Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு பலர் இந்நூலை முன்பே ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும். என்றாலும் இதைப்பற்றி அறியாதவர்களுக்காக இந்த குறிப்பை எழுதுகிறேன். நான் இங்கு எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் விரும்புவது நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து உணர்ந்து பயன் பெறுவது தான்.

'Seven Habits Of Highly Effective People' என்பதுதான் இந்த புத்தகத்தின் பெயர். அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் ஆர். கொவே (Stephen R Covey) ஆல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் 1989ல் வெளியானதிலிருந்து இற்றை வரை 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (துரதிஷ்டவசமாக, தமிழில் இன்னும் மொழி பெயர்க்கப்படவில்லை). அவ்வளவிற்கு இந்த புத்தகம் ஏன் பலரை கவர்ந்த்தது என்பதை நான் இதை வாசித்தபோது உணர்ந்து கொண்டேன்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் முகம் கொடுக்கும் பல சிக்கல்களுக்கு தீர்வுகாண இப்புத்தகம் உதவிபுரிகிறது. (உண்மையில் இப்புத்தகம் உளவியல் சார்ந்த புத்தகம்). அப்படியென்றால், ஒவ்வொருவருடைய வாழ்வில் எற்படும் குறிப்பான பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு இந்த புத்தகத்தில் உண்டு என்று அர்த்தம் அல்ல. ஆனாலும், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இப்புத்தகம் உறுதுணையாக இருக்கும்.

இப்புத்தகத்தின் சாராம்சம் என்ன என்று சொல்வது மிகக்கடினம். எனென்றால், என்னை கவர்ந்த, வியக்கவைத்த நிறைய கருத்துகள் இப்புத்தகத்தில் உண்டு. புத்தகத்தின் தலைப்பு சொல்கிறபடி நாம் செய்யும் கருமங்களை மேலும் வினைத்திறனுள்ளதாக செய்வது எப்படி, அன்றாடம் நாம் மற்ற மனிதர்களுடன் பழகும்போது வரக்கூடிய சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்பவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.

எல்லவற்றையும் இங்கு எழுத நேரமும், பொறுமையும் இல்லை. எனவே நீங்களே இந்நூலை வாசித்து உணர்தல் பிரயோசனமாக இருக்கும். நூலாசிரியர் சொல்வது போல, இங்கு சொல்லப்பட்ட பல விஷயங்கள் 'Common Sense' தான். ஆனால், Common Sense எல்லாம் Common Practice (பொதுவாக பழக்கத்தில் உள்ளவை) அல்ல. இப்புத்தகதை எனக்கு பிடித்த காரணம் ஏன், எப்படி, எப்போது இப்பழக்கங்களை கையாள்வது என்று மிக ஆழமாக கருத்துகளை சொன்ன விதம் தான்.

இப்புத்தகத்தின் பிரதிகள் அனேகமான நூலகங்களில் கிடைக்கும். எனவே, வாங்க வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனாலும், என்னை பொறுத்தவரை இதை புத்தகம் என்று சொல்லவதை விட, நல்ல ஒரு ஆசான், வாழ்க்கை முழுவதும் கூட வரும் தோழன் என்று சொல்லுவேன். எனவே, இரவல் எடுத்து வாசியுங்கள். பிடித்தால் வாங்கலாம்.

0 Comments

Recommended Comments

There are no comments to display.

Guest
Add a comment...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.