வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
தன்னைத் தான் புசிக்கும் நரபுசிப்பு - என்றே
மண்ணைத் தான் நேசிக்கும் மாவீரர்களை
கண்ணைத் தன் நோக்கில் மேயவிட்டு
வெந்தப்புண்ணித் தான் வேலைப் பாய்ச்சுகின்றோய்!
எண்ணித்தான் பார்த்தீரோ எம் தமிழர்களை
தண்டித் தான் தருக்குடை நீசர்களை
கண்டித் தான் கள்ளமிட்டோரை
மன்னித் தான் மற்ற மற்ற தவறுகளை
துன்பத்தில் தான் துவன்டிருந்த மக்களுக்கு
துன்பம்மிக தான் கொடுத்தால் மென்மேலும்
கன்னத்தில் தான் கை வைப்பனையோ?
தன்னைத் தான் எதிர்கும் தற்குறிகளை போல்
தமிழரை தான் எதிர்கும் புல்லோருடன்
நன்மைத் தான் சிறிதுமில்லா மிலேச்சருடன்
தேசமும் தான் வேறான சிங்களவருடன்
பேசும் மொழியும் வேறான புலையருடன்
கடைச் சிறியோர் காதல் கொண்டே
தம்முடைச் சோதரரிடம் மோதல் செய்தல் முறையோ
நாட்டில் பொங்கும் சுதந்திர கனலை
விட்டில் பூச்சிகள் விரைந்தழித்திடுமோ
வீணர்களின் தூண்டுதலால் விபீடனனாகி
விடுதைக்கும் விடுதலை வீரருக்கும் விலைகூறினால் அவரை
வெம்மையோ டொறுத்தால் வீரர்தஞ் செயலாம்
நம்மைத் தடுத்து வழி நடத்த
தம்மைச் சாரதியாக்கிக் கொண்டு - கண்ணன்
பார்த்தன் வழிப் பாருக்குரைத்ததை
பாரதி நமக்குரைக்கின்றார்
நல்லதோர் வீணை செய்தே
நலம்கெட பூமியில் எறிவதுண்டோ என்றபாரதிதான்
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று
இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய்த்
தன்னரும் தெய்வத் சாரதி முன்னர்
அய்யனே! இவர் மீதம்பையோ தொடுப்போன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தம்மை போரினில் வீழ்த்தேன்
மெய்யினில் நடுக்கம் மேவுகின்றதுவால்;
கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது;
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது;
ஓய்வுறுங்கால்கள்; உலைந்தது சிரமும்
வெற்றியை விரும்பேன்; மேன்மையை விரும்பேன்
சுற்றமிங்கருத்து சுகம்பெறல் விரும்பேன்;
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
சினையறூந்திட்டபின் செய்வதோ ஆட்சி?
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து
சோர்வோடு வீழ்ந்தனன்; கருதியின் முடிவாய்த்
தேர்வையின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந்திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவோடு புலம்புகின்றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனாதியரைச்
செறுத்தினி மாய்ப்பது தீமையென்கின்றாய்
உண்மையை அறியாய்; உறவையே கருதிப்
பெண்மைகொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் - இன்னோர்
தம்மோடு பிறந்த சகோதரர்ராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
0 Comments
Recommended Comments
There are no comments to display.