சிந்தனையின் மாறுபாடே சிக்கலுக்கு காரணம்!
மாடு மணியடிக்க!
மறுத்தானா! தடுத்தானா!
மனமுவந்தே! தண்டித்தான்!
மனுநீதிச் சோழன் தன் மகனை!
மானுடத்தில் அவன் பெயரே!
மாறாத நீதிக்கு மறு பெயர்!
மங்காத புகழ் அவனுக்கு அதனாலே!
மகனவனும் மனம் தெரிந்து செய்தானா!
தவறிதான் தடுமாறிய கன்றுக்குட்டி
தவறாமல் அவன் தேர்க்காலில் அது அவன் தவறோ!
தவராமல் தண்டித்தார் தமிழர்!
தமிழர் நீதியில் மாடென்ன! மனிதரென்ன! எல்லாம் உயிர்!
தவறிய நீதிக்கு தன்னுயிர் விட்டான் பாண்டியன்!
தாமும் ஓர் காரணமென்றே தயங்காமல் உயிர்விட்டால் பாண்டிமாதேவி!
காவலன் அவளென்றே கடிது விளகினாளா கண்ணகி!
கடிது நோக்கினால் கற்பு தீ பரவிட்டது!
கற்புக்கு கண்ணகி! காவலனின் நீதிக்கு பாண்டியன்!
காலம் போற்றும் இவரெல்லாம் தமிழ் முடியரசர்! தமிழச்சி!
வேண்டாம்! வேண்டாம்! இந்திரன் என்றே ஒருவன்!
அவனே அமரர்களுக்கு தலைவன்! அரசன்!
அவனோ ஆசை மிகக் கொண்டு அகலிகையை கெடுத்தான்!
அவள் கணவனோ ஒரு முனிவன்!
முற்றும் துறந்தவன் தான் முனிவன்! எனினும்
அகமிக மகிழ்ந்து ஆகட்டும்! ஆகட்டும்! என்றே
ஆசிர்வதித்தானா! அடிக்கடி வர அழைப்பு விட்டானா!
அதிர்ந்தே சாபம்விட்டான் அதனால் ஆயிரம்புண் இந்திரனுக்கு!
தவறான உடன்பாட்டை மனதில் கொண்டே
தயங்காமல் மனதில் கொண்டே
தயங்காமல் வரவழைத்து தடுப்பு காவலில் வைத்து
தவறினால் கையெழுத்திட தவறினால்! தமிழரை
தப்பாமல் அழித்திடுவோம் அரை நொடிக்குள்!
சிகரெட் கருகுவதற்க்குள் சிதைத்திடுவோம் சில நொடியில்! என்றே!
சீறியதும் முறையோ! சிந்தையில் வன்மன் கொண்டே!
சிக்கவைத்து சீரழித்தது சிறப்போ! சீரிய செயலோ!
அப்படித்தான் ஏற்ப்பட்டது உடன்பாடு!
அதனால் புறப்பட்டது அமைதிப்படை!
எனது இராணுவத்தினர் நடந்துக் கொண்ட முறைக்காக நான் வெட்க்கப் படுகிறேன். இது எனது இந்திய நாட்டையே அவமான படுத்துவதாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி எதிர்காலத்தில் நடைபெறாது என்பதை உங்களுக்கு உறுதிப் படுத்துகிறேன்...அப்படி இனிமேலும் நடக்குமானால், நான் உங்கள் முன்னிலையில் வந்து நிற்க்கிறேன்..என்னை கல்லால் அடித்துக் கொள்ளுங்கள்.
- டெபுடி கமாண்டர் கேணல் அவுஜூலா
இந்திய அமைதிப் படை.
இவ்வுரை கேட்ட நீங்கள்
இது எங்கே நடந்தது அறிவீரோ!
அமெரிக்கா என்றொரு நாடு!
அது அடிமை கொண்டிட விரும்பியது ஓர் நாடு!
அச்சத்தை விதைத்து வீழ்த்தவே!
அதிகார வர்க்கம் வாழவே!
அங்கு அனுப்பினர் ஒருவனை!
அவனை பேயென்று ஒதுக்கினர் அவர்களே!
அமைதியாய் இருந்தது ஓர் ஊர்!
ஆக்கிரமிப்பாளர்களுக்கு அது வேறா!
ஆடி அடங்கியது அமெரிக்க இராணுவம்!
அதில் பிறிந்தன உயிர்கள் நூறு நூறென்றே!
கொம்புடை பேய் அவன் பெயர் காலி!
ஆதிக்க வர்கத்தினருக்கு அவன் ஒரு கூலி!
ஆனாலும் அமெரிக்கர் அதிர்ந்தனர்! நாணினர்!
அதனால் அவனுக்கும் கிடைத்தது தண்டனை!
அந்த சம்பவம் நடந்தது "மையாய்"
அதுவே வியட்நாமின் விடுதலைப் போரில் "மைல்கல்லாய்"
விடுதலையை வேண்டி நின்றால்!
வெறுத்திடுமே! ஆதிக்கவர்க்கம்!
அச்சத்தை விதைத்தே அழித்திடுமே!
அதில் ஆயுத போராட்டமென்ன! அகிம்சை போராட்டமென்ன!
அமிர்தசரசிலே அகிம்சைப் போராட்டம்!
அதிரடியாய் புகுந்திட்டான் ஜெனரல் டயர்!
அதிகார குரல் ஆணவமாய் ஒலித்தது!
ஓய்ந்தன உயிர்கள்! ஒன்றா! இரண்டா!
ஆயிரத்துக்கும் அதிகம் படுகாயம்!
அதில் பாதி மரணம்!
அவனுக்கும் விருதுகள்! ஆதிக்கவர்க்கத்தின் பரிசுகள்!
விந்தையான உலகமட இது! - இங்கு
விடுதலைக்கும் விலையாக வேண்டும் உயிர்கள்!
இந்திய சுதந்திரப் போரில் இருண்டப் பக்கங்கள் இவை!
இவை நடந்த இடம் ஜாலியன் வாலப்பாக்!
இவையெல்லாம் ஆதிக்க வர்க்கம் ஆக்கிரமிக்க!
இருந்தவற்றை இழக்காமல் தக்கவைக்க!
ஆனால் அமைதி காக்க போனவகள்!
அமைதியை கொன்றதுவும் நடந்ததுவே!
நல்லோர் நானினரே! நயவஞ்சகர் செய்கையினால்!
அகிலத்தின் நான்காவது பெரிய இராணுவம்!
அதை அகிலத்திற்க்குணர்திடவோ!
அமெரிக்கவை விஞ்சிடவோ!
பிரிட்டாஸாரை பின்னுக்கு தள்ளிடவோ!
பிரிட்டீஸாரின் பெயர் விளங்க ஜாலியன் வாலாபாக்
அமெரிகாவின் ஆற்றலுக்கு ஓர் "மைலாய்"
இந்தியா இவருக்கு சளைத்திடுமோ! இவ்வாய்ப்பு!
இனி கிடைத்திடுமோ! என்றே விரைந்தனரோ!
இல்லை! இது விதியோ! வீணர்களின் சதியோ!
அகிம்சை இராணுவம் அமைதியான ஊருக்குள்!
அகிம்சை அகிம்சை வெளியேற ஆணவ பேயாட்டம்!
"மைலாயும்" ஜாலியன் வாலாபாக்கும்!
எம் ஆற்றலுக்கு சரியோ! அமெரிக்காவும் பிரிட்டிஸாரும் நேரோ!
அவற்றை விஞ்சிடுவோம்! அவர்களை வென்றிடுவோம்! என்றே
இந்திய அமைத்திப் படை சென்றதுவோ! வல்வெட்டித்துறைக்கு!
அமைதிப்படையின் ஆணவ வெறியாட்டம் அறங்கேற்றம்!
அகிம்சை நாட்டின் கிரீடத்தில் ஒரு வடு ஏற்றம்!
பேய் புகுந்த வீடு போல் வல்வெட்டித் துறை!
நெஞ்சு கொதித்ததனால் வந்த அவமானத்தினால்!
வந்த நாணத்தினால்! வார்த்தைகள் வரவில்லை!
வரிசைப் படுத்துகிறேன் வாக்கு மூலங்களை! வரும் பக்கங்களில்!
அத்தனைக்கும் பிறகும் அமைதியாக இருக்க
அவர்களென்ன சிலையா? மரமா?
சாபமிட்டு சாபம் விலக்க முனிவனோ!
இல்லை! இல்லை! அவர் மூவேந்தர் வழித்தோன்றல்!
கைது செய்து கழுமரமேற்ற காவலனோ!
கற்புக்கரசி கண்ணகியின் வழித் தோன்றல்!
மானம் போற்றும் மறத்தமிழர் வீரர் தோன்றல்!
எதிரியவன் எங்கிருந்தால் என்ன? எவராயிருந்தால் என்ன?
எருதவன் முன்னே கதிரவனும் கருகிடுவான் எனில்
சூரிய காந்தி பூ வென்ன சுடர்விட்டு பிரகாசிக்குமோ!
கதிரவன் இராஜ கிரகம்தான்! காட்டிக் கொடுத்ததும் அவன் பண்புதானே!
இணைந்து உழைத்ததால் விளைந்த பயிரை!
தனித்துண்ண முனைந்தவர்கள் தேவரோ! முனிவரோ!
அவெரெல்லாம் ஏதோச்சதிகாரத்தின் எடுபிடிகளே!
இடையில் புகுந்துண்ண இணைந்திட்டார் இருவர்!
இருவரையும் காட்டிக் கொடுத்ததும் கதிரவன் தானே!
உதய சூரியனும் கதிரவனின் இளம் பருவமே!
உணவுக்கே ஒருக்காதவர்! உரிமையை மதிப்பாரா!
காட்டிக் கொடுத்தனால் கலங்குகின்றார் கதிரவனும், மதியும்!
தலை மாறியதால் தடுமாறினரா! இராகுவும்! கேதுவும்!
தயங்காமல் தண்டிக்கின்றனர்! தரணியில் சோதிடத்தில் சூட்சுமம் அதுவே!
தவறி தவறிழைத்தால் தன்னுயிர்விடுவது தமிழர் பண்பு!
தம்முயிரை உடைமையை மானத்தை விலை பேசினாலும் விடுவதோ தமிழர் பண்பு!
மாடு மணியடிக்க மறுக்காமல் நீதி சொன்ன!
மனுநீதிச் சோழனின் வழித் தோன்றல்களே!
மனசாட்சி மணியடிதால் மறுத்திடுவீரோ நீதியை!
எல்லைகள் தாண்டினால் நீதி மாறிடுமோ!
நீங்கள் அங்கிருந்தால்! நீதி அதுவே என்றிடுவீர்!
குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் நீதி என்ன நீதி?
எல்லைகள் கடந்து நீதி சொல்வோம்!
எம் தமிழர் கண்ணீர் துடைக்க கடமை செய்வோம்!
தடை என்பார் தடா என்பார்! பொடா என்பார்!
தங்க தாரகை என்பார் அவர்! இல்லை! இல்லை!
தாடகை என்போம் நாம் அவர் வழியில் சிந்தித்தால்!
அவர் நம் வழியில் சிந்தித்தால்
தாடகை என்பதும் தவறாய் படுமோ!
சிந்தனையின் மாறுபாடே சிக்கலுக்கு காரணம்!
0 Comments
Recommended Comments
There are no comments to display.