மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
கரும்புலி மேஜர் மறைச்செல்வன் செல்வராஜா ரஜினிகாந்தன் தமிழீழம் (வவுனியா மாவட்டம்) தாய் மடியில் :03-05-1981 தாயக மடியில்:10.05-2000 அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்த படி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற …
-
- 0 replies
- 295 views
-
-
1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்து தொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான். தொடர்ந்து கடற்புலிகளால் தளபதி அருச்சுனா அவர்களின் தலைமையில் தரைத்தாக்குதலணி ஆரம்பிக்கப்பட்டபோது சிவாவும் அதில் ஒருவனாக இணைந்து அப்படையணியில் மிகவும் சிறந்து விளங்கினான். இவனது அனைத்துச் செயற்பாடுகளையும் கவனித்த தளபதி அருச்சுனா அவர்கள் இவனை சிறப்புத்தளபதி சூசை அவர்களின் மெய்ப்பாதுகாப்பாளனாகா அனுப்புகிறார். அங்கு இவனது செயற்பாடுகளின் நிமிர்த்தம் இவனை மேலதிக மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிக்காக அப்போதைய கடற்புலிகளின் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்…
-
- 0 replies
- 227 views
-
-
மாவீரனே! மாவீரனே! -நீ மண்ணின் மைந்தனே! சாவேயுனைக் கரையாதடா-எங்கள் சந்ததிக்கே நீ உரைகல்லடா! வாழ்வுக் காகவே நீ வாழ்ந்த தில்லையே!-அன்னை தாழ்வை நிமிர்த்தவே-உயிர் தந்த பிள்ளையே! இந்தப் பொழுதிலே உன் இறக்கை முளைக்குதே! கந்தக் கோட்டத்தில் உன் கதைகள் கேட்குதே! விழிகள் உகுத்தநீர் வீழ்ச்சி காண்குதே! ஒளிகள் பொருந்திய உன் உயிரும் அழைக்குதே! சந்நிதி மருங்கில் உன்றன் சார்சிதை அழித்தும் விட்டார்! எம்மனச் சிறையில் உன்னை எவரடா அழிக்கக் கூடும்! இராட்சதர் வந்து எங்கள் இனத்தையே அழித்தும் விட்டார்! பிராட்டியும் கோனும் நின்ற பெருநிலம் மடக்கி விட்டார்! அரக்கர்கள் வருவார்! வந்து அசுரர்கள் ஆக நிற்பார்! இரக்கமில் லாதராகி எங்கள் …
-
- 0 replies
- 791 views
-
-
வியட்னாம் புரட்சிவாதிகள் மேற்கொண்ட தற்காப்பு முறைகளை தமிழீழத்தில் உருவாக்கியவர் மேஜர் அகத்தியர் மேஜர் அகத்தியர் செல்லத்துரை புவினேயராஜ் கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:21.06.1967 - வீரச்சாவு: 01.01.1990 நிகழ்வு:முசல்குளத்தியில் புளொட் கும்பலின் முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: கொடிகாமம் மேலதிக விபரம்: கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. புலேந்திரன் - குமரப்பா முதலான போராளிகள் இலங்கை - இந்திய கூட்டுச்சதிக்குப் பலியானதைத் தொடர்ந்து 'இனி யுத்த நிறுத்தம் இல்லை ' என தலைவர் பிரபாகரன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் இட…
-
- 0 replies
- 665 views
-
-
இந்தோனேசியாவிலிருந்த எமது படகுகளில் ஒன்றை சர்வதேசக் கடற்பரப்பிற்க்குக் கொண்டு வந்து அங்கு நின்ற எமது கப்பலில் இருந்து தமிழீழத்திற்க்குத் தேவையான பொருட்களுடன் அலம்பிலுக்கு வருவதற்க்கான ஒரு திட்டம் கடற்புலிகளின் சர்வதேசக்கடற்பரப்பில் நின்றவர்களுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்படுகிறது. அதற்கமைவாக அந்த நேரம் தமிழீழத்தில் நின்ற லெப்.கேணல் ஸ்ரிபன் தலைமையிலான ஒரு அணி உருவாக்கப்பட்டு அவ் அணிகளில் சர்வதேசக் கடற்பரப்பில் நின்றவர்களுடன் மேலதிகமாக தமிழீழத்தில் நின்றவர்கள் சிலரும் இணைக்கப்பட்டனர். இவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்வதற்காக தமிழீழத்திலிருந்து புறப்பட்டு சர்வதேசக் கடற்பரப்பினூடாக இந்தோனேசியா சென்று படகை எடுத்துக்கொண்டு கப்பலைச் சந்தித்து கப்பலில் உள்ள அந்த நே…
-
- 0 replies
- 120 views
-
-
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” - குட்டிமணி ( சிங்களவனால் கண்கள் தோண்டி எறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர் )
-
- 0 replies
- 515 views
-
-
http://3.bp.blogspot.com/-h_zfONJ0RYI/Ts0X4q7f8TI/AAAAAAAAAIg/U_29UotCMP0/s640/Malaravan+2011.jpg போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா - கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 24ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு …