Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா? ‘‘தமிழகத்தின் உச்ச அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இந்தியாவிலேயே ஒரு அரசாங்கத்தின் தலைமைச்செயலகத்துக்குள் புகுந்து சோதனை நடத்தப்பட்டது இதுதான் முதல்முறை. அப்படிப்பட்ட அவமானகரமான பெருமையைத் தேடித் தந்துள்ளார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் என்ற வரலாற்றுத் தகவலுடன் வந்தார் கழுகார். ‘‘வருமானவரித் துறையின் இந்த திடீர் ஆர்ப்பரிப்புக்குப் பின்னணி என்ன?’’ ‘‘2016 சட்டமன்றத் தேர்தல் களேபரங்கள் நினைவிருக்கின்றனவா? அப்போது ஓட்டுக்கு நோட்டுக் கொடுப்பதைத் தடுக்க முடியாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் கரன்ஸி விளையாடியது. எச்சரித்து... எச்சரித…

    • 3 replies
    • 1.3k views
  2. ‘ராமமோகன ராவ் ஊழல் பற்றி சசிகலாவுக்குத் தெரியாதா?' - கொதிக்கும் சீமான் வருமான வரித்துறையின் வளையத்தில் இருக்கிறார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ். 'ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடுதான் இத்தனை ஆயிரம் கோடிகளை சேர்த்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது' எனக் கொந்தளிக்கிறார் சீமான். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோக ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டால், அவருடைய ஆதரவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். 'எப்போது வேண்டுமானாலும் ஐ.ஏ.எஸ்கள் வீட்டில் ரெய்டு நடக்கலாம்' என்பதால், கோட்டைக்குள் பதற்றத்துடன் கால் வைக்கிறார்கள். அதே அளவுக்கு சீனியர் அமைச்சர்கள் மத்திய…

  3. சசிகலா பொதுக்குழுவுக்கு வந்தால்... அதிருப்தி கோஷ்டியின் ஆபரேஷன் பிளாக்! வரும் 29-ம் தேதி சசிகலா பொதுக்குழுவுக்கு வந்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கறுப்புச் சட்டை, கறுப்புக் கொடியை காட்டப் போவதாக உளவுத்துறை, கார்டனுக்கு ரகசிய ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நேரத்தில் உளவுத்துறை கார்டனுக்கு ரகசிய ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் கார்டன் வட்டாரத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா …

  4. போயஸ் தோட்ட இல்லத்தில் உயர் போலீஸ் பாதுகாப்பு நீடிப்பது அதிகார மீறல்: ஸ்டாலின் விமர்சனம் ஸ்டாலின் | கோப்புப் படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அரசியல் சட்டரீதியில் அதிகாரம் பெற்ற யாரும் இல்லாத நிலையில், அதிக எண்ணிக்கையிலான காவலர்களும், உயரதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகார மீறலை காவல்துறையின் தலைவர் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தில் தமிழக காவல்துறை சி.ஐ.டி பாதுகா…

  5. ‘அப்போலோவுக்கு வந்துபோன மர்ம பெண்மணி-ரகசிய ஆடியோ’ - சசிகலாவுக்கு எதிராக சடுகுடு ஆடும் சசிகலா புஷ்பா! ஜெ. மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி இப்போது 'சசிகலா vs சசிகலா புஷ்பா' என்ற புள்ளியில் வந்து நிற்கிறது. 'அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பெயர் முன்னிறுத்தப்பட்டால், அவரை எதிர்த்து நிற்பேன்' என்று பேட்டிதட்டிய சசிகலா புஷ்பா, அதற்கான முயற்சிகளிலும் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார். 'கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான சசிகலா தொடர்ச்சியாக 5 வருடங்கள் உறுப்பினராக இல்லாத சூழ்நிலையில், எப்படி அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும்?' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்குத் தொடுத்து 'செக்' வைத்தார் சசிகல…

  6. ‘‘எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான்...!’’ - ஒரு அ.தி.மு.க. தொண்டனின் குரல் ‘‘அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் வேண்டுமானால்... பதவிக்காக, சசிகலாவிடம் விலைபோகலாம். நாங்கள் எப்போதும் விலை போவதில்லை’’ என்று கொதிக்கிறார்கள், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள். இந்த நிலையில், ‘‘ ‘சசிகலா பொதுச் செயலாளராவது அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவு’ என்று பொன்னையன் சொல்கிறார். நீங்கள் இப்படிப்பட்ட விஷயத்தில் பொன்னையன், அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள் போன்றவர்களிடம் பேட்டி எடுத்தால்... அப்படித்தான் சொல்வார்கள். அதற்குப் பதில், எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களிடம் பேட்டி எடுக்க வேண்டும்’’ என்று விகடன் இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த குமரவே…

  7. ஆயிரம் கோடிகளை அள்ளுவது எப்படி? ரெய்டில் வெளியான 'சகல சந்தோஷங்கள்'! சென்னையில் சிங்கிள் டீக்கு வழியில்லாமல் அலைந்த சேகர் ரெட்டியின் உறவினர் ஒருவருக்கு இன்று பல கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தொழிலதிபர் சேகர்ரெட்டியைத் தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு, அலுவலகங்கள் உள்பட 13 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் நகை, பணம், டைரி, ஆவணங்கள் சிக்கின. அந்த டைரியில் ராம மோகன ராவிடம் நெருக்கமானவர்களின் விவரங்கள் உள்ளன. அதன்அடிப்படையில் வருமான வரித்துறையின் அடுத்தகட்ட அதிரடியை தொடங்கவுள்ளது. இந்நிலையில் வெளியுலகத்துக்குத் தெரியாமல் சேகர் ரெட்டியின் உறவினர் ஒருவர் சென்னையை அடுத்த ஆவடியில் கோல…

  8. சசிகலாவுடனான சந்திப்பு... சிக்கலில் துணைவேந்தர்கள்! தற்போது சசிகலாவை அதிமுக-வின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என மாவட்ட அளவிலும், பேரவை அளவிலும் தீர்மானம் போட்டு அதனை போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவிடம் கொடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உள்ள பத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் ஒன்றிணைந்து போயஸ் தோட்டத்தில் சென்று சசிகலாவை சந்தித்து இருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு இப்போது புது புயலைக் கிளம்பி இருக்கிறது. இவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்களா அல்லது மாவட்டச் செயலாளர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். மாநில அரசு பொறுப்பில் இல்லாத ஒருவரைச் சந்தித்து இருக்கும் துணைவேந்தர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எத…

  9. எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா; குட்டிக் கதை! -பொதுக்குழுவுக்குத் தயாராகும் சசிகலா பொதுச் செயலாளர் பதவியை எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் கைப்பற்றுவதற்கான ஆலோசனைகளில் இருக்கிறார் சசிகலா. ' துணைப் பொதுச் செயலாளர்களாக யாரும் தேர்வு செய்யப்பட போவதில்லை. பொதுச் செயலாளர் பதவிக்கு மட்டும்தான் பொதுக்குழு கூடுகிறது. கூட்டத்தில் ஏழு நிமிடத்திற்கும் மேல் விரிவாகப் பேசுவதற்கும் தயாராகி வருகிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ம் தேதி வானகரத்தில் நடக்க இருக்கிறது. இதுவரையில், ஜெயலலிதா பின்புறம் இருந்தே அரசியல் அசைவுகளைக் கவனித்து வந்த சசிகலா, முதல்முறையாக மேடையில் பேசுவதற்கான ஒத்திகையில் இருக்கிறார். " கட்சியின் ப…

  10. எம்.ஜி.ஆர். நினைவு நாள் அரசியல்... ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா போகாத பின்னணி! முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியின் அடுத்த தலைமை யார் என்ற கேள்விச் சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது, அ.தி.மு.க. ‘‘ஜெயலலிதாவின் மறைவு அறிவிக்கப்பட்ட, டிசம்பர் 5-ம் தேதி முதலே கட்சி, இனம்புரியாத குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது’’ என்கின்றனர், தொண்டர்கள். ஜெயலலிதா இறப்பு, அறிவிக்கப்படுவதற்கு முன்பாக... அப்போலோவுக்கு கட்சி எம்.எல்.ஏ-க்கள், மந்திரிகள் வரவழைக்கப்பட்டதும், அவசரகதியில் ஓ.பி.எஸ். முதல்வராகப் பொறுப்பேற்றதும் அன்றைய காட்சி. ஓ.பி.எஸ். - சசிகலா கூட்டணிதான், இனி அ.தி.மு.க. என்கிற பெரும் இயக்கத்தை வழி நடத்தப்போகிறது என்ற கருத்தும் அந்தச் சூழலில் மையம் கொண்டது. …

  11. Started by நவீனன்,

    அ.தி.மு.க.,வின் பொது செயலராக சசிகலாவை தேர்வு செய்யும் முன்னரே, அவரது மன்னார்குடி சொந்தங்கள் மத்தியில், தங்களுக்குள், 'பவர் சென்டர்' யார் என்ற, யுத்தம் துவங்கியுள்ளது. இது தொடர்பாக, போயஸ் கார்டனில் நடந்த களேபரங்கள் பற்றிய பகீர் தகவலும் வெளியாகி உள்ளது. சென்னை, வானகரத்தில், வரும், 29ல் நடைபெறவுள்ள, அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழுவில், சசிகலாவை பொதுச் செயலராக தேர்ந்தெடுக்க, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும்,தீர்மானம் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். எதிர்ப்புக்கொடி துாக்குவோரை, மிரட்டியும், பணம் கொடுத்தும் பணியவைக்கும் வேலைகளும் ஜரூராக நடந்து வருகின்றன. அதேநேரத்தில், சசிகலா பொதுச்செயலர் ஆகிவிட்டால், கட்சியையும், ஆட்சியையும் ஆட்டுவிக்கும…

  12. ஒரே வாரத்தில் இரு பெரும் அடி.. ஜெயலலிதா நிர்வாக திறமை பிம்பம் தூள் தூளானது! ஜெயலலிதா அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற இருபெரும் நிர்வாக குளறுபடிகள் தற்போது அம்பலமாகியுள்ளது. சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகத் திறன் மிக்கவர் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பிம்பத்தின் மீது இவ்வாரத்தில் மட்டும் இரண்டு பெரிய அடிகள் விழுந்துள்ளன. அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேரை வேலையை விட்டு நீக்கியவர், இரும்பு பெண்மணி என்றெல்லாம் அவரது ஆதரவாளர்களால் புகழப் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவரது நிர்வாக திறனை கேள்விக்குள்ளாக்கும் இரு அதிரடி சம்பவங்கள் இந்த வாரத்தில் நடந்துள்ளன. ராம மோகன ராவ் முதலாவத…

  13. 29-ல் சசிகலா அதிமுக பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் - தீரன் சென்னையில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில், அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் தீரன் தெரிவித்துள்ளார். 'அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார்' இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த தீரன், "29-ம் தேதி காலையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில், சசிகலா அவர்கள் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுகோள், தீர்மானமாக வைக்கப்படும். அதன்பிறகு பொதுக்குழு கூடும். செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அதில் ஒப்புதல் அளிக்கப்படும். அன்றே, சசிகலா அவர்கள் கட்சியின் பொ…

  14. "தமிழக அமைச்சர்கள் மீதும் வருமான வரி நடவடிக்கைக்கு வாய்ப்பு" - என். ராம் பேட்டி "தமிழக அரசின் தலைமைச் செயலர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனைக்குப் பிறகு, தமிழக அமைச்சர்கள் மீதும் அத்தகைய நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது", என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். "மாபெரும் ஊழல் என்று சொல்லக்கூடிய அளவில், தமிழகத்தில் தொழில் ரீதியாக ஊழல் நடைபெற்றுள்ளது. அதனால், அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. தேவை இருக்கிறது. ஆனால், எடுப்பார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால், …

  15. தமிழக அரசு நிர்வாகத்தை,முழுமையாக மாற்றி அமைக்கும் வகையில், விரைவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் மாற் றப்பட உள்ளனர். ஊழல் நபர்களை நீக்கி, நேர்மையானவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, விடுமுறை நாளான நேற்று, முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோர், கோட்டை யில் அவசர ஆலோசனை நடத்தினர். விடு முறை நாளான, நேற்று காலை, 10:00 மணிக்கு, . புதிய தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன், தலைமை செயலகம் வந்தார்உள்துறை செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து பேசினார். பிற்பகலில்,முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலகம் வந்தார். தலைமை செயல ருடன…

  16. தமிழகத்தின் புதிய ஆளுநர் இவர்தானா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கி வருகிறது. இதனிடையே, தற்போது தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பு குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநாராகத்தான் இருக்கிறார். வித்யாசாகர் ராவ் தலைமையில்தான் ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசின் வழிநடத்துதலின் பேரில் வித்யாசாகர் ராவ் தமிழக ஆட்சியில் முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளார். இந்த நிலையில் புதிய ஆளுநர் நியமனத்திற்கான முடிவுகள் எடு…

  17. வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ : ஜெயலலிதாவிற்காக ஈழத்தமிழர் எழுதிய இரங்கல் பாடல் சென்னை முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் திரையுலகத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ என்ற பாடல் ஒன்று பாடல் சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இந்த பாடலை இசையமைத்து பாடியது புறம்போக்கு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான வர்சன் என்பவர் தான். மேலும் இப்பாடலை எழுதியது ஈழத்தமிழரான பொத்துவில் அஸ்மின். இவர் விஜய் ஆண்டனியின் நான் படத்தில் இடம் பெற்ற…

  18. ராம மோகன ராவ் திடீரென மருத்துவமனையில் அனுமதி முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவின் வீடு, தலைமை செயலக அலுவலகம், அவரது மகன் மற்றும் உறவினர்களது வீடு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, ராம மோகன ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/75828-former-chief-secreatary-rama-mohana-rao-admitted-in-hospital.art

  19. மலேசியாவுக்கு தப்ப முயன்ற சேகர் ரெட்டி கூட்டாளி லோதா கைதானது எப்படி?- பரபரப்பு பின்னணி தகவல்கள் லோதா தமிழக அரசின் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரும் தொழிலதி பருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகளில் கடந்த 7-ம் தேதி முதல் 4 நாட்கள் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் சேகர் ரெட்டிக்கு ரூ.25 கோடி ரூபாய் வரை புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தது கொல்கத்தாவைச் சேர்ந்த பராஸ்மால் லோதா தான் என்பது தெரியவந்தது. மேலும் டெல்லியில் வழக் கறிஞர் ரோஹித் …

  20. இலங்கையில் போர் நடைபெற்ற போது மூன்று வேளை பிரியாணி சாப்பிட்டோம்:- இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் மூன்று வேளையும் பிரியாணி சாப்பிட்டோம். தற்போது ஒரு வேளை கஞ்சி குடிக்க கூட வழியின்றி கஷ்டப்படுகின்றோம். என இராமேஸ்வர மீனவர் ஒருவர் தெரிவித்து உள்ளார். கச்சதீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவுக்கு இந்திய இராமேஸ்வரத்தில் இருந்து வந்திருந்த போது ஊடகவியலாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இலங்கையில் போர் முடிவடைந்து தமிழ் மக்கள் தற்போது சந்தோஷத்துடன் வாழ்கின்றார்கள். அவர்கள் இப்போது போல் எப்போதும் வாழ வேண்டும். இலங்கையில் போர் நடைபெற்று கொண்டிருந்த…

  21. புனிதங்களைப் பொசுக்கியவர் : புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! பகுதி 1 பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்... தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது: இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குட…

  22. 'தமிழகத்தைப் புகைப்படம் ஆட்சி செய்யும்' - அன்றே சொன்னது பி.பி.சி. மறைந்த முதல்வர் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், தமிழக அரசின் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் முதல்வரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். பொறுப்பு முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்ற பின்னரும் கூட முதல்வர் உயிருடன் இருக்கும் வரை அம்மாவின் புகைப்படம் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. அது மட்டுல்ல, அமைச்சர்கள் துறை ரீதியாக ஏதாவது அதிகாரிகளின் கூட்டம் நடத்தினாலும் மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படம் இல்லாமல் கூட்டம் நடைபெற்றதில்லை. தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டார். ஆனாலும் அதிமுகவினர் மறைந்து முதல்வரின் புகைப்படத்தை ம…

  23. கன்னடர்களுக்கே வேலை.. தேர்தலுக்காக மொழி துவேஷத்திற்கு தூபம் போடுகிறதா கர்நாடக காங்கிரஸ் அரசு? பெங்களூர்: சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, உருப்படியாக மக்கள் பணிகள் எதையும் செய்யாத சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, கன்னட மக்களின் உணர்வு கொந்தளிப்பை வருடி கொடுத்து அரசியல் ஆதாயம் பார்க்க கிளம்பியுள்ளது. கர்நாடக காங்கிரசிலுள்ள சீனியர்களை புறந்தள்ளிவிட்டு, 2013 சட்டசபை பொதுத் தேர்தலுக்கு சில வருடங்கள் முன்புதான் காங்கிரசில் இணைந்த சித்தராமையா முதல்வரானது முதல் கட்சிக்குள் புகைச்சல்தான். முந்தைய எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் கூட இருந்தவர்களே அவருக்கு எதிராக ஊழல் புகார்களை கிளப்பி குழி பறித்த கதை மறக்கவில்லை என்பதால், சித்தராமையா மிகவும் மெத…

  24. தமிழகத்தின் பினாமி குயின் சசிகலாவா? அதிர்ச்சி ரிப்போர்ட் "WHO IS THE BENAMI QUEEN OF TAMILNADU" என்ற பெயரில் ஆய்வுப்படம் ஒன்றை 'அறப்போர் இயக்கம்' என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 43 நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை அதில் இணைத்துள்ளனர். நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 31 நிறுவனங்களுக்கு பினா…

  25. நுரையீரல் தொற்று காரணமாக கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி #Update 12:30 மணி தற்போது, திமுக எம்.எல்.ஏவும், துணை பொது செயலாளருமான துரைமுருகன், மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று இருக்கிறார். 12:04 மணி காவேரி மருத்துவமனை நிர்வாகம், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில், 'திமுகவின் தலைவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக , சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.தொற்றை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் தரப்படுகிறது. மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.