வணக்கம் தோழர்களே,
ஒரு கதையோடு ஆரம்பிக்கிறேன்.
முடி வெட்டும் தொழிலாளி ஒருவர் வேலை தேடி வெளிநாடு சென்றார். அங்கு அரசு செய்த மன்னனிடம் வேலை செய்து கிடைக்கும் பணத்தை சிறிது சிறிதாக சேகரித்து ஒரு தங்க கட்டி செய்து அதை தன் பெட்டியில் பத்திரமாக வைத்து அவ்வப்போது எடுத்து பார்த்து மகிழ்ந்து கொள்வார். ஒருநான் மன்னனுக்கு முடிவெட்டும்போது மன்னனுக்கு மக்களை பற்றி அறிய அவால் ஏற்ப்பட்டது! உடனே நம்ம ஆளு முடிவெட்டுகிறவர்கிட்டே மக்களின் நிலை பற்றி கேட்டார். நம்ம ஆளுக்கு மகிழ்ச்சி ஒங்க அரசுல மக்கள் எல்லாம் சுபிச்சமாக இருக்காங்க, எல்லாருகிட்டேயும் ஒரு தங்ககட்டியாவது இருக்குதுன்னா பார்த்துக்குங்களேன் என்று சொல்ல. மன்னர் மகிழ்ச்சியுடன் அமைசரை அழைத்து பகிர்ந்துகொண்டார். அமைச்சர் சொன்னார் அரசே அவரை நாளை அரசவைக்கு வரசொல்லுங்கள் அவையோர் எல்லாம் அவர் வாயாலேயே தெரிந்துக் கொள்ளட்டும் என்று கூற அப்படியே ஆகட்டும் என்று ஆணையிட்டான் அரசன். அன்றிரவே அமைச்சர் நம்மாளுகிட்ட இருந்த தங்ககட்டிய திருட செய்துவிட்டார். மறுநாள் அரசவை கூடியது அரசன் தன் புகழ் குறித்த பெருமிதத்துடன் நம்மாளுகிட்ட சொன்னான் நேற்று நீ என்னிடம் சொல்லியதை இன்று இந்த அரசவையில் கூறு. நம்மாளுக்கு கோவம்னா கோவம் குமுறிதீர்த்திட்டான் ஒங்க அரசில் ஒரு தங்ககட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை ஒரே கொள்ளை, கொலை திருட்டு பஞ்சம் என்று.....அப்படித்தான் நண்பர்களே நாமும் பல நேரங்களில் பலபிரச்சனைகளில் கருத்து சொல்கிறோம். இதில் ஈழப்பிரச்சனை மட்டும் விதிவிலக்கா?
தங்க கட்டியுடன் தொடர்பு படுத்தி முதலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கருத்து கூறியவன் அது கானாமல் போனவுடன் அனைத்து மக்களும் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று அவன் மனநிலையை கொண்டே அனைவர் மனநிலையையும் கூறியது போல சமயங்களில் உலக புகழ் பெற்ற நமது நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை தெரிவிப்பது போல நாமும் ஈழப்பிரச்சனையில் பிரச்சனையை மையப்படுத்தாமல் இராஜிவ் காந்தியை மையப்படுதுகிறோம். எனவே தங்க கட்டி நம்ம முடிவெட்டியின் கருத்தில் ஆதிக்கம் செலுத்தியது போல ராஜிவ் காந்தி நம் மனதில் அதிக்கம் செலுத்துகிறார் என்றால், உண்மை எவ்வாறு நமக்கு விளங்கும்? இராஜிவ் காந்தியை தூக்கி தூர வைத்துவிட்டு பிரச்சனையை பாருங்கள் நெச்சில் நீதி போசும்! இதயத்தில் ஈரம் சுரக்கும் அன்பு பெருகும்! ஆதரவு தருவீர் ஈழத்தமிழர்களுக்கு!
Recommended Comments