புதிய பதிவுகள்2

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 months 2 weeks ago
நடிகர் யோசப் விஜய் அவர்களின் ரசிகர்மன்றங்களை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க எல்லா உண்மைகளும் வெளியில வருமாம். இதை எனக்கு தெரிந்த தெலுங்குகாரர்கள் கூறினார்கள்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 months 2 weeks ago
அவர்கள் உங்களுக்குத் தான் குரங்குக்கு கூட்டம் விஜய்க்கு ரசிகர்கள் / தொண்டர்கள் மதிலில் பாய்வதும் கரண்ட் கம்பியில் தொங்குவதும் வீடுகள் மற்றும் கூரைகள் மீது தாவுவதும் எதுவோ?? அதிலும் இவை வெறி பிடித்த கூட்டம் வேறு.

பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?

3 months 2 weeks ago
நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு சரியாகவே தெரிகின்றது. ஏனெனில் நானும் நீங்கள் கூறும் நடைமுறையைத்தான் நானும் பின்பற்றுகின்றேன். என்னதொரு ஒற்றுமை பார்த்தீர்களா? 😂 எனக்கு இன்னும் சுகர் வருத்தம் வரவில்லை. ஆனால் மூன்று மாதத்திற்கொரு முறை வைத்திய அம்மா என்னை சுகர் போடர்ல நிக்குது என பயமுறுத்துவார். ஆனால் நான் பயப்பிடுவதில்லை.காரணம் உணவு விடயங்களில் நான் விட்டுப்பிடிப்பதுதான். இனிப்பு சாப்பாடுகள் சாப்பிடும் போது ஒரேயடியாக காய்ஞ்ச மாடு கம்பில் விழுந்த மாதிரி சாப்பிடுவதில்லை.உதாரணத்திற்கு சோறு போன்ற மாச்சாப்பாடுகள் சாப்பிட்டால் ஏனைய சீனி எந்த சாப்பாடுகளும் சாப்பிடுவதில்லை.தற்சமயம் அப்படி சாப்பிட்டாலும் நீண்ட நேர நடராசா நடைப்பயணம் நிச்சயம் உண்டு. மேலே ஒரு பெரியவர் எழுதியது போல் ஆசைகள் வரும் போது இரண்டு பேரீச்சம் பழங்களுடன் வெறும் தேனீர் குடிப்பதுண்டு. அந்த நாளில் நான் வேறு எந்த மா உணவுகளையும்.இனிப்பு சாப்பாடுகளையும் அறவே சாப்பிடுவதில்லை. அதை விட.... இரவு வேளைகளில் கவுனி அரிசியில் காய்ச்சிய கஞ்சி குடிப்பதுண்டு. என்ன இருந்தாலும் சுகருக்கான மருந்து மாத்திரைகள் எடுக்கக்கூடாது என்ற பிடிவாதம் என்னிடம் உள்ளது.போராடி பார்க்கலாம் என்றுறிருக்கிறேன்.பிரசருக்கு மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு சுகர் வரும்/வரலாம் என்ற தத்துவங்களும் பரவலாக உலாவுகின்றது. பார்க்கலாம். உங்கள் எழுத்துக்களுக்கு மிக்க நன்றி.🙏 இதெல்லாம் என் சொந்த அனுபவம் மட்டுமே. ஆதாரங்கள் கேட்டு அலுப்பு குடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 months 2 weeks ago
உண்மையான கருத்து இது தான் அதையே இங்கே உல்ட்டாவாக மாற்றும்போது சகல இயந்திரங்களையும் ஒன்றாக கைவசம் வைத்திருக்கும் ஒரு அரசாங்கம் எப்படி எல்லாம் உல்ட்டா செய்யும்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 months 2 weeks ago
காவல்துறை எச்சரித்தது என்பதில் உண்மை இல்லை விஜயை அவர்கள் தான் கருவூர் எல்லையிலிருந்து வரவேற்றிருக்கின்றார்கள் குறிப்பிட்ட இடத்தில் பேரூந்தை நிறுத்தி அங்கிருந்து தான் பேச வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் அவர்கள் உங்களுக்குத் தான் குரங்குக்கு கூட்டம் விஜய்க்கு ரசிகர்கள் / தொண்டர்கள் அதாவது அரசு தன் மீது பழி வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டத்தை அங்கெ பல மணி நேரம் காத்திருக்க வைத்திருக்கின்றது உங்கள் கருத்தின்படியே தி மு க பழிக்கு அஞ்சி மக்களை பலிக்கடாவாக்கியிருக்கின்றது என்பது தெரிகின்றது ஒரு முப்பதாயிரம் பேரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துஇருக்க முடியாத ஒரு காவல்துறை ..... அதற்கு ஒரு அமைச்சர் ... ஒரு அரசு

Muslim Homeguard Attacks on Tamil Civilians in Sri Lanka

3 months 2 weeks ago
இந்த விக்கி முன்மொழிவிற்கான கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பல தாக்குதல்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதில் 1984ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட 12 தாக்குதல்களை நான் இரட்டை சரிபார்ப்பிற்குட்படுத்தினேன். இவை முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் அவர்தம் ஆற்றுகையாலும் செய்யப்பட்டதாக அவ் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதென்பதற்கு முன்மொழிவாளரால் வழங்கப்பட்டிருந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாக வாசித்தேன். அதில் மூதூரில் திசம்பர் 25, 1985 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வன்புணர்ச்சி மட்டுமே (ஒன்றே ஒன்று) நான் ஆய்வுக்குட்படுத்திய 12 தாக்குதல்களில் முஸ்லிம் "ஊர்காவல் படை" ஆல் மேற்கொள்ளப்பட்டுள்ளது (வழங்ககப்பட்டுள்ள ஆதாரம், pg18). ஏனையவை முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டதென்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. மேலும் முல்லைத்தீவில் தாக்குதல் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டதென்றும் எழுந்தமானமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் "ஊர்காவல் படை" என்ற சொல் ஆதாரங்களில் வருவதாலே அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம்கள் செய்தவையென்று, ஊகிக்கிறேன். மேலும் மொழிப்பொத்தானை என்ற இடத்தில் சூலை 10, 1986 அன்று தவிபு ஆல் கொல்லப்பட்டார்கள் என்று ஐயப்படும் 11 பேரின் விபரமும் இங்கே சேர்க்கப்பட்டுள்ளது! முஸ்லிம்களால் தமிழர்கள் மீது 1954ம் ஆண்டு தொடக்கம் பல்வேறு இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இவை படுகொலைகளாக, விரட்டியடிப்புகளாக, வன்புணர்ச்சிகளாகவென்று பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றுள்ளன. கொஞ்சம் தெளிவாக எடுத்துரைத்தால், ஈழத்தீவில் முதன் முதல் தமிழர்களை அழித்தது இந்த முஸ்லிம்கள் தான்; 1954ம் ஆண்டு வீரமுனை ஊர் எரியூட்டப்பட்டது! இது இவ்வாறு இருக்கையில் அவர்கள் மேல் வலிந்து குற்றமேற்ற வேண்டிய தேவை இருக்கவேண்டியதில்லை. நடந்ததை அவ்வாறே வரலாற்றில் பதிக்க வேண்டும். சோடினைகள் வேண்டியதில்லை. முஸ்ளிம்களால் தமிழருக்கு மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் குறித்து கட்டுரையொன்று விக்கியில் ஏற்றப்பட வேண்டும் தான், எனினும் அதற்காக பொய்யான சோடிக்கப்பட்டவற்றை ஏற்றுதல் மிகவும் தவிர்க்கப்பட வேண்டும். அதன் பின்விளைவுகள் வளரி போன்று எமக்கே திரும்ப வரக்கூடும் முயற்சியாளருக்கு வாழ்த்துக்கள், எனினும் தெரிந்தே பொய்களை ஏற்றியுள்ளதால் அவரின் கட்டுரைக்கு "- 1" சிவப்பு புள்ளி வழங்கியுள்ளேன். உண்மையில் தங்களுக்கு ஏற்ற விருப்பமிருந்தால் கீழுள்ள எனது இந்த ஆவணக்கட்டை தாராளமாக பாவித்து விக்கியில் ஏற்றுங்கள். இதற்குள் 1954ம் ஆண்டு முதல் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் காலவரிசையில் பதிக்கப்பட்டுள்ளது. நன்றி

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
பையன் சார், இந்த இந்திய மகளிர் அணியை கீரை விற்க அனுப்ப வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை....................🤣. இவர்கள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்பார்கள் என்று நான் நினைத்திருக்க, இவர்களோ வழி வழியே எல்லோரிடமும் அடிவாங்கிக் கட்டுகின்றார்கள்..............🫣.

Books on Tamil Eelam Liberation Struggle aka Sri Lankan Civil War

3 months 2 weeks ago
Sri Lanka: The Untold Story The following are links to a series of articles published by Asia Times On Line. Authored by K.T. Rajasingham, it is essentially a synopsis on the post colonial history of Ceylon (Sri Lanka). The first chapter explains the ancient history of the island as a thread to the current conflict. The ensuing chapters are descriptive of the colonial and post-colonial history. https://www.sangam.org/ANALYSIS/AsiaTimes.htm

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
உந்த‌ இங்லாந்தையே சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல‌ முடிய‌ வில்லை ம‌லை போல் இருக்கும் அவுஸ்ரேலியாவை வென்று கோப்பை வெல்வ‌த‌ நினைச்சு கூட‌ பார்க்க‌ முடிய‌ல‌☹️............. இனி வ‌ரும் போட்டிக‌ள் இர‌ண்டையும் வென்றால் தான் சிமி பின‌ல் ஒன்றில் தோத்தால் கூட‌ நியுசிலாந் சிமி பின‌லுக்கு போய் விடும்.........................

தீபாவளி துளிகள்!

3 months 2 weeks ago
தீபாவளித் துளிகள்! ************************ தீப ஒளியில் இருளகன்றது குடிசை எங்கும் வெளிச்சம் அடுப்புக்குள் பூனை கிடப்பது தெரிந்தது. தீபாவளி எப்போது வருமென காத்துக் கிடந்தார்கள் குழந்தைகள் அடுத்த புது உடுப்புக்காக. விற்கும் விலையை இருமடங்காக்கி பாதிவிலைக்கு தருவதாக கொடுக்கிறார்கள் கடைக்காரர்கள். நரகாசூரனை அழித்த நாளென கொண்டாடுகிறார்கள் உயிரோடே இருக்கிறான் போதைப்பொருள் அசுரனாக. தீபாவளி கொண்டாட்டத்துக்காக பழய உடுப்புகளை களட்டி வீசுகிறார்கள் பாவம் ஆடு மாடுகள். கோயில்களை விடவும் நிரம்பி வழிகிறது மக்கள் கூட்டம் மதுக்கடை வாசல்களில். ஆலயங்களுக்கு எல்லா பூக்களும் எடுத்து செல்கிறார்கள் ஆனால் செவ்வந்தியை தவிர்த்து. பெற்றோலுக்கு பதிலாக மது ஊற்றி ஓடும் வாகனங்கள் பயணிகள் எச்சரிக்கை. தபால் காரர்களிடமிருந்து தீபாவளி காட்டுகளை கைபேசிகள் பறித்தெடுத்துவிட்டன. தீபாவளி இனிப்புகளும் பலகாரங்களும் இப்போது அம்மாக்கள் செய்வதில்லை ஆயாக்கள் செய்கின்றார்கள் கடைகளில். அன்புடன் -பசுவூர்க்கோபி. “எல்லோர் வாழ்விலும் இருள் அகன்று ஒளி பிறக்க இனிய நல் தீபாவளி நல் வாழ்த்துகள்”

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
அப்பிடியும் வாறனான். ஆரேன் பதில் அளித்தால், அதை அமத்திப்போட்டு வரலாம். அப்பிடி இல்லாதபோதுதான் சுத்திவளைச்சு வரவேண்டிக் கிடக்கு. நீங்கள் சொலவதைப் பார்த்தால், எல்லோரும் ஏதோ ஒரு சுத்திவளைப்பில்தான் உள்ளீர்கள். ம்ம்ம். சுத்தி வளைப்பு நமக்கென்ன புதுசா. ☹️

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
Notification பட்டனை அழுத்தினால் அதில் உங்கள் பதிலுக்கு யாராவது விடையளித்திருந்தால் அதிலிருக்கும். அதை அழுத்தினாலே இந்த திரிக்குள் வரலாம். அல்லது Bookmark செய்து வைக்கலாம்! இந்தியா தோற்றது ஒரே சந்தோசம்!! அரையிறுதிக்கே வரக்கூடாது!😠

அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக லட்சக்கணக்கானோர் போராட்டம் - என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
பட மூலாதாரம், FREDERIC J. BROWN/AFP via Getty Images படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற போராட்டத்தில் டிரம்ப் உருவிலான பலூன்களை போராட்டக்காரர்கள் எடுத்து வந்தனர். 19 அக்டோபர் 2025, 07:15 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக நியூயார்க், வாஷிங்டன் டிசி, சிகாகோ, மயாமி மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை காலை நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தெருக்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களின் வாசல்களிலும், "மன்னராட்சி அல்ல, ஜனநாயகம்," மற்றும் "அரசியலமைப்பு விருப்பத்தேர்வு அல்ல," என்கிற பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள் நிரம்பி வழிந்தனர். போராட்டங்களுக்கு முன்பு அதில் ஈடுபடுவர்கள் தீவிர இடதுசாரி ஆன்டிஃபா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என டிரம்பின் கூட்டாளிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தப் பேரணிகள் 'அமெரிக்க வெறுப்பு பேரணிகள்' எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் சனிக்கிழமை பேரணிகள் அமைதியாக நடைபெற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். "நோ கிங்ஸ் (மன்னர்கள் இல்லை)" என்கிற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் அடிப்படை கொள்கை என்பது அஹிம்சை தான் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் சாத்தியமான மோதல்களை தவிர்க்குமாறும் கூறப்பட்டுள்ளது. நியூயார்க் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மேளதாளங்களுக்கு மத்தியில் "இது தான் ஜனநாயகம் போல் இருக்கிறது" என முழக்கங்களை எழுப்பி வந்தனர். வானத்தில் ஹெலிகாப்டர்களும் டிரோன்களும் பறந்த நிலையில் காவல்துறையினர் சாலையோரமாக நின்றிருந்தனர். நகரின் ஐந்து பகுதிகளில் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அமைதியான முறையில் போராட ஒருங்கிணைந்திருந்ததாகவும் போராட்டம் தொடர்பாக எந்த கைதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. டைம்ஸ் சதுக்கத்தில் பணியிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு 20,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கிறார். பட மூலாதாரம், Stephani Spindel/VIEWpress படக்குறிப்பு, டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் "ஃபாசிசம் மற்றும் எதேச்சதிகாரத்தை நோக்கிய நகர்வைக்" கண்டு கோபமும் கவலையும் அடைந்ததால் நியூயார்க் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பகுதி நேர எழுத்தாளரும் ஆசிரியருமான பெத் ஜாஸ்லோஃப் தெரிவித்தார். "நியூயார்க் நகரைப் பற்றி நான் மிகவும் அக்கறைப்படுகிறேன். இங்கு பலருடன் இருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது." என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம், Grace Eliza Goodwin/BBC படக்குறிப்பு, நியூயார்கில் நடைபெற்ற போராட்டத்தில் எழுத்தாளர் பெத் ஜாஸ்லோஃப் கலந்து கொண்டிருந்தார். ஜனவரி மாதம் மீண்டும் அதிபராக பதவியேற்றதிலிருந்து அதிபருக்கான அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளார் டிரம்ப், மத்திய அரசாங்கத்தின் அங்கங்களை நிர்வாக உத்தரவுகளைப் பயன்படுத்தி கலைப்பது மற்றும் மாகாண ஆளுநர்களின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நகரங்களில் படைகளை குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தனது அரசியல் எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளுக்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தன்னை சர்வாதிகாரி அல்லது ஃபாசிஸ்ட் என அழைப்பதை நகைப்பிற்குரியது எனக் கூறும் டிரம்ப் நெருக்கடியில் இருக்கும் நாட்டை மீண்டும் கட்டமைக்க தனது நடவடிக்கைகள் அவசியமானது எனத் தெரிவிக்கிறார். ஆனால் டிரம்ப் அரசின் சில நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்றும் அமெரிக்க ஜனநாயகத்திற்கே ஆபத்தானவை என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். இத்தாலியில் பிறந்து வளர்ந்தவரும் நியூஜெர்சிவாசியுமான 68 வயதான மின்னணு பொறியாளர் மாசிமோ மாஸ்கோலி போராட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த நூற்றாண்டில் அவரின் சொந்த நாடு (இத்தாலி) சென்ற பாதையில் அமெரிக்காவும் செல்வதால் கவலையடைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். "முசோலினியின் ராணுவத்தை உதறித்தள்ளி புரட்சி இயக்கத்தில் சேர்ந்த இத்தாலிய ஹீரோவின் உறவினர் நான். அவர் ஃபாசிஸ்டுகளால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 80 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஃபாசிசத்தைக் காண்பேன் என நான் நினைத்திருக்கவில்லை." என மாஸ்கோலி தெரிவித்தார். பட மூலாதாரம், Grace Eliza Goodwin/BBC படக்குறிப்பு, நியூயார்க் போராட்டத்தில் கலந்து கொண்ட இத்தாலிய அமெரிக்கரான மாசிமோ மாஸ்கோலி அமெரிக்காவில் ஃபாசிசம் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார். டிரம்பின் நடவடிக்கைகளில் குறிப்பாக புலம்பெயர்ந்தோரை கைது செய்வது மற்றும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கான சுகாதார காப்பீட்டை ரத்து செய்வது கவலையளிப்பதாக மாஸ்கோலி தெரிவிக்கிறார். "நாம் உச்சநீதிமன்றத்தை நம்பியிருக்க முடியாது, நாம் அரசாங்கத்தை நம்பியிருக்க முடியாது. நாம் நாடாளுமன்றத்தை நம்பியிருக்க முடியாது. அரசு, நிர்வாகம், நீதித்துறை என அனைத்தும் தற்போது அமெரிக்க மக்களுக்கு எதிராக உள்ளன. எனவே தான் நாங்கள் போராடுகிறோம்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். " செனட் சிறுபான்மை பிரிவு தலைவரும் நியூயார்க் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான சுக் ஷூமரும் போராட்டத்தில் கலந்து கொண்டார். "அமெரிக்காவில் சர்வாதிகாரிகள் கிடையாது, டிரம்ப் நமது ஜனநாயகத்தை அழிக்க நாம் அனுமதிக்கமாட்டோம்," என ஷுமர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார். போராட்டத்தில் "சுகாதாரத் துறை நெருக்கடியை சரி செய்யுங்கள்" என்கிற பதாகையுடன் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். வெர்மாண்டைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் வாஷிங்டனில் தலைமை உரையாற்றினார். "நாங்கள் அமெரிக்காவை வெறுப்பதால் இங்கு வரவில்லை, அமெரிக்காவை நேசிப்பதால் தான் இங்கு வந்துள்ளோம்," என தனது உரையில் குறிப்பிட்டார். வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் டிரம்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' வாசகம் பொறிக்கப்பட்டிருந்த தொப்பி அணிந்த ஒருவரை பிபிசி கண்டது. ஒரு வேலையாக நகரத்துக்கு வந்த அவர், போராட்டத்தைக் காணலாம் என முடிவு செய்திருக்கிறார். தனது பெயரைக் கூற மறுத்த அவர் தனக்கு ஒன்றும் புரியவில்லையென்றும் மக்கள் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். சிறிது நேரத்தில் கூட்டத்தில் ஒரு பெண் அவருக்கு எதிராக அவதூறான கோஷத்தை எழுப்பினார். இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவில் மட்டும் நடைபெறவில்லை. ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேரணிகள் நடைபெற்றன. லண்டனிலும் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடினர். கனடாவின் டொராண்டோ நகரிலும் அமெரிக்க தூதரகம் அருகில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது "கனடாவிலிருந்து கையை எடுங்கள்" என்கிற பதாகையை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். பட மூலாதாரம், Wiktor Szymanowicz/Future Publishing via Getty Images படக்குறிப்பு, லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியே நடைபெற்ற போராட்டம் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள நேர்காணலில் டிரம்ப் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் பற்றி பேச இருக்கிறார். "மன்னரா! இவை அனைத்தும் நாடகமே. என்னை மன்னர் எனக் குறிப்பிடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. நான் மன்னர் கிடையாது." என நேர்காணலின் முன்னோட்டத்தில் அவர் தெரிவித்திருந்தார். கன்சாஸ் செனட்டர் ரோஜர் மார்ஷல் பேரணிக்கு முன்பாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "படையினரை வெளியேற்ற வேண்டும். அது அமைதியாக நடக்கும் என நம்புகிறேன். ஆனால் எனக்கு சந்தேகம் உள்ளது." எனத் தெரிவித்தார். அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பொறுப்பில் உள்ள குடியரசு கட்சியின் ஆளுநர்கள் போராட்டங்களுக்கு முன்பாக தேசிய படைகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். வியாழக்கிழமை டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரேக் அபாட், ஆஸ்டின் பகுதியில் ஆன்டிஃபா போன்ற போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதால் தேசிய படைகள் தேவைப்படும் எனக் கூறி அவர்களை அழைத்துள்ளார் இந்த நகர்வை, மாகாணத்தின் மூத்த ஜனநாயக கட்சி தலைவர் ஜீன் வூ உள்ளிட்ட பலரும் நிராகரித்துள்ளனர். "அமைதியான போராட்டங்களை ஒடுக்க ஆயுதமேந்திர ராணுவ வீரர்களை அனுப்புவது என்பதை மன்னர்களும் சர்வாதிகாரிகளுமே செய்வார்கள் - கிரேக் அபாட் தானும் சர்வாதிகாரிகளில் ஒருவர் என்பதை நிருபித்துள்ளார்." எனத் தெரிவித்தார். வெர்ஜீனியா மாகாணத்தின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆளுநரான கிளென் யங்கின்னும் தேசிய படைகளை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். ஆனால் போராட்டத்தின்போது படைகள் இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டம் வாஷிங்டனில் டிரம்பின் கோரிக்கைக்கு இணங்க கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் போராட்டம் நடந்த இடத்தில் அவர்கள் இல்லை, சில உள்ளூர் காவல்துறையினர் மட்டும் இருந்தனர். வாஷிங்டனில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் "நான் தான் ஆன்டிஃபா" எனக் கூறும் பதாகையை வைத்திருந்தார். 76 வயதான சுக் எப்ஸ் அது மிகவும் அர்த்தம் பொதிந்த பதம் என்றார். அதன் அர்த்தம், "அமைதி, சுகாதார காப்பீடு, வாழ்வதற்கான ஊதியம், வாழ்வாதாரம், புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற இனக் குழுக்களைச் சேர்ந்த மக்களை ஆதரிக்கிறேன்," என்பது தான் எனத் தெரிவித்தார். "டிரம்ப் அனைவரையும் தூண்டிவிடுகிறார், அல்லது தூண்டிவிட முயற்சிக்கிறார், ஆனால் அது நடக்கவில்லை," என அவர் தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் விவகாரத்தில் அமெரிக்கர்களின் ஆதரவு பிளவுபட்டுள்ளது. ராய்ட்டர்ஸ்/இப்சாஸ் சமீபத்தில் நடத்திய ஆய்வில் டிரம்பின் நடவடிக்கைகளை 40% பேர் மட்டுமே ஆதரவளிப்பதாகவும் 58% பேர் எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பிற்கு முதலாவது ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட ஆதரவு அதிகமாக இருந்தாலும் இரண்டாவது முறையாக பதவியேற்றபோது இருந்ததைவிட (47% ஆதரவு) தற்போது குறைவாகவே உள்ளது. ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு அதிபர்களுக்கான ஆதரவு குறைவது இயல்பான ஒன்று தான். ராய்ட்டர்ஸ்/இப்சாஸின்படி 2021 ஜனவரியில் ஜோ பைடன் அதிபரானபோது 55% ஆதரவு இருந்தது. ஆனால் அதே ஆண்டு அக்டோபர் மாதம், இந்த ஆதரவு 46% ஆக சரிந்தது. கூடுதல் செய்தி சேகரிப்பு அனா ஃபாகய் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77zjyy2gkxo

இலங்கையில் கட்சி அரசியல் மறைகிறது - ரணில் விக்கிரமசிங்க

3 months 2 weeks ago
Published By: Digital Desk 1 19 Oct, 2025 | 02:56 PM இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் சூழல் மையங்கொள்வதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகிலும் இந்த மாற்றம் நிகழ்வதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் போக்கு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான வருண ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையடல் ஒன்றின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில், ஜனநாயக நாட்டிற்கு எதிர்க்கட்சியின் செயல்திறன் மிகவும் முக்கியமானது. ஆனால் எதிர்காலத்தில் கட்சி அரசியல் தோல்வியடைந்து, தனிநபர்களைச் சுற்றியே அரசியல் தீர்மானிக்கப்படும். இருப்பினும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும். ஆனால் இன்று எதிர்க்கட்சி பலவீனமாகவே உள்ளது. எதிர்க்கட்சியாக பரந்துபட்டுச் செயல்படாமல், சில நபர்கள் மட்டுமே எதிர்க்கட்சியாகச் செயல்படுகின்றனர். உதாரணமாக சாமர சம்பத், தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் உள்ளனர். உத்தேச பொதுக் கூட்டணியின் தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. இதற்கு நான் இணங்கமாட்டேன் என்று கருதுகின்றனர். அவ்வாறில்லை. ஆவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டால், கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டம் என்ன என்ற கேள்வி உள்ளது. பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளும் அரசியல் நிலப்பரப்பில் மறைந்து போகலாம். இலங்கையில் மட்டுமல்ல, முழு உலகிலும் 'தனிநபரை சார்ந்த அரசியல் உருவாகி வருகிறது. உலகெங்கிலும் கட்சிக் கட்டமைப்புகளை விட, தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் ஒரு காலகட்டம் வரும் என்றார். https://www.virakesari.lk/article/228143

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
நல்ல கேள்வி! பதிலும் நீங்களே சொல்லிவிட்டீங்களே அண்ணை. இந்த திரியை Bookmark செய்து வையுங்கோ அல்லது Notification ல் உங்களை Tag பண்ணி பதில் சொன்னதற்கோ Like பண்ணியதை வைத்தோ குறுக்கு வழியில் வரலாம் என்று நினைக்கிறேன்.

குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி!

3 months 2 weeks ago
Quantum Computing explained in Tamil | How Quantum Computer Work? explained in Tamil |Karthik's Show This video explains how Quantum Computers works? in Tamil. Quantum Computing explained in Tamil. Quantum Concepts explained for beginners. Super Position explained in Tamil. Quantum Interference explained in Tamil. Quantum Entanglement explained in Tamil. Subscribe to this channel for more such videos. Happy to share that we have launched our website https://www.karthiksshow.com and first course in Tamil will go live on Jan 15, 2023. Our first course will be 'Python Programming for Beginners' - This course is on pre-launch sale now with special discounts. For more details visit our website. To get updates and offers for courses related to Data Science, Data Engineering, Data Analyst and Machine Learning in Tamil, subscribe to our newsletter.
Checked
Thu, 02/05/2026 - 01:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed