பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தொழூஉப் புகுத்தல் - 43 https://app.box.com/s/hque5sn1x55esq8fn1ine0co8p0fnb2q நீ நீங்கு ! கன்று சேர்ந்தார் கண் கத ஈற்று ஆ சென்றாங்கு வண் கண்ணள் ஆய் வரல் ஓம்பு! யாய் வருக ஒன்றோ! பிறர் வருக! மற்று நின் கோ வரினும் இங்கே வருக! தளரேன் யான் நீ அருளி நல்க பெறின் (முல்லைக் கலி: 611:08-12) பொருள் இளம் கன்றைஎவர் நெருங்கினாலும் தாய்ப்பசு விரட்டி விரட்டித்தாக்கும். என் பின்னால் நீ தொடர்ந்து வராதே ! கடும் சினத்தொடு என் ஆயி வருகிறாள் உன்னைக் காத்துக்கொள் என்று எச்சரிக்கை செய்கிறாள் ஒரு பெண். உன் தாய் வந்தாலும் வேறு எவர் வந்தாலும் வரட்டும்! எனக்கு ஒன்றுதான். உன் அரசனே வந்தாலும் இங்கே வரச்சொல்! நான்அஞ்ச மாட்டேன். நீ மட்டும் என்னை விரும்புவதாக ஒத்துக் கொண்ட…
-
- 0 replies
- 462 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 44 https://app.box.com/s/whiuyavvkda7ciliey8majysk2qxn3sy வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி அண்ண அணிந்து ஊர் ஆயின் நண்பகல் போழ்து ஆயின் கண் நோக்கு ஒழிக்கும் கவின்பெறு பெண் நீர்மை மயில்எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன வெயிலோடு எவன் விரைந்து சேறி? உது காண்! பிடி துஞ்சு அன்ன அறைமேல தடிகண் புரையும் குறுஞ்சுனை ஆடிப் பனிப்பூம்தளவொடு முல்லை பறித்துத் தனிக் காயாம் தன் பொழில் எம்மொடு வைகிப் பனிபடச் செவ்வாய் நும் ஊர்க்கு! இனிச் செல்வெம் யாம் மா மருண்டன்ன சிற்று ஆய்த்தியர் நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை அவை ஆ முனியா ஏறுபோல் வைகல் பதின்மரைக் காமுற்றுச் செவ்வாய் ஓர் கண்கொத்திக் கள்வனை நீ எவன் செய்தி பிறர்க்கு? …
-
- 0 replies
- 671 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 45 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 நிச்சம் தடுமாறும் மெய் இயல் ஆய்மகன் மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் கடுஞ் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு! (முல்லைக் கலி: 110: 09-15) பொருள்: இன்று கன்றுக்குட்டியை ஈன்று விடுவோம் என்று தனது உள் உணர்வினால் அறிந்து கொள்ளும் முதல் கன்று ஈனும் தாய்ப்பசு, அச்ச உணர்வினால் மேய்ச்சலுக்குச் செல்லாமல் தொழுவினுள் சுற்றிவரும் என்ற உண்மையை அழகிய எடுத்துக் காட்டின் வழியே பதிவு செய்துள்ளார் சோழன் நல்லுத்திரனார். மத்தம் பிணித்த கயிறும், கடுஞ…
-
- 0 replies
- 619 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 46 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும் பேர் அமர்உ ண் கண்ணும் நல்லேன் யான் என்று நலம் தகை நம்பிய சொல்லாட்டி நின்னோடு சொல்லாற்றுகிற்பார் யார்? சொல்லாதி! நின்னைத் தகைத்தெனன் அல்லல் காண்மன் மண்டாத கூறி மழகுழக்கு ஆகின்றே கண்ட பொழுதே கடவரைப் போல நீ பண்டம் வினாய படிற்றால் தொடீய நின் கொண்டது எவன்? எல்லா! யான் கொண்டது (முல்லைக்கலி 108:15-25) பொருள்: என்னைத் தேர்வு செய்த உன்னைப் பேசி வெல்ல முடியாது என்று கூறுகிறான் காதலன். உன்னைத் தேர்வு செய்த பின் நான் பட்ட துன்பம் பெரிது.முதலில் பார்த்த உடனேயே கடன் கொடுத்தவன் திருப்பிக் கேட்பது போலப் பண்டம் கேட்டாயே! அப…
-
- 0 replies
- 547 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 47 https://app.box.com/s/ermbxprsfpna8gj8jpd0fmk42j4o9a3l அளை மாறிப் பெயர் தருவாய் அறிதியோ அஞ்ஞான்று தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றூற்று அயல் இனமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினா என் நெஞ்சம் கனமாக் கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ? நின் நெஞ்சம் கனமாக் கொண்டு யாம் ஆனல் எமக்கு எவன் எளிதாகும்? புனத்துளான் என் ஐக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ? இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ? தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பது வோ? அனைத்து ஆக! (முல்லைக் கலி 108: 26-35) பொருள்: என் நெஞ்சத்தைக் களமாகக் கொண்டு ஆண்டு கொண்டிருக்கிறாய்! நீ ஒரு கள்வி என்று கூறுகிறான் காதலன். அது எப்படி எனக்கு எளிதாகும்? உன்னைத் தேடிக் கலங்கினேன். தினைப்புனத…
-
- 0 replies
- 475 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 48 https://app.box.com/s/p3k2p4dl41fmbypxfnftva1jgcd0psth நறு நுதால் என்கொல்! ஐங்கூந்தல்உளரச் சிறுமுல்லை நாறியதற்கு குறு மறுகி ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட கொல்லேறு போலும் கதம் (முல்லைக்கலி 105: 53-56) ஒள்நுதால் இன்ன உவகை பிறிது யாய் என்னைக் கண் உடைக் கோலால்அலைத்தற்கு என்னை மலர் அணி கண்ணிப் பொதுவனொடு எண்ணி அலர் செய்து விட்டது இவ்வூர் (முல்லைக்கலி 105: 61-65) பொருள்: எனது கூந்தலில் இருந்து சிறுமுல்லையின் மணம் வந்தது பொறுக்க மாட்டாமல் எனது பெற்றோர் சினப்படுகின்றனர். அந்தச் சினம் அவன் அடக்கிய காளையின் சினத்தை விடவும் கடுமையாக இருக்கிறது என்று தன் தோழியிடம் கூறுகிறாள் ஒரு பெண். அந்த அவன் சூடியது சிறு முல்லைக் கண்…
-
- 0 replies
- 507 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 49 கார் ஆரப் பெய்த கடிகொள் வியன் புலத்துப் பேராது சென்று பெரும் பதவப் புல் மாந்தி நீர் ஆர் நிழல குடம் கட்டு இனத்து உள்ளும் போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இன பாண்டில் தேர் ஊரச் செம்மாந்தது போல் மதை இனள் பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் மோரொடு வந்தாள் தகை கண்டை யாரோடும் சொல்லியாள் அன்றே வனப்பு (முல்லைக்கலி 109: 1-8) பொருள் இளங்காளை பூட்டிய தட்டு வண்டியின் மீது அமர்ந்து வரும் யாரும் சற்று நிமிர்ந்து தோன்றுவது போல மதமதப்பாக வருகிறாள் இந்த மோர்க்காரி. இவளது அழகை யாரோடும் ஒப்பிட இயலாது என்று வியக்கின்றனர் ஊரார். குடம் சுட்டு இனம் என்பது மண் சார்ந்த வாழ்வியலை வகுத்துக் கொண்ட குயவர் ஆக இருக்கலாம். குயவர்கள் கைவினைக் கலைஞர்கள் ஆயினும் …
-
- 0 replies
- 1k views
-
-
தொழூஉப் புகுத்தல் - 50 & மாநாகன் இனமணி 100 https://app.box.com/s/fapzm8mhqmzavbknw9w6h2w5kziec3kh இனி மாநாகன் இனமணி என்ற பெயரிலேயே வரும் இந்த ஒரு பக்க ஓவியச் சிற்றிதழ். இந்த நிரல் படக் கரந்து வரல் ஏடு. ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக் காயாம் பூக் கண்ணிக் கருந்துவர் ஆடையை மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய் ஓர் ஆயனை அல்லை பிறவோ அமரர் உன் ஞாயிற்றுப் புத்தேள் மகன் (முல்லைக்கலி 108: 09-13) பொருள்: தமிழர் மரபில் முல்லை நிலத்து ஆயர் மகளிர் பாராட்டிய ஆண் மகனின் உருவகம் ஞாயிற்றுப் புத்தேள் மகன். அவன் பைம் பூண் சேய் முருகன் ஆகவும் இருக்கலாம். அந்த முருகனே திருமால் ஆகவும் இருக்கலாம். இந்திரன் ஆகவும் இருக்கலாம். மால் என்பது அடை…
-
- 0 replies
- 484 views
-
-
https://app.box.com/s/pl5qk9f0jqv5iqlvzdgtnvcfhju9apbj தொழூஉப் புகுத்தல் – 16 மகிழ்ந்து திளைஇ விளையாடும் மடமொழி ஆயத்தவருள் இவள் யார்? உடம்பொடு உயிர் புக்கவள் இன்று ஓ ஓ! இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் திருமா மெய் தீண்டலர் என்று கருமமா எல்லாரும் கேட்ப அறைந்து எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவன் (முல்லைக்கலி 102: 8-12) பொருள்:- வீரனுக்கு வாழ்க்கைப்பட விரும்பும் பெண்கள் தாமாகவே முன்வந்து தமது முடிவைத் தெரிவித்தனர் என்றும், அச்செய்தி பலமுறை பறையறிந்து தெரிவிக்கப்பெற்றது என்றும், அவர்களுள் ஒருத்தியே தனது மனதில் இடம் பிடித்தவள் என்றும் உறுதி செய்து கொள்கிறான் ஒரு வீரன். செம்மொழித் தகமையில் வகைப்படுத்தப்பட்டுள்ள பழந்தமிழ் 41லும் வீரர்களின் காதலி…
-
- 0 replies
- 1.4k views
-
-
https://app.box.com/s/tg3l1qstjx1orcb9i3nz4hv7tzui0246 https://app.box.com/s/tg3l1qstjx1orcb9i3nz4hv7tzui0246 தொழூஉப் புகுத்தல் – 22 நேர் இழாய் கோன் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக் காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த ஊராரை உச்சி மிதித்து (முல்லைக் கலி 103: 33-75) பொருள்:- வெல்ல முடியாத நிலையில் வசம் பார்த்து நிறுத்தப்பட்ட காரிக் காளையின் சினத்திற்கு அஞ்சாமல் அதனோடு மோதிய தன் காதலனுக்கே தன்னைக் கொடுத்தனர் தன் உறவினர். ஊரார் தூற்றிய அலர் முற்றாக அடிபட்டு போய்விட்டது என்று வியக்கிறாள் ஒரு பெண். ‘ஊராரை உச்சி மிதித்தல்’ என்ற சொற்றொடர், காதல், வீரம் இரண்டும் அறத்தோடு சேர்த்துப் பெற்ற வெற்றிக்கு நற்சான்று. பழந்தமிழர…
-
- 0 replies
- 600 views
-
-
https://app.box.com/s/lbbyyz5nyodzob2lqo87mhpgz4tjpxq6 தொழூஉப் புகுத்தல் – 23 கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் ! அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து நைவாரா ஆயமகள் தோள்! வளி அறியா உயிர் காவல் கொண்டு நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு எளியவோ ஆய மகள் தோள்? (முல்லைக்கலி 103: 63-75) பொருள்: வீரம் இல்லாத ஆண்மகனை ஆயமகள் ஏற்றுக் கொள்ள மாட்டாள். ஆயமகளை அடைவது எளிதல்ல. உடம்பைக் கொண்டு உயிரைக் காக்க முடியாது. உயிருக்கு நேரான வீரத்தைக் கொண்டே உடம்பைக் காக்க முடியும். மறுமையும் புல்லாள் என்று குறிப்பிடுவது தமிழர்களின் ஆழமான மெய்ப்பொருள் நெறி சார்ந்தது. நிலமகளும் அரசனும் போலத் தானும் ஆயனும் இ…
-
- 0 replies
- 698 views
-
-
https://app.box.com/s/7cdw4j8ggjef9rugxygvrwukax4uswce தொழூஉப் புகுத்தல் – 26 மருப்பில் கொண்டும் மார்பு உற(த்) தழீ இயும் எருத்து இடை அடங்கியும் இமில் இறப் புல்லியும் தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடிக் கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு (முல்லைக்கலி 105: 30-34) பொருள்:- கொம்புகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டும், மார்பு அழுந்தக் கட்டித் தழுவியும், கழுத்தின் இடையில் தொற்றிக்கொண்டும், திமில் இற்றுப் போகுமாறு இறுக்கியும், மேற்கால்களுக்கு இடையில் புகுந்தும், மோதி உதை வாங்கியும் பின் வாங்காமல் காளைகள் மீது பாய்ந்து குத்தித் தம்மைத் தொட இடம் தராமல் களம் காத்தன காளைகள். காளைகளுக்கும், வீரர்களுக்குமான போரில், காளை…
-
- 0 replies
- 880 views
-
-
https://app.box.com/s/yu3uuffbopgmgjssv27evbsha2sl12ib தொழூஉப் புகுத்தல் – 27 இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே மிட்டு ஓரான் போர் புகல் ஏற்றூப் பிணர் எருத்தில் தத்துபு தார் போல் தழீ இயவன்! இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோ இனத்து ஆயர் மகன் அன்றே ஓவான் மறை ஏற்றின் மேல் இருந்து ஆடித் துறை அம்பி ஊர்வான் போல் தோன்றும் அவன் (முல்லைக்ககலி 103: 33-40) இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் புல் இனத்து ஆயர் மகன் அன்றே புள்ளி வெறுத்த வய வெள் ஏற்று அம்புடைத் திங்கல் மறுப்போல் பொருந்தியவன் (முல்லைக்கலி 103: 47-50) பொருள்:- கழுத்தில் தார் போல, படகில் ஊர்பவன் போல, நிலவின் மறுப்போல ஒட்டிக்கொ ண்டு காளைகளோடு போரி…
-
- 0 replies
- 480 views
-
-
தொழூஉப் புகுத்தல் – 28 https://app.box.com/s/3uq0pxvw5fwnz1jhxorthvaf31k2510o https://app.box.com/s/3uq0pxvw5fwnz1jhxorthvaf31k2510o அவ் ஏற்றை பிரிவு கொண்டு இடைப் போக்கி இனத்தொடு புனத்து ஏற்றி இரு திறனா நீக்கும் பொதுவர் உரு கெழு மாநிலம் இயற்றுவான் விரிதிரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர் அவரைக் கழல உழக்கி எதிரி சென்று சாடி அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு (முல்லைக் கலி 106:15-22) பொருள்: தொழுவில் இருந்து கூட்டமாக அவிழ்த்து விடப்படும் காளைகளை எதிர் கொண்டு அவற்றுள் நின்று விளையாடும் காளைகளையும், விட்டால் போதும் என்று தப்பிச் செல்லும் காளைகளையும் இடையில் ஓடவிட்டுப் பிரித்தனர் வீரர்கள். இந்நிகழ்வு மழைநீரைச் சுமந்து வரும…
-
- 0 replies
- 392 views
-
-
தொழூஉப் புகுத்தல் – 29 https://app.box.com/s/wmd63o2y3xxgd4uvahcbboh811swno37 புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரித் தங்கார் பொதுவர் கடலுள் பரதவர் அம்பி ஊர்ந்தாங்கு ஊர்ந்தார் ஏறு! ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர் ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட மாலை போல் தூங்கும் சினை (முல்லைக் கலி 106: 23-29) பொருள்:- குடல் சரியக் குத்துப் பட்ட வீரர்களின் அறுந்து விழுந்த குடலை மாலையாகத் தூக்கிச் செல்கின்றன பருந்துகள். கடைசி வரையிலும் போராடும் இயல்பு வீரர்களுக்கு இருக்கிறது. குருதி வாடை தோற்றும் இப்பாடல் தொழூஉப் புகுத்தல் என்ற வீர விளையாட்டின் இறுக்கமான மறுபக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது. முல்ல…
-
- 0 replies
- 437 views
-
-
தொழூஉப் புகுத்தல் – 30 https://app.box.com/s/iiyn4b62rd37yjr8qsslaryt6aaxce06 கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் கறங்க ஊர் எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க நேர் இதழ் நிரை, நிரை நெறி வெறக் கோதையர் அணி நிற்பச் சீர்கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சினப் பொதுவர் தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த ஆர்பு உடன் பாய்ந்தனர் அகத்து (முல்லைக் கலி 105: 24-29) பொருள்:- வில்லில் நாண் ஏற்றி அம்பு பூட்டிய சிலை நிலையோடு பெண்கள் அணி வகுத்து நிற்கும் கோலம் ஒப்பிடப்படுகிறது. தாக்கணங்கு முன்னே செல்ல தாய் நிழலாகப் பின்னே தொடர, பின்னே! முன்னே! முன்னே! பின்னே! என்று பெண்கள் குரவையாட வீரர்கள் தமது கால்களால் மண்ணை உதைத்துக் கிளப்பிய புழுதியானது விசு…
-
- 0 replies
- 388 views
-
-
தொழூஉப் புகுத்தல் – 31 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 சொல்லுக பணி யேம் என்றார் அறைக! என்றார் பாரித்தார் மாணிழை ஆறு ஆகச் சாறு சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் மிடை பெறின் நேராத் தகைத்து தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து உடன் எதிர் எதிர் சென்றார் பலர் (முல்லைக்கலி 102: 13-18) பொருள்:- தொழூ உப் புகுத்தல் என்பது ஒரு விழாவாகத் தொடங்குகிறது. முதலில் பெண்களைப் பாணி சொல்ல வேண்டுகின்றனர். அவர்கள் முறையாக அணியமாகி அறைக என்று ஆணையிட்ட அந்த நொடியில் பறைக் கருவியில் அடி தொடப்படுகிறது. அதற்கேற்பக் கதிரவன் பார் கோத்து இயங்கும் முறையில் பெண்கள் கணக்கிட்டு இயங்…
-
- 0 replies
- 432 views
-
-
தொழூஉப் புகுத்தல் – 32 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 எல்லா! இது ஒன்று கூறும் குறும்பு இவர் புல் இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம் கொல் ஏறூ கோடல் குறை எனக் கோவினத்தார் பல் ஏறு பெய்தார் தொழூ உ (முல்லைக் கலி. 107: 1,4) விலை வேண்டார் எம் இனத்து ஆயர் மகளிர் கொலை ஏற்று கோடு இடைத் தாம் வீழ்வார் மார்பின் முலை இடைப் போலப் புகின் (முல்லைக் கலி. 103:71,73) பொருள்:- கோவினத்தார் தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டு புல்லினத்தார், குடம்சுட்டவர் ஆகியோர் தமது ஏறுகளை வென்று அதன் வழியே கோவினத்து ஆயர் மகளிரை அடைந்து விடக் கூடாது என்று திட்டமிடுகின்றனர். அதற்காக மிகுதி…
-
- 1 reply
- 657 views
-
-
https://app.box.com/s/e2kbetc4yvbm8peiff1sqcfsfoqblqtl தொழூஉப் புகுத்தல் – 33 தரு மணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும் பெருமணம் தனித்தே ஒழிய வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்து திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும் தெருமரல் கவிட்டு இருக்கோ! அலர்ந்த விரிநீர் உடுக்கை உலகம் பெறினும் அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே (முல்லைக்கலி 114: 12-21) பொருள்:- புதிய மணல் கொண்டு வந்து பரப்பி, வீட்டின் சுவர்களில் செம்மண் குழம்பு பூசி, பால் தரும் எருமைகளைப் பரிசாகத் தந்து, எமது பெற்றோர் கொண்டாடும் இந்தத் திருமணம் எனது மந்தில் நிற்கவில்லை! சிற்றில் புனைந்து சிறுமிகளோடு விளை…
-
- 0 replies
- 558 views
-
-
https://app.box.com/s/cqkjk9v2gpq3pbicbr06d9bmail83g98 தொழூஉப் புகுத்தல்- 24 பாடி ஏற்றவரைப் படக் குத்திச் செங்காரிக் கோடு எழுந்து ஆடு கணமணி காணிகா! தகைசால் அவிழ் பதம் நோக்கி நறவின் முகை சூழும் தும்பியும் போன்ம் (முல்லைக்கலி 145: 40-44) கடா அக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை விடா அதுநீ கொள்குவை ஆயின் படா அகை ஈன்றன ஆய மகள் தோள் (முல்லைக்கலி 101:36-38) பொருள்:- கள்ளுப் பானையை திறந்தவுடன் அதன் உள்ளே நுழைய வழி தேடித் தும்பி ஒன்று சுற்றுவது போல தன்னால் குத்தி சரிக்கப்பட்ட வீரனை, அவன் மீண்டும் எழுந்தால் வசம் பார்த்துக் குத்துவதற்குச் சுற்றி சுற்றி வருகிறது அந்தச் செங்காரிக் காளை தனது குத்தும் தொலைவில் வைத்துக் கொண்டு களிற்றினும் சினம் கொண்ட காளையை வெ…
-
- 0 replies
- 780 views
-
-
https://app.box.com/s/kgdruae0yj1mx9aeivl4zch19p86ly03 தொழூஉப் புகுத்தல்- 25 புள் ஒலி சிறந்த தென் அரிச்சிலம்பு அடி நாயில் இஞ்சி நகை மணி மேகலை வாயில் மருங்கு இயன்ற வான் பனைத் தோளி தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் எதிர் எதிர் ஓங்கிய கதிர் இன வன முலை ஆர் புனை வேந்தர்க்குப் பேர் அளவு இயற்றி ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய ஒரு பெருங் கோயில் திருமுக வாட்டி குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும் குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும் வெள்ளி வெண் தோட்டோடு பொன் தோடாக எள் அறு திருமுகம் பொலிய (மணிமேகலை மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை 1112:122) பொருள்: பறவையின் ஒலியே சிலம்பொலியாக, கோட்டையின் சுற்றுச் சுவரே இடையில் அணியும் மேகலையாக, வாசற்கால்கள் மேற்கைகளாக, இ…
-
- 0 replies
- 609 views
-
-
தோலுரிக்கபடும் ஜாகிர் ஹுசெய்ன் - பாகம் 1
-
- 1 reply
- 642 views
-
-
-
- 0 replies
- 481 views
-
-
தோழா முத்துக்குமார்... கோடி நன்றிகள் ! - முத்துக்குமார் நினைவு நாள் கட்டுரை 'விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...?' என்று துவங்கும் கு. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா...? தம் இனத்திற்காக மட்டும் கவலைப்படாமல், தம் இனத்திற்காக மட்டும் நீதி கேட்காமல், சிங்கள மக்களுக்காகவும் உண்மையாக கவலைப்பட்டு நீதி கேட்ட கடிதம் அது. எங்களுக்கு முத்துக்குமாரே நினைவில்லை, பிறகு எப்படி அவரின் கடிதம் நினைவிருக்கும் என்கிறீர்களா... பிழை இல்லை. நமக்குதான் அன்றாட வாழ்வில் கவலைப்பட ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறதே, இதில் எப்படி முத்துக்குமார் குறித்த நினைவுகளை நம்மில் கரையாமல் தேக்கி வைத்துக் கொள்ள முடியும்? அது 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி, …
-
- 0 replies
- 565 views
-
-