத்தரவு 31 Oct, 2025 | 12:34 PM அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தற்போது அணு ஆயுத சோதனைகளில் இறங்கியிருக்கும் நிலையில், ட்ரம்ப் அமெரிக்க அணு ஆயுத சோதனையைத் தொடங்குவது குறித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இறுதியாக 1992ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்திய அமெரிக்கா, 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இச்சோதனையை ஆரம்பிக்கவுள்ளதாக வெளியான அறிவிப்பு உலக நாடுகளை பதற்றமடையச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. “ஏனைய நாடுகள் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதால் அதற்குச் சமமாக நமது அணு ஆயுதங்களை சோதிக்கத் தொடங்குமாறு இராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன். அமெரிக்கா மற்றைய நாடுகளை விட அதிகமான அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. சீனா தொடர் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சமமான இடத்தை எட்டிவிடும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை ட்ரம்ப் சந்திப்பதற்கு சற்று முன்பு அவர் சமூக ஊடகத்தில் இதனை பதிவிட்டுள்ளார். சோவியத் ரஷ்யா - அமெரிக்கா இடையே 1990இல் பனிப்போர் இடம்பெற்றது. அக்காலகட்டத்தில் இரு நாடுகளும் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்தன. அந்த போரில் சோவியத் ரஷ்யா தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ரஷ்யா பிரிக்கப்பட்டது. அதன் பின்னர், அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுத சோதனையை நடத்த ஐ.நா தடை விதித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே போர் தொடங்கி நீடித்து வருகிறது. இதற்கு மத்தியில் ரஷ்யா அணுசக்தி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. “புரெவெஸ்ட்னிக்” (Burevestnik) என்கிற அதிநவீன அணுசக்தி ஏவுகணையை சோதித்ததோடு, நேற்று (30) அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி ட்ரோனை சோதனையிட்டது. ரஷ்யாவின் இத்தகைய அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்து, தனது வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை குறிப்பிட்டார். அதில், ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகளுக்கு இணையாக அணு ஆயுத சோதனைகளைத் தொடங்குமாறு அமெரிக்க இராணுவத்துக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/229125

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் - ஐங்கரநேசன்

3 months 1 week ago
31 Oct, 2025 | 06:35 PM வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பூமி விரைந்து சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதிவேகத்துடன் நீண்ட நேரம் நின்று தாக்கும் சூறாவளிகள், காலம் தப்பிக் கொட்டித் தீர்க்கும் அடைமழை, காடுகளில் தீ மூட்டும் கடும் வறட்சி, உயர்ந்து செல்லும் கடல் மட்டம், உயிரினங்களின் பேரழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப் பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவில் கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது ஆதி வழிபாட்டு முறையாகக் கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச்சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர். தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஓர் அரசியல் சொல்லாடல் அல்ல. இது ஓர் இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகை மாத மரநடுகை என்பது தமிழ்த் தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும். எனவே தமிழ் மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன் கூடிய ஒரு தமிழ்த் தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/229190

ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?

3 months 1 week ago
ஹிஸ்புல்லாவையும் விசாரிக்க வேண்டும்..அத்தோடு 2020 இல் அயோத்தியில் இராமர் கோவில் கட்ட தங்கக் கல் அனுப்பிய முன்னாள் பா.உ சீனித்தம்பி யோகேஸ்வரனையும் விசாரிக்க வேண்டும்??😎

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 months 1 week ago
இதை நான் வழிமொழிகிறேன். மற்றது புலிகள் அவர்களிடம் கோராமல் விட்டது பெரும் பிழையும் இனத்தை கீழே போட்ட தாராளவாத தன்மையுமாகும். முஸ்லிம்களும் தாமாக முன்வந்து மன்னிப்பு கோராமல் விட்டது அவர்களின் வழமையான நயவஞ்சகத்தை வெளிக்காட்டுகிறது. எனவே இனிவரும் காலத்திலாவது இரு கன்னையும் எதிர்தரப்பு செய்தவன என செய்தவற்றை பட்டியலிட்டு (குறிப்பாக முதல் அட்டூழியமான 1954ம் ஆண்டு நிகழ்ந்த வீரமுனை எரிப்பு கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.) பின்னர் அதன் கீழ் "இதில் குறிப்பிடப்பட்டனவும் இன்னபிறவனவிற்கும் முஸ்லிம்/தமிழ் தரப்பு மன்னிப்பு கோருகிறது" என்று எழுதி அவர்தம் அரசியல்வியாதிகள் கையொப்பமிட்டு மன்னிப்பு கோரினால், அது விடுபட்டுள்ளது, இது விடுபட்டுள்ளது என்று உடன்படிக்கையின் பின்னர் யாரும் குற்றம் சுமத்தேலாது! அப்படி தூக்கிக்கொண்டு வந்தாலும் மேற்குறியினுள்ள வசனத்தை காட்டி உளட்டிவிடலாம். பல்லாண்டு காலமாக நிலைத்து வந்த பகைமை அன்றே அற்றுப் போகும். என்றாலும் பீடித்திருந்த இனவெறி நீங்க சில காலம் பிடிக்கும். எனினும் சிங்களவரிற்கு விலைபோனவர்கள் நிச்சயம் இதனை கிளரிக்கொண்டே இருப்பார்கள். அதனால் சில வேளை இது நீறுபூத்த நெருப்பாக தொடரும். எனவே அப்பேர்பட்டோரிற்கு மேடை தராமலோ இல்லை கட்டுரைகளை தணிக்கை செய்தாலோ இதனை கட்டுப்படுத்தலாம். நினைவுநாட்களின் போது இனவெறி தூண்டாமல் நினைவுகூற வேண்டும். எதிர்கன்னையின் நினைவுநாட்களில் மற்ற கன்னையின் தலைவர்கள் , மதகுருமார் கலந்து சிறப்பிக்க வேண்டும். வலிகளை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து அறவே இல்லாமலாக்க வேண்டும். இதனை செய்யும் போது, தமிழர் தரப்பில், கண்டிப்பாக தென் தமிழீழத்தை சேர்ந்தவர்களும் (பாதிக்கப்பட்டவருக்கே வலி தெரியும்) வரலாறு நன்கு கற்றறிந்தவர்களும் - இந்த முஸ்லிம் அட்டூழியங்கள் தொடர்பில் - ஈடுபடுத்தப்பட வேண்டும். வந்தவன் போனவன் எல்லாம் இதில் மிண்டக்கூடாது. தான் புலி, அதனால் செய்கிறேன் என்று இறங்க கூடாது. இது இரு தரப்பின் எதிர்காலம். அதனால் பேராசை பீடித்த எமது இழிஞர்கள் எவரும் இதில் கைவைக்க கூடாது. இதை எனது அனுபவத்தால் வலியுறுத்துகிறேன். இவற்றிற்கெல்லாம் முன்னர் முஸ்லிம்களால் செய்யப்பட்ட அட்டூழியங்களை நூலாக்க வேண்டும். அது எமது இனத்தின் கற்றலுக்கும் எதிர்காலத்தில் எந்தவொரு நாசங்களும் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை மணியாகவும் அமையும். இது எனது பரிந்துரையாகும், இரு தரப்பின் நலமான எதிர்காலத்திற்கு.

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

3 months 1 week ago
கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர் பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்ப்பு.! கிளிநொச்சி - உருத்திரபுரத்தைச் சேர்ந்த, சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்ட விரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சு*டப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த உத்தியோகத்தருடன் மற்றுமொரு இலங்கையரும் இருந்ததாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர் காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றை நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். நம்ம யாழ்ப்பாணம்

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 months 1 week ago
எங்களோடை சரிக்குச் சமன் இவங்களாலை நிக்கமுடியுமே! அதுவும் சுத்த வடமராட்சி ஆக்களோட!🤓

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது

3 months 1 week ago
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் இலஞ்ச விவகாரத்தில் சிக்குபட்டார்...📍 இடத்திற்கான உரிமத்தை பெற்றுதருவதாகக் கூறி ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தை பெற்ற சந்தர்ப்பத்தில், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி. முபாரக் இன்று (31) முற்பகல் குச்சவெளி பிரதேசத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சுற்றிவளைப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த பிரதேச சபை தவிசாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அத்துடன், இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவுடன் அவர் தவிசாளராக தெரிவு செய்யபட்டதுடன், சபையையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Lanka Truth தமிழ் ·

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

3 months 1 week ago
யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் கூரையிலிருந்து ரி-56 துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிப்பு..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதால், மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்று (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறித்த பொருட்களைப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று காலை அகற்றினர். பின்னர் மீண்டும் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடந்தபோது, அதன் அருகில் ரி-56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வயர்கள் உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மீண்டும் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அப்பகுதியை முழுமையாகச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Sakthi FM

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

3 months 1 week ago
பொலிஸ் முஸ்தீபு - தமிழை கொல்கிறார்கள். நூறாண்டு கால பாரம்பரியம் உள்ள வீரகேசரி எழுதும் தலையங்கம் இந்த கேவலத்தில் உள்ளது.

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது

3 months 1 week ago
31 Oct, 2025 | 04:40 PM திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து பெண் ஒருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா இலட்சம் பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிலாவெளியில் உள்ள காணியில் ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக காணி உரிமையாளர் காணிக்கான அனுமதிப்பத்திரம் பெற முயற்சித்தபோது அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக்கூறி காணி உரிமையாளரான பெண்ணிடமிருந்து குச்சவெளி பிரதேச தவிசாளரான ஏ.முபாரக் இலஞ்சம் கோரியதாகவும் இரண்டு இலட்சத்தில் இருந்து பேரம்பேசப்பட்டதாகவும் இறுதியில் ஐந்து இலட்சத்திற்கு உடன்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட பின்னர் நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இதுவரை கைது செய்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் அங்கே பல நாட்களாக தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது | Virakesari.lk

நெடுந்தீவு கடல் பகுதியில் 41 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

3 months 1 week ago
31 Oct, 2025 | 04:47 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை (30) இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனம், அந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கடலோர ரோந்து கப்பலை ஈடுபடுத்தி, வியாழக்கிழமை (30) இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பதைக் கவனித்து சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், அந்த டிங்கி படகில் ஆறு பைகளில் 85 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற, இரண்டு சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர். இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 41 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம், 5267 கிலோகிராமை விட அதிகமான கேரள கஞ்சாவை கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

3 months 1 week ago
முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் Published By: Digital Desk 1 31 Oct, 2025 | 04:07 PM வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இன்று முதல் இலவசமாக பொலித்தீ பைகள் வழங்கப்படாது என நுகர்வோர் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பொலித்தீ பைகளின் விலையும் இன்று முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை சனிக்கிழமை (நவ. 01) முதல் பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என ஏற்கனவே வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளுக்கு நாளையதினம் முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/229133

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

3 months 1 week ago
Published By: Digital Desk 3 31 Oct, 2025 | 11:42 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரதேச பத்திரிகை ஒன்றின் 2005ஆம் ஆண்டு வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் , இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் துண்டு என்பவற்றை நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊழியர்கள் கண்டுள்ளனர். அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து, நிர்வாகத்தினர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் இரண்டு மகசீன்களையும் வயர் துண்டையும் மீட்டனர். இரண்டு மகசீன்களுக்குள்ளும் 59 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், மீட்கப்பட்ட வயர் துண்டு 05 நீளமுடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மகசீன் மற்றும் துப்பாக்கி ரவைகள் குறித்து நீதிமன்றுக்கு அறிவித்து, மன்றில் அறிவுறுத்தலுக்கு ஏற்பட அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை பல்கலைக்கழக வளாகத்தினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பதால் , பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. https://www.virakesari.lk/article/229118

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

3 months 1 week ago
31 Oct, 2025 | 04:03 PM தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பனவும் மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் எடுக்கவேண்டியது அவசியமாகும் என சர்வதேச இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விரத மாலை அணிவித்து, சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோரும் குருசாமிகளும் கவனத்திற்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ள சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையிலிருந்து சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்வது சாதாரணமான ஒரு பயணமாக மாற்றமடைந்து வரும் தற்கால சூழ்நிலையில், 16 வயதிற்குட்பட்ட பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் மாணவ சிறார்களுக்கு விரத மாலை அணிவித்து சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்ல முற்படும் பெற்றோர் குறிப்பாக அத்தகைய யாத்திரைக்கு பொறுப்பான குருசுவாமிகள் சில முக்கியமான விடயங்களை பரிசீலித்து அம்முடிவை மேற்கொள்வது அவசியமாகும். "மகரஜோதி" தரிசன பருவகால யாத்திரை என்பது நவம்பர், டிசம்பர், ஜனவரியை சார்ந்ததாக, கார்த்திகை, மார்கழி, தை மாதமென 60 தினங்களை கொண்ட விரதகால யாத்திரையாகும். இக்காலப்பகுதியிலேயே இலங்கையில் அரசாங்க பாடசாலைகளிலும் வருட இறுதிப்பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை என்பவை நடப்பது வழமை. இக்காலப்பகுதியில் விரதமாலை அணியும் நிலையில், மாணவர்களின் கல்வி, பரீட்சை சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதிக கவனத்தை செலுத்தவேண்டியது அவசியமாகும். அத்துடன் இன்றைய சூழ்நிலையில் ஒருவர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அளவில் முழுமையாக தேவைப்படும் நிலையில் 16 வயதிற்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களின் உயர்கல்வி, தொழிற்கல்வி என ஏராளமான கல்விச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவ பருவ சிறார்களின் யாத்திரை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். ஏனெனில், சாதாரண குடும்ப பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் நடுத்தர குடும்பத்தவர்கள் திட்டமிட்டு செயற்படவேண்டியது பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு உறுதுணையாக அமையும். பொதுவாகவே 11 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இந்து சமய சைவ சமய ரீதியாக தீர்த்த யாத்திரை என்பது சொல்லப்பட்டது அல்ல. ஆனால், பக்தி மார்க்கத்தில், தமது நேர்த்திக்கடன், பிரார்த்தனை என்று அனுப்புவோரும் இத்தகைய விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படியே அனுப்பினாலும் ஒருமுறை யாத்திரை அனுப்பலாம். தொடர்ந்து மூன்று வருடங்கள், ஐந்து வருடங்கள் ஏன் தொடர்ந்தே செல்ல வேண்டும் என்ற மனநிலையும் பிடிவாதமும் முறையல்ல. இவ்விடயத்தில் தற்போது சபரிமலை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களுக்கும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாச்சார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பன மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமாகும். நமது சமயத்தில் பெற்றோர் குழந்தைகளை நல்ல பிரஜைகளாக, சமய பற்றுள்ளவர்களாக, ஒழுக்க சீலர்களாக, சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கவே கூறுகிறது. அவர்கள் வெறுமனே சாமியார்களாகவோ, 18 வயதில் 18 வருடங்கள் சபரிமலைக்கு சென்ற துறவியாக மட்டுமே உருவாக காரணமாக அமைந்து அவர்களினதும் நமது சமூகத்தினதும் எதிர்காலத்தை பாழ்படுத்தி விடக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/229152

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 months 1 week ago
அதேபோல் புலிகள் செய்தார்கள் நாம் செய்யவில்லை என தமிழர்கள் இதில் தப்ப முனைவது சட்டப்படி சரியாகலாம், மனச்சாட்சிப்படி அல்ல. ஐலண்ட் எப்போதும் புலிகளை ஏற்காத தமிழர் என நினைக்கிறேன். ஆனால் நாம் 90% மக்கள் அப்படி அல்ல. புலிகளை எம் பிள்ளைகளாக, தலைமையாக, பிரதிநிதிகளாக, காவலர்களாக ஏற்ற நாம் அப்படி அவர்கள் பிழைகளை கை கழுவ முடியாது. அதே போலத்தான் முஸ்லீம்களுக்கு ஜிகாத் குழுக்களும். புலிகள் அளவுக்கு கட்டுக்கோப்பாக இல்லை எனிலும், சரியோ பிழையோ அவர்கள் கிழக்கில் முஸ்லிம்களை பாதுகாக்க என ஆரம்பித்த ஆயுத குழுவே. பின்னாளில் நடந்த காத்தான்குடி சம்பவம் போன்றவை அப்படி குழுக்கள் அமைந்ததன் நியாயத்தை காட்டியும் நின்றன. ஜிகாத்தில் ஆயுதம் எடுத்தவர்கள் பலர் உண்மையான இன உணர்வினர். பலர் பின்னாளில் எம்பிகள். ஆனால் இலங்கை அரசு அவர்களை கையாண்ட விதம், புலிகள் போல அன்றி அவர்களை ஈ என் டி எல் எப் போன்ற ஒரு கட்டாகாலி அமைப்பாக்கியது. கூடவே இயல்பான மதவெறியும் சேர்ந்துகொள்ள - நாம் வெறுக்குக் ஜிகாத் காடைகள் உருவாகினர். ஆகவே முஸ்லிம்களும் ஜிகாத்தை ஏதோ வானத்தில் இருந்து குதித்தோர் என ஒதுக்க முடியாது. புலிகளின் தவறுக்கு இன்றைய தமிழர் தலைமையும், ஜிகாத்தின் தவறுக்கு இன்றைய முஸ்லிம் தலைமையும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்பதே சரியாகும். உண்மையில் தலைவர் - ஹக்கீம் (அஷ்ரப் அல்ல) காலத்தில் இது பற்றி மன்னிப்பு கோரிய புலிகள், கூடவே ஜிகாத்தின் செயல்களுக்கு ஹக்கீம் அடையாள மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி இருக்க வேண்டும். கிழக்கில் அவர்கள் செய்த அட்டூழியத்தின் நகலை சந்திக்க வந்த ஹக்கீமீடம் கொடுத்து இருக்க வேண்டும். இருதரப்பிலும் விட்ட பெரும் பிழைகளே முஸ்லிம்கள் அநியாயமாக வடக்கை விட்டு வெளி ஏற்றப்பட்டதன் சூழமைவு. இந்த சூழமைவு ஒரு போதும் வெளியேற்றிய மிலேச்ச, காட்டுமிராண்டி செயலை நியாயப்படுத்தாது. ஒரு நிழல் அரசு செய்திருக்க கூடாத summary punishment கூட்டு தண்டனை அது. ஆனால் யாழ்ப்பாண முஸ்லிமின் வலியும், வீரமுனை தமிழனின் வலியும் ஒன்றேதான். உளப்பூர்வமாக இரு தரப்பும் மன்னிப்பு கேட்க இப்போ ஒரு தடையும் இல்லை. கடந்த காலத்துக்கு மன்னிப்பு மட்டும் அல்ல, யாழில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை தமிழரும், கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலில் முஸ்லிம்களும் பரஸ்பரம் போடும் முட்டுகட்டைகளை தளர்த்தி நடப்பிலும் நல்லெண்ணப்படி நடக்கலாம். ஆனால் இரு இனங்களும் அடிப்படையில் ஒரே அடியில் இருந்து வந்தவை, ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள், எனவே இவர்கள் இப்படி வாழ வழி இல்லை என்பதே என் கருத்து.

அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு

3 months 1 week ago
எதிரி நாட்டின் எல்லையில் ஒன்று அல்லது பல நட்பு நாடுகள் இருந்தால் எதிரியை அணு ஆயுதம் கொண்டு தாக்குவது சாத்தியமா என்பதும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயம். முந்திகொண்டால் ஓரளவுக்கு எதிரியை வெல்லலாம் ஆனாலும் மொத்தத்தில் சிக்கல்தான். எதிர்காலத்தில் அணு ஆயுத போர் வந்தால் அதில் பாதிக்கப்படுவோர் பலர் அந்த போரில் சம்பந்தப்படாத நாடுகளை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். உலகின் மொத்த அணு ஆயுத கையிருப்பு அனைத்தும் பயன்படுத்தப்பட்டால் நாடுகளை மட்டுமல்ல இந்த உலகத்தையும் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களையும் கூட அழிக்கலாம்.

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

3 months 1 week ago
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது Oct 31, 2025 - 03:20 PM - 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட நபர்களில் 10 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmheoaqth01b3o29nqg3z56h8
Checked
Sat, 02/07/2026 - 20:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed