மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்து தொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான். தொடர்ந்து கடற்புலிகளால் தளபதி அருச்சுனா அவர்களின் தலைமையில் தரைத்தாக்குதலணி ஆரம்பிக்கப்பட்டபோது சிவாவும் அதில் ஒருவனாக இணைந்து அப்படையணியில் மிகவும் சிறந்து விளங்கினான். இவனது அனைத்துச் செயற்பாடுகளையும் கவனித்த தளபதி அருச்சுனா அவர்கள் இவனை சிறப்புத்தளபதி சூசை அவர்களின் மெய்ப்பாதுகாப்பாளனாகா அனுப்புகிறார். அங்கு இவனது செயற்பாடுகளின் நிமிர்த்தம் இவனை மேலதிக மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிக்காக அப்போதைய கடற்புலிகளின் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்…
-
- 0 replies
- 216 views
-
-
அது 1995 காலப்பகுதி,வெள்ளை மேற்சட்டையும்(shirt) கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்து தமக்கு இடப்பட்ட கணக்காய்வுப் பணியுடனும் வெளிவாரி வர்த்தகப் பட்டப் படிப்பை (first in commerce) படிக்கவென யாழ் நாவலர் வீதியூடாக தனது ஈருருளியில் செல்லும் ஒரு போராளியாக கலைமதி அக்காவைக் காணலாம்.எப்பொழுதும் எதற்கும் தயாராக இருப்பது போல் அவருடைய எறும்பு போன்ற சுறுசுறுப்பான ஆனால் அடக்கி வைத்திருக்கும் அமைதியான ஆளுமை முதிர்வு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறது. கலைமதி அக்காவும் எல்லோரும் போலவே திரு,திருமதி ஜெகதீசன் தம்பதியினருக்கு மகளாக 28.06.1966 இல் ரேணுகாதேவி என்ற இயற் பெயருடன் அக்காமார் , அண்ணன்,தங்கை ,தம்பிகள் கொண்ட சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான்.தந்தை ஒரு புகைப்பட வல்லுனராக அந…
-
- 0 replies
- 214 views
-
-
புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் “லொட லொட” என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு “தெண்டித் தெண்டி”சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள். எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்….பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அவள் சராசரி உயரத்தை விட சற்…
-
- 0 replies
- 209 views
-
-
http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/லெப்.கேணல்-பிரசாந்தன்-1024x683.jpg 1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சியையும் பெற்று வெளியேறிய காலப்பகுதியில் கடற்புலிகளின் விசேட தரைத்தாக்குதலனி ஒன்று மாவீரான லெப் கேணல் டேவிட்/ முகுந்தன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டபோது அவ்வணிக்குள் உள்வாங்கப்பட்ட பிரசாந் . அங்கு தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றான். இப் படையணி ஒரு பெரும் தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சிக்காக மற்ற தரைத்தாக்குதலணிகளுடன் இணைந்து அப்பயிற்சிகளில் பங்குபற்றியது.பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .இவர்கள் எடு…
-
- 0 replies
- 207 views
-
-
எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும். பிரிகேடியர் சொர்ணம் மதிப்பிற்குரிய பெருந்தளபதியுடனான நினைவுகளுடன்… திரு.அச்சுதன் (வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்தவர்) சொர்ணம் அண்ணா. அந்தப் பெயரிலே எத்தனை மிடுக்கு…. பள்ளிப் பருவங்களில் நாங்கள் புகைப்படங்களில் பார்த்து, அறிந்து வியந்த ஒரு மிகப்பெரும் கதாநாயகன். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா, ஒரு முறையேனும் அவருடன் கதைத்து விட மாட்டோமா என்றெல்லாம் ஏக்கம் கொண்டிருந்தோம். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்11.jpg உலகம் போற்றும் எம் பெரும் தலைவனைப் பாதுகாக்கும் பணியையும் பொறுப்பையும் திறன் பட ஏற்று …
-
- 0 replies
- 207 views
-
-
பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஒப்பிறேசன் ஜெயசிக்குறு. இந் நடவடிக…
-
- 0 replies
- 203 views
-
-
நம்மெல்லோரைப் போலவே அவனுக்குமொரு குடும்பம் இருந்தது. அதுவும், மதிவதனி என்றால், மதி(நிலவு) போல வதனம்(முகம்) உடையவள் என்று பொருள். அப்பேர்ப்பட்டவளை ஆசையாசையாய் காதலித்துக் கரம்பிடித்து, அவள் அமைத்துக்கொடுத்த அழகான குடும்பம் அது. ஆஸ்திக்கொன்று. ஆசைக்கொன்று. இரண்டும் கலந்தவொன்று என மூன்று மொட்டுகளால் மலர்ந்த குடும்பம் அது. அவன் நினைத்திருந்தால், தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், தன் காதல் மனைவியை ஒரு மஹாராணி போல் வாழ வைத்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், உள்ளூரிலேயே விலைபோய் தன் குடும்பத்தோடு சுகவாசியாய் இருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், குடும்பத்தோடு புலம்பெயர்ந்து ராஜாவைப்போல் வாழ்ந்திருக்க முடியும். அவன் ந…
-
- 0 replies
- 196 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா என்ற பெயரை அறியாத போராளி கள் அனேகமாக இருக்க மாட்டாரகள். அதுவும் வன்னிக் கிழக்கில் பணியில் இருந்தவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் தமிழீழ மருத்துவப்பிரிவி ன் மிக முக்கிய இராணுவ மருத்துவமனை களில் ஒன்று கப்டன் கீர்த்திகா நினைவு இராணுவ மருத்துவமனை. புதுக்குடியிருப்புப் பகுதியில், வீதியில் இருந்து அதிக தூரம் இல்லாது இருப்பினும், வான வெளி தாண்டி வரும் சூரியக்கதிர்கள் நிலத்தைத் தொடமுடியாதபடி முற்றுமுழுதாக உருமறைக்கப்பட்ட நிலையில் அந்த மருத்து வமனை சாதாரணமாக இயங்கிக் கொண்டி ருக்கும். தமிழீழத்தின் முக்கியமான மூத்த மருத்துவர்களான மருத்துவக்கலாநிதி எழு மதி கரிகாலன், மருத்துவக்கலாநிதி சூரிய கும…
-
- 0 replies
- 195 views
-
-
செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார். அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியேறி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார். ஆரம்பகாலங…
-
- 0 replies
- 191 views
-
-
சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான சிரிப்பு. சளைக்காமல்இ களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான். பயிற்சி செய்வார். களம் செல்வார். காயத்தோடு வந்து ஓய்வெடுப்பார். மறுபடி பயிற்சி சண்டை காயம் ……. ……. என்று ஒரு தொடர் சங்கிலி. அமைதியான இயல்பைக் கொண்ட அவர் கண்டிப்பான அணி முதல்வியாக அல்லாமல் அன்பான அணி முதல்வியாகவே தனது ; முதற் களமான…. 1992 ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றில…
-
- 0 replies
- 185 views
-
-
எமது இனத்தின் முதல் மறைமுக கரும்புலி "தியாகசீலம்" அன்பு ஆவார். இவர் யாழ்ப்பாணம் வலிகாமத்தை பிறப்பிடமாக கொண்டவராவார். அன்னாரை பகைவர் வன்புணர்ந்ததால் தன்னை அந்நிலைக்கு இட்டவரின் தலையை அழிக்க தன்னுயிரை போக்க வேண்டும் என்ற உறுதியெடுத்து கரும்புலியானார். இவர் இலக்கொன்றினை இரண்டாம் ஈழப்போரில் அழித்து வீரகாவியமானார். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன் (2024ம் ஆண்டு ஓகஸ்டில் நான் எழுதிய பதிவின் மீள்வெளியீடு)
-
- 1 reply
- 181 views
-
-
தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திர சிகிச்சைமானி கற்கை நெறியினை நிறைவு செய்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசான் துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) மற்றும் உதவி மருத்துவர்களிற்கான (Assistant Medical Practitioner)கற்கை நெறிகள் என இரண்டு கற்கை நெறிகள் இங்கே பலரும் அறியாத வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் கிருபா அவர்கள் சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி(MBBS) கற்கையைத் தொடர்ந்தார். …
-
- 0 replies
- 179 views
-
-
நான் நடுராத்தியில் பல தடவை நித்திரையில் இருந்து எழுப்பியிருக்கின்றன். எந்தவித சலிப்பின்றி அவரே வந்து வேலை செய்து தருவார். பிரின்ரர் சிலவேளைகளில் வேலைசெய்யாமல் இருக்கும், சிலவேளைகளில் ரோணர் பிரச்சினையாக இருக்கும், உடனயாடியாக அன்புமணி அண்ணையிடம் ஓடிபோனா காணும், வேலை முடிஞ்சதிற்கு சமன். தன்னுடைய இடத்திலே வேலை செய்ய சொல்லிவிடுவார். யாருடைய வெளியீடு என்றாலும் உதவி என்று கேட்டால், எந்த மறுப்பின்றி உரிய நேரத்திற்குள் செய்து கொடுக்கும் அன்புமணி அண்ணையை இழந்து 12 ஆண்டுகளை கடக்கின்றோம். விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் இதழ் -01 தொடக்கம் 138 வரையான பதிப்புக்களை இணையத்தில் அனைவரும் பார்வையிடலாம். அந்த பணிகளுக்கு உரித்தானவர் இவரே. ஆவணப்…
-
- 0 replies
- 171 views
-
-
அன்றைய நாள் மிகவும் சோகமாக விடிந்தது போலத் தோன்றியது. மனதில் ஏதேதோ நெருடல்கள். நெஞ்சம் கனத்தது. ஏனென்றே தெரியவில்லை, எதையோ இழந்துவிட்டதுபோல் தவிப்பு உண்டானது. சக போராளிகள் இருவர் வந்தனர். இவர்கள் முகங்களிலும் சோகம். காரணத்தை அறிய மனம் துடித்தது. “உங்கட றெயினிங் மாஸ்ரர் சிறீ மதியல்லோ வீரச்சாவு” “ஆ………..? சிறீமதியக்காவோ ? எங்க ” “மணலாத்தில…………” நான் அழவும் முடியாமல், கதைக்கவும் முடியாமல், வாயடைத்துப் போனேன். சிறீமதி, உறுதியும், துணிச்சலும், தனக்கு கொடுக்கப்பட்டவேலையைப் புரிந்து கொண்டு செயற்படக்கூடிய திடகாத்திரமான உள்ளமும் படைத்தவள் அவள். அல்லிப்பளையில், ஒருநாள் மண்வெட்டி வாங்குவதற்காக வீடொன்றுக்குச் சென்றோம். எம்முடன் சிறீமதியும் வந்தாள். அங்கே எம…
-
- 0 replies
- 171 views
-
-
அண்ணன் அப்துல்லா வழியில் ஆகுதியான தங்கை திலகா நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார். நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும். அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான். திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்ப…
-
- 0 replies
- 169 views
-
-
சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்தது. இதனை கப்பலிருந்தவர்கள் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தெரியப்படுத்தினர். அவர்களும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். இந்திய கடற்படையோ சரணடையும்படி தொலைத்தொடர்புக்கருவியூடாக அச்சுறித்துக் கொண்டேயிருந்தது மட்டுமில்லாமல் இடைக்கிடையே துப்பாக்கிச்சூடும் கப்பலுக்கு அண்மையாக நடாத்திக்கொணடிருந்தனர். சரணடைவது விடுதலைப் புலிகளின் மரபல்ல அதுமட்டுமன்றி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் தரையிலும் கடலிலும் எதிரிசரணடையச் சொன்னபோது எப்படிச் செய…
-
- 0 replies
- 168 views
-
-
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
- 3 replies
- 168 views
- 1 follower
-
-
🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul” ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களே காற்றில் அலையும் ஜீவன்களே அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்! உங்கள் துன்பம் மறக்கமுடியாதது உங்கள் பெயர்கள் மறையமுடியாதது உங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்! குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும் கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும் நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும் நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்! உங்களை கைவிட்ட உலகிற்கு இந்த தீபம் வழிநடத்தட்டும்! நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்! முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களே நாங்கள் உங்களைப் போற்றுகிறோம் உங்களுக்காகப் பேசுகிறோம்! ஒவ்வொரு தீபத்திலும் …
-
- 0 replies
- 160 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் சுரேன் என்றும் இசைவாணன் என்றும் அழைக்கப்படும் போராளியும் ஒருவராகிறார். தமிழீழ விடுதலைக்காக ஒரு காலை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றீடாக ஒற்றைச் செயற்கை காலோடு தன் வாழ்க்கையை தமிழீழ விடுதலைக்காக கொடுத்த உன்னதமான வேங்கை இசைவாணன். இன்று நாம் இழந்து விட்டோம் என்ற உண்மை ஏற்க முடியாது தொண்டைக்குள் சிக்குண்டு கிடக்கிறோம். ஒற்றைக்கால் என்பது சில வேளைகளில் அவர் நடக்கும் போது புலனாகினும் அவரின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அதை…
-
- 0 replies
- 159 views
-
-
மேஐர் தசரதன் சந்திரன் சுபாகரன் வீரச்சாவு 29.06.2001 1992 ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு சென்று அங்கே பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் வகுப்புகளில் இணைந்து கொணடு மிகுந்த ஆர்வத்துடன் கற்றான். தொடர்ந்து மேஐர் போர்க் அவர்களுடன் சிலகாலம் நின்ற தசா அங்கே இயந்திரவியல் சம்பந்தமாக படித்துக்கொண்டு அங்கிருந்த சர்வசேத்திலிருந்து வந்த படகுகளைப் பராமரித்து அதற்கான பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டான். போர்க் வீரச்சாவடைய லெப்.கேணல் மலரவனுடன் பொறியியற்துறையில் சிலகாலம் பங்குபற்றி அங்கே வெடிமருந்துகள் சம்பந்தமாக கற்றதுடன் படகுகளுக்கு ஆயுதங்கள் பூட்டுவது சம்பந்தமான தனக…
-
- 0 replies
- 155 views
-
-
அன்புக்கு இலக்கணம் ஆகிய அழகிய வதனம் கொண்ட சங்கவியை தெரிந்தவர்கள் யாராலும் மறக்கவே முடியாது…… அமைதியான சுபாபம் கொண்டவள். கூட இருப்பவர்களுக்கு உதவிடும் நல்ல உள்ளம் படைத்தவள். இரக்க குணம் அவளோடு கூட பிறந்தது. பழகியவர்களால் அவளை மறப்பது மிகவும் கடினம். 1998ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டவள் சிறுத்தைப் படையணியில் நித்திலா 1 பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு மூன்றுமுறிப்பு களமுனையில் அவளது தோழிகளுடன் தடம் பதிக்கிறாள். முன்னணிக் காவலரண்களை பலமாக்கி பாதுகாப்பது, எதிரியின் ஊடறுப்பு தாக்குதல்களை முறியடித்து சமர் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டவள். தொடர்ந்து வந்த காலங்களில் அம்பகாமம், ஒட்டு ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகளில…
-
- 0 replies
- 146 views
-
-
தேசியத் தலைவர் தோள்தட்டி வளர்த்த கடல்வேங்கை. லெப் கேணல் பழனி. 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பிற்கு வந்த நாட்களிலிருந்து எட்டு வருடங்கள் தொடர்ந்த நட்பொன்று மூச்சிழந்துபோனது. இயக்கத்தின் கடைசி மூச்சென்று தலைவரால் பெயர்சூட்டி நடத்தப்பட்ட அந்த இரகசியக் கடல் நடவடிக்கையான ‘ஒப்பரேசன் மூச்சு’ எனும் ஆழ்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையில் தொடராக 25 நாட்கள் முக்குளித்து நின்று வானில் எமது வான்கலங்கள் பறப்பதற்காய் அந்தக் கலங்களையே சுமந்துவந்த படகில் இவனுமாய் பத்திரமாய் கரைசேர்த்த பாரி அவன். ஒன்றாயிருந்து ஒருவேளைகூட விட்டுப்பிரியா உறவாகி தோள்கொடுத்துநின்ற நண்பனிவன் 15/08/2000 அன்று தனது இன்னுயிரை எம் தேசத்துக்காய் தந்து வீரவரலாறாய் மண்ணை முத்தமிட்டான். நினைவுகளுடன் புலவர். க…
-
- 0 replies
- 145 views
-
-
கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து வந்து வள்ளிபுனத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு அரச மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை தமிழீழ மருத்துவப்பிரிவுக்கு இருந்ததால் பல மருத்துவப் போராளிகள் மக்களுக்கான மருத்துவப் பணியில் இருக்கிறார்கள். அதில் அல்லி என்று அன்பாக அழைக்கப்படும் பெண் போராளியும் இர…
-
- 0 replies
- 144 views
-
-
1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து மேற்கொண்டிருந்தனர். இதனைக் கடற்புலிகள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். தலைவர் அவர்களோ எங்களிடம் அதற்கேற்ற ஆயுதம் இல்லை நீங்கள் அக் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தும்படியும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான பொறுப்பை தளபதி லெப் கேணல் சாள்ஸ் ( வீரச்சாவு 11.06.1993 ) அவர்களிடம் ஒப்படைத்தார். அதற்கமைவாக சாள்ஸ…
-
- 0 replies
- 131 views
-
-
ஒவ்வொரு நாளும் வாழ்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எம்முடன் வாழ்ந்தவர்களைப்பற்றி நினைக்க வைத்து விடும் அப்படித்தான் இன்றும் நெல்ஷா அக்காவின் நினைவுடன்… வழமையான பாடசாலை விடுமுறை நாட்களில் சின்னமகள்(கவிநிலா)விற்கு இரவு தூக்கத்திற்கு போகும் போது கதைசொல்லவேண்டும் இன்று வழமைக்கு மாறாக மகளிடம் நான் கேட்டேன். “அம்மாவிற்கு தூக்கம்வரவில்ல இன்று நிங்கள் கதை சொல்லி என்னை முதலில் தூங்கவைத்த பின்தான் தூங்கவேண்டும் என்றேன் சரி இதற்கு ஒரு வழி இருக்கு என்று சொல்லி முதலில் கண்களை இருவரும் மூடுவம் என்றாள் .இப்போ நான் சொல்லுவதை கற்பனை பண்ணுங்க எண்டன் ஒரு பட்டியில் நிறைய ஆட்டுக்குட்டிகள் நிக்கிறது தெரிகிறதா? என்ன நிறம் எண்டு கேட்டன் பிடிச்ச கலரைவையுங்கள் என்றாள் இப்போ ஆட்டுக்குட்டிக…
-
- 0 replies
- 120 views
-