3 months ago
படிக்க எண்டு வந்திட்டு அப்பிடியே இஞ்சை வேரூண்டி நிக்கிற டாக்குத்தர்மார் சொந்த நாட்டுக்கு போங்கோப்பா....போங்கோ.போய் நல்லதை செய்யுங்கோ 🤣
3 months ago
ஆனால் உலக டெஸ்ட் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியை தோற்கடித்து உலக கிண்ண டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை அண்மையில் பெற்றது தென்னாப்பிரிக்கா அணி.
3 months ago
மருத்துவ மனைகளை தாக்குவதே கொடூரமான செயல். அதிலும் மகப்பேறு மருத்துவ மனையை தாக்குவதென்பது கொடூரத்திலும் கொடூரம்.
3 months ago
உலகம் எப்படியோ போகட்டும். உலகம் சொல்வதை ஏன் நாமும் சொல்ல வேண்டும். யாழிலும் அப்பிடி ஒன்றைப் பார்க்கும் போது ஒவ்வாமைதான் வருகிறது. ஓரிரண்டு வீரர்களை உண்டு இல்லை என்று ஆக்குவது எப்படி சரியாகும். இது ஒரு அணி விளையாட்டு. தவறுகள் எப்போதும் நடப்பதே. அதை எவ்வாறு அணியாகச் சரி செய்தார்கள் என்றுதானே பாரக்கவேண்டும். நேற்று அவுஸ்ரேலியா அணியாகவே நன்றாகச் செய்யலில்லை. நிறைய சின்னச் சின்னத் தவறுகள். அவர்கள் போன போக்கில் 350க்கு மேல் அடித்திருக்க வேண்டும். இந்தியா அந்த இடத்தில் சிறப்பாகவே அழுத்தத்தைக் கொடுத்து அவர்களைக் கட்டுப்படுத்தினார்கள். ஜெமைமாவே சொல்லியிருக்கிறா. தனது கவனம் சிதறத்தொடங்கியது என்றும், தான் சுலோகங்கள் சொல்லிக் கொண்டு இருந்ததாகவும். அதோட, சக துடுப்பாட்டக்காரருடன் தொடர்ந்து கதைத்தபடி இருந்ததாக. அப்படித்தானே இது நடக்க வேண்டும்.
3 months ago
நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்துவிடும் 😂 இந்தியா வெல்லுது பையனுக்கு புள்ளி ஏறுது🤣 ஏராளன் வெல்லுது போட்டியில்😇 என்று பையன் சொன்னது 😅
3 months ago
படித்தவர்கள்,தகமையுள்ளவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வர அனுமதியுள்ள போது..... ஏன் இப்படியான சட்டவிரோத செய்ய முற்படுகின்றார்கள் என தெரியவில்லை. அப்படி சட்ட விரோதமாக வந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்றைய ஐரோப்பா அன்று போல் இன்றில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
3 months ago
இது தான் உலகம் தோல்விக்கான காரணத்தை யாராவது ஒருவருடைய தலையில் கட்டவேண்டும் . இதனால் பலரும் தப்பிக்கலாம் அல்லவா நான் நினைத்தது அவர்களுக்குச் சகுனம் சரியில்லை என்று உங்கள் கணிப்பின் படி அந்த அணிக்கே வெற்றி மீது ஒரு ஒவ்வாமை உள்ளது😂
3 months ago
🤣............. அப்படி நடந்தால் சந்தோசமே, அண்ணா............. ஆனால் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு கப்பை கண்டாலே வயிற்றைக் கலக்கி, தலையைச் சுற்றி, வாந்தி எடுத்து, மயக்கம் வந்து............ இது எதுவும் அவர்களுக்கு வராவிட்டால், ஒரு மழையாவது வந்து அவர்களின் வெற்றியை தடுத்து விடுமாமே..................😜.
3 months ago
ஓமோம் ஐயனே, இங்கு கவனிக்க வேண்டியது, அவர்களை தனி இனக்குழுவாக (ethnicity/ethnic group) புலிகள் அங்கீகரித்துள்ளனர் என்பதுவே. இங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் - சிங்களவரும் தமிழரும் போன்று - தனித் தனியான இனக்குழுக்களாக பிரிந்திருப்பதை தாம் ஏற்பதாகவே தவிபு கூறியுள்ளனர். எனவே அவர்களை தமிழர்களோடு சேருமாறு வற்புறுத்துவது என்பது எப்படி சரியென்று எனக்கு தெரியவில்லை. மேலும் இவ்விரு தமிழ் பேசும் இனக்குழுக்களும் "தமிழ் தேசிய மொத்தத்தின்" (Totality of Tamil nationality) கீழ் அடங்குகின்றனர். (பேரினம் என்னும் சொல் தமிழில் Genus என்பதைக் குறிக்க பாவிக்கிறார்கள், ஆகையாலே மாற்றுச் சொல்லை பரிந்துரைத்தேன்) ஆம், புலிகளே ஏற்ற பின்னர் நானும் அதை எதிர்க்க போவதில்லை.
3 months ago
அதென்ன தோற்றால் தோற்கும். தென்னாபிரிக்கா கப்பை தூக்கும்.
3 months ago
🤣........... இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றால் 'இந்திய பெண்கள் அணிக்கு வயது போய்விட்டது. இளம் வீராங்கனைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.......' என்று சொல்வார்கள் போல....................🤣. பையன் சார் வேற அங்கே ஒரு 18 வயது வீராங்கனை இருக்கின்றார், இங்கே ஒரு 20 வயது வீராங்கனை இருக்கின்றார் என்று இமயம் முதல் குமரி வரை ஒரு லிஸ்ட்டே வைத்திருக்கின்றார்...................😜.
3 months ago
ஒண்டுக்கை ஒண்டு ...சிறியர்....அந்தக் காலத்திலேயே ...புட்டும் தேங்காய்பூவுமல்லோ.. இனி வரும் ...ஆரம்பமஐகிவிட்டது....செவ்வந்தி கேசை பார்த்தியள்தானே..
3 months ago
அலிஸாவைப் பற்றிய அபிப்பிராயங்கள் வேடிக்கையாக இருக்கு. இந்தத் தொடரில் ஜந்து போட்டிகள் விளையாடி, 299 ஓட்டங்கள் அடித்திருக்கிறா. இரண்டு தரம் நூறு. அவா ஒரு பிடிய விட்ட உடன், இப்படிக் கதைப்பது, வேடிக்கையாக இருக்கிறது. அதோட அவ ஒரு விக்கட் காப்பாளர். அணித்தலைவி. இவ்வளவுக்குப் பிறகும். விளையாட்டு வினோதங்கள்!
3 months ago
3 months ago
நன்றிகள் எல்லோருக்கும்
3 months ago
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 07 பகுதி: 07 - பின்னவலை யானைகள் புகலகம் (Pinnawala Elephant Orphanage) & கொழும்பு இலங்கை பயணத்தின் கடைசி சுற்றுலாவாக பின்னவலை யானைகள் புகலகம் இருந்தது. அவர்கள் ஆற்றங்கரையில் நின்று, பெரிய யானைகள் தண்ணீரில் குளிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜெயா சத்தமிட்டார்: “பெரிய குட்டிகள் குளிக்கின்றன!” கலை ஒரு தண்ணீர் பாட்டிலை [bottle] எடுத்து, தண்ணீர் தெளிக்கும் யானையைப் போல நடித்து, தனது குட்டி சகோதரன் மீது தெளித்தார். குழந்தைகள் சிரித்தபடி உருண்டு உருண்டு சிரித்தனர். ஒரு யானைப் பாகன் (mahout) அவர்களை அணுகிச் சொன்னான்: “சில யானைகள் தங்கள் குடும்பத்தை இழந்துவிட்டன. ஆனால் இங்கே நாம் அவற்றைப் பாதுகாக்கிறோம். அன்பைக் கொடுக்கிறோம்.” என்றார். அப்பொழுது தாத்தா கண்களில் நெகிழ்ச்சி பொங்க, பேரன்களை நோக்கிச் சொன்னார்: “இது தான் இலங்கையின் பாடம். துன்பத்திற்குப் பிறகும், போருக்குப் பிறகும் கூட நாமும் ஒருவருக்கொருவர் அன்புடன் காப்பாற்ற வேண்டும். ஒரு குடும்பம்போல.” என்றார். உடனே இசை தன்னுடைய சிறிய குரலில் சொன்னான்: “அப்படியென்றால் தாத்தா நீங்கள்தான் எங்களுடைய யானைப் பாகன். நாங்க எல்லாம் உங்க யானைகள்!” அனைவரும் சிரித்தார்கள். தாத்தா அவனைத் தழுவிக்கொண்டார். பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே உன் அறிவும் உனக்குப் பெரிதோ? சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும் உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ? பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன் உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ? வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம் தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ? பாசத்தின் அருமை உனக்குத் தெரியுது வேசமிடும் மனிதனுக்கு அன்பு தெரியாதோ? மோசமான இலங்கை அரசியல் உலகில் மனிதம் வளராது இறந்தது எனோ? குழந்தைகள் அமைதியாகி தாத்தாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். அப்பொழுது ஜெயா கூறினார்: “தாத்தா, ஒரு நாள் இந்தக் கதையை மற்றவர்களுக்குச் சொல்வோம். கடற்கரைகள், யானைகள் மற்றும் நம்பிக்கை பற்றி.” என்றாள். தாத்தா அன்புடன் சிரித்தார். “ஆம், என் சிறிய ஆய்வாளர்களே. நீங்கள்தான் இந்தத் தீவின் எதிர்காலம்.” என்று முதுகில் தட்டிக்கொடுத்தார். மீண்டும் கொழும்பு கொழும்பில் சத்தமாய் ஓடும் பஸ்கள், பளபளக்கும் கடைகள், கடற் காற்றின் வாசம்—அனைத்தும் கலந்த ஒரு பரபரப்பு காணப்பட்டது. அவர்கள் கால்ஃபேஸ் கிரீன் [Gall Face Green] சென்றனர். குழந்தைகள் வண்ணமயமான பட்டங்களை பறக்க விட்டனர். சுவை மிக்க இறால் வடை [Isso Vadai], ஐஸ்கிரீம் - எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஜெயா சிரித்தபடி சொன்னாள்: “தாத்தா, கொழும்பு தினமும் திருவிழாவைப் போல இருக்கிறது!” தாத்தா சிரித்தார். அவரின் உள்ளம் பழைய காயங்களை நினைத்தது. 1983 கறுப்பு ஜூலை - வீதிகள் எரிந்தன, தமிழர்கள் வேட்டையாடப்பட்டார்கள், நூலகம் சாம்பலானது. சில நிமிடங்கள் அமைதியாகக் கண்ணீர் வழிந்தது. ஜெயா கவனித்தாள்: “தாத்தா, ஏன் அழுகிறீர்கள்?” தாத்தா அவள் நெற்றியில் முத்தமிட்டு சொன்னார்: “சில நினைவுகள் ஒருபோதும் மறையாது. ஆனால் நீங்கள்… நீங்கள் என் புதிய நினைவுகள். பழையதைவிட பிரகாசமாக.” ஜெயா விரைவாகச் சொன்னார், “அப்படியானால், தாத்தா, உங்களுக்காக இன்னும் மகிழ்ச்சியான நினைவுகளை நாம் உருவாக்குவோம். இனி சோகமான நினைவுகள் உங்களுக்கு வேண்டாம்!” என்றாள். தாத்தாவின் கண்கள் பெருமையால் பிரகாசித்தன. “ஆம், என் குட்டி நட்சத்திரங்கள். அதனால் தான் நான் உங்களை இங்கு அழைத்து வந்தேன். இந்த இலங்கை நிலத்தை அறியவும், அதை நேசிக்கவும், அதன் கதையை முன்னோக்கி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும்.” என்றார். காலி முகத்திடலில் அலைகள் முழங்கியது, சத்தமிட்டபடி அடித்தன, ஆனால் அந்தக் கணத்திலும் தாத்தாவின் உள்ளம் அமைதியாக இருந்தது. அவருக்கு கடந்த காலத்தின் காயங்கள் இருந்தாலும், அவரது பேரக்குழந்தைகள் அந்தக் காயங்களுக்கு மருந்தாக இருந்தனர். யாழின் தென்றலில் நல்லூர் வளாகத்தில் நடந்து சென்றோம் கைகள் கோர்த்தே! புனித நிலத்தில் ஞானம் சேர மனம் நிறைந்து ஆனந்தம் பெருகியதே! நல்லூர் மேளமும் கடல் ஓசையும் மனதில் நிலைத்து என்றும் வாழுமே! கடல் சறுக்கல் டால்பின் பாய்தல் ஈழ சுற்றுலாவை பறை சாற்றுமே! தெற்கும் மேற்கும் மனிதம் நிலைத்தால் வடக்கும் கிழக்கும் மீண்டும் தளிருமே! ஒற்றுமை கீதம் உள்ளத்தில் பாடினால் வேற்றுமை நீங்கி சொர்க்கம் ஆகுமே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 07 https://www.facebook.com/groups/978753388866632/posts/32130663769915520/?
3 months ago
நானும் இதையே யோசித்தேன். அவுஸ் அணியின் களத்தடுப்பும் போற்றத் தக்கதாக இல்லை.
3 months ago
Book: The Satanic Force, Volume 1, 1988 April Page no: 747
3 months ago
இதெல்லாம் ஒரு விடயமே இல்லை.🤣
3 months ago
இது நான் அறியாதது. தகவலுக்கு நன்றி. ஆதாரம் தந்தால் மகிழ்வேன்.
Checked
Sat, 02/07/2026 - 17:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed