இன்றைய நாளில் இடம் பெற்ற, வரலாற்று நிகழ்வான தமிழ்மக்களின் பெரும் இடம்பெயர்வு -- 30.10.1995.
இந்த இடம்பெயர்வு ஒரு வரலாற்று நிகழ்வு. இராணுவ முற்றுகையிலிருந்தும், அதன் பின்னணியிலிலுள்ள அரசியற் பொறியிலிருந்து தப்பித்து வெளியேறிய எம் மக்கள், சந்திரிகா அரசின் தந்திரோபாயத்திற்குச் சாவுமணி அடித்தனர்,
சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ் அடிமைப்பட்டு வாழத் தமிழினம் இனித்தயாராக இல்லை என்பதையும்; மக்களும் புலிகளும் வேறல்ல என்பதையும் இந்த இடம்பெயர்வு சிங்களதேசத்திற்கும்:சர்வதேசத்திற்க்கும் எடுத்துக் காட்டிய நாள் இன்று.