ஆனையிறவில் அகிலம் கண்ட உண்மை
ஆனையிறவில் அகிலம் கண்ட உண்மை
ஆனையிறவு அடிமை சின்னமாம் தமிழருக்கு!
அதுவே ஆக்கிரமிப்பின் சின்னமாம் சிங்களருக்கு!
ஆணையிறவில் ஓர் இறவில் வெளிவந்தது தமிழர் வீரம்!
அகிலம் உணர்ந்தது! மடிந்தது அடிமைச்சின்னம்!
மலர்ந்தது வெற்றிச்சின்னம்! மறுப்பது யார்?
மறத்தமிழர் வீரம் மாற்றியது கீழ் மேலாக!
மகிழ்ந்தனர் தமிழர்! மருண்டனர் சிங்களவர்!
அந்த வெற்றியே அழைத்து வந்தது அமைதிப் பேச்சை!
அடிப் பட்ட போதே அமைதிக்கு வந்தனர் சிங்களவர்!
அப்போது கண்டதே உடண்பாடு! அதற்க்கு சாட்சி நார்வே!
அதுவே அகிலத்துக்கு தமிழர்களின் வெற்றிப் பிரகடணம்!
அந்த வரலாற்றை அப்படியே மாறாமல்!
செப்படி வித்தையெல்லாம் செய்யாமல்
அறியாதவர் அறிய, தெரியாதவர் தெளிய
நடந்ததை சொல்கின்றேன், நடைமட்டும் எனக்கு சொந்தம்!
நடந்ததெல்லாம் மானம் போற்றும் மறத்தமிழ் வீரர் சொந்தம்!
ஆணையிறவு படைத்தளத்துக்கு 300 ஆண்டு வரலாறு சொந்தம்!
அதன் அமைப்பிற்க்கு அங்கு அடக்கியாண்ட பிரிடீஸார் சொந்தம்!
அவர்கள் வெளியேறியதால்! அது சிங்களவர் சொந்தம்!
அங்கே வீரர்கள் 15000 அவரெல்லாம் ஏழை சிங்களவருக்கு சொந்தம்!
அவர்களை சமாதான யுத்தமென்றே சாகவிட்டவருக்கு எது சொந்தம்?
அவருக்கு லண்டன்,கொழும்பு நட்சத்திர விடுதிகளின் உல்லாசம் சொந்தம்!
ஏழை சிங்கள வீரனுக்கா! இல்லை! இல்லை!
அவர்களின் சொந்தத்திற்கெல்லாம் அற்ப பணமும்!சளுகையும் வீடும் சொந்தம்!
அவர்கள் பெற்ற பயிற்சிக்கெல்லாம் அமெரிக்கா சொந்தம்!
அதற்கும்மேல் பெற்ற பயிற்சிக்கு இந்தியா சொந்தம்!
இருந்தும் என்ன செய்ய! தியாகமும் வீரமும் யாருக்கு சொந்தம்?
நேர்படு நோக்கமும் நிலையான கொள்கையும் தமிழர் சொந்தம்!
அதனால் தான் சிங்கள படைகள் கிளாளி, பாளை
அதற்க்குமேல் ஆனையிறவென்று அடுத்தடுத்து தடுமாற!
அவர்களின் முயற்சிகளெல்லாம் தொடர்ந்து தடுமாற!
தமிழர் வீரமும் தியாகமும்! திறமையான விவேகமும் தடைமீறின!
தப்பித்தோம் பிழைத்தோம் என்றே ஓடினர் சிங்களவர் தடம்மாறி!
வெற்றி! வெற்றி! தரணியில் தமிழரின் தனிப்பெறும் வெற்றி!
வெற்றி! வெற்றி! வெற்றிதான் அழைத்து வந்தது
ஆனவ சிங்களவரை அமைதிபேச்சுக்கு இணக்கம் கான!
இந்த வெற்றிக்கு இணையாக ஆய்வாளர்கள் சொல்வதெல்லாம்
இரண்டாம் உலகப் போரில் நேசநாட்டு படைகள் மேற்க்கொன்ட நேர்மாண்டி தரையிறக்கத்தை!
இன்னும் சொல்கிறார்கள்! இதனுடன் அது ஒப்பாதென்றே!
அதுவும் சரிதான்! சம ஆள்வலு படைவலுவுடன்
அதற்குமேல் 100000 வீரர்கள் அமெரிக்க தலைமை!
அதற்குமேல் 52 நாடுகளின் வளமான பங்களிப்பு
வான்படையின் வரிசையான குண்டு வீச்சு!
பங்கு பெற்றவரையும் பாருங்கள் பலமென்ன குறைந்தா இருக்கும்!
அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, யுகோஸ்லேவியா, இந்தியா, பிரான்ஸ், எகிப்து, சீனா, கனடா என்றே எண்ணிக்கையில் 52
எதிரணியில் ஒன்பது நாடுகள் உளவுரம் குன்றிய நிலையில்!
போர்த் தள தளவாடங்கள் தகர்ந்து போன நிலையில்!
கட்டளை மையங்களும் சீர் குலைந்த நிலையில்!
பங்காளிகளான ஜப்பானும், இத்தாலியும் படுதோல்வியடைந்த நிலையில்!
இரண்டாம் உலகயுத்தத்தில் இறுதி தீர்ப்பளித்த
நேர்மாண்டி யுத்தத்தில் படைவலு சமவலு சமபலம்!
ஆனால்! ஆனால்! இங்கே தமிழீழத்தில்
ஆனையிறவில் சிங்களவர், தமிழர் படை வலு 20:01
இதல்லவோ ஆச்சரியம்! இங்கல்லவோ வீரம் பேசியது!
இதற்க்கு அது இணையா? இல்லை! இல்லை! இருக்கவே முடியாது!
அது பொருளாதரத்தை மேம்படுத்த!
அடுத்த நாட்டின் வளங்களை அபகரிக்க!
ஆதிக்க சக்திகளின் அகம்பாவ போர்!
ஆனால் இது இழந்த மண்னை மீட்க
தம்முயிரை, உடமையை, மானத்தை காக்க!
நோக்கம் இது தவிர வேறெதுவுமில்லை!
கண்டவர்களும் கேட்டவர்களும் வியக்கிறார்கள்!
களமாடிய தமிழர்களின் அர்ப்பனிப்பை!
போராளிகளின் தியாகத்தை வீரத்தை!
நேர்மாண்டியைவிட சிறப்பான தலைமை!
இருந்தாலும் இழப்பும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்!
35 போராளிகளும் சில பல படகுகளும்
இழப்பில் உயிரில் என்ன அதிகம் குறைச்சல்
எதிரியின் இழப்பிற்க்கும் பஞ்சமென்ன!
அதுவும் ஆயிரத்திற்க்கும் மேல்! அத்தனையும் ஏழை சிங்களவர்!
ஆதிக்க சிங்களவரின் இனவெறிக்கு இறையாக இவர்கள்!
ஆதிகவர்க்கத்தின் வெறிக்கு அழிந்துபோவது!
அகிலமெல்லாம் அல்லல் படும் ஏழைகள்தானோ!
இங்குமட்டும் இது மாறிடுமா? இது தொடர்ந்திடுமா?
Recommended Comments