3 months 2 weeks ago
இரு பாடல்கள் பகுதி 5 இல் தவறிவிட்டன. அவை இங்கே இணைக்கப்படுகிறது கீழே [1] ஜெயா கேட்டாள், “தாத்தா... மனிதர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள், ஆனால் விலங்குகள் ஒன்றாக வாழ்கின்றன? விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம் விலங்குகளை ஒவ் வொன்றாக அடக்கிஅடக்கி குப்பை மனிதர்கள் செழிக்கசெழிக்க விட்டோம்! ஆசையில் மூழ்கி அசிங்கத்தை பூசி புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக பாதை தவறி அழுக்கை சுமந்து மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே! தாத்தா கிசுகிசுத்தார், “ஏனென்றால் விலங்குகள் பேராசையால் வாழ்வதல்ல, சமநிலையால் வாழ்பவை.” [2] ஆனால் இந்த மீனவர்களின் வறுமை, தாத்தாவுக்கு நன்றாக நினைவிருந்தது, அவர்களின் வாழ்க்கை சுற்றுலாப் பயணிகளுக்காக கற்பனையான தோற்றம் ஒன்றால் இங்கு உருவாக்ப் பட்டுள்ளது [Romanticized] என்பது தான் அது. ஆனால் அவர்கள் பசியால் நிறைந்தவர்கள் என்பது பார்வையாளர் பலருக்குப் புரியாது. மரக் கம்பம் விடிவெள்ளி நமக்கு விரி கடலே பள்ளிக்கூடம் - ஐலசா குட்டி மீன்கள் நம்தோழன் - ஐலசா கொக்காய் ஒற்றைக்காலில் - ஐலசா அருமைமேகம் நமதுகுடை - ஐலசா பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசா பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா பிடிக்கும் மீன்கள் நம்உணவு - ஐலசா “கடலில் திமிங்கலங்கள் சுதந்திரமாக உள்ளன,” தாத்தா தன் பேத்தியிடம் கூறினார், “ஆனால் இங்குள்ள மக்கள் அனைவரும் இன்னும் சுதந்திரமாக இல்லை.”
3 months 2 weeks ago
Published By: Digital Desk 1 20 Oct, 2025 | 09:36 AM போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவேண்டும். சிறுவர்களை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். சிறுவர்கள் மீதான முதலீடு என்பது சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். சிறுவர்களுக்கு தீங்கான எதையும் நாம் முன்னெடுக்கக் கூடாது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் இருந்தார்கள். இன்றும் விபத்துக்களால் பெற்றோர்களை இழந்து அநாதரவான நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்படுகின்றார்கள். எந்தவொரு சிறுவர்களுக்கும் ஆதரவில்லாத நிலைமை வரக்கூடாது. அவர்களி;ன் எதிர்காலம் பாதிக்க அனுமதிக்க முடியாது. மாகாணத் திணைக்களம் சிறுவர் இல்லங்களைக் கண்காணித்து சகல சிறுவர்களையும் அரவணைத்து அவர்களை இந்த நாட்டுக்குத் தேவையான நற்பிரஜையாக உருவாக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/228179
3 months 2 weeks ago
கீரை விக்கிறது அவ்வளவு சுலபமா ......? அதுக்கும் சரிவரமாட்டார்கள் என்று நீங்கள் கிரிக்கட் டுக்குத்தான் லாயக்கு என்று அனுப்பி வைத்தவை ......! 😂 அட .....8,9 ம் இடத்தில் என்னைக் காணவில்லை என்று கீழே பார்த்தால் அங்கே செம்பாட்டான் , பிரியன் எல்லோரும் வரிசையாய் நிக்க, சரி நான் தனியாய் இல்லை துணைக்கு ஆட்கள் இருக்கினம் என்று பார்த்தால் அங்கும் என் பெயர் இல்லை என்று மேலே பார்க்க அதிசயமாய் 6 ல் என்னை அப்பி வைத்திருக்கு ........மகிழ்ச்சி ......! 😂
3 months 2 weeks ago
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் யாழில்! Published By: Digital Desk 1 20 Oct, 2025 | 10:39 AM படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) யாழ் . ஊடக அமையத்தில் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் படத்திற்கு குரலற்றவர்களின் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர். தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார். அந்த நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுததாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228187
3 months 2 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லூவா அருங்காட்சியகம் கட்டுரை தகவல் இயன் ஐக்மேன் ரேசல் ஹாகன் 20 அக்டோபர் 2025, 04:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் துணிகர கொள்ளை நடந்துள்ளது. இதில், பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை வரும் இந்த அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள் மிகவும் விலையுயர்ந்த 8 நகைகளை திருடிவிட்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர். சினிமா பாணியில் நடந்தேறியுள்ள இந்த கொள்ளை பிரான்ஸையே உலுக்கியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் தற்போது வரை நடந்தது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, திருடர்கள் பால்கனி வழியாக அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர். கொள்ளை எப்படி நடந்தது? ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்களுக்காக அருங்காட்சியகம் திறந்த சில நிமிடங்களிலே 09:30 மணியிலிருந்து 09:40 மணிக்குள் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. நான்கு கொள்ளையர்கள் வாகனத்தில் பொருத்தப்பட்ட இயந்திர ஏணியைப் பயன்படுத்தி செய்ன்(Seine) நதிக்கு அருகே உள்ள பால்கனி வழியாக அருங்காட்சியகத்தின் அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர். வாகனத்தில் பொருத்தப்பட்ட ஏணி ஒன்று முதல் தளத்தின் ஜன்னல் வரை இருப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண முடிகிறது. இரண்டு கொள்ளையர்கள் பேட்டரியால் இயங்கும் கட்டர்களைப் பயன்படுத்தி கண்ணாடி தகட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கு பணியிலிருந்த காவலர்களை அச்சுறுத்தி அந்த தளத்தை காலி செய்ய வைத்துவிட்டு, இரண்டு காட்சி பெட்டிகளில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கொள்ளையர்கள் பயன்படுத்திய ஏணி அருங்காட்சியகத்தில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்ததைத் தொடர்ந்து பணியாளர்கள் நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பு படைகளை அழைத்தனர் என கலாச்சாரத் துறை அறிக்கை மூலம் கூறியுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட குழுவினர் அவர்கள் வந்த வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற போது அருங்காட்சியக ஊழியரின் தலையீட்டால் தடுக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎஃப்1 செய்தி ஊடகத்திடம் பேசிய கலாச்சாரத் துறை அமைச்சர் ரச்சிதா, "கொள்ளைச் சம்பவத்தின் காட்சிகள், கொள்ளையர்கள் அமைதியாக வந்து நகைகள் இருந்த காட்சி பெட்டிகளை உடைக்க ஆரம்பித்ததைக் காட்டுகின்றன" எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை, "வன்முறை இல்லாமல் இந்த கொள்ளை நடத்தப்பட்டுள்ளது." என தாடி தெரிவித்தார். கொள்ளையர்கள் மிகவும் "அனுபவம் வாய்ந்தவர்கள்" போல தெரிந்ததாக கூறும் அவர், இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல வேண்டும் என்கிற மிகவும் தெளிவான திட்டத்தோடு வந்துள்ளனர் என்றார். காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சி அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான நான்கு பேரையும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் இண்டர் ரேடியோவில் பேசிய அந்நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், "இந்தச் சம்பவம் மிகமிக வேகமாக நடைபெற்றது, வெறும் ஏழே நிமிடங்களில் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்." எனத் தெரிவித்தார். அருங்காட்சியகம் காலி செய்யப்பட்ட போது "மிகவும் பதற்றம்" நிறைந்து காணப்பட்டதாக கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் அருங்காட்சியகத்தின் நுழைவுவாயில் மெட்டல் கதவுகளைக் கொண்டு மூடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. திருடப்பட்ட நகைகள் எவை? அருங்காட்சியகத்திலிருந்து கிரீடங்கள், நெக்லஸ், காதணிகள் மற்றும் ப்ரூச்கள் உள்ளிட்ட எட்டு பொருட்கள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நகைகள் அனைத்தும் பிரெஞ்சு மன்னர்கள் வசம் இருந்தவை. திருடு போன நகைகளின் பட்டியலை பிரான்ஸ் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது, அவை மூன்றாம் நெப்போலியனின் மனைவியும் அரசியுமான யூஜினிக்குச் சொந்தமான கிரீடமும் அணிகலன் அரசர் மேரி லூயிசிற்கு சொந்தமான மரகத நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி மரகத காதணிகள் அரசி மேரி அமீலி மற்றும் ஹார்டென்சுக்கு சொந்தமான நெக்லஸ், கிரீடம் மற்றும் ஒற்றைக் காதணி "ரெலிகுவரி ப்ரூச்" என அழைக்கப்படும் நகை இந்த நகைகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வைரங்களும் இதர விலை மதிக்க முடியாத ரத்தின கற்களும் இடம்பெற்றுள்ளன. அரசி யூஜினின் கிரீடம் உட்பட இரண்டு பொருட்கள் சம்பவ இடத்திற்கு அருகே கிடந்தன. அவை தப்பிச் செல்லும்போது தவறவிடப்பட்டிருக்கலாம். அந்த நகைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். திருடப்பட்ட நகைகள் "விலைமதிக்க முடியாதவை" மற்றும் "அளவிட முடியாத பாரம்பரிய மதிப்பை" கொண்டவை எனக் குறிப்பிட்டார் நுனெஸ். முன்னர் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதா? 1911-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருங்காட்சியக பணியாளர் ஒருவர் மோனாலிசா ஓவியத்தை சுவரிலிருந்து அகற்றி அவர் அணிந்திருந்த கோட்டிற்கு அடியில் வைத்து எடுத்துச் சென்றார். அப்போது மோனாலிசா ஓவியம் பிரபலமாகியிருக்கவில்லை. பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஓவியம் மீட்கப்பட்டது. லியோனார்டோ டவின்சியின் இந்த ஓவியம் இத்தாலிக்குச் சொந்தமானது என நம்பியதால் அதனை திருடியதாக அருங்காட்சியக பணியாளர் ஒப்புக்கொண்டார். தற்போது மோனாலிசா ஓவியத்தை யாரும் திருட முயற்சிப்பதில்லை. அருங்காட்சியத்தில் உள்ளதிலேயே மிகவும் பிரபலமான மோனாலிசா ஓவியம் மிகவும் பாதுகாக்கப்பட்ட கண்ணாடி அறையில் இருக்கிறது. 1998-ஆம் ஆண்டு கமில் கோரோட் வரைந்த 19-ஆம் நூற்றாண்டு ஓவியமான 'லே செமின் தி செவ்ரே' திருடப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் பிறகு அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது. சமீபத்தில் பிரெஞ்சு அருங்காட்சியகங்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் லிமோஜஸில் உள்ள அட்ரியன் துபோச் அருங்காட்சியகத்தில் நுழைந்த திருடர்கள் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள பீங்கான் பொருட்களை திருடிச் சென்றனர். 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பாரிசில் உள்ள காக்னாக்-ஜே அருங்காட்சியகத்திலிருந்து "மிகவும் வரலாற்று மற்றும் பாரம்பரிய மதிப்புள்ள" ஏழு பொருட்களை திருடப்பட்டது. அவற்றில் ஐந்து பொருட்கள் சில நாட்கள் கழித்து மீட்கப்பட்டன. அதே மாதம் புர்கண்டியில் உள்ள ஹிரோன் அருங்காட்சியகத்தில் நுழைந்த ஆயுதமேந்திய திருடர்கள் பல மில்லியன் பவுண்ட்கள் மதிப்புள்ள 20-ஆம் நூற்றாண்டு கலைப் பொருட்களை திருடிச் சென்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ydvg38dvzo
3 months 2 weeks ago
இந்தியாவை 4 ஓட்டங்களால் வென்று உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இங்கிலாந்து 20 Oct, 2025 | 01:20 AM (நெவில் அன்தனி) இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்யில் இந்தியாவை 4 ஓட்டங்களால் பரபரப்பான முறையில் வெற்றிகொண்ட இங்கிலாந்து, அரை இறுதியில் விளையாடும் தகுதியை உறுதிசெய்துகொண்டது. அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து மூன்றாவது அணியாக அரை இறதி வாப்ப்பை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது. இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்யில் இந்திய அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர், ஸ்ம்ரித்தி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகிய மூவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்த போதிலும் அநாவசியமான அடி தெரிவுகளால் தங்களது விக்கெட்களைத் தாரை வார்த்ததால் இங்கிலாந்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது. ஹீதர் நைட் குவித்த சதமும் கடைசி ஓவர்களில் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் இங்கிலாந்தை வெற்றிபெறச்செய்தன. 289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பவர் ப்ளேயில் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிறு அழுத்தத்தை எதிர்கொண்டது. ஆனால், ஸ்ம்ரித்தி மந்தனா, ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர். ஹார்மன் ப்ரீத் கோர் 70 பந்துகளில் 10 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களைப் பெற்று தவறான ஆட்டத் தெரிவின்மூலம் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து மந்தனா, தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர். மொத்த எண்ணிக்கை 234 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்ம்ரித்தி மந்தனா பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பிடி கொடுத்து களம் விட்டகன்றார். அவர் 8 பவுண்டறிகளுடன் 88 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் (8), திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். தீப்தி ஷர்மா 5 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன் இந்தியாவின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு கலைந்துபோனது. ஆமன்ஜோத் கோர் 18 ஓட்டங்களுடனும் ஸ்நேஹ் ராணா 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நெட் சிவர் - ப்றன்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைக் குவித்தது. டமி போமன்ட் (22), அமி ஜோன்ஸ் (56) ஆகிய இருவரும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து ஹீதர் நைட், அணித் தலைவி நெட் சிவர் - ப்றன்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். நெட் சிவர் - ப்ரன்ட் 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஹீதர் நைட் 91 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 109 ஓட்டங்களைக் குவித்தார். மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் துடுப்பாட்டத்தில் பெரியளவில் பிரகாசிக்கவில்லை. சார்ளி டீன் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஹீதர் நைட். https://www.virakesari.lk/article/228164
3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் .......! அனைவருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துகள் ........! 🌻 தமிழ் பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா பெண் : உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி பெண் : ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா பெண் : { கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாக தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா } (2) பெண் : எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் பெண் : எனக்கு இனி நீ என்னென்ன தருவாய் வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா வளர்ந்தாலே போதுமடா பெண் : { சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பு தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு } (2) பெண் : முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு பெண் : முகமோ மலரோ இது என்ன ரசிப்பு மின்னொளி வீசும் உன் எழில் கண்டால் வேறென்ன வேணுமடா.........! --- உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட ---
3 months 2 weeks ago
சின்ன சின்ன கண்ணிலே ....... ஜெமினி & வைஜந்திமாலா ........! 😍 அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் ..........! 💐
3 months 2 weeks ago
ஒரு கட்டுமரத்தின் புகைப்படம். 1800s
3 months 2 weeks ago
1880 களில் நிக்கோலஸ் & நிறுவனத்தால் இந்தியா மற்றும் இலங்கையின் 62 காட்சிகளைக் கொண்ட ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் மெட்ராஸில் (சென்னை) ஒரு கட்டுமரத்தின் புகைப்படம்.
3 months 2 weeks ago
மக்களின் வளர்ச்சிக்கான ஒரு புதிய யுகத்தை நாம் கூட்டாக ஆரம்பித்துள்ளோம்-பிரதமரின் தீபாவளி நல்வாழ்த்து. தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் தெரிவித்தார் இன்று, இலங்கை தேசம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. நீண்ட கால பொருளாதார, சமூக இருளிலிருந்தும், பின்னடைவுகளிலிருந்தும் விடுபட, மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் சுமந்து நிற்கும் ஒரு காலகட்டம் இது. மக்களின் வளர்ச்சிக்கான ஒரு புதிய யுகத்தை நாம் கூட்டாக ஆரம்பித்துள்ளோம். இந்தத் தீபாவளியின் ஒளி, பொருளாதார மீட்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வித்திடும் மெய்ஞ்ஞான ஒளியாக அமையட்டும் என்றும் நாம் அனைவரும் கலாசாரப் பல்வகைமையின் மதிப்பை உணர்ந்து, கௌரவம், ஏற்றுக்கொள்தல், சகோதரத்துவம் ஆகிய பண்புகளுடன் கைகோர்ப்போம். வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளி, அனைத்து இலங்கையர்களினதும் மனங்களில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் ஞானத்தின் ஒளியைப் பரவச் செய்வதாக அமையப் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1450757
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
மெட்ராஸில் கட்டுமர தபால்காரன் | Illustrated London News, 1858
3 months 2 weeks ago
நிமலராஜன் நினைவேந்தல்! adminOctober 19, 2025 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் , அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர் , தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார். அந்நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் , இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221734/
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 2 weeks ago
தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி! அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த வாழ்த்து செய்தியில், உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று (20) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தை தோற்கடித்து அநீதியை வென்றது போன்று, அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையை தாங்கி அவர்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்றனர். இந்த கொண்டாட்டம் தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கிறது. தற்போது நம்முன்பாக உள்ள பாரிய சவாலைப் போன்றே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் போதைப்பொருள் மற்றும் மறைந்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும். அதேபோல், நமது பிரஜைகள் மட்டுமன்றி இந்த நாட்டில் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைத்து மக்களின் உடல், மன, பௌதீக மற்றும் உணர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பிற்காக அரசாங்கமென்ற வகையில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அனைத்து மதவாத மற்றும் இனவாத சக்திகளையும் தோற்கடித்து சமூக நீதியை நிலைநாட்டவும், அனைவரும் தங்கள் அனைத்து சிவில், அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய, அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்பதை இதன் மூலம் வலியுறுத்துகிறேன். தீபாவளி உண்மையிலேயே ஒரு ஒளிப் பண்டிகை. தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்யும் விளக்குகளுடன், ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ தொடர்பிலான இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நமது ஒன்றிணைந்து செல்லும் பாதை இன்னும் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று பிரார்த்தித்து இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்து பக்தர்களுக்கும் அவர்களின் இதயங்களை பிரகாசமாக்கும் மகிழ்ச்சிகரமான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1450755
3 months 2 weeks ago
கிளிநொச்சிக்கு அழைத்து செல்லபடும் இஷாரா செவ்வந்தி! ஒருங்ககமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி விசாரணைக்காக கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளிவருகின்றன . அதன்படி சஞ்சீவ கொலைக்குப் பின்னர் அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது கிளிநொச்சி பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறார். இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய ஒரு இளம் பெண்ணைத் தேடிய ஜப்னா சுரேஷ், ‘தக்ஷி’ என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு சிங்களம் பேசத் தெரியாத நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகவும் கூறி சுரேஷ் அந்த பெண்ணை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக விசாரணையல் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் தக்ஷிக்கு தெரியாமலேயே அவர் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1450767
3 months 2 weeks ago
) அகஸ்தியன் - 42 புள்ளிகள் வாழ்த்துக்கள் முதல்வரே.
3 months 2 weeks ago
32) இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கும் 3 வது நாடாகும். 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 42 புள்ளிகள் (91.30%) 2) ரசோதரன் - 39 புள்ளிகள் (84.78%) 3) ஏராளன் - 37 புள்ளிகள் (80.43%) 4) ஆல்வாயன் - 37 புள்ளிகள் 5) வீரப்பையன் - 36 புள்ளிகள் 6) சுவி - 35 புள்ளிகள் 7) கிருபன் - 35 புள்ளிகள் 8) புலவர் - 35 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 33 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 33 புள்ளிகள் 12) வாதவூரான் - 31 புள்ளிகள் 13) கறுப்பி - 31 புள்ளிகள் 14) வசி - 29 புள்ளிகள் 15) வாத்தியார் - 27 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 21, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 46)
3 months 2 weeks ago
இலவசமாக குடிக்கலாம் சாப்பிடலாம் சிவனே என்று யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் உட்கார்ந்திருக்கலாம். பழவகைகள் கேக் பிஸ்கட் சாப்பிடலாம். கொண்டும் போகலாம். சுத்தமான மலசல கூடம். கூடவே இருவரை அழைத்து போகலாம்.எல்லா கடனட்டைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது என்று எண்ணுகிறேன். கடனட்டைக்கு கட்டும் பணத்தை எப்படி எல்லாம் மீண்டும் வசூலிக்கலாம் என்று கடனட்டை எடுக்கும் போதே கணக்கு பண்ண வேண்டும். அடிக்கடி உலகம் சுற்றுபவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
Checked
Thu, 02/05/2026 - 16:45
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed