யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
94 topics in this forum
-
"உயிர்பெறுமா ஓவியம்" உயிர்பெறுமா ஓவியம் எழுந்து நடப்பானா உலகம் இவனுக்கு நீதி வழங்குமா? உள்ளம் கொண்டு பாகுபாடு நிறுத்தி உண்மை வரலாற்றை நன்கு அறிந்து உள்நாட்டில் அரசு வேற்றுமை அகற்றாதா? வன்னியில் நடந்தது உனக்குத் தெரியாதா வளமான தேசம் சிதைந்தது உணராயா? வஞ்சகம் தவிர்த்து அவனைப் பார்க்காயா வருத்துதல் ஒரு மனிதச் செயலல்ல வலி தரும் கொடூரம் இதுவல்லவா? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 184 views
-
-
"யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] & "நடை பயிற்சி" "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] "யாரொடு நோக என்னையே கேட்கிறேன் கேட்கிறேன் தினம் வானத்தைப் பார்த்து பார்த்து பார்த்து கண்ணும் கலங்கியது கலங்கிய மனதில் குண்டுகள் வெடிக்குது! வெடித்து சிதறிய உடல்களைக் காண்கிறேன் காண்கிறேன் என்றும் அவைகளின் கண்ணீரை கண்ணீரால் கழுவிய இரத்த உடல்களை உடல்களைத் தாண்டி ஓடும் மனிதர்களை! மனிதர்களை மதியா குண்டு விமானங்களை விமானங்கள் சத்தத்தில் பதுங்கும் குழந்தைகளை குழந்தைகள் பட்டினியில் படும் வேதனைகளை வேதணையிலும் தளராத மண்ணின் மைந்தர்களை! மைந்தர்கள் போற்றிய நீதி தேவதையை தேவதைகள் வாழ்ந்த எங்கள் மண்ணை மண்ணோடு மண்ணாய் மடிவதைப் பார்த்து பார்த்து கலங்குகிறேன் யாரொடு நோக!" [கந்தையா தில்…
-
- 0 replies
- 183 views
-
-
"சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே!" சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே பார்த்து அனைத்து இனிமை கொட்டுகிறதே வார்த்து எடுத்த சிலையாய் நின்று கூர்மை விழியால் என்னைக் கொல்லுகிறதே! அருகில் வந்து ஏதேதோ சொல்லுதே அமைதியாக உறங்க மடியைத் தருகிறதே அழகு மலராய் பூத்துக் குலுங்கி அன்பு சொரிந்து ஆசை ஊட்டுகிறதே! மோதல் இல்லாக் கூடல் கொண்டு இதழ்கள் சுவைக்கும் இன்பம் கண்டு இதயம் இரண்டும் பின்னிப் பிணைந்து காதல் தோட்டத்தில் தேன்மாரி பொழிகிறதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 182 views
-
-
"சொல்ல துடிக்குது மனசு" & "பாலகன்பிறந்தார்" "சொல்ல துடிக்குது மனசு" "சொல்ல துடிக்குது மனசு எனக்கு மெல்ல மெல்ல ஆசை பிறக்குது நல்ல அழகில் நெஞ்சைப் பறிகொடுத்து நல்லாள் அவளை அணைக்கத் தோன்றுது!" "கள்ள எண்ணம் என்னிடம் இல்லை குள்ளப் புத்தியும் அறவே கிடையாது அள்ள அள்ள குறையாத அன்பே உள்ளம் நாடும் ஆடவள் நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... "பாலகன்பிறந்தார்" "பாலகன்பிறந்தார் குமாரன் கொடுக்கப்பட்டார் கேளுங்கள் கதையை அன்பு இரட்சகரின் வானத்தில் ஒளிர்ந்து தாரகை வழிகாட்டிட அன்புத் தெய்வத்தை தேடிவந்தனர் ஞானிகள்!" "கந்தல்களில் மறைந்திருந்த பாலகனைக் கண்டு மண்ணுக்கும் விண்ணுக்க…
-
- 0 replies
- 182 views
-
-
"எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] & "மாங்கல்ய கனவுடன்" "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] "எது தான் சரி புரிகிறதா புரிந்து தான் என்ன பயன்? பயன் அற்ற உலக வாழ்வில் வாழ்வது ஒரு கேடு இல்லையா? இல்லாத ஒன்றுக்கு தேடி அலையும் அலை மோதும் நெஞ்சு உனக்கா? உனக்காக முதலில் வாழப் பழகி பழகிய உறவை அலசிப் பார்ப்பாயா? பார்க்கும் பார்வையில் எதைக் கண்டாய் கண்டத்தில் எது தான் சரி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. "மாங்கல்ய கனவுடன்" "மாங்கல்ய கனவுடன் தையை எதிர்பார்த்தேன் பொங்கலோ பொங்கல் கடிமணம் தராதோ? அங்கங்கள் எல்லாம் பூரித்து மகிழ்கிறதே தங்கத் தாலியை கழுத்து ஏற்காதோ? ஏங்காத எவரும் வெற்றி கண்…
-
- 0 replies
- 178 views
-
-
குறள்மொழி இன்பம் / "குறள் 1265" [நீங்குமென் மென்றோள் பசப்பு] "அரிவை என்னுடன் இன்பம் பொழியாமல் பிரிந்து போகும் அன்புக் காதலனே புரிதல் உனக்கு சொற்பமும் இல்லையோ?" "தெரிவை இவளின் வளையல் கழலுதே வரிகளாய் தோலில் பசப்பு வாட்டுதே கரிய உள்ளம் படைத்தவன் நீயோ?" "ஆதவனைக் கண்டு மலர் மலரும் நாதனைப் பார்த்தால் பெண் பூரிக்கும் இதனையும் நான் சொல்ல வேண்டுமோ?" "மதியைக் கண்டால் மனம் குளிரும் மங்கை எனக்கோ நீயே திங்கள் மனையாளனே காதல் ஒளி வீசாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 177 views
-
-
"புதிய ஆரம்பம்" யாழ் குடாநாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத் தொகையை கொண்ட வேளாளர்கள் எந்த போட்டியுமின்றி விவசாயக் காணிகளின் உரிமையாளர்களாக இருந்ததுடன் அவர்கள் குடாநாட்டின் வர்த்தக, நிர்வாக மற்றும் அரசியலில் பிரத்தியேக ஏகபோக பதவிகளையும் வகித்தனர். என்றாலும் பிரித்தானியர் வருகையுடன் மேலாதிக்கச் சாதியின் அதிகாரம் மெல்ல மெல்ல உடையத் தொடங்கியது. அதனால் 20 ஆம் நூற்றாண்டில் பள்ளர், நளவர் என்ற இரு விவசாய ஊழிய சாதிகள் மீதே குறிப்பாக வேளாளர்கள் தம் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். இவ்விரு சாதிகளினதும் ஒன்றிணைந்த சனத் தொகை குடாநாட்டின் மொத்தத் சனத்தொகையின் 18 வீதம் ஆகும். ஆயினும் அதே நூற்றாண்டில் வேளாளர்களுக்கும் பள்ளர், நளவர்களுக்கும் இடையில் இருந்த உறவின் தன்மை அடிமை நிர்பந்தத…
-
-
- 2 replies
- 177 views
- 1 follower
-
-
“போராடி வென்றவள்" விதை செடியாக வளர மண்ணுடன் ஒரு போராட்டம் செடி நிலைத்து நிற்க வானிலையோடு ஒரு போராட்டம். பூ மலர இதழ்களோடு ஒரு போராட்டம் நதி ஓட நிலத்தோடு ஒரு போராட்டம் கோழிக்குஞ்சு வெளியேவர முட்டைஓட்டோடு ஒரு போராட்டம். மீன்கள் உயிர்வாழ அலைகளோடு ஒரு போராட்டம். அருளம்மா மட்டும் இதற்கு விதிவிலக்காக ? ஆமாம், அருளம்மாவின் வாழ்க்கை, போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பின்னணியில், ஒரு போர்க்களமாகவே இருந்தது. முல்லைத்தீவின் ஒரு அமைதியான கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவள், அது பின்னாளில் ஒரு கலவரப் பூமியாக மாறும் என்று, என்றும் நினைக்கவில்லை. அர்ப்பணிப்புள்ள ஒரு மனைவியாகவும் மூன்று சிறு பிள்ளைகளின் அன்பான தாயாகவும் அன்று இருந்தாள். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கைச் சூழ்ந்த வன்…
-
- 0 replies
- 172 views
-
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள். இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் கள…
-
- 1 reply
- 170 views
-
-
"தை பிறந்தால்" & "பரோபகாரம்" "தை பிறந்தால்" தைவரல் காற்றோடு பொங்கலும் பொங்க தைத்த ஆடையோடு சிறுவரும் மகிழ தையல் கடிமனம் நன்று நிறைவேற தை பிறந்தால் வழி பிறக்குமே! தமிழர் திருநாள் உழவர் பெருநாள் தனித்துவம் கொண்ட எங்கள் அடையாளம் தங்கக் கதிரவனை விழுந்து கும்பிட்டு தலைவி தலைவன் கொண்டாடும் கொண்டாட்டம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "பரோபகாரம்" யாதும் ஊரே யாவரும் கேளிரென்று காதும் காதும் சொல்லி வைத்தானே! தீதும் வந்து தமிழை அழித்ததே போதும் இனி நீக்குவோம் 'பரோபகாரத்தை' அது 'பிறருக்கு உதவுதல்' ஆகட்டுமே! தன்னலம் அற்று செய்யும் பணியும் புன்னகை வழங்கும் அன்புப் பார்வையும்…
-
- 0 replies
- 169 views
-
-
"உழவர் திருநாள்" & "தித்திக்கும் பொங்கல் திருநாள்" "உழவர் திருநாள்" உழவர் திருநாள் பொங்கி மலரட்டும் அழகுப் பெண்கள் கோலம் போடட்டும்! ஆழமாக வரலாறு மனதில் பதியட்டும் ஈழ மண்ணில் ஒற்றுமை ஓங்கட்டும்! உலகமும் சுழலாது உழவு இல்லையேல் உண்மையைப் புரிந்தால் வாழ்வு செழிக்கும்! உண்பது நாழி உடுப்பவை இரண்டே உயர்வு கொண்ட தொழிலும் அதுவே! உயிர்கள் வாழ உணவு தேவை பயிர்கள் பண்ணைகள் அங்கு வேண்டும்! குயில்கள் மயில்கள் பாடி ஆட மையிட்ட மங்கை பொங்கட்டும் பொங்கல்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "தித்திக்கும் பொங்கல் திருநாள்" பத்திக்கும் பெருமைக்கும் புகழ் வீசும் புத்திக்கும் ஆற்றலுக்கும் களம…
-
- 0 replies
- 167 views
-
-
"பிள்ளை நிலா" ஒரு முன்னிரவு அன்று, வெள்ளி நிலவின் ஒளியின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், சுந்தர் மற்றும் மீனாட்சி இருவரினதும் திருமணம், அவர்களது குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டது. அவர்களின் திருமணம் ஆராவாரத்துடன் கொண்டாடப்பட்டாலும், மணமக்கள் இருவரிடமும் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. பொறியியலாளரான சுந்தர், விருப்பு வெறுப்பற்ற, அமைதியான இயல்புடன், சிந்தனைகள் அல்லது ஆசைகளை விட, உண்மையான உலக நடைமுறைகளில் அதிக அக்கறை கொண்டவரும் எதையும் துல்லியமாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவருமாவார். அதே வேளை, உணர்ச்சிமிக்க கலைஞரான மீனாட்சி, உணர்ச்சிகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டவள். அவர்களது கருத்து வேறுபாடுகள் அடிக்கடி, அவர்களுக்கிடையில் உராய்வுக்கு வழிவகுத்…
-
- 0 replies
- 164 views
-
-
"பாலியல் வன்கொடுமை" பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு வஞ்சகமே பாவச் செயல்களின் பிறப்பிடமும் அதுவே! பாவை பிருந்தாவின் பாலியல் வல்லுறவுத் தெரியுமா பாதக நடத்தையை திருவிளையாடல் என்கிறதே! விண்ணில் இருப்பவன் உதாரணம் தரவேண்டாமா மண்ணில் இருப்பவன் அதைத் தொடர! எண்ணத்தில் அதை நன்கு பதித்தவன் கண்ணை மூடி வல்லுறவு செய்கிறானே! காமம் கூத்தாடும் கதைகளைத் தவிர்த்து காதல் பேசும் புராணம் பரவட்டும்! காலம் அறிந்து பழையதை எறியுங்கள் காந்தையை மதித்து அவளை வாழவிடுங்கள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 153 views
-
-
"உன்னைச் செதுக்கு" உலகைப் புரிந்து உன்னைச் செதுக்கு உண்மை அறிந்து உளியைப் பிடி உங்கள் மதிப்புகளை கவனமாகப் பதித்து உயிராகப் பண்பாட்டை வார்த்து எடு! ஞாழல் மணமாய் பண்பு கமழ ஞாயமான வழியைத் தேடி அமைத்து ஞானம் கொண்டு அலசிப் பார்த்து ஞாலத்தை சரிப்படுத்த ஆன்மாவை வடிவமை! பூமி ஒரு சுழலும் சூறாவளி நவீன வாழ்க்கையின் தாளம் அது மாற்றம் அலை போல நிலைக்காது சமூகத்தை இணைத்தாலும் இதயங்கள் விலகிவிடும்! வெறுப்பை மூழ்கடித்து பயத்தை அமைதிப்படுத்தி ஒற்றுமை நிலைநாட்டி பிரிவை அகற்றி கருணை பாசம் இரண்டுடனும் வளர்த்து மனிதத்தை சீராக்கு மானிடம் உயரவே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 1 reply
- 150 views
-
-
"வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” "வாழ்ந்து காட்டுவோம்" "மாழ்ந்த நாகரிகங்களை பாடமாய் படித்து ஆழ்ந்த சிந்தனையில் இலக்கியம் படைத்து தாழ்ந்த சமூகத்துக்கு அறிவுரை வழங்கி வீழ்ந்த உறவுக்கு கைகள் கொடுத்து சூழ்ந்த பகையை அறுத்து எறிந்து வாழ்ந்து காட்டுவோம் நாம் யாரென்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே உயர்வை நோக்கி கனவு அமையட்டும்! அயர்வை அகற்றி உழைத்து துயர்வைப் போக்குங்கள்!" " பயிர்கள் செழிக்கப் பசளையிட்டு உயிர்கள் தழைக்க விளைச்சலைப் பெருக்குவீர் தயிரைக் கடைந்து வெண்ணை கொடுப்பீர் வயிறார உணவளித்தே மானுடத்தார்க்கு வாழ்வளிப்ப…
-
- 0 replies
- 146 views
-
-
"மூன்றும் உடையது", குறள் 1085 & "பனிப்பொழிவு" "மூன்றும் உடையது", குறள் 1085 தாய், மனைவி, மகள் என தான் கொள்ளும் மூன்று நிலையில் தனயனை வருத்துவது இளம் பெண்ணே! வஞ்சனிக் கண்கள் கூற்றவன் வலையோ வனிதை விழிகள் காதல் பேசுமோ வஞ்சிப் பார்வை பெண்மான் மருட்சியோ வதைக்குது என்னை, மீட்சி தாராயோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................................. "பனிப்பொழிவு" "பனிப்பொழிவு பெய்கிறது பாலாய்ப் படர்கிறது பகலோன் வெப்பம் குளிரால் மூடுகிறது பச்சை மரமோ வெண்ணிற ஆடையில் பசும்புல் தரையோ வழுக்கி வீழ்த்துகிறது!" "பருவப் பெண் கனவு காண்கிறாள் படுக்கையை விட்டு எழும்ப மறுக்கிறாள் பஞ்சு பஞ்சாய் குளிர்த்துளி வி…
-
- 0 replies
- 144 views
-
-
"நீயில்லை நிழலில்லை" சுட்டெரிக்கும் கதிரவன் யாழ்ப்பாணத்தின் மேல் உயர்ந்து, வறண்ட பூமியில் கூர்மையான நிழல்களைப் போட்டது. ஒரு காலத்தில் செழித்தோங்கிய நகரம் பல ஆண்டுகளாக மோதலை சகித்துக் கொண்டு, அதன் தெருக்களை சண்டைகள் மற்றும் உயிர்வாழ்வின் நினைவுகளால் பொறித்தது. இந்த நகரத்தின் மையத்தில் ஒரு பழமையான ஆலமரம் நின்றது, அதன் பரந்த கிளைகள் நிழல் தேடுபவர்களுக்கு ஓய்வு அளித்தன. நெகிழ்ச்சியின் சின்னமான அந்த மரம் யாழ்ப்பாணத்தின் மாறிவரும் அலைகளுக்கு மௌன சாட்சியாகவும் இருந்தது. அதன் நிழலில் ராகவன் என்ற முதியவர் அமர்ந்திருந்தார், அவருடைய இருப்பு மரத்தைப் போலவே உறுதியானது. ஒவ்வொரு நாளும், அவர் அங்கும் இங்கும் கிழிந்த, ஒரு பழைய நாட்குறிப்பு மற்றும் ஒரு பேனாவைக் கொண்டு வருவார். அவருக்கு …
-
- 0 replies
- 139 views
-
-
"தை மகளே வருக" தை மகளே வருக மகிழ்வாக கை கூப்பி உன்னை வாழ்த்துகிறேன்! மை பூசிய அன்பு விழியாளே வா, வந்து அருள் புரிவாயே! கார்த்திகை மழை பெய்து பெருகி ஆர்ப்பரித்து வெள்ளமாய்ப் பாய்ந்து ஓடி ஊர்வலமாய் வயல் வெளி தாண்டி மார்கழியில் அங்கே குளம் ஆனாள்! தையில் குள நீர் தெளிந்திட தையால் தன் கடிமனம் வேண்டி தையில் முன்பனி நீர் ஆடி தைத்தாடை உடுத்து தவம் முடித்தாள்! வண்ணக் கோலம் இட்டு அவள் விண்ணின் கதிரவனை வணங்கிப் போற்றி கண்ணான உறவினருடன் பொங்கல் படைத்து மண்ணின் பெருமையை உலகத்துக்கு அறிவித்தாள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 136 views
-
-
"பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" & "என்றுமே முதலாளி" "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" "பனியில் நனையலாமா? படியிறங்கி வாராயா இனிய காதலை இன்பமாக கழிப்போமா? தனிமை வாட்டும் தணியாத வெப்பத்தை கனியும் அன்பால் கடந்து போவோமா?" "மின்னும் இடையை தொட்டுப் பார்க்கவா சின்ன இதழை கொஞ்ச விடுவாயா? மன்னன் இவனை கட்டி அணைத்து அன்ன நடையில் இன்பம் கொட்டுவாயா?" "கண்ணில் நுழைந்த அழகு வனிதையே விண்ணில் வாழும் தேவதை நீயா? மண்டியிட்டு மலர் ஏந்தி வேண்டுகிறேன் வண்ண மயிலே நிலவிலே காயலாமா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... "என்றுமே முதலாளி" "என்றுமே முதலாளி உழுதுண்டு வாழ்பவரே எல்ல…
-
- 0 replies
- 133 views
-