Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய நிகழ்ச்சியில்… - ஸீகா வைரஸ் உடலுறவு மூலம் பரவிய ஆபூர்வ சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. பொதுவாக இது கொசுக்களின் மூலமே பரவும். - அடைக்கலம் தேடிச் சென்ற தங்களை, ரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, மூன்றாவது நாடுகளில் கொண்டுபோய் இஸ்ரேல் தள்ளுவதாகக் கூறும் ஆப்பிரிக்க குடியேறிகளுடன் பேசியது பிபிசி. - ஒல்லிதான் பேஷன் என்ற காலம் மாறுகிறது. மிகவும் ஒல்லியாக இருக்கும் மாடல்களை ஃபேஷன் துறையில் பயன்படுத்த தடை கொண்டுவருகிறது பிரான்ஸ்.

  2. இன்றைய நிகழ்ச்சியில்… - வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவர ஐநா வாக்களித்து சில மணி நேரத்தில் அதற்கு பதிலடியாக வடகொரியா கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. - பிரேசில் பொருளாதாரம் கடந்த வருடத்தில் அது மூன்று புள்ளி எட்டு வீதத்தால் சுருங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. - சீன அரசாங்கம் விசித்திரமான மற்றும் மேற்கத்திய பாணி கட்டிடங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருகிறது. புதிய கட்டிடங்கள் தேசிய கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டுமாம்.

  3. இன்றைய நிகழ்ச்சியில் பணக்கார ஊழல்வாதிகளின் ரகசியங்கள்-- கசிந்துள்ள பதினொரு மில்லியன் ஆவணங்கள் முன்னாள் மற்றும் இந்நாள் உலகத் தலைவர்களின் ரகசிய வெளிநாட்டு நிதிக்கணக்குகளை தொடர்புபடுத்துவது குறித்த விவரங்கள்; மூடப்படும் ஐரோப்பாவின் கதவுகள்- கடும் விமர்சனங்களுக்கு நடுவே சர்ச்சைக்குரிய ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் அதிகமான குடியேறிகள் கிரேக்கத்திலிருநது துருக்கிக்கு அனுப்பப்பட்டிருப்பது குறித்த செய்திகள்; இந்தோனேஷியாவின் சுமாத்ரான் புலிகளை பராமரிக்கும் வித்தியாசமான பெண் விலங்கு மருத்துவரின் கதை ஆகியவற்றைக் காணலாம்.

  4. இன்றைய நிகழ்ச்சியில்… - ஷியா மதகுருவுக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்ற, மேலோங்கியது இரானின் ஆத்திரம்! ராஜீய உறவுகளைத் துண்டித்து இரானிய அதிகாரிகள் வெளியேற சவுதி விதித்தது காலக்கெடு! - இஸ்லாமிய அரசுக்கு எதிரான கடும் சண்டை நடக்கும் இராக்கின் ரமாடி நகரில் பிபிசி! போர் முன்னரங்கிலிருந்து மக்கள் நிலை குறித்து நேரடித் தகவல்! - நடக்கவே முடியாமல் போனாலும், உள்ளத்து உறுதியால் அக்ராவில் சக்கரம் கட்டிக்கொண்டு பந்து விளையாடும் போலியோ பாதித்தவர்கள்!

  5. இன்றைய நிகழ்ச்சியில்… - வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவர ஐநா வாக்களித்து சில மணி நேரத்தில் அதற்கு பதிலடியாக வடகொரியா கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. - பிரேசில் பொருளாதாரம் கடந்த வருடத்தில் அது மூன்று புள்ளி எட்டு வீதத்தால் சுருங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. - சீன அரசாங்கம் விசித்திரமான மற்றும் மேற்கத்திய பாணி கட்டிடங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருகிறது. புதிய கட்டிடங்கள் தேசிய கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டுமாம்.

  6. இன்றைய நிகழ்ச்சியில் * ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி பிரதமர் விடுத்த கோரிக்கையை அந்நாட்டின் அதிபர் நிராகரித்தார். * 'வரிவிலக்கு புகலிடங்கள்' என்று அறியப்படும் இடங்களில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சீன ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கு தொடர்பு- சீனாவின் இணையதளங்களில் பனாமா ஆவணங்கள் முடக்கம். * இந்தோனேஷியாவில் அகதிக் குழந்தைகளின் பெரிய கனவுகளுக்காக அகதிகளே நடத்தும் பள்ளிக்கூடம் * உணவுகளின் எதிர்காலம்- 1000 கோடி மக்களுக்கும் உணவுக்கு எங்கே போவது?- அடுக்குமாடி விவசாயம் தீர்வாகுமா?

  7. இன்றைய நிகழ்ச்சியில்… - ஐ எஸ் அமைப்பின் அண்மைய வீடியோவில் தோன்றிய முக்கிய சந்தேக நபர், பிரிட்டனில் இந்துக் குடும்பத்தில் பிறந்து மதம் மாறியவர். - அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அதிபர் ஒபாமா நடவடிக்கை. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் விதிகளை அறிமுகப்படுத்த திட்டம். - சட்டவிரோத வேட்டையால் அழிந்துவரும் காண்டாமிருகங்களை காப்பாற்ற, தடுமாறும் தென்னாப்பிரிக்கர்களின் பிரயத்தனம்.

  8. இன்றைய நிகழ்ச்சியில்… - ஹைட்ரஜன் அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வடகொரியா பிரகடனம் செய்தபோதிலும், அதன் கூற்றை நம்ப நிபுணர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். - குடியேறிகள் வருகையை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட எல்லைக்கட்டுப்பாடு சுவீடன் நாட்டில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்த பிபிசியின் நேரடித் தகவல். - திராட்சை ரசம் மேட்டுக்குடி பானம் என்ற மனப்பாங்கு சீனாவில் மாறுகிறது. அங்கு அதன் விற்பனை சாதாரண மக்களையும் கவர்ந்திருக்கிறது.

  9. இன்றைய நிகழ்ச்சியில்… - சார்ளி எப்தோ தாக்குதலின் ஒரு வருட நினைவு தினத்தில், பாரிஸில் போலிஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்தவர் சுட்டுக்கொலை. - ஜெர்மனியில் புதுவருட நள்ளிரவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த பதினாறு பேர் அடையளம் காணப்பட்டதாக கொலோன் நகர போலிஸார் அறிவித்துள்ளனர். - ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத் திருச்சபையினரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பல இடங்களில் நடந்தன.

  10. இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்காவும் தென்கொரியாவும் மிகப்பெரிய கூட்டு இராணுவ ஒத்திகையை நடத்துகின்றன. பதிலடியாக தாறுமாறான அணுத்தாக்குதல் நடத்துவோம் என்கிறது வடகொரியா! - மேற்கு பால்கன் பகுதியினூடான குடியேறிகளின் வழியை மூட ஐரோப்பிய தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்படியானால் இடையில் அகப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கானோரின் நிலை என்ன? - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் 'முள்ளந்தண்டு வடத்துக்கு' நிபுணர்கள் சிகிச்சை வழங்க அவர் கால்களை பயன்படுத்த தொடங்கியுள்ளார். இப்போது அவ்வாறு பாதிக்கப்பட்ட மேலும் இருவரை தேடி, குணமாக்க மருத்துவர்கள் முயல்கிறார்கள்.

  11. இன்றைய நிகழ்ச்சியில்… - முற்றுகையிடப்பட்ட யேமனிய நகர் ஒன்றில் அவதியுறும் மக்கள் பற்றிய பிபிசியின் நேரடித் தகவல். - கடும் வீழ்ச்சிக்குப் பின், லேசாகத் தலைதூக்கும் சீனப் பங்கு சந்தை. ஆனாலும் சீனப் பொருளாதாரத்தின் மீது மக்களின் நம்பிக்கையில் விழுந்த ஓட்டையை அடைக்க முடியுமா என்பது சந்தேகமே. - தொலைக்காட்சிகளை ஆக்கிரமிக்கும் தென்கொரியாவின் ஆண் சமையல்காரர்கள். அடுப்பங்கரையில் ஆம்பளைக்கென்ன வேலை என்ற சமூகப் பார்வையும் மாறுகிறது!

  12. இன்றைய நிகழ்ச்சியில்… - எம். எச் 370 விமானம் காணாமல்போய் இரண்டு வருடங்கள். தமது உறவுகளின் விதி குறித்து அறிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் இன்றும் போராடுகிறார்கள். - இந்தியா உட்பட மூன்று அணு வல்லரசுகளை நீதிமன்றத்துக்கு இழுக்கிறது ஒரு குட்டித்தீவு நாடு. - சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒரு பெண் கணித மேதையின் கதை.

  13. இன்றைய நிகழ்ச்சியில்… - நீண்ட தூர ஏவுகணைகளில் பொருத்தும் அளவுக்கு சிறிய ரக அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக வடகொரிய தலைவர் அறிவித்துள்ளார். - இரவாக மாறிய பகல் வேளை. இந்தோனேசியாவில் மக்கள் கண்டுகழித்த அபூர்வமான சூரிய கிரகணம். - அழிவுக்கான ஆயுதமாக பார்க்கப்பட்ட ட்ரோன்கள் பிடித்த அழகான படங்களுக்கான வித்தியாசமான ஒரு திரைத்திருவிழா.

  14. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் போர் ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அங்கு போரால் பாதிக்கப்பட்ட சிறார்கள் குறித்த தகவல்கள். - ஜப்பானின் ஃபுக்குஷிமா பேரழிவு நடந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் அணு கதிரியக்க ஆபத்துள்ள அந்த பகுதிக்கு பிபிசி சென்றது. - ஆப்பிரிக்காவில் அழிந்துவரும் காண்டா மிருகங்களை காப்பாற்றுவதற்கான ஒரு திட்டம்.

  15. இன்றைய நிகழ்ச்சியில் யெமெனில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பின்பும் சண்டை நீடிப்பு; பாதிக்கப்பட்ட மக்களில் வசிக்கும் மக்களின் குரல்கள்; வன்முறையான மத வெறுப்பைத் தூண்டும் துண்டுப்பிரசுரங்களை லண்டன் மசூதியில் கண்டெடுத்திருக்கிறது பிபிசி; நூறு ஆண்டுகளில் முதல் முறையாக வனத்தில் வாழும் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சொல்கிறது புதிய புள்ளிவிவரம் ஆகியவற்றைக் காணலாம்.

  16. இன்றைய நிகழ்ச்சியில்… முற்றுகையிடப்பட்ட சிரியாவின் மதாயாவுக்கு சென்றுள்ளது அவசர உணவு உதவி! பட்டினியால் வாடும் மக்களின் அவலத்தைப் போக்க ஐநா நடவடிக்கை! வான வீதியில், படை விமான ஊர்வலம்! வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைக்கு பதிலடியாக அமெரிக்கா உதவியுடன் தென்கொரியா காட்டும் புஜபலம்! கீழ்த்தட்டு மக்களின் கலை வெளிப்பாடா? கலாச்சார சீரழிவா? அரபு உலகை ஆட்டம்போடவைக்கும் பேட்டை ரேப்- மஹ்ரகன்ஸ்!

  17. இன்றைய நிகழ்ச்சியில்… - லிபியாவில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். - சிரியா உள்நாட்டு போர் ஆரம்பித்து ஐந்து வருடங்களின் பின்னர், கிளர்ச்சி முதன் முதல் வெடித்த டெர்ரா நகருக்கு பிபிசி சென்றது. - ஆளில்லாமல் ஓடும் கார். ஓட்டுனர் இல்லாத தமது காரை சுவீடனின் வொல்வோ நிறுவனம் சோதிக்கிறது.

  18. இன்றைய நிகழ்ச்சியில் - சீனாவின் கைவிடப்பட்ட குழந்தைகளின் கதை;நகரில் வேலை செய்யும் பெற்றோரால் கிராமங்களில் விடப்படும் கோடிக்கணக்கான குழந்தைகளின் சோகத்தைப் பேசும் செய்தி - அரிசிச்சோற்றை அதிகம் சாப்பிடுவதால் ஆரோக்கியம் கெடுவதாக கவலை; சிங்கப்பூரின் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் ஒரு முன்னெடுப்பு; - ஆப்பிரிக்காவுக்குள் நுழையும் உபர் கார்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கென்யாவின் டாக்ஸி ஓட்டுநர்களுக்குள் கடும் மோதல்

  19. இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கியின் இஸ்தான்புல் நகரத்து வரலாற்று வட்டகையை உலுக்கியது மாபெரும் குண்டுவெடிப்பு! பத்து பேர் பலி! பலர் காயம்! - சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மதாயா நகரிலிருந்து, பலரை வெளியேற்றி சிகிச்சை அளித்தால்தான் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்! ஐநா வேண்டுகோள்! - பெண்களுக்கு இணையான சம்பளம் வேண்டும்! ஊதியத்தில் பாலின சமத்துவத்துக்கு குரல் கொடுக்கும் பிரிட்டனின் ஆண் மாடல்கள்!

  20. இன்றைய நிகழ்ச்சியில் * ஐ எஸ் அமைப்பிடமிருந்து திரும்பக் கைப்பற்றப்பட்ட சிரிய நகரின் இன்றைய நிலைமை குறித்த நேரடிச் செய்திகள்; கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் தளபதியின் பேட்டி; * மனிதகுலத்தின் அடுத்த பாய்ச்சல்; ஒரு தலைமுறை காலத்துக்குள் மைக்ரோசிப் எனப்படும் நுண்தகடளவு விண்கலத்தில் மற்றொரு சூரிய குடும்பத்துக்கு செல்வது சாத்தியமா? * வீட்டுக்குள் இருந்தபடியே பனிபடர்ந்த அண்டார்டிகாவின் பென்குயின்களை கண்காணிக்க வழி; புவி வெப்பமடைவதற்கு எதிரான போரில் நீங்கள் உதவுவதற்கான புதிய திட்டம் ஆகியவற்றைக் காணலாம்.

  21. இன்றைய நிகழ்ச்சியில்… - அதிபர் ஒபாமா தனது வருடாந்த உரையில் அமெரிக்காவின் பன்முகத்தன்மையை புகழ்ந்ததுடன், தனது ஆட்சியின் சாதனைகளையும் நியாயப்படுத்தினார். - ஜெர்மனியைத் தாண்டி சுவீடனிலும் பெரும்பாலும் குடியேறிகளால் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக புகார்கள் கிளம்பியுள்ளன. - முற்றிலும் தானாக, ஓட்டுனர் இன்றி இயங்கும் கார்களை தெருக்களில் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது என்கிறார் உலக பாட்டரி கார் பெருமுதலாளி.

  22. இன்றைய நிகழ்ச்சியில் * நைஜீரியாவின் சிபோக் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு இரண்டாண்டுகள் ஆன நிலையில் புதிய காணொளியால் புது நம்பிக்கை; மாணவிகளை விடுவிக்கும்படி வலுக்கும் கோரிக்கை; * கைகள் செயலிழந்த மனிதரை கிடார் இசைக்கச் செய்கிறது தொழில்நுட்பம்; மூளை மற்றும் முதுகுத்தண்டுவட பாதிப்பாளர்களுக்கு புதிய சிகிச்சைமுறை; * இலங்கையில் சிங்கள மக்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை தயாரிக்கும் கலைஞர்களின் புத்தாண்டுக் கோரிக்கை ஆகியவற்றைக் காணலாம்.

  23. இன்றைய நிகழ்ச்சியில்… - ஞாயிறன்று முப்பத்தியேழு பேர் பலியான கார் குண்டுத்தாக்குதலுக்கு துருக்கிய அரசு, குர்து தீவிரவாதிகளை குற்றஞ்சாட்டுகிறது. - மெக்ஸிகோவில் ஆட்கள் கடத்தப்படுவது வேகமாக அதிகரித்துள்ளது. பிபிசியின் சிறப்புத் தகவல். - ஐரோப்பாவும், ரஷ்யாவும் இணைந்து செவ்வாய்க்கு அனுப்பும் முதல் விண்கலம்.

  24. இன்றைய நிகழ்ச்சியில் * போர் நீடிக்கும் சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் தப்பியோட்டம்; லிபியக் கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்த தன்னால் இயலாது என லிபியா எச்சரிக்கை; * வரி ஏய்ப்பை தடுக்கப்போவதாக ஐரோப்பாவின் ஐந்து முக்கிய நாடுகள் சபதம்; பனாமா ஆவணங்கள் வெளியானதால் ஸ்பானிஷ் அமைச்சர் பதவி விலகல்; * ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கல்வி முடியும் முன்பே பல சிறுமிகள் விலகுவது ஏன் என்பது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.