Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 2017-ல் சசிகலாவை வரவேற்கும் சவால்கள்! அ.தி.மு.க-வையும், ஆட்சியையும் தன் கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. சசிகலா, 'சின்ன அம்மா' என அழைக்கப்படுவது... திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி, பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி; எம்.ஜி.ஆருடன் அரசியல் தொடர்பில் இருந்து; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல பொதுக்கூட்டங்களில் பேசி; மக்களோடு மக்களாகக் கலந்து; பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தித்து; அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் ஜெயலலிதா. கடந்த டிசம்பர் 5-ம் தேதி அவர், மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் தமிழகத்துக்கும், அ.தி.மு.க-வுக்கும் …

  2. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா! அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா இன்று பொறுப்போற்றுக்கொண்டார். அப்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் போயஸ் கார்டனில் இருந்த சசிகலாவிடம் வழங்கப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும்,…

  3. புரட்சித் தலைவி வழியில் புதுமைத் தலைவி! -சரண்டர் ஆனாரா ஓ.பன்னீர்செல்வம்? அண்ணா தி.மு.கவின் ஆறாவது பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் வி.கே.சசிகலா. 'கட்சிப் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தாலும் ஆட்சி அதிகாரத்தை ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்விதான் தலைமைக் கழகத்தில் வலம் வருகிறது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில், பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 1972 அக்டோபர் மாதம் அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். அ.தி.மு.கவின் முதல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றவர், ஜூன் 1978-ம் ஆண்டு வரையில் இருந்தார். அதன்பிறகு, நாவலர் நெட…

  4. அ.தி.மு.க.வில் இருந்து விலக நாஞ்சில் சம்பத் முடிவு நடிகர் ஆனந்தராஜை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலக நாஞ்சில் சம்பத் முடிவு செய்து, நெருங்கிய நண்பர்களிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதி உள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். நாகர்கோவில்: தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். இன்று அவர், பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கொள்கிறார்…

  5. பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்துள்ளோம்: முதல்வர் ஓபிஎஸ் தகவல் அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை பொதுக்குழு தேர்வு செய்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிகள், பொதுக்குழு மற்றும் செயற்குழு குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் வி.கே.சசிகலா பங்கேற்கவில்லை. கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடைசி தீர்மானமாக, முதமைச்சர் அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில் கொண்டு, சின்னம்மாவுடைய தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்போம். சின்னம்மா வி.கே.சசிகலாவிடம் கழ…

  6. ‘சுரங்கம்’ சேகர் ரெட்டி- நெட்வொர்க் - 1 தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த ரெய்டு இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. அதிகாரிகளில் உச்சபட்ச அதிகாரியான தலைமைச் செயலாளர் அலுவலகத்திலேயே சோதனை போட்டிருக்கிறார்கள் வருமானவரித் துறையினர். இந்த சோதனையின் ஆணிவேர் சேகர் ரெட்டிதான். அவர் வீட்டில் நடந்த சோதனைக்குப் பிறகுதான் ராம மோகன ராவ் வளைக்கப்பட்டார். ரெட்டியும் ராவும் மட்டும் கூட்டணி போட்டு நடத்திய விஷயம் இல்லை. இவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறது. அந்த நெட்வொர்க் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பக்கங்களில் பார்ப்போம். முதலில் சேகர் ரெட்டி! போயஸ் கார்டனில் இருந்து, சசிகலா 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியேற்றப்பட்டார். அந்த சசிபெயர்ச்சி…

  7. ஊட்டி: ஊட்டியில், உறைபனி விழத் துவங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது; குறைந்தபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்சியஸ் ஆனதால், குளிர் வாட்டுகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இரு நாட்களாக வழக்கத்தை விட கடுங்குளிர் நிலவுகிறது; தாழ்வான பகுதிகள் உட்பட புல்வெளிகள், மைதானங்கள், தேயிலை தோட்டங்களின் மீது, நேற்று முன் தினம் இரவு, வெள்ளை கம்பளம் விரித்தது போன்று, உறைபனி விழுந்தது.அதிகபட்ச வெப்பநிலை, 16 டிகிரி செல்சியசாக இருந்த போதும், குறைந்தபட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்சியசாக குறைந்தது; குளிர், உடலை நடுங்க செய்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. செடிகளுக்கு பாதுகாப்பு : ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்…

  8. 'புதிய முதலமைச்சர் தேர்வாகிறாரா?' -எம்.எல்.ஏக்கள் அழைப்பின் பின்னணி அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வருமாறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'நாளை பொதுச் செயலாளராக பதவியேற்கிறார் சசிகலா. தொகுதிகளில் எம்.எல்.ஏக்கள் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகள் என்ன என்பது குறித்து, ஓ.பி.எஸ் தலைமையில் இன்று விவாதிக்க உள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்துவிட்டு, சொந்த ஊர் திரும்பினர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள். நேற்று இரவு மீண்டும் தலைமைக் கழகத்தில் இருந்து அவசர அழைப்பு. ' நாளை காலை சென்னை வாருங்கள்' என்று. இதனால், எம்.எல்.ஏக்கள் மத்தியில் திட…

  9. அனைத்துக்கும் பின்னால் நடராஜன் : பொதுக்குழுவுக்கு முன்பும்... பின்பும்...! ‘முடியாது... நடக்காது’ என்று யூகிக்கப்பட்ட அனைத்தையும் யூகங்கள் ஆக்கி... பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார், சசிகலா. அச்சு பிசகாமல் திட்டமிட்டபடி அனைத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார்கள் கழகக் கண்மணிகள். கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால், ஆதரவாக இருக்கலாம்; ஆனால், தொண்டர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிவந்த நிலையில்... வீட்டில் இருந்த சசிகலாவைத் தேடி பொதுச் செயலாளர் பதவி நியமனம் செய்யப்பட... அவருக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்கிற கேள்விதான் டெல்லி முதல் தி.மு.க வரை தொங்கித்தொங்கி நிற்கிறது. டெல்லியின் அச்சுறுத்தல்கள்! …

  10. ஜெயலலிதா மரணத்திற்கு 'இந்த' மருந்துகள்தான் காரணமா?! -அப்போலோ மெயிலும் 5 சந்தேகங்களும் "ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களுக்குள் போக நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்காக அடிப்படை உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற விவரம் பொதுமக்களுக்குத் தெரியவேண்டும். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது என யார் வேண்டுமானாலும் சந்தேகப்படலாம். ஜெயலலிதா சாவில் மர்மங்கள் உள்ளன என்று பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வந்தன. ஜெயலலிதா நடந்தார் என்று சிலர் பேட்டி கொடுத்தனர். ஜெயலலிதா டி.வி. பார்க்கிறார் என்று மற்றொரு நாள் மற்றொருவர் பேட்டி கொடுக்கிறார். அட…

  11. Started by நவீனன்,

    சசிகலா குடும்பத்தினரில் பெரும்பாலானோர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயேபல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளனர். ஜெயலலிதாவின் உயிர் தோழி, வாரிசு என வர்ணிக்கப்படும் சசிகலா, அ.தி.மு.க., பொது செயலர் மற்றும் தமிழக முதல்வராக, பல்வேறு வகையில் காய் நகர்த்துகிறார். சசிகலாவால், ஜெயலலிதா முதல்வரானதாகவும், சசிகலா குடும்பத்தா ரால், அ.தி.மு.க., வளர்ந்ததாகவும் பலரும் தம்பட்டம் அடிக்கின்றனர். அதே நேரம், சசிகலா குடும்பத்தாரில் பெரும்பாலானோர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே வழக்குகளில் சிக்கியதை, சசிகலா எதிர்ப்பாளர் கள் பட்டியலிட்டு அவர் முதல்வராக பொது செயலராக வருவதை எதிர்க்கின்றனர். அவரது குடும்பத்தார் சிக்கிய வழக்குகளில் சில: …

  12. ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசாம் தொண்டர்களை ஏமாற்றுகிறதா தலைமை? 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நோபல் பரிசு வழங்க வேண்டும் என, எங்கள் கட்சிப், பொதுக் குழுவில் தீர்மானம் நிறை வேற்றியது, எங்களைப் போன்று, கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை ஏமாற்றுவ தாக உள்ளது' என, அ.தி.மு.க., தொண்டர்கள் குமுறுகின்றனர். ஜெயலலிதா மறைந்ததும், டில்லி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம், அவருக்கு, 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஜெ., மீது குற்ற வழக்குகள் இருந்ததால், 'பாரத ரத்னா' கிடைக்குமா என்று அப்போதே விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று நடந்த பொதுக்குழுவில், 'அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்…

  13. ஜெ., மரணத்தில் நீதிபதிக்கு சந்தேகம் சென்னை: முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றியும் அவர் பரிந்துரை செய்துள்ளார். சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், செப்., 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, டிச., 5ம் தேதி இரவு,11:30 மணிக்கு மரணமடைந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று காலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இது தொடர்பான வ…

  14. மக்கள் நலக்கூட்டணி உடைந்தது! வைகோ வெளியேறினார் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளது கூட்டணி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/76035-vaikos-mdmk--came-out-from-makkal-nala-kootani.art

  15. கோபத்தில் சசிகலா... கொந்தளித்த பன்னீர்! - “மிரட்டிப் பார்க்கிறதா மத்திய அரசு?” கழுகாருக்கு வாட்ஸ் அப் அனுப்பிக் காத்திருந்தோம். ‘‘போயஸ் கார்டன் வட்டாரத்தில் இருக்கிறேன். வருகிறேன்!” என்று பதில் அனுப்பியவர் வந்து இறங்கினார். அவரது சிறகுகளுக்குள் மூன்று பக்க அறிக்கை இருந்தது. ‘‘இப்போதுதான் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் இன்னாள் ராஜ்யசபா அவை அ.தி.மு.க. எம்.பி-யுமான எஸ்.ஆர்.பி. விடுத்துள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பப் போகிறது. தமிழக அரசையும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தையும் சசிகலாவையும் அ.தி.மு.க-வையும், பி.ஜே.பி-யும் மத்திய அரசும் மிரட்டிக்கொண்டு இருக்கின்றன என்று சொல்லப்ப…

  16. ' சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்!' -உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்ட தி.மு.க. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்துவிட்டது.' இணையத்தளங்களிலோ பொதுவெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்' என தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, வானகரத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. 'என்ன நடக்கப் போகிறது' என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது. நேற்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் போட்டியிட விண்ணப்பம் கேட்கச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடந்தது. இன்று காலை பொதுக்குழு நடக்கும் இடத்தில் தகராறு நடந்துவிடாத அளவுக்குக் கட்ச…

  17. உயர்வை நோக்கி... அதிமுக பொதுச் செயலராக, தாற்காலிக அல்லது இடைக்கால அடிப்படையில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பொதுச் செயலராக இன்று அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், முழுமையான பொதுச் செயலராளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சியின் வேறு ஒரு விதியில் குறிப்பிடப்படுவதால்தான் முழுமையான பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஜெயலலிதா இடத்தில் சசிகலா ( புகைப்படத் தொகுப்பு) அப்படியானால், இன்றைக்கே அடிப்படை உறுப்பினர்கள் பொதுச் செயலாளராக சசிகலாவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று கேட…

  18. ராம மோகன ராவின் ராஜ்யங்கள்! ஆளும்கட்சியின் பவர்ஃபுல்கள் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி வீடுகளில் வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு புகுந்தபோது அது வழக்கமான ரெய்டு இல்லை என பலரும் வாய் பிளந்தார்கள். அந்த ரெய்டு அமைச்சர் எடப்பாடிக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர் ராமலிங்கம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வரையில் துரத்தியது. அதன் கிளைமாக்ஸ்தான் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த சோதனை. ‘தமிழ்நாட்டில் முதன்முறையாக தலைமைச் செயலாளர் வீட்டில் நடந்த சோதனை இது’ என்ற ரிக்கார்டை மட்டும் பதிக்கவில்லை. ஆளும் கட்சியின் காக்கிகளைக்கூட நம்பாமல் துணை ராணுவத்தைக் கொண்டு நடத்தப்பட்டது என்கிற சாதனையும் படைத்தது. அதுமட்டுமா? தலைமைச் செயலக…

  19. இது உள்கட்சி விவகாரம் அல்ல ஜெயலலிதா இல்லாமல் ஆகிவிட்ட சூழலில் அதிமுகவின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய, முழுமையான உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் தமிழக முதல்வராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்துவந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி பற்றியும் ஆட்சி பற்றியும் ஒவ்வொரு நாளும் பல வதந்திகள் முளைத்துவருகின்றன. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை மையமாகக் கொண்டு எழும் வதந்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாகப் பல்வேறு காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் யூகம் கிட்டத்தட்ட உறுதியான சாத்தியமாகப் பரவலாக நம்பப்பட்டுவரும் நிலையில் …

  20. ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! என்.எஸ்.ஜி பாதுகாப்புப் படையினர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, P.P. 27 (Protected Person) என்று அழைப்பார்கள். அதாவது, என்.எஸ்.ஜி.-யால் பாதுகாக்கப்படும் 27-வது வி.வி.ஐ.வி- என்பது அதன் பொருள். குறிப்பிடுவார்கள். N.S.G. எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்தும், அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டும் இதுபோன்றதொரு சிறப்புப் படையை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. இவர்களின் பணி, ரெகுலர் போலீசாரோ, துணை ராணுவப் படைய…

  21. #BREAKING அ.தி.மு.க அலுவலகத்தில் கைகலப்பு சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கே காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிமுக பொது செயலாளருக்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது, சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர்கள் அதிமுக அலுவலகம் வந்த போது கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/76156-quarrel-in-between-admk-head-office.art

  22. பா.ஜ.கவுக்கு எதிராக அணி திரட்டும் கார்டன்! டெல்லியை கலக்குமா ஜனவரி? மத்திய அரசுக்கு அ.தி.மு.க.வின் எதிர்ப்பை தெரிவிக்க பா.ஜ.க.வின் எதிரணியிலிருக்கும் அரசியல் தலைவர்களுடன் கூட்டு சேர கார்டன் வட்டாரங்கள் முடிவு செய்திருப்பதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கார்டனில் சில நாட்களுக்கு முன்பு ரகசிய கூட்டமும் நடந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மத்திய அரசின் கெடுபிடி தமிழகத்தில் அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. வருமான வரித்துறை சோதனையால் அ.தி.மு.க.வினர் கதிகலங்கி நிற்கின்றனர். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் தலையிலேயே வருமான வரித்துறை 'கை' வைத்து விட்டது. அடுத்து யார் என்ற பதற்றம், அ.தி.…

  23. மனம் மாறுகிறாரா சசிகலா?! - எதிர்ப்பை எதிர்கொள்ள புது வழி அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நாளை நடக்க இருக்கிறது. இன்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த தகராறை சசிகலா எதிர்பார்க்கவில்லை. 'பொதுக்குழுவில் சில மாறுதல்களைச் செய்யலாமா எனவும் ஆலோசித்து வருகிறார்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா முன்னிறுத்தப்படுகிறார். அவருக்கு எதிராக இருந்த சீனியர்கள் பலரும், சசிகலாவின் தலைமையை ஏற்றுச் செயல்பட உள்ளனர். ஆனால், ' 2011-ம் ஆண்டு கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலாவுக்கு, உறுப்பினர் அட்டையையே ஜெயலலிதா கொடுக்கவில்லை. கட்சியில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக உறுப்பினர்களாக இல்ல…

  24. கார்டனை ஆட்டுவிக்கும் ஆடிட்டர்! - ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தும் மர்மம் பொதுக்குழுவை எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் நடத்தி முடிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள் அ.தி.மு.க சீனியர்கள். கடந்த மூன்று நாட்களாக எந்தவித ரெய்டும் இல்லாததால் கார்டன் வட்டாரத்தில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. ' சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் கட்சியிலும் ஆட்சியிலும் நீடிப்பதை பா.ஜ.க தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனைக்கே சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழக அரசின் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரரும் மணல் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வளைக்கப…

  25. அ.தி.மு.க.வில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் திடீர் விலகல்! கடந்த 12 ஆண்டுகளாக அ.தி.மு.க.விலிருந்த நடிகர் ஆனந்தராஜ் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாளை அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம் கூட உள்ள நிலையில் இந்த அறிவிப்பை ஆனந்தராஜ் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தான் அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், 'ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவருடன் யாரையும் ஒப்பிடக் கூடாது. செங்கோட்டையன் மற்றும் பொன்னையன் ஆகியோரின் பேச்சுக்கள் வருத்தம் அளிக்கிறது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை' என்று கூறினார். http://www.vikatan…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.