Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "பனியில் நனைந்த சூரியன்" "பனியில் நனைந்த சூரியன் தெரிவதில்லை பணியில் நேர்மை காட்டியவன் வாழ்ந்ததில்லை குனிந்த இனம் என்றும் பிழைத்ததில்லை இனித்த பலகாரம் ஆரோக்கியம் தருவதில்லை!" "நனைந்து நடுங்கும் குளிரில் உடல் கனைத்து அதிர்க்கும் பொங்கு கடல் அனைத்து உயிர்களும் விரும்புவது கூடல் தினைப் புனம் காப்பது மடவரல்!" "சூரியன் உதிப்பது உலகம் வாழ நரி ஊளையிடுவது இரவில் மட்டுமே திரி எரிவது வெளிச்சம் கொடுக்க அறிந்தால் இவை சமூக நீதியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] கனைத்து = ஒலித்து அதிர்க்கும் = அதிரும்

  2. "பல்கலைக்கழக வாழ்வின் நினைவுகள்" [பாடல் 01] [உயிர் எழுத்துக்கள் வரிசையில் / பல்கலைக்கழக நினைவு இதழில் வெளியானது / மெல்பேர்ண், ஆஸ்திரேலியா] "அறிவிற்கு பத்தொன்பதில் ஒன்று கூடினோம், அறுபது ஆயிரம் கனவு கண்டோம், ஆறு பாயும் பேராதனை வளாகத்தில், ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டோம்!" "இறுமாப்பு இல்லை வேற்றுமை இல்லை, இதயங்கள் கலந்து கூடிக் குலாவினோம், ஈரம் சொட்டும் மலை அடிவாரத்தில், ஈசனைக் கண்டு பரவசம் அடைந்தோம்!" "உலகத்தை கட்ட பொறியியல் படித்தோம், உண்மையை உணர்ந்து நட்பை வளர்த்தோம், ஊருக்கு ஊர் ஊர்வலம் போனோம், ஊசி முனையிலும் நடனம் ஆடினோம்!" "எறும்புகள் போல் சுமை தாங்கினோம், எண்ணங்கள் வளர்த்து அறிவை கூட்டினோம், ஏற்றம் இறக்கம் எம்மை …

  3. "பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்" "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !" "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !" "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !" "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு…

  4. "பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்" "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !" "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !" "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !" "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு…

  5. "பாசம்" "பாசம் ஒரு மென்மையான நீரோடையோ காற்றை சூடாக்கும் ஒரு புன்னகையோ இனிய வார்த்தைகளின் குளிர்ந்த தொடுதலோ உள்ளம் வெளிப்படுத்தும் அன்பின் கனிவோ இருண்ட இதயத்துக்கு கலங்கரை விளக்கமோ ஆன்மாவைப் பார்க்கும் பார்வையின் ஒளியோ?" "பாசம் என்றும் கருணையின் வடிவோ காதல் என்பதும் ஆசையின் ஈர்ப்போ பழகபழக முளை விடுவது நேசமோ உள்ளங்கள் கூடி சேருவது நட்போ அனைவர் மேலும் தோன்றுவது அன்போ பலபல வடிவில் எல்லாம் ஒன்றோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  6. "பாட்டி வாரார் பாட்டி வாரார்" [இரண்டு பாட்டிகளின் கதை] "பாட்டி வாரார் பாட்டி வாரார் பார்த்து படியில் கால் வைத்து பாதியில் நின்று கை காட்டி பாட்டி வாரார் பாட்டி வாரார்" "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் பாலகனுக்கு கலந்து அன்புடன் ஊட்ட பாவம் பாட்டி இந்த வயதிலும் பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" "பாடி ஆடி விளையாட்டு காட்ட பால் கொடுத்து கதை சொல்ல பாயில் அணைத்து சேர்ந்து படுக்க பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்" "பாத்திரம் கழுவி வீடு துடைக்க பானை நிரம்ப சோறு காச்ச பாதை காட்ட நல்ல கதைசொல்ல பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" ****************** "பாட்டி வாரார் பாட்டி வாரார் பாட…

  7. "பார்வைத் தீண்டலில் பாவையும் மலர்ந்தேன்" "பார்வைத் தீண்டலில் பாவையும் மலர்ந்தேன் ஆர்வம் கொண்டு ஆவலாய் பார்த்தேன் கர்வம் தொலைத்த கருணை கண்டேன் மார்பில் என் மாயவனை ஏற்றினேன்!" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களின் பேச்சில் கன்னியும் கலங்கினாள் மண்ணின் வாசனையில் மலர்ந்த அவனை பண்பின் மகள் பல்லாண்டு வாழ்கவென்றாள்!" "விழிகளின் நடனத்தில் வித்தைகள் கண்டு மொழியின் அழகில் மொத்தத்தையும் கேட்டு ஆழியின் அலையாய் ஆடி ஓய்ந்து எழில் கொழிக்கும் என்னவனுடன் சேர்ந்தேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  8. "பிறந்தநாள் வயதைக் கூட்டுது ஒருபக்கம்" [01/11/2023 எழுதியது] "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழ பழகி விட்டேன்!” "குழந்தை பருவம் சுமாராய் போக வாலிப பருவம் முரடாய் போக படிப்பு கொஞ்சம் திமிராய் போக பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "உண்மை தேடி அலச தொடங்கினேன் வேஷம் போட்ட பலதை கண்டேன் ஒற்றுமை அற்ற மதங்களை கண்டேன் ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” "நானாய் வாழ அமைதி தேடினேன் வாழத் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்த…

  9. "பூ பூக்கும் நேரம் இது" "பூ பூக்கும் நேரம் இது பூவையர் வரும் காலம் இது பூரித்த காளையர் வண்டாய் மாறி பூந்தேனை மொய்க்கும் நேரம் இது!" "புன்னகை பூ முகத்தில் தவழ புரியாத மோகத்தில் விழிகள் தேட புதுமை அனுபவம் ஊசல் ஆட புருவம் பேசும் காலம் இது!" "தரிசு நிலத்திலும் பூ பூக்கும் தருணம் வந்தால் காய் காய்க்கும் தலைவி நெஞ்சிலும் இடம் கிடைக்கும் தளிர் விட்டு காதல் மலரும்!" "மல்லிகை வாசம் மனதை கவர மகரத் தோடு அழகைத் தர மஞ்சள் நிலா குளிர் பொழிய மயக்கம் தரும் நேரம் இது!" …

  10. "பூவாசம் வீசுதே" "பூவாசம் வீசுதே நீலக் கருங்குயிலே பூத்து குலுங்குதே புன்னகை உன்னிலே! பூவையர் கண்களும் உன்னை நாடுதே பூரண சந்திரனும் வெட்கித் தலைகுனியுதே!" "மஞ்சள் ஆடையில் செக்கச் சிவந்தவளே மருண்ட விழியால் பூரிப்பு தாராயே! மகிழ்ச்சி பொங்குதே இடுப்புச் சிறுத்தவளே மடவரல் இடையை கூந்தலும் வருடுதே!" "மனம் மயக்கும் அழகு மலர்களே மணம் வீசி இதயத்தை தொடுகிறாயே! மங்கையின் கையில் ஏன்தான் போனாய் மந்திர மொழியால் உன்னை ஏமாத்துகிறாளே!" "பக்குவமாக இருந்து பூவை முகர்ந்து பல்வரிசைக் காட்டி சித்தம் கலக்குகிறாளே! பவளக் கொடியாளே உதட்டு அழகியே பல்லாயிரம் பூக்களும் உனக்கு நிகரில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தி…

  11. "பூவுக்குள் ஏனப்பா பூகம்பம்" "பூவுக்குள் ஏனப்பா பூகம்பம் பூரியரென்று யார் சொன்னது? பூவையர் என்றால் கேவலமா பூத்துக்குலுங்குவது அழகு மட்டுமா?" "மண்ணில் வளத்தைக் காண்பவனே பெண்ணில் வளமோ ஏராளம்! ஆண்களின் இன்பப் பொருளல்ல கண்கள் அவர்களே வாழ்வில்!" "சிவன்-பார்வதி கதை தெரியாதோ சித்தத்துடன் சமஉரிமை வழங்காயோ? சினம்கொண்டு அவள் எழுந்தால் சிதறிப்போவாய் வாழத் தெரியாமல்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பூரியர் - இழிந்தோர், கீழ்மக்கள்

  12. "பெண் எனும் பிரபஞ்சம்" "பெண் எனும் பிரபஞ்சம் மண் வாழ்வின் இறைவி! கண்ணின் இமையும் அவளே உண்மைத் துணையும் இவளே!" "திண்ணையில் அரட்டையும் செய்வாள் வண்ணத்தில் அழகும் காட்டுவாள்! எண்ணம் என்றும் குடும்பமே கண்ணாய் காப்பாள் என்றுமே!" "உண்ண உணவும் தருவாள் வீண் வம்புக்கும் இழுக்காள்! ஊண் உறக்கமும் பார்க்காள் ஆண்களின் சொர்க்கமும் அவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  13. "பெண் மனம்" "பெண் மனம் நிலாவரை கிணறோ கண் ஜாலத்தால் மயக்கும் மந்திரவாதியோ மண்ணின் பெருமையின் கலங்கரை விளக்கோ பண்பாட்டின் கலைவடிவம் இவளின் நாட்டியமோ?" "ஆடவள் உள்ளம் ஆடவனின் தடாகமோ அடக்கம் நிறைந்த அழகு மடந்தையோ அடங்கா மனிதனையும் அன்பில் அடக்குவாளோ திடம்பட காதல் கொடுப்பதே பெண்மனமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  14. "பேதையே போதையேன்" "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே சிற்றிடையாள் ஒளவை அன்று கூறினாள் சினம் ஏன் இன்று உனக்கு ?" "பேதையே போதையேன் நானும் கேட்கிறேன் பேரறிவு கொண்ட தலைவனே சொல்லாயோ? பேச்சில் எதற்குத் தையல் மட்டும் பேரொலி உடன் விடலையைச் சேர்க்கையோ?" "தெண்கள் தேறல் மாந்தி மகளிரென தென்னாட்டு மூதை பாட்டுப் பாடினாள் தெளிவாகத் தெரியுது இருவரும் அருந்தினரென" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  15. "பொன்னந்தி மாலையிலே" "பொன்னந்தி மாலையிலே தனியே நிற்பவளே அன்ன நடையில் மனதைக் கவர்பவளே சின்ன இடையில் அழகு காட்டுபவளே அன்பு கொண்டேன் அருகில் வருவாயோ?" "முந்தானை காற்றில் மேலே பறக்குதே சிந்தனை தடுமாறி ஆசை தூண்டுதே எந்தன் இதயத்தை தொட்ட தேவதையே இந்திர மண்டலத்து ஊர்வசி நீயோ?" "வண்ணக் கோலத்தில் மயக்கம் தருபவளே மண்ணின் வாசனையை பண்பில் சொல்பவளே எண்ணம் எல்லாம் உன்னையே நாடுதே கண்ணே கண்மணியே பூச்சூட வரலாமா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  16. "போனால் போகட்டும் போடா" "போனால் போகட்டும் போடா மனிதா போதை போனதும் தெரியுது உலகமடா ஆசை கொண்டு துள்ளித் திரிந்தேனே ஆரவாரம் செய்யாமல் அடங்கிப் போனேனே!" "ஈன இரக்கமின்றி அகந்தை கொண்டேனே ஈரக்கண் பலருக்கு என்னால் நனைந்ததே ஈன்ற பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே இன்று பாடை தூக்கவும் யாருமில்லையே!" "ஊடல் கொண்டு சென்ற மனைவியை கூடல் கொண்டு அள்ளி அணைக்காமல் தேடி ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே ஊமையாய் இன்று உறங்கிக் கிடக்கிறேனே!" "உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உணர்ச்சி மட்டும் வாழ்வென நம்பி உள்ளதையும் இழந்து நோயையும் பிடித்து ஒதுங்கி தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்திய…

  17. "மஞ்சள் ரோசா மனதை இழுக்குது!" "இரத்தம் சிந்த வைக்கும் முட்களே இரகசியமாக வருடும் மென் இதழ்களே இதழ்கள் நடுவே மஞ்சள் மகரந்தங்களே இத்தனையும் கொண்ட அழகு ரோசாவே!" "மாசி தரும் காதல் மாதமே மாதர் சூடும் ரோசாவின் வாசனையே மாட்சிமை பொருந்திய காதலர் சிறப்பே மாதவி - கோவலன் போற்றிய காதலே " "காதல் கடவுள் மன்மத அழகனே காம தேவனின் இனிய ரதியே காதல் பெருமை ரோமியோ ஜூலியட்டே காதோரம் சொன்ன காதல் மொழியே!" "ரோசா சிவப்பு சொல்லுது - காதலிக்கிறேன் ரோசா மஞ்சள் சொல்லுது - மகிழ்கிறேன் ரோசா இளஞ்சிவப்பு சொல்லுது - விரும்புகிறேன் ரோசா செம்மஞ்சள…

  18. "மடியில் ஏந்திக் கொள்ளடா மன்னவா!" "மாடி வீட்டில் உன்னைக் கண்டேன் தாடி மீசை அழகு பார்த்தேன்! வாடி இருந்தவளை தூக்கி நிமிர்த்தினாய் தேடி என்னிடம் அடைக்கலம் வாடா!" "கடிதம் எழுதி கையில் தந்தாய் ஈட்டி கொண்டு நெஞ்சைத் துளைத்தாய்! கட்டிப் பிடித்து இன்பம் பகிர்ந்தாய் அடிமை அற்ற வாழ்வு கொடடா!" "ஓடி விளையா…

  19. "மண்ணும் மரமும்" "மண்ணும் மரமும் பண்பு காட்டும் ஒன்றுபட்டு மனிதனை வாழ வைக்கும் கண்ணும் இமையும் போல இருந்தே மனித வாழ்வைத் தக்க வைக்கும்!!" "வானத்தின் அடியில் மண் இருக்கும் நீண்டு நிரப்பும் வேருக்கு தொட்டிலாகும்! விதை புதைந்து மரம் உயரும் மண்ணில் வளர்ந்து வானம் தொடும்!!" "பழைய கதைகளை மண் கிசுகிசுக்கும் தோண்டிப் பார்த்தால் வரலாறு புரியும்! காலத்தின் தழுவலில் இயற்கையின் பிணைப்பில் மண் உடலே! மரம் கருணையே!!" . [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  20. "மண்ணைப் போல யாரு மில்லையே !" & "முதுமையும் இளமையும்" "மண்ணைப் போல யாரு மில்லையே !" "மண்ணைப் போல யாரும் இல்லையே மறந்து இன்று இப்படி சொல்லுகிறாய்! மண்ணும் பெண்ணும் வாழ்வின் சுவாசமே தாய்மை பண்பினை போற்றிடும் தெய்வங்களே!" "மண் இருந்தால் மரம் வளரும் மரம் வளர்ந்தால் நாடு செழிக்கும்! மங்கை இருந்தால் மழலை தவழும் மழலை மலர்ந்தால் உலகம் பிழைக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "முதுமையும் இளமையும்" "காவோலை விழ க…

  21. "மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும்" "மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும் உங்கள் எண்ணத்துக்குள் அவை வெளிப்படட்டும் கட்டுகளை விடுவித்து சங்கிலிகளை உடைத்து உங்கள் மனம் திறந்தவெளியில் உலாவட்டும்!" "திறந்த இதயத்துடனும் திறந்த மனதுடனும் மாற்றம் மென்மையாக அன்பாக அமையட்டும் எதிரியை விட நண்பனை அறிந்தால் புதிய மாற்றம் புரிந்து வளரும்!" "மனதைத் திறந்து தன்பாட்டில் பறக்கவிட்டால் எதிர்காலத்தை தழுவி புதியதை வரவேற்றால் உங்கள் கனவுகள் விரைவில் நனவாகும் தேடிய எதிர்பார்ப்பு தானாக திறக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியட…

  22. "மனதைத் திருடியவளே" "மனதைத் திருடியவளே என்னை மயக்கியவளே மன்றாடிக் கேட்கிறேன் திருப்பித் தந்துவிடு! மகிழ்வைத் தந்து விலகிப் போனவளே மஞ்சள் நிலாவில் தனிமையில் வாடுகிறேனே!!" "மஞ்சத்தில் உறங்கையில் கனவு விரியுது மகர தோரணம் பந்தலில் ஆடுது! மங்கல அரிசி காத்து கிடக்குது மணமகள் நீயோ அங்கு இல்லையே!!" "மழையும் புயலும் பழகி விட்டது மது வாசனையில் என்னை மறக்கிறேன்! மரணம் என்னை நெருங்க முன் மவுனம் களைத்து மடியைத் தாராயோ!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  23. "மனமும் மனிதனும்" "மனமும் மனிதனும் போராடும் உலகில் கானம் அழித்து சூழலைக் கெடுக்கிறான் தானம் போட்டு இணையத்தில் பதிக்கிறான் மானம் புரியாமல் மனிதநேயம் தேடுகிறான்!" "மதி நுட்ப சிந்தனையாளனா மரத்துப்போனவனா நெருக்கடி வந்தபின்பே மாற்றுவழி தேடுகிறானா தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதா எண்ணம் குறுகியதா மனிதம் தோற்றதா?" "உள்ளம் அலைபாயும் மனிதன் இவன் நெஞ்சம் முழுக்க மெய்யும் பொய்யும் மனது மாந்தனை உயர்த்தும் வீழ்த்தும் மனிதனின் விருப்பம் பாசாங்கும் தேடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  24. "மனித மனம் திருப்தி அடையாது" "மனித மனம் திருப்தி அடையாது மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது மற்றவரை தாழ்த்தாமல் வாழ முடியாது!" "கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான் கடும்மழை பொழிந்தால் திட்டித் தீர்க்கிறான் கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான் கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்!" "இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும் இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்!" "சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை சிலருக்கு வைக்க இடமே இல்லை சிக்கனம் …

  25. "மனித மனம் திருப்தி அடையாது" "மனித மனம் திருப்தி அடையாது மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது மற்றவரைத் தாழ்த்தாமல் வாழ முடியாது" "கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான் கடும் மழை பொழிந்தால் திட்டுகிறான் கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான் கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்" "இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும் இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்" "சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை சிலருக்கு வைக்க இடமே இல்லை சிக்கனம் தெரிந்தவனு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.