நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
ஐம்பதிலும் அழகாய் இருக்க... சில டிப்ஸ்.......................... வாரம் தோறும் வயதாகிறது.... இது அறந்தை நாராணன் எழுதிய நாவல்... உண்மையிலும் இது நிஜம்தானே? ஆனால் நமக்கு வயதானாலும் ஒன்றும் தப்பில்லை... மனசும் நம்முடைய தினசரி செயல்பாடுகளும் சரியாக இருந்தால் ஐம்பதென்ன... எண்பதானாலும் இளமையான தோற்றத்துடன் வாழமுடியும். இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் டை உபயோகியுங்கள்... கறுப்பு நிற உங்கள் தலைமுடியையும் மீசையையும் நீங்கள் கண்ணாடியில் பார்க்கிற போது உங்களுக்கும் உற்சாகம் பிறக்கும். டை உபயோகப்படுத்த துவங்கியதும் தவறாமல் உபயோகப்படுத்துங்கள். அதிலும் கெமிக்கல் ம…
-
- 20 replies
- 4.4k views
-
-
மாரடைப்புக்கு புது காரணம் கவலை எப்படி கொழுப்பாக மாறும்? மாறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதனால் தான் மாரடைப்பு வருகிறது என்றும் புது தகவல் தருகின்றனர். மாரடைப்பு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு சேர்வதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வால்வுகள் பாதிக்கப்பட்டு ஏற்படுகிறது என்பது தான் அடிப்படை காரணம். அந்த கொலஸ்ட்ரால், நாம் சாப்பிடும் உணவில், பிடிக்கும் சிகரெட்டில், குடிக்கும் மதுவில் இருக்கிறது. அதனால், நாம் கொலஸ்ட்ரால் இல்லாமல் இருந்தால் மாரடைப்பு வராது என்று நம்புகிறோம். ஆனால், கொழுப்பு இல்லாவிட்டாலும், மாரடைப்பு வருகிறதே, அதற்கு என்ன காரணம்? இது பற்றி மருத்துவ நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்தபடி தான் இருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்படுத்தி வ…
-
- 9 replies
- 3.1k views
-
-
மனிதர்களுக்கு தோல் பளபளப்பு உபயத்தை அளிப்பது செல்கள்தான். வறட்சியான செல்கள்தான் தோலின் சொரசொரப்புக்கும், பளபளபின்மைக்கும் காரணமாக இருக்கின்றது. வெண்மையாக்கும் சிகிச்சைக்கு (Whitening treatment) அடுத்தபடியாக, இளம் பெண்களின் மனங்கவர்ந்த சிகிச்சை என்னும் அந்தஸ்தைப் பெற்றிருப்பது ஸ்கின் - பாலிஷ் சிகிச்சை தான். இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தச் சிசிச்சை அறிமுகமாயிருந்தாலும், இப்போதுதான் இளம் பெண்களிடையே உச்சக் கட்ட கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்தச் சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவமனைகளிலும் சில குறிப்பிட்ட அழகு நிலையங்களிலும் செய்யப்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் சுருக்கம், பொலிவிழப்பு ஏற்படுகிறது. ஸ்கின் - பாலிஷ் செய்வதன் மூலம் சருமத்திற்குப் பொலிவும், புத்த…
-
- 56 replies
- 11.8k views
-
-
நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக ப…
-
- 21 replies
- 10.5k views
-
-
வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சம…
-
- 4 replies
- 2.5k views
-