3 months 2 weeks ago
38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா: 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் விகிர்தன் புதிய சாதனை Published By: Vishnu 14 Oct, 2025 | 10:15 PM (நெவில் அன்தனி) கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை திணைக்களம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்த 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை வவுனியா மாணவர் ஒருவர் 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார். தியமக, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள், 23.40 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் வவுனியா காமினி மகா வித்தியாலய மாணவன் ஈ. விகிர்தன் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதே போட்டியில் திகனை ரஜவெல்ல இந்து தேசிய பாடசாலை மாணவன் பி. ஆர். விதுஷன் (15:31.79) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/227745
3 months 2 weeks ago
16 Oct, 2025 | 12:31 PM நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விற்பனை குறைந்துள்ளது எனவும் தேங்கி அழுகும் மரக்கறிகளை குப்பையில் கொட்டப்படுகிறது. இதில் தக்காளி, லீக்ஸ், கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் கரட், போஞ்சி, ஆகியவற்றின் விலை அதிகளவு குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத அழுகிய நிலையில் மரக்கறிகளை வர்த்தக நிலையங்களுக்கு முன் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை அப்புறப்படுத்த முடியாது, நகரசபையின் ஊழியர்கள் உள்ளடங்கலாகப் பலரும் பாரிய திண்டாட்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவற்றை காலை நேரங்களில் மட்டக்குதிரை உள்ளிட்ட சில கால்நடைகள் தீவனமாக உண்ணும் நிலை அதிகரித்துள்ளது. நாட்டில் அதிகளவில் மரக்கறி உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டங்களில் நுவரெலியாவும் ஒன்றாகும். எனினும் தற்போது நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல இடங்களில் விவசாய செய்கைகள் கைவிடப்பட்ட நிலையில் இன்று காட்சியளிக்கின்றன. மரக்கறி வகைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வீழ்ச்சியால் இந்த நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், பாரிய முதலீட்டுடனேயே, மரக்கறிச் செய்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மரக்கறிகளின் சந்தைப் பெறுமதி குறைவடைந்துள்ளதால், தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ; குப்பையில் கொட்டப்படும் நிலை | Virakesari.lk
3 months 2 weeks ago
Published By: Digital Desk 3 16 Oct, 2025 | 12:39 PM ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஒக். 15,) தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியில் இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய விடயமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஓவல் அலுவலகத்தில் வன்முறைக் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எஃப்.பி.ஐ. பணிப்பாளர் காஷ் படேல் ஆகியோர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார். இந்தியாவை நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப் கூறியதாவது, "ஆம். பிரதமர் மோடி எனது நண்பர். எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று என்னிடம் இன்று உறுதியளித்தார். இது ஒரு பெரிய நிறுத்தமாகும். இப்போது சீனாவையும் இதைச் செய்ய வைக்க வேண்டும். ரஷ்யா அபத்தமான போரைத் தொடர்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவும் இராணுவ வீரர்கள் உட்பட இலட்சக்கணக்கானோரை இழந்துள்ளது. இந்தப் போர் தொடங்கியிருக்கவே கூடாது. முதல் வாரத்திலேயே ரஷ்யா வெற்றி பெற்றிருக்க வேண்டியது, ஆனால், நான்காவது ஆண்டை அடைந்துள்ளார்கள். போர் நிறுத்தத்தைக் காண நான் விரும்புகிறேன். எனவே, இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. மத்திய கிழக்கில் கடந்த வாரம் நாங்கள் செய்ததை ஒப்பிடும்போது இது (ரஷ்யா-உக்ரைன் போர்) எளிதானது என்பது உங்களுக்குத் தெரியும். அது 3,000 ஆண்டுகள் பிரச்சினை. ஆனால், இது வெறும் 3 ஆண்டுப் போர் மட்டுமே. நாங்கள் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக் காட்டுவோம். ரஷ்ய ஜனாதிபதி புட்டின் போரை நிறுத்துவார் என்று நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய அரசு அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் மசகு எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227872
3 months 2 weeks ago
Published By: Vishnu 16 Oct, 2025 | 04:17 AM மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மாகாணசபைத்தேர்தல்கள் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரசாங்கத்தினால் பழைய முறைமையிலேயே தேர்தல்களை நடாத்தமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 'எமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. எனவே பழைய முறைமையில் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கான சட்டத்திருத்தத்தை எம்மால் நிறைவேற்றமுடியும்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று எதிர்வரும் மாகாணசபைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அக்கூட்டணி தமக்கு எவ்வகையிலும் சவாலாகவோ அல்லது பிரச்சினையாகவோ அமையாது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 'எம்மிடம் சுமுகமான முறையில் பயணிக்கும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், உரியவாறு இயக்கும் 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறித்தும், எம்மால் நிர்வகிக்கப்படும் உள்ளுராட்சிமன்றங்கள் குறித்தும் மக்களுக்கு சிறந்த புரிதல் உண்டு. ஆகையினால் எதிர்வரும் தேர்தல்களில் எமக்கு எவ்வித சவாலும் இல்லை' என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/227845
3 months 2 weeks ago
நோ பல் விருதிற்குள் இவ்வளவு அரசியலா?! பெரிசின்ர சமாதான வேடம் போட்ட நாடு இதுவென அந்த நேரமே ஒரு கதை இருந்தது!
3 months 2 weeks ago
🔴 தெற்கு கடலில் போதைப்பொருளுக்கான வேட்டை - பல கிலோ கண்டுபிடிப்பு! தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கி.கி போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 670 கி.கி ஐஸ் (Ice), 156 கி.கி ஹெரோயின் (Heroin), 12 கி.கி ஹஷீஷ் (Hashish) என்பன அடங்குகின்றன. தெற்கு கடலில் மிதந்து வந்த நிலையில் நேற்று (14) சுமார் 51 பொதிகள் மீட்கப்பட்டன. இந்தப் பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன. 3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்தனர். இவை உனாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த செப்டெம்பர் மாத தொடக்கத்தில், 3 படகுகள் மூலம் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் VMS (Vessel Monitoring System) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்ட போதிலும், இந்த 3 படகுகள் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இந்தப் பொதிகள் சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்குப் பேசிய பாதுகாப்பு பிரதியமைச்சர், பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டின் எதிர்கால சந்ததியினரை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் ஒன்றாக இணைந்து செயல்படும் தேசிய நடவடிக்கை’ மற்றும் இந்த போதைப்பொருளை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும், கடல் வழிகள் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுக்க, பரந்த கடல் எல்லையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை கடற்படை ஆற்றிய முக்கிய பங்கைப் பாராட்டிய பாதுகாப்பு பிரதியமைச்சர், நாட்டில் போதைப்பொருள் பரவுவதை ஒரு தேசிய அச்சுறுத்தலாக அரசாங்கம் கருதுவதாகவும், போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு பொதுமக்களின் பெரும் ஆதரவு இருப்பதாகவும், பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் நடவடிக்கைகளின் வெற்றிக்கு பெரும் பலம் என்றும், அதற்காக பொதுமக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தேசிய பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் உள்ளிட்ட எந்தவொரு சட்டவிரோத பொருட்களையும் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு வர வாய்ப்பில்லை என்றும், மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, அதை ஆதரிப்பது அல்லது அதை உருவாக்குவது போன்ற எந்தவொரு முயற்சியும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது என்றும், அத்தகைய கடத்தலை அடக்குவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்துடன் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மேலும் வலியுறுத்தினார். Vaanam.lk
3 months 2 weeks ago
வங்கிளாதேஸ் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினவை , அவுஸ்ரேலியாவுக்கு எதிரா நல்ல ஸ்கோர் அடிக்க மாட்டினம் போல் தெரியுது...........................
3 months 2 weeks ago
உங்கள் எழுத்துக்கு நன்றிகள்.நேரம் கிடைக்கும் போது வாசிக்கலாம் என்று உள்ளேன்
3 months 2 weeks ago
வானவில் மாலையிட நயினை நாகபூசணி அம்மன் கோவிலின் அழகிய தோற்றம் ........! 🙏
3 months 2 weeks ago
ஆட்டை திருடிய வடிவேலு, பஞ்சாயத்தை கூட்டுற மாதிரி இருக்கு. 😂 🤣
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 2 weeks ago
காணொளி: 👉 https://www.facebook.com/reel/670893809039091 👈 செவ்வந்திக்கு... இன்னும் சிரிப்பாக இருக்கு. 😂
3 months 2 weeks ago
அதில் ராஜபக்ச குடுப்பதில் எத்தனை பேருக்கு தொடர்பு? யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! சுமந்திரனின் விசிறிகள் கட்டியம் சொல்கின்றனர்.
3 months 2 weeks ago
🛑கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட பின்னர் 3 மாதங்களாக பல இடங்களில் பதுங்கியிருந்தேன் 🛑மத்துகமவில் மாத்திரம் ஒன்றரை மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்தேன் 🛑மாத்தறையிலும் தங்கியிருந்த பின்பு, படகில் இந்தியாவிற்கு சென்றேன் 🛑கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, கெஹெல்பத்தர பத்மேவின் கூற்றுப்படி எடுத்துச் சென்றேன். (இஷாரா செவ்வந்தியின் வாக்கு மூலம்) ################ ############## கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட முன், நிதி வசதியில்லாத பெண் ஒருவருக்கு பண உதவி செய்ததாகவும், சஞ்சீவ கொலையின் போது நீதிமன்றத்திற்கு சென்ற தன்னை, உண்மையான வழக்கறிஞர் என எண்ணிய பெண் தன்னை வழக்கு ஒன்றை வாதாட அழைத்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். “கணேமுல்ல சஞ்சீவவை சுட கமாண்டோ சலிந்துவுடன் நீதிமன்றத்திற்கு வந்தபோது, வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் இருந்தேன். அங்கு வந்த மிகவும் உதவியற்ற தோற்றமுடைய ஒரு பெண் என்னிடம் பேசினார். நான் ஒரு வழக்கறிஞர் என்று அவர் நினைத்தார். அந்தப் பெண்ணின் கணவர் அவரை மோசமாக அடிப்பதாகவும் வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். தன்னிடம் ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது. அந்தத் தொகைக்கு வழக்கில் வாதாட முடியுமா எனவும் குறித்த பெண் தன்னிடம் கேட்டதாக செவ்வந்தி தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் வேறொரு வழக்கிறக்காக வாதாடவுள்ளதாக கூறினேன். அதனால் நான் அந்த பெண்ணின் வழக்கை அங்கிருந்த மற்றுமொரு பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, என் பார்வையில் இருந்த மற்றொரு பெண் வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றேன். அந்தப் பெண் வழக்கறிஞரிடம் சென்று தனது கதையைச் சொன்னார். வழக்கில் முன்னிலையாக 2000 ரூபாய் கேட்டார். அந்த பெண் மிகவும் உதவியற்றவராக என்னைப் பார்த்தார். நான் அவரை அறையிலிருந்து வெளியே அழைத்து, என்னிடம் இருந்த 5000 ரூபாயை கொடுத்து, அந்தப் பெண் சட்டத்தரணியை வழக்கில் வாதாட அழைக்குமாறு கோரினேன். அந்த பெண் என் கைகளைப் பிடித்து, வணங்கி பணத்தை பெற்றுக் கொண்டார்” என இஷாரா செவ்வந்தி குறிப்பிட்டுள்ளார். Jaffna Muslim ·
3 months 2 weeks ago
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுவினரின் கைதும் பின்னணியும்! காத்மாண்டுவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களை நேபாளம் நாடு கடத்தியுள்ளதாக The Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது. நேபாள காவல்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காத்மாண்டு மற்றும் பக்தபூர் முழுவதும் வாடகை வீடுகளில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (15) நாடு கடத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. அந்த செய்திச் சேவையின் தகவலின்படி, இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே ( வயது 26), ஜீவதாசன் கனகராசா ( வயது 33), தக்ஷி நந்தகுமார் (23), தினேஷ் ஷியமந்த டி சில்வா (49), கெனடி பஸ்தியம்பிள்ளை ( வயது 35), மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே ( வயது 43) ஆகியோரே நாடு கடத்தப்பட்டவர்கள் என சிரேஷ்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2025 பிப்ரவரி 19 அன்று கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இந்த அறிவிப்பு நேபாளம் உள்ளிட்ட இன்டர்போல் உறுப்பு நாடுகளை அவரது நடமாட்டங்களைக் கண்காணிக்கத் தூண்டியது. காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த வழக்கு குறித்து குறிப்பாக கவலை தெரிவித்ததாக நேபாள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, நக்சலில் உள்ள நேபாள காவல்துறை தலைமையகத்தில் உள்ள இன்டர்போல் தேசிய மத்திய பணியகம், சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது என்று அந்த அதிகாரி கூறினார். காவல்துறை விசாரணையில், ஆறு பேரும் மலேசியா மற்றும் துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ள இலங்கை குற்றவியல் அமைப்பான கெஹல்பத்தர பத்மே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. ஆகஸ்ட் 25 அன்று இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பத்மேவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பையும் பிறப்பித்திருந்தது. சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் பத்மே தான் மூளையாக செயல்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேக நபர்கள் பல வாரங்களாக நேபாளத்தில் இரகசியமாக வசித்து வந்ததும், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி, இந்திய குடிமக்கள் என்று அவர்கள் கூறிக் கொண்டதும் கண்டறியப்பட்டது. அவர்களில் இருவர் விமானம் மூலம் நேபாளத்திற்குள் நுழைந்ததாகவும், மற்றவர்கள் இந்தியாவிலிருந்து தரை வழியாக எல்லையைத் தாண்டியதாகவும் நம்பப்படுகிறது. சந்தேக நபர்கள் யாரும் நேபாளத்தில் குற்றங்களைச் செய்யவில்லை என்பதால், நேபாள சட்டத்தின்படி அவர்களை நாடு கடத்துவதற்கு வசதியாக அதிகாரிகள் குடிவரவுத் துறையுடன் ஒருங்கிணைந்தனர். சிரேஷ்ட குடிவரவு அதிகாரி ஒருவர், சட்டத் தேவைகளின்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மேற்பார்வையின் கீழ் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். இலங்கை பாதாள உலக நபர்கள் நேபாளத்தில் தஞ்சம் புகுந்தது போன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை என்று இன்டர்போல் அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும் அவர்கள் விரைவாக நாடுகடத்தப்படுவதை உறுதி செய்வதில் நேபாள காவல்துறைக்கும் இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமாக அமைந்ததாகவும் – தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1450514
3 months 2 weeks ago
போதை மாஃபியாக்கள் தினமும் கைதாக... நாமல் ராஜபக்சவுக்கு கெடி கலக்கமாக உள்ளது. போதைக் கும்பலில் 40 பேர் குறி வைக்கப் பட்டிருந்தவர்கள். அதில் 18 பேர் வரையே இதுவரை கைது செய்யப் பட்டுள்ளார்கள். இன்னும் 22 பேர் தலைமறைவாகி உள்ளார்களாம்.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
இதற்க்கு மேல என்ன விளக்கம் வேணும் இல்லை இவங்களோட மிக அவதானமாக இருக்க வேணும். உவையிண்டை வரலாற்றை தெரியும் தாணே.
3 months 2 weeks ago
சந்தேகம் என்ன? இந்த மாபியாக்கள் கைது செய்யப்படும்போது, எதிர்கால கனவு ஜனாதிபதி பதறித்துடித்து, இதெல்லாம் தேவையில்லை, அபிவிருத்தி தான் நாட்டுக்கு தேவை என்று குதித்தாரே, இதிலிருந்து தெரியவில்லையா? சிலர் கொலை செய்யப்பட்டனரே, அதிலிருந்து தெரியவில்லையா முதலாளி முதலைகள் யாரென்று? இவர்களின் ஊழலை விசாரிக்கத் தொடங்கியிருந்தால் இவ்வளவு வெற்றி கிடைத்திருக்காது. இப்போ, தானாகவே சிக்கப்போகிறார்கள். அதை தவிர்ப்பதற்காக ஏழை மக்களை ஏமாற்றி, வீட்டுக்கு அழைத்து படம் காட்டி, தங்கள் குற்றங்களை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். இந்த மக்கள் தானே இவர்களை வேரோடு அரசியலில் இருந்து விரட்டியவர்கள்? இவர்களை தேர்தலில் வீட்டிற்கு அனுப்பியவர்களும் இந்த மக்கள் தானே? சிறை செல்வதென்று முடிவாகிவிட்டது, எப்படி சிறையில் சாதாரண சிறைக்கைதிகள் போல வாழ்வதற்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு கொலையை மறைத்து, தப்ப முயற்சி பண்ணி இப்போ பல கொலைகள், கொள்ளைகள், ஊழல்கள் பெருகி இவர்கள் வெளியே வரமுடியாதளவுக்கு தண்டனை காலம் இவர்களது வாழுங்காலத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல லட்ஷம் கொலைகளை, ஊழல்களை செய்தவர்களுக்கு மரணதண்டனையே பொருத்தமானது. பரம்பரையே உள்ளே போகப்போகிறது. குடும்பத்தில் ஒருவனாவது நல்லவன்? பெற்றவர்களைபோலவே பிள்ளைகளும் இருப்பார்கள். கசாப்புக்கடைக்காரருக்கு அரசியல் வந்தால், அரசியலும் கசாப்புக்கடையாய் மாற்றி விடுவார்கள், விட்டார்கள் முட்டாள்கள்.
Checked
Wed, 02/04/2026 - 07:31
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed